privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வங்கிக் கொள்ளையன் மல்லையாவுக்கு என்கவுண்டர் எப்போது?

வங்கிக் கொள்ளையன் மல்லையாவுக்கு என்கவுண்டர் எப்போது?

-

என்கவுண்டர்
ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள்

சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் போலி மோதலில் போலீசாரால் கொல்லப்பட்டது நமக்குத் தெரியும். வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் மொத்தமாக கொள்ளையடித்தவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கி போலீசார் தமது ‘நீதிபரிபாலனத்தை’ நிலைநாட்டியுள்ளனர். தமிழக போலீசின் இந்த ‘அருஞ்சாதனை’ நிகழ்ந்த காலத்தில்தான் நாமும் இங்கு வாழ்ந்தோம் என்பதே ‘பெருமைக்குரிய’ விசயம். ஆனால், சென்னை போலீசின் கடமை இத்துடன் முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் ‘கணக்கை’ முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது. அது வேறு யாருமல்ல, கில்மா காலேண்டர் புகழ் சாராய மல்லையாதான் அந்தக் கொள்ளையன்.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமானப் பயணச் சேவை வழங்கி வரும் இந்த கொள்ளைக்காரன் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள மக்களின் பணத்திலிருந்து இது வரை ஆட்டையப்போட்டுள்ள தொகை 7000 கோடிகளுக்கும் மேல். இது தவிர கிங்பிஷர் ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் 44 லட்சம், வருமான வரி 422 கோடிகளையும் கொள்ளையடித்துள்ளான் இந்த கேடி பக்கிரி. கிங் பிஷர் ஊழியர்களின் வருமான வரி 42 கோடிகளையும் அரசுக்கு கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளான் இந்தக் கிரிமினல். 2011 இறுதியில் பணமில்லாமல் தொங்கிச் சரிந்தது கிங் பிஷர் நிறுவனம். உடனே கோடிக்கணக்கில் கொட்டி கைதூக்கி விட்டன இந்திய வங்கிகள். இந்த வகையில் SBI மட்டும் 1457 கோடி கடனாகவும், 180 கோடிகள் கிங் பிஷர்

வங்கிக்-கொள்ளையன்-மல்லையா
கொள்ளைக்காரன் மல்லையா - என்கவுன்டர் வெயிட்டிங் லிஸ்ட்?

பங்குகளை(5.67% share – இதன் இன்றைய மதிப்பு வெறும் 76 கோடிகள்) துட்டு கொடுத்து வாங்கியதன் மூலமும் கொட்டியது (மொத்தம் 1650 கோடிகள்). இதே போல தனியார் வங்கியான ஐசிஐசிஐ 430 கோடிகள் கடனாகவும், 5.3% பங்குகளை துட்டு கொடுத்து வாங்கியும் உள்ளது.

குதிரை குப்புறத் தள்ளியதோடல்லாமல் குழியும் பறித்த கதையாக, மொத்தத்தில் 19 வங்கிகள் மக்களின் சேமிப்பிலிருந்து பல்லாயிரம் கோடிகளை கடனாக கொடுத்துள்ளதுடன் அல்லாமல், நஷ்டத்தில் ஓடும் இந்நிறுவனத்தின் 23% பங்குகளையும் வாங்கியுள்ளன. 23% பங்குகளை வைத்துள்ள இவ்வங்கிகளின் கூட்டமைப்பு கிங்பிஷரின் செயல்பாடுகளை முறைப்படுத்தி அதனை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முயற்சி செய்தனரா என்றால் இல்லை. காரணம் இந்நிறுவனம் ஒரு மூழ்கும் கப்பல் என்று தெரிந்தேதான் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொட்டியுள்ளனர். செப்டம்பர் 2011னில் கனடா நாட்டு நிறுவனமான வெரிடாஸ் கிங்பிஷரின் யோக்யதையை அம்பலப்படுத்தி அது ஒரு ‘420’ நிறுவனம் என்று அறிவித்துள்ளது. இதோ இப்போது பிப்ரவரி 2012ல் மீண்டும் ஒருமுறை கடன் கொடுங்கள் அய்யா என்று கொள்ளையடிக்க கிளம்பியுள்ளான் மல்லையா. இப்படியாப்பட்ட நிறுவனத்துக்கு வங்கிகள் மீண்டும் கடன் கொடுத்து கை தூக்கிவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிறது ரிசர்வ் வங்கி.

இன்றைக்கு 19 வங்கிகள் கிங் பிஷரில் கொட்டிய கோடிக்கணக்கான பணம் கணக்குப் புத்தகத்தில் மட்டும் இருக்கும் பணமாக மாறிவிட்டது(non performing asset). நிலைமை இப்படியிருக்கு இப்போது இன்னொரு முறை கிங்பிஷருக்கு 1500 கோடிகளை கொடுத்துள்ளது SBI. ஊர் பணத்தை எடுத்து உலையில் போடுவது போல, கவனிக்கவும்  நண்பர்களே,  SBIன் பிம்பிலிக்கிபியாப்பியான முதலீடுகளில் பெரும்பகுதி முதலீடு கிங் பிஷரில் இடப்பட்டதுதான்.

மல்லையாவின்-வங்கிக்-கொள்ளை
மல்லையாவின் வங்கிக் கொள்ளை பட்டியல்

ஆஹ, நஸ்டம் என்னவோ கடன் கொடுத்த வங்கிகளுக்கும், குப்பைக்கூடைக்குக் கூட தகுதியில்லாத பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கிய பங்குதாரர்களுக்கும், கிங் பிஷர் ஊழியர்களுக்கும்தான், நம்ம சாராய மல்லையாவின் சொத்து மதிப்போ 22850 கோடிகளில் கும்மென்றுதான் உள்ளது. இந்த நாதாரிக்கு கடன் கொடுப்பதே ஒரு கிரிமினல் குற்றம் இதில் இவனது சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் கொடுப்பது என்றால் அப்படி ஒரு கடன் தேவையில்லை என்று சொல்கிறான் மல்லையா.

கிங்பிஷர் மட்டுமல்ல, மல்லையாவின் பிற குடி-கூத்து நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து வங்கிகளுக்கு மொட்டையடித்துள்ள கடன் தொகை 14000 கோடிகள். டாடா, அம்பானி, மித்தல் போன்ற இப்படியாப்பட்ட மலைமுழுங்கித் திருடர்கள்தான் நாட்டின் பெருமைமிகு குடிமகன்களாக வலம் வருகிறார்கள்.

பீகார்-கொள்ளையன்
டாடா, அம்பானி, மல்லையாவுக்கு எப்போது?

பீஹாரில் ஒரு திருடரை(மல்லையாவுக்கே மரியாதை கொடுக்கும்  போது….) போலீசுக்காரன் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்று தண்டனை கொடுத்தான். நாட்டு மக்களின் சேமிப்பையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் 20 அடுக்கு மாட மாளிகைகள், ஹெலிகாப்டர்கள், உல்லாச விடுதிகள், கடலில் மிதக்கும் சொர்க்கம் போன்ற கப்பல்கள், கில்மா கூத்துகள் என உல்லாசமாக கோட்டமடிக்கும் மல்லையா, டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு இந்த தண்டனைகளை யார் கொடுப்பது?

இன்று காலை இந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தியறிக்கை சொல்கிறது, ஆந்திர விவசாயிகள் பலர் கடன் வழங்கிய நிறுவனங்கள் தமக்கு செய்த அவமானங்கள் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று. 1.5 லட்சம் கடன் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தாய் வயிற்றுப் போக்கு வந்த தனது குழந்தையை மருத்துவரிடம் காட்ட அனுமதி மறுக்கப்பட்டாள். ஒரு லட்சம் கடனை திருப்பிச் செலுத்து இல்லையென்றால் உன் பிள்ளைகளை விபச்சாரத்திற்கு அனுப்பு என்று மிரட்டப்பட்டதை எதிர்க்க வழியின்றி தற்கொலை செய்து கொண்டாள் இன்னொரு தாய்.

இவர்களின் தற்கொலைகள் நாட்டு மக்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான், ‘எங்களுக்கு மானம் ரோசம் இருக்கு நாண்டு கொண்டோம். டாடா அம்பானி மல்லையா உள்ளிட்டவர்களின் முதலாளித்துவ கொள்ளைகளையும், எங்களது தற்கொலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மான ரோசம் இருக்கா? இருந்தால் ‘தற்’கொலைகளின் சூத்திரங்களை தலைகீழாக மாற்றுங்கள்’ என்பதுதான். மாற்றுவீர்களா?

______________________________________________________________________<

முதற்பதிப்பு- அசுரன்
(நன்றி தி இந்து மற்றும் நம் கூகிள் உறவினர்கள் எல்லாம்….)

______________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

________________________________________________________________

________________________________________________________________

________________________________________________________________

________________________________________________________________

  1. கிங்ஃபிஸ்சர் நிறுவனத்தை ஏலம் விட வேண்டும் :

    Kingfisher is worth saving, but auction it
    http://swaminomics.org/?p=2082

    …One way forward is for banks to convert a big chunk of their outstanding loans to Kingfisher into equity at the current market price, giving them a 51% stake in the company. This can then be auctioned to the highest bidder. This will be clean and quick, free of the crony capitalism that afflicts government handouts to business.

    If Mallya really wants yet another chance, he must be told to bring in at least Rs 3,000 crore of fresh equity. If he cannot entice the investing public—which is probable–he must sell his other assets. Apart from liquor company UB Holdings, he owns stakes in the cricket team Royal Challengers, Bangalore; the Kolkata football teams Mohun Bagan and East Bengal; and the Formula 1 team Force India. In many other countries his bankers would force him to sell these.

    Indeed, UB Holdings itself is reported to have provided bank guarantees of over Rs 16,000 crore to the banks. In many other countries, such bank guarantees would be enforced , obliging Mallya to hand over UB to his creditors too. Globally, rescues entail sacrifices by not just creditors but the owner too. If politicians ask banks and other creditors to go easy on the owner, that is called crony capitalism….

    • // If politicians ask banks and other creditors to go easy on the owner, that is called crony capitalism…. //

      this is not even that.. this is outright sell-out of national assets, looting of peoples’ money to fill their pocket as well as Mallya’s.

    • I completely agree with you. But this is not possible unless we have a strong enforcement system in place. If he is left scott free then it would set a bad example for other big players mismanaging their organizations.

  2. //நாட்டு மக்களின் சேமிப்பையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் 20 அடுக்கு மாட மாளிகைகள், ஹெலிகாப்டர்கள், உல்லாச விடுதிகள், கடலில் மிதக்கும் சொர்க்கம் போன்ற கப்பல்கள், கில்மா கூத்துகள் என உல்லாசமாக கோட்டமடிக்கும் மல்லையா, டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு இந்த தண்டனைகளை யார் கொடுப்பது?//
    நாம் சுரண்டப்படுகிறோம் என்று உணர்ந்த ஒவ்வொரு மனிதனும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் தண்டனை உண்டு.

    • இந்த லிஸ்டில் டாடா வின் பெயர் இடம்பெற்றிருப்பதை ஏற்கமுடியவில்லை. நான் முன்பு டாடா நிறுவனத்தில் பணிபுரிந்தவன். இப்பொழுது என் சில நண்பர்கள் என்ட்ரி லெவல் மற்றும் உயர் பதவிகளிலும் உள்ளனர். அரசின் விதிகளையும், தொழில் தர்மத்தையும் (எதிக்ஸ்) அவர்களைப் போல யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதே போல வரி ஏய்ப்பின்றி அத்தனை விற்பனைக்கும் ரசீது (ஒரிஜினல்) வைத்திருக்கின்றனர். இதனால் சில இடங்களில் அவர்களுக்கு போட்டியை விட அதிக செலவு, வரி கட்டணம் ஏற்படும்போதும் விதியை மீறுவதில்லை. உதா: ஒரு டாடா ஷோரூமில் பின்னனியில் போடப்படும் பாட்டு முறையாக வாங்கப்பட்ட காப்பிரைட் பாடலாக மட்டுமே இருக்க முடியும். இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் இதில் முறையாக செய்வதால் மற்றவர்களை விட செலவு அதிகம். முறையாக சம்பாதித்த பணத்தில் ஆடம்பரமாக இருந்தால் அது தவறில்லையே !

      • 1947க்கு பின்னாடி என்ன முன்னாடியும் இப்படித்தான் டாட்டா குடும்பம் ஆட்டையைப் ப்போட்டுது..காப்பிரைட் வாங்கின பாடலைப் போட்டுட்டா? வி எஸ் என் எல் எனும் பொதுத்துறை நிறுவனத்தை எப்படி ஆட்டையப் போட்டாங்க தெரியுமா? 25 சதவீத பங்குகளை வாங்கினாலே அதன் நிர்வாகக்குழுவைக் கைப்பற்றலாம்னு வாஜ்பாயி அரசை இன்புளுயன்ஸ் செய்து விதியை மாத்தினாங்க..அப்படியே பொதுத்துறை வங்கிப் ப்பணத்தை கடனா வாங்கி 25 சதவீத பங்கை வாங்கினாங்க…இப்போ வி எஸ் என் எல் டாட்டாவோடதாச்சு..அப்ப டாட்டா அடிச்ச கொள்ளை இருக்கே..ரொம்ப யோக்கியங்கய்யா..வி எஸ் என் எல்க்கு சொந்தமான வங்கி இருப்பில் இருந்து 1200 கோடிக்கும் மேலே உடனடியா டாடா டெலிசர்வீசூக்கு மாத்தியது களவாணி டாட்டா கும்பல்தான்..இது ஒரு சேம்பிள்..இன்னொன்னு கேட்டுக்கோங்கோ…இந்திய அணுமின் சக்தித் துறையை 1948 இல் இருந்தே ஆட்டி வைப்பது டாட்டாதான்..ஹோமி பாபா யாரு? டாட்டா குடும்பத்து ஆளு…நேரு மாமா டாட்டா மாமா பாபா மாமா..கொள்ளைக் கூட்டணி இல்லியா? டாட்டா நேர்ர்ர்ர்ர்மையானவர்னா நீரா ராடியாகிட்டே என்ன சோலி?

  3. கடனைக் கட்டவில்லையெனில் தனிப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்! லிமிடெட் கம்பனிகளுக்கும், வங்கிகள் ப்ரமோட்டர்களிடம் சொந்த ஜாமீன் வாங்கிக் கொண்டுதான் கடனளிக்கின்றன! எனவே, சட்டப்படிநடவடிக்கை எடுக்கலாம்! ஆனால் அதிகாரக் கூட்டணி செய்வார்களா என்பது கேள்வியே!

  4. சாமனியர்களுக்கு கடன் கொடுக்கவும், கல்விக்கடன் கொடுக்கவும் பயங்கரமான கெடுபிடி செய்தும் சில ஆயிரம் கடன் வசூலிக்க அடியாட்களை அனுப்பியும் பம்மாத்து செய்யும் வங்கிகள் / வங்கி அதிகாரிகள் இந்த பன முதலைகளுக்கு வாரி வழங்கி அடிமைகளாகவே உள்ளனர்…

    இவர்களிடம் விளக்கம் மட்டும் கேட்டால் போதும்….ஆங்கிலத்தில் கியா முயா என்.பி.ஏ ஏ.பீ.யூ என்று உட்டாலக்கிடி அடிப்பார்கள்…

  5. அவனுக்கு கொடுத்த பணம் மத்திய வர்கத்தினர் வங்கியில் சேமிக்கும் பணம் தான்.ஆனால் இந்த மத்தியர்கள் பலர் அவனுக்காக பின்னூட்டம் இடுவார்கள், அவனுக்கு வக்காலத்து வாங்கும் போது அவனை விட பெரிய பணக்காரர்கள் போல் சீன் போடுவார்கள்.இதெல்லாம் எங்கள் விஷயம் தலையிடாதீர்கள் என்பது போல் அவன் பிரச்னையை தீர்க்க ஐடியா கொடுப்பார்கள்.அவனை உதைக்க சொல்லவே மாட்டார்கள்.இந்த மாதிரி முதலைகளை உருவாக்கி காப்பாற்ற ஒரு படிப்பு ஒன்னு இருக்கே அது என்ன எகனாமிக்ஸா எம்பீயேவா அதெல்லாம் வேற படிச்சுட்டான்னா கேக்கவே வாணாம்.

    • //மத்திய வர்கத்தினர் வங்கியில் சேமிக்கும் பணம் தான்.//

      ஏழைகளிடம் இருந்து பிடுங்கி,மத்திய வகுப்பினர் கொள்ளையடித்து வங்கியில் சேர்க்கும் பணம் என்று எழுத வேண்டும்!

      மேற்கு வங்கத்தில் 9 கோடி மக்கள்தொகை இருக்கும் மானிலத்தில், பத்து கோடி ரேசன் கார்டுகள்!
      இது என்ன வகை கொள்ளை?..செங்கொள்ளை!?

      அவரவர் லெவலுக்கு கொள்ளை! இதில் யார் யாரை அடிக்க!

  6. சரியான கேள்வி,
    மல்லையா ஒரு வங்கி கொள்ளையன் என்று தெரிகிறது. எப்படி கொள்ளையடித்திருக்கிறார் என்று சொல்லவேயில்லையே?? சொன்னால் மற்றவர்களும் பின்பற்றுவார்களே.
    சரி தேடிய வரையில் மல்லையா இப்படித்தான் வங்கிகளை கொள்ளையடித்துள்ளார்….

    http://www.openthemagazine.com/article/business/the-art-of-borrowing

    நேரமிருந்தால் யாவரும் பயன்பெற அந்த கட்டுரை தமிழாக்கம் செய்யப்படும்.

    • I have read it , Please translate as well as elaborate so everyone will understand how they cheat banks…Also pls try to write an seperate article on the point

      1) Buying and machine for 1000 cr and selling it to themselves for 1500 cr, This is new fraud iam comming across. 🙂

  7. மல்லையா பீரு-இங்க
    நாறுது பாரு..
    அடிச்சது யாரு-நம்ம
    பிரணாபு பாரு..
    கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு-நாலு
    காசு சேத்து வச்சா அதை
    கண்ட நாய்க்கெல்லாம் வைக்கிறான் பங்கு-அந்த
    கருமத்துக்கு பேரு ஸ்டேட் பேங்கு.
    நேரடியா கடன் கொடுக்க அரசு தயாரில்லையாம்-ஆனா
    நேஷனல் பேங்கு வேணும்னா கொடுக்கலாமாம்…
    இந்த நாத்தம் புடிச்ச நாய்க்கு
    கோவணத்த அவுக்க முடியாதாம் ஆனா
    புள்ள மட்டும் பெத்துக்கனுமாம்.
    சொந்த சொத்தை அடகு வைக்காமல்
    ஊரான் பணத்துல பலானது எல்லாம் நடக்கணுமாம்.
    இத செய்ய ஒரு கூட்டமே அலையுது
    கையில வெளக்கோட..
    நாம இப்போ தயாரகணும் வெட்டரிவாளோட…

  8. course: Advanced Diploma in how to cheat the bank and the people— experienced trainer Vijay Mallaiya== tripple Ph.D in above course
    venue…to be discussed later

  9. சே….சே…. அவுக பரம்பரையிலே.பெரியவங்கள தொட்டதே இல்லீங்க! மல்லையாவ வேறு யாரும் பொட்டுத் தள்ளிடக் கூடாதுன்னு பாதுகாப்புதான் கொடுப்பாங்க.அவுககளுக்கு
    தானே இம்புட்டு படைகட்டி ஆளுறாங்க!!

  10. சின்னச்சின்ன விசயங்களை பெரிது ப்டுத்தி மலைமுழுங்கிகளை காப்பாற்றுவதுதானே அரசு எந்திரத்தின் திருப்பணி. பத்திரிகைகள் இதற்கு ஜால்ரா. பலிகடா இந்திய மக்கள்.

Leave a Reply to வேணி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க