Wednesday, October 16, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசசிகலா சேர்ப்பு: வாராயோ தோழி வாராயோ............!

சசிகலா சேர்ப்பு: வாராயோ தோழி வாராயோ…………!

-

ஜெயா-சசிகலா
கேடி நம்பர் 1 - சீசன் 2 முடிந்தது

கிட்டத்தட்ட இரு மடங்காய் மின் கட்டண உயர்வை அறிவித்த கையோடு உடன் பிறவா சகோதரி சசிகலாவோடு இனி காயில்லை, பழம்தானென்று அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. மயிலாப்பூர் கும்பலுக்கு ஆதரவான தினமலர், ஹிந்து, தினமணி, குமுதம் முதலான பார்ப்பன ஊடகங்கள் இந்த செய்தியை வேண்டா விருப்பாக கொஞ்சம் சோகத்துடனேயே வெளியிட்டிருக்கின்றன.

கடந்த டிசம்பரில் ஆரம்பித்த இந்த நாடகம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும் இதை முற்றிலும் நாடகம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த இதே போன்றொதொரு பிரிவு – சேர்க்கையிலிருந்து இந்த 2011-12 எபிசோடு அளவிலும் தன்மையிலும் வேறுபட்டது.

சசிகலாவின் சேர்க்கைதான் ஜெயாவின் ஊழலுக்கு காரணமென்று அவரது நீக்கத்தை போற்றிப் பாடிய பார்ப்பன ஊடகங்களின் திரித்தலை மறுத்து அப்போது ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஜெயா – சசி கும்பலின் ஊழல், அதிகார முறைகேடுகள், பார்ப்பனிய பக்தி, பாசிச ஆட்சி அனைத்திற்கும் ஜெயாவே பிரதானமான காரணமென்று அதில் சுட்டியிருந்தோம்.

பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கின் போதான நீதிபதியின் நேர்காணலுக்கு பதிலளித்த சசிகலா, சொத்து சேர்ப்பு குறித்த விவகாரம் எதிலும் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை என்று அறிவித்திருந்தார். பின்னர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தனது உறவினர்கள், நண்பர்கள் பலர் ஜெயவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் நடந்து கொண்டது தனக்கு தெரியாது, ஒருபோதும் தான் அக்காவிற்கு துரோகம் செய்ய நினைத்ததில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை முக்கியத்துவம் கொடுத்து காட்டிய ஜெயா டி.வி அடுத்த நாளே அவர் மீதான நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜெயா அறிவித்ததைக் காட்டியது. சகோதரிகள் மீண்டு சேர்ந்ததாக ஊடகங்களும் அறிவித்தன.

ஜெயா – சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் – முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாளிகள் என்பதே அவர்களுடைய உறவின் மையம். எனினும் இந்த சொத்துப் பேரரசின் கடிவாளம் யாரிடம் இருக்க வேண்டுமென்பது இருவரிடையே எற்பட்டிருக்கும் முரண்பாடு. இந்த முரண்பாடு நட்பு முரண்பாடா, பகை முரண்பாடா என்றால் நிச்சயம் இது பகை முரண்பாடாக போக முடியாத அளவுக்கு சொத்துரிமை விவகாரங்கள் தடுக்கின்றன. மீறிப் போனால் அது இருவருக்குமே பிரச்சினை.

ஜெயா-சசி கும்பல் கடந்த ஆட்சிக்காலங்களில் முழு தமிழகத்தையுமே மொட்டையடித்து சுரண்டிச் சேர்த்த சொத்துக்களின் வலிமையில்தான் அ.தி.மு.க எனும் அடிமைகளது கட்சியை கட்டி மேய்ப்பதோடு ஆட்சியையும் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால் எதை துறந்தாலும் அதன் விளைவு மற்றதை பாதிக்கும். அந்த பயம்தான் இருவரின் சேர்க்கைக்கும் நிபந்தனை. இதைத் தாண்டி இருவரும் சண்டை போட முடியாது.

எனினும் இப்போது கடிவாளம் ஜெயாவிடமே இருக்க வேண்டும் என்பதை இந்த 2012 எபிசோடு காண்பித்திருக்கிறது. மன்னார்குடி கும்பலில் சசிகலாவைத் தவிர அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்து தனது நாட்டாண்மையை ஜெ தெரிவித்திருக்கிறார். கைது வரை போகுமா என்று நினைத்திருந்த மன்னார்குடி கும்பல் இப்போது சிறையிலிருந்தவாறு சமாதான வழிகளைத் தேடி வருகிறது. சேர்ந்தே ஊழல் செய்திருந்தாலும் அதை விசாரணை செய்யும் உரிமையை ஜெயாவே வைத்துக் கொண்டதை எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. காரணம் அவர் மீதான பார்ப்பன ஊடகங்களின் பக்தி.

ஆக மன்னார்குடி கும்பல் இனி  அடக்கி வாசிக்க வேண்டுமென்பதாக இந்த பிரிவு நாடகம் முடிந்திருக்கிறது. கூடவே சொத்து குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் சசிகலாவின் “அக்கா மேல எந்த தப்புமில்லை” எனும் வாக்குமூலமும் கூட இதில் பங்காற்றியிருக்கக் கூடும். அல்லது இது பேசி வைத்துக் கொண்டதாக இருக்குமென்று சிலர் கூறினாலும் அது முற்றிலும் அப்படி மட்டும் நடந்திருக்க முடியாது. ஏனெனில் மன்னார்குடி கும்பலின் சொத்துரிமையின் மேலாண்மை இப்போது மாறியிருக்கிறது என்பதால் பெங்களூரு வழக்கில் சசிகலா வாக்குமூலம் என்பது தொடர் விளைவுதான். நாடகத்தின் மையக் கதை அல்ல.

அடுத்து ஜெயா ஆட்சிக்கு வந்த எல்லா சமயங்களிலும் அவர் எடுத்த மக்கள் விரோத முடிவுகள், பார்ப்பன பாசிச அடக்குமுறைகள் அனைத்தும் அவரது வர்க்க நலன் சார்ந்து எடுக்கப்பட்ட ஒன்றுதான். அதற்கும் சசிகலாவுக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் விசேசமான தொடர்புமில்லை. தேவர் சாதிவெறியின் மேலாண்மை மட்டும் மன்னார்குடி கும்பலின் தனிச்சிறப்பு என்றாலும் இதுவும் பார்ப்பன பாசிசத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். தற்போது “ராமர் பாலம்” எனும் புராணப் புளுகைக்கூட தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதிலிருந்தும் ஜெயாவின் பார்ப்பன விசுவாசத்தை புரிந்து கொள்ளலாம்.

சட்டசபையில் விஜயகாந்த் நாக்கை தள்ளி மிரட்டும் பிரச்சினையில் ஜெயா திமிராக அறிவித்தது நினைவிருக்கிறதா? அதாவது பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தான் அமோக வெற்றி பெறுவேன் என்று அவர் அடித்துச் சொன்னது வெறுமனே தேர்தல் வெற்றி சார்ந்த ஒன்றல்ல. அது அவரது பாசிச திமிரை காட்டுகிறது.

மேலும் ஜெயாவின் ஆட்சி என்பது போலிசு மற்றும் அதிகார வர்க்கத்தினரை மட்டும் நம்பி நடத்தப்படும் சிறு கும்லது ஆட்சி. அவர்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கொடுத்துவிட்டு கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி போன்றதொரு அமைப்பில் நடத்தப்படும் ஆட்சி. இது ஜெயாவின் தனிப்பட்ட பண்பு என்பதோடு, பொதுவில் பாசிஸ்ட்டுகள் அனைவருக்கும் உள்ள பொதுப்பண்பும் ஆகும். அந்த வகையில்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது ஜெயாவின் கிச்சன் கேபினட்டாக அமர்ந்திருக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்கும் இத்தகைய கட்டுக்கோப்பான ஆட்சிகளைத்தான் தற்போது முதலாளிகள் விரும்புகின்றனர். அதிகரித்து வரும் வாழ்க்கைப் பிரச்சினைகள் மக்களிடையே அமைப்பு ரீதியான எதிர்ப்பாக எழும் போது அதற்கு ஜெயா பாணியிலானா போலிசு ஆட்சிதான் தீர்வு என்பது ஆளும் வர்க்கத்தின் முடிவு.

பரமக்குடி துப்பாக்கி சூடாக இருக்கட்டும், இல்லை கூடங்குளம் மக்கள் மீதான அடக்குமுறையாக இருக்கட்டும் இவையெல்லாம் ஜெயாவின் பேயாட்சி என்பதோடு இந்தியாவுக்கே முன்னுதாரணமாகவும் இருப்பதை ஆளும் வர்க்கங்கள் உணர்ந்தே இருக்கின்றன. அத்தகைய போக்கின் அடையாளமாகத்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது அம்மாவை சீராட்டி பாராட்டி வளர்த்து வருகின்றன. இதனால் ஜெயாவின் தனிப்பண்புக்கு இடமில்லை என்பதல்ல. இருவரும் தன்னளவில் ஒரே பார்வை உடையவர்கள். ஒருவேளை மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் ஜெயா அவர்களது அபிலாஷைகளை அவர்கள் சொல்லாமலேயே நிறைவேற்றும் ஆளுமை கொண்டவர். அதே போன்று மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் பார்ப்பன ஊடகங்கள் ஜெயாவை எந்த தருணத்திலும் கை கழுவியது இல்லை.

ஊரறிந்த அவரது திமிரான நடவடிக்கைகள் கூட பார்ப்பன ஊடகங்களில் விமரிசிக்கப்படுவதில்லை. தினமணி வைத்தி மாமாவின் ஜால்ரா தலையங்கங்களே அதற்கு சான்று. ஆனால் இதே சலுகை கருணாநிதிக்கு இல்லை என்பதோடு அவரை தொட்டதுக்கெல்லாம் குத்தி காட்டுவதும் பார்ப்பன ஊடகங்களில் சாதாரணம். இது அரசியலிலும் இருக்கிறது. பாரதிய ஜனதாவோடு கூட்டணி இல்லை என்றாலும் அத்வானி, மோடி போன்றோர் போயஸ் தோட்டத்தில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலே வந்து போகும் உரிமை உள்ளவர்கள். அதே போன்று பா.ஜ.கவின் கொள்கைகளை கூட்டணி இல்லாமலே ஆதரிக்கும் பண்பு ஜெயாவிடம் உண்டு.

மன்னார்குடி கும்பலுக்கும், ஜெயாவுக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை வெளியே தெரியாமல் உள் வட்ட பஞ்சாயத்தில் தீர்த்திருக்கலாமே என்று சிலர் கேட்கலாம். கூடிக் கொள்ளையடிப்பதிலும், சுரண்டுவதிலும்தான் ஆளும் வர்க்கத்தினரிடையே ஒற்றுமை இருக்கும். பங்கு பிரிப்பதில் முரண்பாடு வந்தால் அது வெளியே வந்தே தீரும். இதை 2 ஜி ஊழலிலும், நீரா ராடியா விவகாரத்திலும் பார்த்திருக்கிறோம். தரகு முதலாளிகளுக்கிடையே உள்ள வணிகப் போட்டி காரணமாகவே இந்த ஊழல் வெளியே வந்திருக்கிறது.

அதனால்தான் மன்னார்குடி கும்பலை முற்றிலும் நீக்கிவிட முடியாத நிலையில் ஜெயா இருக்கிறார். சசிகலாவோ, வெறு சில முக்கியமான உறவினர்களோ அனைவரும் ஜெயாவின் அனைத்து விசயங்களையும், அந்தரங்கங்களையும் அறிந்தவர்கள். அந்த அந்தரங்கத்தில் முக்கியமானது ஜெயாவின் ஊழல் சொத்துக்களும் அதன்  இன்றைய நிலைமையும். இதை வெளியே சொன்னால் ஜெயா பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் இதை வெளியே சொல்வதால் மன்னார்குடி கும்பலும் பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவகையில் அது இருவருக்கும் தற்கொலைப் பாதை என்றும் சொல்லலாம்.

வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக மக்கள்தான் தற்கொலை செய்வார்களே ஒழிய முதலாளிகள் மாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கைப் பிரச்சினைகள் தோற்றுவிக்கும் தன்மானம், நாகரீகம், கௌரவம், அச்சம், நேர்மை போன்ற உணர்ச்சிகளெல்லாம் அதிகார பீடங்களில் இருப்பவர்களுக்கு இல்லை. அவையெல்லாம் மக்கள் திரள் முன்னே அவிழ்த்துப் போடப்படும் முகமூடிகள் என்பதைத்தாண்டி வேறு முக்கியத்துவம் இல்லை. ஆகவே அவர்கள் அடித்துக் கொண்டாலும், கூடிக் கொண்டாலும் அது மக்களிடையே நடப்பதைப் போன்று இருக்காது; இருக்கவும் முடியாது. ஆக ஜெயா சசி கும்பல் தங்களிடையே வரம்பு மீறி சண்டையிடும் தற்கொலைப் பாதையை எப்போதும் எடுக்காது. ஒரு வேளை அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் ஒரு கும்பல் பூண்டோடு அழிக்கப்படவேண்டியது அவசியம்.

அதற்குத்தான் மயிலாப்பூர் கும்பல் முனைகிறது. என்றாலும் அது அத்தனை சுலபமல்ல. சனிப்பெயர்ச்சியின் போது நீக்கப்பட்ட சசிகலா இப்போது முட்டாள்கள் தினத்தில் சேர்ந்திருக்கிறார். மக்களோ இன்னமும் சனியனை நீங்க முடியாமலும், முட்டாள்தினத்தின் காட்சிகளில் மயங்கியவாறும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

  1. இதை உண்மை என்று நம்பி பட்டாசு வெடித்த அப்பாவி தொண்டனை அறியாமை என்று விட்டுவிடலாம் ஆனால் மேடையில் சசிகலா கும்பலுக்கு எதிராக முழங்கிய குட்டி தலைவர்கள் தான் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

  2. உழைக்க மட்டும் தெரிந்த முட்டாள் மக்களே! போங்கையா, போங்க. போய் கூடுதலாக வேலை இருந்தால் பாருங்கள். பால் விலை ஏறியாச்சு, பஸ் கட்டணம் ஏறியாச்சு, இப்ப மின் கட்டணமும் ஏறியாச்சு. இன்னும் என்ன என்ன ஏறப் போகுதோ? இவர்கள் சேர்த்த சொத்தை பங்கு பிரிப்பதில் இப்படியெல்லாம் நாடகம் நடத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் செய்வதற்கு சப்போர்ட் செய்து கொண்டு கோமியத்தைக் குடிப்பவர்கள் பின்னூட்டம் இட நூலாம்படையாக வருவார்கள்.

  3. மயிலாப்பூர் கும்பலை பத்தி பீதியை கிளப்பறேள் .ஜெயேந்த்ரனை தூக்கி உள்ள போட்டப்ப எல்லா பாப்பானும் கொதிச்சு போய் ஜே வுக்கு எதிராய் எழுதினானா?சுப்ரமணிய சாமியை,டி.என்.சேஷனை,மணிசங்கர் ஐயரை,இந்து ராமை,ஆடிட்டர் மகாதேவனை,சந்திரலேகாவை தாக்கிய போதெல்லாம் அடக்கிதானே வாசித்தான்?அவனை போய் மாபியா ரேஞ்சுக்கு எழுதறேளே?பாவம்யா அவன விட்ருங்கோ. எனக்கு நிறைய நண்பர்கள் அங்கே இருக்கானுவோ பாவம் பாஸ் அவிங்க.

    • மயிலாப்பூர் கும்பல் தின்னுவதில் வேண்டுமானால் சைவமாக இருக்கலாம். கூடங்குளமோ, பரமக்குடியோ, இல்லை முல்லைப் பெரியாறோ எல்லாம் நரமாமிசம்தான். மின் கட்டண உயர்வா, இல்லை பேருந்து கட்டண உயர்வா எல்லாம் அந்தக் கும்பலின் கைங்கிரயம்தான். என்றாலும் அந்த கும்பல் இல்லை என்றாலும் ஜெயாவை அந்த கும்பலின் பிரதிநிதியாய் இருந்து செய்து முடித்திருப்பார்.

      • மின் கட்டண உயர்வுக்கு யென் இப்படி யார் எவர் மேலயோ பழி போடுரஎஇங.

        முல்லை பெரியார்ல யாரு இங்க மாட்ரு கருத்து சொன்னாங?

      • தானா வருமா தானே புயல்.. அதையும் மயிலாப்பூர் கும்பல் உட்கார்ந்தாப்லயே ஊதிவிட்டிருக்கும்….

  4. இதில் சசி ஜெ வை மட்டும் கூரி இருந்தல் ஆமோதிகலாம் ஆனால் சாதியை சொல்லி இருபது தவரு. இன்ரு எல்லா துரையிலும் எல்லா மதத்தவரும் இருகிரார்கல் மரக்கவெஆன்டாம்.

    பாதி பொய் பாதி மெய்

    • புராணப் புளுகான ராமர் பாலத்தை நினைவு சின்னமாய் அறிவிக்க இந்தியாவிலேயே மத்தியஅரசுக்கு கடிதம் எழுதிய ஒரே முதலமைச்சர் என்பதில் சாதி இல்லையா?

      • கண்டிப்பாக சாதி உள்ளது…நடுநிலமையை எதிர்ப்பார்க்க முடியாது…
        அறிவு சாராத உணர்வு சார்ந்த உட்டாலக்கிடி கொள்கைகளைக்கொண்ட / முரன்பாட்டின் மொத்த உருவான திராவிட வழி வந்த கட்சியிடம் என்ன எதிப்பார்பீர்கள் என்று தெரியவில்லை…

        துரதிருஷ்டமாக திரு.நல்லக்கண்ணு போன்றோரை முதல்வராகப்பெரும் பாக்கியம் நமக்கில்லை!

        அதே நேரத்தில் எதற்கு எடுத்தாலும் பார்ப்பனம் என்று ஒப்பாரி வைப்பதில் வினவின் கம்யூனிஸம் மீதும் சந்தேகம் எழுகிறது…
        புரான ராமர் புளுகு என்கிறீர்கள்…அப்போ மத்த மதங்கள்? மதம் என்ற ஒன்று மனித குலத்தில் ஒழிந்தால் வேண்டுமானால் விடிவு காலம் பிறக்கலாம்…

        • //முரன்பாட்டின் மொத்த உருவான திராவிட வழி வந்த கட்சியிடம் என்ன எதிப்பார்பீர்கள்//

          திராவிட சித்தாந்தம் தான் ‘அம்மையாரை’ அப்படி ராமர் பாலத்துக்கு முட்டுகொடுக்க சொன்னது என்று சொல்ல வருகிறீர்களா? இடிக்குதே…? வினவு எதற்கெடுத்தாலும் பார்ப்பன ஒப்பாரி வைப்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் ஏன் எதற்கெடுத்தாலும் ‘திராவிட சிந்த்தாத்தை’ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இழுக்குறீர்கள் என்று தெரியவில்லை. தெரிந்துவிட்டது. வினவின் கேள்விக்கு நீங்கள் கடைசி வரை பதில் சொல்லவே இல்லை.

          • நண்பரே…. சாதி உள்ளது என்றே பதில் அளித்துள்ளேன்…

            திராவிட சித்தாந்தம் ஏட்டளவில் சரியாகவே உள்ளது…
            ஆனால் நிஜமாகவே சொன்னதைச்செய்தார்களா?
            பெயரில் சாதிப்பெயர் எடுக்கவேண்டும் என்ற மாநாட்டைப்பற்றிய ஆவனத்தைப்படியுங்கள்…. தலைவர்களின் சாதிப்பெயருடனே பதிவு செய்யப்பட்டுள்ளது….

            நாத்திகம் என்று வேஷம் பொட்டவர்களாகவே பெரும்பாலான திராவிட கட்சித்தலைவர்கள் திகழ்ந்துள்ளனர்…
            இவர்களுக்கும் காஞ்சி மடதிற்க்கும் பெரிய வேறுபாடு இல்லை…

          • இத்தகைய திராவிட கட்சிகளை நாம் ஆதரிக்காதிருந்தால் இந்தநிலைமை வந்தி இருக்காது….

            யோசியுங்கள்….காமராசரைத்தோற்கடித்தது நாம் தான்…யாரை இறக்கி யாரை ஏற்றி விட்டோம்? யோசியுங்கள்…

            அந்த காலகட்டத்தில் நல்ல கம்யூனிஸ்ட் தலைவர்களும் இருந்தார்கள்…ஆனால் பாவம்…இவர்களுக்கு எல்லாம் சினிமா வசனமும் மேடையில் நடிக்கவும் தெரியவில்லை…

            • வன்னியர் தேவர் கவுண்டர் போன்ற ஆதிக்க சாதிகள் நாயுடு ரெட்டியார் போன்ற தெலுங்கு சாதியர் மட்டுமே இந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.காமராசர் ஆட்சியில் உள்துறை காவல்துறை அறநிலையத்துறை அமைச்சர்களாகவும் சபாநாயகராகவும் தலித்கள் இருந்தது தான் முதலும் கடைசியும்.பெரியார் வழி வந்தவர்கள் ஒரே ஒரு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரை அதுவும் பார்த்தாலே சிரிப்பு வரக்கூடிய ஒரு காமெடி பீசை தான் நியமிக்கிறார்கள் அண்ணா காலத்தில் இருந்து. இதுதான் திராவிட சித்தாந்தம் மக்கள் தொகையில் அதிகம் உள்ள தலித்கள் ஒற்றுமையின்றி மூன்று சாதியராய் பிரிந்திருப்பது இன்னும் அவர்களை ஊருக்கு ஒதுங்கிய சேரிகளில் வறுமையிலேயே வைத்திருக்கிறது நாடாருக்கு ஒரு காமராசர் போல் தலித்களிடையே ஒரு நேர்மையான அறிவுபூர்வமான தலைவர் தோன்றும் வரை அவர்க்கு விடிவில்லை.

  5. Vinavu was / is right in assessing this duo’s explicitly complex relationship.
    What will happen to Sasikala’s relatives lodged in prison. Will sasi sit idle without helping them. Then, the same Jaya will come out with an apology letter. After the incessant price hikes and drama, the voters should hang their heads in shame.

  6. சசிகலாவின் பிரிவும், உறவும் முட்டாள் தொண்டனுக்கும், முதலாளித்துவ பத்திரிக்கைகளுக்கும் தான் பரபரப்பான செய்தி ஆகிறது என்றால் வினவும் அதற்கு விதிவிலக்கல்ல போல…

    “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்ற வைர வரிகளுக்கு தான் சொந்தக்காரி என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் அதிமுக தலைவி… இதில் ஆச்சரியமில்லை…

    பஸ், பால், மின், பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளையும் கண்ணை மூடி கொண்டு ஏற்றி இருப்பதன் மூலமும், சர்வாதிகார சட்டமன்றம், குள்ளநரி தந்திர கூடங்குளம், கொடுங்கோல் அரசின் பராக்கிரம பரமக்குடி ஆகிய அடக்குமுறைகளின் மூலமும் , பாராளுமன்றத்தை நோக்கிய தமது பயணத்துக்கு தாமே முற்றுப்புள்ளிகள் பல வைத்துள்ளார் அதிமுக தலைவர் அவர்கள்…

    பாராளுமன்ற தேர்தல் தோல்விகளுக்கு பிறகு தான் உண்மை நிலை அவருக்கு தெரிய வரும்… ஆனால் அது கண் கெட்ட பின் சூரியனை காணுதல் போல ஆகும்…

    அதுவரை எத்தனை எதிர்கட்சிகள் ஒன்று கூடி காட்டு கத்து கத்தினாலும், ஆயிரமாயிரம் விமர்சனங்கள் செய்தாலும், கட்டுரைகள் கதறினாலும், பத்திரிகைகள் பதறினாலும், நீதிமன்றங்கள் முறையீடுகளால் நிறைந்தாலும், உண்ணாவிரதங்களில் உயிர்கள் ஊசலாடினாலும், மனித சங்கிலிகள் சாலையை நிறைத்தாலும், பதாகைகள் பாதையை மறைத்தாலும் பயனேதும் இல்லை…

  7. புதியதாய் தொடங்கிய பல திட்டங்களில் தனியாக திருட முடியாமல் நல்ல கை வந்த திருட்டு துணை
    தேவை . அதான் கழதை கெட்டால் குட்டி சுவரு.

  8. அம்மாவை சனியன்னு திட்டனும். அதுக்கொரு ப்ளாக். வெளங்கிரும்!

    தாத்தா ஆட்சி வந்தா தேனும் பாலும் ஓடுமோ? நாங்களும் பாத்தோம்ல 5 வருஷம் கருணாநிதி அண்ட் கோ எப்படி எல்லாம் கொள்ளை அடிச்சு பாசிச ஆட்சி நடத்திசுன்னு. அதெல்லாம் உங்க காமாலைக்கண்ணுக்கு தெரியாமல் போனதேன்? சாதி தானே.

    • வாளியண்ணே, அம்மாவை விமர்சனம் செய்ததை விட கலைஞரை விமர்சனம் செஞ்சுதான் வினவுல அதிக பதிவுகள் வந்திருக்கு, அது உங்க பச்சக்காமாலை கண்ணுக்குதெரியாம போனது அறியாமையா இல்ல பார்பார சாதிப்பற்றா?

      • விமர்சனம் வேறு. வசை வேறு. ஒரு இடத்துல கூட கருணாநிதியை சாதிப்பெயர் சொல்லி திட்டியதில்லை. அந்த சாதிப்பெயர் சொல்லத்தான் தைரியம் உண்டா? அம்மா ஆட்சிக்கு வந்தா மட்டும் சாதி ஞாபகத்துக்கு வருதோ? இவங்க எல்லாரும் அரசியல்வாதிகள். அடிப்படையில் எல்லாரும் ஒண்ணுதான். எதுக்கு சாதியை இழுக்கன்னும்?

    • அம்மாவை விமர்சித்தால் உடனே ‘அய்யா குருப்பா’ நீ என்று கேட்கும் சின்னபுள்ள தனத்தை எப்போது விடப் போகிறீர்களோ அறிவாளி(?)…!!!

      • கருணாநிதி அவர்களை தினகரன் தவிர அனைத்து பத்திரிக்கைகளும் தினம் தோறும் செய்து, துவைத்து தொங்கப்போட்டு, நாறடித்து கொண்டிருக்கின்றன… இப்படி கருணாநிதி அனைத்து ஊடகங்களுக்கும் பொது எதிரி ஆனதால் அதிகம் நன்மை பெற்றவராக ஆளும்கட்சி முதல்வர் ஆகிவிட்டார்… கருணாவின் மீது வீசப்படும் ஒவ்வொரு வசவும் தனது மீது விழும் வாழ்த்தாக அவர்தான் பார்க்கிறார் என்றால், முட்டாள் மக்களும் அப்படியே பார்க்கின்றனர்…

        சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், யாரவாது அத்தி பூத்தார் போல முதல்வரின் அராஜகத்தை கண்டித்தால் அவர்களை கருணாவின் கட்சிக்காரன் என்று சொல்லும் அளவுக்கு அரசியலை கரைத்து குடித்து வைத்துள்ளனர்..

        நாம் ஆளும் கட்சியை கண்டித்தால், எதிர்க்கட்சிக்காரன் என முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சம் இருப்பதாலேயே ஒரு சில நடுநிலை பத்திரிகைகள் கூட அடக்கி வாசிக்கும் அவல நிலை இருக்கிறது… அதை சான்றளிப்பதாகவே அவற்றின் வாசகர்களும் இருக்கிறார்கள்… !!!

        கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, அல்லது மன்மோகனோ சோனியாவோ அல்லது அத்வானியோ, மம்தாவோ, மாயாவதியோ, முலாயமோ, மோடியோ, எடிஊரப்பாவோ மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டால் அனைவரையும் பாரபட்சமின்றி கண்டிப்போம், கண்டிக்க வேண்டும் என அனைவரும் நினைக்க வேண்டும்..

      • என்ன பொன்ராஜ், நீங்கதான் சின்ன்புள்ளத்தனமா பேசுறீங்க. நான் சுட்டிக்காட்டிய மேட்டர விட்டுட்டு வேற ஏதோ பேசிகிட்டு இருக்கீங்க. கருணாநிதியை ஒரு முறை கூட சாதிப்பெயர் சொல்லி விமர்சனம் செய்யாத வினவு எதற்காக ஒவ்வொரு முறையும் அம்மாவின் சாதியை குறிப்பிட வேண்டும்? வினவின் ரெட்டை நிலை புரியவில்லையா? இல்ல, புரியாத மாதிரி நடிக்கறீங்களா?

        அம்மா பிறப்பால் ஐயங்கார்னு எங்களுக்கு தெரியாதா? தெரிந்தும் மக்கள் வோட்டு போட்டு அமோக வெற்றி கொடுத்தாங்க. அதே மக்கள் இன்னிக்கு வாய்க்கு வந்தபடி திட்டிகிட்டு இருக்காங்க. அரசியல்வாதிமேலும் அராஜக ஆட்சியின் மேலும் இருக்கும் ஆத்திரம் தானே தவிற, சாதி துவேஷம் அல்ல. அதனாலதான் வினவுக்கு காமலக்கண்ணுன்னு சொன்னேன். நடக்கும் ஆட்சியை சாதி நிறம் பூசாமல் வினவுக்கு விமர்சனம் செய்ய முடியாத கையறு நிலை.

        மாயாவதியின் ஆட்சியைப்பற்றியும் மக்கள் தேர்தலில் எப்படி விரட்டினாங்க என்பதைப்பற்றியும் ஒரு வார்த்தை கூட இதுவரை எழுதவில்லையே! ஏனோ? அவர் தலித் என்பதாலா? வினவு எப்படி ஐய்யர்களை தரக்குறைவாக பேசுதோ, அதேமாதிரி வட நாட்டுப் பகுதிகளில் மாயாவதியின் பிறப்பையும் சாதியையும் இழிவாகப் பேச மேல்சாதியினர் தயங்குவதில்லை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்ல. வெட்கக்கேடு!

        • மாயாவதியின் பிறப்பையும் சாதியையும் இழிவாகப் பேச மேல்சாதியினர் தயங்குவதில்லை………சத்தியமா ஒன்ன அடுத்தவன் அறிவாளின்னு சொல்லியிருக்க மாட்டான். அப்படி பேசியதாக ஒரு ஆதாரம் இருந்தால் கொடுப்பா அறிவாளி. அரசியல் அமைப்பு சட்டத்தையே கேலி கூத்தாக்குகிறாய்.அப்படி ஒரு பத்திரிக்கை செய்தி இருந்தால் வெளியிடவும்.இங்கெல்லாம் வந்து கருத்து சொல்லனும்னா கொஞ்சமாவது பொது அறிவு இருக்கணும் அறிவாளி.பாத்து பேசு.

          • இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டா எப்படி? மத்தவங்க சொல்லும்போது நான் என்ன ரிக்கார்ட் பண்ணிக்கிட்டா இருக்கேன்?

            பொது அறிவ பத்தி நீ பேசுறியா? நான் சொன்னது வட நாட்டு பகுதிகளில். அங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா? அங்க வாழும் மக்கள் எப்படிப்படவங்கன்னு தெரியுமா? அந்த பக்கம் போயிருக்கியா? கிணத்து தவளை மாதிரி பேசக்கூடாது. உனக்கு விவரம் பத்தாது அரசு. வட நாட்டுல தலித்துகள் நிலைமை என்னன்னு தெரியாம சும்மா ஏட்டளவில் உள்ள சட்டத்தை பத்தி பேசுவது வெட்டித்தனம்.

            • நான் இருபது வருஷமா உத்ரப்ரதேசத்தில் தான் இருக்கிறேன் அதுதான் இவ்வளவு ஆர்வமாய் கேட்டேன் ஊட்டுக்குள்ள பேசிக்கறத பத்தி பேசினாயா அறிவாளி.இங்கே பத்திரிகைகள் பற்றி பேசும்போது குறுக்கே நீ வந்து ஏன் திறக்கிறாய் அறிவாளி?

  9. ஒன்னுசேந்து அடிச்ச கொள்ளையில் ஆளுக்கு பாதி என்று பங்கிட்டுகிட்டாங்க இப்ப சண்டை என்ற நாடகத்தால் சொத்து சிதறி வழக்கு விசாரனை அப்படின்னு பேயி எங்கே மக்களுக்கு சொத்துகுவிப்பு விசயம் துள்ளியமா தெரியவரும் என்று சேர்த்திருந்தா நல்லது என்று முடிவு செய்துட்டாங்க. இதில் மக்கள் புலம்புவதை தவிற எதுவும் செய்ய முடியவில்லையே.

  10. Dinamani writes favourable editorials not only because of caste affiliation but also because it got 23 advertisements from the ruling party for last year Deepavali Malar.Only film producers will like to have good review from Vikatan Vimarsana Kuzhu.For the first time in history,TN Finance minister cites Dinamani”s editorial supporting TN budget as a testimonial.Dinamani Editor will soon get a Doctorate from Thambithurai”s University since Finance Minister respects him like Palkivala.What is so special in this editorial?Inspite of fresh tax on edible oil producers having a turnover of less than 5 crores,both the minister as well as Dinamani says that price of edible oil will not go up.Inspite of 7 fold increase in guideline value,price of land will not go up according to them.Only thing they have not explained as to why there was so much rush in registration offices during last week of Mar,2012.They think that entire TN people as fools to believe them

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க