Monday, October 14, 2024
முகப்புசெய்திசச்சின், யுவராஜ், சேவாக், சஹாரா: யாருக்கு பாடை கட்டுகிறார்கள்?

சச்சின், யுவராஜ், சேவாக், சஹாரா: யாருக்கு பாடை கட்டுகிறார்கள்?

-

செய்தி-24

ந்திய கிரிக்கெட் அணிக்கு புரவலராக நீண்ட காலமிருக்கும் சுப்ரதோ ராய் தலைமையிலான சஹாரா குழுமம் சில்லறை வர்த்தகத்தில் இறங்கி உள்ளது. உத்தர பிரதேசம், உத்தர்காண்ட், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் 60 நகரங்களில் Q SHOP என்ற பெயரில் கடைகளை விரிக்கப்போகிறது சஹாரா.

சச்சின்-டென்டுல்கர்அதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம் ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சஹாரா “கலப்படம் இல்லாத மளிகை சாமான் மற்றும் உணவுப் பொருட்களை விற்கிறது” என்பதை காட்டுவதற்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக் ஆகியோர் சஹாராவின் தரமான பொருட்களை வாங்காதவர்களுக்கு ஈமச் சடங்குகள் செய்வதாக நடித்திருந்தனர்.

இந்த விளம்பரம் வெளியாகி ஒரு வாரத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) விளம்பரத்தில் நடித்த சச்சின் டெண்டுல்கரும் ‘கடும் எதிர்ப்பு’ தெரிவித்துள்ளனர். விளம்பரத்தில் நடிக்கும் போது என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் விளம்பரம் வெளியான ஒரு வாரத்திற்கு பிறகு விழித்துக் கொண்ட அதி புத்திசாலிதான் ‘நாடே போற்றும்’ கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

பெரு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கும் போது சிறு வியாபாரிகளும் விவசாயிகளும் சிறு தொழில்களும் அழிந்து போகின்றனர் என்பது உலகளாவிய அனுபவம்  அமெரிக்காவின் வால்மார்ட் கால் வைத்த நகரங்களில் சிறு வணிகர்கள் தொழிலிலிருந்து துரத்தப்பட்டு கடைத்தெருக்கள் சுடுகாடுகளாக ஆகி விடுவதை சித்தரிக்கும் ஆவணப்படங்கள் வெளியாகியிருக்கின்றன

இந்தியாவிலும் ரிலையன்ஸ் பிரெஷ் போன்ற பெரு நிறுவனங்களின் கடைகள் மூலம் பல சிறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதும் பெரு நிறுவனங்களன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் கடுமையாக சுரண்டப்படுவதும் நடந்து கொண்டிருக்க  இப்போது சஹாரா நிறுவனமும் களத்தில் குதித்திருக்கிறது.

இலங்கையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது கொழும்புக்குப் போய் கிரிக்கெட் ஆட போன போதோ, கொலைகார பால்தாக்கரேவை தனது திருமணத்திற்கு அழைக்கும் போதோ சச்சின் டெண்டுல்கர் தனது இமேஜ் பற்றிக் கவலை கொள்ளவில்லை.

சஹாராவின் கலப்படமற்ற பொருட்களை வாங்கவில்லை என்றால் வாடிக்கையாளருக்கு மரணம் நிச்சயம் என்ற எகத்தாளம் இருக்கட்டும்; சஹாராவின் சில்லறை கடைகள் புற்றீசல் போல பெருகினாலே எத்தனை சிறு வணிகர்கள், சிறு தொழில்கள், விவசாயிகள் அழியப்போகின்றனர்? இவர்கள் பாடை கட்டப்படுவதெல்லாம் இந்த கிரிக்கெட் நட்சத்திரங்களுக்குத் தெரியாது. தெரிந்தாலும் கவலைப்படப் போவது கிடையாது. அவர்களின் கவலை தம்மை ஆராதிக்கும் நடுத்தர வர்க்கத்தை கேலி செய்யக்கூடாது என்பது மட்டுமே.

உண்மையில் சஹாராவுக்கும், கிரிக்கெட் மோகத்திற்கும் நாம்தான் பாடை கட்ட வேண்டும். இல்லையேல் சுடுகாட்டில் கூட நமக்கு இடமிருக்காது.

இதையும் படிக்கலாம்

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

________________________________________________

  1. எல்லா கூமுட்டைங்களையும் விட, சச்சின் ரொம்ப தத்ரூபமாக நடிச்சிருக்கான். ‘சாவுகிராக்கி’ மாதிரியே முகஅமைப்பு! கேரக்டரோட அப்படியே ஒன்றிப்போயிட்டாண்ணே. இன்னாமாரி ஆக்சன் குடுக்குறான்… இவனைப்போயி கிண்டலடிக்கிறீங்களே?

  2. காசைத்தவிர, வேரெதுவும் கண்ணுக்குத்தெரியாதா இந்த நாய்களுக்கு?

    குழந்தைகளுக்கே… பாடை கட்டி நடிக்கும் போது சிறு வியாபாரியாவது,விவசாயியாவது!

  3. மானம் கேட்டவர்கள் இவர்கள் பணத்திற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யும் திருட்டு பயல்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க