Sunday, April 18, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சிங்கள மக்களை எதிர்க்கும் 'வீரம்'! தரகு முதலாளிகளைக் கண்டு கொள்ளாத 'அறம்'!!

சிங்கள மக்களை எதிர்க்கும் ‘வீரம்’! தரகு முதலாளிகளைக் கண்டு கொள்ளாத ‘அறம்’!!

-

செய்தி -83

சிங்களவர்கள்-மீது-தாக்குதல்ரசியல் ரீதியான கோரிக்கைகளைக் கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு. இவர்கள் தமிழ் என்றோ இல்லை ஈழத்தமிழர்களை தொப்புள் கொடி என்றோ எந்த அளவுக்கு உருகி பேசுகிறார்களோ அந்த அளவுக்கு தமிழுக்கும், ஈழத்திற்கும் சமாதி கட்டப்படும்.

கருணாநிதி அஞ்சி அஞ்சி நடத்திய டெசோ மாநாட்டினால் ஏதும் செல்வாக்கு உயர்ந்து விட்டதோ என்றெண்ணிய ஜெயலலிதா போட்டியாக இராணுவப் பயிற்சியை விரட்டும் வேலையை எடுத்தார். ஆனால் இலங்கை நட்புறவு நாடு, இராணுவப் பயிற்சியை தொடர்ந்து கொடுப்போம் என்று மத்திய அரசு வெளிப்படையாக கூறியதும் அதை கண்டன அறிக்கைகளாகவோ இல்லை வெற்றுப் புலம்பல்களாகவோ மட்டுமே அ.தி.மு.க மற்றும் தி.மு.கவால் கடந்து செல்ல முடிகிறது.

பழ நெடுமாறன் முதலான தமிழனவாதிகளோ கருணாநிதியை எதிர்ப்பதற்கு மட்டும் ஈழப்பிரச்சினையை பேசுகின்றனர். மற்றபடி ராஜபக்சேவை காப்பாற்றிய ஐ.நா தீர்மானத்தையோ, இல்லை அதன் பொருட்டு இந்தியா கொண்டு வந்த திருத்தங்களையோ மனதார பாராட்டிய தமிழினவாதிகள் டெசோ மாநாட்டால் பலனேதுமில்லை என்று புலம்புவது நல்லதொரு நகை முரண்! கருணாநிதியாவது தனது இயலாமையை, தோல்வியை, இதற்கு மேல் என்ன செய்ய முடியுமென்று ஒத்துக்கொள்கிறார். தமிழினவாதிகளோ இலக்கற்ற அட்டைக்கத்தி வீரத்தையே மாபெரும் போர் என்று சுய இன்பம் அடைகிறார்கள்.

இலங்கைக்கு இராணுவ பயற்சியை அளிக்கும் இந்தியாவை கண்டிக்க வக்கற்ற ஜெயலலிதா அடுத்து இலங்கை கால்பந்து வீரர்கள் போன்ற பலவீனமானவர்களை துரத்தி தனது வீரத்தை பறைசாற்றிக் கொண்டார். இதே வீரம் இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களையோ, அல்லது ஐ.பி.எல் போட்டிகளுக்காக சென்னை வந்து ஆடிய அந்த நாட்டு வீரர்களை விரட்டுவதில் காட்ட முடியுமா? இந்திய தரகு முதலாளிகள் ஏலமெடுத்திருக்கும் அணிகளில் ஆடும் இலங்கை வீரர்களை ஒரு போதும் ஜெயலலிதா மட்டுமல்ல ஏனையோரும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்த்தால் அவர்களுக்கு படியளக்கும் அம்பானி, இந்தியா சிமெண்ட்ஸ், வாடியா, சஹாரா போன்ற பகவான்கள் கோவித்துக் கொள்வார்கள்.

ஜெனிவா-2ஆக உண்மையில் சிங்கள இனவெறி அரசை எதிர்க்க முடியாதவர்கள் இறுதியில் ஆன்மீக யாத்திரை வந்த சிங்கள மக்களை துரத்தியிருக்கிறார்கள். வேளாங்கண்ணி, பூண்டி மாதா ஆலயங்களுக்கு வந்த மக்களை நாம் தமிழர், வைகோ கட்சியினர் மாபெரும் ‘போர்’ செய்து விரட்டியிருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் எனும் தலையே வீரதீரமாக ஆடும்போது இந்தக் குட்டி வால்கள் இப்படிக்கூட ஆடவில்லை என்றால் எப்படி?

இலங்கை இராணவத்திற்கு பயற்சி அளிப்பது மட்டுமா இந்தியா செய்கிறது? முள்ளிவாய்க்கால் போரையே எல்லா உதவிகளோடும் நடத்தியது இந்தியாதானே? அதைக் குறிப்பிட்டு இந்திய அரசை அம்பலப்படுத்தி மக்களிடம் இயக்கமெடுக்க வேண்டியதற்கு பதில் இந்திய அரசிடமே கோரிக்கை வைத்தவர்கள்தான் நெடுமாறன், வைகோ முதலான தமிழினவாதிகள். இதன் நீட்சியாகத்தான் ராஜபக்சேவை தனிமைப்படுத்தி எதிர்ப்பதற்கு பதில் அப்பாவி சிங்கள மக்களை பகைத்துக் கொண்டு ராஜபக்சேவின் கரங்களை வலிமைப்படுத்துகிறார்கள்.

இதே காலத்தில் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஏர்ஜெட் நிறுவனம் மதுரை டூ கொழும்பு விமான சேவையை ஆரம்பித்திருக்கிறது. சீமானோ மற்ற தமிழ்ப்புலிகளோ சன்.டிவியினை இந்த இலங்கை சேவையை தடுத்து நிறுத்த துப்பிருக்கிறதா? நானோ காரின் முதல் வெளிநாட்டு சேவையை கொழும்புவில் ஆரம்பித்திருக்கும் டாடாவை நிறுத்தக் கூறும் தைரியம் உண்டா? இல்லை ஏர்டெல்லிருந்து பல்வேறு முதலாளிகள் இலங்கையில் கால் பதித்திருக்கிறார்களே அதைத்தான் அகற்ற முடியுமா?

மாறாக இந்திய இலங்கை முதலாளிகளின் மாநாடே அரசு ஆதரவுடன் இங்கே பகிரங்கமாக நடக்கிறது. இப்படி இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசும் இலங்கையோடு வைத்துள்ள அரசியல் பொருளாதார உறவின் ஒரு அங்கமாகத்தான் ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் அங்கே ஒடுக்கப்படுகிறது. இதை புரிந்து கொண்டால் நாம் கொடுக்க வேண்டிய அடி இந்திய தரகு முதலாளிகளை நோக்கி இருக்க வேண்டும். இங்கு அடித்தால் வலிக்க வேண்டியவர்களுக்கு வலிக்கும். அதை விடுத்து அப்பாவி மக்களை அடித்து துரத்துவதால் ஆவதென்ன?

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

 1. பதிவுக்கு நன்றி.
  தமிழகத்தில் எழுகின்ற இலக்கற்ற இந்த உணர்ச்சிக்கூச்சல்கள் ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆபத்தாகவும் தோல்வியாகவுமே முடிந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்து என்னசெய்வதென்று தெரியாமல் அச்சத்தில் இருக்கிறோம் நாம்.

  அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கத்துக்கெதிரான இனங்கடந்த உழைக்கும் வர்க்கக்கூட்டணி ஒன்றினை கட்டி எழுப்பும் பணியில் சிங்கள தமிழ் இடதுசாரிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் இந்த முன்னெடுப்புக்களை எல்லாம் ஒரே அடியாக சிதைத்து அழித்துவிடக்கூடிய செயற்பாடுகள் இவை.

  வினவு போன்ற இயக்கங்கள் இந்த உணர்ச்சி அரசியலின் அபாயங்களைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் இயங்குவது பெறுமதி மிக்கது.

 2. முன்பொருமுறை இதேவாறான தாக்குதல் ஒன்று நிகழ்ந்தபோதும் நாம் சிங்கள, தமிழ் மொழிகளில் வெளியிட்ட அறிக்கை ஒன்றினையும் பொருத்தம் கருதி இங்கே பகிர்கிறேன்.

  சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்

  தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

  சிங்கள மக்களுக்கு தங்குமிடங்களை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து “நாம் தமிழர்” அமைப்பு நடத்தியுள்ள ஆர்ப்பாட்டமும், தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மீது அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற் பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து.

  இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், முழு இலங்கை மக்களதும் நல்வாழ்வுக்கான போராட்டத்திலும் அக்கறை கொண்டுள்ள எமக்கு இச்செய்தி அருவருப்பூட்டுவதுடன் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

  இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது, இலங்கை சிங்கள பவுத்த மக்களுக்கே சொந்தமானதென்றும் மற்றைய தேசிய இனங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்றும் வலியுறுத்திவரும் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

  பேரினவாத சக்திகளோடு உடன்பட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அரச இயந்திரத்தின் மூலம் செய்துவரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

  இன்றுவரை தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் நியாயமான அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் வழங்க மறுத்து இழுத்தடித்துவரும் அரசாங்கங்களுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

  தமிழ் -சிங்கள முரண்பாட்டை ஊதிப்பெருக்கி சாதாரண மக்களை வதைத்தபடி தமது நலன்களுக்காக இலங்கையில் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

  தமிழ் மக்களது அரசியற் கோரிக்கைகள் ஒருபோதுமே சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது.

  ஆனால் வருத்தமளிக்கும் விதமாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் சிங்கள மக்கள் மீதான வன்முறையாகவும் தடம் மாற்றிக்கொண்டுபோகும் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தையே பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன.

  இலங்கைப்பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் வாய்ப்பேச்சும் உணர்ச்சிவசப்படுதலும் நிரம்பியதாக உரிமைப்போராட்டத்தை மாற்றி அதனைக் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.

  இது இனப்பகையை மேலும் மேலும் தூண்டுவதன் மூலம் . மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு நன்மை செய்வதாக மாறிப்போகும்.

  இத்தகைய அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

  சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளைப் புறக்கணிக்கும் சிங்கள மக்களோடு, இந்த நாட்டின் அனைத்துமக்களும் சமமான அதிகாரங்களோடும் சம வாய்ப்போடும் வாழவேண்டும் என்று நேர்மையாக விரும்புகிற சிங்கள மக்களோடு இணைந்து போராட முயற்சி செய்யவேண்டும்.

  இத்தகையை போராட்டமானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நல்வாழ்வுக்கானதாக அமையும். கொள்ளைக்கார உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடித்து இலங்கையர்களுக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொடுக்கும்.

  தமிழர் மீது நடந்த நடந்துவரும் பேரினவாத வன்முறையை ஒவ்வொரு தருணத்தும் தவறாது கண்டித்து வருகிறவர்கள் என்ற முறையில், அதே நியாயத்தின் அடிப்படையில் தமிழரின் பேரல் நடக்கும் வெறியாட்டைத்தைக் கண்டிக்கும் கடமையும் உரிமையும் நமக்குண்டு என்று நாம் கருதுகிறோம்.

  சிங்கள மக்கள் மீது தமிழகத்தில் இடம்பெற்ற இனவெறி கொண்ட வன்முறைகளுக்காக தமிழர் என்ற அடிப்படையில் சிங்கள மக்களிடம் மன்னிப்பைக் கோருகிறோம்.

  • மன்னிப்பு?
   திரு.மயூரன் அவர்களே… சங்ககாலம் தொடங்கி இன்றளவும் மன்னித்துக்கொண்டெதான் இருக்கிறோம். விருந்தோம்பலில்,நாம் தான் உலகிற்கே முன்னோடி, ஆனால் ஒடுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பகைவர்களால் அழிக்கப்பட்டும், துரோகிகளால் வீழ்த்தப்பட்டும், இனமும் மொழியும்,நசுங்கி விரக்தியின் உச்சத்தில் இருக்கும் மக்களிடம் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?
   இலங்கையில் தமிழர்கள் மொத்தமாக கொன்றோழித்த போது சிங்களவர்கள் திருவிழா போல கொண்டாடினார்கள். சரி , உங்கள் விருப்பபடி வேறென்ன செய்து எதிர்ப்பை காட்ட சொல்கிரீர்கள்,? கருப்பு கொடி காட்டலாமா? இல்லை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாமா? இல்லையென்றால் தீக்குளீக்களாமா?

   • இப்போது நீங்கள் செய்வது என்ன ? சாமானிய சிங்கள மக்களை தாக்குகிறீர்கள், இந்த செயலால் நீங்கள் சாதித்தது என்ன ? எதிர்காலத்தில் சாதிக்கப்போவது என்ன ?

    இந்திய அரசின் கொள்கைகளை தாக்குவது, துரோகமிழைக்கும் ஓட்டுப்பொறுக்கிகளை அம்பலப்படுத்துவது, இலங்கையில் மூலதனமிடும் இந்திய நிறுவனங்களை அடித்து நொறுக்குவது அவர்களின் தயாரிப்புகளை புறக்கணிப்பது, இந்தியாவிலுள்ள பிற தேசிய இன மக்களிடம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கோருவது ஆகிய செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்யாமல் சுற்றுலா வந்தவர்களையும், கோவிலுக்கு வந்தவர்களையும் தாக்குவதால் என்ன பயன் ?

    • அம்பேத் சித்தார்த்….
     நாங்கள் செய்வது எதிர்வினை மட்டுமே… அதாவது எதிர்ப்பை காட்டினோம்.நீங்கள் எதிர்வினையை மட்டுமே கணக்கில் கொள்கிரீர்கள்.. வினையை கருத்தில் கொள்வதில்லை. இதுவரை உங்கள் நடுநிலைமையால் நாம் சாதித்தது என்ன ? எதிர்காலத்தில் சாதிக்கப்போவது என்ன ?

     //இந்திய அரசின் கொள்கைகளை தாக்குவது,//

     அண்டைநாட்டின் கொள்கைகளை தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை, தமிழர்க்கென்றூ ஓரு தேசம், அதற்கென்றூ ஓரு கொள்கை,, இதையே விரும்புகிறோம்.

     //துரோகமிழைக்கும் ஓட்டுப்பொறுக்கிகளை அம்பலப்படுத்துவது//

     துரோகமிழைக்கும் ஓட்டுப்பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில் எமக்கு விருப்பம் இல்லை, இதுவரை அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளீன் துரோகமிழைக்கும் தன்மையை உலகிற்கு எடுத்துகாட்டியாகிவிட்டது, என்ன பலனை கண்டோம்?

     //இலங்கையில் மூலதனமிடும் இந்திய நிறுவனங்களை அடித்து நொறுக்குவது அவர்களின் தயாரிப்புகளை புறக்கணிப்பது,//

     இலங்கையில் மூலதனமிடும் தமிழக நிறுவனங்களை அடித்து நொறுக்குவதும் அவர்களின் தயாரிப்புகளை புறக்கணிப்பதும் மட்டுமே நாம் செய்யக்கூடியது…

     //இந்தியாவிலுள்ள பிற தேசிய இன மக்களிடம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கோருவது ஆகிய செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்யாமல்//

     இந்தியாவிலுள்ள பிற தேசிய இன மக்கள் அனைவரும் தேசிய கட்சிகளீன் அரவணைப்பில் உள்ளன.நம்மிடம் எல்லாம் இருக்கும்போது ஏன் வெளீயெ ஆதரவு கோர வேண்டும்?நாம் ஒன்றானால் போதும், யாரிடமும் ஆதரவு பிச்சை எடுக்க வேண்டியது இல்லை.

     • //அண்டைநாட்டின் கொள்கைகளை தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை, தமிழர்க்கென்றூ ஓரு தேசம், அதற்கென்றூ ஓரு கொள்கை,, இதையே விரும்புகிறோம்.// பார்ரா …. . இந்திய கொள்கைய எதிர்ப்பது அயல் நாட்டு கொள்கையை எதிர்ப்பதாம். அப்போ யாரிட்ட போராடி தமிழ் தேசியம் அமைக்க போற.

     • ///நாங்கள் செய்வது எதிர்வினை மட்டுமே… அதாவது எதிர்ப்பை காட்டினோம்.///

      உங்களுடைய எதிர்ப்பு சாதாரண மக்களை நோக்கியதாக இருக்கிறது. இந்த வகையிலான உணர்ச்சிவயப்பட்ட எதிர்ப்புகள் உண்மையான எதிரிகளை மூடி மறைத்து சாதாரண மக்களை எதிரிகளாக்குகிறது. இந்த வழிமுறை சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக சக்திகளையும் கூட வாயை திறக்கவிடாமல் தடுக்கிறது இன்னொரு புறம் இரண்டு நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கத்திற்கு வசதியானதாக இருக்கிறது.

      இதன் உடனடி விளைவாக நேற்று இலங்கை வர்த்தகர்கள் கொழும்பிலுள்ள இந்தியத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராடியிருக்கின்றனர். நாளை தமிழ் மக்களை தாக்கவும் கூடும். அவ்வாறு தாக்கினால் அதற்கு தமிழகத்தில் சிங்கள மக்களை தாக்கியவர்கள் தான் பொறுப்பு !

      இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசே மூக்கை நுழைக்காதே என்று சிங்கள மக்கள் இந்தியத்தூரகத்தை முற்றுகையிட்டு போராடும் நிலை ஏற்பட்டால் அது நமக்கு வெற்றி, இந்திய சிங்கள இனவெறி அரசுகளுக்கு தோல்வி-பின்னடைவு. மாறாக தற்போது நடந்திருப்பது என்ன ? தமிழகத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி தர முதலில் வணிகர்கள் வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள், அடுத்து மாணவர்கள், தொழிலாளர்கள் என்று ஒவ்வொரு பிரிவினராக இறங்கலாம். தற்போது அவர்கள் ஆயூதபாணிகளாக இல்லை. நாளை அவர்கள் ஆயுதங்களோடு தாக்குதலில் இறங்கினால் சாகப்போவது இங்குள்ள தமிழினவாதிகள் அல்ல அப்பாவி ஈழத்தமிழ்ர்கள் தான். இரு தேசிய இனங்களிலும் மக்கல் இவ்வாரு மோதிக்கொள்வதை தான் ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. தமிழினவாதிகளின் இந்த வழிமுறையை மேற்கொண்டால் இரு தரப்பிலும் அடித்துக்கொண்டு சாக வேண்டியது தான். தமிழினவாதிகள் அதற்கு தான் வழி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

      பாசிச இனவெறி அரசுக்கெதிராக சிங்கள மக்களுடன் ஐக்கியப்படாமல் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை.

     • ///இதுவரை உங்கள் நடுநிலைமையால் நாம் சாதித்தது என்ன ? எதிர்காலத்தில் சாதிக்கப்போவது என்ன ?///

      ஒரு இனம் இன்னொரு இனத்தை தாக்குவது தவறு என்றும், இரு இனத்திற்கும் இவர்கள் தான் எதிரிகள் என்று எதிரிகளை அடையாளம் காட்டினால் அது நடுநிலைமையா ? மேலும் நடுநிலைமை என்று ஒன்றும் இல்லை. நாங்கள் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்துடன் ஒடுக்கப்படும் தேசிய சிறுபாண்மையினரான ஈழத்தமிழர்களின் பக்கம் தான் நிற்கிறோம்.

     • ///இந்தியாவிலுள்ள பிற தேசிய இன மக்கள் அனைவரும் தேசிய கட்சிகளீன் அரவணைப்பில் உள்ளன.///

      தமிழ் மக்கள் மட்டும் என்ன தமிழ் தேசிய கட்சிகளிலா இருக்கிறார்கள் ? எல்லோரும் பிழைப்புவாத காரியவாத கண்ணோட்டத்துடன் ஓட்டுப்பொறுக்கிகளை அண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த இழிந்த நிலையை மாற்றுவது தான் நமது வேலை.

      ///நம்மிடம் எல்லாம் இருக்கும்போது ஏன் வெளீயெ ஆதரவு கோர வேண்டும் ?///

      உங்களிடம் எல்லாம் இருந்தும் ஏன் முள்ளிவாய்க்காலை தடுத்து நிறுத்த முடியவில்லை ?

      ///நாம் ஒன்றானால் போதும், யாரிடமும் ஆதரவு பிச்சை எடுக்க வேண்டியது இல்லை///

      தன்னைப்போலவே ஒடுக்கப்பட்ட மற்ற தேசிய இனங்களோடு ஐக்கியப்படுவதற்கு பெயர் பிச்சை எடுப்பது அல்ல உமா. மேலும் பிற தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறைகளை தெரிந்தும் எதிர்க்காமல், அவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருப்பது துரோகமாகும். இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட தே.இனங்கள் அனைத்தும் தம்மைப்போலவே ஒடுக்கப்படும் காஷ்மீரிகளோடும் மணிப்பூரிகளோடும்,அசாம்,குக்கி, நாகா மக்களோடும் ஒன்றிணையாமல் தம்மை மட்டும் இந்திய தேசியத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது.

      ஆனால் நீங்கள் முடியும் என்கிறீர்கள்.எப்படி என்பதையும் சொல்லுங்கள்.

 3. உண்மை, முற்றிலும் உண்மை. நமக்கு எதிரிகள் ஈழ அரசியல் தலைவர்கள். நமது இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நாயமற்ற தொழில் செய்யும் மனிதர்கள்.

 4. பூண்டி மாத கோவிலுக்கு வந்தவர்களை அடித்ததால்தான் உங்களுக்கு வலிக்கிறதா வினவு. இதுவே இந்துகள் யாராவது கோவிலுக்கு வந்து அவர்களை தமிழன் அடித்திருந்தால் நிச்சயம் சந்தோசப்பட்டிருப்பீர்கள் அப்படிதானே. ஏதோ பெரிய அறம் சொல்லுவது போல நாம் தமிழருக்கு விளக்கம் அளிக்கின்றீர்களே. ராஜபட்சே வரும் போது வரவேற்க போவது கருணாதியும். உங்களைப் போன்ற நடுநிலையாக நடிப்பவர்கள்தான் என்பதை உணர முடிகிறது.

   • இத அப்படியே கல்வெட்டுல எழுதிட்டு பக்கத்துலையே உக்காந்துக்குங்கடா ….. கழுகுகள் பிணத்தில் கூட அரிசி பொருக்கி திங்கும்.

  • கோவிலுக்கு வந்த சாதாரண மக்களை அடிக்கப்பாயும் கைப்புள்ளைகளும் அந்த கைப்புள்ளைகளை ஆதரித்து ‘உணர்வு’ கொப்பளிக்க பின்னூட்டமிடும் உங்களைப்போன்ற ‘தமிழ்’ உணர்வாளர்களும், உங்களுடைய பின்னூட்டத்தை 100% கரெக்ட் 200% கரெக்ட் என்று ஆதரித்து பின்னூட்டமிடும் பையா, சீனு போன்ற தமிழ் உணர்வாளர்களும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று தொழில் துவங்கும் சன் நெட்வொர்க், ஏர்டெல், எஸ்.ஆர்.எம், டாடா, அம்பானி போன்ற முதலாளிகளையும் அதே போல அங்கிருந்து இங்கே வரும் சிங்கள முதலாளிகளையும் எப்போதாவது எதிர்த்ததுண்டா ?

   நாம் எதிர்க்க வேண்டியது சாதாரண மக்களை அல்ல. முதலாளிகளையும் ஆளும் வர்க்கத்தையும் தான் நாம் எதிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்காக தான் முள்ளிவாய்க்கால் போர் நடந்தது.

  • ஸுபெர் 100% சொர்ரெச்ட். வினவுக்கு கிறித்துவர் மற்றும் முஸ்லிம் தானே மனிதர்கள்.

   • அப்படி என்றால் நீங்கள் ஈழத்தமிழர்களுக்காக உருகும் தமிழுணர்வாளர் அப்படித்தானே கார்த்திக் ?

 5. அப்படியே சாரா… நீங்கள் கட்டுரையில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடலாமே.

 6. தமிழினவாதிகள் தங்களின் இலக்கற்ற அட்டைக்கத்தி வீரத்தை விட்டொழிக்கவும்.
  // நாம் கொடுக்க வேண்டிய அடி இந்திய தரகு முதலாளிகளை நோக்கி இருக்க வேண்டும்.// தமிழினவாதிகள் செய்வார்களா?

 7. இலங்கை அரசோடு கை கோர்த்து கொண்டு, இனப்படுகொலை செய்த இந்திய அரசை கண்டிக்க துப்பை காணோம். வருகிற சிங்கள பொதுமக்களை அடித்து இவர்களின் வீரத்தை காட்டுகிறார்கள். இவர்களை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்த வேண்டும்.

 8. வர்க அரசியல் எல்லாவற்றிலும் ஒளிந்து கொண்டு இருப்பது உண்மையே…

 9. // இலங்கைக்கு இராணுவ பயற்சியை அளிக்கும் இந்தியாவை கண்டிக்க வக்கற்ற ஜெயலலிதா அடுத்து இலங்கை கால்பந்து வீரர்கள் போன்ற பலவீனமானவர்களை துரத்தி தனது வீரத்தை பறைசாற்றிக் கொண்டார். //

  இலங்கை நட்பு நாடு , தமிழகம் அடிமை நாடு என்ற பாணியில் பதில் கூறும் மத்திய அரசுக்கு, தமிழ் இந்தியர்களின் உணர்வுகள் இனவெறி இலங்கை அரசின் நட்பைவிட முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட முடிவாகத்தான் தோன்றுகிறது தமிழக அரசால் துணிந்து முன்னெடுக்கப் பட்ட இலங்கைக் கால்பந்தாட்ட வீரர்களின் வெளியேற்றம்..

  இனியும் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை அலட்சியம் செய்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்த ’பெருமை’ மத்தியில் ஆளும் காங்கிரசையே சாரும்..

 10. இப்போது போர் முடிந்து தமிழர்கள் ‘இனியாவது நம் வாழ்க்கை சுகப்படுமா’ என்று கொஞ்சமாவது நம்பிக்கையுடன் வாழலாம் எனும்போது இப்படி ஏதாவது ஏடாகூடமாக செய்து ஏன் திரும்பவும் சண்டையைக் கிளப்பவேண்டும்? உதவி செய்ய வேண்டாம். உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

  இந்த போரும், வெறுப்பும் இந்த, கடந்த தலைமுறையுடன் போகட்டும். இன்று ‘நட்புக்காக’ விளையாட வந்த சிறுவர்களிடன் நம் ‘வீரத்தை’க் காட்டி அவர்களுக்கும் தமிழர் பற்றிய வெறுப்பை விதைக்காமல் இருந்திருக்கலாம்.

 11. எங்கேடா இன்னும் காணோம்னு நினைச்சேன். வந்துட்டானுங்கப்பா. வினவு சொல்லக்கூடிய முதலாளிகள் எதையும் நேரடியாக செய்வதில்லை. அதனால் நேரடியாக அவர்களை எதிர்க்க முடிவதில்லை. அவ்வளவு தான். தமிழகம் வந்த சிங்களர்களில் யாராவது கொல்லப்பட்டார்களா? இல்லை இங்கு வந்த எந்த சிங்களப்பெண்ணாவது தமிழ் உணர்வாளர்களால் கற்பழிக்கப்பட்டாளா? (அப்படி செய்தால் கூட குற்றமில்லை)பின் எதற்கு இந்த கூப்பாடு? ஒப்பாரி? இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்து சாதாரண பொது மக்கள் செத்தால் அது கண்டனத்துக்குரியது. ஏனெனில் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான சாதாரண மக்களுக்கு காஷ்மீர் எந்த திசையில் இருக்கிறது என்பது கூட தெரியாது. பலர் அடிப்படை படிப்பறிவு கூட இல்லாதவர்கள். ஆனால் சிங்களர்கள் அப்படி இல்லை. மேலும் ஒன்றும் செய்யாமல் விட்டால் மட்டும் என்ன வாழ்ந்துவிட போகிறது. நாள் தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது இல்லாமல் போகுமா? இல்லை ஈழத்தில் இருக்கும் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்து விடுமா? ஒன்றும் இல்லை. நடப்பது நடந்து கொண்டே இருக்கும். இரு பக்கமும் இருக்கும் தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டே இருப்பார்கள். சிங்களர்கள் தமிழகத்துக்குள் ஜாலியாக வந்து செல்வார்கள். மலையாளிகளுக்கு தமிழர்கள் ஏதாவது பாதகம் செய்தார்களா? ஆனால் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையின் போது பல தமிழ்ப்பெண்கள் கேரளத்தில் மானபங்கம் செய்யப்பட்டார்கள். சபரிமலை போன ஒரு தமிழர் சுடுநீர் ஊற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் தான் தமிழகத்தில் வன்முறை பிறந்தது. நாம் திருப்பி அடிக்காமல் விட்டால் எல்லாம் நின்றுவிடுமா? வழக்கம் போல் நடப்பது நடந்துகொண்டு தான் இருக்கும். எப்படியும் பாதிக்கப்படத்தான் போகிறோம்.

  • //தமிழகம் வந்த சிங்களர்களில் யாராவது கொல்லப்பட்டார்களா? இல்லை இங்கு வந்த எந்த சிங்களப்பெண்ணாவது தமிழ் உணர்வாளர்களால் கற்பழிக்கப்பட்டாளா? (அப்படி செய்தால் கூட குற்றமில்லை)// முழுக்க முழுக்க இனவெறி கூச்சல். வெட்கக்கேடு.

   • இப்படி கருத்து சொல்வதே இன வெறி என்றால் தமிழ் மக்களுக்கு அத்தனை அநியாயங்களையும் செய்தவர்களை என்ன சொல்வீர்கள்?

  • \\தமிழகம் வந்த சிங்களர்களில் யாராவது கொல்லப்பட்டார்களா? இல்லை இங்கு வந்த எந்த சிங்களப்பெண்ணாவது தமிழ் உணர்வாளர்களால் கற்பழிக்கப்பட்டாளா? (அப்படி செய்தால் கூட குற்றமில்லை)//

   இன வெறி மிருகமே.குற்றமில்லைன்னு சிங்களவர்களை கொலை கற்பழிப்பு செஞ்சீங்கன்னா பதிலுக்கு அவன் வட கிழக்கு ஈழப்பகுதி கிடக்கட்டும் கொழும்பில் அவன் நாட்டில் தமிழர்கள் மீது கொலை கற்பழிப்பு செஞ்சா என்ன கிழிப்பீங்கன்னு சொல்லணும்.எதிரியை அடித்து வீழ்த்துவதுதான் வீரம்.எதிரிக்கு வேண்டியவர்கள் என்பதற்காக அப்பாவிகளை அடிப்பது கோழைத்தனம்.

   • கொழும்பில் அவர்கள் தமிழர்களை கொலை செய்ததில்லையா? தமிழ் பெண்களை கற்பழித்ததில்லையா? மகிந்த ராஜபக்ச தமிழர்களை ஒழித்ததற்காகத்தானே சிங்களர்கள் அவனை இரண்டாம் முறையாக தேர்ந்தெடுத்தார்கள்? ஆக நம் மீனவர்களும் ஈழத்தில் தமிழர்களும் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சிங்களர்கள் தமிழ்நாட்டுக்கு ஜாலியாக டூர் வந்து செல்ல வேண்டும். நாம் வாய் மூடி மவுனமாக இருக்க வேண்டும்! நல்லா இருக்கய்யா உங்கள் நியாயம். உங்களுக்கு சிங்களர்கள் தான் அப்பாவிகளாக தெரிகிறார்களா? கொஞ்சம் நன்றாக பார்த்தால் ராஜபக்ச கூட அப்பாவியாகத்தான் தெரிவான். தமிழர்கள் தான் பாவிகள்.

    • முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்தியது யார் சிங்கள மக்களா ? இந்திய அரசா ? தமிழர்களின் குரல்வளைகளையும், ஈரல்குலைகளையும் சிங்கள மக்களா அறுத்தெறிந்தனர் ?

     சிங்களர்கள் வீதிகளில் இறங்கி தமிழ் மக்களை நரவேட்டையாடியிருந்தால், தமிழர்களின் குடல்களை உருவி மாலைகளாக அணிந்துகொண்டு வெறியாட்டம் போட்டிருந்தால் அவர்களை அடித்து விரட்டுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சுற்றுலா வந்தவர்களோ அல்லது இலங்கையிலிருக்கும் மற்ற சிங்களவர்களோ இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் அல்ல, சிங்கள இனவெறி அரசு தான் முள்ளிவய்க்கால் இனப்படுகொலையை நடத்தியது, அதை இந்திய முதலாளிகளின் நலன்களுக்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் இந்திய அரசு வழிநடத்தியது.

     அப்படி என்றால் யார் எதிரி ? ராஜபட்சேவும், இந்திய அரசுமா அல்லது நம்மைப் போன்ற சிங்கள மக்களா ?

     எனவே தான்,
     தமிழிணவாதிகளின் ஈடிணையற்ற ‘தமிழ்’ வீரத்தை உண்மையான எதிரிகளிடம் காட்டுங்கள் என்றும், கைப்புள்ளைத்தனமாக சாதாரண மக்களிடம் காட்டாதீர்கள் என்றும் சொல்கிறோம்.

     • காட்டுனாதான் டவுசர் அவுந்துடும்னு எங்களுக்கு தெரியாதா – தமிழ் தேசியவாதிகள்

  • ///இங்கு வந்த எந்த சிங்களப்பெண்ணாவது தமிழ் உணர்வாளர்களால் கற்பழிக்கப்பட்டாளா? (அப்படி செய்தால் கூட குற்றமில்லை///

   இது தான் தேசியவாதம், தேசியவெறி. பார்ப்பனியத்தோடு சேர்த்து இதையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.

 12. we as Indians n Tamilans should extend our hands n heart to Srilankan Tamils .Feel ashamed to watch Tamils getting so degraded n deprived.Is there a way where all the Tamilans can get together n uplift them.

 13. அதை விடுத்து அப்பாவி மக்களை அடித்து துரத்துவதால் ஆவதென்ன?
  சரிப்பா எங்களான முடிந்ததை நாங்க செய்றோம்
  ஈழத்தில் போர் நடந்தபோது அப்பாவி மக்கள் செத்து அழிக்கபட்டபோது எத்தனை சிங்களவர்கள் தெருவில் இறங்கி இராசபக்சேவுக்கு எதிராக போராட்டம் செய்தார்கள்
  சும்மா சொம்பு பிடிப்பதை நிறுத்தி விட்டி ஆக வேண்டிய வேலையை பாருங்கள்.
  இந்தியா முதல் குற்றவாளி அதை மக்களிடத்தே உரைத்துகொண்டுதான் இருக்கிறோம் மடத்தமிழன் என்று உணர போகிறானோ,
  சிங்கள கூட்டங்களை விரட்டி அடித்த அனைவருக்கும் இது தெரியும்.
  சரி இதுவரை ஈழ தமிழர்களுக்காக என்ன செய்திர்கள்?
  சும்மா அறம், நியாயம் என்று பிதற்ற கூடாது
  உன் வீட்டில் இதுபோல ஒரு படுகொலை நடந்தால் நீ நியாயம், அறம் பேசுனும்
  அடுத்தவன் கொலைகளில் நியாயம் அறம் பேசகூடாது

  • ///எங்களான முடிந்ததை நாங்க செய்றோம்///

   உங்களால் முடிந்த இந்த நடவடிக்கை உங்களில் பலருக்கு பிடித்தமானதாகவும் இருக்கிறது. எங்களால் முடிந்ததை செய்கிறோம் என்று கூறுகிறீர்களே உங்களுடைய இந்த செயலால் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன் ? உங்களுடைய இந்த நடவடிக்கைகள ஈழத்தமிழர்களின் வாழ்வை எங்கனம் முன்னேற்றும் ?

   ///மடத்தமிழன் என்று உணர போகிறானோ///

   மக்களுக்கு மேலே நின்று கொண்டு மக்களை மடையன் என்றும் முட்டாள் என்றும் சொரணையற்றவன என்றும் திட்டுகின்ற தமிழினவாதிகள் தமிழக மக்களின் எந்த பிரச்சினைகளுக்காக இதுவரை போராடியிருக்கிறார்கள் ? தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எதற்காகவும் போராடாமல் அவர்களை அவமானப்படுத்தும் விதமாக மேடைகள் தோறும் திட்டுவதை முதலில் நிறுத்திக்கொண்டு பிறகு தமிழ் மக்களைப் பற்றி பேசட்டும். மக்களை மதிக்கத்தெரியாதவர்கள் எப்படி மக்களுக்காக போராட முடியும் ?

   ///சரி இதுவரை ஈழ தமிழர்களுக்காக என்ன செய்திர்கள் ?///

   ஈழப்பிரச்சினைகளில் தவறாக வழிகாட்டும் தமிழினவாதிகளை அம்பலமாக்குவதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.

   ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக என்ன செய்ய வேண்டுமோ அவற்றை நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் கடந்த முப்பது ஆண்டுகளாக செய்து கொண்டு தான் வருகின்றன. ஈழத்திற்கு எதிராக நிற்கும் ஆளும் வர்க்கங்களை எதிர்க்கும் அரசியல் நடவடிக்கைகளின் மூலமும், ஈழப்போராளி குழுக்கள் மீது வைத்த அரசியல் விமர்சனத்தின் மூலமும். அவற்றை எல்லாம் கடந்த முப்பதாண்டுகால புதிய கலாச்சாரம் புதிய ஜனநாயகம் இதழ்களிலும் வினவின் பல பதிவுகளிலும் காணலாம். சரி ஈழத்தமிழர்களுக்காக நீங்க இதுவரை என்ன பன்னிருக்கீங்க ?

   • //சரி ஈழத்தமிழர்களுக்காக நீங்க இதுவரை என்ன பன்னிருக்கீங்க?//

    இப்படி மாறி மாறி கேட்டுக்கிட்டு இருப்பது தான் நம்முடைய பலவீனம்.

    • நான் அதை மட்டுமே கேட்கவில்லையே லெனின் ? அதற்கு மேலேயும் சில விசயங்களை கேட்டுள்ளேன். அதன் இறுதியில் தான் நீங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அதே கேள்வியை உங்களுக்கும் வைத்திருக்கிறேன். இதில் என்ன தவறு ?

 14. //இந்தியா முதல் குற்றவாளி அதை மக்களிடத்தே உரைத்துகொண்டுதான் இருக்கிறோம் மடத்தமிழன் என்று உணர போகிறானோ,சிங்கள கூட்டங்களை விரட்டி அடித்த அனைவருக்கும் இது தெரியும்.//பொய். பாண்டி உட்பட அட்டைக்கத்தி வீரர்கள் யாருக்கும் தெரியாது என்கிறேன்.

 15. தினசரி சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கும் பரம ஏழை கலானிதி மாறனின்
  வயிற்றில் மண் போடலாமா?

 16. மனித நேயம், நாகரீகம், கலாச்சாரம் என்ற பெயரில் யாருக்கேனும் சிங்கள இன வெறியர்கள் தாக்கப்பட்டதில் வருத்தமும், அதிருப்தியும் இருப்பின் அவர்களும் தம் பெண்டு பிள்ளைகளோடு தமிழீழம் சென்று இங்கே மனித நேயம், கலாச்சாரம் போதிப்பதை போல இலங்கையர்க்கும் போதித்துவிட்டு வரலாம், வழியில் உங்கள் மகள்களின் கொங்கைகள் அறுக்கப்பட்டு, மனைவிகளின் பிறப்புறுப்புக்களை துப்பாக்கி ரவைகள் துளைத்தால் உங்களுக்காகவும் கட்டாயம் தீக்குளிப்போம், உண்ணாவிரதம் இருப்போம், போராடுவோம்; ஏனெனில் நாங்கள் இன்னும் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிகள்தான்…

  • மனிதநேயம், நாகரீகம் என்கிற பெயரில் இந்த நடவடிக்கைகள் எதிர்க்கப்படவில்லை அரசியல்ரீதியில் தவறு என்பதால் தான் இவை எதிர்க்கப்படுகிறது. ஈழத்தமிழ்ர்களுக்காக போராடுகிறோம் என்று எண்ணிக்கொண்டு அவர்களுக்கு எதிரான வேலைகளையும், இப்பிரச்சினையில் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகளை மறைக்கும் விதமாக உனர்ச்சிகளை தூண்டிவிட்டும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான அரசியல் ரீதியிலான விமர்சனம் இது.

 17. ஈழத்தில் நம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும் இறந்த போது இதே அரசியல் கட்சிகள் நாடகமாடி தமிழ் மக்களை கிளர்ந்தெழாமல் பார்த்துக்கொண்டார்கள். இப்போதும் மத்திய அரசு இறையாண்மை தான் பேசுகிறதேயொழிய தமிழர்களுக்கு ஆதரவாக அந்தோணி பேசவில்லை.
  இந்த நிலையில் நாம் தமிழர் போன்ற கட்சிகள் இதை எதிர்த்துப் போராடி சிங்களர்களை வெளியேற்றியது வரவேற்கத்தக்கதே.
  இன்று யாழ்ப்பாணத்திற்கு தமிழகத்திலிருந்து ஒரு பத்திரிக்கையாளன் போனால் கூட பின்னாலிருந்து ராணுவம் தடுக்கிறது, ஆயிரம் கேள்விகள் கேட்கிறது, கழுகாய் கண்காணிக்கிறது.
  சாதாரண தமிழன் போனால் திரும்பி வர முடியுமா இல்லை ஏதாவது குற்றம் சொல்லி ஜெயிலில் பிடித்துப் போட்டு கொன்று விடுவார்களா என்று பயத்தோடு தான் போகிறான்.
  சிங்கள மக்கள் இந்த இனவாதம் ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருப்பதை யார் மாற்றுவது? இவ்வளவு நடந்தும் சர்வ சகஜமாக இங்கே வந்து சாமி கும்பிட்டு, திருப்பதி கோயிலுக்குப் போய்விட்டு, புத்தகயாவிற்கு வழிபடப் போகிறேன், புட்பால் விளையாடப் போகிறேன், டான்ஸ் ஆடப் போகிறேன் என்று சிங்களர்கள் வந்து போக முடிந்தால் தமிழ் மீனவன் கொல்லப்படும் அநியாயத்தை அந்த மக்கள் என்று உணர்வது?
  நாம் தமிழர் கட்சி பல நேரங்களில் சரியாகச் செயல்படாவிட்டாலும் இந்த நிலையில் அவர்கள் செய்தது சரியே.
  அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. போராட்டம், தர்ணா நடத்தி அவர்களை திரும்பிப் போகச் செய்தார்கள். அப்படி ஜனநாயக ரீதியாக எதிர்ப்பைக் காட்டியது தவறில்லை. இதில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு பஸ் கண்ணாடிகளை உடைத்துள்ளார்கள். வன்முறை தவறெனினும் பிறப்புறப்பில் துப்பாக்கியைத் நுழைத்து எக்காளமிட்ட சிங்கள சிப்பாய்களின் வன்முறைக்கு ஒப்பிடும் போது இது மிக மிக தார்மீகமானது.
  மக்கள் அப்பாவிகள் அவர்கள் ஒன்றுமே தெரியாத பாப்பாக்கள். எனவே அவர்களை சும்மா விட்டுவிட வேண்டும் என்று பேசுவது சரியான வாதமாகாது. அவர்களும் அறியவேண்டும். தவறை உணரவேண்டும்.
  ஜெ,திருமா, நெடுமாறன் போன்ற எல்லோரும் சந்தர்ப்பவாதிகளே. சென்னையில் வந்து கிரிக்கெட் விளையாடும் இலங்கை வீரர்களை யாரும் ஏன் விரட்டவில்லை என்று கேட்டிருக்கிறார்கள்.
  இப்படி சிறு அளவில் துவங்கும் எதிர்ப்புத் தான் நாளை பெரிய அளவில் வந்து நிற்கும். அன்று ஜெயலலிதா கூட பல்டியடித்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை திருப்பி அனுப்புவார்.
  இந்த எதிர்ப்புகள் மக்கள் கோபமாயிருக்கிறார்கள் என்று ஆளும் வர்க்கங்கள் அறிந்து கொள்ள இருக்கும் ஒரே வழி.
  இதன் ஒரே ஆபத்து இது கட்டுப்படுத்தப்பட முடியாதது.
  ஆனால் இப்போது கூட நம் கோபம் காட்டப்படாவிட்டால் நம்மை ஆள்பவர்கள் என்றும் மாறப்போவதில்லை.

 18. Mr. Periaswamy

  While writing be careful, do not talk about Islam and do not link the terrorism with Islam, that is non of your business.

  What you have known about Islam, who is that idiot named Islamic terrorism.

  இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்து சாதாரண பொது மக்கள் செத்தால் அது கண்டனத்துக்குரியது.

  Mr. Vinavu, you are requested you not omit such this lines when comes from the reader.

 19. dear vinavu,
  இலஙையில் தமிழர்கல் கொஒலை செய்யப்படும்பொது இந்த அப்பவி மக்கல் என்ன செய்து கொஒண்டுஇருந்தர்கல்?
  when tamilians were killed so brutally in sri lanka where were these so called ‘appavi makkal? perhaps praying jesus to stop the killing?
  by the way who willl come to another country as tourists?
  one who has lot money? or else one who is appavi and poor?
  well said when u say that ambani tata birla and suntv etc to be hit . have u ever done that ? this is only great rhetoric .btw when will it willl be done ? when there is a revolutin .when that will happen ? after 100 yrs ? 200 yrs ?
  see whay is not under ur control u cannot do it. it doesnot meaN WHAT U CAN DO
  U SHD NOT DO ?WHEN KERALITES were raping tamilians in mullaperiyar dam row have u condemned it ?
  s seshan

 20. நீதி நியாத்தின் பெறு பேறுகள் தமிழர்களுக்கு இல்லையா முள்ளி வாய்க்கால் படு கொலை நடக்கும் போது ஒன்றுமே தெரியாத மாதிரி பாசாங்கு செய்த இந்திய மீடியா துறை ஒரு சிறிய எதிர்ப்பை பற்றி விழுந்து விழுந்து காட்டுவது கடைந்து எடுத்த அயோக்கிய தனம் அப்பாவிகள் பாதிக்க பட கூடாது இது தான் முள்ளி வாய்க்காலின் போதும் தமிழர்களின் கதறல் கேட்டார்களா என்றால் இல்லை புலிகளும் சரி தமிழ் மக்களும் சரி கடைசி நேரங்களில் கேட்ட யுத்த நிறுத்தங்களுக்கு உடன் பட்டு இருந்தால் பல உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கும் சிங்களவர்களும் அதன் அரசும் இரக்கங்களுக்கோ நீதிக்கோ மனித நாகரிக்கத்துக்கோ பொருத்தம் இல்லாதவர்கள் வெள்ளை கொடியோடு சரண் அடைய சொல்லி விட்டு கொலை செய்தவர்கள் இவர்கள் வரும் போது மிக நல்ல விருந்தும் மரியாதையும் கொடுத்து வரவேற்க வேண்டியது தமிழ் நாட்டு மக்களின் தார்மீக கடமை

  • நீங்கள் அவர்களுக்கு இவ்வாறு வரவேற்பு கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு இதைவிட மோசமான வரவேற்பை அங்கே கொடுப்பார்கள். தமிழினவாதிகளின் முட்டாள்த்தனமான இந்த தமிழுணர்வால் பாதிக்கப்படப்போவது ஈழத்தமிழர்களே.

   தமிழ்நாட்டில் உட்கார்ந்துகொண்டு வாள் சுழற்றுபவர்களின் வீரத்திற்கு ஈழத்தமிழர்களை இந்த முட்டால் தமிழ்தேசிய கும்பல் பலியிடப்பார்க்கிறது!

   • உலகம் தெரியாத கிணத்து தவளை போல் உளறாதீர்கள் என்னும் என்ன பெரிய கஷ்டத்தை கொடுத்து விட போகிறார்கள் ஒரு விலங்கை விட கேவலமாக வாயில்லா பூச்சி போல் வாழும் அவர்களுக்கு பெரும் அநிதி வந்து விடும் அதனால் சின்ஹலவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் என்று நிங்கள் பயபடுவதட்க்கு பின் என்ன சிந்தனை இருக்கு என்றால் சிஹலவர்கள் என்னும் எவளவு கொடுமைகள் செய்தலும் அவர்கள் தண்டிக்க பட மாட்டார்கள் அல்லது அவர்கள் தண்டிக்க படவே கூடாது என்கிற சிந்தனையா பின் எதற்க்கு பயம் மீனவர்களை தாக்கு கிறார்கள் அங்கு சின்ஹலவர்கள் எச்சரிக்கை விடுவது இல்லை தாக்காதீர்கள் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று .

    • இதை சிங்கள மக்களுக்கு அஞ்சி கூறவில்லை. இரு இனங்களுக்கிடையிலான முரன்பாட்டை இவ்வாறு முரட்டுத்தனமாக தீர்த்துக்கொள்ள முடியாது என்பதாலேயே கூறினேன். தமிழினவாதிகளின் பானியில் இதைக்கையாண்டால் அதன் விளைவுகள் மேலும் மோசமானதாக தான் இருக்கும். இது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தேசிய இனங்களுக்கும் பொருந்தும். அவர்களுடைய மக்களை உங்களுடைய ஊரில் வைத்து தாக்கினால் உங்களுடைய மக்களை அவ்ர்கள் தங்களுடைய ஊரில் தாக்குவார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது நீங்கள் அல்ல !

     • சுற்றி இருப்பவன் எல்லாம் இன வாதத்தோடு இருந்து அநியாயம் செய்வதன் செய்ததின் மறு விளைவு தான் இப்படி பட்ட சம்பவங்கள் மற்றவர்கள் எதோ ரொம்ப நல்லவர்களாக இருந்தது போலவும் அதை இன உணர்வாளர்கள் கெடுப்பது போலவும் கதை விடுகிறார்கள் எந்த ஒரு தனி மனிதனையும் தாக்குவதில் எனக்கு உடன் பாடு இல்லை ஆனால் இது எதன் பின்விளைவு என்றால் அடுத்தவனின் இனவாதத்தின் பின் விளைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் சிங்களவர்கள் தங்கள் இன வாதம் அடக்கு முறைகளுக்கு உரிய பலன்களை எப்படி அனுபவிக்க முடியும் எதிர் பாக்கு கிறீர்கள் தமிழர்கள் நல்ல பண்பு களோடு ஏமாளிகளாக இருக்கவேண்டும் மற்றவன் எல்லாம் அவனை ஏறி மிதிக்கவேன் அது தானே

       • அப்படி இருப்பதாக தெரிய வில்லை பௌத்த இன வாதிகள் தங்களை முன்னிலை படுத்த பண்டைய சோழ படையெடுப்புக்களை காட்டி சிங்கள மக்களிடத்தில் இன விரோதத்தை வளர்த்து வந்ததும் பின் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழர்கள் கெட்டிக்காரன் தட்டிக்கொண்டு போவான் என்பதற்க்கு இணங்கக ஓரளவு நல்ல பதிவிகளில் இருந்ததும் இன முரண் பாடுகளுக்கு காரணம் ஆகும் ஆங்கிலேயரின் நுற்றாண்டு ஆட்சியில் தமிழர்கள் சின்ஹலவர்களுக்கு எதிராக போராட வில்லை பின்னர் அரசு அவர்கள் கைக்கு போன பின் இன முரண் பாடுகள் தோன்றின ஆக நடு நிலைமை விட்டு போனதின் தாக்கங்களே இவை சின்ஹல அரசி மட்டும் நீதி துறையையும் காவல் துறையையும் சரியான முறையில் கையாண்டு இருந்தால் இன விரோதங்கள் வளர்ந்து இருக்காது

 21. மக்களே வினவு ஆட்கள் சொல்லிடாங்க. எல்லோரும் போய் இங்குள்ள முதலாளிகள் வீடுகளையும் அலுவலகங்களையும் அடிச்சி நொறுக்குங்க… வேண்டாம் வேண்டாம் அப்படி செஞ்சா வெறியர்கள்னு சொல்லிடுவாங்க. அமைதியா எங்கோ ஒரு முக்கிய சாலையில போய் கொடி புடிச்சி போராட்டம் பண்ணுங்க. உடனே எல்லா முதலாளிகளும் பயந்து போய் இலங்கையில முதலீடு செய்றத நிறுத்திட்டு தான் மறு வேளை பாப்பாங்க. இந்திய அரசும் வினவு மக்களின் போராட்டத்தை பார்த்து பயந்து போய் இலங்கையோடு சேர்ந்து இனப்படுகொலை செஞ்சத ஒத்துகிட்டு எங்களுக்கு தண்டன குடுங்கன்னு கேப்பாங்க… அட போங்கப்பா.

  • நீங்க என்ன சொல்ல வர்றீங்க லெனின் ? சங்கப்பாடல்களை போல இலை மறை காய் மறையாக சொல்லாமல் நேரடியாக சொல்லுங்கள். மேலேயுள்ள பின்னூட்டங்களுக்கும் பதிலளியுங்கள்.

   • //நாம் கொடுக்க வேண்டிய அடி இந்திய தரகு முதலாளிகளை நோக்கி இருக்க வேண்டும். இங்கு அடித்தால் வலிக்க வேண்டியவர்களுக்கு வலிக்கும்.//
    எப்படி அடிப்பது? அப்படி செய்வதால் ஈழ மக்களுக்கு என்ன பயன்?

    அதுமட்டுமில்லாமல் எதிரிகளை நாங்கள் தான் அம்பலப்படுத்துனோம்னு மார்தட்டுரதுல அர்த்தமில்லை. அடிக்கடி இதை நீங்கள் கூறி வருவதால் தற்பெருமை பேசுவது போல் உள்ளது. மேலும் நீங்கள் அம்பலப்படுத்திதான் மக்கள் கொலைகார காங்கிரசையும் இலங்கையில் முதலீடு செய்யும் முதலாளிகளையும் தெரிந்து கொண்டார்கள் என்று சொல்வது புரியவில்லை. நீங்கள் சொல்லாமல் மக்களுக்கு தெரிந்திருக்காது என்று சொல்லமுடியாது.

    கொடி புடித்து ஆர்பாட்டம் செய்து விட்டு அதை கால காலத்துக்கு பெருமையாக பேசி வருவது நம்முடைய இயல்பாகிவிட்டது (அது செய்வதால் ஒன்றும் ஆகிவிடாது… நாட்டுல எல்லாவனும் தான் கொடி புடிக்கிறான்). மக்களுக்காக நான் மட்டும் தான் போராடுகிறேன், நான் மட்டும் எதிர்ப்பை காட்டுவேன், என்னால் தான் மக்களுக்கு விடிவு கிடைக்கும், மற்றவர்கள் யாரும் எதுவும் செய்யக்கூடாது, செய்தால் அதை விமர்சித்து வார்த்தை போர் செய்வது போன்ற எண்ணங்கள் நம்மிடம் அறவே ஒழிய வேண்டும்.

    இங்கு வரும் சிங்கள மக்களை (தாக்காமல்) திருப்பி அனுப்புவது எப்படி உண்மையான எதிரிகளை மூடி மறைக்கும் செயலாகும்? அப்படி வரும் சிங்கள மக்களாவது இனவெறி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டுமே (அவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை).

    //நேற்று இலங்கை வர்த்தகர்கள் கொழும்பிலுள்ள இந்தியத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராடியிருக்கின்றனர்.//
    இந்திய தூதரகத்தை அடித்து நொறுக்கட்டுமே. இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு வலிக்கும் தானே.

    //நாளை தமிழ் மக்களை தாக்கவும் கூடும்.// அப்படினா தமிழ் மக்கள் அங்கு சுதந்திரமாக உள்ளார்களா?

    //சிங்களர்கள் வீதிகளில் இறங்கி தமிழ் மக்களை நரவேட்டையாடியிருந்தால், தமிழர்களின் குடல்களை உருவி மாலைகளாக அணிந்துகொண்டு வெறியாட்டம் போட்டிருந்தால் அவர்களை அடித்து விரட்டுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.//மன்னிக்கவும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முன்பு சிங்களர்கள் தமிழ் மக்களை நரவேட்டை செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.

    • லெனின் அண்ணே,

     சிங்களத்தான அடிச்சீங்கன்னா தமிழ்நாட்டுக்கு வராம இருந்துட்டு போறான். இதனால் சிங்கள பொதுமக்களும் தமிழனை தாக்க ஏதுவாக இருக்குமே என்று சிந்தித்து இலங்கையில இருக்குற தமிழனோட நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள்.

 22. பெரும்பான்மை சிங்களவர்களின் உதிரத்திலேயே தமிழர்களின் மீது இனவேறி பகை உணர்வு உள்ளது. திருச்சி வானுர்தி நிலையத்தில் இருந்து சிங்கைக்கு கொழும்பு வழியாக 4 முறை குடும்பத்துடன் சென்ற போது, அவர்களின் இனவேறி பகை உணர்வை “அப்பாவியான” (சுற்றுலா பயணிகள் ஆன)எங்கள் மீது காண்பித்தார்கள். கொழும்பு வானுர்தி நிலையத்தில் திருச்சியிருந்து வந்த 5 ஈழத்தமிழர்களுக்கு குடிநுழைவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்த காரணத்துக்காக என் குடும்பத்தை 1 மணிநேரம் சிங்கள குடிநுழைவு அதிகாரிகள் பந்து ஆடினார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் நாங்கள் வைத்து இருந்த பெட்டிகளை சோதனை என்ற பெயரில் குடைந்து எடுத்து வெறுப்படைந்து மகிழ்ந்தார்கள். தங்கும் உணவு விடுதியில் தவற விட்ட புகைப்பட கருவியை மறைத்து வைத்து அலைக்கழித்தார்கள்.

 23. சிங்களர்களில் அப்பாவிகள் என யாரும் கிடையாது. ஏனெனில் தென்னாசிய பிராந்தியத்திலேயே இலங்கை தான் அதிக இராணுவ மயமாக்கப்பட்ட நாடு! இலங்கையில் இருக்கும் அனைத்து சிங்கள குடும்பங்களில் இருந்தும், குடும்பத்துக்கு குறைந்த பட்சம் ஒருவர் (ஆண் அல்லது பெண்) என இராணுவத்தில் பங்கு பெற்றுள்ளார்கள். ஆகையால் தமிழர்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டதில் அனைத்து சிங்களர்களுக்கும் பங்குண்டு. எல்லா அநியாயங்களையும் செய்துவிட்டு தமிழகத்துக்கு ஜாலியாக டூர் வேறு வருகிறார்கள். அவர்கள் வருகையை எதிர்ப்பது இனவெறியாம். முதலாளி வர்க்கத்தை தான் எதிர்க்க வேண்டுமாம். ராஜபக்ச தமிழர்களை கொடூரமாக கொன்று ஒழித்ததால் தான் அதிபர் தேர்தலில் முன்பை விட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவனை சிங்களர்கள் வெற்றி பெற செய்தார்கள். ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன் வாழ்ந்த ‘அநகாரிக தர்மபால’ என்னும் புத்த பிக்கு சிங்களர்களுக்கு ஒரு சித்தாந்தத்தை வழங்கி இருக்கிறான். “இலங்கை தீவில் இருக்கும் தமிழர்கள் குப்பையை போன்றவர்கள்! அந்த குப்பை துடைத்தெறியப்பட வேண்டும்” என்பது தான் அது. அந்த குப்பை தான் துடைத்தெறியப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் குப்பைகள் அதை எதிர்க்கிறார்கள். அது தான் வினவுக்கு இனவெறி. நல்ல நியாயம்!.

 24. ///சிங்களர்களில் அப்பாவிகள் என யாரும் கிடையாது.///

  ஆமாம், சிங்களர்களில் மட்டுமல்ல மளையாளிகளிலும் அப்பாவிகள் இல்லை, கன்னடர்களிலும் அப்பாவிகள் இல்லை, இந்திக்காரர்களிலும் இல்லை. இன்னும் வேறு ஏதாவது தேசிய இனங்கள் இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது ? சிங்களர்களில் யாருமே அப்பாவிகள் இல்லை என்றால் அவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா ?

  ///ஏனெனில் தென்னாசிய பிராந்தியத்திலேயே இலங்கை தான் அதிக இராணுவ மயமாக்கப்பட்ட நாடு !///

  இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை எனினும் இது தான் உண்மை என்றே வைத்துக்கொண்டாலும். ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவியான அரசு எந்திரத்தின் அங்கங்களான போலீசும், இராணுவமும் அசுர பலம் பெற்றிருக்கிறது என்றால் அதன் பொருள் அந்த நாட்டில் ஆளப்படுகின்ற,அதாவது ஒடுக்கப்படுகின்ற பெரும்பாண்மை மக்களை அது மேலும் ஒடுக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காக செய்யப்படும் ஏற்பாடாகும். பாசிச ஒடுக்குமுறையின் கீழ் வைத்துக்கொண்டிருப்பதாகும்.

  சமூகம் இராணுவமயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது அந்நாட்டின் பெரும்பாண்மை மக்களுக்கே எதிரானது. ஒரு நாட்டிற்குள் அவ்வாறான நிலைமை இருப்பின் அது வர்க்க ஒடுக்குமுறையை மேலும் அதிகரிக்கிறது என்று பொருள். இந்த ஒடுக்குமுறை நிலைமையை போய் அவர்களின் (மக்கள்) பலம் என்றும், அதானால் தான் அவர்களில் யாரும் அப்பாவிகளே இல்லை என்றும் கூறுகிறீர்களே நீங்கள் எந்த கட்சி பெரியசாமி ?

 25. அம்பேத் சித்தார்த்!

  “ஆமாம், சிங்களர்களில் மட்டுமல்ல மளையாளிகளிலும் அப்பாவிகள் இல்லை, கன்னடர்களிலும் அப்பாவிகள் இல்லை, இந்திக்காரர்களிலும் இல்லை. இன்னும் வேறு ஏதாவது தேசிய இனங்கள் இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது ? சிங்களர்களில் யாருமே அப்பாவிகள் இல்லை என்றால் அவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா ?”

  நான் சொன்ன உண்மை சுடுவதால் வந்த பிதற்றல் இது. சிங்களர்கள் மக்கள் தான். ஆனால் நீங்கள் சொல்வது மாதிரி அப்பாவி மக்கள் கிடையாது.

  “இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை”

  இணையத்தின் மூலம் இந்த பதிலை அனுப்புகிறீர்கள்.அதே இணையத்தின் மூலம் தெரிந்துகொள்ள ஏன் தயக்கம்?

  ” ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவியான அரசு எந்திரத்தின் அங்கங்களான போலீசும், இராணுவமும் அசுர பலம் பெற்றிருக்கிறது என்றால் அதன் பொருள் அந்த நாட்டில் ஆளப்படுகின்ற,அதாவது ஒடுக்கப்படுகின்ற பெரும்பாண்மை மக்களை அது மேலும் ஒடுக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காக செய்யப்படும் ஏற்பாடாகும். பாசிச ஒடுக்குமுறையின் கீழ் வைத்துக்கொண்டிருப்பதாகும்.”

  இது இன்னொரு பிதற்றல். நான் சொன்னது இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு சிங்கள குடும்பத்தில் இருந்தும் ஓர் ஆள் (ஆண் அல்லது பெண்) சிங்கள இராணுவத்தில் பங்குபற்றி இருக்கிறார்கள் என்பதாகும். மட்டுமல்லாமல் இலங்கை இராணுவமானது 99% சிங்களர்களையே கொண்டிருப்பதாகும். ராஜபக்ச முதல்முறையாக அதிபர் பதவிக்கு வந்த போது சிறிய அளவிலான ஓட்டு வேறுபாட்டிலேயே வந்தான். ஆனால் போர் முடிந்த பின் நடந்த அதிபர் தேர்தலில் மிக அதிக அளவிலான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தான். தமிழ் மக்களை ஒழித்துக்கட்டியதற்காக பெரும்பாண்மை சிங்களர்கள் ராஜபக்சவுக்கு கொடுத்த வெகுமதி இது. தமிழர்கள் ஒழிக்கப்படுவதையே பெரும்பாண்மை சிங்களர்கள் முதன்மையாக கருதியதால் அதிக இராணுபவமயத்தை அவர்கள் மனமுவந்து ஆதரித்தார்கள். அதில் பங்குபற்றவும் செய்தார்கள். “வடக்கில் எந்த அளவுக்கு தமிழர்கள் கொல்லப்படுகிறார்களோ அந்த அளவுக்கு தெற்கில் சிங்களர்கள் அதிகமாக ஓட்டு போடுவார்கள். இது தான் யதார்த்த நிலைமை” என்று ஜயவர்த்தனவே சொல்லி இருக்கிறார்.

  “சமூகம் இராணுவமயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது அந்நாட்டின் பெரும்பாண்மை மக்களுக்கே எதிரானது.”
  ஆகா! சிங்களரின் மீது என்னே கரிசனம். அந்த கரிசனத்தில் கொஞ்சமாவது அவர்களால் அழிக்கப்பட்ட தமிழர்கள் மீது காட்டுங்கள்.

 26. இங்கு பின்னூட்டமிடும் தமிழினவாதிகள் அனைவரும் தமிழ் நாட்டுக்கு வரும் சிங்கள மக்களை அடித்து விரட்டுவதில் தப்பேயில்லை என்றும் அவர்களை அடிப்பதின் மூலம் சிங்கள இனத்துக்கு வலிக்கும் என்றும் வாதிடுகிறார்கள்.அவர்கள் சொல்ல மறந்தது அல்லது முடியாதது இது எந்த விதத்தில் ஈழ விடுதலை போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என்பதுதான்.

  சிங்கள மக்களின் மீதான தாக்குதலை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று,அந்த இனமே ஆயுதமயமாகியுள்ளது.அவர்களில் குடும்பத்துக்கு ஒருவர் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்கள்-எந்த புள்ளிவிவரம் அல்லது ஆய்வின் அடிப்படையில் இதை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை- தமிழர்களை கொல்வதால் முந்தய தேர்தலை விட இப்போதைய தேர்தலில் ராச பகசேவுக்கு பெருமளவு வாக்களித்து ஆதரிக்கிறார்கள் என்கிறார்கள்.இந்த ”அறிவாளிகள்” சொல்ல மறந்தது அல்லது மறைப்பது சமாதான முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ரணிலை தோற்கடித்து முதல் முறை ராச பகசே பதவிக்கு வர காரணமே விடுதலை புலிகள்தான் என்பதுதான்.

  இதில் பகுதி அளவுக்கு உண்மை உள்ளது.முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து சிங்கள ராணுவத்தின் வெற்றியை சிங்களர்கள் தெருக்களில் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.ஆளும் வர்க்கங்களின் சாதி,மத,இன வெறியூட்டுதல்களுக்கு சாதாரண மக்களில் கணிசமானோர் பலியாவதை உலகின் அனைத்து பகுதிகளிலும் காண முடியும்.இது சிங்கள இனத்துக்கே உரிய தனிச்சிறப்பான குணமல்ல.ஆகவே அந்த இனம் முழுவதையுமே எதிரிகளாக பாவிப்பது அறிவுடைமை ஆகாது.ராச பக்சே கும்பலை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கான நியாயத்தை எடுத்து சொன்னதற்காக ”வெள்ளை வாகன கொலை குழு”க்களால் கொல்லப்பட்ட சிங்கள இனத்தவரை இங்கு நினைவு படுத்தி கொள்க.

  சிங்களவர்கள் இங்கு தாக்கப்பட்டால் அதற்கு எதிர்வினையாக இலங்கையின் சிங்கள் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படக்கூடும் என்ற அபாயத்தை இவர்கள் உணர்வதில்லை.அதற்கு அவர்கள் அளிக்கும் விடை முன்னரே அங்கு தமிழர்கள் தாக்கப்பட்டதில்லையா என்பதுதான்.அங்கு தாக்குதல் அதற்கு இங்கு எதிர் தாக்குதல் மீண்டும் அவர்கள் என்ற நச்சு சுழலில் ஈழப்பிரச்னையை சிக்க வைக்கும் முட்டாள்தனத்தை கூசாமல் கூவித்திரிகிறார்கள்.

  ஈழப்பிரச்னையை தனது புவிசார் மேலாதிக்க நோக்கங்களுக்கு கேடாக பயன்படுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிரியாக வரையறுத்து இவர்கள் ஒரு நாளும் வெளிப்படையாக அறிவித்ததில்லை.இந்திய அரசை கெஞ்சிக் கூத்தாடி அந்த நயவஞ்சகர்களின் ஆதரவோடு ஈழ விடுதலையை சாதித்து விடலாம் என்றே முட்டாள்தனமாக நம்பி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அந்த முட்டாள்தனமே ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று 2009 நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக செயாவுக்கும் மறைமுகமாக பா.ச.க.வுக்கும் இவர்களை காவடி தூக்கி ஆட வைத்தது.2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் தாக்குதலில் விடுதலை புலிகள் வெற்றி மேல் வெற்றி பெற்று யாழ் நகரை கைப்பற்றி ஈழ விடுதலையை அறிவிக்க இருந்த தருணத்தில் அந்த நல்வாய்ப்பில் அப்போதைய பா.ச.க.அரசு மண்ணள்ளிப் போட்டதை மறந்து அவர்களுக்கு ஆதரவு நிலை எடுத்த மூடர்கள்தானே இவர்கள்.இவர்களின் முட்டாள்தனமான ஆலோசனையை நம்பி செயல்பட்டதால்தான் கிளிநொச்சி வீழ்ந்த பின்னும் கிரமமான இராணுவ அமைப்பிலிருந்து பின்வாங்கி கொரில்லா யுத்தத்திற்கு திரும்பாமல் முற்றிலுமாக புலிகள் அழிந்து போயினர்.நாடாளுமன்ற தேர்தலில் பா.ச.க.வெல்லும்.மறுநாளே போர் நிறுத்தம் வரும் என புலிகளை நம்ப வைத்த இவர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் மூடர்கள்.

  எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.ஈழவிடுதலையின் முதன்மையான எதிரியான இந்திய அரசை அம்பலப்படுத்தி அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை முன்னெடுக்காமல் அப்பாவி சிங்கள மக்களை தாக்குவதால் பயனேதும் இல்லை.

  இறுதியாக ஒன்று.சிங்களவர்களை கொன்றாலும் கற்பழித்தாலும் குற்றமில்லை என இங்கு நஞ்சு கக்கும் இனவெறியர்களின் ”தம்பிமார்கள்” வேளாங்கண்ணியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு திருச்சி வானூர்தி நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்துகளை கல் வீசி தாக்கினார்கள்.அந்த கல்வீச்சிலிருந்து தப்ப இருக்கைகளுக்கு அடியில் அலறி அடித்து பதுங்கினார்களே அவர்கள் தமிழர்கள் எனபது இவர்களுக்கு தெரியுமா.

  யாருக்காக போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ அந்த மக்களையே கல்லெடுத்து அடிக்கும் இந்த மூடர்களை எதைக் கொண்டு அடிப்பது.

 27. ///இந்த ”அறிவாளிகள்” சொல்ல மறந்தது அல்லது மறைப்பது சமாதான முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ரணிலை தோற்கடித்து முதல் முறை ராச பகசே பதவிக்கு வர காரணமே விடுதலை புலிகள்தான் என்பதுதான்.///

  ரனில் சமாதானத்தை முன்னெடுத்தாரா? எப்படி முன்னெடுத்தார்? இந்து ராம் உங்களிடம் வந்து சொன்னாரா?

  ///முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து சிங்கள ராணுவத்தின் வெற்றியை சிங்களர்கள் தெருக்களில் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.ஆளும் வர்க்கங்களின் சாதி,மத,இன வெறியூட்டுதல்களுக்கு சாதாரண மக்களில் கணிசமானோர் பலியாவதை உலகின் அனைத்து பகுதிகளிலும் காண முடியும்.இது சிங்கள இனத்துக்கே உரிய தனிச்சிறப்பான குணமல்ல.ஆகவே அந்த இனம் முழுவதையுமே எதிரிகளாக பாவிப்பது அறிவுடைமை ஆகாது.///

  உங்கள் அட்வைஸ்க்கு நன்றி. ஆனால் சிங்கள மக்கள் 1983 முதல் தெருக்களில் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்கிறார்கள். சந்திரிக்கா யாழ்ப்பாணத்தை பிடித்த போதும் அவர்கள் இதே மாதிரி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். என்ன, இப்போது கொஞ்சம் ஓவர். நீங்கள் சொல்லித்தான் சாதாரண மக்கள் என்போர் சொந்த புத்தி இல்லாதவர்கள், சொரணை கெட்ட நடைப்பிணங்கள் என்று தெரிகிறது. அதுவும் சாதாரண சிங்கள மக்கள் முப்பது ஆண்டுகளாக சொந்த புத்தி இல்லாமல் நடைப்பிணங்களாக இருக்கிறார்களா? (இலங்கையில் கல்வி அறிவு பெற்றோர் 98% என கேள்வி)

  ///ராச பக்சே கும்பலை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கான நியாயத்தை எடுத்து சொன்னதற்காக ”வெள்ளை வாகன கொலை குழு”க்களால் கொல்லப்பட்ட சிங்கள இனத்தவரை இங்கு நினைவு படுத்தி கொள்க.///

  இவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்களிலும் சிலர் ஈழத்தமிழர்களுக்கான நியாயத்தை எடுத்து சொல்லவேண்டும் என்பதை விட மற்ற காரணங்களுக்கத்தான் ராஜபக்சவை எதிர்த்தவர்கள்.

  ///சிங்களவர்கள் இங்கு தாக்கப்பட்டால் அதற்கு எதிர்வினையாக இலங்கையின் சிங்கள் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படக்கூடும் என்ற அபாயத்தை இவர்கள் உணர்வதில்லை.அதற்கு அவர்கள் அளிக்கும் விடை முன்னரே அங்கு தமிழர்கள் தாக்கப்பட்டதில்லையா என்பதுதான்.அங்கு தாக்குதல் அதற்கு இங்கு எதிர் தாக்குதல் மீண்டும் அவர்கள் என்ற நச்சு சுழலில் ஈழப்பிரச்னையை சிக்க வைக்கும் முட்டாள்தனத்தை கூசாமல் கூவித்திரிகிறார்கள்.///

  இந்த முட்டாள்தனத்தை செய்யாவிட்டால் மட்டும் தமிழர்கள் ஷேமமாக இருந்து விடுவார்களா? இல்லை தமிழக மீனவர்கள் மீது நாள் தோறும் தாக்குதல் நடக்காதா? நீங்கள் சொல்வதை முதலாளித்துவ ஆங்கில பத்திரிக்கைகளும் சொல்லியுள்ளன.

  ///ஈழப்பிரச்னையை தனது புவிசார் மேலாதிக்க நோக்கங்களுக்கு கேடாக பயன்படுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிரியாக வரையறுத்து இவர்கள் ஒரு நாளும் வெளிப்படையாக அறிவித்ததில்லை.இந்திய அரசை கெஞ்சிக் கூத்தாடி அந்த நயவஞ்சகர்களின் ஆதரவோடு ஈழ விடுதலையை சாதித்து விடலாம் என்றே முட்டாள்தனமாக நம்பி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அந்த முட்டாள்தனமே ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று 2009 நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக செயாவுக்கும் மறைமுகமாக பா.ச.க.வுக்கும் இவர்களை காவடி தூக்கி ஆட வைத்தது.2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் தாக்குதலில் விடுதலை புலிகள் வெற்றி மேல் வெற்றி பெற்று யாழ் நகரை கைப்பற்றி ஈழ விடுதலையை அறிவிக்க இருந்த தருணத்தில் அந்த நல்வாய்ப்பில் அப்போதைய பா.ச.க.அரசு மண்ணள்ளிப் போட்டதை மறந்து அவர்களுக்கு ஆதரவு நிலை எடுத்த மூடர்கள்தானே இவர்கள்.இவர்களின் முட்டாள்தனமான ஆலோசனையை நம்பி செயல்பட்டதால்தான் கிளிநொச்சி வீழ்ந்த பின்னும் கிரமமான இராணுவ அமைப்பிலிருந்து பின்வாங்கி கொரில்லா யுத்தத்திற்கு திரும்பாமல் முற்றிலுமாக புலிகள் அழிந்து போயினர்.நாடாளுமன்ற தேர்தலில் பா.ச.க.வெல்லும்.மறுநாளே போர் நிறுத்தம் வரும் என புலிகளை நம்ப வைத்த இவர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் மூடர்கள்.///

  இதில் பகுதி அளவுக்கு உண்மை உள்ளது. ஆனால் இந்த உலகில் அதிகாரமே முதன்மையானது. எத்தனையோ நாடுகளின் உருவாக்கத்தில் அண்டையில் இருக்கும் பெரிய நாடுகளின் கை இருந்திருக்கிறது. பங்களாதேசம் என்னும் நாட்டின் உருவாக்கத்தில் இந்தியாவின் கை உண்டு. அந்த நப்பாசையில் இப்போது இவர்கள் கேட்டார்கள். இந்தியா மட்டும் எதிராக இருந்திருந்தால் எந்த மக்கள் போராட்டமும் பங்களாதேசம் என்னும் நாட்டை உருவாக்கி இருக்க முடியாது. அது கலவர பகுதியாக மட்டும் தொடர்ந்து இருந்திருக்கும்.

  ///எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.ஈழவிடுதலையின் முதன்மையான எதிரியான இந்திய அரசை அம்பலப்படுத்தி அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை முன்னெடுக்காமல் அப்பாவி சிங்கள மக்களை தாக்குவதால் பயனேதும் இல்லை.///

  தமிழ் இனவெறியர்களால் முடிந்தது ஏதோ இது தான் (பஸ் மேல் கல் அல்லது செருப்பு வீசுவது, சுற்றிவளைத்துக்கொண்டு சத்தம் போடுவது ஆகியன. இதுக்கே இங்க்லிஷ் பேப்பர்ல எல்லாம் பெருசா நியூஸ் போட்டுட்டான். தில்லியிலே இருக்கிறவங்க டென்ஷன் ஆயிட்டாங்கன்னு கேள்வி!). நீங்க வேணுமுன்னா அப்-அப்-அப்பாவி சிங்கள மக்களை காப்பாத்தவும் இந்திய அரசை அம்பலப்படுத்தவும் மானசர் மாருதி தொழிற்சாலை ஸ்டைல்ல டாப்புல இருக்கிற முதலாளித்துவத்த அடிச்சு நொறுக்குங்க

  ///இறுதியாக ஒன்று.சிங்களவர்களை கொன்றாலும் கற்பழித்தாலும் குற்றமில்லை என இங்கு நஞ்சு கக்கும் இனவெறியர்களின் ”தம்பிமார்கள்” வேளாங்கண்ணியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு திருச்சி வானூர்தி நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்துகளை கல் வீசி தாக்கினார்கள்.அந்த கல்வீச்சிலிருந்து தப்ப இருக்கைகளுக்கு அடியில் அலறி அடித்து பதுங்கினார்களே அவர்கள் தமிழர்கள் எனபது இவர்களுக்கு தெரியுமா.///

  வந்தவர்களில் மிகப்பெரும்பாண்மையினர் சிங்களர்கள். அவர்களில் பலர் வீட்டில் விட்டகுறை தொட்டகுறையாக அரைகுறை தமிழ் பேசினாலும் வெளியே சிங்களர்களாக (பல தலைமுறைகளாக) அவதாரம் எடுத்து தமிழர்களை ஒழிப்பவர்கள்.

  ///இறுதியாக ஒன்று.சிங்களவர்களை கொன்றாலும் கற்பழித்தாலும் குற்றமில்லை என இங்கு நஞ்சு கக்கும் இனவெறியர்களின் ”தம்பிமார்கள்” ///

  முள்ளிவாய்க்கால் பகுதிக்கு போய் வானத்தை அல்லது நிலத்தை பார்த்து இதை சத்தமாக சொல்.

  ///யாருக்காக போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ அந்த மக்களையே கல்லெடுத்து அடிக்கும் இந்த மூடர்களை எதைக் கொண்டு அடிப்பது.///

  மானசர் மாருதி தொழிற்சாலையில் எதைக்கொண்டு டாப்பில் இருக்கும் முதலாளித்துவத்தை அடித்தீர்களோ அதைக்கொண்டு அடியுங்கள்

  • \\ரனில் சமாதானத்தை முன்னெடுத்தாரா? எப்படி முன்னெடுத்தார்? இந்து ராம் உங்களிடம் வந்து சொன்னாரா?//

   இல்லை.ஆன்டன் பாலசிஙகம்தான் சொன்னார்.தாய்லாந்தின் உயர் தர விடுதி ஒன்றில் ”கோட் சூட் டை”எல்லாம் போட்டுக்கிட்டு ரணிலின் அமைச்சர்களுடன் பேச்சு நடத்தி விட்டு அவர்தான் அப்படி சொன்னார்.

   \\உங்கள் அட்வைஸ்க்கு நன்றி………அதுவும் சாதாரண சிங்கள மக்கள் முப்பது ஆண்டுகளாக சொந்த புத்தி இல்லாமல் நடைப்பிணங்களாக இருக்கிறார்களா…….இவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். //

   சிங்கள உழைக்கும் மக்களை நியாயத்தின் பக்கம் தங்கள் பக்கம் அணி திரட்டி கொண்டு வர எந்த முயற்சியும் தமிழர் இயக்கங்கள் செய்யாத நிலையிலும் தமிழர் தரப்பு நியாயத்தை சொல்ல விரல்கள் எண்ணிக்கையிலாவது சிலர் இருந்திருக்கிறார்கள்.அநியாயத்தின் பக்கம் எதிரிகள் திரட்டி விட்டார்கள்.அதற்காக அவர்களை தாக்குவது எதிரியின் பக்கம் அவர்களை இன்னும் நெருக்கமாக தள்ளி விடுமேயன்றி தமிழர்களுக்கு என்ன பயன்.

   \\இந்த முட்டாள்தனத்தை செய்யாவிட்டால் மட்டும் தமிழர்கள் ஷேமமாக இருந்து விடுவார்களா? இல்லை தமிழக மீனவர்கள் மீது நாள் தோறும் தாக்குதல் நடக்காதா? /

   மீண்டும் மீண்டும் அதே இனவாத முட்டாள்தனம்.இந்த தாக்குதல்கள் நடந்திருப்பதால் தமிழர்கள் நலமாக இருந்து விடுவார்களா.தமிழக மீனவர்கள் மீது இனிமேல் தாக்குதல்கள் நடக்காது என்பதற்கு இது உத்தரவாத சீட்டா.

   \\இந்த உலகில் அதிகாரமே முதன்மையானது. எத்தனையோ நாடுகளின் உருவாக்கத்தில் அண்டையில் இருக்கும் பெரிய நாடுகளின் கை இருந்திருக்கிறது …….இந்தியா மட்டும் எதிராக இருந்திருந்தால் எந்த மக்கள் போராட்டமும் பங்களாதேசம் என்னும் நாட்டை உருவாக்கி இருக்க முடியாது. அது கலவர பகுதியாக மட்டும் தொடர்ந்து இருந்திருக்கும்.//

   என்ன ஒரு அடிமை மனப்பாங்கு.பின் எதறகாக ஆயுதம் ஏந்தி போராட வேண்டும்.இந்தியாவுக்கு மனுப் போட்டே விடுதலையை சாதித்திருக்கலாமே.

   \\வந்தவர்களில் மிகப்பெரும்பாண்மையினர் சிங்களர்கள். அவர்களில் பலர் வீட்டில் விட்டகுறை தொட்டகுறையாக அரைகுறை தமிழ் பேசினாலும் வெளியே சிங்களர்களாக (பல தலைமுறைகளாக) அவதாரம் எடுத்து தமிழர்களை ஒழிப்பவர்கள்.//

   மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல இவர்களை தமிழர்கள் என சிங்கள காடையர்கள் தாக்குகிறார்கள்.தமிழின வெறியர்களோ சிங்களர்கள் என தாக்குகிறார்கள்.

   \\அந்த நப்பாசையில் இப்போது இவர்கள் கேட்டார்கள். //

   பா.ச.க.வினர் தங்கள் நிறத்தை காண்பித்த பின்னும் அவர்களை நம்பிய ”நப்பாசை”யை என்னவென்பது.எட்டி உதைத்த கால்களையும் நக்கிப் பிழைக்கலாம் என்றுதான் இதற்கு பொருள் கொள்ளமுடியும்.அப்படியும் எட்டி உதைத்த கால்களை இவர்கள் கட்டித் தொங்கியிருந்தாலும் மீண்டும் உதைதான் கிடைத்திருக்கும்.புலிகளுக்கு தவறான ஆலோசனை வழங்கி அவர்களின் முற்று முழுதான அழிவுக்கு காரணமாக இருந்தது குறித்து இனவாதிகள் கடுகளவும் குற்ற உணர்வு கொள்ளவில்லை.வெட்க கேடு.

 28. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக பெரும்பாண்மையாக இருக்கும் சிங்கள இனம் சிறுபாண்மையினராக இருக்கும் தமிழர்களை ஒழித்து கட்டி வருகிறது. இலங்கையில் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு சாதாரண சிங்களன் கூட தமிழர்களின் சொத்துக்களை சூறையாடுவதிலும் தமிழ் பெண்களை மானபங்க படுத்துவதிலும் குற்றவுணர்வே இல்லாமல் செய்கிறார்கள். வடகிழக்கு பகுதியில் இருக்கும் தமிழரின் காணிகளில் குற்றவுணர்வே இல்லாமல் குடியேறுகிறார்கள். தமிழக மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் வேறு. இந்த வினவு கும்பலை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு இப்படி ஒரு கதி வந்திருந்தால் இவர்கள் இப்படி ஒரு கட்டுரை எழுதியிருப்பார்களா? பஸ் மீது கல் எறிந்து போராட்டம் நடத்தியதற்கு இன வெறி என்று பட்டம் கொடுக்கிறார்கள். போங்கடா உங்க பொதுவுடைமையும் நீங்களும்.

  ///இல்லை.ஆன்டன் பாலசிஙகம்தான் சொன்னார்.தாய்லாந்தின் உயர் தர விடுதி ஒன்றில் ”கோட் சூட் டை”எல்லாம் போட்டுக்கிட்டு ரணிலின் அமைச்சர்களுடன் பேச்சு நடத்தி விட்டு அவர்தான் அப்படி சொன்னார்.///

  ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தையின் போது ரனில் அரசு நம்பிக்கையூட்டுவதாக தான் இருந்தது. பாலசிங்கம் போட்ட ”கோட் சூட் டை” நீங்கள் தான் வாங்கி கொடுத்தீர்களா? பேச்சுவார்த்தைக்கு போகுபவர்கள் அம்மணமாகவா போவார்கள்?

  ///மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல இவர்களை தமிழர்கள் என சிங்கள காடையர்கள் தாக்குகிறார்கள்.தமிழின வெறியர்களோ சிங்களர்கள் என தாக்குகிறார்கள்.///

  இது ஒரு திரித்தல் பேச்சு. சரத் பொன்சேக என்னும் இராணுவ காடையன் இந்த வகை சிங்களர்களிருந்து தான் வந்தவன்.

  இந்த பொதுவுடைமை பேசும் வினவு பார்ப்பனீயத்தை விட திரித்தல் குணமும் தமிழர்களுக்கு கேடும் கொண்டது. பொதுவாக இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களர்களை காடையர்கள் என்று தான் விளிப்பார்கள்.

 29. வினவு பிரச்சினையை தீர்ப்பதற்குண்டான தீர்வை நோக்கி பேசுகிறது. நீங்களோ (தமிழினவாதிகள்) விளைவுக்கு பின்விளைவு(க்கு) விளைவு(க்கு) பின்விளைவு என்ற முடிவில்லா தொடரில் பிரச்சினையை பயனிக்க வைப்பதை பற்றி பேசுகிறீர்கள். இதி எது தற்போதைய சூழலிற்கு உகந்தது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க