Friday, February 7, 2025
முகப்புசெய்திசட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்.....!

சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..!

-

  • ஒரு கைப்பையின் விலை ரூ 1 லட்சம்
  • சட்டைகளின் விலை ரூ 15,000 முதல்..
  • ஒரு ஜீன்ஸ் விலை ரூ 13,000.

தலை சுற்ற வைக்கும் இந்த விலைகளில்தான் ரிலையன்ஸ் புதிதாக குதித்திருக்கும் சொகுசுப் பொருட்களுக்கான சில்லறை விற்பனை கடைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன.

ரிலையன்ஸ்-பிரான்ட்ஸ்
தர்ஷன் மேத்தா – தலைமை நிர்வாக அதிகாரி ரிலையன்ஸ் பிராண்டஸ் – படம் நன்றி பிசினஸ் லைன்

உலக அளவில் 37  பிரபல பிரண்டுகளுடன் கை கோர்த்து சட்டைகள், பாண்டுகள், காலணிகள், கைப்பைகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்த சொகுசு பிராண்டுகளை வாங்கி இந்திய சீமான்களுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளது ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்.

படிக்க

சொகுசுப் பொருட்கள் சந்தையையே மூன்றாக பிரிக்கிறார் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தர்ஷன் மேத்தா. அதை விளக்குவதற்கு கார் சந்தையிலிருந்து உதாரணம் காட்டுகிறார்.

  • ரூ 25 லட்சத்திலிருந்து ரூ 50 லட்சம் வரை மெர்சிடிஸ் ஈ கிளாஸ் அல்லது பிஎம்டபிள்யூ 5 வரிசை இருக்கிறது.
  • ரூ 50 லட்சத்திலிருந்து ரூ 1 கோடி வரை போர்ஷ் 911 அல்லது ஆடி Q7 இருக்கிறது
  • ரூ 1 கோடிக்கு மேல் ஆஸ்டன் மார்டின் D89 அல்லது பெராரி பியரானோ இருக்கிறது.

அதே போல ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் மூன்று பிரிவுகளில் சொகுசு பொருட்களை வழங்குகிறது.

  • ரூ 15,000க்கு மேல் சராசரி விலையுடைய எர்மன்கில்டோ அல்லது பால்&ஷார்க் முதல் பிரிவு
  • கட்டுப்படியாகும் சொகுசு பிரிவில் ரூ 8,000 முதல் ரூ 10,000 வரை விலையில் டீசல் ஜீன்ஸ் அல்லது தாமஸ் பிங்க சட்டை
  • உயர் சொகுசு பிரிவில் குயிக்சில்வர், டிம்பர்லேண்ட் போன்ற பிராண்டுகள்

“ஒரு கைப்பை வாங்குவதற்கு ரூ 1 லட்சம் பட்ஜெட் வைத்திருக்கும் ஒரு இந்திய வாடிக்கையாளர் வெளிநாட்டு பிராண்டைத்தான் விரும்புகிறார்” என்கிறார் மேத்தா.  முதலாளித்துவத்தின் தாரக மந்திரத்தின்படி அந்த சந்தைத் தேவையை நிறைவேற்ற களத்தில் குதித்திருக்கிறது ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்.

சொகுசுப் பொருட்கள் சந்தையின் தற்போதைய மதிப்பு ரூ 30,000 கோடி என்றும் மூன்று வருடங்களில் அது ரூ 80,000 கோடியாக உயரும் என்றும் பொருளாதார சுணக்கம் ஏற்பட்ட காலத்தில் கூட இந்தச் சந்தையில் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.

குறைந்த பட்சம் ரூ 25 கோடி சொத்துள்ள அதி பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை 2015-16 வாக்கில் இரண்டு லட்சமாக உயரும் என்றும் அவர்களது மொத்த சொத்து மதிப்பு ஐந்து மடங்காகும் என்றும் கோடக் வெல்த், கிரைசில் ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. ‘தனியார் மயம், தாராள மயம், உலக மயம் அமல் படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் எல்லோரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்’ என்று அதியமான் சொல்வதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.

இப்பொழுது டெல்லி , சென்னை , மும்பை முதலான முக்கிய ஊர்களில் 20 கடைகள் இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் 55 புதிய கடைகள் உருவாக்கப்படும் என்றும் தருண் மேத்தா சொல்கிறார். கடைகள் திறக்குமளவுக்கு பணக்காரர்கள் இல்லாத சிறு நகர மேட்டுக் குடியினரை கவர்வதற்கு டிரங்க் ஷோ என்ற பெயரில் அந்த நகரங்களில் ஒரு கல்யாண மண்டபத்தை பிடித்து மூன்று நான்கு நாட்களுக்கு விற்பனை நடத்துகிறது ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்.

ஒரு நாளைக்கு ரூ 20 செலவில் வாழ்க்கை நடத்தும் சராசரி இந்தியர் ஒருவர் ரூ 13,000 மதிப்புள்ள ஒரு ஜீன்ஸ் பேன்ட் வாங்க வேண்டுமென்றால் 650 நாட்கள் (கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்) உணவையும் தியாகம் செய்து சேமிக்க வேண்டியிருக்கும்.

“உழைத்து தானே அம்பானி சம்பாதித்தார். வாங்குகிறவனும் உழைத்து தானே சம்பாதிக்கிறான். அப்புறம் ஏன் இந்த வயித்தெரிச்சல்”  என்று தோன்றலாம். கோயம்பேட்டில் காலை இரண்டு மணி முதல் மார்க்கெட்டில் உழைக்க ஆரம்பித்து ஒரு நாள் கூலியாக ரூ 250 சம்பாதிக்கும் சுமைத் தொழிலாளியும் காலையில் இருந்து தொடர்ந்து நின்று கொண்டே டீ போட்டு ரூ 300 சம்பாதிக்கும் டீக் கடைக் காரரும் மாதம் முழுவதும் இயந்திரத்திலே வேலை செய்து ரூ 7,000 சம்பாதிக்கும் தொழிலாளரும் உழைக்காத உழைப்பையா இவர்கள் உழைக்கிறார்கள்?

அத்தியாவசிய பொருட்களுக்காக முழுவாழ்க்கையையே அடகு வைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய சீமான்களுக்கான இந்த ஆடம்பர மார்க்கெட் எதைக் காட்டுகிறது?

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. துட்டு இருக்குரவன் வாங்கரான்… உனக்கு ஏன் மாமா குடையுது?? உலகத்துல எல்லா நாட்டுலையும் இது இருக்கறதுதான்…. சும்மா மூல வியாதிக்காரன் மாதிரி எல்லாதுலயும் நொட்ட சொல்லாதே….

    • அந்த துட்டு எல்லாம் எப்டி வந்திச்சுன்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு பாத்தீங்க ஏன் இவிங்க இப்டி கத்திகிட்டே இருக்காங்கனு கண்டுபுடிச்சறலாம்…..

  2. பிராண்டட் என்ற பேருல அவனும் ஏமாத்துறான். மேட்டுக்குடி என்ற திமுறுல இவனுங்கலும் ஏமாறுறானுங்க, வேற ஒரு புண்ணாக்கும் இதுல இல்ல.

  3. ஏழைகள் இருக்கக் காரணமே பணக்காரர்கள் இருப்பதால் தான்!

    ஒருவன் உழைக்காததால் ஏழையாக நீடிக்கவில்லை, மற்றவரை ஏமாற்றி சுரண்ட தெரியாததால்!

    ஊதாரியாய் வீண் செலவு செய்பவர்கள் பணமிருப்பதால் மட்டுமல்ல, மனிதாபிமானமும், உழைப்பின் வலியும் இல்லாததால்!

  4. பல் இருக்குறவன் பக்கோடா சாப்புடுறான். இதுல என்ன இருக்கு. பணக்காரர்கள் இது இல்லாவிட்டால் இன்னொன்றில் காசை ஊதாரித்தனமாக செலவு செய்யத்தான் போகிறார்கள். இதையெல்லாம் குற்றம் சொல்லி என்ன ஆகப்போகிறது.

  5. அந்த ட்ரஸ் எல்லாம் போட்டா முந்நூறு வருஷமா வாழப்போறான்? எத்தினி ரூபா டிரஸ் போடறவனா இருந்தாலும் சரி. ட்ரசே போட காசில்லாதவனா இருந்தாலும் சரி,ஒன்னு மட்டும் ஒண்ணுதான் அதாவது இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்(only saadha)………அதுக்காக மசாலா பால் எல்லாம் ஊத்தமாட்டான்.

  6. இதற்கு ஒன்றுமே செய்ய இயலாது…

    அவர் அவர் வசதிக்கு ஏற்றாற்போல் ‘நாகரிகமாக’ தொற்றமளிக்கவே மனிதர் விரும்புகின்றனர்…

    நமக்கு இரண்டு சாய்ஸ்கள் உள்ளன:
    1) புலம்பல்
    2) பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் என்று சிரித்து வேலையைப்பர்ப்பது

    இரண்டுக்கும் ஒரே பலன் தான்: பணக்காரன் அவன் காசை நமக்கு கொடுக்க மாட்டான்…
    ஆனால் சாய்ஸ் (2) நம்மை சிரிக்கவாவது வைக்கும்…

    • பணக்காரன் அவன் காசை நமக்கு கொடுக்க மாட்டான்…//
      கரக்டா சொன்னீங்க வீரன். அதனாலதான் பணக்கார ஓநாய்களிடமிருந்து அனைத்தையும் பறித்தெடுக்க வேண்டும். அவர்கள் நயவஞ்சகமாக வறியவர்களிடமிருந்து ஏமாற்றிப் பறித்ததைப் போலல்லாமல், பகிரங்கமாக வெளிப்படையாக அறிவித்து அதைச் செய்ய வேண்டும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

  7. மிக பெரிய அளவிலான வித்தியாசம் . வினவின் பதிவு அருமை. வாய்ப்பு கிடைத்தால் எமை போன்ற சாமான்யனும் நியாய தர்மத்தை மறந்து விடுகிறோம்.”நான் வாழ்ந்தால் போதும்; என் குடும்பம் வாழ்ந்தால் போதும்” என்ற நிலமையால் நாம் ஒவ்வொருவரும் ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைக்க சித்தமாகிறோம். சாமன்யனுக்கு சிறிய அளவில் வாய்ப்பு — அவரவர் தகுதிக்கேற்ப நியாயத்தை மறுக்கிறோம். சமூக சீர்கேடுகளுக்கு நாம் எல்லோருமே பொருப்புதான். இதனால் மிக எளிய மனிதர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஸொல்ல முடியாத வறுமை ஒரு பக்கம். செல்வத்தின் அகந்தையில் மேட்டுக்குடி மறு பக்கம். தனி மனித ஒழுக்கமே எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வாய் அமையும். visitanand2006@yahoo.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க