கடந்த வெள்ளிக் கிழமை ஆப்பிள் நிறுவனம் ஐபோன்-5 விற்பனையை ஆரம்பித்தது. உலகளாவிய விற்பனை உலகில் முதலில் பொழுது விடியும் நாடான ஆஸ்திரேலியாவில் சிட்னியில் ஆரம்பித்திருக்கிறது. ஜார்ஜ் தெருவில் இருக்கும் ஆப்பிள் கடையில் ஆஸ்திரேலிய நேரம் காலை 8 மணிக்கு சுமார் 500 பேர் ஐபோன்-5 வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர்.
ஹாங்காங்கில் விமானப் போக்குவரத்து துறையில் பணி புரியும் 29 வயதான மைக்கேல் சான் உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு மட்டம் போட்டு விட்டு இரண்டு ஐபோன்கள் வாங்க வந்திருக்கிறார்.
லண்டன் கோவன்ட் கார்டனில் ஆப்பிள் கடையின் முன்பு காத்திருந்த 1000 பேருக்கு அருகில் இருக்கும் உணவகம் ஒன்று பேஸ்ட்ரிகளையும், ஆப்பிள் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்களையும் வழங்கினார்களாம்.
நியூயார்க்கின் 5வது அவெனியூவில் இருக்கும் ஆப்பிள் கடையின் முன்பு மூன்று நாட்களாக வரிசையில் காத்திருக்கும் கீனன் தாம்சன், “அடுத்த ஆண்டு இன்னமும் சீக்கிரம் வந்து காத்திருக்கப் போகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
விற்பனை ஆரம்பித்த வார இறுதியில் $199, $299, $399 விலையில் 1 கோடி ஐபோன்கள் (மதிப்பு சுமார் $3 பில்லியன்) விற்கப்பட்டிருக்கும் என்று துறைசார்ந்த பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஐபோன் விற்பனையில் சுமார் 60 சதவீதம் லாபம் ஈட்டும் ஆப்பிள், கடந்த வார இறுதியில் சுமார் $1.8 பில்லியன் லாபம் சம்பாதித்திருக்கும்.
அகில உலகமும் ஆப்பிள் ஐபோன்-5 ஐ கொண்டாடிக் கொண்டிருக்கும் போது திங்கள் கிழமை அதிகாலை ஆப்பிள் ஐபோன்-5க்கான கேஸிங்குகள் உற்பத்தி செய்யும் வட சீனாவின் தாய்யுவான் நகர பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளர் போராட்டம் வெடித்திருக்கிறது. ஞாயிறு இரவு சுமார் 10 மணியளவில் தொழிற்சாலை செக்யூரிட்டிகள் தொழிலாளர்களை தாக்கியதை தொடர்ந்து சுமார் 2000 தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.
படிக்க
ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதம், சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்தை மீறி தொழிலாளர்களின் கூலி உயர்வை நிர்வாகம் மறுத்ததை அடுத்து இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தார்கள்.
பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை வாங்கப்படுவதோடு கட்டாய ஓவர் டைம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு ஓவர்டைமையும் சேர்த்து 2,220 யுவான் ($350) முதல் 3,500 யுவான் (சுமார் $555) வரை மாத வருமானம் கிடைக்கிறது.
தாங்கள் உற்பத்தி செய்த ஐ-போனை இந்த தொழிலாளர்கள் வாங்க வேண்டுமானால் அவர்களால் மூன்று நாட்கள் வரிசையில் காத்திருக்கவோ, ஒரு நாள் வேலைக்கு மட்டம் போடவோ முடியாது. அப்படியே முடிந்தாலும் தினமும் சராசரியாக 15 மணி நேரம் வேலை செய்து சம்பாதிக்கும் ஒரு மாத சம்பளத்தை விலையாக கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் வேலை செய்யும் போது யாரும் சாப்பிட பேஸ்ட்ரிகளையும், குடிக்க தண்ணீரும் கொண்டு கொடுப்பதில்லை.
உலகளாவிய முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் வளர்ச்சி இதுதான். ஒரு பக்கம் நுகர்வுக் கலாச்சார படையெடுப்பில் சிக்கியிருக்கும் மக்கள் காத்திருந்து ஐ போன்களை வாங்குகின்றனர். மறுபுறம் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஆப்பிள் ஐ போன் 5 மாடல் குறித்து ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் பரபரப்பு செய்திகளின் மத்தியில் இந்த போராட்ட செய்தியை எங்கேயும் தேட முடியாது. ஆனால் இதைத்தான் சுதந்திர உலகம் என்று நாக்கூசாமல் அழைக்கிறார்கள். யாருக்கு சுதந்திரம்?
Steve Jobs is a stupid. He invented nothing. All apple users like their demi-god Jobs are stupid too. They lack knowledge to do even basic things with phone. They sell their freedom by paying a hefty amount in hands of apple. Apple in turn give them a polished toy that is nothing but blood of innocent Chinese workers (forced labors). Apple innovated nothing. Everything they own patent are stolen from existing technologies and concepts. They drag all the competitions to court to defeat them in market. If US is a fair free market, why they allow such trolls like apple?
Sorry these are all baseless offensive words towards Apple. We have to point out the mistakes and condemn the errors caused by them. At the same time we have accept (even though you are not appreciating) their new inventions and new trend they brought to mobile world. We should accept good as good and bad as bad. From you comment I feel you find everything from apple is useless and nothing new in it.
As Vinavu pointed out the labors are ill treated and not paid enough then we have to condemn that activities. Instead bluffing like this wont help in anyways.
Can you point out some inventions by apple? I can always give you a prior invention/technology for everything apple and its fans claim they invented!
@HisFeet,
Apple is not about technology.The way they are ahead in implementing those technologies.And also the brand name it should have.Both samsung and Apple mobils are having the common technology. But when you started to use you will see the difference.if you have money then buy Apple mobile and samsung mobile. you will see the difference. I have both.
@Vinoth, I am an android/ios developer as well as I worked in C/C++ and Java. I have everything provided free by my office (from iphone, ipad, tab, galaxy S III). I dislike both of them. iphone’s internal components are all from various vendors. Samsung’s quality is also poor. But ultimately, when it comes to functionality and freedom, iphone looses any day. Can’t really beat android or for that matter, i like Nokia’s Symbian phones. You judge by colors and sounds. I judge by sheer functionality and value for money. And for your info, I use a below 10000 mobile which does almost what galaxy s III does and much more than what iphone does.
http://slashdot.org/topic/cloud/iphone-5-teardown-hints-at-apples-efficiency/
please look at the bottom for apple’s profit from selling an iphone!
Though I have an iPhone, I am not a fan of it. But certain factors made me choose an iPhone and so I have it with me and I don’t have much complaints.
Coming to this topic, you are talking about – one side the iPhone craze of people and the Media publicity, other side the workers strike etc. But is this not true for all the cases. Right from the food you eat to anything that you wear and use – No?. You eat rice and you know the problems of farmers in India. You wear dresses that probably are coming from the weavers – and the weavers in TN (for discussion) are the most affected and life is survival is really tough for them.
So how is this Apple iPhone issue different from these above. I guess we need to also grow up to understand that – it is the reality. You probably wrote this blog from a laptop or a computer and did you then think or are you aware of the problems that the workers who were part of the manufacturing process of these laptops or computers face ?
My opinion is that the issue of the laborers and workers should be seen as a different issue that needs to be addressed and should be resolved (though not easy, we are not even able to solve our own problems in our country for the farmers and the weavers). We are happy to talk about a strike in China. And matter of fact – you have the same problem everywhere, anywhere – not just iPhone manufacturers.
I think – now the trend is that people use this social networking platforms to project themselves as bit different from others by writing different. There are some good blogs that you have – but I find some blogs biased.
See – we are a globalized country now and the whole world is almost in that mode. There is no point in crying foul on that. We need to strike a balance to bring the best out of that for all the impacted segments. Blaming won’t solve the problem.
Apple is for class people rest all for the mass like you guys . Why American consumers should care about Chinese labors
saga manithanin kashtathai kandukollamal sellum manobavam, miruga nilaiyilim keelanathu!