Sunday, April 18, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் திருச்சியில் வன்னிய சாதிவெறி ராமதாஸ் முற்றுகை!

திருச்சியில் வன்னிய சாதிவெறி ராமதாஸ் முற்றுகை!

-

ர்மபுரியைத் தீக்கிரையாக்கியதைத் தொடர்ந்து தலித் மக்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் பா.ம.க. தலைவர் ராமதாசு தமிழகம் முழுவதும் ஆதிக்க சாதி சங்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் 4.1.2013 அன்று திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட எட்டு மாவட்டப் பிரதிநிதிகள் கூட்டத்தை சொகுசு ஓட்டலான சங்கம் ஓட்டலில் கூட்டி அவர்களை குளுப்பாட்டி சாதித் தீயை மூட்ட முயல்வதைக் கேள்விப்பட்டோம். உடனே, திருச்சி பகுதி ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு, பெ.வி.மு தோழர்கள் 3.1.2013 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து சாதிவெறியர்கள் சங்க சதியாலோசனைக் கூட்டத்தைத் தடை செய்ய வலியுறுத்தச் சென்றோம்.

மாவட்ட ஆட்சியர் போட்டோவிற்குப் போஸ் கொடுக்க வெளியூர் சென்றதால் சப் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அது செவிடன் காதில் ஊதிய சங்கானது.  எனவே, சாதிவெறியர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

நகரம் முழுவதும் 1000 விளக்கப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன; 300 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.  இன்று (4.1.2013) காலை 11 மணியளவில் திருச்சி எல்லையை ராமதாசு வந்தடைந்தார் என்பதை அறிந்ததும் மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு

 • அனுமதியோம்! அனுமதியோம்!
  பெரியார் பிறந்த மண்ணிலே
  சாதிவெறியர்கள் ஆதிக்கத்தை
  அனுமதியோம்! அனுமதியோம்!
 • தலித் மக்களின் குடிகெடுக்கக்
  கூட்டம் நடத்தும் கும்பலை
  முற்றுகையிடுவோம்! முறியடிப்போம்!
 • தடை செய்! தடை செய்!
  வன்னியர் சங்கம் உள்ளிட்ட
  ஆதிக்க சாதி சங்கங்களை
  உடனடியாகத் தடைசெய்!
 • சாதி வெறியைத் தூண்டிவிடும்
  பா.ம.க. ராமதாசை
  கைது செய்! கைது செய்!
 • தடை செய்! தடை செய்!
  சாதி வெறியர்களின் சதியாலோசனைக் கூட்டத்தை
  தடை செய்! தடை செய்!
 • மோப்பம் பிடிக்கும் உளவுத் துறையே!
  குடி கெடுக்கும் கூட்டத்தைக்
  கைது செய்யாத மர்மம் என்ன?

என முழக்கங்கள் இட்டபடியே சங்கம் ஓட்டலை நோக்கி செங்கொடிகள் பதாகைகளுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட தோழர்கள் பேரணி 1 கி.மீ. வரை சென்று சங்கம் ஓட்டலின் அருகாமையில் உள்ள வெஸ்ட்ரி பள்ளி அருகே சென்ற போது போலீசு பாய்ந்து வந்து பேரணியைத் தடுத்து தோழர்களைக் கைது செய்தது.

பேரணியின் எதிரே ராமதாசை வரவேற்க சென்ற அவரது வானரப்படை காரை ஒரம்கட்டி பறந்துகொண்டிருந்த அவர்களது கொடியின் தடிக்கம்பை வேகமாக உருவினர்.  சரி, தாக்கத்தான் போகிறார்கள் என எதிர்பார்த்த வேளையில் கொடியை காலுக்கடியில் போட்டுகொண்டு அந்த சூரப்புலிகள் அய்யாவை வரவேற்கச் சென்றனர்.  எடுபிடிகளின் வீரம் போதை தலைக்கேறும்போது மட்டும்தான் என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது.

நமது அமைப்புகளின் போராட்டம் முடிந்த சில நிமிடங்களில் தந்தை பெரியார் திராவிடர் கழகம்,மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம், ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாயினர். இதே நோக்கத்திற்காக நீதிமன்றத்தில் திரண்ட விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சியினரை அங்கேயே காவல் துறை கைது செய்ய எத்தனித்ததால் நீதி மன்றத்தின் எதிர்ப்புறம் சாலை மறியல் செய்து கைதாகினர்.

ராமதாசை உள்ளிட்ட கிரிமினல்களை வெளியில் திரியவிட்ட ஜெயா போலீசு, அதைத் தடுக்கப் போராடிய தோழர்கள், ஜனநாயக சக்திகளைக் கைது செய்ததைக் கண்டித்து உடனடியாக மீண்டும் 300 சுவரொட்டிகள் தயாரித்துப் நகர, புறநகர்ப் பேருந்துகள், மற்றும் பல இடங்களில் விரிவாக ஒட்டப்பட்டது.

ஒரு புறம் ராமதாசு உள்ளிட்டோர் சதியாலோசனைக் கூட்டம் நடக்க, மறுபுறம் கைதான தோழர்களை என்ன செய்யலாம் என காவல் துறை ஆலோசித்து வருகிறது.  இந்த ஆலோசனையில் ராமதாசும் கலந்துகொண்டிருப்பாரோ? காலம்தான் வெளிக்கொணரும்.

இந்த போர்க்குணமான போராட்டம் உழைக்கும் மக்களிடையேயும் பிற தோழர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தருமபுரி போல இங்கு மக்களைப் பிளந்து மோத விட்டு இரத்தம் குடிக்க இந்த ஓணாயால் முடியாது என்பதை உரைக்க வைப்பதாகவும் அமைந்தது.

_________________________________________________________

– தகவல்: ம.க.இ.க, திருச்சி

___________________________________________________

 1. புரட்சிகர அமைப்புத் தோழர்களுக்கும்,ஜனநாயக சக்திகளுக்கும் பாராட்டுக்கள்.மேலும்,அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 2. கைதான தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த போராட்டத்தை மேற்குறிப்பிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் இணைத்து நடத்தி இருந்தால் அது அன்றைய நாளின் பேசு பொருளாக ஊடகங்களில் அமைந்திருக்கும். ராமதாஸ் ராமநாதபுரத்தில் உள்நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 3. ஆதிக்க ஜாதி வெறியை தூண்டும் கயவர்களை கைது செய்ய வேண்டும் அவர்கள் கச்சியையும் தடை செய்யவேண்டும்! செய்யுமா இந்த அரசு ?

  சாதி வெறிக்கு எதிராக போராடி கைதான தோழர்களுக்கு புரச்சிகர வாழ்த்துக்கள்!

 4. It seems very clear that Dr.Ramadas is not against dalit people because Dr.Ramadass himself knows that there is no difference between dalits and vanniyars in all aspect and respect as all are human beings only.He is only against present untouchability act which is being misused mostly today is a well known fact and all the politicions knows about it very well and nobody can dispute it.This act was enacted strongly not by Dalits to prevent the untouchability among the human being but by majority non-dalits in India.When any act was enacted in the past in the interest of the people by the well known law makers there were both positive and negative impacts were there.Today untouchability law is not really preventing the untouchability but only dividing the people and this law should be overhauled to prevent misuse against people.This is what Dr.Ramadass really wants and almost majority people besides politicians in different political parties wants this change; however other politicians have no guts to speak openly as Dr.Ramadas speaks.He will succeed in his goal as he support from majority people and indirect support from other political leaders

  • வன் கொடுமை சட்டத்தின் கீழ் 2% குற்றவாளிகள் கூட தண்டிக்கப்படவில்லை. அந்த அளவு ஆதிக்க சாதி வெறி புரையோடிப் போய் உள்ளது. சாதி ஆதிக்கம் செய்ய முடியாமல் போய்விட்டதே என்கிற ஆத்திரம் கண்ணை மறைக்க, தனித்து ஏதும் செய்ய முடியாது என்பதால் இது போன்ற ஆதிக்க சாதி வெறியர்களைத் திரட்டி தமிழகத்தை கொலைக்களமாக்க ‘அய்யா’ முயற்சிப்பதுதான் உண்மை.

 5. பிழைப்புவாத சாக்கடைகள் தாழ்த்தப்பட்ட சாதிகளிலுள்ளவர்களையும், இசுலாமியர்களையும் இணைத்துக்கொண்டுள்ளதையும் அம்பலப்படுத்தவேண்டம்.

 6. //ஓணாயால்// தோழர் எழுத்து பிழை.. ஓநாயால் என்பது தவறாக வந்துள்ளது. சரிசெய்யவும்.

 7. போராட்டச் செய்தியும் புகைப்படங்களும் புதுத்தெம்பைத் தருகின்றன. வாழ்த்துகள்!

  சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!
  http://www.hooraan.blogspot.in/2012/12/blog-post_8.html
  தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்…
  http://www.hooraan.blogspot.in/2012/12/blog-post.html

 8. தோழர்களின் போராட்டம் தெம்பூட்டும் விதமாக இருக்கிறது. ஜனநாயக உணர்வுடைய அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து இந்தச் சாதி வெறி அமைப்புகளை அழிக்க வேண்டும். இவர்களின் கொட்டத்தை அடக்க வெறும் கருத்துப் போராட்டம் மட்டும் போதாது. களத்தில் நேருக்கு நேர் நின்று இந்தச் சாதி வெறிக் குண்டர்களை அடித்துத் துவைக்க வேண்டும். உழைக்கும் மக்களைப் பிழவுபடுத்த சாதி வெறி பிடித்த, அயோக்கியன் ராமதாசு வன்முறையை ஏவினால், உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் காக்க நாமும் வன்முறையைப் பயன்படுத்துவோம் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதே வன்னிய சாதியில் உள்ள உழைக்கின்ற மக்கள் சாதி வெறிக்குப் பலியாக விடாமல், அவர்களை வர்க்கமாக திரட்ட வேண்டும். இதைப் புரட்சிகர அமைப்புகளில் தோழர்கள் நிச்சயமாகச் செய்து முடிப்பார்கள். இப்புரட்சிகர அமைப்புகளை ஆதரிப்போம்! மக்களைச் சாதிவெறிக்கெதிராக அணி திரட்டுவோம்.

 9. போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு நன்றி. தருமபுரி நிகழ்வைத் தொடர்ந்து காலவரையற்ற போராட்டம் நடத்த முன்வந்த பல அமைப்புகள் இப்போது அமைதியாகிவிட்டதைக் கண்டு நான் கவலை அடைந்தேன். நல்லவேலையாக நீங்களாவது இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நன்றி.

  தயவுசெய்து இதே போன்று மருத்துவர் அய்யா செல்லும் எல்லா ஊர்களிலும் போராட்டம் நடத்தக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், நீங்கள் பேசும் கருத்துக்கு எதிரான நிலைபாட்டை நாங்கள் கொண்டிருக்கிறோம். உங்களது எதிர்ப்புக் குரல் இல்லாவிட்டால் – எங்கள் வேலையில் எங்களுக்கே ஈடுபாடு குறையும் ஆபத்து உள்ளது. அதனை தடுக்கவாவது உங்களது போராட்டங்கள் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி.

  “புதுவை பாலியல் வன்கொடுமை: தலித் இளைஞர்களால் வன்னியப் பெண் சீரழிக்கப்பட்டால் அது சாதிவெறி ஆகாது!”

  http://arulgreen.blogspot.com/2013/01/School-Girl-Rape-Pondicherry.html

  • வின‌வு வின‌வுவ‌து சரியில்லை. தலித்துக‌ள் த‌ர‌ங்கெட்டு ந‌ட‌ந்தாலும் அது ச‌ரி. எவ‌னை வ‌ம்பிழுத்தாலும், சென்னை உட்ப‌ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் க‌ட்ட‌ ப‌ஞ்சாய‌த்து செய்து எவ‌ன் குடியை கெடுத்தாலும், எவ‌ன் வீட்டு பெண்க‌ளை மான‌ப‌ங்க‌ம் செய்தாலும் அது ச‌ரி. ஆனால் இவ‌ங்க‌ செய்யிற‌து ச‌ரியில்லை என்றாலும் அது த‌வ‌று. நல்லா இருக்குயா உங்க‌ நியாய‌ம்.

   • வினவு மட்டும் அல்ல, இணையத்தில் நடுநிலையாளராக காட்டிக்கொள்ளும் அனைவரும் இதுதான் சரியான வாய்ப்பு என, எந்த சம்பவம் நடந்தாலும் உடனே பாமக என்று எழுதுகின்றனர்.

    புதுச்சேரி சம்பவங்கள், திருபத்தூரில் பள்ளி தலைமை ஆசிரியையான செண்பகவல்லி என்னும் கொங்கு வேளாள கவுண்டர் இன பெண் தாக்கப்பட்டது , இவற்றை பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.

  • மலத்தை முகத்தில் பூசிக் கொள்வதில் திருவாளர்.அருளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி!

   அரசியல் ரீதியில் கையாலாகாத, சாதி வெறி பிடித்த, மானம், சுய மரியாதை உணர்வற்று கட்சி விட்டு கட்சி தாவும் மனிதக் குரங்கு, பிழைப்புவாதத்தில் மருத்துவர் பட்டம் வாங்கிய அயோக்கியன் ராமதாஸை, மருத்துவர்.அய்யா ராமதாசு எனறு சொரிந்து விடும் அருளின் அறிவைப் பார்த்து அனைத்துத் தத்துவங்களும் அவர் முன் மண்டியிடுகின்றன.

  • அருள் கொஞ்சம் பொறுமையாக இருங்க அன்சுல் மிஸ்ரா இப்பத்தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கார். இனிமே தான் உள்ள புடிச்சுப் போடுவாரு உங்க மருத்துவர் அய்யா இருக்கவேண்டிய இடத்துக்கு பத்திரமாக அனுப்பி வைப்பாரு.

 10. விடுதலைச் சிறுத்தைகளின் எல்லை மீறிய அராஜகங்கள் சகிக்க முடியவில்ரை என்ற முணுமுணுப்புகள் வன்னியர்களிடம் மட்டுமல்ல; கொங்கு வேளாளர்கள்; செட்டியார்கள்; நாயுடுகள்; ரெட்டியார்கள்; முஸ்லீம்கள் என பல்வேறு சாதிகளிடமிருந்தும் கேட்க ஆரம்பித்ததன் விளைவே தருமபுரி…http://illamsingam.blogspot.in/2012/12/blog-post_6.html

  • சாதி வெறிக்கு எதிராக போராடுவதாக சொல்லிகொள்ளும் அனைவரும் இதற்கு பதில் சொல்லவும்.

 11. பேரணியின் எதிரே ராமதாசை வரவேற்க சென்ற அவரது வானரப்படை காரை ஒரம்கட்டி பறந்துகொண்டிருந்த அவர்களது கொடியின் தடிக்கம்பை வேகமாக உருவினர். சரி, தாக்கத்தான் போகிறார்கள் என எதிர்பார்த்த வேளையில் கொடியை காலுக்கடியில் போட்டுகொண்டு அந்த சூரப்புலிகள் அய்யாவை வரவேற்கச் சென்றனர். எடுபிடிகளின் வீரம் போதை தலைக்கேறும்போது மட்டும்தான் என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது./// ippadi uzu[ethi eppadiyathu pmk mela pazhiya poda muyrachi evalavu periya kadahi kodiya ivarkalai paarthauthum kella pottukitu poiytarakalm nalla kadhai aasriyara varuva

 12. போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு நன்றி. தருமபுரி நிகழ்வைத் தொடர்ந்து காலவரையற்ற போராட்டம் நடத்த முன்வந்த பல அமைப்புகள் இப்போது அமைதியாகிவிட்டதைக் கண்டு நான் கவலை அடைந்தேன். நல்லவேலையாக நீங்களாவது இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நன்றி.

  தயவுசெய்து இதே போன்று மருத்துவர் அய்யா செல்லும் எல்லா ஊர்களிலும் போராட்டம் நடத்தக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், நீங்கள் பேசும் கருத்துக்கு எதிரான நிலைபாட்டை நாங்கள் கொண்டிருக்கிறோம். உங்களது எதிர்ப்புக் குரல் இல்லாவிட்டால் – எங்கள் வேலையில் எங்களுக்கே ஈடுபாடு குறையும் ஆபத்து உள்ளது. அதனை தடுக்கவாவது உங்களது போராட்டங்கள் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 13. அது என்னது ஆதிக்க சாதி சங்கங்களை மட்டும் தடை செய்.

  தலித் வேடம் போட்டு கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்யும் தரகர்கள் கட்சியை தடை செய் என்று ஏன் இவர்கள் போராடவில்லை.

  தமிழ்நாட்டில் யார் ஆதிக்க சாதி? யார் விலங்கின் பெயர்களை வைத்து கொண்டு அரசியல் ஆதிக்க ரெளடியிஸத்தை செய்கிறார்கள் என்பது எல்லோர்க்கும் தெரியும்.

  சென்னை நீதி சொல்லும் இடங்கள் யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்று எல்லோர்க்கும் தெரியும்… ஆனால் வினவுக்கு தெரியாதா என்ன?

  ஆள் பிடிப்பட்கில் கிறித்துவ மிசினரிகலை வினவு மின்ஜிவிட்டட்கு

  • விலங்கின பெயர் கொண்டு ரவுடியிசம் செய்பவனை விட புரட்சிகர பெயர்தாங்கி ரவுடிசம் செய்பவன்தான் எனக்கு ஆபத்தானவனாக தெரிகிறான். உங்களுக்கு அப்படி தெரியலியா :))

    • பட்டொளி வீசி பறக்கவேண்டும் ஜாதி வெறி என பாட்டாளி என்ற நான்கு எழுத்தையும் செருகிக் கொண்ட கட்சியின் தல.

  • சென்னை நீதி சொல்லும் இடம் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய அரசுத் துறையுமே வந்தேறிகளான பாப்பான் கையில்தான் இருக்கிறது என்பதை தாங்கள் அறியவில்லையா? அப்படி இல்லை என்றால் கல்வியில் வேலை வாய்ப்பில் பதவி உயர்வில் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு தரக்கூடாது என ஒப்பாரி வைக்கிறார்களே ஏன்? இட ஒதுக்கீடு கொடுத்தால் வன்னியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட (பாப்பானுக்கு தாழ்த்தப்பட்டவர்கள்) சாதியினர் முன்னேறிவிடுவார்கள் என்று தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை பொறுக்க மாட்டாமல் (வன்னிய சாதி வெறியர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் தர்மபுரியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சீரழித்ததை போல)நரித்தனமாக (திருச்சி சங்கம் ஓட்டலில் ராமத்தாசு நடத்தியதைப் போல)சதித்திட்டங்களை தீட்டி அனைத்து உழைக்கும் மக்களின் முன்னேற்றதையும் தடுத்து காலத்திற்கும் அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என (வன்னியர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் தங்களுக்காக உழைத்துக் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை காலத்திற்கும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என வெறி கொண்டு அலைவதைப் போல) சதித்திட்டம் தீட்டுகிறார்களே? அதற்க்கெதிராக போராடுமாறு

   • ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும் அணி திரட்டுவதற்காக சாதிகளை துறந்துவிட்டு கூட்டம் நடத்துவற்காக ராமத்தாசு உள்ளிட்டவர்கள் திருச்சிக்கு வந்திருப்பார்களேயானால் திருச்சியில் வாழும் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களும் ஆதரவு தெரிவித்து வரவேற்றிருப்போம். சாதிச்சங்கங்களின் பின்னால் ஆட்டு மந்தையைப் போல அலையும் உழைக்கும் வர்க்கமே உனக்கு உண்மையான எதிரி யார் என்பதை நீ உனரும் நாளுக்காக பாட்டாளிகளின் படை காத்திருக்கிறது. வா ஒன்றினைந்து போராடுவோம் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்திற்கு எதிராக…….னமது பன்பாட்டையும் நாகரீகத்தையும் கலச்சாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்காக……

 14. புதுவையில் வன்னியர் பென் தலித்கலால்[ஒலுக்கம் கெட்டவர்கல்] கர்ப்பலிக்கப்பட்டுல்லால்,இதை தட்டிக்கேட்டால் நாங்கல் சாதி வெரியர்கல்.சூப்பர்

 15. என்னமா கண்ணு? தலித்துகள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று குறை குறும் நீங்கள் , தமிழையே கொலை செய்யும் நீங்கள் உங்கள் யோக்கியத்தை நினைத்து பாருங்கள்!

 16. இப்போராட்டம் தேவையானது. ஆனால் சில கோசங்கள் இப்போராட்டத்தை வலுவிழக்கச் செய்வதாக உள்ளன. உதாரணத்திட்கு “தடை செய்! தடை செய்! வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை உடனடியாகத் தடைசெய்!”. அதுவே சகல சாதிச் சங்கங்களையும் தடைசெய்யக் கோரியிருந்தால் அது நீதியாய் இருந்திருக்கும்.

  • மற்ற ஜாதிச்சங்கங்கள் தலித்துகளுக்கெதிராக அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கவில்லை.

   • உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் சாதியின் பெயரால் சங்கங்கள் இருக்கும்வரை – அது எந்தச் சாதி சார்ந்திருப்பினும், சாதிப் பிரிவினையையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் தவிர்க்க முடியாது.

    • நாம் எந்த சாதிச் சங்கங்கத்தையும் ஆதரிப்பதில்லை. ஆனால் ஆதிக்க சாதிச் சங்கத்தையும், தலித் சாதிச் சங்கத்தையும் ஒரே மாதிரிப் பார்ப்பது சாதி வெறியர்களுக்குத் தான் லாபம்.

  • ஆதிக்க சாதிச் சங்கங்களையும், தலித் சாதிச் சங்கங்களையும் ஒன்றாகப் பார்ப்பதே அயோக்கியத்தனம். தலித்துகள் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் பொராடுவதறகு சங்கம் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆதிக்க சாதியினர் பொறுக்கித் திங்கவும், தலித் மக்கள் மீது அடக்குமுறையைச் செலுத்தவும் தான் சங்கம் வைத்திருக்கிறார்கள்.

   எந்த சாதிச் சங்கங்களும் உழைக்கின்ற மக்களுக்கு ஒன்றும் செய்து விடப் போவதில்லை. பொறுக்கிகள், ரவடிகள் தான் சாதிச் சங்கங்கள் மூலம் ஆதாயம் அடைகிறார்கள்.

   இப்போது அனைத்து சாதியினருக்கும் தலையாய பிரச்சனையாக இருப்பது மின் வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவை. இவற்றை எதிர்த்து எந்தப் பொறுக்கி சங்கங்களாவது போராடியிருக்கின்றவா? மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்காத இந்தப் பொறுக்கி சங்கங்கள் நமக்கு எதற்கு? என்பதை ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கின்ற மக்கள் உணர வேண்டும்.

   • உங்கள் பின்னூட்டம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. முதலில் “தலித்துகள் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் பொராடுவதறகு சங்கம் வைத்திருக்கிறார்கள்” என்கிறீர்கள். பின்னர் “எந்த சாதிச் சங்கங்களும் உழைக்கின்ற மக்களுக்கு ஒன்றும் செய்து விடப் போவதில்லை. பொறுக்கிகள், ரவடிகள் தான் சாதிச் சங்கங்கள் மூலம் ஆதாயம் அடைகிறார்கள்” என்கிறீர்கள். அப்படியென்றால் தலித்துக்களின் சங்கங்களும் அவற்றின் நோக்கத்தினை நிறைவு செய்வதில்லை என்பதுதானே அர்த்தம்?
    என்னைப்பொறுத்தவரை சாதிப்பிரிவினைக்கு எதிராகப் போராட தலித் சங்கங்கள் தேவையற்றவை. மாறாக முற்போக்குச் சிந்தனை உள்ள எவரும் சாதிமறுப்போர் சங்கமொன்றின்கீழ் அல்லது சமத்துவத்திட்காகப் போராடும் அமைப்பொன்றின்கீழ் போராடலாம். சாதியின் பெயரால் பிரிவுகள் இருக்கும்வரை ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும்.
    நான் பல வெளிநாடுகளில் சந்தித்த நம்மவர்கள் (இந்தியர்கள்) பலரிடம் அவதானித்த பொதுவான குணம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னைவிட கீழானவர்கள் எனக் கருதுவோர் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது. வெள்ளையர்களிள் எல்லோரிடமும் கூனிக்குறுகி பேசிவிட்டு, மறு நிமிடம் தெற்காசிய மற்றும் ஆபிரிக்க நாட்டவர்களிடம் தேவையற்ற விதத்தில் அடாவடியாகப் பேசுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். அதனால்தான் கூறுகிறேன் நம்மவர்களிட்கு முதலில் சக மனிதனை சமமானவனாக மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர சாதிச் சங்கங்கள் வேண்டியதில்லை.

 17. saaraayam kudikkum palakkathilirundhu thamil makkalai meettu kallu kudikkum palakkaththirku adimaiyaakka vendum endru veriththanamaaga poraadum raamathaasukku kudi thangi raamathasukku adhuvum thamilk kudith thangi raamathaasukku thairiyam irundhal varum ottuporukkum therthalil jeyalalithaa kaalil vilaamal thanithu pottiyida sollungal paarkkalaam

 18. திரு அருள்,சக்தி,சோழன்,தலித் அல்லாதவன் ( என்ன எழவு பெயர் )- வி.சி.யினரின் தவறுகள் குறித்து வினவில் தெளிவான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.அநேகமாக அந்தளவுக்கு வேறு யாரும் எழுதவில்லை.இராமதாசின் வன்னிய சாதி வெறியையும்,அவரது சாதி வெறி தூண்டுதலையும் வினவு எதிர்க்கிறது.ஆனால்,நீங்கள் தான் இராமதாசின் வன்னிய சாதி வெறியை, அவரது சாதி வெறி தூண்டுதலை ஆதரிக்கிறீர்கள்.

  • சமீபத்தில் அனேகமாக அனைத்து கட்டுரைகளும் முழுக்க முழுக்க தலித் ஆதாராவாகவே எழுதபடுகின்றன. எல்லாவற்றிலும் பிரச்சனைகளின் காரணங்களை கண்டுகொள்ளாமல், சாதிவெறி என்றே எழுதப்பட்டுள்ளன. எத்தனை கட்டுரைகள் வி.சி.யினரின் தவறுகள் குறித்து வினவில் சமீபத்தில் எழுதப்பட்டன?

  • பயம்தான் திரு வெட்டிப்…. அவர்களே.. பயம்தான்.அவர்கள் மூட்டப்போகிற சாதிக்கலவரத்துல அப்பாவி பொதுமக்கள் யாராவது செத்துப்போயிட்டா அந்த குடும்பங்கள் அனாதையா நிக்குமேன்னு பயம்.அந்த சாதிக்கலவரத்த நடத்தப்போற கூலிப்படையில இருக்குற உன்ன மாதிரி யாராவது செத்துப்போயிட்டா உன்ன மாதிரி அப்பாவியா இருக்குற அந்த கைக்கூலியோட குடும்பமும் அனாதையா நடுத்தெருவுல நிக்குமேன்னு பயம்தான்… திரு. வெட்டிப்… அவர்களே…

 19. //மாவட்ட ஆட்சியர் போட்டோவிற்குப் போஸ் கொடுக்க வெளியூர் சென்றதால் சப் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அது செவிடன் காதில் ஊதிய சங்கானது.//நல்லது.

 20. //பேரணியின் எதிரே ராமதாசை வரவேற்க சென்ற அவரது வானரப்படை காரை ஒரம்கட்டி பறந்துகொண்டிருந்த அவர்களது கொடியின் தடிக்கம்பை வேகமாக உருவினர். சரி, தாக்கத்தான் போகிறார்கள் என எதிர்பார்த்த வேளையில் கொடியை காலுக்கடியில் போட்டுகொண்டு அந்த சூரப்புலிகள் அய்யாவை வரவேற்கச் சென்றனர். எடுபிடிகளின் வீரம் போதை தலைக்கேறும்போது மட்டும்தான் என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது.//நல்லது.

 21. சாதி வெறிப் பிடித்த ராமத்தாசுடன் திருச்சி சங்கம் ஒட்டல்ல உட்கார்ந்து தண்ணியடிச்ச மற்ற சாதி வெறியர்களுக்கும் ராமத்தாசுக்கும் பகுத்தறிவு எனும் ஆறாம் அறிவு இருக்குமானால் ஆதிக்க சாதிகள் அனைத்தும் பாப்பானுக்கு அடிமைப்பட்டவர்கள் எனும் உன்மை உறைத்திருக்கும்.பார்ப்பனீயத்தின் பன்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக திருவையாற்றில் போராடியிருப்பார்கள்.சாதியை ஒதுக்கி விட்டு மனதை மட்டுமே நேசிக்க சொல்லும் சினிமாவுக்கும் சீரியலுக்கும் எதிராக ஒப்பாரி வைத்திருக்க மாட்டார்கள்.

 22. வீணா போன வினவே …..

  சமீபத்தில தலித் பசங்க நாலு பேர் வன்னிய சாதி பெண்ணை பலாத்காரம் பண்ணின போது எங்க__ போச்சு உங்க போராட்ட குணம் ,______ எல்லாம் எங்க___ போச்சு ??? அப்போ எல்லாம் உங்க தட்டச்சு பலகை எல்லாம் வேலையே செய்யாதா?

  • எந்த ஊரில் எப்போது நடந்த சம்பவத்தை இந்த மண்டக்கலப்ப குறிப்பிடுகிறது எனத் தெரிந்தால் வினவின் தட்டச்சு பலகை மாத்திரமல்ல அதற்கும் முன்னதாக தோழர்கள் போராட்டம் நடத்தியதையும் விளக்க முடியும்

   • @kattuthari. எல்லா செய்திகளையும் படிக்க மாட்டீர்களா? புதுச்சேரி சம்பவங்களை கேள்விப்படவில்லையா? அருந்ததியர் பையனை எரித்துகொன்ற தலித் சம்பவம் தெரியாதா?

    • வினவின் முகப்பிலேயே அதற்கான செய்தி இருக்கிறது நன்பரே,புதுச்சேரி பாலியல் வன் கொடுமைக்கு எதிராக…..என்ற தலைப்பில்…. படித்துப் பார்த்து எமது போர்க்குனம் மிக்க போராட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்

     • புதுச்சேரி பாலியல் வன் கொடுமைக்கு சில வரிகள் எழுதபடுகின்றன, ஆனால் ஆதிக்க சாதிவெறி என்ற பெயரில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. எல்லாம் ஒருதலைபட்சமனானவை.

      • ஆனந்து
       பாண்டிச்சேரி மேட்டர் கட்டுரையே இல்லை, அது தோழர்கள் அங்க போராடிய செய்தி, அதாவது இங்க பின்னூட்டம் போடற வன்னிய சிங்கம் புலி எருமை மாதிரி கம்பீட்டர்ல குத்த வச்சு பொலம்பாம வீதியில இறங்கி தோழர்கள் பிராச்சாரம் போராட்ட செய்த கதை. மத்தபடி சிறுத்தைகள்ளேருந்து மாயாவதி வரை தலித்து பிழைப்புவாத பொறுக்கி அரசியலை வினவு நிறைய எழுதியாச்சு தேடிப்படிச்சுக்கப்பா …. என்னிக்கு வன்னிய சாதி வெறியை பத்தி வினவுல வந்திச்சோ அன்னிக்கு ஆரம்பிச்சாப்பல இந்த ஆனந்து … ஷ்ஷ்ஷ்ஷப்பா….முடியல

       • // ஆனந்து
        பாண்டிச்சேரி மேட்டர் கட்டுரையே இல்லை, அது தோழர்கள் அங்க போராடிய செய்தி, அதாவது இங்க பின்னூட்டம் போடற வன்னிய சிங்கம் புலி எருமை மாதிரி கம்பீட்டர்ல குத்த வச்சு பொலம்பாம வீதியில இறங்கி தோழர்கள் பிராச்சாரம் போராட்ட செய்த கதை. மத்தபடி சிறுத்தைகள்ளேருந்து மாயாவதி வரை தலித்து பிழைப்புவாத பொறுக்கி அரசியலை வினவு நிறைய எழுதியாச்சு தேடிப்படிச்சுக்கப்பா …. /
        வழி மொழிகிறேன்.

       • ஷப்பா (?), பழைய கதைகள் வினவில் இருக்கட்டும். சாதி வெறி பற்றிய ஏராளமான கட்டுரைகள் சமீபத்தில் எழுதபடுகின்றன. உண்மையில் சாதிவெறிதான் காரணமா? மறு தரப்பில் எந்த தவறுமே இல்லையா?

        //என்னிக்கு வன்னிய சாதி வெறியை பத்தி வினவுல வந்திச்சோ அன்னிக்கு ஆரம்பிச்சாப்பல இந்த ஆனந்து

        ஏற்கனவே வினவில் கருத்துக்கள் எழுதியிருக்கேன்.

        // ஷ்ஷ்ஷ்ஷப்பா….முடியல
        ஒரே மாதிரியான சாதிவெறி கட்டுரைகள், கருத்துகள் எழுதும்போது முடியுதா?

        • உன்மையில் சாதி வெறிதான் காரணமா? மறு தரப்பில் எந்த தவறுமே இல்லையா? என்று கேட்ட திரு ஆனந்த் அவர்களே இருக்கிறது இரண்டு தரப்பினருக்குமே ஒரே காரணம்தான்.பிழைப்புவாதம்.ஓட்டுப்பொறுக்க வேண்டும்.தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.உள்நாட்டு பெருமுதலாளிகளும் பண்ணாட்டு நிறுவனங்களும் வீசியெறியும் எலும்புத்துண்டுகளை பொறுக்கித் திங்க வேண்டும். அதில் யார் அதிகமாக பொறுக்கித்திங்கிறது என்றுதான் போட்டி.ஒன்னே முக்கால் லச்சம் கோடிய யார் திங்கிறது,பத்து லச்சம் கோடியை யார் திங்கிறதுங்கிற போட்டி பெரிய ஓட்டுப் பொறுக்கிகளுக்கு, பாலம் கட்டுற கான்ட்ராக்டாவது கிடைக்காதா? ரோடு போடுற கான்ட்ராக்டாவது கிடைக்காதாங்கிற போட்டி உள்ளூர் சாதிக் கட்சிகளுக்கு. எலும்புத்துண்டுகளை பொறுக்கித்திங்கிறதுல ராமத்தாசுக்கும் திருமாவளவனுக்கும் மாயாவதிக்கும் அத்வானிக்கும் மன்மோகன்சிங்குக்கும் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.தொண்டர்கள் தான் பாவம் அங்காளி பங்காளிக்குள்ள அடிச்சிக்கிட்டு சாவுறாங்க

 23. அரசியலுக்காக , பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்த இந்தச் சாதி வெறி பிடித்த ஒநாயை அரசியல் ரீதியாக அம்மணமாக்கி, அடித்து விரட்ட வேண்டும்.

 24. அனைத்து சாதியினரும் தலித் சமூகத்திற்கு எதிராக தொடங்க இருக்கின்ற அமைப்பில் பேசியது!

  யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த நரேஷ் யாதவ்:

  “நம்மைப் பார்த்து அவர்கள் (தலித்) பயந்த காலம் போய்விட்டது. நாம் அவர்களைப் பார்த்து பயந்துகொண்டு இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு ‘காடுவெட்டி குரு’வைப் பார்த்தால் மட்டும்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால், ஒவ்வொரு சாதியிலும் காடுவெட்டி குருவைப் போல ஒரு ஆள் உருவாக வேண்டும்.”

  தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ்:

  “தமிழகத்திலேயே எங்க சாதியில்தான் அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை வீரன் எங்க சாதிப் பெண் பொம்மியைத் தூக்கிட்டுப் போயிடுவான். அதை அவர்கள் விழாவாகக் கொண்டாடிட்டு இருக்காங்க. எங்க சாதிப் பெண்கள் வேறு சாதிக்காரனோடு போயிடுச்சுன்னா, செத்துப்போனவங்களுக்கு சுடுகாட்டில் எப்படிச் சடங்குகள் செய்வாங்களோ, அப்படிப்பட்ட சடங்குகளைச் செஞ்சுடுவோம். மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டோம். இந்தக் கட்டுப்பாடு இன்றுவரை இருக்கிறது. இதை யார் மீறவும் நாங்க அனுமதிக்க மாட்டோம்.”

  தேவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் முருகன்ஜி:

  “கலப்பினம் உருவாக்க நினைக்கிறார்கள். நாம் அகில இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும். பெரியார், ஜனநாயகம், கம்யூனிஸ்ட் என்று சொல்லி சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். அட சண்டாளர்களே… சாதி இல்லை என்றால் அண்ணன், தம்பி உறவே இருக்காதுடா. ஜனவரி 24-ம் தேதி தென் மாவட்டங்கள் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடுவோம்.”

  பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பி.டி. அரசகுமார்:

  “மணப்பாறையில் என் மாமன் மகளை, வேறு ஒரு சாதிக்காரன் இழுத்துட்டுப் போய் மிளகுப்பாறையில் பதுக்கி வச்சிருந்தான். அன்னைக்குப் பார்த்து நான் வீட்ல இல்ல. எங்க அண்ணனும் மாமாவும் மிளகுப்பாறைக்குப் போனாங்க. அதுக்குள்ள அந்தப் புள்ளைக்குத் தாலி கட்டிட்டான். எங்க அண்ணன் அந்தப் புள்ளைகிட்ட, இனி நீ மாட்டுக் கறிதான் சாப்பிடணும். தப்பு அடிக்கணும்னு சொல்லியிருக்கார். அந்தப் புள்ளையும், எதுவா இருந்தாலும் நான் அவர் கூடத்தான் போவேன்னு சொல்லிடுச்சு. சரி, போலீஸ் ஸ்டேஷன்ல மாலையை மாத்திக்கோங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எங்க ஊரு ஆளுங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். ஊர்க்காரங்க கத்தி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க. பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும், ஸ்டேஷனுக்கு வெளியே வெச்சு அந்தப் பையனை ஒரே போடாப் போட்டு கதையை முடிச்சுட்டு, பெண்ணைக் கூட்டிட்டு வந்து எங்க ஆளு ஒருத்தனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். வீரம்னா அப்படி இருக்கணும்….”

  =======================

  இனவெறி தூண்டும் தமிழக அரசியலில் மேற்குறிப்பிட்ட வசனங்களை பேசும் சாதிய
  தலைவர்கள் அனைவரும் மனிதர்களா?தீவிரவாதிகளா?

  • ஓட்டுப்போடாதே!
   புரட்சி செய்! என்ற அரசியல் முழக்கங்களை எழுதும் போது பயங்கரவாதம் எனப் பாய்ந்து பிடுங்கும், சட்டம்-ஒழுங்கைக் காக்கும்(?) காவல் துறையின் (கொட்டை எடுத்த) புலிகள் சாதி வெறியைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளைக் கண்டு அனைத்தையும் பொத்திக் கொண்டு அமைதி காப்பதேன்?

   அவர்கள் ஒவ்வொருவருடைய பேச்சும் ஒப்புதல் வாக்குமூலம் போல் உளளது. இதை வைத்து அவர்கள் மேல் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டியது தானே? சட்டப்பூர்வக் கூலிப் படைகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது தான்.

   தமிழ் நாட்டை ஆளும் பார்ப்பனப் பாசிச பேய் இதையெல்லாம் கண்டு வக்கிரமாக ரசித்துக் கொண்டிருக்கிறது.

   புரட்சிகர அமைப்புகளின் சமரசமற்ற சாட்டையடிப் போராட்டங்களின் முலம்தான் இவர்களை ஒடுக்க முடியும்.

 25. வானூரில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை :

  தருமபுரியில் குச்சிக் கொளுத்தி வைத்தியர் ஏற்றிய வெறியிலிருந்து இறங்காமல், தொடர்ந்து பாலியல் தொடர் கொலைகளை செய்வதில் பாட்டாளி வன்னியர்களின் இறங்கி விட்டார்கள். காலத்தின் கோலத்தில் மக்களை குணப்படுத்த வேண்டிய மருத்துவர் பிணவறை காவலனாய் அவதாரம் எடுத்துள்ளார்.

  விழுப்புரம் மாவட்டம், வானூர் (புதுச்சேரிக்கு அருகில் உள்ளது) ருக்மணிபுரத்தை சேர்ந்தவர் சேகர் தையல் தொழிலாளியாக இருக்கிறார். அவரது மகள் கல்கி (16) வானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். (03.01.2013) வீட்டில் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் செய்ய வேண்டிய சிற்றுண்டிக்கு அரிசியை ஊறவைத்துவிட்டு, வாசலில் கோலம் போட்டு கொண்டிருக்கும்போது இயற்கை உபாதை உந்தவே தனது தம்பியிடம் சொல்லிவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்புக்கு இயற்கை உபாதையை கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது நேரம் மாலை 3.10 மணி.

  மாலை 4 மணியான பிறகு மகள் வீடு திரும்பாததில் சந்தேகம் அடைந்த தாயார் தேன்மொழி, தந்தை சேகர், தம்பி, பாட்டி மற்றும் சிலருடன் பதட்டத்துடன் தேடியிருக்கிறனர். தேடியபோது அங்கு சென்று பார்த்தபோது சவுக்கு மரத்தில் 15 அடி உயரத்தில் துப்பட்டாவால் மாணவி கல்கி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உட்னே பிணத்தை தந்தையும் மகனும் பிறரின் உதவியுடன் கிழே இறக்கி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே இருந்தவர்கள் கல்கி முன்பே இறந்துப் போய்விட்டதாக தெரிவிக்கின்றனர்.

  பின்னர் பிணத்தை வீட்டிற்கு கொண்டு வந்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்கின்றனர்.
  கடமை தவறாத காவல் துறையினர் அந்த பெண் தற்கொலை செய்துக் கொண்டாள் என்ற அடிப்படையில் புகார் மனுவை கேட்கின்றனர். இது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. அதுவுமின்றி சடலத்தைனை பிணக்கூறு ஆய்வு செய்ய கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் என்ற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே தற்கொலை செய்துக் கொண்டார் கல்கி என சான்றிதழ் வாங்க காவலர்கள் முயற்சி செய்துள்ளனர்.

  இந்த விவரங்களை அறிந்த உள்ளுர் விடுதலைச் சிறுத்தைகளின் தோழர்கள் களத்திற்கு சென்று மக்களைத் திரட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வானூர் தாசில்தார் குமாரபாலன் ஆகியோரை முற்றுகையிட்டனர். இதனிடையே அரசு மருத்துவமனையில் பிணக்கூறாய்வு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி மாணவியின் சடலத்தை வாங்க மறுப்பு தெரிவித்தனர் அதனால் அரசு மருத்துவமனையில் பிணகூறாய்வு செய்ய ஒத்துக்கொண்டனர். வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யவும் உறுதியளித்தனர்.

  உடற்கூராய்வு செய்ததில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ளும் போது உருவாகும் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. தொண்டை குழாய் உடைவது, சிறுநீர் கழித்திருப்பது என எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. எனவே தற்கொலையல்ல, கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை மெத்தனமாக இருக்கிறது.

  கல்கி ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான முதல் தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன. இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற கல்கியை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்தியிருக்கிறது. பாலியல் பலாத்காரம் செய்ய, அதை எதிர்த்து கல்கி கடுமையாக போராடியிருக்கிறார். அதனால் அவரை கொலை செய்திருக்கின்றனர்.

  பின்னர், கொலை செய்யப்பட்ட கல்கியின் உடலை 15 அடி உயரத்தில் சவுக்கு மரத்தில் ஏற்றி கட்டிவிட்டு கயவர்கள் தப்பிவிட்டனர். கொலையில் தொடர்புடைய மூவரும் வன்னியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையிலுள்ளது.

  இந்நிலையில் இன்று (05.01.2013) கல்கியின் உடலை அவரின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். எனினும் கல்கியின் கொலைக்கு எதிராக மாணவ மாணவியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். வானூர் பதட்டத்தில் இருக்கிறது. போராட்டம் தொடரும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளனர்.
  அப்பாவி தலித் பெண்ணான கல்கி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நமது மனதை கனக்க வைக்கிறது. கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை காப்பாற்ற துடித்த அதிமுக பொருப்பாளர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது கூடுதல் செய்தி.

  குச்சிக் கொளுத்தை வைத்தியரின் தொலைநோக்கு அப்பாவி வன்னியர்களுக்கும் அவப்பெயரை உருவாக்கத் தொடங்கியுள்ளது. வன்னியர்கள் என்ற சாதி தனது திமிரினால் கொலைகாரச் சாதியாக மாறிவிட்டது என்ற பழியைச் சுமக்கிறது என்று வரலாறு பதிவு செய்துக் கொள்ளும்.

 26. //மணப்பாறையில் என் மாமன் மகளை, வேறு ஒரு சாதிக்காரன் இழுத்துட்டுப் போய் மிளகுப்பாறையில் பதுக்கி வச்சிருந்தான். அன்னைக்குப் பார்த்து நான் வீட்ல இல்ல. எங்க அண்ணனும் மாமாவும் மிளகுப்பாறைக்குப் போனாங்க. அதுக்குள்ள அந்தப் புள்ளைக்குத் தாலி கட்டிட்டான். எங்க அண்ணன் அந்தப் புள்ளைகிட்ட, இனி நீ மாட்டுக் கறிதான் சாப்பிடணும். தப்பு அடிக்கணும்னு சொல்லியிருக்கார். அந்தப் புள்ளையும், எதுவா இருந்தாலும் நான் அவர் கூடத்தான் போவேன்னு சொல்லிடுச்சு. சரி, போலீஸ் ஸ்டேஷன்ல மாலையை மாத்திக்கோங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எங்க ஊரு ஆளுங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். ஊர்க்காரங்க கத்தி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க. பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும், ஸ்டேஷனுக்கு வெளியே வெச்சு அந்தப் பையனை ஒரே போடாப் போட்டு கதையை முடிச்சுட்டு, பெண்ணைக் கூட்டிட்டு வந்து எங்க ஆளு ஒருத்தனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். வீரம்னா அப்படி இருக்கணும்.//

  பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான பி.டி. அரசகுமார் பேசியதிலிருந்து

  முகநூலில் சுரேசு குமார் http://www.facebook.com/soorimail

 27. அன்புள்ள, புரட்சிகர தோழர்களுக்கு! அந்தந்த பகுதியில் எந்த சாதி அதிகமா உள்ளதோ. அதுபோட்டிபோட்டு[ச;உ]பா;உ]பதவிக்கு வருகிறது சாதிவைத்துவந்தவன் எல்லாவற்றையும் களவு செய்து,காட்டிகொடுத்து,ஊரையடித்து தன் வீட்டு உலையில் போடுவதை துண்டு அச்சுமூலம் அவன்சாதிக்கு நாம் விநியோகிக்கவேண்டும்.கீழ்த்தரமான,இழிவான தன் தாந்தோன்றிதனத்தை பிறகு அந்த சாதியின் சாமானியனுக்குப்புரியும்! ஐயோ’நமக்கு நம் சாதி பெருமையா? சிறுமையா? என்று.குறிப்பாக திருவைகுண்டம்தொகுதி டானியல்ராச் என்பவன் அங்குள்ள நிலம்,ஆற்றுத்தண்ணீர்,மேலும் பல திட்டத்தால் தன் சாதியை நாறடித்து விவசாயத்தினை கொலை செய்தான்.இன்று அந்தப்பகுதியின் நிலை?

 28. புரட்சிகர தோழர்களே./தமிழ் நாட்டில் உள்ள எல்லா சாதிகளும் கூட்டம் போடட்டும்,குதூகளிக்கட்டும்,கொண்டாடட்டும்,ஆனால் ஆபிரிக்காவில் கருப்பினமக்கள் ஒருவரையொருவர் தாக்கி கொன்றுகுவிப்பது போல காட்டுமிராண்டி நிலைக்கு போகுமானால் செத்து ஒழியட்டும்.சாதித்தலைமை,அதை ஆதரிக்கும் அரசு,அரசுநிர்வாகம், ஆனால் வெளிநாட்டவரும் இதை பயன்படுத்தி பயன் அடைவர்.யாருக்கு நல்லது? யாருக்கு கெட்டது ? மிக நேர்த்தியானவர்கள்!இவர்களை வைத்துக்கொண்டு! ஈழம், கச்சத்தீவு,இயற்கை பாதுகாப்பு,சமச்சீர்கல்வி,மது ஒழிப்பு,நச்சான தொழிற்கூடங்கள் அகற்றுதல் எப்படி முடியும்?

 29. புரட்சிகர தோழர்களே./புரட்சிகரமான வணக்கங்கள்./ தமிழ் நாட்டில் எவ்வளவு சிறப்பு உள்ளதோ அதற்க்கு இனையாக இழிவான எழவுபோவான் கள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றான்.காரணம் வேற வேலை,காரியம் கிடையாது.நாசமாப்போவ…ஒருசாதி மற்ற சாதியைப்பார்த்து பொறாமைப்படவேண்டாம்!சண்டையிடவேண்டாம்! மாறாக அவர்களுக்கு சமமாக வர தன் சாதியில் படிக்கின்றமாணவ+மாணவரை ஊக்குவிப்பது,அவர்களைவிட நல்ல பழக்கவழக்கங்களை,பண்பாட்டை,ஒழுக்கத்தை பாடம் நடத்துவது.உணவு,உடை,வீடுமற்றபிறவாழ்க்கை வசதிகளில் வளம்பறெ கடினப்பட்டு உழப்பது,தன் சாதி தொழிலாக இருந்தாலும் அதில்தன் முழுதிறனையும் காட்டி வளர்ச்சி அடைதல்,உற்பத்தியை பெருக்குவது,குடும்பத்திற்க்குள்,தெருவுக்குள்,ஊருக்குள் உதவுவது மிகமிகநல்லது.போட்டிபோட்டு வளர்க

  • என் சாதி தொழில் மலம் அள்ளுவது செத்த மாட்டை தூக்கி செல்வது இழவு செய்தி சொல்வது செத்தவன் வீட்டில் மேளம் அடிப்பது மற்றும் சுடுகாட்டில் பிணம் எரிப்பது………. இதில் முழு திறமையையும் காட்டி வளர்ச்சி அடைவது எப்படி திரு GOWTHAM அவர்களே.உன்னை மாதிரி ஊருக்கு ஒரு முட்டாள் இருந்து கொண்டு அடுத்தவனையும் முட்டாள் ஆக்குவதே சாதி ஒழியாமல் இருக்க முழு காரணம்.இதை படிச்சுட்டு உடனே நீ திருந்தி விடுவாய் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை,அடுத்த முறை கொஞ்சம் யோசித்து எழுது.

   • ஓகோ இப்பொழுது புரிகிறது ஏன் நீ முன்னெடுக்கும் பிரட்சினையின் காரியங்கள் ஏன் தோல்வியில் முடிகிறது என்பது!ஏன் எனது கருத்தை நீ நிராகரிக்கின்றாய்.?உனது சாதியையும் தொழிலையும் சொல்லித்தான் அரசில் பலசலுகையுள்ளதே.உன்னை மாற்றிக்கொள்ள,உனது நிலையை மேம்படுத்திக்கொள்ள என்ன நாடகம்?ஆடுகிறாய்.இன்னும் நீ இந்த தொழில் தான் செய்வாய் என்றால்?நீ மனுதர்மத்தை,இந்து சனாதன ஆதிக்கவெறியையும் ஆதரிக்கின்றாய்.ஒரு தொழிலாளி சந்தைக்கு கொண்டுவரும் உற்பத்தி பொருளுக்கும்,மலம்,பிணம் போன்ற சுகாதார பொதுபணிக்கும் வித்தியாசம் தெரியாதவன் நீ திருந்து. நீ சிந்தி. வினவும் உடந்தையா????

    • ///கவுதம்:தன் சாதி தொழிலாக இருந்தாலும் அதில்தன் முழுதிறனையும் காட்டி வளர்ச்சி அடைதல்///????????????

     ///______ என் சாதி தொழில் மலம் அள்ளுவது செத்த மாட்டை தூக்கி செல்வது இழவு செய்தி சொல்வது செத்தவன் வீட்டில் மேளம் அடிப்பது மற்றும் சுடுகாட்டில் பிணம் எரிப்பது………. இதில் முழு திறமையையும் காட்டி வளர்ச்சி அடைவது எப்படி? ////

     //கவுதம் :உனது சாதி தொழில் என்று மலம் அள்ளுவதை,பிணம் தூக்குவதை,யார் நிர்ப்பந்தித்தார்? நானா?///

     சாதி தொழிலாக இருந்தாலும் அதில்தன் முழுதிறனையும் ……..- என்பதிற்கு என்ன அர்த்தம் என்பதை கவுதம் விளக்கம் அளிக்க வேண்டும்

  • உனது சாதி தொழில் என்று மலம் அள்ளுவதை,பிணம் தூக்குவதை,யார் நிர்ப்பந்தித்தார்? நானா? முழு திறனையும் காட்டு என்றால்?சந்தைக்கு வரும் பொருள் உற்பத்தியில்!சொன்னேன். ஓகோ நீயாகவே இந்தத்தொழில்தான் எனது தொழில் என உரிமமும்,பட்டாவும் பெற்றுள்ளாயா???உன்னை எவன் செய்யச்சொன்னான்?நானா? ஐயர்,செட்டியார்,நாடார் சாதிகளில் நேற்று செய்த தொழிலையா?இன்று செய்கிறான்?காலமும்,அறிவியலும்,படிப்பும்,பருவ நிலைகளும் மாறும் போது தனது தொழிலை,நிலையினை மாற்றவில்லையா? நீயும்,உன் போன்ற மனிதக்கூட்டமும் அந்த இழிசெயலை இனி செய்யவேண்டாம்.அரசு அமெரிக்காவுடன் ஒப்பந்தமிட்டு உனது மலத்தையும்,பிணத்தையும் நாறும் போது இயந்திரத்தால் அள்ளிக்கொள்ளும்.பன்றியை பார்க்காதே!பண்புள்ள,படித்த நல்லகுடிமக்களைப்பார்.எனக்குநேரமில்லை.இடமில்லைவிடுகிறேன் அறிவுள்ளதோழா

 30. பாருங்கப்பா இவர்களது நியாயத்தை! விடுதலை சிறுத்தைகளின் அராஜகம் தாங்கமுடியவில்லையாம். அதன் விளைவுதான் தருமபுரியாம்.

  அட மானங்கெட்ட……….களே, விடுதலைச் சிறுத்தைகள் அராஜகம் செய்தால் தர்மபுரி அப்பாவி தலித் மக்கள் என்ன செய்வார்கள்?

  ஆண்ட பரம்பரை-மோண்ட பரம்பரை என்று கூறிக் கொண்டு பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்துகிறார்களே மேற்கண்ட சாதிகள், அதற்குத் தாழ்த்தப்பட்ட மக்களின் கோபம் எப்படி இருக்கும்?

  • //அட மானங்கெட்ட……….களே, விடுதலைச் சிறுத்தைகள் அராஜகம் செய்தால் தர்மபுரி அப்பாவி தலித் மக்கள் என்ன செய்வார்கள்?
   இப்படித்தானே எது நடந்தாலும் பாமகவை குறை சொல்லுகிறீர்கள் அ சொல்லுகிறார்கள்.

   //பாருங்கப்பா இவர்களது நியாயத்தை! விடுதலை சிறுத்தைகளின் அராஜகம் தாங்கமுடியவில்லையாம். அதன் விளைவுதான் தருமபுரியாம்.
   தருமபுரி பிரச்னை எதனால் ஏற்பட்டதாம்?

 31. உங்கள் கருத்து சரிதான். சாதிச் சங்கங்களால் சாதியை நிச்சயமாக ஒழிக்க முடியாது.

  ஆதிக்க சாதிச் சங்கத்தையும், தலித் சாதிச் சங்கத்தையும் ஒரே மாதிரிப் பார்க்கக் கூடாது என்பது தான் என் கருத்தே தவிர சாதிச் சங்கங்களை ஆதரிப்பதல்ல.

  அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்களும் சாதியை விடுத்து வரக்கமாக ஒன்றாக இணைந்துதான் சாதியை ஒழிக்க முடியும் என்பதே எனது கருத்து.

 32. மனித இனத்தில் என்ன? கலப்பு வேண்டிக்கிடக்கு? உண்மையான,தூயகாதல்,இருவருக்கும் சமுதாயத்தில் தனக்குப்பின் நல்ல குடிமக்களை உருவாக்கும்,படிப்பு,நேர்மையான ஊதியம் இருந்தால் தாராளமாக நீங்கள் விரும்பியவரை கட்டி வாழ்க்கை நடத்துங்கள்.கண்டபடி சினிமா பார்த்துவிட்டு கதாநாயகன்,நாயகி மாதிரி கள்ள புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு சிறிய வயதிலே?நாங்களும் வாழ்ந்து காட்டுவோம் என்ற சிறுதுணிவு கூட இல்லாமல் பக்குவம் இல்லாமல் ஓடுவதோ,சாடுவதொவேண்டாம்.

 33. மடையா,மற்றும் நாகராச்.அவர்களுக்கு! எனது கருத்தை அழிக்காதே.2000இல்திருவள்ளுவர் ஏன் எழுதினார்?பிறப்பொக்கும்…எல்லாஉயிர்க்கும் செய்தொழில்வேற்றுமையான்.அதன்பின் அல்லது முன் பண்டைதமிழகத்தின் ஐவகைநிலமும்,தொழிலும் ஏன்?உண்டானது!எதனால ஒருநிலத்தில்,மொழியில்சேர,சோழ,பாண்டிஆண்டானர்?அதன்பின்யார்யார் படையெடுப்புக்கெல்லாம் ஆளானாய்?அதன்பின் ஐரொப்பிய,ஆங்கிலாஆதிக்கத்திற்க்கு எப்படிஉட்பட்டாய்?அதன்பின் ராசாசியின் குலத்தொழிலில்கொள்கைபலதிராவிடர்களெதிர்த்தபோது எங்கேபோனாய்?பின் கருனாவும்,எம்சிஆரும்மாறிமாறி தேர்தலுக்காகபிரிக்கும்போது எங்கேபோனாய்?இன்றுபல்வேறுகட்சிகள் உண்டானபின்பும் எதனால் எங்கேபோனாய்???கிராமப்புரதில் போய்பார்.நகரத்தில் அல்ல.யார்?ஏன் அதைவிடாப்பிடியாக செய்கிறார்கள்?உயிரோடு+ரத்தத்தொடுகலந்தது சாதி+மதம் நீ சந்தைக்கு புதியவனோ???

  • சாதி எங்கு இருந்து வந்தது என்பது பேசுபொருள் இல்லை

   //தன் சாதி தொழிலாக இருந்தாலும் அதில்தன் முழுதிறனையும் காட்டி வளர்ச்சி அடைதல்///

   ///என் சாதி தொழில் மலம் அள்ளுவது செத்த மாட்டை தூக்கி செல்வது இழவு செய்தி சொல்வது செத்தவன் வீட்டில் மேளம் அடிப்பது மற்றும் சுடுகாட்டில் பிணம் எரிப்பது………. இதில் முழு திறமையையும் காட்டி வளர்ச்சி அடைவது எப்படி?????????//

   சாதி தொழிலாக இருந்தாலும் அதில் தாங்கள் தானே முழு திறனையும் காட்ட சொன்னீர்கள்

   பின்பு ///யார் நிர்ப்பந்தித்தார்? நானா?// என்ற கேள்வி வேறு

   ஒரு வேலை சிறுவர்மலரில் வருவது போல் அவன் அந்தநிலத்தில் மிக கடுமையாக உழைத்தான் பெரும் செல்வந்தன் ஆனான் அப்பறம் ஊருக்கு பல தான தர்மங்கள் செய்தான் அப்படின்னு வருமே
   அந்த மாதிரி எதாவது சொல்ல வரீங்களா????

 34. ///என் சாதி தொழில் மலம் அள்ளுவது செத்த மாட்டை தூக்கி செல்வது இழவு செய்தி சொல்வது செத்தவன் வீட்டில் மேளம் அடிப்பது மற்றும் சுடுகாட்டில் பிணம் எரிப்பது………. இதில் முழு திறமையையும் காட்டி வளர்ச்சி அடைவது எப்படி?????????நாகராச் மேல் குறிப்பிட்ட உமது தொழிலை சரியாக செய்யவில்லை.இதனால் நமது நாட்டில் பிலேக்,சிக்கன் குனியா,தற்போது டெங்குகாய்ச்சல் சரியானசுத்தம் இல்லை,பராமறிப்பு இல்லை.அதனால் சிங்காரச்சென்னையில் சிங்கப்பூர்காரன் குப்பையல்ல ஒப்பந்தமாம்.மேலைநாடுகளில்மலத்தைவேக்கம்பம்ப் மூலமாகஎடுத்து கரும்புபயிரிட அடியுரமாகபயன்ப்டுத்துகிறார்களாம்.இனி அல்லிமுடிந்தால்விற்க்கவும்.மாடு கேரளாவில் நல்லகிராக்கி விற்க்கவும்,செத்தமாட்டைபிதைத்து அதனெலும்ம்புகளைசேகரித்து விற்க்கலாம் தரகர் உண்டு,மேளம் அடிப்பதில் சற்று திறனிருந்தால் ட்ரம்சு அடிக்கலாம் பலகச்சேரி,டிவிசோக்களுக்கு பகுதிநேர ஆள்தேவை.பிணம் பாடையில்தூக்குவதில்லைடாட்டாவின் சிறியட்ரக்கில் தூக்குகிறார்கள்.சொந்தவண்டிவைத்துக்கொள்ளவும்.பிணத்தைஎலக்ரிக்மயானத்திற்க்குகொடுத்தால் சாம்பல்தருவார்கள்.மீண்டும் உப்புநிலத்திற்க்கு நல்லசாம்பல்சத்து.விசாரித்துவிற்க்கவும்.குப்பைகளைபிரித்து எடுத்துரிசைக்கிளிங்முறையில்கரன்ட்தயாரிக்கிறார்கள்.முதல்வருக்கு சொல்லவும்.ராம்விலாசபசுவான்,திருமா,அமீர்கான் போன்றோர் நீங்கள் செய்வத்ற்க்கு எதிர்ப்புதெரிவிப்பதால் உங்களுக்கு வசதியாக புதிய தொழில்நுட்ப கருவிகள் வந்துள்ளது.இது சொந்த தொழிலா?கர்ப்பரெசன் தொழிலா?அல்லது குடும்பமா செய்ரிங்களா? வாழ்க./நன்றாசெயுங்க.

  • அப்ப சாதி தொழில செய்ரவன் கடைசி வரை அதாவது மனித சமுதாயம் உள்ள வரை சாதி தொழில் தான் செய்ய வேண்டும் அதில் தான் தன் முழு திறனையும் செழுத்த வேண்டும் (மற்ற தொழில் மேல் ஆசை இருந்தாலும் ,திறமை இருந்தாலும் )
   நீங்கள் மூன்னாடி சொன்னதை மனதில் வெய்த்து பதில் சொல்ல வேண்டும்

   ///சாதி தொழிலாக இருந்தாலும் அதில் தாங்கள் தானே முழு திறனையும் காட்ட சொன்னீர்கள்

   பின்பு ///யார் நிர்ப்பந்தித்தார்? நானா?// என்ற கேள்வி வேறு////

 35. //மனித இனத்தில் என்ன? கலப்பு வேண்டிக்கிடக்கு? உண்மையான,தூயகாதல்,இருவருக்கும் சமுதாயத்தில் தனக்குப்பின் நல்ல குடிமக்களை உருவாக்கும்,படிப்பு,நேர்மையான ஊதியம் இருந்தால் தாராளமாக நீங்கள் விரும்பியவரை கட்டி வாழ்க்கை நடத்துங்கள்.கண்டபடி சினிமா பார்த்துவிட்டு கதாநாயகன்,நாயகி மாதிரி கள்ள புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு சிறிய வயதிலே?நாங்களும் வாழ்ந்து காட்டுவோம் என்ற சிறுதுணிவு கூட இல்லாமல் பக்குவம் இல்லாமல் ஓடுவதோ,சாடுவதொவேண்டாம்.//

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க