privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 23/04/2013

ஒரு வரிச் செய்திகள் – 23/04/2013

-

செய்தி: தமிழக கோவிலிலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திலிருந்து மீட்பதில் இழுபறி நிலவுகிறது.

நீதி: அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருக்கும் இந்திய இறையாண்மை குறித்து இந்த இழுபறியெல்லாம் இல்லவே இல்லை.

_______

செய்தி: ஐதராபாத் நிஜாம் வைத்திருந்த, 34 கேரட் எடையுள்ள, இளம் சிவப்பு நிற வைரம், நியூயார்க்கில் 220 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

நீதி: வைரத்தை நிஜாம் வைத்திருந்தார். நிஜாமை யார் வைத்திருந்தார்கள்?

_______

செய்தி: இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துள்ள, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, யாழ்ப்பாண பகுதியில், மக்களை மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல், ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் இலங்கை குறித்த மனித உரிமை மீறல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதி: இனி டக்ளஸானந்தாவெல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளாக அறியப்படுவார்கள் என்பது திகிலாக இருக்கிறது.

_______

செய்தி: தாம்பரம் – ஆந்திராவில் இருந்து, கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த, 229 மாடுகளை சமூக ஆர்வலர்கள் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதி: மாட்டை வளர்க்க முடியாமல் விவசாயி விற்கிறான். மலிவான இறைச்சி என்பதால் தொழிலாளி உண்கிறான். இதில் தயிர் சாத அம்பிகளுக்கு ஏன் பொறாமை?

______

செய்தி: பாகிஸ்தானுக்கு வேவு பார்த்தவருக்கு 7 ஆண்டு சிறை சரியானதே: சுப்ரீம் கோர்ட்

நீதி: அமெரிக்காவிற்காக வேவும், வேலையும் பார்க்கும் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வகையறாக்களுக்கு எத்தனை ஆண்டு சிறை வழங்குவீர்கள், நீதிபதி அவர்களே?

______

செய்தி: அடுத்த மக்களவைத் தேர்தலின்போது மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய அளவில் மாற்று அணியொன்றை அமைக்க முயற்சி செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

நீதி: வுடுங்க பாஸ், மாநிலக் கட்சி, மதச்சார்பின்மை, தேசியம், மாற்று அணி, ஊழல் ஒழிப்புன்னு குலுக்கிப் போட்டு கல்லாவுக்கு பொருத்தமா கூட்டணி வைக்கிறது நமக்கு ஒண்ணும் புதுசில்லையே?

______

செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதி: ஒண்ணும் அவசரமில்லை யுவர் ஆனர், எப்படியும் தண்ணீர் வரப்போவதில்லை, வழக்காவது ஆண்டுக்கணக்கில் நடக்கட்டும், பிழைத்துப் போங்கள்!

______

செய்தி: இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களும் தில்லியில் பிறந்த நாள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டது இப்போது தெரிய வந்துள்ளது.

நீதி: நாடக இடைவெளியில் குளிர்பானம் குடிக்கக் கூடாதா?

______

செய்தி:   பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. கல்வீச்சில் 38 பஸ்கள் சேதம் அடைந்தன.

நீதி: தேர்தலுக்கு தயாராக கலவர ஒத்திகை பார்க்கிறார்களாம்!

______

செய்தி: காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “கட்சிக்கு எதிரான விமர்சனங்களை கண்டும், காணாமலும் விட்டுவிடாதீர்கள். அதற்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களுடைய எதிர்மறை பிரசாரங்களை முறியடியுங்கள்” என்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டார்.

நீதி: ஆமாம், ஊழல் குறித்த குரல்களை இப்படித்தான் மொத்தமாக சவுண்டோடு ஊளையிட்டு முறியடிக்க வேண்டும்!

______

செய்தி: மீனவர்கள் விஷயத்தில் கட்டுப்பாட்டுடனும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ளுமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொண்டு இருப்பதாக பாராளுமன்றத்தில் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார்.

நீதி: இதன்படி இனி வாரத்துக்கு 100 மீனவர்கள் மட்டும் தாக்கப்படுவார்கள். இந்திய அரசின் கோரிக்கையை ஒட்டி தாக்குதலில் 50% தள்ளுபடி!

______

செய்தி: ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் வாங்குவதையும் கடுமையான குற்றமாக மாற்றும் தேர்தல் கமிஷன் திட்டத்திற்கு 18 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

நீதி: கட்சிகளுக்கு கமிஷனாகவும், நன்கொடையாகவும் வெட்டும் முதலாளிகளுக்கு கடும் தண்டனை வழங்காத வரை தேர்தல் கமிஷனின் இந்த திட்டமெல்லாம் பட்டம் கட்டி பறக்க விடத்தான் லாயக்கு!

______

செய்தி: அரியானா மாநிலத்தில் நில மோசடி: ராபர்ட் வதேரா தவறு எதுவும் செய்யவில்லை 3 நபர் கமிட்டி அறிக்கை !

நீதி: மாமாவை ஃபோபார்சிலிருந்து விடுவித்திருக்கும் போது மருமகனை ரியல் எஸ்டேட்டிலிருந்து விடுவிப்பதெல்லாம் ஒரு சாதனையா என்ன?

______

செய்தி: உலகிலேயே பெரிய பணக்காரர்கள் பட்டியலை இங்கிலாந்தின் ‘சண்டே டைம்ஸ்’ ஏடு தொகுத்து உள்ளது. இந்த பட்டியலில் பிரபல இந்திய தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் கூட்டாக உலகின் 20–வது பெரிய பணக்காரர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நீதி: 2020-ல் இந்தியா வல்லரசு ஆகுமென்ற முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் கனவு பலித்துவிடும் போலிருக்கிறதே!

______

செய்தி: கழுகுமலையில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

நீதி: முழுநாளில் முக்கால் நாள் மின்வெட்டு என்ற நிலையில் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு வெட்டப்படும் ஊழல் பணத்தின் ரேட்டு மட்டும் குறையாதா?

______

செய்தி: சர்வதேச அளவில், விமான போக்குவரத்துச் சேவையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் எனவும் அரசின் வெளிப்படையான விமான கொள்கை காரணமாக விமான போக்குவரத்து துறை வளர்ச்சி பெற்று வருகிறது என்றும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்தார்.

நீதி: இதனால் ‘வட போச்சே’ என்று கிங் ஃபிஷர் மல்லையா வருத்தப்பட மாட்டார். வடையை கடனாக கொடுத்தது அரசுத்துறை வங்கிகள்!

______

செய்தி: “முதல்வர் பதவியில் நீடிக்க வைப்பதாக கூறி, அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட, பெரும்பாலான, பா.ஜ., தலைவர்கள் எடியூரப்பாவிடம் கோடிக்கணக்கான பணம் பெற்றுள்ளனர், இதற்கு ஆதாரங்கள் உள்ளன” என, கர்நாடக ஜனதா கட்சியான – கே.ஜே.பி.யின் பிரச்சாரக்குழு தலைவர், தனஞ்செயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதி: மற்ற கட்சிகளில் கவுன்சிலர், எம்.எல்.ஏவுக்குத்தான் ரேட் என்றால் பாஜகவில் முதலமைச்சருக்கே ரேட் வைத்திருக்கிறார்கள். ஊழலில் கூட சமத்துவம்!

______

செய்தி: வீணாக அவதூறு பரப்புவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். கருணாநிதி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என சட்டசபையில் முதல்வர் ‌ஜெயலலிதா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

நீதி: அவதூறு வழக்குகளை அரசிடம் உள்ள மக்கள் பணத்தில்தான் போடுகிறார் – அந்த வகையில் ஜெயலலிதாவின் திமிருக்கு ஸ்பான்சர் தமிழக மக்கள்தான் !

______

செய்தி: “இந்தியாவில் உள்ள 43 சதவீதம் இளைஞர் சக்தியை, சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால், இந்தியா வல்லரசு நாடாக உருவாகியிருக்கும்” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

நீதி: அதாவது காதல், கலப்பு மணம், சாதி ஒழிப்பு என்று இளைஞர்கள் சீரழிந்து போனதால்தான் வல்லரசு ஆகவில்லையாம்!

______

செய்தி: முதல்வர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று மதியம் திடீர் என சந்தித்து பேசினார்; சந்திப்பு, 25 நிமிடங்கள் நடந்தது. தேசிய அளவில், மூன்றாவது அணி அமைப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதி: இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட ஆரம்பித்த மார்க்சிஸ்ட் கட்சி அம்பிகள் இன்னும் நிறுத்தவில்லையாம்!

______

செய்தி: சென்னை  மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில், இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை ஒரு கோடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது. நேற்று வரை 94 லட்சம் இட்லிகள் விற்று தீர்ந்துள்ளன.

நீதி: “எட்டு கோடி தமிழர்களுக்கு ஒரு கோடி இட்லிகளை மலிவு விலையில் வழங்கிய கோடான கோடி மக்களின் இதய தெய்வம், கோடீஸ்வரர்களின் இனிய தெய்வம், புரட்சித் தலைவி” என்ற பிளக்ஸ் பேனர் கோடிக்கணக்கில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

______