Monday, March 27, 2023
முகப்புஉலகம்அமெரிக்காஎண்ணித் தீராத பணம் ! சவுதி சின்ன ஷேக்கின் சினம் !!

எண்ணித் தீராத பணம் ! சவுதி சின்ன ஷேக்கின் சினம் !!

-

வ்வொரு ஆண்டும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை. நம்மூர் கோவில் கொடை முடிந்து நடக்கும் ஆலமரத்தடி பஞ்சாயத்து கூட்டத்தில் புரவலர்கள் பெயர் வாசிப்பது போன்றது இந்த பத்திரிகையின் பட்டியல். இதில் இடம் பிடிக்கவில்லை என்றாலும், இல்லை கடந்த ஆண்டை விட ரேங்க் பட்டியல் இறங்கினாலும் அந்த பணக்காரர்களுக்கு தூக்கம் மட்டுமல்ல, கௌரவமும் போய்விடும்.

சவுதி இளவரசர்
சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால்

உலகெங்கும் பல கோடி மக்கள் ஏழையினும் ஏழையாய் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கும் காலத்தில் அந்த ஏழ்மையை உருவாக்கிய இந்த ஏகாம்பரர்கள் தமது சொத்துக் கணக்கை வைத்து கவுரவம் பார்ப்பது ஆபாசமானது.

இந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் தன் சொத்து மதிப்பு $20 பில்லியன் (ரூ 1.16 லட்சம் கோடி) என்று குறிப்பிட்டிருப்பது தவறானது, வேண்டுமென்றே மத்திய கிழக்கில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பை ஃபோர்ப்ஸ் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுதி அரேபிய இளவரசர் அல்வாலீத் பின் தலால். அவர் மன்னர் அப்துல்லாவின் மருமகனும் சவுதி அரச பரம்பரையை உருவாக்கியவரின் பேரனும் ஆவார்.

நம்மூரில் சொத்துக்களையும் வருமானத்தையும் குறைத்துக் காண்பித்து கருப்புப் பணம் மூலம் வருமான வரியிலிருந்து தப்பி வரும் முதலாளிகளோடு இதை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நமது நாடு போலி ஜனநாயகம் என்பதால் இங்கே மன்னராட்சி என்பது திருட்டுத்தனமாகவே நடைபெறும். மாறாக சவுதி என்பது அப்பட்டமான சர்வாதிகார மன்னராட்சி என்பதால் அங்கே சொத்துக் கணக்கு என்பதுதான் அதிகாரத்தின் அளவு கோல். அந்தக் காலத்தில் ஆண்டான்கள் அடிமைகளின் எண்ணிக்கையை வைத்து பெருமை பேசியது போல ஷேக்குகள் பில்லியன் கணக்கில் டாலரை முன்வைத்து பெருமையை பேச வைக்கிறார்கள்.

ஃபோர்ப்ஸ் கணக்கிட்டதை விட தனது சொத்து மதிப்பு $9.6 பில்லியன் (ரூ 58,000 கோடி) அதிகம் என்கிறார் இளவரசர். உலகப் பணக்காரர்கள் வரிசையில் அவரை 26-வது இடத்தில் வரிசைப்படுத்தியது மோசடியானது என்கிறார். அவருக்கு வங்கி-நிதி நிறுவனம் சிட்டி குரூப், ஊடக முதலாளி முர்டோச்சின் நியூஸ் கார்ப், ஐ போன் புகழ் ஆப்பிள் ஆகியவற்றில் பெரும் அளவிலான பங்குகள் உள்ளனவாம். நியூயார்க்கில் உள்ள பிளாசா ஹோட்டல், லண்டனில் உள்ள சவாய் ஹோட்டல், பாரிசில் உள்ள ஜார்ஜ் V ஹோட்டல் ஆகியவற்றிலும் அவருக்கு சொத்துரிமை இருக்கிறதாம்.

கிறித்தவ அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இவ்வளவு பணத்தை முதலீடு செய்வதற்கு அல்லா குர் ஆனின் எந்த அத்தியாயத்தில் அனுமதி தந்திருக்கிறார்? ஈராக்கிலும், ஆஃப்கானிலும், பாக்கிலும் அப்பாவி முசுலீம்களை கொன்று குவிக்கும் ஏகாதிபத்தியங்களின் நிறுவனங்களில்தான் சவுதி ஷேக்குகள் முதலீடு செய்து வட்டி பெறுகிறார்கள். அவையெல்லாம் ஏழை முசுலீம்களைக் கொன்று வரும் இரத்தப்பணம் என்பது ஷேக்குகளுக்கு பொருந்தாது போலும். ஒருவேளை மெக்காவில் இருக்கும் அல்லாவே சவுதி ஷேக்குகள் கட்டுப்பாட்டில்தான் கைதியாக இருக்கிறாரோ என்னமோ?

தெற்காசிய தொழிலாளர்கள்
சவுதியில் வேலை செய்யும் தெற்காசிய தொழிலாளர்கள்

பாசிசமும், கோமாளித்தனமும், ஆடம்பரமும் கலந்து உருவான இந்த சவுதி இளவரசர் போட்ட வழக்கை சென்சேஷனாக மாற்றி ஆதாயம் பார்க்கிறதுஃபோர்ப்ஸ் பத்திரிகை. அதன் பொருட்டும், தனது மதிப்பீடு எப்போதும் தவறானதில்லை, கணக்கு சரிதான் என்று சாதிக்கிறது. சவுதி அரேபிய அரச பரம்பரையினரின் சொத்து விபரங்கள் குழப்படியாக இருப்பதாக மார்ச் 25 தேதியிட்ட இதழில் சிறப்புக் கட்டுரை எழுதியிருக்கிறது. உலகெங்கும் சொத்துக்களை குவித்துள்ள சவுதி ஷேக்குகள் தமது சொத்து விவரங்களை சரியாக வைத்திருக்கவில்லையோ என்னவோ! இத்தகைய பணக்காரர்களின் ஆசை நாயகிகளுக்கும் கணக்கில்லை, அடுக்கு மாளிகைகளுக்கும் கணக்கில்லை என்றால் ஃபோர்ப்ஸ் பத்திரிகை என்ன செய்யும்?

மார்பிளால் இழைக்கப்பட்ட ரியாதில் உள்ள 420 அறைகள் கொண்ட இளவரசர் அல்வாலீத் பின்தலாலின் மாளிகை, அவருக்குச் சொந்தமான அரியணை பொருத்தப்பட்ட போயிங் 747 ஜெட் விமானம், ரியாதுக்கு அருகில் 5 வீடுகள், 5 செயற்கை ஏரிகள், ஒரு மினி கிராண்ட் கேன்யன் இவற்றைக் கொண்ட 120 ஏக்கர் பரப்பிலான சொகுசு வாசஸ்தலம் போன்ற இளவரசர் கவலைப்படாத வஸ்துக்களையெல்லாம் கணக்கில் கொண்டுதான் சொத்துக் கணக்கைப் பற்றி விவரித்திருப்பதாக முன்மொழிகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இதே சவுதி அரேபியாவில் பாலைவன வெயிலில் உழைத்தும், பரிதாபமான கூடாரங்களில் மந்தைகளைப் போல வாழ்ந்தும் காலம் தள்ளும் தெற்காசிய தொழிலாளிகளும் முசுலீம், சவுதி இளவரசரும் முசுலீம் என்றால் நாம் ஏன் அல்லாவை நம்ப வேண்டும்?

ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆசிரியர் ராண்டால் லேன், கட்டுரையை எழுதிய கெர்ரி டோலன், கட்டுரைக்கு கூடுதல் விபரங்கள் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்த பிரான்சின் மெக்கென்னா ஆகியோர் மீது அல்வாலீத் பின்தலால் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை நியூயார்க்கில் இருந்து வெளியானாலும், லண்டன் உயர் நீதிமன்றத்தில் உயர் ‘புத்திசாலி’த்தனமாக வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுதி இளவரசர். அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தால், தகவல் தவறானது என்றும் தவறு என்று தெரிந்தே அவதூறு செய்வதற்காக வெளியிடப்பட்டது என்றும் குற்றம் சாட்டுபவர் நிரூபிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து சட்டப்படி தகவல் மானநஷ்டம் ஏற்படுத்தும்படியானது என்று மட்டும் நிரூபித்தால் போதும், குற்றம் சாட்டப்பட்டவர்தான் தனக்கு தவறான நோக்கம் இல்லை என்று நிரூபிக்க வேண்டும்.

ஹாலிவுட் படங்களில் காமடி பணக்காரர்களாக வரும் சவுதி ஷேக்குகள் இப்படியெல்லாம் யோசித்து அமெரிக்காவை விட்டு இங்கிலாந்தில் வழக்கு போடுமளவு அறிவாளிகளோ, இல்லை ஆவரேஜான பேர்வழிகளோ இல்லை. ஒரு வேளை தான் யோசிப்பதற்கு கூட ஏதாவது இந்திய அம்பிகளை வாடகைக்கு அமர்த்தி வைலைக்கு வைத்திருக்கிறாரோ சவுதி இளவரசர்?

தனது சொத்து மதிப்பை குறைத்து மதிப்பிட்டதால் மானம் போய் விட்டதாக புலம்பும் இந்த ஷேக்கின் அரசுதான் சவுதி அரேபிய குடும்பங்களில் வீட்டு வேலை செய்யப் போகும் இந்தியப் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலை செய்யப் போகும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் கொடுக்க வேண்டும், பாதுகாப்புக்காக தூதரகத்தில் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை இந்திய அரசு விதித்தது. அதை அடுத்து சவுதி அரேபிய குடும்பங்கள் இந்தியப் பெண்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தி விட்டன. இப்போது இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் சவுதி ஷேக்குகளின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டதால் இந்திய பெண்களை மீண்டும் வேலைக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறது சவுதி அரேபியா. வீட்டு வேலை செய்ய பெண் பணியாளர்களை அனுப்பும் மற்ற மூன்று நாடுகளுடனும் இதே போன்ற ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் போடப்படும் என்கிறது சவுதி அரசு.

அப்படி வரும் ரிசானா போன்ற சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியும், இல்லை வேலை சரியாக செய்யவில்லை என்று கொலையும் செய்வது இந்த அமெரிக்க அடிமை ஷேக்குகளின் வாடிக்கை.

தம் நாட்டு குடும்பங்களுக்காக உழைக்கும் பெண்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உரிமைகளையும் மறுப்பது சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலாலுக்கு மான நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் இஸ்லாமிய, எண்ணெய் வளத்தில் மிதக்கும் ஷேக்குகளின் ஆபாசமான நியாயம்.

இத்தகைய ஷேக்குகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களை அரேபிய பாலைவனத்தில் குடையில்லாமல் ஒட்டகம் மேய்க்கச் செய்து நல்வழிப்படுத்தும் வேலையினை அல்லா செய்ய மாட்டார். தொழிலாளிகள் செய்வார்கள். அதுவரையிலும் ஷேக்குகள் ஆட்டம் போடலாம்.

_________________________________________
– அப்துல்
_________________________________________

மேலும் படிக்க

 1. உண்மையான ஆய்வு….பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரையில் நீங்கள் இருந்தாலும் தண்ணீரை வீண்விரயம் செய்யாதீர்கள் என்றூ கூறிய நபிகளார் வாழ்ந்து காட்டிய முறைமைக்கு மாறு செய்யும் இத்தகைய அடாவடி பேக்குகளை நிச்சயம் வெயிலில் காயும்…எம் தொழிளாலர்களின் ரத்தம் இறக்கி வைக்கும் …..பட்டோடாபம்,பேராசை எல்லாம் அழிவின் துவக்கம் தான்…..

 2. ஒருவேளை மெக்காவில் இருக்கும் அல்லாவே சவுதி ஷேக்குகள் கட்டுப்பாட்டில்தான் கைதியாக இருக்கிறாரோ என்னமோ?

  இது மிகவும் அதிகம்…எழுதும்போது கவனமாக இருக்க வேண்டும். வினவு அவர்களே……
  உங்கள் கட்டுரை தனிப்பட்ட மனிதரை பற்றி இருந்தால் எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை.
  மதத்தை தேவை இல்லாமல் கொண்டு வர வேண்டாம்

 3. I think this article author is not muslim. But vinavu given false name as abdul to make strong in this article. I like to remember vinavu that in saudi arabia your communism can not be lauched.

  When compare to indian salary, saudi salary is much better, so that only people from india are working hard in saudi. If india provide better salary, then why people seeking other country.

  I request vinavu to clean our country then we will look others.

  Important advice to vinavu, please dont advice or encourage the people who are working in saudi for implementing communist. If saudi government know this, then directly death sentence only. Our india people our working here to get money for making their family wealth so dont spoil their dreams.

 4. தனி நபர்களின் செயல்களை சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதற்எதற்கோ முடிசிப்போட்டு மனநோயாளிப்போல் வினவு பதிவிட்டிருக்கிறது. இந்த மனநோய் சமீபகாலமாக வினவுக்கு இருப்பதை கண்டு எந்த பாயும் முன்னை போல வினவு பக்கம் வர்றதில்லை. யாருமே இல்லாத கடைல யாருக்காக டீ ஆத்துராங்கன்னு அவங்களுக்கே தெரியலை.

 5. ஒருவேளை மெக்காவில் இருக்கும் அல்லாவே சவுதி ஷேக்குகள் கட்டுப்பாட்டில்தான் கைதியாக இருக்கிறாரோ என்னமோ? – உண்மையான வரிகள். சவுதியில் வேலை பார்த்துவருபவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். எவளவோ முஸ்லீம்கள் மிகுந்த நம்பிக்கையோடு தவறாது தொழுகை நடத்தி வந்தாலும் புனித யாத்திரிகளுக்கு அவர்கள் (சவூதி) அல்லாத காரணத்தால் பின் தள்ளப்படுகின்றனர். அப்துல் ரொம்பவே குமுரியிருக்கிறார். ரியாத்திளிருந்து மற்ற நகரங்களுக்கு செல்லும் பயணிகளில் சவுதி ஆட்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு. வெளிநாட்டவருக்கு கடைசி வண்டி/விமானமோ வழங்கப்படுவது அவருக்கு தெரியாதது போலும்.

  • Mr. Hassan
   if Same thing happen in tamil nadu means what your people do boss?
   Will you give seat to others and then you will come last?
   This is just word speech not a practical one.

   It is their country so they are giving preference to their people boss. understand that first.
   We people are just went there not as guest but labour.

   • Comman Man தொர பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கும் போல என்னமா யோசிக்குது.

   • In Tamil Nadu we always give preference to guests. FYI those who are going to Mecca are guests for Saudi Arabia, not labourers. Do not support Saudi blindly just because that you are a muslim.

    • Brother Uncommon Man,
     U just come to saudi during haj time, to see how the people are treated. All the people will call them as Haji. Not like our people that ai aggai po or dai iggai po, etc…

     More over I’m not supporting them for all,

     you give good joke as “tamil nadu we always give preference to guests” then why our people bet srilankan (Singalam) people. They also one type of guest only. Now don’t think that I’m supporting srilanka. I’m just saying example.

     Another example for Uncomman Man, during the festival time in CMBT bus stop can you offer a seat to old people or other… Ultimate answer is no. Think first

     The concept of this article also happening in India also, So my point is we have see ours first and then look back others country.

   • //We people are just went there not as guest but labour.// துற என்னமா யோசிக்கிரீங்க… அல்லா(உங்கள் நம்பிக்கைப்படி) மனித குலம் முழுமைக்கும் படைத்த பொதுவான (எண்ணை வளம்மிக்க மண்)ஏன் மொத்த பூமிபரப்பும் சிலருக்கு மட்டுமே சொந்தமாகி போனதும் பலர் அதில் வேர்வை சிந்தி உழைக்க மட்டுமே வேண்டிய நிலை எப்படி இறைவனை தாண்டி உறுவாகியது என்பதையாவது கொஞ்சம் எப்பவாவது யோசிச்சு பார்த்திருக்கீங்களா காமெண்மேன்

  • ஹசன் அவர்களுக்கு :
   கண்டிப்பாக நான் குமுறவில்லை . உண்மையைதான் கூறி இருக்கின்றேன்

 6. அல்லாஹ் முஹம்மது நபி[ஸல்] அவர்கள் பிறந்த மண்ணை பெட்ரோல் வளமாக்கி ,இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை போன்ற நாடுகளில் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு சவூதி அரபியாவில் வேலை கிடைக்க செய்து அந்த மக்களின் வாழ்வை முன்னேற்றம் அடைய செய்துள்ளான்.படிக்காத மக்களையும் இன்று செல்வா சீமான்களாக்கி அவர்களது பிள்ளைகளை படிக்க வைத்து அதனால் உயர்வு அடைய செய்துள்ளான் சவுதிகள் ஆடம்பரத்தில் போட்டியிட்டாலும் சோமாலிய பாலஸ்தின் வங்காள தேஷ் இலங்கள் முஸ்லிம்களுக்கு அள்ளி கொடுத்தே வருகின்றனர்.
  கம்யுநிசத்தில் உள்ள தலைவர்கள் உழைப்பாளிகளின் பெருமைகளை பேசி அவர்கள் உழைக்காமல் உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சினார்கள் மார்க்சோ லெனினோ ஸ்டாலினோ கார சேவோ ,இனிப்பு சேவோ உழைத்ததாக வரலாறு காணோம் .முகம்மது அன்பி ஸல் அவர்கள் போரில் மக்களோடு நின்று போரிட்டார்கள் .தனக்கென்று சொத்துக்களை சேர்க்காமல் மக்களுக்காக சேர்த்துவைத்தார்கள்.
  இறைவன் மனிதர்களை வர்க்க பெதங்களுடனே படைத்துள்ளான் இல்லையெனில் உலகம் சுழலாது என்பது இறைவனுக்கு தெரியும் .ரசிய சோசியலிஸ்ட்களுக்கும் இப்போது தெரியும்

  • ஏன் , உன் அல்லா எல்லா முஸ்லிம் நாட்டுலையும் பெட்ரோல் வளமாக்கி வச்சால் அவங்க ஏன் அங்க போறாங்க. அல்லாவிடம் சொல்லி ஏற்ப்பாடு செய்யலாமே !

   • Mr Aswim,

    please leave your comments or reply logically. In old days India is rich in gold so that many wars took place and British ruled us. As like your point in this situation we have to pray God to remove the gold from India so that we can free from war.

    We have no doubt that you may also say that, to develop tamil nadu we have to shift delhi to chennai.

    • Comman Man,
     //We have no doubt that you may also say that, to develop tamil nadu we have to shift delhi to chennai.// கண்ணுகளா, நீங்கதான் இப்படி பேசிக்கிட்டு திரியிறீங்க.திரும்பவும் இப்பு எழுதியதை படிக்கவும். நீங்க பேசுறதுல ஏதாவது லாஜிக் இருக்கா ? அல்லாதான் பெட்ரோல் வளத்தை அரேபியாவில் உண்டாக்கினார் என்றால் , மற்ற நாட்டு முஸ்லிம்களுக்கும் பெட்ரோல் வளத்தை உண்டாக்கி தரலாமே. அல்லா “குன்” என்றால் ஆகிவிட போகிறது. வர வர முஸ்லிம்களுக்கே அல்லா மேல நம்பிக்கை இல்லாம போச்சு !

     • Ashwin,

      If He (God) give all things to all people means, then no meaning yaar. Comparison should be there always.

      we would like to say to you that Allah has created people in different races, colors and having various abilities. While some of them are given certain gifts, others are deprived of these gifts and thus are disabled. This is the nature of life, according to the Divine Wisdom through which Allah governs everything.

      Tackling this important issue.

      In fact, man’s life is a full record of hardships and tribulations. In this sense, Allah says: “ We create man from a drop of thickened fluid to test him” (Al-Insaan:2) When man looks upon these tribulations and afflictions as being a test from Almighty Allah to see his true colors, he will come to know that there is a great Divine wisdom behind all these tests. This is surely an absolute fact, whether we know it or not.

  • //இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை போன்ற நாடுகளில் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு சவூதி அரபியாவில் வேலை கிடைக்க செய்து அந்த மக்களின் வாழ்வை முன்னேற்றம் அடைய செய்துள்ளான்.படிக்காத மக்களையும் இன்று செல்வா சீமான்களாக்கி அவர்களது பிள்ளைகளை படிக்க வைத்து அதனால் உயர்வு அடைய செய்துள்ளான் //

   அப்புடியா ?? அப்படியெனில் இனிமேல் அமரிக்க ஏகபதியம் மேற்குலக எதேச்சதிகாரம் என புலம்பாதீர். ஏனெனில் வலைகுடாவைவிட அதிக வருமானம் மற்றும் வாழ்க்கை சுழலை அவர்கள் அன்பவிக்க தருகிறார்கள்.

    • என்ன பிதற்றல் இது.

     “நான் உனக்கான உதியத்தை தருவேன் நீ இங்கு அனுபவிக்கும் உரிமைகளுக்கு உரிய வரியை செலுத்து.”

     இது தான் மேட்கேதேய மற்றும் அமெரிக்க தொழிலாளர் / அரசாங்க பங்கீடு முறை. 30 % அல்ல 300 % கொடுத்தாலும் நீங்கள் வளைகுடாவில் உங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியாது common Man . இது Al Quran அல்ல நீங்கள் வேண்டியவாறு அர்த்தம் கட்பிட்க. மனித உறவுகள் மற்றும் தனி மனித உரிமை சம்பந்தபட்டது.

     இருபினும் இந்த முறையிலும் தவறுகள் இருக்கிறது அண்ணல் அது அரேபிய வளைகுடாவை விட மோசம் இல்லை.

     • வளைகுடாவில் எனன் நீதியை பெற்றுக் கொள்ளமுடியாது என்று சொலல்வருகிரீர்கள்?

      • உங்களுக்கான வழக்கறிஞர் மற்றும் உங்களை போன்ற பாதிக்க பட்ட அல்லது குற்றம் சுமத்தப்பட்ட நபருக்காக நீதி வேண்டி போராடும் ஒரு இயக்கம் அல்லது ஒரு குழுவின் பிரசன்னம் நீதி மன்றத்தில் தங்கள் ஆய்வை அல்லது அநீத்திகேதிறான சாட்சியங்களை சமர்பிட்கும் உரிமை பற்றியது.

       • @ Kanthan
        You are thinking that saudi is democratic country. It is Kindom boss. We con’t expect the freedom as giving by democratic country. More over If you are obey their country rules then you will not get into trouble like seeking court, society organization.

        I agree with your point that some injustice are going on but we have to be alert with them always because we came here by knowing all the details.

   • kanthan ///அப்படியெனில் இனிமேல் அமரிக்க ஏகபதியம் மேற்குலக எதேச்சதிகாரம் என புலம்பாதீர். ஏனெனில் வலைகுடாவைவிட அதிக வருமானம் மற்றும் வாழ்க்கை சுழலை அவர்கள் அன்பவிக்க தருகிறார்கள்.///
    அரபுலகில் ஏழை இந்திய முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள் .மேலும் நெறிகெட்ட மேற்குலக வாழ்க்கை போலல்ல .

    • இங்கே கருத்துரைத்திருப்பது வெளிநாட்டு தொழிலாளர் பற்றியது. எதையும் சரியாக புரிந்து கொண்டு பேசுங்கள்.

     //.மேலும் நெறிகெட்ட மேற்குலக வாழ்க்கை போலல்ல .//

     அதனால் தான் மோர்ரோகோ முதல் ஹைதராபாத் வரை விபச்சார வலையமைப்பை விஸ்தரிக்க படுகிறதோ?? உங்கள் அரேபியா மாண்பை கப்பற்றிகொள்லவா அதர்த்காக பணம் வாரி இறைக்கப்படுகிறது??

    • முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் மலசியவில் , விபச்சாரம் சாதாரண விசயம். முழுமையாக விபச்சரதிர்க்கெனவே இருக்கும் படாம் ,பினடான் ஆகிய இந்தோனேசியா தீவுகள்.அவர்கள் வீட்டுலேயே தங்கி விபச்சாரம் செய்யலாம்.

     • செல்வந்தர்களுக்கு முந்திவிரித்தால் நேராக சொர்க்கம் செல்லலாம் என்ற உருவாக்கம் காரணமாக இருக்கலாம். பரவயில்லை குறைந்தபட்சம் அவர்கள் இங்காவது சொர்க்கம் காண்கிறார்களே.

  • S.ibrahim என்ன சொல்றீங்க மார்க்ஸ் உழைக்கவில்லையா…
   கொஞ்சம் வரலாறு படிங்க பாஸூ… அதே போல் போராடுவதிலும் மார்க்ஸ் சளைத்தவர் அல்ல நபியாவது ஒருமுறைதான் நாடு கடத்தப்பட்டார் மார்க்ஸ் உலக வரலாற்றுலேயே அதிக முறை நாடு கடத்தப் பட்டவர். மத்தபடி மார்க்ஸ் நபி ஒற்றுமையும் வேற்றுமையும் எனும் தலைப்பில் நாம் விவாதிப்பதாக இருந்தால் இருவரின் உழைப்பு,தியாகம்,வீரம், போர் குணம் இது குறித்தெல்லாம் நிறையா எழுதலாம் விவாதிக்கலாம் இறுதியில் மார்க்ஸ் கூடுதல் மதிப்பெண்ணுடன் மெரிட் மாணவனாக வென்றுவிடுவார்
   ஆனா அப்படி விவாதிப்பதர்க்கு முன்னாடி சுரண்டல் என்பதன் பொருள் புரிந்து வாருங்கள் காரணம் இங்கே நீங்கள்
   //கம்யுநிசத்தில் உள்ள தலைவர்கள் உழைப்பாளிகளின் பெருமைகளை பேசி அவர்கள் உழைக்காமல் உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சினார்கள்/// இப்படி எழுதியதில் இருந்து உங்கள் புரிதல் என்ன என்பது புரிகிறது கூடவே புல்லரிக்கிறது

  • இப்ராகிம், இஸ்லாமை பற்றி விமர்சிப்பவர்கள் , சராசரி முஸ்லிமை விட அதிகம் இஸ்லாமை அறிந்து வைத்துள்ளவர்கள். அதே போல் கம்மியுநிசத்தை விமர்சிக்க , அதிகம் வேண்டாம் அடிப்படையையாவது அறிந்து கொண்டு வரலாமே.

   • Ashwin///இஸ்லாமை பற்றி விமர்சிப்பவர்கள் , சராசரி முஸ்லிமை விட அதிகம் இஸ்லாமை அறிந்து வைத்துள்ளவர்கள். அதே போல் கம்மியுநிசத்தை விமர்சிக்க , அதிகம் வேண்டாம் அடிப்படையையாவது அறிந்து கொண்டு வரலாமே.////
    இஸ்லாமை பற்றி அதிகம் விமர்சிகப்படுவதற்கு அது அதிகமான மக்களால் பின்பற்றப்படுகிறது அதற்கு சாத்தியமாகவும் உள்ளது .இஸ்லாம் நடைமுறை சாத்தியமானதால் அதற்கு மாற்று கருத்து உள்ளவர்களால் அதிகம் படிக்கப்பட்டு விமர்சிக்கப் படுகிறது
    ஆனால் ஏட்டு சுரைக்கான கம்யுனிசம் கற்பனை இசம் .அது நடைமுறையில் படு குழியில் விழுந்து விட்டது .அதன் அடிப்படையை நாங்கள் தெரிந்தது போதும் .குறைந்த அளவில் இருக்கும் உங்களுக்குள் சாதி மதவேறுபாடு இல்லாமல் திருமணம் மற்றும் உறவுகள் வைத்துக் கொள்ளமுடியவில்லை .திருமணம் இல்லாமல் வாழ்ந்து காட்ட முடியவில்லை .
    உங்களளவில் சமத்துவமாக வாழமுடியவில்லை
    உங்களில் எத்தனை பேர் காரில் செல்லுகிறீர்கள் ? எத்தனையோ தொழிலாளிகள் செருப்பு இல்லாமல் நடக்குகிரார்கள்.அவர்களுக்கு கார் வாங்கி கொடுங்கள் .அல்லது நீங்களும் செருப்பு இல்லாமல் நடந்து செல்லுங்கள் .அதன் பிறகு அரபுலக ஷேக்குகளை பற்றி பேசுங்கள்

    • அறிவியலை அடிப்படையாக கொண்ட கம்மியுனிசம் கற்பனையாம், மலக்கு ,சைத்தான், அர்ஷ் , பாலாறு தேனாறு கொண்ட சொர்க்கம் என்று அவிழ்த்துவிடும் இஸ்லாம் உண்மையானதாம். உலகத்திலேயே காமெடியான மதம் இஸ்லாம் தான்.

     திரும்பவும் நீங்கள் ஒரு பையித்தியக்கார அராபிய அடிமை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டாம். கம்மியுநிசம்னா என்ன என்றாவது தெரிந்து கொள்ளவும்.

 7. வாழ்க்கை எனபது ஒவ்வொரு ஆத்மாக்களுக்கான சோதனை .
  ஏழைகளுக்கு தேர்வு கடுமையாக இருக்கும் ஆனால் குறைந்த மதிப்பெண் எடுத்தால் போதும் ஆனால் பணகாரர்களுக்கோ தேர்வு மிக எளிதாக இருக்கும் ஆனால் மிக அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். பாவம் இந்த ஷேக்கு பெயிலாகி என்ன பாடு படப்போகிராரோ ?

   • “முடிவு நிர்வாணம் (சகலதும் துறந்த நிலை) நோக்கம் அதை அடைவர்த்கான வழிமுறை. ”

    இப்படித்தான் அவர்கள் பதில் இருக்கும் தோழரே. மறுமொழி கூற முடியாது. இது தேவையற்ற ஒரு கேள்வி என்பது என் எண்ணம்.

    தேவைகள் அதிகம் உள்ள ஒரு காலகட்டத்தில் நாம் தேவைகள் அதிகம் உள்ள தொழிலார் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். நிர்வாணம் தேவையெனில் அதை செய்யவேண்டியவர்கள் இருப்பவர்கள் மட்டுமே. அன்றாடம்காட்சிகலான தொழிலாளர்கள் அல்ல.

   • //தேர்வின் முடிவு என்ன?//

    சொர்கமா இல்லை நரகமா என்பதை கண்டறிவது. உங்கள் பூலோக வாழ்க்கை அறுபது வருடம் தான் ஆனால் இறந்த பிறகு நிரந்தரமாக தாங்கும் இடம் தான் சொர்க்கம் அல்லது நரகம்

    //நோக்கம் என்ன?//
    நீங்கள் இறைவன் நடத்தும் சொர்க்கம் லாட்ஜில் தங்கும் தகுதி படைத்தவரா இல்லையா என்பதை உங்கள் தேர்வின் மூலம் இறைவன் அறிந்து கொள்வார் .

    • //நீங்கள் இறைவன் நடத்தும் சொர்க்கம் லாட்ஜில் தங்கும் தகுதி படைத்தவரா இல்லையா என்பதை உங்கள் தேர்வின் மூலம் இறைவன் அறிந்து கொள்வார் .//

     1) இறைவன் என்னும் நபர் யார்?? அவரின் தகுதிகள் என்ன? அவரை அல்லது அவனை சிபாரிசு செய்யும் உங்களுக்கு அவரால் அல்லது அவனால் நான் எமற்றப்பட்டால் அதர்த்காக நீங்கள் எனக்கு செய்யும் கைமாறு என்ன?

     2) உலகில் எல்லா உயர்களையும் அவனே படைத்தான் எனில் அதில் வெறும் 1% மட்டும் அடங்கிய மனித குளத்தில் மட்டும் ஏன் அவன் புகழ் பாட வேண்டும் என எதிர்பர்கிறான்?

     3) தான் படைத்ததில் மனிதன் மட்டுமே சிறந்த படைப்பு என அவன் விசுவசபடுவானெஆனல் ஏன் மனிதகுலத்தில் இருந்து மட்டும் தேவதுதர்கள்??

     4) அவன் படித்ததில் நாம் மட்டும் தான் சிறந்தவர்கள் எனில் கடவுள் என்னும் ஜந்துவின் வெற்றி புள்ளியியல் வெறும் 1% மட்டுமே!!!

     இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது அனால் என்னால் அதை தமிழில் தட்டச்சு செய்ய கடினமாக இருப்பதால் நீங்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் கூறுங்கள்.

     • Does Human Beings control animals or animals control humans?

      Humans are the controlling race of the Erath and thats why Gods appeal to them and thats why gods ask them not to show cruelty to animals and take care of them and also planet earth.

      Btw,devadhoodar is all fraud stuff,the older civilizations understood god better.

      • //Humans are the controlling race of the Erath and thats why Gods appeal to them and….//

       If that so called almighty trust all human beings then why we need police station, governments, Judicial system etc etc.

       Is there any basic point in your argument??

       • we need all those control systems because man has not understood that this planet is for all of us and fighting over it is useless.

        I said the idea of a god being appealing to humans not like gods appealing to a man.

        • So the mistake less almighty creator of all living being is once again proved to be full of error!!!!!! Otherwise he wont claim that human beings are best of his creation and wont appeal them to be the administer. AM I CORRECT

 8. உங்கள் கட்டுரையோடு ஒத்துப்போகும் என்னால், உமது “அல்லாவைப் பற்றிய கிண்டலோடு” ஒத்துப் போக முடியாது. நீங்கள் கடவுளை நம்பாதவராக இருக்கலாம் அதற்காக, உங்களுக்கு இருக்கும் மதம் மீதான வன்மத்தை தீர்த்துக்கொள்ள இந்த கட்டுரையை பயன்படுத்தி இருப்பது சுவையான உணவில் கல்லை கலந்து விட்டது மாதிரி முகம் சுளிக்க வைக்கிறது. அல்லாவை பற்றிய நக்கல் இல்லாமலும் இந்த கட்டுரை அருமையாகத்தான் இருந்திருக்கும்.

  ஒருவேளை அல்லாவின் மீது கல்லெறிந்தால் முஸ்லிம்களின் பின்னூட்டம் அதிகரிக்கும் சமீக காலமாக காற்று வாங்கும் வினவின் பின்னூட்ட பாக்ஸ் நிரம்பி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகும் என்ற சீப் பப்ளிசிட்டியா???

 9. அட அரிவு கெட்ட அப்துல்,

  அப்துல்லா என்பவன் சாராயம் குடித்தால் அதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் சம்பந்தம் இல்லை. ஆடம்பரத்தை ஆதரிக்காத இஸ்லாத்தில், பெயர் தாங்கி முஸ்லிம்கள் செய்யும் செயலுக்கு இஸ்லாம் பொறுப்பு அல்ல.

  • ரபிக் .
   தயவு செய்து நன்கு வாசித்துவிட்டு கமெண்ட் எழுதவும்.
   எனக்கும் அவருடைய கருத்தில் மாற்றம் இல்லை. ஆனால் தனிப்பட்ட மனிதரை பற்றி எழுதும்போது ஏன் தேவை இல்லாமல் மதத்தை இழுக்கிறார்.

 10. // ஒரு வேளை தான் யோசிப்பதற்கு கூட ஏதாவது இந்திய அம்பிகளை வாடகைக்கு அமர்த்தி வைலைக்கு வைத்திருக்கிறாரோ சவுதி இளவரசர்?//

  ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது, நம்ம அம்பிக்கு தான் மாட்டுக்கறி ஒதுக்காதே. ஒருவேளை சம்பளம் அதிகமாக கொடுக்கிறதா சொன்னால் மாட்டுக்கறி என்ன, மாடு கூட திங்க தயாராக இருப்பார்கள் நாம் அம்பிகள்

   • “மாட்டுக்கறி என்ன, மாட்டுச்சாணி கூட திங்க தயாராக இருப்பார்கள் நாம் அம்பிகள்” – இதை சொல்லவர்றார்ன்னு நினைக்கிறேன்.

    • மாட்டுச்சாணியைத்தான் மாடு என்கிறாரா.. அப்ப, மாட்டுக்கறி என்றால் என்ன..?!!!

    • மாட்டு சாணி திங்கறதுல என்ன பிரச்சனை. அதை தான் ஏற்கனவே நாங்க தின்னிட்டு இருக்கமே. இதுக்கு ஒருத்தன் துட்டு வேற கொடுத்தான்னா வாங்கி பாக்கெட்டுல போட்டு சந்தோஷமா போக வேண்டியது தான்.

 11. //இத்தகைய ஷேக்குகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களை அரேபிய பாலைவனத்தில் குடையில்லாமல் ஒட்டகம் மேய்க்கச் செய்து நல்வழிப்படுத்தும் வேலையினை அல்லா செய்ய மாட்டார்.//

  அப்படி ஒரு வேளை நடக்கும்போது அல்லாவாவது, ஆத்தாவாவது, எல்லாத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிடுவாங்க

 12. மன்னிக்கவும்,

  இந்த ஆக்கத்தை எழுதியவர் பெயரும் அப்துல் என்று உள்ளது.

 13. நன்றி வினவு ,கட்டுரைக்கு தொடர்பு இல்லாத பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்பீர்கள் ,சரியே .கட்டுரைக்கும் இஸ்லாமுக்கும் தொடர்பு இல்லாதவற்றை நீங்கள் எழுதியது சரியாகுமா?இஸ்லாம் ஆடம்பரத்தையும் வீண்விரயம் செய்வதையும் கடுமையாக எதிர்க்கிறது .அவ்வாறு இருக்க சவூதி இளவரசன் தவறுக்கு இஸ்லாத்தினை இழுத்தது என்ன பொருத்தம் ?
  பொதுவாகவே,மனித நேயம் பற்றி கவலை கொள்ளாத எந்த மனிதனுக்கு செல்வம் குவிந்தால்,அவனது இலக்கு காமமும் புகழுமே .அப்படி பார்க்கையில் நீங்கள் கூறும் இளவரசன் புகழில் மாயந்திருக்கிறான் .இதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
  லட்சகணக்கான மக்கள் பாலைவனத்தில் வியர்வையை விளைச்ச்சலாக்கி வாழுகையில் இவனுக்கு இந்த பெருமை தேவை இல்லை. சரியே ,ஆனால் அவனும் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்பது கம்யுனிசத்திலும் சாத்தியமில்லையே .எந்த கம்யுனிச கோமான் முஹம்மதுநபி[இறைவன் அமைதி நிலவ செய்வானாக ] மற்றும் உமர் [இறைவனின் ஏற்பு கிடைக்கட்டும்] ஆகியோர் போன்று ஆட்சியாளராகவும் மக்களோடு மக்களாக வாழ்ந்ததை ,காட்டவும் முடியுமா?

  • சவுதி அரேபியாவிற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமதில்லை எனும் உங்கள் கருத்து தவறானது, உண்மையில்லை. உலகெங்கும் பழமைவாத பிற்போக்கு வகாபிய இசுலாத்தை பணம் கொடுத்து ஸ்பான்சர் செய்பவர்கள் சவுதி ஷேக்குகள். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையும், பொருளாதார வாழ்க்கையும் ஏகாதிபத்தியங்களை சார்ந்து உள்ளது. அதைத்தான் கட்டுரை சொல்கிறது. வளைகுடாவில் உள்ள மக்களும், பிறநாட்டு தொழிலாளிகளும் இந்த கயவர்களை தூக்கி எறிவது இன்றைக்கு சாத்தியமில்லை என்பதால் என்றைக்கும் நடக்காது என்று பொருளில்லை. இந்த உலகில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும், புரட்சியையும் மக்கள்தான் செய்கிறார்கள். மதங்கள் அல்ல. மதக்கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு மக்கள் நலன் எனும் உண்மையை உணர்ந்தால் உங்களது பிரச்சினைகள் தீரும்.

   • ////சவுதி அரேபியாவிற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமதில்லை எனும் உங்கள் கருத்து தவறானது, உண்மையில்லை. ///
    நான் சவூதி இளவரசனின் குறிப்பிட்ட நடவடிக்கைக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்றுதான் கூறியுள்ளேன் .
    ////உலகெங்கும் பழமைவாத பிற்போக்கு வகாபிய இசுலாத்தை பணம் கொடுத்து ஸ்பான்சர் செய்பவர்கள் சவுதி ஷேக்குகள். ///
    பழமைவாதம் சரி என்றாலும் வகாபிய இஸ்லாம் என்று நான் அறிந்ததில்லை .நீங்கள் சொல்லுவது புதுமையாக இருக்கிறது
    நீங்கள் சொல்லுவது போல பழமைவாதம் என்றால் முஹம்மது நபி [இ.அ .நி] அவர்கள் காலத்தில் உள்ள இஸ்லாமிய நடைமுறைகளையே குறிக்கும் .அதை பின்பற்றும் என்னை போன்றவர்களிடம் நீங்கள் காணும் பழமை வாதத்தையும் உங்களிடம் உள்ள புதுமைவாதத்தையும் சொல்லுங்கள் .
    ////வளைகுடாவில் உள்ள மக்களும், பிறநாட்டு தொழிலாளிகளும் இந்த கயவர்களை தூக்கி எறிவது இன்றைக்கு சாத்தியமில்லை என்பதால் என்றைக்கும் நடக்காது என்று பொருளில்லை/////
    அப்படி தூக்கி எறியப்பட்ட நாடுகளில் உள்நாட்டு ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்டு வெளிநாட்டு ஏகாதிபத்தியம் தலை விரித்தாடுகிறது .
    இராக்கில் கொள்ளை அடித்த பிறகு இப்போது லிபியாவிலும் அதன் பின்னர் சிரியாவிலும் எண்ணெய் கொள்ளை நடைபெறுகிறது .தூக்கி எறிவதற்கு முன்னும் ,தூக்கி எறிந்த பின்னரும் அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனிகள் தவிர அந்நாட்டில் மக்களின் வாழ்க்கையில் என்ன முன்னேறற்றம் கண்டுவிட்டார்கள?
    ////இந்த உலகில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும், புரட்சியையும் மக்கள்தான் செய்கிறார்கள். மதங்கள் அல்ல. ///
    ஆனால் விதிவிக்காக அரேபியாவில் மாற்றத்தையும் புரட்சியையும் மதமே ஏற்படுத்தியுள்ளது.அதன் தாக்கம் உலகலாவ வியாப்பித்துள்ளது .
    ///மதக்கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு மக்கள் நலன் எனும் உண்மையை உணர்ந்தால் உங்களது பிரச்சினைகள் தீரும்.////
    எப்போது ஆப்கானில் கம்யுனிச பார்வை விழுந்ததோ அந