Tuesday, August 9, 2022
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !

ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !

-

முசாஃபர் நகர் மாவட்டம் உத்திர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ளது. அங்கு முசுலீம்களுக்கெதிராக இந்து ஆதிக்க சாதியை சேர்ந்த ஜாட் சாதியினர் கடந்த 7-ம் தேதி முதல் நடத்தும் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ தாண்டி விட்டது. தற்போது தமது கிராமங்களில் இருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடிவரும் முசுலீம்களை நோக்கி இந்துமத வெறியர்கள் தம் தாக்குதலை துவக்கி உள்ளதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. சாம்லி பகுதியில் மசூதியின் இமாம் மௌலானா உமர் தின்-ஐ கடந்த திங்கட்கிழமை சுட்டுக் கொன்றுள்ளனர்.

காயமடைந்தவர்கள்
கலவரத்தில் காயமடைந்தவர்கள்.

இந்துமத வெறியர்களை ஒரேயடியாக பகைத்துக் கொள்ள மாநில அரசு விரும்பவில்லை. தேர்தலில் முசுலீம்கள் வாக்குகளோடு இந்துக்கள் வாக்கும் சமாஜ்வாதிக்கு வேண்டும் என்பதால் ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 9 வரை நடந்த சம்பவங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையில் கமிசன் ஒன்றை அகிலேஷ் யாதவ் அமைத்துள்ளார்.

நகர்ப்புற பகுதிகளில் ராணுவமும், துணை ராணுவமும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன. சாம்லி, மீரட், சக்சேனா போன்ற பகுதிகளிலும் ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. மாநில சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றி மத்திய அரசுக்கு ஆளுநர் பி.எல். ஜோஷி அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையும் கூட ஒரு கண்துடைப்பு என்றால் மாயாவதி, அஜீத் சிங், பாஜக போன்றோர் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி வருவதும் அரசியல் காரணங்களை முன்வைத்தே.

ஆகஸ்டு 27 அன்று தங்களது சகோதரியை கேலி செய்த கலாப்பூர் கிராமத்தை சேர்ந்த முசுலீம் இளைஞர் ஒருவரை அவரது ஊருக்கே நேரில் சென்று இரு ஜாட் சாதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அத்தாக்குதலில் முசுலீம் இளைஞர் கொல்லப்பட்டார். இதனைப் பார்த்த உள்ளூர் முசுலீம்கள் அந்த இரு ஜாட் இளைஞர்களை பதிலுக்கு தாக்கியுள்ளனர். அதில் இரு இளைஞர்களும் இறந்து விட்டனர்.

கொலையுண்ட இரு இளைஞர்களின் சாவுக்கு நீதி கேட்டு ஆகஸ்டு 31 அன்று ஜான்சத் நகரில் ஜாட் சாதி பஞ்சாயத்து ஒன்று கூடியது. சில போலீசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் படுகொலை பற்றி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென்றும் கோரிய அப்பஞ்சாயத்து அரசுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்தது. அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், பாஜக அவர்களுக்கு ஆதரவாக செப்டம்பர் 5 அன்று மாவட்ட அளவிலான பந்த்-க்கு அழைப்பு விடுத்தது. இந்த தனிப்பட்ட விவகாரத்தை வைத்து இந்துமதவெறியை கிளப்புவது பாஜகவின் திட்டம். தேர்தல் வேறு அருகாமையில் வரும் நிலையில் இருப்பதால் சங்க பரிவாரங்கள் இத்தகைய சூழலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றன. இத்துடன் ஜாட் சாதியினர் தமது மகா பஞ்சாயத்தைக் கூட்ட முடிவு செய்தனர்.

மகா பஞ்சாயத்து என்பது பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் ‘8 கோடி’ ஜாட்டுகளின் பிரதிநிதிகளது பஞ்சாயத்து. முசாஃபர் நகரில் உள்ள நக்லா மந்தர் என்ற இடத்தில் செப்டம்பர் 7 அன்று நடந்த மகா கப் பஞ்சாயத்தில் கலந்து கொள்ள ஹரியானா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் ஜாட் சாதியை சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருந்தனராம்.

ராணுவம்இம்மகா பஞ்சாயத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் நரேஷ் திகாயத், ராஜேஷ் திகாயத் போன்றோர் முக்கிய பங்காற்றினர். இவர்களுடன் ஹரேந்திர மாலிக் என்ற முன்னாள் காங்கிரசு எம்பியும், பாஜக-ன் சுரேஷ் ரானா, சௌத்ரி குஹ்கும் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் எனப் பலரும் மகா பஞ்சாயத்தில் கலந்து கொண்டு இசுலாமியர்களுக்கெதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாயத்துக்கு வந்தவர்கள் மீது முசுலீம்கள் தாக்குதல் என்று கதை கட்டி விட்டு இசுலாமியர்கள் மீது ஜாட்டுகள் தாக்குதலை துவங்கினர். இதனை படம் பிடித்த ஐ.பி.என் தொலைக்காட்சி நிருபர் ராஜேஷ் வர்மா ஜாட்டுகளின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில் மீரட் மாவட்டம் சர்தானா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ சோம் சங்கீத் என்பவர், 2010-ல் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இசுலாமிய மத அடையாளத்துடன் உள்ள இருவர் சேர்ந்து ஒரு இளைஞரை கொலை செய்யும் காட்சியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டி அதற்கு முசாஃபர் நகரில் என்ன நடக்கிறது பாருங்கள் எனத் தலைப்பிட்டுமிருந்தார். அதில் தங்களது சகோதரியின் மானத்தைக் காக்க போராடி உயிரிழந்த இந்து இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இப்படி போலியாக வீடியோ பதிவேற்றம் செய்து சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. எனினும் அதற்குள் ஆயிரக்கணக்கில் செல்பேசி வழியாக அது பகிரப்பட்டிருந்தது. தற்போது அவரது ஃபேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டிருந்த போதிலும், சிடி போன்ற வடிவங்களில் கிராமப்புறங்களில் தொடர்ந்து அந்த ஃபோர்ஜரி வீடியோ வலம் வருகிறது. இந்துமதவெறி ஓநாயகள் எத்தகைய கீழ்த்தரமான வேலைக்கும் போவார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்று.

சோம் சங்கீத்
போலி வீடியோவை இணையத்தில் பரப்பிய பாஜக எம்எல்ஏ சோம் சங்கீத்.

இதுபோன்ற வதந்தி பரப்புவதில், இணைய பக்கங்களில் போலி வீடியோக்களை பதிவேற்றுவதில் சமூக விரோத சக்திகள் முன்னிற்கின்றன என்றும், சமூக அமைதியை சீர்குலைக்கும் வேலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநில உள்துறை செயலர் கமல் சக்சேனா எச்சரித்துள்ளார். ஆனால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், தவறாக அவர் மீது அரசு தரப்பு குற்றஞ்சாட்டுவதாகவும் பாஜக கூறியுள்ளது. அப்பட்டமாக பிடிபட்டும் இந்த பொறுக்கி எம்எல்ஏவை குண்டாசிலோ இன்னும் கடுமையான பிரிவுகளிலோ உள்ளே போடுவதற்கு மாநில அரசு அஞ்சுகிறது.

சந்தடி சாக்கில் ஆர்எஸ்எஸ்-ம் கலவரத்தை கண்டிக்கும் பெயரில் இந்துமதவெறியை தூண்டுவதற்கு முயல்கிறது. மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம், சம்ஜௌதா எக்ஸ்பிரசில் குண்டு வைத்தது, இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர், தென்காசி குண்டுவெடிப்பு என இந்துமத வெறியர்களின் ஃபோர்ஜரி வேலைகள் ஊரறிந்த ரகசியம்தான். அதன் ஒரு பகுதிதான் இந்த ஃபோர்ஜரி வேலையும், அதைத் தொடர்ந்து இந்துமத வெறியர்கள் ஜாட்டுகளை கொண்டு நடத்தும் முசுலீம்களுக்கெதிரான கலவரமும்.

தற்போதைய தாக்குதல்களில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட அளவில் துப்பாக்கி உரிமங்கள் 1700-க்கும் மேல் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 366 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடமிருந்து துப்பாக்கி, வாள், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பன்னிரெண்டு மணி நேரத்துக்கும் மாவட்ட நிலவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இந்துமதவெறியர்களை தடை செய்வதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு துப்பில்லாத போது இந்த ‘ஜனநாயக’ நடவடிக்கைகளுக்கு என்ன பயன்?.

மாயாவதி
முன்னாள் உபி முதலமைச்சர் மாயாவதி.

மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி மற்றும் மாயாவதி ஆகியோர் குறிப்பிடுகையில், ஏற்கெனவே விஎச்பி-ன் 84 கோசி யாத்திரையை அனுமதித்து பின் தடை செய்ததை போலவே இப்போதும் நாடாளுமன்ற ஓட்டுக்களுக்காக சமாஜவாதி கட்சியும், பாஜக-ம் சேர்ந்து மகா பஞசாயத்தை கூட்ட வைத்து பின் கலவரத்துக்கு திட்டமிட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அதே ஜாட் சாதியை பகைத்துக் கொள்ள இக்கட்சிகளும் தயாராக இல்லை என்பதோடு இவர்களது தலைவர்களும் கூட மகா பஞ்சாயத்தில் கலந்திருக்கின்றனர். மாயாவதியோ இந்துமத வெறியரோடு கூட்டணியே வைத்தவர்.

கடந்த வாரங்களில் தைனிக் ஜாக்ரான் என்ற இந்தி பத்திரிகையில் இசுலாமியர்கள் இந்துக்களை தாக்குவது தொடர்கிறது, இசுலாமியர்களால் இந்துக்களுக்கு ஆபத்து என்று முசாஃபர் நகர் பதிப்பில் தலைப்பிட்டும், அதன் பிற பதிப்புகளில் சாதாரணமாக தலைப்பிட்டும் செய்திகள் வெளி வந்தன. பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் வழியாக கலவரத்துக்கு வழிவகுக்கும் வேலையை சங் பரிவாரங்கள் துவங்கி விட்டனர். ஜாட்டுகள் நிறைந்த பகுதி என்பதால் இக்கலவரத்தை 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான விதைநிலமாக பாஜக பார்க்கிறது.

முசாஃபர் நகர் பகுதியில் கரும்பு விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது. ஏறக்குறைய 18 சர்க்கரை ஆலைகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இந்திய அளவில் விவசாய உற்பத்தி நன்றாக நடக்கும் பகுதிகளில் முசாஃபர் நகரும் ஒன்று. ஜாட்டுகள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பதால் அவர்களுக்கு முக்கிய வருவாய் கரும்பு விவசாயம் வழியாகத்தான் வருகிறது.

அகிலேஷ் யாதவ்
உபி முதல்வர் அகிலேஷ் யாதவ்.

முசாஃபர் நகரின் முக்கியமான விவசாயிகள் சங்கத் தலைவரான பாரதிய கிசான் சங்கத்தின் மகேந்திர சிங் தியாகத் ஜாட் சாதியை சேர்ந்தவர். இச்சாதியின் மகா கப் பஞ்சாயத்துகளில் அவர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ள ஜாட் சாதித் தலைவர்களுமே உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் சரண்சிங்-ன் மகனும், தற்போதைய மத்திய அமைச்சருமான அஜித் சிங் இச்சாதியை சேர்ந்த தலைவர்களில் ஒருவர். மகா பஞ்சாயத்துகள் எனப்படுபவை அரசு எந்திரத்திற்கு இணையாக செயல்படும் அதிகார மையங்கள் தான்.

ஏறக்குறைய தமிழகத்தின் தேவர் சாதியினரின் நாடு கூட்டமைப்பு போலவே ஆனால் மிகப் பரந்த அளவில் இருந்து வருகிறது இந்த மகா கப் பஞ்சாயத்து. கௌரவக் கொலைகளில் முன்னிற்கும் இப்பஞ்சாயத்து அச்சாதியினரின் பல்வேறு பிற்போக்குத்தனங்களுக்கு பாதுகாவலனாக இருந்து வருகிறது. தங்களை சத்திரியர்கள் என அழைத்துக்கொள்வதில் ஜாட்டுகள் பெருமைப்பட்டாலும் விவசாயம்தான் அவர்களது பிரதான தொழில். தற்போது தான் இந்த சாதியினர் ஓரளவு படித்து வேலை வாய்ப்புகளைப் பெற்று நகரங்களுக்கு குடி வரத் துவங்கி உள்ளனர்.

இங்குள்ள தொழிற்துறை, ஆட்டோமொபைல், பேப்பர் மில்கள் மற்றும் துணி வியாபாரத்தில் இசுலாமியர்கள் ஓரளவு இருந்து வருகின்றனர். நகர்மயமாதல் விரைவாக நடந்து வரும் நகரங்களில் ஒன்று முசாஃபர் நகர். தற்போதைய கலவரத்தில் இசுலாமிய வர்த்தகர்களை ஒழிக்கும் ஜாட் சாதி நிலப்பிரபுக்களின் சதியாகவே இம்மோதல் வெடித்துள்ளது.

அதே நேரம் தற்போதைய கலவரத்தில் பெரும்பாலான ஜாட் சாதி மக்கள் இசுலாமியர்களை தங்கள் சாதிவெறியர்களிடமிருந்து பாதுகாத்துள்ளனர். வதந்திகளை பரப்பும் சங் பரிவாரங்களையும், ஜாட் சாதி உழைக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கே தடையாக இருக்கும் மகா பஞ்சாயத்துக்களையும் தடை செய்ய வேண்டும். இந்து என்ற பெயரில் ஆதிக்கசாதி வெறியர்கள் தொடுத்திருக்கும் இந்த கலவரம் இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்ல, ‘இந்து’ உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.

– வசந்தன்.

 1. // ஆகஸ்டு 27 அன்று தங்களது சகோதரியை கேலி செய்த கலாப்பூர் கிராமத்தை சேர்ந்த முசுலீம் இளைஞர் ஒருவரை அவரது ஊருக்கே நேரில் சென்று இரு ஜாட் சாதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அத்தாக்குதலில் முசுலீம் இளைஞர் கொல்லப்பட்டார். இதனைப் பார்த்த உள்ளூர் முசுலீம்கள் அந்த இரு ஜாட் இளைஞர்களை பதிலுக்கு தாக்கியுள்ளனர். அதில் இரு இளைஞர்களும் இறந்து விட்டனர். //

  முதலாவது கொலை. இரண்டாவது இறப்பு!

  • முதல் சம்பவத்தில் இறந்து போனார் என்றும், இரண்டாவது சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள் என்று எழுதப்பட்டாலும் தவறு இல்லை, இதற்கும் அதற்கும் வேறுபாடு இல்லை. கட்டுரையின் மையப்பிரச்சினை இதுவல்லவே!

   • ஆமாம், மொதல்ல சொன்னது இலக்கண பிழை, அடுத்து வருவது உண்மை மறுப்பு.

    பொய்ய சொன்னால் தான் அது பொய், வேற ஏதாவது சொன்னா அது வெறும் உண்மை மறுப்பு தான்.

    நான் எதிர்பார்த்த ஒரு தலைப்பு தான்.

   • முதலாவது திட்டமிட்டு செய்யப்பட்டது என்றும், இரண்டாவது தற்செயலாக நிகழ்ந்தது என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. வார்த்தைகள் நோக்கமின்றி (unintentional) அமைந்தனவா, அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டனவா என எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எவ்விதக் கொலைகளும் கண்டிக்கப் பட வேண்டியவை என்பது என் கருத்து.

   • ஆமா….ஆமா… நம்பு வெங்கடேசன்… வினவு நுண்ணிய தளங்களில் வேலை செய்யும் … தெரியாதா…

    • Now CNN-IBN shows pieces of what exactly happened 8 days before the deadly UPRiots. 14 Muslim leaders gathered after Friday prayers and a hate speech was delivered at #Muzaffarnagar.
     Qader Rana (BSP), Rashid Siddiqui (SP) and Saeed-uz-Zaman (Congress) were identified among the 14 by CNN-IBN channel.

     It was convenient to blame BJP for organizing Hindus during the following days, but there is a lot of things that the so-called “secular” parties need to explain about this grave provocation issued on the 30th August 2013.

     As of today, 48 humans have died in this seemingly politically orchestrated violence #UPriots.
     — via Kiran KS

   • வினவு, கட்டுரையின் மையப் பிரச்சினை இது இல்லைதான். ஆனால் அது மூலப் பிரச்சினை ஆகும். ஒரு பெண்ணை கேலி செய்தது முதல் தவறு. அக்கேலியின் வீரியம் நமக்குத் தெரியாது. அதிருக்கட்டும். சென்ற ஜாட் இளைஞர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று தவறைத் தட்டிக் கேட்டிருக்கலாம். வலிந்து “தட்டி” கேட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இது இவர்களது தவறு. இவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டும் அளவிற்கு அவர்கள் சமூகத்தினரும் உணர்ச்சி மிகுந்து இருந்திருக்கின்றனர். அதன்பின் ஒன்று இரண்டாகி, இரண்டு நாலாகி, நாலு நாற்பதாகியிருக்கிறது. அடிப்படையில் இரு தரப்பிலும் கொலை வெறியர்கள் இருந்திருக்கின்றனர்.

    சமூகத்தில் எல்லாத்தரப்பிலும் எப்போதும் உணர்ச்சி வெறியர்கள் இருந்தே வருகின்றனர். அக விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது. இந்நிலையில் மேலும் மேலும் உணர்ச்சிவசப்படல் பிரச்சினையைத் தீர்க்க உதவாது. பெண்ணை சீண்டிய முஸ்லீம் நபர், அதை அமைதியாக தீர்க்கவொண்ணாத ஜாட் நபர்கள் – இந்த மூன்று நாதாரிகளின் செயல்கள் ஒட்டுமொத்த நகரின், மாநிலத்தின் நிலைமையையே கொந்தளிக்க வைத்துள்ளது.

    மத அமைப்பு ரீதியாக திரளும் எவராக இருந்தாலும் சரி. அது கொந்தளிப்புகளில்தான் போய் முடிகிறது. காரணம் அவற்றின் கட்டமைப்பே Beliefs, Feelings, emotions இவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதுதான். அது எந்த மதமாயினும் சரி. ஒட்டுமொத்த அனைத்து சாதி மற்றும் அனைத்து மதப் பிரிவினைகளும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பதே சரியான முன்னெடுப்பாக அமையும். மக்கள் அறிவார்ந்த வகையில், விழிப்புணர்வு நிலையில் இருந்து வாழ்வினை நடத்த முன்வர வேண்டும்.

  • முசுலீமுக்கு வந்தா ரத்தம்….இந்துவுக்கு வந்தா அது தக்காளிச்சட்ணி…

  • //இரு ஜாட் இளைஞர்களை பதிலுக்கு தாக்கியுள்ளனர். அதில் இரு இளைஞர்களும் இறந்து விட்டனர்.// வினவு.. இதில எண்ண தப்பு இருக்கு சில பேர் பேசறாங்கன்னு தெரியல..? கஷ்ட காலம்.

 2. வினவின் கட்டுரையா இது? அகிலேஷ் யாதவிற்கும் இக்கொலைகளுக்கும் துளியும் சம்பந்தமே இல்லாதது போல் எழுதியுள்ளீர்களே என்ன ஆனது வினவு ? இவ்வளவு கொலைகளை கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய அகிலேஷ் மீது ஒரு குற்றச்சாட்டையும் ஏன் நீங்கள் பதியவில்லை?

 3. ரொம்ப ஒரு தலைபச்சமான பதிவு.
  ஒரு பெண் கேலி செய்யப்பட்டிருக்கிறார். அதற்க்கு எதிராக முனைப்பாக அரசாங்கம் செயல்பட்டிருந்தால் இந்த கலவரத்தை தடுத்து இருக்கலாம். தனி மனிதர்களுக்கு இடையே ஆன பிரச்சனையில் சமூகத்தைச் சார்ந்த பிறர் உள்ளே நுழைய அரசாங்கத்தின் மெத்தனமே உதவியது.
  சங்க பரிவார் அமைப்புகள் மஹா பஞ்சாயத்து நடத்தியதை குறிப்பிடும் நீங்கள், பின்னர் முஸ்லிம்களை ஒருங்கிணைத்து காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் வழிபாட்டிற்கு பின்னர் நடத்திய கூட்டத்தை பற்றி குறிப்பிடாதது ஏன்? நீங்கள் உண்மை என்று நினைக்கிற விஷயங்களுக்கு வசதியாக இல்லை என்பதாலா

 4. வினவு சொல்ல ” மறந்த” தகவல்கள்:

  1.ஜாட் பசங்க செத்த பிறகு,மஸூதியில் கூட்டம் நடத்தப்பட்டது.

  2.ஜாட்களிடம் துப்பாக்கிகள் அதிகம் இல்லை.2 சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் ஆக்47 துப்பாக்கிகலுடன் கைது செய்யப்பட்டனர்.

  3. பங்கழ்தேஷ்இல் இருந்து ஊடுருவி உள்ள முஸ்லிம்கள் ஆர்மீ மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

  4. CNNIBN செய்தியாளர் இறந்தது(இதுக்கு பேரு தான் இரப்பது,நீங்க சொல்ற மாதிரி இல்லை.) யார் துப்பாகி குன்டுநால் என்று எதிலும் சொல்லப்படவில்லை.

  4.அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ரௌுடிகளும் முஸ்லிம்கள் தான்.

  5.ஜாட் மக்கள் பலர் சமாஜ்வாதி கட்சிக்கு ஒட்டு போடுபவரகல்.

  • சூரியனுக்குக் கீழ் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் இருப்பதும், இமயமலையின் உச்சியில் இருப்பதும், அதில் புதைந்து கிடப்பதும் எல்லாம் அறிந்த அதிபுத்திசாலி நீங்கள்

  • //4.அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ரௌுடிகளும் முஸ்லிம்கள் தான்// நீ போய் பாத்துட்டு வந்தாயா ராசா..???

   ஒரு சாதரனா ஈவ்டிசிங் விவகாரத்தை, அதனால் ஏற்பட்ட தகராறு கொலைகளை, மதக் கலவரத்தை தூண்டி மக்களை பிரிக்க வேண்டும் என்ற ஒரு அபாயகரமான நோக்கத்துடன் ஒரு பொய்யான வீடியோவை ஒரு MLA வே அப்லோட் பண்ணி அதனை பரப்பிய மிகப் பெரிய குற்றம் தான் மிக முக்கிய காரணம் (under Sections 420 (forgery), 153-A (promoting enmity on religious grounds) and 120-B (conspiracy) of the IPC and Section 66 of the Information Technology Act ). இவன் ரவுடி இல்லை, கிரிமினல் இல்லை. முஸ்லிம்கள் தான் உனக்கு ரவுடியா..? அத நீ சொல்லலாமா…?

   • You don’t know anything about muzzafarnagar,don’t read newspaper and talk,

    Muslim mla qader rana was arrested with weapons and his nephew shot dead trying to shoot upon the army personnel.

    All Muslims mlas of the region,get together after Friday prayers and makes planned attack on the mahapanchayat.

    Again Bhai,this area is so notorious for Muslim gangs that people don’t stop for anything while going from Delhi to rishikesh.

    • மன்னிக்கவும்.. உங்கள் பெயரை மெசேஜில போடுவதற்கு பதிலாக பெயர் பேட்டியில் இட்டுவிட்டேன். அதனால் மீண்டும் என்னுடைய பதிலை என் பெயரில் இடுகிறேன்.

     //You don’t know anything about muzzafarnagar,don’t read newspaper and talk,// முடியல சகோதரா..!!

     நியூஸ் பேப்பர் படிச்சு கருத்து தெரிவிக்க கூடாது. சரி..நீங்கள் எப்படி நீங்க எப்படி உங்க கருத்த சொன்னீங்க…? நீங்க அங்கேயே வாழ்ரீன்களா..? அல்லது நியூஸ் பேப்பர் படிக்காமா, சங்பரிவார்களின் வெப்சைட்கள் அல்லது மேலே சொன்னேனே ஒரு MLA சமூக விரோதி அவர்களின் பேஸ்புக் பக்கங்களில் இருந்து “அந்த ஏரியா முஸ்லிம்கள் எல்லாம் ரவுடிகள்னு” உங்கள் கருத்தை சொல்றீங்களா..?

     ஏன் இந்த டபுள் ஸ்டேன்டர்ட்ஸ்..?

     ஒரு ஆதாரம் குடுங்களேன்.. ப்ளீஸ் ஒரு ஆதரம்.. அங்க எல்லாருமே ரவுடிகள்னு..

     நான் சொன்ன ஊரை ரெண்டாக்கும் சமூக விரோதியைப் பற்றி எத்தனை ஆதாரம் வேண்டும்…? அவர் மேலே நான் மேலே சொன்ன வழக்குகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

     • I have friends from the region,Delhi Meerut muzzafarnagar city and neighbouring villages.

      They themselves agree all politicians from the area are Muslim goondas,all three Muslim mlas get together and give a provocative speech.

      The nephew of one of the mlas is shot dead and the mla himself has been shot in the hands and this is by the army and not the jats.

      The media kept quiet including namma vinavu as long as the Muslims were attacking and when the jats start taking revenge the army comes in,

      This is the double standards of your media.

      The Muslim leader of samajwadi party Azam khan is under pressure for a reaction,innocent Muslims themselves don’t agree to this and moreover even the Shias are complaint of Sunni gangsters tormenting them,

      You won’t ind this in the media,you can go and verify if you want to.

 5. you meant to say that muslim are innocents and hindus are F****** a*******. Check in google how many thousands of hindus killed by mughal forces. Hindus and jews are most persecuted religions in the world.

  Vinavu,

  I Cant say anything regarding this article.

 6. //பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் வழியாக கலவரத்துக்கு வழிவகுக்கும் வேலையை சங் பரிவாரங்கள் துவங்கி விட்டனர்//

  நீங்க பன்றத விடவா?

 7. //கொலையுண்ட இரு இளைஞர்களின் சாவுக்கு நீதி கேட்டு ஆகஸ்டு 31 அன்று ஜான்சத் நகரில் ஜாட் சாதி பஞ்சாயத்து ஒன்று கூடியது. சில போலீசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் படுகொலை பற்றி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென்றும் கோரிய அப்பஞ்சாயத்து அரசுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்தது. அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில்//

  அந்த இரு இளைஞர்கள் மட்டும் கொலைடுண்டார்களாம். அந்த முஸ்லீம் மட்டும் கொல்லப்பட்டாராம்.

  சரி! அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? நடவடிக்கை எடுத்திருந்தால் பாஜக வராமல் இருந்திருக்குமே! ஏனென்றால், இந்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் முஸ்லீம்கள் மேல் நடவட்டிக்கை எடுக்காது இந்த ‘போலி மதச்சார்பின்மை’ பேசும் கூட்டங்கள். அந்த கூட்டத்தில் நீங்களும் ஒருத்தரே…

  எதிலும் முஸ்லீம்கள் தப்பே செய்யவில்லை என்ற அபத்தத்தை உங்களை போன்றவர்களும், ஆங்கில ஊடகங்களும் தொடரும் வரை, இதை போன்ற கலவரங்கள் நடந்தே தீரும். அதற்கு காரணம் உங்களை போன்றவர்கள் தான்…

 8. Police did not register the complainant after two jat boys death to appease the minority community whereas it was registered after the death of a muslim boy. Double standards but you will not find fault with that. The communal tension was simmering there for more than a year and the government failed to control it.

 9. அதெப்படி ஜாதி வெறி மிருகங்களும் மதவெறி மிருகங்களும் ஒரே மேரி பேசுதுங்கோ.ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டுக்கினு பாய் பசங்க இந்து பொண்ணுங்கள லவுட்டிட்டு போயிடறாங்களாம்.ராமதாஸும் இப்டித்தா கூவுறாரு.எவனாவது தறுதலை ஸ்டைல் காண்பிச்சா உங்க பொண்ணுங்க அவனுங்க பின்னால போயிட்ராங்கோன்னு சொல்லி உங்க குடும்ப பெண்களையே கேவலப் படுத்துறீங்களே நா கேக்குறேன்.ஏண்டா லூசாடா நீங்கல்லாம்.

  • எரிமலை எப்படி வெடிக்கும்னு பாட்டு கேட்டிருகேன்.. இங்க எரிமலை கலக்குது.. சூப்பர் அப்பு..

 10. “அதெப்படி ஜாதி வெறி மிருகங்களும் மதவெறி மிருகங்களும் ஒரே மேரி பேசுதுங்கோ.ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டுக்கினு பாய் பசங்க இந்து பொண்ணுங்கள லவுட்டிட்டு போயிடறாங்களாம்.”

  ஒரு சின்ன திருத்தம் எரிமலை. சகல மத வெறி மிருகங்களும், ஜாதிவெறி மிருகங்களும் இப்படித்தான் பேசுகின்றன.
  இந்து மத வெறியர்கள் மட்டுமல்ல இஸ்லாமிய மத வெறிகளும் இப்படித்தான் பேசுகின்றன.
  பிரபல இஸ்லாமிய மத வெறி வாஞ்சூர் போன்றவர்களின் பதிவை பார்த்தா புரியும்.
  ஒரு இந்துவை இஸ்லாமிய பெண் திருமணம் முடித்தா கொலை செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள் செய்தும் இருக்கின்றார்கள். இஸ்லாமிய பெண் இந்துவை திருமணம் செய்தா நரகம் தான் என்று சுவன பிரியன் செப்பியிருக்கின்றார்

  இந்த விடயத்தில் அனைத்து மத வெறி மிருகங்களும் ஒன்றாகத்தான் சிந்திக்கின்றார்கள்

  • அய்யிரே உன் ஜாதியை மறைத்து தலித் மாரி வேஷம் போடாதே,கௌரவ கொலைகள் இஸ்லாமிய மத வெறியர்களும் செய்துள்ளனர்.யாரும் இல்லேன்னு சொல்லலையே.உன் டௌசர் கிளிஞ்சுருக்குன்னு சொன்னா அத்த மூட பாரு.அத்த உட்டு அடுத்தவன பத்தி பேசினா உன் அம்மணம் மரஞ்சுராது .

   லுக் டவ்சர்ஸ் .பாய்ங்க ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் சகிதமா வந்து லவ் ஜிகாத் பண்றாங்கோன்னு நீங்கதா புலம்புரீங்கோ.இது தெரியாம கரிக்கட்டை ஒன்னு ராமதாஸ் எப்படி உள்ள வந்தாருன்னு கேக்குது.வினவில் மட்டுமே முட்டிக் கொண்டிருக்காமல் கொஞ்சம் வெளியேயும் பட்சு பாருங்கோ.

   http://www.thehindu.com/news/national/where-sangh-spins-narratives-of-victimhood-belligerence/article5113769.ece

   அதுனாலதா கேக்குறேன்.ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு எவன் வந்தாலும் அவன் பின்னால போயிடறாங்க என்று உங்க குடும்ப பெண்களையே கேவலப்படுத்துரீங்களே லூசாடா நீங்கல்லாம்.

   • இந்த மதம் என்னும் வெறி புட்ச _____கள் இந்து பொண்ணுங்களை கேவலப்படுத்துறது இந்த மட்டோடு நிக்கல.இதையும் பட்சு பாருங்கோ.

    http://www.outlookindia.com/article.aspx?234524

    \\VHP leader Acharya Giriraj Kishore had gone on record to tell this correspondent: “There is a physical reason Muslims can seduce Hindu girls. They give them more sharirik anand (physical pleasure) because they have a surgery, Hindus don’t.” In Kishore’s view, circumcision is the Muslim’s secret weapon. In the face of such seductive logic, can reason have a chance?//

    இந்த அசோக் சிங்கால் கிழட்டுபயலை அன்னிக்கே செருப்பால அடிச்சுருக்கணும்.உட்டுட்டதுனால இன்னிவரைக்கும் அவனுங்க திமிர் அடங்கல.இருங்கடி வெண்ணை வெட்டி சிப்பாய்களா கூடிய சீக்கிரம் அந்த தாய்மார்களை கொண்டே உங்களை எல்லாம் செருப்பால அடிச்சு திருத்துறோம்.

  • கொலை செய்ய வேண்டும் என்று வாஞ்சூர் எங்கே சொல்லியிருக்கிறார் என்று ஆதாரம் தாருங்கள்…!

   • நான் இந்து ஆனால் நான் ஐயர் அல்லது உயர் ஜாதி என்றால் என் பிறப்பு தவறானது .

    • ரெம்ப கஷ்டப்பட்டு அய்யிரு இல்லன்னு காட்டப்பாத்தாலும் பலிக்காது அய்யிரே.பொதுவா மதவெறி ன்னு சொன்னாலும் கூட இசுலாமியரையும் சேத்துக்கோ ன்னு ஓடி வந்தது,இந்து மதவெறியனா இருந்துகிட்டே பறையனார் ன்னு போட்டுக்கிட்டது இதெல்லாம் தலித் மக்களிடம் இல்லாத நரித்தனம்.உங்களவா தான் இந்த வேலையெல்லாம் பண்றதுல கில்லாடி.காந்தியை கொன்ற கோட்சே தன்னை இஸ்மாயில் ன்னு காட்டப் பாத்தானே.இந்துன்னு சொல்லிகீற.இந்து மதத்த நம்பினா பறையன் எனபது சண்டாள சாதி.அதுக்கு அர்த்தம் எல்லாருக்கும் தெர்யும்.இந்த கேவலத்த எந்த தலித்தாவது பேருக்கு பின்னால் போட்டுக்குவானா.ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டுல ஒளிஞ்சா மாரி இங்க வந்து இந்த லூஸ்தனம் எல்லாம் காட்டாத.இதுக்கு மேலயும் நா தலித் தான்னு அடம் புடிச்சா உனுக்கு ஒரு பெட் கட்டுறேன்.உன்னோட SC கம்யுனிட்டி சர்டிபிகட் காப்பி ஒன்னு வினவு ஆபிஸ்ல அல்லது பொதுவான இடம் நீ சொல்லு குடுத்தா அதுல உம்பேரு சாக்கியன்னு இருந்தா உனுக்கு பத்தாயிரம் ரூபாய் தர்றேன்.

     • அப்போ தலித் மக்கள் இந்துக்கள் இல்லையா ?
      உங்கள் காமெடி உணர்ச்சிக்கு அளவே இல்லையா

      • தலித்கள் இந்துக்கள் இல்லை.அத புரிஞ்சுக்க முதல்ல இந்து மதம்னா என்னன்னு புரிஞ்சுக்கணும்.சனாதன வர்ணாசிரம தர்மம்தான் இந்து மதம். அதன்படி பிரம்மனின் நான்கு உடல் உறுப்புகளிலிருந்து பிராமணன்,சத்ரியன்,வைஸ்யன்,சூத்திரன் ஆகிய நான்கு வர்ணத்தாரும் தோன்றினார்களாம்.இந்த நான்கு வர்ணத்தாரும் அவர்களுக்குள் மட்டுமே மண உறவுக்கு அனுமதி உண்டு அப்டிதா சந்ததிய வளக்கணும்.அப்படி இல்லாம வர்ண கலப்பு அதாவது கள்ள உறவு மூலம் பிறந்தவர்கள் பஞ்சமர்கள்.அதாவது ஐந்தாவது வர்ணம்.இவர்களுக்கு இந்து மதத்தில் இடமில்லை.அதான் பிரம்மனின்தலைலேர்ந்து கால் வரைக்கும் ஏற்கனவே நால்வர்ணம் பொறந்துருச்சே.வேற இடம் இல்லை.இதுக்குதா பாப்பனோட அடிமை காந்தி ஒரு சதி பண்ணினார்.அவாள்லாம் கடவுளோட புள்ளைங்க அதுனால அவாளும் இந்துதான் என்றார்.இப்டிதா தலித்களை ”நீங்களும் இந்துக்கள்தான்” என ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க.

       .இந்த நாட்டின் ஆதி குடிகளான ஒரு சமுதாயத்தையே கள்ள உறவில் தோன்றியது என கேவலப்படுத்துது பாப்பன வந்தேறி கூட்டம் .அதுக்கு உன்ன மாதிரி வெட்கங் கெட்டதுகள் ஆமாஞ்சாமி போடுது.

        • சர்தான்,இவுரு பதினெட்டு பட்டிக்கும் நாட்டாமை.தீர்ப்பை துப்பிட்டாறு.எதிராளி சொல்றதுக்கு ரெண்டு வரி சேந்தாப்புல மறுப்புன்னு எழுத் துப்பு கெட்ட மங்குனிக்கு ,,,,,லொள்ள பாரு ,,,, எகத்தாளத்த பாரு…..இந்து மதம் நான்கு வர்ணங்களின் மேல் கட்டப்பட்டது, தலித்கள் இந்த நான்கு வர்ணங்களில் சேர்த்தியில்லை என்பதை மறுத்துவிட்டு தீர்ப்பு சொல்லு .முடியலையா சொம்ப தூக்கிட்டு ஓடிப்போயிரு.

 11. இரண்டு பேறும் சம்பந்தம் இல்லாம பேசுறீங்க.

  இந்த ஜாட் பெண் ஒரு 12 வயது சிறுமி,இவள் அண்ணன் சசினின் வயதொ 14.

  இதுல ஜீந்ஸ் பாண்டு,இரமதாசு எல்லாம் எங்க வந்தாங்க

 12. எரிமலை,சாக்கிய பறையனார் – இரு வேறு மதத்தையோ சாதியையோ சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும் இங்கே நடந்துள்ளதர்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது

 13. எனது கருத்து எரிமலை அவர்களின் கருத்துக்கு பதிலாக அமைந்தது.
  இந்த பதிவை முழுமையாக ஒட்டி அமையவில்லை

 14. “எரிமலை,சாக்கிய பறையனார் – இரு வேறு மதத்தையோ சாதியையோ சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும் இங்கே நடந்துள்ளதர்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது”

  இந்த சம்பவத்துக்கும் அதற்க்கும் பாரிய வேறுபாடு உள்ளது என்பதை ஒத்துகொள்கின்றேன்.

  ஆனால் மாற்று ஜாதி மத பெண்ணை திருமணம் செய்தால் கொலை செய்யவேண்டும் என்ற மத வெறியர்களின் நிலைப்பாட்டை ஏற்று கொள்கின்றீர்களா ???

  இது இரண்டு பிரதான மத வெறியர்களை நோக்கி கேட்கின்றேன். …………….

  (இந்த விடயத்தில் இரண்டு மதத்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல )

 15. This is what happens when you fight with powerful people. Muslims, please show your strength to some other religions or people like vinavu and not to hindus if you want repeatations of 1989. Worstcase you will plant bombs on your underwear

 16. ஜாட் சாதி வெறியர்கள் என்று தலைப்புப் போடும் வினவு….. முஸ்லிம் மத வெறியர்களை மட்டும் இஸ்லாமியர்கள் என்று எழுதும் “நடுநிலமை” “மதச்சார்பின்மை” அருமை! எழுதுவதில் நேர்மை வேண்டும். அது இல்லாத வினவு ஓதும் வேதம் சாத்தான் ஓதுவதாகவே அமைகிறது.

  எட்டு கோடி ஜாட் வோட்டுக்கள் என்று எழுதும் வினவு எத்தனை கோடி முஸ்லிம் ஓட்டுக்காக இப்படி கூக்குரல் இடுகிறது?

  காஙிரசும் கம்யூனிஸ்டுகளும் வைத்திருக்கும் தேசப் பற்று இந்தக் கட்டுரையில் நன்றாகத் தெரிகிறது.

 17. ஏன் இந்த சப்பைக்க்கட்டு எவ்வளவு பணம் வாஙுகுனிஙக தைரியம் இருந்த முலிம்களீல் எட்னனை பேர் இறந்தஙகன்னும் Hஈண்DஊKKஆளீள் எததனை பெர் இறந்தகன்னு அறீவிஙக

 18. என்னப்பா பார்பனர், மோடி இவர்கலை விட்டு புட்டிக ? ஜாட் சாதி , அக்ரகாரம் சேர்ந்து சதி வேலைனு, வினவு சொல்லவில்லையே?

 19. Hats Off Vinavu!!

  பல முஸ்லிம் இயக்கங்களை விட உண்மையை உண்மையாய் நீங்கள் உலகத்திற்கு கொண்டு வரும் திறனும், தைரியமும், முயர்ச்சியும் வியக்க வைக்கிறது. இறைவன் உங்களுக்கு வழிகாட்டி உதவி புரியட்டும்.

  என்னைப் போன்ற பல உங்கள் வினாவிற்கு நன்றி உடையவர்களாக இருப்போம்..!!!

  வெல் டன்..! உண்மையை உரக்க கூறும் உங்கள் பணி வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்த்துக்கள்.

 20. @Mohamed,
  ஒங்க நன்றி உணர்ச்சி புல்லரிக்க வைக்கின்றது. இதே வினவு முஸ்லிம்களின் சமுதாயத்திலும் மதத்திலும் உள்ள அழுக்குகளை வெளி கொண்டு வந்த போது இஸ்லாமியர்கள் ஆடிய வார்த்தை வெறியாட்டம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

  • தேவைஉள்ள ஆணி, தேவையில்லாத ஆணினு எப்டி கண்டுபிடிக்கிறது?

   முசுலீமுக்கு எதிர்ப்பா எழுதுற எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்!

  • @Ethicalist,

   நான் இதுவரை எந்த போஸ்டிலிம் வினாவை சாடியதில்லை. ஏனென்றால் நான் வினவில் பின்னூட்டம் இடுவது சமீகாலமாகத்தான். சில முஸ்லிம்கள் இங்கு வந்து வினவை சாடியது பற்றி எனக்கு தெரியாது. மேலும் யாரும் இங்கு கடவுள் அல்லவே. வினவோ அல்லது மற்றவர்களோ நல்லது செய்யும்போது பாராட்டுவதும், தவறு செய்யும்போதும் விமர்சனம் செய்யுவது மனித இயல்பு. ஆனால் அது மனசாட்சியோடு உண்மையான் விமரசனமாக இருக்க வேண்டும். அவ்வளவு தன்.

   • @Mohamed

    வினவு நியாமான முறையில் தான் அந்த பதிவை போட்டது .
    ஆனால் அந்த பதிவு இஸ்லாமியர்களை விமர்சிப்பதாக இருப்பதால் இஸ்லாமியர்கள் பொங்கி பொங்கி விட்டார்கள் அவ்வவளவுதான்.

    யாரும் விமர்சனத்துக்கு அப்பால்பட்டவர்கள் அல்ல முகம்மது

 21. பெண்களைக் கேலி செய்வது என்பது சாதி – மத வேறுபாடின்றி இந்தியாவெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய நடவடிக்கையின் போது பெண்ணைச் சார்ந்த குடும்பத்தினர் அதைத் தட்டிக் கேட்பதும் பிறகு அதவே மோதலில் முடிவதும் நடக்கிறது. ஒரே சாதிக்குள் அல்லது மதத்துக்குள் நடந்தாலும் இதுதான் நிலை.

  இத்தகைய நிகழ்வுகளை ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களின் நடவடிக்கையாக சித்தரித்து அதன் மூலம் ஆதாயம் அடைகின்ற கட்டைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் சாதியத் தலைவர்களாகவோ அல்லது மதத்தலைவர்களாகவோ இருக்கின்ற அதே வேளையில் அரசியல் கட்சிப் பிரமுகர்களாகவும் இருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் தலையிட்டு அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.

  இஸ்லாமிய இளைஞன் ஜாட் சாதிப் பெண்ணைக் கேலி செய்தது, அதை தட்டிக் கேட்கச் சென்றபோது அவ்விளைஞன் கொல்லபட்டது, பதிலுக்கு இரு ஜாட் சாதி இளைஞர்கள் கொல்லப்பட்டது வரை ஆதாயம் தேடும் அரசியல் தலைவர்களின் தலையீடு இருந்ததாகத் தெரியவில்லை.

  ஜாட் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசுக்கு எதிரான போராட்டத்தைத்தான் தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு மாறாக இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இச்சம்பவத்தை திசை திருப்பி ஆதாயம் தேட முயன்றுள்ளனர் ஜாட் சாதியின் மெகா பஞ்சாயத்துத் தலைவர்கள். இதுதான் தக்க சமயம் எனக் கருதிய பாரதிய ஜனதா – சங் பரிவார அமைப்புகள் இதை மேலும் பெரிதாக்கி மாநிலம் தழுவியதொரு பிரச்சனையாக வளர்த்துள்ளனர்.

  இதைத்தான் இக்கட்டுரை உணர்த்துகிறது.

  ஒரு ஜாட் சாதிப் பெண்ணை ஒரு ஜாட் சாதிப் பையன் கேலி செய்து, அதைத்தட்டிக் கேட்கச் சென்றபோது கேலி செய்த இளைஞன் கொல்லப்பட்டு அதன் பிறகு எதிர்தரப்பில் இரு ஜாட் சாதி இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தால் மெகா பஞ்சாயத்து கூடி இருக்குமா? சங் பரிவாரங்கள் தலையிட்டிருக்குமா? பிறகு அது மாநிலம் தழுவியதொரு கலவரமாக வளர்ந்திருக்குமா? என்பதிலிருந்து பரிசீலிப்பதே தற்போதைய கலவரத்தின் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

  • //இஸ்லாமிய இளைஞன் ஜாட் சாதிப் பெண்ணைக் கேலி செய்தது, அதை தட்டிக் கேட்கச் சென்றபோது அவ்விளைஞன் கொல்லபட்டது, பதிலுக்கு இரு ஜாட் சாதி இளைஞர்கள் கொல்லப்பட்டது வரை ஆதாயம் தேடும் அரசியல் தலைவர்களின் தலையீடு இருந்ததாகத் தெரியவில்லை.//

   ஊரான்,
   கொலை என்பது தற்காலத்தில் எவ்வளவு சாதாரணமான ஒன்றாகி விட்டது பாருங்கள். கேலி செய்யத் தொடங்கியது முதல் மூவர் கொலை செய்யப்படும்வரை அங்கே உணர்ச்சிப் பிழம்புகளாக எவ்வளவு விஷயங்கள் நடந்தேறியிருக்க வேண்டும்!

   இந்த இடைப்பட்ட காலம் என்பது எவ்வளவு காலம் என யாருக்குத் தெரியும்? யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என யாருக்குத் தெரியும்?

   நிச்சயம் ஆதாயம் தேடுபவர்கள் முதலிலேயே நுழைந்திருக்க வேண்டும். அவர்களை நம்மால் அழிக்கவே முடியாது. ஆனால் அவர்களுக்குத் தீனி கிடைக்காமல் தடுத்திருக்க முடியும். கொலைகளுக்குக் காரணம் மூளை நரம்புகளில் பொதிந்திருக்கும் ஜாதி, மத, இனவெறியேயன்றி வேறெதுவும் இருக்க முடியாது.

   அவற்றை ஒட்டுமொத்தமாகக் களையாமல் ஒரு தரப்பைச் சார்ந்தவர்களின் மதக் கட்டமைப்பை மட்டும் காரணம் காட்டி பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

  • //ஒரு ஜாட் சாதிப் பெண்ணை ஒரு ஜாட் சாதிப் பையன் கேலி செய்து, அதைத்தட்டிக் கேட்கச் சென்றபோது கேலி செய்த இளைஞன் கொல்லப்பட்டு அதன் பிறகு எதிர்தரப்பில் இரு ஜாட் சாதி இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தால் மெகா பஞ்சாயத்து கூடி இருக்குமா? //

   இப்படி நடக்க வாய்ப்பு நூறு சதம் இல்லை எனும்போது இந்த ஊகத்தின் அடிப்படையில் இதைப் பரிசீலிக்க முடியாது என்பது என் கருத்து.

   //ஜாட் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசுக்கு எதிரான போராட்டத்தைத்தான் தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்//

   ஜாட் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு மாநில அரசிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லப் போவதில்லை ஜாட் ஜமுக்காளங்கள்.

   அதேபோல முஸ்லீம் இளைஞன் கொல்லப்பட்டதற்கும் முஸ்லீம் ஜமுக்காளங்கள் மாநில அரசிடம் நடவடிக்கை கோரப் போவதில்லை. ஆக மொத்தம் இரண்டு பேரும் அடித்து சாகட்டும் என மாநில அரசு விட்டுவிட்டது போலிருக்கிறது.

   • Why will the police of the samajwadi party indicate the real cause.

    The girl was harassed by a guy from the region not necessarily in the kanwal,village.

    If the two boys went with four others to attack the Muslim guy,how come others escaped completely and only these two died.

    Why will the jats agree to hold a mahapanchayat without any real incident whatsoever?

    The jat leader ajit Singh is close to the congress and samajwadi party.

    Why the names of their fathers were included in the fir,when they had nothing. To do with it.

    How will a 12 year old girl talk to the media regarding this and where ndtv get their information from,considering that police cords are all fudged.

    Itthu pothum,idhu oru poli report endru mudivu seyya.

 22. Hooran,

  Your sequence is wrong.the parents of the jat boys went to the police to register a case against the people who killed the boys but the police hustlers the case against them and the ips officer himself says that he is a Muslim first and a police second.

  In such a scenario,after no help from the police,the jats convene a mahapanchayat.all these jats and Muslims together vote for the samajwadi party.

  Bu tbthe party chooses to help Muslims over Hindus,that’s why the bjp comes in here.

  Secondly,the jats didn’t indulge in any violence,they are the economically powerful community and they decided to boycott the Muslims ,before which the Muslims attacked them.

  • இளவரசன் – திவ்யா காதல் விவகாரத்தில் தருமபுரி காவல் அதிகாரி இளவரசன் சாதியைச் சேர்ந்தவர் என்பதால்தான் பிரச்சனை பெரிதாக்கப்பட்டது என்கிற வாதமும் உ.பி யில் ஐ.பி.எஸ். அதிகாரி இஸ்லாமியர் என்பதால்தான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற வாதமும் ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக வைக்கப்படுகின்ற வாதங்கயோகும்.

   ஜாட் சாதியனர் வன்முறையில் இறங்கவில்லை எனில் பிறகு எப்படி அங்கே கலவரம் நடக்கிறது?

   பா.ஜ.க இந்துக்களுக்கு உதவி செய்கிறது என்றால் அது என்ன மாதிரியான உதவி? இஸ்லாமியர்கள் மீதான கொலை வெறித்தாக்குதலுக்குப் பெயர்தான் உதவியா?

 23. Hooran

  That is the truth.the issue is not about the caste or religion of the officer,it is about how he uses it for his benefit.

  Here the guy is a biased person as could have been the case in dharmapuri also,this is not an argument,it is a fact.

  This is how people think in such societies,to change these things everything has to change.

  If Muslims attack first,jats ll react with violence.they went to the police first but the police did nothing.

  What can u do next,u ll pick the weapon,that’s all.

  Protecting someone under attack is the biggest help possible ,I don’t know according to you,what is more valuable than that?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க