திருச்சியை கலக்கும் மோடி எதிர்ப்பு இயக்கம் – புகைப்படங்கள்

11
6

செப்டம்பர் 26 அன்று ஏகாதிபத்திய கைக்கூலி, உழைக்கும் மக்களின் எதிரி  கொலைகார மோடி திருச்சிக்கு வருவதை கண்டித்து மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் பிரச்சார இயக்கம் முழு வீச்சுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தினமும் ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 22-ம் தேதி தோழர் மருதையன் பேசவிருக்கும் பொதுக் கூட்டத்திற்க்காக சிக்னல்  சந்திப்புகளில் பிரச்சாரம், வேன் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள் என பல்வேறு வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தோழர்கள் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சி நகரை கலக்கி வருகிறார்கள்.

உழைக்கும் மக்களிடையே பாஜக, ஆர்.எஸ்.எஸ் காவிகளின் பொய்பிரச்சாரத்தின் மூலம் பூதாகரமாக சித்தரிக்கப்பட்ட மோடியின் முகம் நமது புரட்சிகர அமைப்புகள்  நடத்திவருகின்ற  பிரச்சாரத்தால் கிழிந்து தொங்குகிறது.

பெரியார் பிறந்த மண்ணில் காவிப்படைகளுக்கு கல்லறை கட்டுவோம். மோடியின் வருகைக்கு மௌனம் சாதித்துவரும் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளையும்,ஓட்டுக்கட்சிகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.

அனவரும் வருக!

படத் தொகுப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

திருச்சி

சந்தா