முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் : நெடுமாறனைக் கண்டித்து தஞ்சை ஆர்ப்பாட்டம்

6
42

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஒளிந்திருப்பது துரோகமும் பிழைப்புவாதமுமே!

தஞ்சை ரயிலடி அருகில் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 6, 2013, மாலை 5.30 மணி

சிறப்புரை :
தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலாளர், ம.க.இ.க., தமிழ்நாடு

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்

தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்த போராளிகள் மற்றும் ஈழ மக்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பும் வகையில்  தஞ்சை-விளார் சாலையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட உள்ளது. வரும் நவம்பர் 8-ம் தேதி திறக்கப்பட்டு அதைத் தொடர்ந்து 9,10 தேதிகளில் பல்வேறு கட்சிகள், ஈழ ஆதரவு அமைப்புகள், சினிமாத் துறையினர் மற்றும் பிரபலமானவர்கள் பலர் பேசவுள்ள இந்நிகழ்ச்சி உலகத் தமிழர் பேரமைப்பு என்ற அமைப்பின் மூலம் ஐயா பழ நெடுமாறன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இது குறித்து சமீபத்திய ஆனந்த விகடனில் “துரோகிகளுக்கு அழைப்பில்லை” என்கிற தலைப்பில் பழ.நெடுமாறன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் வரலாற்றை விளக்கி “அறச்சீற்றம்” காட்டியுள்ளார். ஈழத்தமிழ் மக்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப் போகிறோம் என்று அறிவித்து (சசிகலா) நடராசன் எனும் தமிழகத்தின் கிரிமினல் அரசியல் தரகனும், ஐயா பழ நெடுமாறனும் இணைந்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள புலம் பெயர் தமிழர்களின் மத்தியிலும் கூட கணிசமான அளவில் “வசூல் வேட்டை” நடத்தி இதை கட்டியுள்ளனர். எனவே இது கட்டப்பட்டிருப்பதன் நோக்கத்தை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மாமன்னன் நடராசனுக்கு மகுடம் சூட்டும் விழாவா?

தமிழகத்தின் வாக்கு வங்கி வலிமை கொண்ட அ.தி.மு.க என்னும் மாஃபியா கும்பலின் ராஜ குருவாக தன்னை அறிவித்துக் கொண்டு (அதில் சிறிது உண்மை இருப்பினும் கூட) அரசியல் தரகனாக செயல்படும் இந்த நடராசனுக்கு தமிழகம் முழுவதும் ஏன் இந்தியா முழுவதிலும் கூட எல்லாக் கட்சிகளிலும் கையாட்கள் இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட கைதேர்ந்த கிரிமினலிடம் குவிந்துள்ள சொத்துக்களும், அதன் சூத்திரதாரி யார் என்பதும் ஊர் அறிந்த ரகசியம். அப்படி இருக்கும் போது இந்த ரகசியம் ஐயா பழ.நெடுமாறனுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது? இந்தி திணிப்புக்கெதிரான தமிழக மாணவர் போராட்ட வரலாற்றுக்கு தானே காரணகர்த்தா என்று நிறுவும் வரலாற்று புரட்டு நூல் ஒன்றும் நடராசனால் எழுதப்பட்டு இவ்விழாவில் வெளியிடப்படப் போவதாகவும் தெரிகிறது. தஞ்சையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடத்தி தனது ஆதிக்க சாதி செல்வாக்கை பரிசோதித்துக் கொள்வதும், அதில் முழுக்க முழுக்க நடராசன் புகழ் பாடப்படுவதும் வழக்கம். இந்த முறை ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி, அவர்களுக்கு “நினைவுச் சின்னம் எழுப்பிய மாமன்னன்” என்கிற வகையில் நடராசனுக்கு மகுடன் சூட்டும் விழாவாக இதை ஏற்பாடு செய்ய இட்ட கட்டளையை நிறைவேற்ற பேயாய் வேலை செய்துள்ளார் பழ நெடுமாறன்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அணிசேர்க்கை ஒத்திகையே!

இவ்விழாவினை சிறப்பிக்க வருகை தரும் நபர்களின் பட்டியலை பார்த்தாலே சற்று பீதியாகிறது. இந்து மதவெறி பாசிஸ்டுகளின் தமிழக குழந்தையான பி.ஜே.பி.யின் பொன். இராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் போன்ற தமிழின விரோதிகள் தொடங்கி தேசிய இன விடுதலையை வெறி கொண்டு எதிர்க்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவரும், புரட்சித் தலைவியின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலாளருமான தா பாண்டியன், என்.ஜி.ஒ அமைப்புகள் உட்பட பலரும் பங்கேற்க உள்ளனர். காங்கிரசை ஆதரிப்பவன் ஈழத் துரோகி, பி.ஜே.பி.யை ஆதரிப்பவனே பச்சைத் தமிழன் எனும் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அணி திரட்டியிருக்கிறார் பழ.நெடுமாறன்.

கடந்த காலங்களில் பாசிச ஜெயா காட்டிய புலிப் பூச்சாண்டியும், இதில் நெடுமா, வைகோ கூட சிறையில் களி தின்ற கதையும் நாடே அறியும். ஆயினும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரில் ஒரு கதம்பக் கூட்டணியை உருவாக்கி கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க அரும்பாடு பட்டவரே ஐயா பழ.நெடுமாறன் (அதற்குப் பின்னர் அந்த அமைப்பு என்ன ஆனது என்பதை நெடுமாறன்தான் விளக்க வேண்டும்). இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சூறாவளியாய் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள் தமிழின வாதிகள். இலை மலர்ந்து, காயாகி, கனியான பிறகும் கூட ஈழம் மலரவில்லை. இப்போது “ஈமச் சடங்கும்” நடத்தி முடித்து விட்டார்கள். இப்போது இலையும், தாமரையும் மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறி பி.ஜே.பி – அ.தி.மு.க எனும் பார்ப்பன இந்து மதவெறி சக்திகளை அரியணை ஏற்றிட ஆள் சேர்க்கும் வேலையில் இறங்கியுள்ளார்கள். அதற்கான துருப்புச் சீட்டே இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கான நிகழ்ச்சி என்பதை அழைப்பிதழில் உள்ள நிகழ்ச்சி நிரலை பார்த்தாலே எவரும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு சக்திகளா?

2002-ம் ஆண்டு புலிகள் ஆனையிறவு கோட்டையை முற்றுகையிட்டு 40,000 சிங்கள ராணுவ வீரர்களை சுற்றி வளைத்து, தமிழீழத்தை பிரகடனம் செய்யும் நிலை உருவாகிய போது, இங்கே மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம் ‘முற்றுகையை விலக்கிக் கொள்ளா விட்டால் முப்படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவோம்’ என்று பகிரங்கமாக புலிகளை மிரட்டியது. நெடுமாறன் – வைகோ உள்ளிட்ட புலிகளின் தமிழக அரசியல் ஆலோசகர்கள், இந்திய ஆளும் வர்க்க நலனுக்கேற்ப ஐந்தாம் படையாக வேலை செய்து புலிகளை பின் வாங்க நிர்ப்பந்தித்து பச்சையாக துரோகமிழைத்தனர். இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். விண்கோள் மூலம் உளவு சொல்லியது, விமானப்படை தளபதி டிப்னீசை அனுப்பி சிங்கள ராணுவத்திற்கு ஆலோசனை வழங்கியது, 1989-ல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு படையான அமைதிப்படை (IPKF)யை திரும்ப பெறும் முடிவை மேலும் 3 மாதத்திற்கு தள்ளி வைத்து சாத்தியமான அளவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு தம்மால் இயன்ற அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளையும், செய்தவர்களே இந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான். இது கடந்த கால வரலாறு. இவர்களின் நிகழ்கால வரலாறும் இதுதான்.

ம.க.இ.க ஆர்ப்பாட்டம்இவ்வாண்டு தொடக்கத்தில், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதை முதலில் எதிர்த்தது பி.ஜே.பி.தான். ஈழப்போரின் ரணங்களால் தமிழ் மக்கள் மனம் நொந்து வாடிய போது, ராஜபக்சேவை மத்தியபிரதேசத்திற்கு வரவழைத்து விருந்து வைத்தவர்தான் பிஜேபியின் சுஷ்மா சுவராஜ். இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்து கொள்ளக் கூடாது என்று பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் இன்றைய சூழலில் ‘இந்தியா கலந்து கொள்வது நல்லது’ என்று ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் பி.ஜே.பியின் வெங்கையா நாயுடு (ஆதாரம் : 2.11.2013 தினமலர்). இதுதான் இவர்களின் உண்மை முகம். தற்போது இவர்களால் களம் இறக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் ராஜபக்சேவான மோடி பிரதமராகி விட்டால் ஈழம் கிடைத்து விடும் என்று தமிழ் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள் இந்த தமிழினவாதிகள், மன்னிக்கவும் தமிழின பிழைப்புவாதிகள். உண்மைகள் இப்படி இருக்க முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் நெடுமாறன் – வைகோ – சீமான் போன்ற தமிழின பிழைப்பு வாதிகளின் இந்த இழி செயலை அறியாமை என்று ஒதுக்கி விட முடியாது. இது அப்பட்டமான பிழைப்புவாத, சந்தர்ப்ப வாத, பச்சை துரோக அரசியலே என்கிறோம்.

இந்திய ஆளும் வர்க்க நலனுக்கு உட்பட்டு தமது பிழைப்புவாத அரசியலை நடத்தி வரும் இந்த இழிபிறவிகளுக்கு ஈழம் என்பது வாய்ச் சவடாலுக்கான ஒரு விசயமே அன்றி வேறெதுவுமில்லை. தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், அ.தி.மு.க எனும் இந்த மதவெறி பாசிச சக்திகளிடம் தமிழின உணர்வை அடமானம் வைக்கிறார்கள். ஓட்டுக்களாக மாற்றி அடிவருடி வேலை செய்ய எத்தனிக்கிறார்கள். ‘துரோகிகளுக்கு அழைப்பில்லை’ என்று காங்கிரசு – கருணாநிதி கும்பலை ஏசும் நெடுமாறன் வகையறாக்கள் இந்துமத வெறி சக்திகளுக்கு பல்லக்கு தூக்க தமிழ் மக்களையும் அழைக்கிறார்கள். எனவே, இந்த கும்பல்களை புறக்கணிப்பது மட்டுமல்லை ஓட ஓட விரட்ட வேண்டிய தருணம் இதுவே.

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம் – 9443157641
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – 9943494590
விவசாயிகள் விடுதலை முன்னணி – 7502607819, 9362704120
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்

சந்தா

6 மறுமொழிகள்

 1. காசு கொடுத்தவன் என்னமோ உலக தமிழன், கட்டினவருக்கு அத்தில் உரிமையுன்டு,யாரை கூப்பிட்டால் தான் என்ன . கன்ட____ எல்லம் சும்மா நின்டது இப்ப ஏன் குரைக்குது??

  • உண்மைதான். யாரைக் கூப்பிட்டால் என்ன? ஞாயமாப் பார்த்தா ராஜபக்சேவை கூப்பிட்ருகோணும். அத விட்டுட்டு..!!! நீங்க வாழ்த்துங்க “tamilan”

 2. மானம் கெட்ட நெடுமாறன் கும்பல் இப்படி கேடுகெட்ட முறையில்நினைவு சின்னம் அமைக்கவில்லை என்று யார் அழுதார்கள்?டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் மாமா சு சாமி இசைபிரியா ,பாலசந்திரன் கொலைகள் நாட் ஆதென்டிகேட்டெட் என்று கூறுகிறான்.ராமர் பாலம் போல !காமெடியன் சோ,சு.சாமி இவர்களின் கொள்கை தான் ஈழ பிரச்சனையில் பி ஜெ பி யின் கொள்கை .இந்த பி ஜெ பி கயவாளிகளுக்கும் முள்ளிவாய்க்காளுக்கும் என்ன சம்பந்தம்? நெடுமாறா நீ செய்வது தமிழின துரோகம்.உன் பிழைப்புவாதத்திற்காக சோரம் போய்விட்டாயே!அட ச் சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு.

 3. ஈழத்தமிழ் மக்களின் பிணைத்தை வைத்தே நெடுமாறன் ,சீமான்,மணியரசன் மற்றும் பல போன்றோர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்…

  இவர்களுக்கும் விபத்தில் அடிபட்டு கிடக்கும் நபர்களிடம் திருடுபவனும் ஒன்றுதான்

 4. காங்கிரசு கொதிக்கும் எண்ணெய் சட்டி..
  பி.ஜே.பி..எரியும் அடுப்பு…
  தமிழினமே…எண்ணெய்சட்டியில் இருந்து எரியும் அடுப்பில்
  விழ உனக்கு பூரண உரிமையுண்டு…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க