Thursday, June 20, 2024
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 12/11/2013

ஒரு வரிச் செய்திகள் – 12/11/2013

-

செய்தி: அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஈசுவரன் எனும் இளைஞர் கைது செய்யப்பட்டார். பொழுதுபோக்குக்காக இதை செய்ததாக விசாரணையில் கூறியிருக்கிறார்.

நீதி: பாகிஸ்தான் ஹேக்கர்கள் செய்ததாக வெறுப்பைக் கிளப்பிய ஊடகங்களும் இந்து மதவெறியர்களும் எப்போது முடக்கப்படுவார்கள்?

______

செய்தி:  பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை (82) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

நீதி: ஆன்மீகம், ஆபாசம் இரண்டும் வேறல்ல என்று இந்து ஞான மரபை நிரூபித்த ‘மகான்’.

______

செய்தி: கொள்கை முடிவெடுப்பதில் தவறிழைப்பது கிரிமினல் குற்றம் ஆகாது. இதை புலனாய்வு அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

நீதி: நிலக்கரி ஊழலில் தன்னை விசாரிக்க கூடாது, அது ஒரு கொள்கை என கிரிமினல் குற்றத்திற்கு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குமாறு சிபிஐக்கு மறைமுகமாக உத்தரவிடுகிறார் பிரதமர்.

______

செய்தி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ ஒன்றும் ‘கூண்டுக் கிளி’ அல்ல என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நீதி: ஆமாம், காங்கிரஸ் வளாகத்தில் மட்டும் ‘சுதந்திரமாக’ பறக்கும் வளர்ப்புக் கிளி!

______

செய்தி: தமிழகத்தில் மக்கள்நலப் பணியாளர்களை பதவி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விடுத்த உத்தரவை திங்கள்கிழமை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

நீதி: இந்த உத்திரவினால் அதே திங்கட்கிழமை இரவு போயஸ் தோட்டத்தில் செருப்படி வாங்கியவர் எவரோ?

______

செய்தி: நரேந்திர மோடி, ராகுல் காந்தி தெரிவிக்கும் விமர்சனங்கள் நாராசமாக ஒலிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

நீதி: போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரம்-சிஐடி காலனிக்கும் காவடி தூக்கி பக்தி யாத்திரை செல்வது மட்டும் நாகரீகமா மிஸ்டர் எச்சூரி?

______

செய்தி: தமிழகம் மற்றும் கேரளத்துக்கு இடையே நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடந்து வரும் முல்லை பெரியாறு அணை வழக்கின் தீர்ப்பு தாமதமாகலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

நீதி: தீர்ப்பு மட்டுமல்ல நீதியும் தாமதமாகவே வந்தாலும், அதை அமல்படுத்தும்படி கேரளாவை உத்தரவிடுவதற்கு உரிய தைரியம் எந்த நீதிபதிக்கும் வரவே வராது.

______

செய்தி: தமது கட்சி நிதி தொடர்பான அரசின் விசாரணையை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இதேபோல் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிதி ஆதாரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நீதி: கட்சிகளுக்கு நிதி வழங்கும் முதலாளிகளின் நிதி ஆதாரத்தை விசாரிப்பதற்கு ஆம் ஆத்மிக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் உடன்பாடில்லை என்பதுதான் இந்த செய்தியின் மூலாதாரம்.

______

செய்தி: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து ரூ. 19 கோடி தேர்தல் நிதி வசூலாகியுள்ளது. ரிக்ஷா தொழிலாளி, வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், சியாச்சின் பகுதியிலுள்ள இந்திய ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் டெல்லி தேர்தலை முன்னிட்டும் ஊழலற்ற நிர்வாகம் அமைப்பதற்காகவும் இத்தொகையை வழங்கியுள்ளனர்.

நீதி: இவர்களில் தொழிலதிபர்கள் யார், அவர்கள் என்ன தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள், முறையாக வரி கட்டுகிறார்களா, அரசு வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப கட்டுகிறார்களா என்பதையெல்லாம் ஆம் ஆத்மி கட்சி வெளியிடுமா?

______

செய்தி: கிரிக்கெட்டில் சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், விளையாட்டுத் துறையில் ஊழலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கிரிக்கெட் நட்சத்திரம் ராகுல் திராவிட் கலந்து கொண்டு தனது கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

நீதி: உரைக்கான டிப்ஸுகளை மருமகன் குருநாத் மெய்யப்பனும், மாமா இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும் பிசிசிஐ சார்பில் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

______

செய்தி:  குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி உயிருக்கு பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு கவலை தெரிவித்தார்.

நீதி: ‘ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ எனும் மோடிக்கு பிடித்த தத்துவப்படி கோத்ரா எரிப்புக்கு எதிர்வினையாக முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றால் அதற்கு எதிர்வினை இதுவாகத்தானே இருக்க முடியும் திருவாளர் வெறுப்பையா நாயுடு காரு?

______

செய்தி: மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

நீதி: இன்னமும் பேரம் படியவில்லையாம்.

______

செய்தி: காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது, இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நீதி: நாடகத் திரையின் விரிசல் இந்திய – இலங்கை நாடுகளின் உறவில் விரிசலை எப்படி ஏற்படுத்தும்?

______

செய்தி: வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால் சவூதி அரேபியாவின் ரியாத் பகுதியில் சனிக்கிழமை கலவரம் வெடித்தது. இதில் சவூதியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 561 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதி: அல்லாவின் மண்ணில் அமெரிக்கனுக்கு இடமுண்டு, ஆசிய ஆப்பிரிக்க ஏழைகளுக்கு இடமில்லை!

 1. //நீதி: ஆன்மீகம், ஆபாசம் இரண்டும் வேறல்ல என்று இந்து ஞான மரபை நிரூபித்த ‘மகான்’.//
  அப்போ பெரியார் நாத்தீகமும் ஆபாசமும் வேறல்ல என நிரூபித்த மகானா? ஏன் உங்கள் நக்கல் கேலி எல்லாம் இந்து ஞான மரபை எதிர்த்தே பேசுகிறது..

  • India secularism means don’t offend muslims. There is another side to it too. The one that goes all out to please muslims, break or bend all laws and rules applicable to other citizens for the muslims, dole out excessive concessions to muslims for votes. This is what secularism has come to mean: Appease muslims at any and all cost

  • ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.

   கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!!!!!!!!!!!!!!!!!!!!

   என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

   இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .

   நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.

   ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.

   அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

   பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

   நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

   அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!

   உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை.

   இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.

   அவர்கள் எப்படியோ போகட்டும்.

   நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?

   தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?

   இந்த நாலரை கோடி மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.

   பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!

   ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.

   நன்றி பையா

   • கண்ணதாசன் ஒரு லூசு. அவன் குடிச்சிட்டு உளறுநத எல்லாம் ஏதோ பெரிய தத்துவம் போல இது பதிஞ்சுருக்கு

   • “உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை.

    இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.”

    எந்த இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்? பிரம்மனா?!, விஷ்ணுவா?!, சிவனா?! அல்லது முச்சந்திக்கு முச்சந்தி இருக்கும் பிள்ளையானையா?! அல்லாவா?!, ஏசுவா?

  • இந்து ஞான மரபை நிரூபித்த ‘மகான்’?…………… ஏன் உங்கள் நக்கல் கேலி எல்லாம் இந்து ஞான மரபை எதிர்த்தே பேசுகிறது..?????

   இந்துக்களே! விழிமின்! எழுமின்! .ஆபாசமே ஆயுதமா?.

   http://thathachariyar.blogspot.in/2011/03/blog-post.html

   http://thathachariyar.blogspot.in/2010/10/1.html

 2. செய்தி: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து ரூ. 19 கோடி தேர்தல் நிதி வசூலாகியுள்ளது. ரிக்ஷா தொழிலாளி, வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், சியாச்சின் பகுதியிலுள்ள இந்திய ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் டெல்லி தேர்தலை முன்னிட்டும் ஊழலற்ற நிர்வாகம் அமைப்பதற்காகவும் இத்தொகையை வழங்கியுள்ளனர்.

  நீதி: இவர்களில் தொழிலதிபர்கள் யார், அவர்கள் என்ன தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள், முறையாக வரி கட்டுகிறார்களா, அரசு வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப கட்டுகிறார்களா என்பதையெல்லாம் ஆம் ஆத்மி கட்சி வெளியிடுமா?

  ==> First you declare ma

 3. அகில உலகங்களும் அல்லாஹ்வின் படைப்பு தான்..

  சௌதி அரபிய ஆட்ச்சியாளர்கள் அமெரிக்க மாமாக்கள்.. தயவு செய்து இஸ்லாத்தை அந்த மாமாக்களுடன் தொடர்பு படுத்தாதீர்கள்..

  • \\அகில உலகங்களும் அல்லாஹ்வின் படைப்பு தான்..\\

   அப்புறம் ஏன் உள்நாட்டு தொழிலாளி, வெளிநாட்டு தொழிலாளின்னு பிரிச்சு பார்த்து ,வெளிநாட்டு தொழிலாளி எல்லோரையும் வெளியே அனுப்புகிறீர்கள்

 4. வெளிநாட்டு தொழிலாளிகள் அனைவரையும் சவுதி வெளியனுப்புவது போல் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. வேலை செய்ய தகுந்த ஆவனம் இல்லாதவர்களுக்கு 9 மாதம் அவகாசம் கொடுத்து அதற்கு மேலும் ஆவனம் எடுக்க முடியாதவர்க்ளைத்தான் வெளியனுப்புகிறது.இது இந்தியர்களுக்கு மட்டும் அல்ல.அனைத்துநாட்டு மக்களுக்கும் பொருந்தும்.

 5. செய்தி ; சு.சாமி ;என்.ட்.டீ.வி பேட்டி: நிறைய பேர் புலிகளிடம் சம்பளம் வாங்கிண்டு பேசறா…

  நீதி: நீ எவனிடம் வாங்குறே? சிங்கத்திடம்தானே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க