காஷ்மீர் மக்களின் தேசிய இனப் போராட்டத்தை தீவிரவாதமாகவும், பாக் சதியாகவும் மட்டும் பார்க்க பழக்கும் அரசு – ஊடகங்களின் செல்வாக்கு, வட இந்தியாவில் அதிகம். அதனால் எங்கு சென்றாலும் காஷ்மீர் மாணவர்கள் இத்தகைய வன்மத்துடன்தான் பார்க்கப்படுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

சு வாமி விவேகானந்தா சுபார்த்தி எனும் தனியார் பல்கலைக் கழகம் உபி மாநிலம் மீரட் நகரில் உள்ளது. இங்கு படிப்பவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காஷ்மீர் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் நிரந்தர ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரில் கல்வி, அதுவும் உயர் கல்வி கற்பது என்பது பல்வேறு காரணங்களால் கடினமானது. கல்லூரிகளும் அதிகம் இல்லை. இதன் பொருட்டு காஷ்மீர் மாணவர்கள் அருகாமை வட இந்திய மாநிலங்களில் படிக்கச் செல்கின்றனர்.
சுபார்தி பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிறு 2.3.2014 அன்று மாணவர்கள் அவர்கள் தங்கியிருக்கும் மதன் திங்கரா விடுதியில் கிரிக்கெட் போட்டியை பார்த்திருக்கின்றனர். வங்கதேசத்தில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கான லீக் சுற்று போட்டி ஒன்றில் இந்தியாவும், பாக்கும் மோதி அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் போட்டி நடக்கும் போது காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தான் அணியை ஆதரித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் ஆட்டம் இருந்ததால் ஏனைய ‘இந்து-இந்தியா’ மாணவர்கள் காஷ்மீர் மாணவர்களின் குரலை கண்டு கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார். இதை காஷ்மீர் மாணவர்கள் கைதட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.
போதாதா, இந்து மாணவர்களுக்கு சினம் ஏறி காஷ்மீர் மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள். பத்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். மூத்த மாணவர்கள் தலையிட்டு காப்பாற்றவில்லை என்றால் சில காஷ்மீர் மாணவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அங்கு படிக்கும் காஷ்மீர் மாணவர் ஒருவர் கூறியிருக்கிறார். பிறகு காஷ்மீர் மாணவர்களின் விடுதி சன்னல்களை தாக்கி, உடைத்து இரவு முழுவதும் அச்சுறுத்தியவாறே இருந்திருக்கிறார்கள். காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் “காஷ்மீர் மாணவர்களை வெளியேற்று” என்று முழக்கமிட்டபடியே இந்து-இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை பெரும்பான்மையாகவும் விவேகானந்தரை பெயரிலும் கொண்டிருக்கும் பல்கலைக் கழக நிர்வாகம் என்ன செய்திருக்கும்? ‘இந்திய’ மாணவர்களின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்த நிர்வாகம் காஷ்மீர் மாணவர்கள் பலரை வளாகத்தை விட்டே வெளியேற்றியிருக்கிறது. அல்லது விரட்டியிருக்கிறது என்றும் சொல்லலாம். மேலும் எந்தக் காரணமோ விளக்கமோ அன்றி ரூ 5,000 அபராதமும் இம்மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
இம்மாணவர்களை அண்டை மாநிலங்களில் படிப்பதற்கு ஏற்பாடு செய்து அனுப்பும் “காஷ்மீர் கன்சல்டன்சி” நிறுவனத்தை சேர்ந்த ராபியா பாஜி, இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியவில்லை என்றாலும் அன்று மாலை பல்கலையின் தலைவர் அதுல் கிருஷ்ணா அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் குறித்து தெரிவித்திருக்கிறார்.
அதில் “ இந்த ஆண்டிலிருந்து காஷ்மீர் மாணவர்களுக்கு இடம் கொடுப்பதாக இல்லை, வேண்டுமானால் காஷ்மீர் மாணவர்கள் படிப்பதற்கு பாகிஸ்தான் செல்லலாம்” என்றும் கூறப்பட்டிருப்பதாக ராபியா தெரிவித்தார்.

இதே போன்று பஞ்சாப் மாநிலத்தில் தேசி பகத் பல் மருத்துவக் கல்லூரியிலும் காஷ்மீர் மற்றும் ‘இந்திய’ மாணவர்களிடையே இந்த கிரிக்கெட் போட்டியை வைத்து சச்சரவு எழுந்திருக்கிறது. எனினும் விவேகானந்தர் போல பகத் நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றவில்லை.
விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் மொத்தம் 67 மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காஷ்மீர் அனுப்பப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. மேலும் அந்த செய்தியில், பல்கலையின் துணை வேந்தரான டாக்டர் மன்சூர் அகமது, “இத்தகைய நடைமுறைகளை மேற்கொள்ளும் மாணவர்களை நாங்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் மாணவர்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டதாக சக மாணவர்கள் புகார் அளித்ததாக கூறும் அகமது அவர்களை மீது மட்டும் நடவடிக்கை எடுக்க நினைத்ததாகவும், அந்த மாணவர்கள் யார் என்று மற்ற காஷ்மீர் மாணவர்கள் தெரிவிக்க மறுத்ததால் 67 பேர்களை வெளியேற்றியதாகவும் கூறியிருக்கிறார்.
அந்த மாணவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று எதிர்பார்த்தாகவும் அது நடக்கவில்லை என்பதாலேயே இந்த் தற்காலிக நீக்கம் எடுக்க நேரிட்டது என்று அகமது நியாயப்படுத்துகிறார்.
கிரிக்கெட்டில் வெற்றி பெறும் பாக் அணியை இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள் என்று இந்துமதவெறி அமைப்புகள் இந்தியாவெங்கும் உருவாக்கியிருக்கும் ஒரு அவதூறும், வெறுப்புணர்வும் கலந்த கருத்து, நெடுங்காலம் செல்வாக்கோடு இருக்கிறது. முதலில் இது உண்மையல்ல. இங்கிருக்கும் முசுலீம்கள் எவரும் இந்தியாவைத்தான் தமது நாடாக கருதுகின்றனரே அன்றி பாக்கை அல்ல.
முசுலீம் என்றால் மதம்தான் முக்கியம், தேசிய இனம், மொழி, நாடு, வர்க்கம், பால் என்பதெல்லாம் அப்புறம்தான் என்ற கருத்து முதன்மையாக ஏகாதிபத்திய ஊடகங்களால் பரப்பப்படுகிறது. அமெரிக்காவின் இளவல் சவுதி புரவலராக இருந்து உருவாக்கிய இசுலாமிய மதவாதிகள் கூட அப்படித்தான் கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய மதம் சார்ந்த இசுலாமிய சகோதரத்துவம் இந்த உலகில் எப்போதும் இருந்ததில்லை. காரணம் ஒரு மனிதன் அல்லது சமூகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை அல்லது மதத்தோடு தொடர்புடையவை அல்ல.
மேலும் குறிப்பிட்ட மக்களை ஒடுக்கும் இன-மத-ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளர்கள் அனைவரும் ஒடுக்குபவர்கள் குறித்த துவேசத்தை கிளப்புகிறார்கள். தேவையென்றால் அமெரிக்கா தன்னை இசுலாத்தின் புனிதனாக காட்டிக் கொள்ளும். தேவையில்லை என்றால் இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தைக் கண்டிக்கும்.
இப்படித்தான் இந்தியாவில், பார்ப்பன இந்துமதவெறி இயக்கங்களால் இந்த கிரிக்கெட் பிரச்சினையில் மதம் திணிக்கப்பட்டது. இந்திய முசுலீம்கள் அனைவரும் இந்துமதவெறியர்கள் உருவாக்கியிருக்கும் அவதூறுகளை அன்றாடம் சந்தித்தபடியேதான் வாழ்கிறார்கள். மேலும் குஜராத் போன்ற நாடறிந்த கலவரங்கள் வரும் போதும், அதில் இந்துமதவெறியர்களை ஜனநாயகத்தின் படியே தண்டிக்க முடியாது என்று இந்த நாட்டின் அரசியல்-நீதி அமைப்புகள் நிரூபிக்கும் போது ஒரு கோபம் கொண்ட இசுலாமிய இளைஞன் சுலபமாக தீவிரவாதத்தின் பக்கம் போக முடியும். அப்படி போக முடியாமலும், அதே நேரம் இந்த நாட்டின் மீது தனது அதிருப்தியை காட்ட வேண்டும் என்று விரும்பும் ஒரு இசுலாமிய இளைஞன் பாக் கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கை தட்டுவதற்கு வாய்ப்பிருப்பதை அனைவரும் உணர வேண்டும். எனினும் அப்படி அநேகம்பேர் கைதட்டுவதில்லை.
ஆனால் விளையாட்டில் அரசியலும், தேசபக்தியும் நுழைந்தது எப்படி?
இந்த உலகில் விளையாடப்படும் அனைத்து அணி விளையாட்டுகளிலும் அதன் போட்டிகளிலும் இத்தகைய சமூக, அரசியல் நிலைமைகள் காரணமாக ரசிகர்கள் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ செய்கின்றனர். ஏகாதிபத்தியங்களால் பிரிந்திருக்கும் உலகில் விளையாட்டுகள் மட்டும் ஒற்றுமையை ஏற்படுத்தி விடாது. கால்பந்து போட்டியில் அமெரிக்க அணியை ஈரான் அணி வென்றால் ஈரான் மக்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். ஜப்பான் அணியை சீனா வென்றால் அதன் மக்களும் கொண்டாடுவார்கள்.
ஈழப்போராட்டத்தை ஒடுக்க சிங்கள அரசுக்கு உதவியாக இருக்கும் இந்தியாவை கண்டிக்க நினைக்கும் ஒரு ஈழத்தமிழர், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைப்பதற்கும் இதுவே காரணம். இப்படித்தான் காஷ்மீர் மக்களும் தங்களை ஆக்கிரமித்து கொன்றோ இல்லை சித்ரவதை செய்தோ நடத்தி வரும் இந்தியாவை இயல்பாக வெறுக்கிறார்கள். இங்கே இந்தியா என்பது அரசு-கட்சி-இராணுவம்-நீதி-நிர்வாக அமைப்புகளின் கட்டுமானத்தை குறிக்கிறதே அன்றி இந்திய மக்களை அல்ல.
மூவர்ணக் கொடி பறப்பது, ஜனகனமண பாடுவது, வீட்டில் பாரதமாதா படத்தை பூஜை செய்வதையெல்லாம் வைத்து தேசபக்தியை மதிப்பிடுவது பார்ப்பனிய மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. ஒருவகையில் இது அடக்குமுறைக்கான பாசிச கருத்தியலாகவும் விளங்குகிறது. உண்மையில் இந்திய தேசபக்தி என்பது அங்கு வாழும் மக்களின் துன்ப துயரங்களோடு தொடர்புடையது. அதனால்தான் காஷ்மீர் மக்களின் துயரத்தை பார்த்து நாம், ஆளும் வர்க்க இந்தியாவை கண்டிக்கிறோம்.

காஷ்மீரில் ஐந்தடிக்கு ஒரு இந்திய இராணுவத்தின் துப்பாக்கியை பார்த்து மிரண்டவாறே காலத்தை ஓட்டும் மக்களில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், வாழ்க்கையை இழந்தவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று ஏதாவது ஒரு பாதிப்பின்றி எவரும் இல்லை. மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் கிரமமாக தமது வாழ்க்கை வசதிகளுடன் வாழும் சூழலில் காஷ்மீரின் சூழலை பலரும் புரிந்து கொள்வதில்லை.
ஒருக்கால் தேசபக்தி வெறி கொண்டு காஷ்மீரை நடத்துவதாக இருந்தால் முழு காஷ்மீர் மக்களையும் கொன்றால்தான் பள்ளத்தாக்கை இந்தியாவோடு இணைத்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் பல மாநிலங்களில் மக்களே இருக்க முடியாது எனும் நிலையே உள்ளது. இந்நிலையில் ஒரு காஷ்மீர் மாணவன் கிரிக்கெட் போட்டியில் பாக்கை ஏன் ஆதரிப்பான் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ‘பயங்கரவாதத்தின்’ அபாயத்தை வரவேற்கிறீர்கள் என்று பொருள்.
காஷ்மீரில் இந்திய அரசின் அடக்குமுறை மட்டுமல்ல, அதை கேடாகப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானும் நிறைய தீங்கை இழைத்திருக்கின்றது. முக்கியமாக ஜனநாயக முறையில் இருந்த விடுதலை இயக்கங்களை மதவாதிகளாக மாற்றியது பாக்கின் சாதனை. என்றாலும் இந்தியா போன்று பாக் நேரடியாக காஷ்மீர் மக்களை ஒடுக்கவில்லை, இந்தியாவை அநேக நேரங்களில் எதிர்க்கிறது, போராட்டத்திற்கு உதவி செய்கிறது என்ற காரணங்களினால் காஷ்மீர் மக்களிடையே பாக் மீது ஒரு கரிசனம் இருக்கிறது.
ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழகத்து மக்கள் மீது அப்படி ஒரு கரிசனம் இருப்பதை இதோடு ஒப்பிட்டுச் சொல்லலாம். அதனால்தான் சிங்கள இனவெறி அரசும் கூட ஏனைய இந்தியாவை ஆதரித்தும் தமிழகத்தை எதிர்த்தும் வருகிறது. ஆகவே ஒரு இனத்து மக்கள் தமது உயிர்வாழும் உரிமைக்கு ஆதரவானவர்களோடு இணக்கம் காண்பிப்பது இயல்பானது. இதை தேசபக்தியோடு முடிச்சுப் போடுவது அயோக்கியத்தனம்.
காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா, இல்லை பாக்கோடு இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பதெல்லாம் அவர்களுடைய சுயநிர்ணய உரிமையோடு சம்பந்தப்பட்டவை. அத்தகைய முடிவு எடுக்கும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தை ஆதரிப்போர் செய்ய வேண்டிய கடமை. இதில் அவர்கள் இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அது அடக்குமுறை மூலம் சாத்தியமில்லை, அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதெல்லாம் பாசிஸ்டுகளுக்கு புரிவதில்லை. துப்பாக்கிகளின் பலத்தில் வாழ்பவர்களுக்கு அன்பும், தோழமையும் சமத்துவத்தின் மூலம்தான் வரும் என்பதெல்லாம் தெரியாது.
ஆக மீரட்டில் படிக்கும் ஒரு காஷ்மீர் மாணவன் பாக் அணியை ஆதரிக்கிறான் என்பதை எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளாமல் அதன் சமூகப்பின்னணியை புரிந்து கொள்வதே அவசியம். ஆகையால் அது எந்தக்காலத்திலும் ஒரு குற்றமாக முடியாது. இதை இந்த அர்த்தத்தில் மட்டுமல்ல ஒரு விளையாட்டு என்ற கோணத்திலும் பார்க்கலாம்.

ஒரு விளையாட்டு போட்டியில் இரு நாட்டு அணிகளே போட்டியிட்டாலும் கூட ஒரு நாட்டு ரசிகன் தனது நாட்டைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. விளையாட்டை விளையாட்டாய் ரசிப்பவர்கள் எந்த நாட்டையும் ஆதரிக்கலாம், எந்த நாட்டு வீரருக்கும் ரசிகராக இருக்கலாம். இதையெல்லாம் தேசபக்தி அல்லது தேச துரோகத்தோடு முடிச்சுப்போடுவது அயோக்கியத்தனம். பொதுவில் விளையாட்டு என்பது மதம்,மொழி,இனம்,நாடு கடந்தது என்று சொல்லிவிட்டு நாடுவிட்டு நாடு ஆதரித்தால் மட்டும் தேச துரோகம் என்று சொல்பவர்களை எதைக் கொண்டு அடிப்பது?
மீரட் பல்கலைக்கழகத்தில் இந்த பிரச்சினையை வேறு முறையில் கையாண்டிருக்க வேண்டும். காஷ்மீர் மாணவர்களை தாக்கிய பிற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அதே காஷ்மீர் மாணவர்கள் இந்தியா மீது ஒரு புதிய நம்பிக்கையை பெற்றிருக்க கூடும். மாறாக அவர்கள் இந்தியா மீது என்ன கோபத்தை கொண்டிருந்தார்களோ அதை பல்கலைக்கழக நிர்வாகம் அதிகப்படுத்தியிருக்கிறது.
ஊடகங்களிலும் நிர்வாகத்திற்கு ஆதரவான தேசபக்தி வன்முறையின் ஒளியிலேயே இந்த செய்தி வந்திருக்கிறது. பல ஊடகங்களில் இந்த செய்தி வரவே இல்லை. தினமணியில் இந்த செய்தியை பல்கலையின் பெயர் போடாமல் போட்டுவிட்டு துணை வேந்தர் அகமதுவின் கருத்தை மட்டும் கவனப்படுத்தி போட்டிருந்தார்கள். அதாவது ஒரு இசுலாமியர், காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக நாம் புரிந்து கொள்ள வேண்டுமான். இது குறித்து செய்தி வெளியிட்ட எந்த ஊடகங்களும் காஷ்மீர் மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டிக்கவில்லை. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம்.
என்னதான் தேசபக்தி என்று கூச்சமிட்டாலும், வல்லரசு என்று பெருமிதத்தை கடைவிரித்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டத்தை எவரும் அடக்கியதாக சரித்திரமில்லை.
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.
இன்னும் புரியும் விதத்தில் சொல்வதாக இருந்தால் இந்திய அணியை தோற்கடித்த பாக் அணியின் வெற்றியை நாமும் கொண்டாடுவோம்.!
___________________
மேலும் படிக்க
//ஒடுக்கப்படும் மக்கள் போராட்டத்தை எவரும் அடக்கியதாக சரித்திரமில்லை.
/ஒரு விளையாட்டு போட்டியில் இரு நாட்டு அணிகளே போட்டியிட்டாலும் கூட ஒரு நாட்டு ரசிகன் தனது நாட்டைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. விளையாட்டை விளையாட்டாய் ரசிப்பவர்கள் எந்த நாட்டையும் ஆதரிக்கலாம், எந்த நாட்டு வீரருக்கும் ரசிகராக இருக்கலாம். இதையெல்லாம் தேசபக்தி அல்லது தேச துரோகத்தோடு முடிச்சுப்போடுவது அயோக்கியத்தனம். பொதுவில் விளையாட்டு என்பது மதம்,மொழி,இனம்,நாடு கடந்தது என்று சொல்லிவிட்டு நாடுவிட்டு நாடு ஆதரித்தால் மட்டும் தேச துரோகம் என்று சொல்பவர்களை எதைக் கொண்டு அடிப்பது?/
இந்த கேடு கெட்ட இந்திய அரசியல் வாதிகளும் இந்து – இந்தியர்களும் கல்பனா சாவ்லா விற்கு விருது வழஙகுவார்கள் – கேட்டால அவள் இந்திய தேசியாவாதி ஏனென்றால் அவள் அமெரிக்க குடியுரிமை பெற்றவள்
பில்கேட்சை ஆதரிக்கலாம், ஓபாமாவை ஆதரிக்கலாம், ரபேல் நடாலை ஆதரிக்கலாம், வில்லியம் சகோட்கரிக்ளை ஆதரிக்கலாம் ஆனால் பாக்கிஸ்தானைச் சேர்ந்த யாரையும் ஆதரிக்கூடாதாம், நாங்கள் யாரையும் ஆதரிப்போம் எங்களை சொல்ல இந்து – இந்தியர்களுக்கும் உரிமை இல்லை
எனக்கு பிடித்த டீம் பாக், இலங்கை
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.
புரட்சியாளன் பகத்சிங் தெரியுமா??
அந்த மாபெரும் மனிதன் பிறந்த மண் எது ??அது எங்கிருக்கிறது தெரியுமா??
இப்பொழுது பாக்கிஸ்தான் என்று அழைக்கிறோமே, அங்குள்ள லாகூர் அருகேயுள்ள ஒரு
கிராமத்தில்தான் பிறந்தார்.அவர் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பாக்கிஸ்தான்
அரசாங்கம் நிதி ஒதுக்கி ஒரு சுற்றுலா தளமாக ஆக்கி வருகிறார்கள்.அந்த புரட்சியாளனுக்கு
அவர்கள் செய்யும் மரியாதையில் ஏதேனும் சிறிதளவாவது நாம் செய்கிறோமா??
அங்குள்ள சாதரண மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பார்ப்போம். அது போல் நாமும் வாழ
முயற்சிப்போம்.
வேண்டாத பகை உணர்வை மனதிலிருந்து அகற்றுவோம்.
Bhagat Singh from Lyallpur(Faislabad today) not lahore,Lyallpur is not a village but a big city.
2 more people died with him,Rajguru & Chandrashekar Azad.
40% of Hindu/Sikh people who migrated during partition from Lyallpur were slaughtered by Muslims.
Ara korai arivoda inga post panna vandhuttanga.
பாக்கிஸ்த்தான் அணியை ஆதரிப்பது குற்றமில்லை…ஆனால் அதை ஏதோ மிகப்பெரிய வீர சாகசமாகவும், இந்தியாவை ஆதரித்தால் இந்து மத வெறியன் போலவும் வினவு சித்தரிப்பது கேலிக்க்குறியது…. இதே பாகிஸ்த்தான் உலக கோப்பை போட்டியில் டெண்டுல்கரின் மட்டையின் அடியில் அடிமை போல சுருண்ட போது வினவு வெளியிட்டு இருந்தால் தோழரின் நடுநிலைமையை பாராட்டலாம்…. மிக சொற்ப்ப வாசகர்ளை ( அதுவும் போராளிகளை அல்ல, போரடித்தால் வலையை நோண்டுபவர்கள்!!!!!!) கொண்ட வினவு அற்ப்பத்தனமான் கட்டுரைகளை தவிர்க்கவேண்டும்… ஆஜ்மல் கசாபை அனுப்பிய பாகிஸ்தான் போன்ற கோழை நாட்டவர்களைவிட இந்திய மக்கள் எவ்வளவோ மேல்…..
இந்தியன் ?????? அது என்னையா இந்தியன் ????? ஒரு வேளை இந்தியன் என்றாலே.. இப்படி தான் என புரிய வைக்கின்றீரா? அதுவும் இந்த முறை பெயரிலேயே தவறுடன்..
சரி உமது பிளாக் லிங்க் கொடும்…
சொற்ப வாசகர்கள்தான் வினவுக்கு இருக்குனு இன்ட்டியன் அண்ணன் கணக்கெடுத்து கண்டுபிடிச்சிட்டாப்ல….என்ன ஒண்ணு இந்த சொற்ப வாசகர்கள்கிட்ட அண்ணன் டவுசர் கழண்டு ஓடுனதும் அண்ணன் கணக்குப்படி சொற்ப முறைதானுதாங்கோ…..
இந்தியன் அவர்கள் சொன்னாது சரியன கருத்து….
செய்தி வாசிப்பவர் தொலைகாட்சியில் இப்படி சொன்னார்.இந்தியா பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொண்டது.அக்கிரகார விளையாட்டான கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்ற செய்தியில் கூட பார்ப்பன கொலைவெறி! நானும் காஸ்மீரத்து மாணவர்கள் போல இந்தியா தோல்வி அடைவதையும்,இலங்கை படுதோல்வி அடைவதையும் ரசிக்கிரேன்.ஆனால் ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்தியா பாக்கிஸ்தானிடம் தோற்றுபோனது மோ..டீ யின் வெற்றியை பாதிக்கும் என்ற பயம் பார்ப்பன கும்பலுக்கு வந்துவிட்டது.இந்திய மக்கள் அFரிடியின் கையில் இருக்கும் பேட் போலவும் மோடி எனும் பந்து அடித்துவிளாசப் பட்டு சிக்சர் ஆகி காணாமல் போவது போல் கெட்ட கனவு.அபசகுணமாக தெரிவதால் யாகம்நடத்த அம்பிகள் ஏற்பாடு செய்வார்கள் என நம்பலாம்.
//அக்கிரகார விளையாட்டான கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்ற செய்தியில் கூட பார்ப்பன கொலைவெறி! //
அக்கிரகார எதிர்ப்பு விளையாட்டான கபடியில், சென்ற டிசம்பர் மாதம் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றபோது கொண்டாட மறந்துவிட்டீர்களோ..
சமீபத்தில் பஞ்சாபில் நடந்த கபடி போட்டியில் ’சூத்திர’ இந்தியர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பாகிஸ்தானிய சிங்கங்களை பாராட்டும் பாகிஸ்தானிய பார்ப்பன ஏடு..:
http://www.nation.com.pk/sports/04-Mar-2014/pakistan-men-s-team-teach-india-kabaddi-lesson
அய்யா,கபடி அக்கிரகார எதிர்ப்பு விளையாட்டு என்று யார் சொன்னார்கள்?அங்கும் கோடிகள் புரளுமானால் அக்கிரகாரம் கபளீகரம் செய்துகொள்ளும்.மேட்ச் பிக்சிங்,சூதாட்டம்,குத்தாட்டம் எல்லாம்நடக்கும்.வருமானம் இருந்தால் மாரியாத்தா கோவிலுக்கும் மணியாட்ட வருவார்கள் பார்ப்பனர்கள்.
//வருமானம் இருந்தால் மாரியாத்தா கோவிலுக்கும் மணியாட்ட வருவார்கள் பார்ப்பனர்கள்.//நல்லா சொன்னீங்க தல… வந்துட்டானுங்கையா வந்துட்டானுங்க.
உங்க தலயும் பாகிஸ்தான் செய்தி தளத்திலிருந்து டக்குன்னு மாரியாத்தா கோவில் பக்கம் தாவிட்டாரு..
அந்த பாக் செய்தி தளத்தில் போட்டிருக்கும் படத்தையும் உங்க தல ரசிச்சாரா என்னன்னு கேட்டுச் சொல்லுங்க.. ஆமான்னாருன்னா உங்க தலயையும் உங்களையும் மாரியாத்தா சூலத்தால குத்தாம இருக்க ஒரு பரிகார பூஜை பண்ணவேண்டியிருக்கும்..(குறிப்பு : ”செய்தி வாசிப்பவர் தொலைகாட்சியில் இப்படி சொன்னார்.இந்தியா பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொண்டது.அக்கிரகார விளையாட்டான கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்ற செய்தியில் கூட பார்ப்பன கொலைவெறி! நானும் காஸ்மீரத்து மாணவர்கள் போல இந்தியா தோல்வி அடைவதையும்,இலங்கை படுதோல்வி அடைவதையும் ரசிக்கிரேன்.” – தல )
Entha oru manavanum thannudaiya thai nattai athigam nesikkamal irrukka mattan. Thannudaiya thaiyai than siranthaval enru pottruvan. Intha katturayil kasmir manavargalin kuthattam pattri virivaga ezhutha villai. Intha katturaiyin asiryar inthiyavil ithu ponra kondattangali hyderabad mattrum karnatakavil sendral kankulira parkalam. Athuvum inthiya thotral jandippaga vedi vaithu kondaduvargal. Kasmir makkalukku inthiya thannudaiya thai nadu enra ennam sirithalavum illai. Athupola avarkalukku pakisthan than ellam. athai than avargal thai nadaga yerkirargal. Enave avargalin kondattam iyarkkaiye. irandu manava samugathin thesa pakithiyai ippadi matha veriyaga parpathu asiriyarin unmai vetkaiyai kattukirathu. Athuvum mathathai ivarthan sambantha paduthikirar. manavargal kandipaga ithu ponru thavarugalai seivathillai, avarkalaugu nattpu than ellam, athupoga thannudaiya thainadu thorpathai veru oruvan kondaduvathu nichayamaga yarrukkum pidikathu.
Olympic ponra sarvathesa pottikal, nadukalukku idaiye nadakirathu, athile kalanthu kollum ella virarkalum thannudiya thai nattu kodiyai than thangi pidikirargal. vilayattu enbathu vilayattga eduthu kollum monobhavam virarkalukku mattum porunthume thavira athai parkkum rasikargalukku alla. vettriyai thannudaiya thai nattin kavurvamagavum, athai kondadum manopavam anaithu nattu makkalukkum irupathu iyarkiye. Thannudaiya nattil thannudaiya thai nadu thorpathai kondadum matra manithargalai kandal veruppu yerpaduvathum athanal kaikalappu yerpaduvathum nadakkum vizhayame.
அப்படிஎன்றால் பாகிஸ்தான் சென்று கல்வி கற்கலாமே!!! எதற்கு இந்தியாவில் படிக்கிறார்கள் ?? இந்திய அரசைத்தான் எதிர்க்கிறோம் என்றால், விளையாட்டு வீரர்கள் என்ன இந்திய அரசா ??? அவர்கள் இந்தியாவையும் இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திதான் விளையாடுகிறார்கள், இந்திய அரசை அல்ல……அப்படியிருக்க, இந்திய அணியை வெறுப்பது ஏன்??? இந்திய அணி தோற்றதால் இந்திய அரசுக்கு ஒரு இழப்பும் இல்லை…..ஒட்டுமொத இந்தியர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமே மிஞ்சும்
//அப்படிஎன்றால் பாகிஸ்தான் சென்று கல்வி கற்கலாமே!!! // பிறகு ஏன் காஷ்மீர் இந்தியாவோடு இருக்க வேண்டும்.
//விளையாட்டு வீரர்கள் என்ன இந்திய அரசா ??? அவர்கள் இந்தியாவையும் இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திதான் விளையாடுகிறார்கள்//இதை ஏன் நீ இந்திய அணியை ஆதரிப்பவர்களையும் கேட்க்க கூடாது
//அப்படியிருக்க, இந்திய அணியை வெறுப்பது ஏன்??? //
வெண்ண ,கட்டுரையை ஒழுங்கா படி
இந்தியா வேண்டாமாம், ஆனால் இந்தியாவில் கல்வி மட்டும் கற்றுக்கொள்ள வேண்டுமாம், அதுவும் இந்தியாவில் இருந்துகொண்டே இவர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவார்களாம்…….இது என்ன கொடுமை……
இந்திய அணி, இந்தியர்களை இந்தியாவை ப்ரிதிநிதிப்படுத்துகிறது…..பிறகு, இந்திய அணியை இந்தியர்கள் ஆதரிக்காமல், பாகிஸ்தானா வந்து ஆதரிக்கும் ???
BCCI எனபது ஒரு கிரிக்கெட்டு க்ளப் .ஆதரிக்காம பாகிஸ்தான் க்ளப் ஆதரிச்சா இந்தியால படிக்க கூடாதாம், இந்தியாவை வுட்டு போயிடனுமாம் ….கோவணத்த இருக்கி கட்டிகிட்டு பார்ப்பன குடிமிகள் அடிக்கற லூட்டி இருக்கே அய்யோயோயோ ….
//அப்படிஎன்றால் பாகிஸ்தான் சென்று கல்வி கற்கலாமே!!! //
நல்ல கேள்வி
கிளியை கூண்டில் அடைத்து அய்ய தான் எஜமான் என்று சொல்ல சொல்வது சொல்லாவிடில்நான் தான் உனக்கு சாப்பாடு போடுகிறேன் என்று சொல்லி தன்டிப்பது போல் உள்ளது.
அவர்கள் பாகிஸ்தான் சென்று கல்வி கற்பது இருக்கட்டும். முதல் நீங்கள் அவர்களை விட்டு அகலுங்கள்
ஆனந்த்.
எந்த ஒரு மாணவனும் தன்னுடைய தாய்நாட்டை அதிகம் நேசிக்காமல் இருக்க மாட்டான்.
தன்னுடைய தாய்யைதான் சிறந்தவள் என்று போற்றுவான்.இந்த கட்டுரையில்.காஷ்மீர்
மாணவர்களின் குத்தாட்டம் பற்றி விரிவாக எழுதவில்லை.இந்த கட்டுரையின் ஆசிரியர் இந்தியாவில்
இது போன்ற கொண்டாட்டங்களை ஹைதரதாபாத்,மற்றும் கர்நாடகாவில் சென்றால் கண் குளிர
பார்க்கலாம்.அதுவும் இந்தியா தோற்றால் கண்டிப்பாக வெடி வெடித்து கொண்டாடுவார்கள். காஷ்மீர்
மக்களுக்கு இந்தியா தன்னுடைய தாய் நாடு என்ற எண்ணம் சிறிதளவும் இல்லை. அதுபோல
அவர்களுக்கு பாக்கிஸ்தான் தான் எல்லாம்.அதைத்தான் அவர்கள் தாய்நாடாக ஏற்கிறார்கள்.எனவே
அவர்களின் கொண்டாட்டம் இயற்கையே.இரண்டு மாணவ சமூகத்தின் தேசபக்தியை இப்படி மத
வெறியாகப் பார்ப்பது ஆசிரியரின் உண்மை வேட்கையை காட்டுகிறது.அதுவும் மதத்தை இவர்தான்
சம்பந்த படுத்துகிறார்.மாணவர்கள் கண்டிப்பாக இது போன்றதவறுகளை செய்வதில்லை,அவர்களுக்கு
நட்புதான் எல்லாம்,அதுவும் தன்னுடைய தாய் நாடு தோற்பதை வேறு ஒருவன் கொண்டாடுவது
நிச்சயமாக யாருக்கும் பிடிக்காது.
// பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா
முசுலீம் என்றால் மதம்தான் முக்கியம், தேசிய இனம், மொழி, நாடு, வர்க்கம், பால் என்பதெல்லாம் அப்புறம்தான் என்ற கருத்து முதன்மையாக ஏகாதிபத்திய ஊடகங்களால் பரப்பப்படுகிற //
நகை முரண்
பாலஸ்தீன மக்களுக்காக அவர்கள் வருந்துவது இலங்கை தமிழர்களுக்காக வருந்துவதை விட அதிகம் . இது சரி தவறு என்று வாதிட விரும்பவில்லை . இந்த தாக்கம் மத அடிப்படையில் வராமல் மனிதம் அடிப்படையில் வந்ததா ?
//காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா, இல்லை பாக்கோடு இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பதெல்லாம் அவர்களுடைய சுயநிர்ணய உரிமையோடு சம்பந்தப்பட்டவை//
எங்க ஊரு குப்பனாயக்கன் பட்டிஇக்கு தனி நாடு வேணும் . இந்திய அரசு சாலை வசதி செய்து தரவில்லை
//கிரிக்கெட்டில் வெற்றி பெறும் பாக் அணியை இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள் என்று இந்துமதவெறி அமைப்புகள் இந்தியாவெங்கும் உருவாக்கியிருக்கும் ஒரு அவதூறும்//
This news is about their celebration. Nobody lied it is the bitter truth. I have seen the celebration and one of my friend cheering and showing pride for pakistan. This guy is not from educated family
However other muslim friends who are from educated family does not want to support Pak.
I see this as an identity crisis. Do you want to identify based on your country with alien culture or the enemy with your culture.
It is easy for me to support my country which is inline with my culture
For him the choice is not simple.
//மூவர்ணக் கொடி பறப்பது, ஜனகனமண பாடுவது, வீட்டில் பாரதமாதா படத்தை பூஜை செய்வதையெல்லாம் வைத்து தேசபக்தியை மதிப்பிடுவது பார்ப்பனிய மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல//
If they are not the right scale to measure patriotism what else?
So we should not trust the people who sing Jana gana but the the person who claps for Pak ?!
அந்த நிர்வாகம் 67 மாணவர்களை கொன்றிருந்தாலும் அது சரியாகதான் இங்கே கருத்து பேசும் பலருக்கு பட்டிருக்கும்.
நாம் ஆஸ்திரேலியாவை ஆதரிக்கலாம், அமெரிக்காவை ஆதரிக்கலாம், சீனாவை ஆதரிக்கலாம் ஆனால், பாகிஸ்தானை மட்டும் ஆதரிக்க கூடாது. அப்படி ஆதரித்தல், அது நமது தேசபக்தியை குறைத்துவிடும்.
எனக்கு தெரிந்து, இந்தியாவில் இருக்கும் சாதாரண மக்களும், பாகிஸ்தானில் இருக்கும் சாதாரண மக்களும் ஒருவருடன் இன்னொருவர் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர். அப்படி சேர்ந்து விட்டால், பல அரசியல்வாதிகள் பிழைக்க முடியாது. அதுனாலேயே இந்த நஞ்சை மக்களின் மனதில் விதைத்துள்ளனர். இது இரண்டு நாட்டு அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
//This news is about their celebration. Nobody lied it is the bitter truth. I have seen the celebration and one of my friend cheering and showing pride for pakistan. This guy is not from educated family
However other muslim friends who are from educated family does not want to support Pak.
I see this as an identity crisis. Do you want to identify based on your country with alien culture or the enemy with your culture.
It is easy for me to support my country which is inline with my culture
For him the choice is not simple.//
This means you are okay to support muslims on the reservation claim or you will say “well no” and prove again to us you are a hypocrite
We are all international citizens and support good anywhere and oppose bad wherever it happens, Flags and Anthems mean nothing Humanity and the right to express whoever they support has to be protected no matter you agree with them or not
//This means you are okay to support muslims on the reservation claim or you will say “well no” and prove again to us you are a hypocrite//
Daliths were denied all the opportunity to own wealth ( education,land ,job) for 2000 years.
They have the right to get reservation
Are you saying, Muslims who ruled us for 800 years and never once denied opportunity to own a wealth should be treated on par with daliths just because he is muslim without checking if he is wealthy or not?
If you say so, then brahmins will also cry and demand reservation for their poor?
However if a dalith go to another religion , he should still be given reservation.
Justify me why muslims,Thevars,Velalrs be given reservation?
//We are all international citizens//
That works in paper. In reality you need army and Pakistan is our enemy
//Daliths were denied all the opportunity to own wealth ( education,land ,job) for 2000 years.
They have the right to get reservation
Are you saying, Muslims who ruled us for 800 years and never once denied opportunity to own a wealth should be treated on par with daliths just because he is muslim without checking if he is wealthy or not?
If you say so, then brahmins will also cry and demand reservation for their poor?
However if a dalith go to another religion , he should still be given reservation.
Justify me why muslims,Thevars,Velalrs be given reservation//
There you go hypocrite
Muslims died more in independence war when your grand fathers polished shoes for the british and held all the positions.
Muslims pulled their children out of educational institutions and fought british when your grand fathers waited in line to get sir and bagadur medals.
Why cant you simply agree every community gets the fair share of their reservation brahmins get their 1.5% and rest get the share according to their population.
Ofcorse you wont agree because you internally believe you are superior to others. This wont happen in tamil nadu ever, you can consider to leave to gujarat instead or any brahmin country or state if you have the balls to create one, Ofcorse you ar enot capable of that also as you are a parasite cant do things of your own.
No country is india’s enemy hypocrites like you are enemies to indian society
They say that Muslims should not lie,but this kayalaan is to think we ll believe whatever he says.
Nizam of hyd the most promiment king of Indian muslims was licking the boots of the british,so did nawabs of oudh,so did so many people,all punjabi muslims were serving in the british army and now he comes up with his gas.
People like Nawab of Pataudi were going to oxford n playing cricket,Sir Syed Ahmad khan established Aligarh Muslim University with the British,mr.Mohd Ali Jinnah smoking cigars/drinking whiskey n chewing pork split the independence movement to make pakistan.
Nizam of Hyd is settled in London with the money which he gave to pakistan.
Ivalavu unmayayum maraikkum enna vendru solvadhu.
மேலே குறிப்பிட்ட அளும் வர்க செம்பு தூக்கிகள் ஆங்கிலேயர்கள் காலை நக்கினார்கள் என்று வினவு ஏற்கனவே கூறியிருக்கிறது.
நீங்கள் பார்பனர்கள் ஆங்கிலேயர்கள் காலை நக்கினார்கள் என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.
ஆங்கிலேயர் காலத்தில் யார் யார் ஆங்கிலேயரிடம் பணி புரிந்தனர் ?
உழவு தொழில் செய்ய நிலம் இல்லாதவர் , வியாபராம் போன்ற சொந்த தொழில் இல்லாதவர் என அனைவரும் ஜாதி மதம் இல்லாமல் வர்க்க அளவில் , வெள்ளையனிடம் பணி புரிந்தார்கள்.
அட ராபர்ட் கிளைவ் கூட இந்தியாவில் இருந்து ஆட்களை தேர்ந்தெடுத்து அவருடைய போரிலே ஈடு படுத்தினான் . அப்போது கிளைவோடு சேர்ந்து போரிட்டவர்களை , வெள்ளையல் காலை நக்கினன்வன் என்பதா ? குறைந்த கூலிக்கு ரத்தம் உறிஞ்சியவர்களை விட நிறைந்த கூலிக்கு வேலை செல்வதை தொழிலாளி அடிப்படையில் எவ்வாறு தவறாகும் ?
ஹைதர் அலி பிரெஞ்சு அரசாங்கத்தின் படை தளபதி , உடனே அவன் பெரெஞ்சு கைக்கூலி என்பதா ?
பணி ஆற்றுவது எனபது வேறு , அதை பயன்படுத்தி மக்களை சுரண்டுவது எனபது வேறு
அரசாங்க பணி என்பதற்கு படிப்பறிவு வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே கல்வி அதை சார்ந்த தொழில்கள் பிராமணர்கள் செய்து வந்ததால் , அவர்களுடைய தொழிலில் அவர்களால் ஏற்றம் பெற முடிந்தது.
ராஜராஜ சோழன் பிராமனர்களைதான் அரசாங்கம் கணக்குக் வழக்கு பார்க்க வடக்கில் இருந்து கூட்டி வந்தான். பிராமணர்கள் ராஜராஜனின் காலை நக்கியதால் கூட்டி வரவில்லை
இசுலாமிய மன்னர்கள் கூட, பிராமணர்களை அரசாங்க வேலையில் அமர்த்தி இருந்தார்கள். ஏன் ?
அவர்கள் மற்றவர்களை அரசாங்க வேலையில் வளர் விடவில்லை எனபது மனித இயல்பே .
ஒரு விவசாயி ஜாதி , மற்ற ஜாதி மக்களை விவசாய எல்லைக்குள் விடுவதில்லை எனபது போலதான் இதுவும்
//மேலே குறிப்பிட்ட அளும் வர்க செம்பு தூக்கிகள் ஆங்கிலேயர்கள் காலை நக்கினார்கள் என்று வினவு ஏற்கனவே கூறியிருக்கிறது//
அதாவது இசுலாமியர் செய்வது ஓரிரு இசுலாமியர் செய்வதாக உங்கள் மனம் பொருள் கொள்கிறது
//நீங்கள் பார்பனர்கள் ஆங்கிலேயர்கள் காலை நக்கினார்கள் என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.
//
ஆனால் அதே போல ஓரிரு பார்பனர் செய்வது அனைத்து பார்பனர்களும் இப்படிதான் என்கின்ற உங்களது ஜாதி வெறி தெரிகிறது
ஓரிரு இசுலாமிய இளைஞர்கள் செய்ததை ஒட்டு மொத இசுலாமியர்களும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று நிறுவ முயலும் இந்து மத அடிப்படைவாத தந்திரமும் உங்கள் கூற்றும் தந்திரமும் ஒன்றே. முற்போக்கு என்று பெயரில் இருந்தால் போதாது சிந்தனையில் இருக்க வேண்டும்
//காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா, இல்லை பாக்கோடு இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பதெல்லாம் அவர்களுடைய சுயநிர்ணய உரிமையோடு சம்பந்தப்பட்டவை//
மக்கள் நிர்ணயிக்கலாம் என்றால் எந்த அளவுக்கு போகலாம்? ஒரு மாநிலம் தனி நாடு கேட்பது வரையா? அல்லது ஒரு மாவட்டம்? அல்லது ஒரு கிராமம்? ஒரு மனிதன் இந்தியாவை பிடிக்கவில்லை என்றால் தன்னுடைய வீட்டை தனி நாடாக அங்கீகரிக்க கேட்கலாமா?
என்ன அளவுகோலை வைத்து இது allowed அல்லது disallowed என்று முடிவெடுப்பது? அதை சொல்லிட்டு பிறவு பாப்போம் Kashmir பிரிக்கறதா வேணாமானு.
//மக்கள் நிர்ணயிக்கலாம் என்றால் எந்த அளவுக்கு போகலாம்? ஒரு மாநிலம் தனி நாடு கேட்பது வரையா? அல்லது ஒரு மாவட்டம்? அல்லது ஒரு கிராமம்? ஒரு மனிதன் இந்தியாவை பிடிக்கவில்லை என்றால் தன்னுடைய வீட்டை தனி நாடாக அங்கீகரிக்க கேட்கலாமா?
என்ன அளவுகோலை வைத்து இது அல்லொநெட் அல்லது டிசல்லொநெட் என்று முடிவெடுப்பது? அதை சொல்லிட்டு பிறவு பாப்போம் Kஅஷ்மிர் பிரிக்கறதா வேணாமானு.//
சகோதரா காஸ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் போது என்ன வாக்குறுதிகள் தந்து இணைத்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா?
இப்பொழுது அங்கு என்னநிலை தெரியுமா?
இதையெல்லாம் தெரிந்து அதன் பின்பு கருத்தை பதிவு செய்யுங்கள்…
It was decided that there will be the voting system for deciding the feature of Kashmir, United Kashmir, along with the region Occupied by Pakistan and China. Try to unite all parts of Kashmir, then we can call for the voting
//It was decided that there will be the voting system for deciding the feature of Kashmir, United Kashmir, along with the region Occupied by Pakistan and China. Try to unite all parts of Kashmir, then we can call for the voting//
Pls small one correction Kashmir not only occupied by China and Pakistan. It is occupied by India, Pakistan and china.
let kashmiris agree to liberate Jammu & Ladakh,we ll see then.
// இந்தியாவுடன் இணைக்கும் போது என்ன வாக்குறுதிகள் தந்து இணைத்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா//
I dont understand why did Nehru agreed to this. United India itself is new idea.It is not India took over Kashmir. When A country called India is formed, Kashmir is annexed. Now Giving freedom to Kahmir, will be below to the very idea for India.
And It may not be fair,but it is right thing to do.
I ask questions to Muslims who support Kashmir, Lahur was ruled by Sikh king and it was Sikh kingdom. If it is fair to split their country for the sake of muslims, to have their relegios rule, it is also fair.
தயவு செய்து வரலாறு தெரியாமல் கண்டக்க முண்டக்க என்று கருத்து கூறாதீர்கள்.
காஷ்மீர் பற்றி வரலாறு தெரியாதவர்களுக்கு,
http://www.countercurrents.org/puniyani041213.htm
https://www.youtube.com/watch?v=C65AB9PIlqM
https://www.youtube.com/watch?v=YBsLtp6kUw8
காஷ்மீரை பற்றியோ லாகூரை பற்றியோ நீர் யாருமையா முடிவு செய்வதற்கு. அது அந்த மக்கள் எடுக்க வேண்டியது.
//பாலஸ்தீன மக்களுக்காக அவர்கள் வருந்துவது இலங்கை தமிழர்களுக்காக வருந்துவதை விட அதிகம் . இது சரி தவறு என்று வாதிட விரும்பவில்லை . இந்த தாக்கம் மத அடிப்படையில் வராமல் மனிதம் அடிப்படையில் வந்ததா ?// கண்டிப்பாக மத அடிப்படையில் தான். ஆனால் பல இஸ்லாமியர்கள் ஈழ தமிழர்களுக்காகவும் வருந்துகின்றனர். பல இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றன.
ஆனால், அதற்க்கு மாறாக பார்ப்பனர்கள் பெரும்பாய்மையோர் ஈழ தமிழரை வெறுக்கின்றனர்,இலங்கையை ஆதரிக்கின்றனர், பாலஸ்தீன மக்களை வெறுக்கின்றனர் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். இதற்க்காக இஸ்லாமியாரை குற்றம் சொல்லும் எவரும் பார்ப்பனரின் மத அல்லது இன அடிப்படையை பற்றி கேள்வி எழுப்புவதில்லை.
//எங்க ஊரு குப்பனாயக்கன் பட்டிஇக்கு தனி நாடு வேணும் . இந்திய அரசு சாலை வசதி செய்து தரவில்லை // காஷ்மீர் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாததால் வந்த கருத்து.
//If they are not the right scale to measure patriotism what else?
So we should not trust the people who sing Jana gana but the the person who claps for Pak ?!//
எளிமையாக சொல்லனம்னா, மக்களை நேசிப்பதே தேச பற்று, நாட்டின் பரப்பளவை, நிலத்தை நேசிப்பது போலி தேச பற்று.
பல பார்ப்பனர்கள் ஈழத்தமிழர்களை வெறுக்கின்றனர்/வெறுத்தனர், அது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையினர் அசைக்க முடியாத இந்துக்கள் என்று தெரிந்தும், ஈழத்தமிழர்களுக்கெதிராக, சிங்களவர்களுக்காதரவாக பொய்ப்பிரச்சாரங்கள் செய்தனர்/செய்கின்றனர். உதாரணமாக, வன்னியில் இறுதி யுத்தத்தின் போது, அப்பாவி ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் போது, இந்தியா வெளிப்படையாக இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்க வேண்டுமென, தொலைக்காட்சிகளில் தோன்றி கருத்துத் தெரிவித்தனர் பிரபலமான தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களில் சிலர். இந்திய மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு (South Block) பூணூலால் வரிந்து கட்டப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். சோ ராமசாமி, சுப்பிரமணியம் சுவாமி, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாக இயங்கினர். ஏனென்றால் பார்ப்பனர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பெரியாரினதும், திராவிடக் கட்சிகளினதும் தனிநாட்டுக் கோரிக்கை என்ற பம்மாத்தின் தொடர்ச்சியாகக் கருதினர். தமிழ் நாட்டில் தமது ஆதிக்கத்தை இல்லாதொழித்து, தம்மை அமெரிக்காவுக்கும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் ஓடச் செய்த, திராவிட அரசியலை, திராவிடம் பேசும் தமிழர்களைப் பழிவாங்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள், தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளிடமிருந்த கோபத்தை ஈழத்தமிழர்களிடம் காட்டித் தணித்துக் கொண்டனர். ஆரம்பகாலத்தில், தமிழீழ விடுதலை இயக்கங்கள், நிதி, ஆயுத உதவி வேண்டி, திராவிடத்தலைவர்களின் சால்வைத் தலைப்பில் தொங்கியதும், அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இயங்கத் தொடங்கியதற்கு முக்கிய காரணமாகும்.
இவ்வளவுக்குப் பின்பும், பார்ப்பனர்களை எவரும் குற்றம் சாட்டுவதில்லை, ஏன் என்கிறார் அஸ்வின். ஆனால், பார்ப்பனர்கள் உண்மையில் தமிழர்களா இல்லையா என்பது தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து வரும் விவாதமாகும். அத்துடன் பல பார்ப்பனர்கள் கூடத் தம்மை, தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. பார்ப்பனர்களின் தமிழெதிர்ப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் தமிழர்கள் தானா என்பதில் கருத்து வேறுபாடு தமிழர்களில் பலருக்குண்டு. அவர்களில் பலர் தமது தமிழடையாளத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, முழு இந்தியாவிலும் தமது ஆளுமையை, இருப்பை தக்க வைத்துக் கொள்வதில் தான் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். ஆனால், இலங்கை முஸ்லீம்களைப் போன்று, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தாம் தமிழர்கள் அல்ல என்று வாதாடியதாக யாரும் கேள்விப்பட்டதில்லை. தமிழர்கள் எவருமே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழர்களல்ல என்று விவாதிப்பதில்லை. அதனால், தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழர்கள் தான் என்பது விவாதத்துக்குட்படாத ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். அதனால் தான், தமிழர்களாகிய தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஏன் தமது சகோதரர்களாகிய ஈழத் தமிழர்களுகாக குரலெழுப்பவில்லை, அவர்களின் மதம் அவர்களைத் தடுத்ததா என்ற கேள்வி எழுப்பும் என்னைப் போன்றவர்கள் பார்ப்பனர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. விளங்குதா? 🙂
பார்ப்பனர் யாரும் ஈழ தமிழரை வெறுக்கவ்இல்லை.
பிராபகரன் மேற்கு மாம்பலத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதும், மேலும் 1989 இல் தமிழகம் முழுக்க புலிகளை குவிததும்,திராவிட அரசியல் வாதிகளின் திமிரும் காவலித்தனமும் தான் புலிகள் மீது பார்ப்பனர் உட்பட பலருக்கு வெறுப்பை உண்டாக்கியது.
ஆனால் இது பங்காளி சண்டை போன்ற ஒன்று தானே தவிர,முஸ்லிம்களை போல் முட்டாள்தனமாக சிந்திப்பது இல்லை.
பல இலங்கை முஸ்லிம்கள் இன்று முஸ்லிம் என்ற ஆடாயலம் கொண்டுள்ளனர். மற்ற இருவருக்கும் மொழி ரீதியான அடையாளம் ஆனால் இவர்களுக்கு மட்டும் மத அடையாளம்.
//ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழகத்து மக்கள் மீது அப்படி ஒரு கரிசனம் இருப்பதை இதோடு ஒப்பிட்டுச் சொல்லலாம். அதனால்தான் சிங்கள இனவெறி அரசும் கூட ஏனைய இந்தியாவை ஆதரித்தும் தமிழகத்தை எதிர்த்தும் வருகிறது. ஆகவே ஒரு இனத்து மக்கள் தமது உயிர்வாழும் உரிமைக்கு ஆதரவானவர்களோடு இணக்கம் காண்பிப்பது இயல்பானது. இதை தேசபக்தியோடு முடிச்சுப் போடுவது அயோக்கியத்தனம்.///
இந்தக் கட்டுரையாசிரியர் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் மீதுள்ள கரிசனத்தை உதாரணம் காட்டி, தான் சொல்ல வந்த கருத்தைக் கோட்டை விட்டு விட்டார் போல் தெரிகிறது.
ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் மீது காட்டும் பரிவுக்கும், பாசத்துக்கும், தமிழ்நாட்டின் நலன்களில், அரசியலில், அக்கறை காட்டுவதற்கும் காரணம், தமிழ் நாட்டுத் தமிழர்களை எமது இரத்த உறவாக, எமது இனமாக, எமது மொழியின், எமது வரலாற்றின் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத அங்கமாகப் பார்க்கிறோம், அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கோயில்கள், சின்னங்கள், வரலாறு எல்லாவற்றிலும் எங்களின் முன்னோர்களுக்கும் எங்களுக்கும் தமிழர்கள் என்ற முறையில் பங்கிருப்பதாக உணர்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் போது நாங்கள் வேறு நாட்டில் இருப்பது போன்று அல்லது அன்னியராக உணர்வதில்லை. வரண்டு தண்ணியில்லாக் காடாக இருக்கும் தமிழ்நாட்டின் பகுதிகளில் கூட எங்களுக்கு அழகாகத் தெரிகிறது, ஏனென்றால் அந்த மண்ணுக்கும் எங்களுக்குமிடையே எங்களையறியாமலே ஒருவித தொடர்பை. பந்தத்தை உணர்கிறோம். அதே வேளையில் வேங்கடத்தின் குன்றுகளைத் தாண்டியவுடனேயே அந்த பந்தம், பாசம் எல்லாம் காணாமல் போய், ஒரு பயவுணர்வு வந்து விடுகிறது. எங்களையறியாமலே நாங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்கிறோம்.
நாங்கள் தமிழ்நாட்டில் கரிசனம் காட்டும் காரணம் எமது உணர்வு பூர்வமான பந்தமும், பாசமுமே தவிர, தமிழ்நாட்டு மக்கள் எமது “உயிர்வாழும் உரிமைக்கு” ஆதரவு தருகிறார்கள் என்பதற்காக அல்ல. அந்தக் காரணத்துக்காக நாங்கள் தமிழ்நாட்டில் கரிசனம் காட்டுவதாக இருந்தால். கனடாவின் மீது தான் நாங்கள் அதிகம் கரிசனம் காட்ட வேண்டும். அதனால், இலங்கைத் தமிழர்களின் தமிழ்நாட்டுக் கரிசனத்தை, காஸ்மீரிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு, அதுவும் அவர்கள் இந்தியாவுடன் விளையாடும் போது ஆதரவு தெரிவித்ததை நியாயப்படுத்த, உதாரணமாகக் காட்டுவது வெறும் அபத்தம் மட்டுமல்ல அயோக்கியத்தனம்.
அல்லது ஈழத் தமிழரக்ள் தமிழ்நாட்டில் கரிசனம் காட்டும் காரணங்களுக்காகத் தான் காஸ்மீரிகள் பாகிஸ்தானின் மீது கரிசனம காட்டுகிறார்கள், அதற்காகத் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்றால், அந்த இந்திய மாணவர்கள் ஆத்திரப்பட்டு, அவர்களை அடித்ததில் தவறேதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இந்திய மாணவர்களை ஆத்திரப்படுத்துவதற்காக கூட அவர்கள் அதைச் செய்திருக்கலாம். ஏனென்றால், இலங்கைச் சிங்களவர்களை எரிச்சலூட்ட, ஈழத்தமிழர்களும், இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஆதரிப்பதில்லை. தமிழ்நாடு தனிநாடாக இருந்து, இலங்கையும் தமிழ்நாடும் கிரிக்கெட் விளையாடினால், ஈழத்தமிழர்கள் நிச்சயமாக தமிழ்நாட்டைத் தான் ஆதரிப்பார்கள். ஆனால் இலங்கைக்கெதிராக, இந்தியக் கிரிக்கெட் வீரகளை ஆதரிக்குமளவுக்கு இந்தியாவின் மீது ஈழத்தமிழர்களுக்கு எந்தப் பந்தமும், பாசமும் கிடையாது. இலங்கைத் தீவின் மீது, குறிப்பாக வட, கிழக்கு மண்ணின் மீது ஈழத்தமிழர்களுக்கு தாய்நாட்டுப் பற்றுண்டு, ஆனால் சிங்கள சிறீலங்காவின் மீது தாய்நாட்டுப் பற்றுக் கிடையாது.
தனது தாய்நாடு இன்னொரு நாட்டுடன் போட்டி போடும் போது எம்மையறியாமலே நாம் காட்டும் உணர்வு பூர்வமான ஆதரவு தான் தாய்நாட்டுப் பற்றுக்கு சரியாக உதாரணமாகும். பாகிஸ்தான், இலங்கையுடன் போராடும் போது அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்திருந்தால் அதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. ஆனால், இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் போது அவர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவளித்ததன் நோக்கம், இந்தியாவின் மீது தமக்குள்ள வெறுப்பைக் காட்டி, இந்து மாணவர்களை ஆத்திரமூட்டுவது தான் என்பதை நீங்கள் எப்படித் தான் பூசி மெழுகினாலும் மறைக்க முடியாது.
//தனது தாய்நாடு இன்னொரு நாட்டுடன் போட்டி போடும் போது எம்மையறியாமலே நாம் காட்டும் உணர்வு பூர்வமான ஆதரவு தான் தாய்நாட்டுப் பற்றுக்கு சரியாக உதாரணமாகும். பாகிஸ்தான், இலங்கையுடன் போராடும் போது அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்திருந்தால் அதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. ஆனால், இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் போது அவர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவளித்ததன் நோக்கம், இந்தியாவின் மீது தமக்குள்ள வெறுப்பைக் காட்டி, இந்து மாணவர்களை ஆத்திரமூட்டுவது தான் என்பதை நீங்கள் எப்படித் தான் பூசி மெழுகினாலும் மறைக்க முடியாது.//
நீங்கள் இந்தியா தாய்நாடு என்று பெருமை படலாம் அதற்கான பலனை அனுபவீக்கின்றீர்கள்
ஆனால் காஸ்மீரிகள்….
அப்படி ஒருநிலை வந்தால் நீங்கள்சொல்ல தேவை இல்லை அவர்கள் மனதில் மாற்றம் வரும் இதில்நாங்கள் பூசி மெழுக வேண்டிய அவசியம் கிடையாது
நாங்கள், ஈழத்தமிழர்கள், இந்தியாவையோ அல்லது தமிழ்நாட்டையோ எமது தாய்நாடாக நினைக்கவில்லை. இலங்கை தான் எங்களின் தாய்நாடு. தமிழ்நாட்டில் எங்களுக்கு உள்ள கரிசனை, பாசம் எல்லாம் அது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ்மண் அந்த மண்ணுக்கும் எங்களுக்கும் வரலாறு பூர்வமான தொடர்புண்டு என்பதால் தான். எங்களுக்கு தமிழ்நாட்டில் பந்தம், பாசம் அல்லது கரிசனையுள்ள அளவுக்கு, காஷ்மீரிகளுக்கு இந்தியா மீது எந்த பந்தமும், பாசமும், கரிசனையும் இல்லை ஆனால் பாகிஸ்தான் மீது உண்டு என்பதைத் தான் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. அதனால் தான் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் போது, ஏனைய இந்தியர்களை கோபமூட்டும் நோக்கத்துடன் அவர்களுக்கு முன்னால் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தனர். அந்த உண்மையை மறைத்து, சம்பந்தமில்லாமல், ஈழத்தமிழர்களையும் உதாரணம் காட்டி சப்பைக் கட்டு கட்டுகிறார் இந்தக் கட்டுரையாசிரியர். அதைத் தான் நான் சுட்டிக் காட்டினேன்.
இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் எவ்வாறு இலங்கையும் பாகிஸ்தானும் விளையாடும் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தார்களோ, அதே போல் முஸ்லீம்கள் என்ற அடிப்படையில், காஸ்மீரி முஸ்லீம்களும், பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை. அது அவர்களின் தனிமனித சுதந்திரம். காஸ்மீரி மக்களின் சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிக்கும் வகையில் அல்லது அவர்களின் விருப்பு, வெறுப்பை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த மறுக்கும், இந்திய அரசுக்கு அவர்கள் இவ்வாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர், என்று மழுப்பினால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம. ஆனால் அந்த காஸ்மீரி மாணவர்களின் இந்திய வெறுப்பை மூடி மறைக்க, தாய்நாட்டுப்பற்றுக்கு வெவ்வேறு உதாரணங்களும், வியாக்கியானங்களும் கொடுத்து, அவர்களுக்கு இந்தியா மீதுள்ள வெறுப்பை இந்தக் கட்டுரையாசிரியர் பூசி மெழுகி, மூடி மறைக்க முயல்வதைப் பார்க்க சிரிப்பு வருகிறது. 🙂
//முசுலீம் என்றால் மதம்தான் முக்கியம், தேசிய இனம், மொழி, நாடு, வர்க்கம், பால் என்பதெல்லாம் அப்புறம்தான் என்ற கருத்து முதன்மையாக ஏகாதிபத்திய ஊடகங்களால் பரப்பப்படுகிறது. ///
அது தான் உண்மையும் கூட. உதாரணமாக பலத்தீனத்தில் ஒரு குழந்தைக்குப் பல்லு விழுந்தால், சிரியாவில் யாராவது கொல்லப்பட்டால் மட்டுமன்றி தனது சொந்த நாட்டு மக்களையே நச்சுக் காற்றின் மூலம் கொலை செய்த சர்வாதிகாரி சதாம் ஹுசையினுக்குக் கூட ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்து, அதைப் பற்றி எழுதி வலைப்பதிவுகளை நிரப்பிய தமிழ்நாட்டு முஸ்லீம்கள், ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, ஏனைய தமிழர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து, தமது எதிர்ப்ப்பைத் தெரிவிக்காதிருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் ஈழத்தமிழர்களுக்கெதிராக, சிங்கள அரசுக்காதரவாக பொய்ப்பிரச்சாரம் செய்தனர். ஏனென்றால், அவர்களுக்கு மதம் தான் முக்கியமே தவிர இனமல்ல, மத அடிப்படையில் ஈழத்தமிழர்களை விட அரேபியர்களும், ஆபிரிக்கர்களும், ஆப்கானியர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள், அவர்களின் சகோதரர்கள். அதனால் தான், தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெறும் உதாரணத்துக்குக் கூட, அரேபியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் ஓடுகிறார்கள். முஸ்லீம்களுக்கு இயற்கையாகவே இஸ்லாமிய நாடுகளில் பாசம் அதிகம் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததே. உதாரணமாக, **2011 இல் இலங்கை முஸ்லீம்கள் கூட, இலங்கையும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடிய போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து சிங்களவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். அரேபியர்கள் அவர்களைக் கேவலமாக, மிருகங்களை விடக் கேவலமாக நடத்தினாலும் கூட, அரேபியர்களின் செல்வத்தையும் அவர்களைப் பற்றி பெரிதாக, உயர்வாகப் பீற்றிக் கொள்ளும் பல முஸ்லீம்களை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். 🙂
அருமையாக சொன்னீர்கள் அன்பரே 🙂
அதே தான்! ‘அரேபிய பார்ப்பனர்களுக்கு’ இந்திய முஸ்லீம்கள் அடிமை உசூர்…
//சர்வாதிகாரி சதாம் ஹுசையினுக்குக் கூட ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்து, அதைப் பற்றி எழுதி வலைப்பதிவுகளை நிரப்பிய தமிழ்நாட்டு முஸ்லீம்கள், ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது, ஏனைய தமிழர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து, தமது எதிர்ப்ப்பைத் தெரிவிக்காதிருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் ஈழத்தமிழர்களுக்கெதிராக, சிங்கள அரசுக்காதரவாக பொய்ப்பிரச்சாரம் செய்தனர். ஏனென்றால், //
விடுதலை புலிகலால் அதிகம் கொலையுண்டது முஸ்லிம்கள் பின்பு எப்படி ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறோம் என்று புலிகலை ஆதரிப்பது
விடுதலை புலிகலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பொழுது ஈழத்தமிழர்கள் எங்கு போனார்கள்?
சதாமை முஸ்லீம்கள் மட்டும் இல்லை உலகமே ஆத்ரித்தது இந்தியாவில் பிஜேபி கூட பாராளுமன்றதில் அமெரிக்கவுக்கு எதிராக் கண்டன தீர்மானம் கொண்டுவர உத்தேசித்தது
//சிங்கள அரசுக்காதரவாக பொய்ப்பிரச்சாரம் செய்தனர்//
இலங்கையில் அரசுக்காதரவாக பிரச்சாரம் செய்தால் பொய்ப்பிரச்சாரம்
உங்களி உண்மை முகம் என்னவெனில் முஸ்லிம்களை கொச்சை படுத்துவது மட்டும் தான்.
மேலோட்டமாக பார்க்கும்போது விளையாட்டு சம்பந்தப்பட்டிருப்பினும் நடைமுறையில் இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் (இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடி இந்தியா ஜெயிக்கும்போது) இந்திய கிரிக்கெட் அணியை ஆதரித்திருப்பார்களானால் அவர்கள் கொல்லப்பட்டே இருப்பார்கள். அப்படியே வடகொரியா தென்கொரியா நாடுகளின் நிலைமைகளையும் யோசித்துப்பாருங்கள்.
அதை பற்றியெல்லாம் நாம பேச உரிமையில்லை பாஸ்…மத சார்பின்மை, கம்யூனிசம்,முற்போக்கு என்றாலே இசுலாத்தை ஆதரிப்பது என்றுதான் அர்த்தம்
//மேலோட்டமாக பார்க்கும்போது விளையாட்டு சம்பந்தப்பட்டிருப்பினும் நடைமுறையில் இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் (இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடி இந்தியா ஜெயிக்கும்போது) இந்திய கிரிக்கெட் அணியை ஆதரித்திருப்பார்களானால் அவர்கள் கொல்லப்பட்டே இருப்பார்கள். அப்படியே வடகொரியா தென்கொரியா நாடுகளின் நிலைமைகளையும் யோசித்துப்பாருங்கள்//
இது உங்களின் சிருபிள்ளைத்தனமான பேச்சு காரணம் எத்தனையோ பாக்கிஸ்தான் பிளேயர்கள் இந்தியாவுக்கு(கிரிக்கெட்டில்) ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர்
தவரியும் நம்மவர்கள் அதுபோல் பேச முடியுமா பேசினால் அவர்கள் தேச துரோக முத்திரை குத்தப்படும் என்பதால் யாரும் வாய் திறப்பதில்லை
ஐயா பெரியவரே!
எங்கே இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்தான் விளையாடிய ஏதாவது ஒரு போட்டியில் இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர் என்பதற்கு ஒரேயொரு ஆதாரத்தைக் காட்டுங்கள். அதன்பின் நான் சிறுபிள்ளைதான் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
இம்ரான்கானும், வாசிம்அக்ரமும் பலமுறை இந்திய வீரர்களை பாராட்டியுள்ளனர்.
பெயரளவில் இனியவரே
//இது உங்களின் சிருபிள்ளைத்தனமான பேச்சு காரணம் எத்தனையோ பாக்கிஸ்தான் பிளேயர்கள் இந்தியாவுக்கு(கிரிக்கெட்டில்) ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர்//
இதில்நான் இந்தியாவும் பாக்கிஸ்தானும் விளையாடி போட்டி என்று குறிப்பிடவில்லை
இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்தான் விளையாடிய ஏதாவது ஒரு போட்டியில் இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர்கள் கருத்துக்களை கூர அவர்கள் ஒன்றும் இனியன்கள் அல்ல
ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற விடயங்களை பிதற்றுவதை நிறுத்துங்கள். இங்கே நடந்த சம்பவத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடியுள்ளன, அதன் வெற்றி தோல்வி பற்றி கொண்டாடியதில் ஏற்பட்ட மனக்கசப்புகள் பற்றியதே விவாதம்.
அதைவிடுத்து வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில் ஒரு பேட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கூறியதை இச்சம்பவத்துடன் ஒப்பிடுவதில் அர்த்தமில்லை.
சிலருக்கு தமிழில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்களே புரிவதில்லை. சம்பந்தமற்றவற்றைப் பற்றி பின்னூட்டமிடுபவர்களுக்கு என்ன சொல்வது?
என்னது இந்தியாவுக்கும் பாக்.கும் நடந்தது விளையாட்டா, போர் நடக்கப்போதுன்ல தினமலர்காரன் சொன்னான்.
இது என்னைய ஞாயம். அடி வாங்குறதும் முஸ்லிம், அபராதம் விதிக்கபடுவதும் முஸ்லிமுக்கே, வெளியேற்றபடுவதும் முஸ்லிமே.
குண்டு வெடிப்பில் சாவதும் முஸ்லிம் கைதாவதும் முஸ்லிம் போல.
// இது என்னைய ஞாயம். அடி வாங்குறதும் முஸ்லிம், அபராதம் விதிக்கபடுவதும் முஸ்லிமுக்கே, வெளியேற்றபடுவதும் முஸ்லிமே.//
Ameen Bhai,
// ஆனால் அத்தகைய மதம் சார்ந்த இசுலாமிய சகோதரத்துவம் இந்த உலகில் எப்போதும் இருந்ததில்லை. காரணம் ஒரு மனிதன் அல்லது சமூகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை அல்லது மதத்தோடு தொடர்புடையவை அல்ல. // – இதை நீங்கள் ஏற்கவில்லையா..?!
// அந்த மாணவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று எதிர்பார்த்தாகவும் அது நடக்கவில்லை என்பதாலேயே இந்த் தற்காலிக நீக்கம் எடுக்க நேரிட்டது என்று அகமது நியாயப்படுத்துகிறார். // – இந்த அகமது உங்களுக்கு முஸ்லீமாக தெரியவில்லையா..?! ஒரு முஸ்லீம் இந்தியர், மேற்படி முஸ்லீம் காசுமீரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது இஸ்லாத்துக்கு விரோதமானதா..?!
ஆமாம் பாய் என்ன அநியாயம் பாருங்க …இங்க முஸ்லீம்க்கு ஆதரவா கருத்து சொல்லறதும் முஸ்லிம், இந்த கட்டுரையை பதிந்த வினவும் முஸ்லிம் . இல்லையா பாய்..எனக்கென்னமோ, இது இஸ்லாத்துக்கு எதிரான சதியாக தோன்றுகிறது.
அல்லாவின் பெயரால் முஸ்லிம்களை முஸ்லிம்களே வரிசையாக நிற்கவைத்து சுட்டுகொல்லும் சிரிய நாட்டு பயங்கரம்…..
//அல்லாவின் பெயரால் முஸ்லிம்களை முஸ்லிம்களே வரிசையாக நிற்கவைத்து சுட்டுகொல்லும் சிரிய நாட்டு பயங்கரம்…..//
இவர்கள் சிரியநாட்டு விடுதலை புலிகள்…
அல்லாவின் பெயரால் முஸ்லிம்களை முஸ்லிம்களே வரிசையாக நிற்கவைத்து சுட்டுகொல்லும் சிரிய நாட்டு “விடுதலைப்புலிகளை” எதிர்க்கும் அமெரிக்காவைப் பாரட்ட வேண்டும் ஆனால் உலக முஸ்லீம்களும் அவர்களின் முல்லாக்களும் ஏனோ “Death to America” என்று கூச்சலிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். 🙂
அப்பா, என்ன ஒரு பயங்கரம். நெஞ்சு கனக்கிறது. உலகம் எங்கே செல்கிறது. சக மனிதரை கொல்லும் அளவிற்கு மதவெறி இனவெறி தாண்டவமாடுகிறது. இதனால் தான் மதமே இல்லாத மனிதம் நோக்கி என் பயணம் போகிறது.
இந்திய, பாகிஸ்தானிய மட்டையடி விளையாட்டு வீரர்களில் எத்தனை பேர் துட்டை வாங்கிக் கொண்டு தத்தமது தேசபக்தியை கூட்டி,குறைத்து விளையாடினார்கள் என்று தெரியவில்லை..
// ஆனால் இறுதியில் பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார். இதை காஷ்மீர் மாணவர்கள் கைதட்டி கொண்டாடியிருக்கிறார்கள். //
’எங்க பாகிஸ்தான் பாய் சிங்கம்லே, இந்தியப் பாப்பானுகளா’ என்று கைதட்டிக் கொண்டாடினால் பாப்பானுக்கு கோவம் வருவது கிடக்கட்டும், தேசபக்தி இல்லாத(?!) ‘சூத்திரனுக்கும்’ தேசபக்தி வந்துவிடுமேய்யா..
// ஈழப்போராட்டத்தை ஒடுக்க சிங்கள அரசுக்கு உதவியாக இருக்கும் இந்தியாவை கண்டிக்க நினைக்கும் ஒரு ஈழத்தமிழர், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைப்பதற்கும் இதுவே காரணம். //
இந்தியா-இலங்கைக்கு இடையே நடக்கும் கிரிகெட் போட்டியாயிருந்தால், யார் தோற்றாலும் ஈழத்தமிழர்களுக்கு வருத்தம் வரப் போவதில்லை, இந்தியா தோற்க வேண்டும் அல்லது ஜெயிக்க என்ற விருப்பம் இருக்குமா என்றுகூட தெரியவில்லை.. பாக் ஆதரவு – இந்திய எதிர்ப்பு காசுமீரிகளோடு, இலங்கை-அதற்கு உதவிய இந்தியா இரண்டையும் கிட்டத்தட்ட ஒன்றாக பார்க்கும் மனநிலையில் உள்ள ஈழத்தமிழர்களை ஒப்பிடுவது பொருத்தமாக இல்லை..
//இன்னும் புரியும் விதத்தில் சொல்வதாக இருந்தால் இந்திய அணியை தோற்கடித்த பாக் அணியின் வெற்றியை நாமும் கொண்டாடுவோம்.!//
ரொம்ப முக்கியம்.. சராசரி முஸ்லீம் இந்தியன்கூட ‘நம்மளே தேசத்துரோகியாக்கி அழகு பார்க்காமல் விடமாட்டாங்க போலிருக்கே’ என்று கலவரப்பட்டு தனது தேசபக்தியை இரண்டுமடங்காக்கி காட்டிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு அவனை உள்ளாக்குவது ஏன்..?!
\\தனது தேசபக்தியை இரண்டுமடங்காக்கி காட்டிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு அவனை உள்ளாக்குவது//
ஏற்கனவே இந்த அவல நிலைக்கு இந்திய முசுலிம்களை சங் கும்பல் தள்ளியிருக்கிறது.முன்பு ஒரு முறை இந்திய பாக். போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என மும்பையில் முசுலிம்கள் பொது இடம் ஒன்றில் கூடி பிரார்த்தனை செய்து தங்கள் நாட்டுப்பற்றை மெய்ப்பிக்க வேண்டியிருந்தது.
வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கடிதம் கொடுப்பதையே பெரும் விடுதலை போராட்டமாக கொண்டிருந்த சங் பரிவார் கும்பல் முதல் விடுதலை போரையும் வேலூர் புரட்சியையும் நடத்திய, முசுலிம்களின் வாரிசுகளை நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என தூற்றுகிறது.
பாக்-க்கு எதிரான அத்தனை போரிலும் பல முசுலிம்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். குளு குளு அறைகளில் கணினியின் முன் உட்கார்ந்து கொண்டு அந்த முசுலிம்களை அவதூறு பேசுகிறது எத்துவாளி கும்பல்.
தேச பக்திக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.கிரிக்கெட் வீரர்கள் தேர்வுமுறையானது இந்தியாவை பிரதிநிதித்துவம் படுத்துமாறு அமைவதில்லை.18 பேர் கொண்ட அணியில் 10 பேர் பார்ப்பனர்களாக இருப்பர்.தலைமுதல் கால்வரை பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை சுமந்துகொண்டு காசு பார்க்கும் இவர்களுக்கே தேச பக்தி கிடையாது.பாமர ரசிகனுக்கும் இந்த போலி தேச பற்று தேவையற்றது.இந்திய கிரிக்கெட் வாரியம் என்ற அமைப்பும் பாரத மாதா குடியிருக்கும் கோவில் அல்ல.இந்தியாவை ரேட்டு பேசி வியாபாரம் செய்யும் டால்மியா ,சீனிவாசன் போன்ற கேடிகள் உலாவும் இடம்.நம் உச்சநீதி மன்றம் போல சிண்டிலும் பூணூலிலும் சிக்கி தவிக்கும் இடம்.இயல்பாகவே கிரிக்கெட்டில் தேச பக்திக்கு இடமில்லை.அவர்கள் சொல்லும் வயாகரா தேச பக்தி யாருக்கும் அவசியம் இல்லை.
எந்த ஒரு சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபடாத RSS காரர்களுக்கு தேசியத்தையும், தேச ஒற்றுமையையும் பேச என்ன உரிமை இருக்கிறது. முதல் தேச துரோகிக்ளே இவர்கள் தான்.
பாகிசுதான் வெற்றியை இந்திய முசுலிம்களில் சிலர் இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாடுகிறார்கள் என்பது அப்பட்டமான அவதூறு.இப்படி ஒரு செய்தி ஆதாரத்துடன் எந்த செய்தி ஏட்டிலும் வந்ததில்லை.முழுக்க முழுக்க வதந்தியாக கிளப்பி விடப்பட்டு தொடர்ச்சியாக செய்யப்படும் கள்ளப்பரப்புரை இது.
இந்த வதந்திகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு பானை சோற்றையும் பதம் பார்த்து விடலாம்.கர்நாடகத்தில் அப்படி முசுலிம்கள் கொண்டாடுவதாக இங்கு ஒரு மேதை கதைக்கிறார்.அந்த கர்நாடகத்தில் ஐந்து ஆண்டுகள் பா.ச.க ஆட்சி செய்திருக்கிறது.இப்போதும் வலுவான எதிர்க் கட்சியாக உள்ளது.அப்படியானால் அம்மாநிலத்தில் பட்டி தொட்டி முதல் மாநகரங்கள் வரை சங் பரிவார் கும்பலுக்கு கிளைகள் இருக்கும் என்பது சொல்லாமலே தெரியும்.அங்குதான் சங் பரிவார் காலிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாக். கொடியை பறக்க விட்டு முசுலிம்கள் மீது பழி போட்டு கலவரம் நடத்த முயன்றனர்.இப்படிப்பட்ட அயோக்கியர்களும் கெடுமதியாளர்களும் நடமாடும் மாநிலத்தில் பாகிசுதான் வெற்றியை முசுலிம்கள கொண்டாடி இருந்தால் அது எத்தகைய கலவரத்தை கொண்டு வந்திருக்கும்.இந்த எளிய உண்மையை கூட உணராத முட்டாள்களாகத்தான் இந்த கள்ளப்பரப்புரையில் ஈடுபடுவோர் இருக்க வேண்டும் அல்லது மக்களை அப்படி நம்ப வைக்க முயலும் எத்தர்களாக இருக்க வேண்டும்.
இவர்களே பட்டாசு கொளுத்தி போட்டுட்டு, முஸ்லிம்தான் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகிரான்னு சொன்னாலும் சொல்லுவாங்க. தன்னோட வீட்டுலே தானே பெட்ரோல் பாம் போட்டு முஸ்லிம் மீது பழி போட்ட கூட்டம்தானே.
இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் வெளிநாட்டு பயிற்சாளர்கள் எல்லாம் அந்தந்த நாட்டு தேசத் துரோகிகள?
இந்தியாவும், பிரிடிஷ் அரசாங்கத்துடன் அகிம்சை முறையில் போராடி விடுதலை பெற்ற மிகப்பெரிய ஜனநாயகநாடு.சிறிய ஈழநாட்டில் காந்தி போன்ற தலைவர்கள் இல்லாதது, ஈழ மககளின் ஒட்டு மொத்த தகுதிக்குறைவு.வாய்ப்பிருந்தவர்களயும் கொன்று குவித்த பிரபாகரன்.மக்களின்நல் வாழ்வை விரும்பாத சர்வாதிகார போராளி என்று கொண்டாடினால் செருப்படிதான் கிடைக்கும்.
இந்த உளறலின் சொந்தக்காரருக்கு இலங்கையைப் பற்றியோ அல்லது ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் பரிமாணத்தைப் பற்றியோ ஒரு மண்ணும் தெரியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஈழத்திலும், ஈழத்துக் காந்தி என்றழைக்கப்படும் ஈழத்தமிழர் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இருந்தார். அறுதிப் பெரும்பான்மை இந்துக்களாகிய ஈழத் தமிழர்கள், ஒரு கிறத்தவராகிய அவரைத் தமது தலைவராக 50 வருடங்களுக்கு முன்பே ஏற்றுக் கொண்டு, ஈழத் தமிழர்களுக்கு மதம் முக்கியமல்ல, இனமும், மொழியும் தான் முக்கியம் என்பதைக் காட்டினார்கள். அவரை இன்றும் தந்தை செல்வா என அன்புடன் நினவு கூருகிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழத்தமிழர்களும் அவரும் முப்பது வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், சட்ட மறுப்பு இயக்கங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் எல்லாம் நடத்திப் பார்த்து, அதில் எந்த பயனும் ஏற்படாமல் போன பின்னர் தான் தமிழீழக் கோரிக்கையை பிரகடனப் படுத்தினார்கள். இந்த வரலாறு தெரியாமல் உளறுவது வெறும் அபத்தம்.
அகிம்சை வழியில் போராடியவர்கள் மீது, இராணுவத்தையும், நாய்களையும் விட்டுத் தாக்குதல் நடத்தியது இலங்கை அரசு. அடுத்தடுத்து இனக்கலவரங்களை நடத்தி தமிழர்களைக் கொன்று, அவர்களைச் சிங்களவர்கள் கொள்ளையடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்தது இலங்கை அரசு. இவற்றுக்கெல்லாம் பின்னர் தான் ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர். அதன் பின்னணியிலிருந்து தூண்டி விட்டு, பயிற்சியுமளித்து பின்னர் தமிழர்களின் முதுகிலும் குத்தியதும் இந்தியா, அதற்குத் தம்மையறியாமலே துணை போனவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.
அத்துடன் இலங்கையில் மகாத்மாக காந்தியிருந்தாலும் அவரால் ஒன்றும் சாதித்திருக்க முடியாது.
இந்தியாவில் மகாத்மா காந்தி பெரும்பான்மை மக்களின் தலைவர், அவர் சிறுபான்மை வெள்ளையர்களுடன் அகிம்சை வழியில் போராடி வென்றார். ஆனால் இலங்கையில் நிலைமை வேறு, ஈழத்தமிழர்கள் சிறுபான்மை, அத்துடன் பிரிட்டிஸ் வெள்ளையர்களின் ஜனநாயக பண்பாடுகள் சிங்களவர்களிடம் கிடையாது. இலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பது சிங்களவர்கள் இரண்டாயிரமாண்டுக் கனவு. பிரித்தானியர்களால் நனவாகிப் போன அந்த கனவை, விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராகவில்லை. அதனால், இலங்கையில் மகாத்மாக காந்தி பிறந்திருந்தால் கடைசியில் அவரும் ஆயுதம் தூக்கியிருப்பார் அல்லது அந்தப் போராட்டத்தில் அவரும் செத்து மடிந்திருப்பார்.
(உலகயுத்தம் நடக்காதிருந்திருந்தால், உண்மையில் பிரித்தானியர்களுக்கு இந்தியாவை தமது தலையில் தொடர்ந்து சுமப்பது இலாபகரமானதாக இருந்திருந்தால், இந்தியாவுக்கு மகாத்மா காந்தியால் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. அந்தக் காலத்தில், பிரிட்டிஸ் மக்களிடமும், அரசாங்கத்திலும், வெள்ளையர்கள் இல்லாத நாடுகளில் பிரிட்டிஸ் காலனிகளை தொடர்ந்து கட்டியாள்வது இலாபமற்ற வீண்வேலை என்ற கருத்து பரவலாக ஏற்படத் தொடங்கியதால் தான் இந்தியாவை விட்டகல அவர்கள் முடிவு செய்தார்களே தவிர, இந்தியர்களின் கூச்சலுக்கும், சாவுக்கும், ஊர்வலங்களுக்கும், போராட்டங்களுக்கும், உண்ணாவிரதங்களுக்கும் அஞ்சியல்ல என்ற கருத்துமுண்டு.)