Tuesday, August 9, 2022
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை

ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை

-

செய்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அரசியலமைப்பு சட்ட வரையறைக்கு உள்பட்டு ராமர் கோயில் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நீதி: அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை மறுத்தால் வரலாற்றுத் துறை ஒழிக்கப்படுவது வரலாறாயிருக்கும். பாபர் மசூதியை இடிப்பதற்கு சட்டபூர்வமாகவே அனுமதிக்கவில்லை என்பதாலேயே அரசு நிர்வாகம் கரசேவகர்களால் முடக்கப்பட்டது. இதற்கு மேல் ராமர் கோவில் கட்டுவதை மறுத்து விடுவதற்கு அரசியலமைப்பு சட்டம் என்ன அடிமுட்டாளா? ஓம் கடப்பாறை கரசேவை ஷாந்தி!
_________

பா.ஜ.க தேர்தல் அறிக்கைசெய்தி: அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவில், பொது சிவில் சட்டம் அரசின் முக்கியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பாஜக ஆட்சிக்கு வந்ததும், பொது சிவில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி: அப்போது பொதுசிவில் சட்டப்படி அக்ரகாரங்களில் மட்டுமே அரசு அலுவலகங்கள் இருக்கும். வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு வருண தர்ம ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்படும். கிறித்தவ சீரழிவான விவாகரத்து ஒழிக்கப்பட்டு, கல்லானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் எனும் இல்லற நீதி வல்லறமாக நிலை நிறுத்தப்படும். பெண்களுக்கு சம சொத்துரிமை எனும் இசுலாமிய சீரழிவு அகற்றப்பட்டு பாரதப் பண்பாட்டின் படி அடுப்பங்கரையிலேயே மாதர் தம் வாழ்க்கை முடிய வேண்டும் என்பது நிலைநாட்டப்படும். ஓம் முசல்மான் – கிறித்தவ – ஒழிப்பு ஷாந்தி!
________

செய்தி: ராமர் சேது பாலம் நமது நாட்டின் கலாசார பாரம்பரிய சின்னமாகும். மேலும் தோரியம் அதிக அளவு கிடைக்கும் பகுதியாக அப்பகுதி திகழ்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு  சேது சமுத்திர திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

நீதி: தசரதனது அறுபதினாயிரம் மனைவியர் வாழ்ந்த வடக்கு உபி மாநிலத்தில் மக்களை வெளியேற்றி, கிருஷ்ணன் கோபியர் உடைகளை ஒளித்த நதியில் நீரெடுக்கும் விவசாயிகளை தடை செய்து, பீமன் புசித்த காய், கனி, கிழங்குகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு, இந்திரன் கள்ள உறவு கொண்ட ரிஷி பத்தினிகள் வசித்த காடுகளில் இருக்கும் விலங்குகளை கொன்று, புராணங்களில் வரும் அனைத்து பாரம்பரிய சின்னங்களும் எச்சரிக்கையாக பாதுகாக்கப்படும். ஓம் புண்ணிய ஷேத்ர மாத்ரு பூமி ஷாந்தி!
_________

செய்தி: ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்துள்ள அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது குறித்து அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்படும். காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகள் முழு மரியாதை மற்றும் பாதுகாப்புடன் அவர்களின் பூர்விக இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்.

நீதி: ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தின் அனைத்து பரிவாரங்களோடும் கலந்து பேசி, காஷ்மீர் விடுதலைக் கட்சிகளை இராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கி ஜனநாயக முறைப்படி 370-வது பிரிவை ரத்து செய்வோம். பண்டிட்டுகள் கௌரவத்துடன் குடியேற்றப்படும் நாளில் ‘காணாமல் போன’ காஷ்மீர் மக்களின் பட்டியல்கள், புகார்கள், விசாரணைகள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டு, காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்படும். ஓம் காஷ்மீர் ஸ்வாஹா!
________

செய்தி: 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், நாடு நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையின்மை அதிகரித்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாற்றியமைக்கப்படும்.

நீதி: அந்த நிலை மாற்றம் இப்படித்தான். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் வெளியே தெரியாத வண்ணம் இரகசியம் பேணப்பட்டு, ஊடகங்களும் கவனிக்கப்பட்டு ‘வளர்ச்சியை’ உறுதி செய்வோம். வேலையின்மையை போக்காவிட்டாலும் வேலையற்ற இளைஞர்களை அமைதிப்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு நகரத்திலும் கதாகலேட்சேபம், உபந்நியாசம், ஆன்மீக உரைகள், முதலியவை ஜக்கி, நித்தி, ஆஸ்ரம் பாபு, ஜயேந்திரர், மதுரை ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் முதலான ஆன்றோர்களை கொண்டு நடத்தப்படும். ஓம் ஸ்வாமிஜி காயகல்பம் ஷாந்தி!
___________

மோடி - ஆர்.எஸ்.எஸ்
“தேர்தல் வந்தாச்சு.. வழக்கம் போல இத எடுத்துக் கிட்டுப் போய் வேலைய காட்டு”

செய்தி: நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும். நிர்வாகம், காவல்துறை, தேர்தல் துறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

நீதி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேவர்களுக்கு அம்மா வழியில் கட்டற்ற அதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் மூலதன கோமான்களுக்கு சுபீட்சத்தையும், புகார் கொடுத்தாலே பரலோகம் எனும் சாஸ்வத யதார்த்தம் மூலமாக நாட்டு மக்கள் குறைபட்டுக் கொள்ளாத சூழலையும் உருவாக்கி ந(வ)ல்லாட்சி வழங்குவோம். ஓம் கடாயுதம் ஷாந்தி!
________

செய்தி: வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படும். அதேசமயம் சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை விதிக்கப்படும்.

நீதி: பாரத மாதாவை பிளாட்டு போட்டும், ரூட்டு போட்டும் சம்ஹாரம் செய்ய அந்நிய முதலீடுகள் வரவேற்கப்படும். சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை என்பது மறைமுக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்று புரிந்து கொள்க. ஓம் அமெரிக்க பகவான் ஷாந்தி.
_________

செய்தி: வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும்.

நீதி: வெளிநாட்டு இந்தியர்களின் கருப்பு பணத்தை யாராவது அனாமதேயங்கள் அடித்துக் கொண்டு போவதை தடுக்கும் வண்ணம், எவரும் அறியாத படி பாதுகாப்பாக வேறு இடங்களில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கான லட்சுமி கடாட்ச நடவடிக்கை குழு, நிதீன் கட்காரிஜி, எடியூரப்பாஜி, ரெட்டி சகோதரர்கள்ஜி பங்கேற்புடன் அமைக்கப்படும். ஓம் ஸ்விஸ் வங்கி நமஹா!
_________

செய்தி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தியாவசியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

நீதி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வங்கி மற்றும் இதர அரசு வங்கிகளில் மாதந்தோறும் லட்சுமி கடாட்ச நிதி ஸ்தல ஜீவாமிருத யாகம் தலா ஐந்து கோடி செலவில் நடத்தப்படும். விலைவாசியைக் கட்டுப்படுத்த அன்னதானம், துணிதானம், காய்தானம், அரிசி தானம், கோதுமை தானம், பருப்பு தானம், எண்ணெய் தானம் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும். அதற்கான செலவை அரசே கொடுக்கும். ஓம் மக்கள் காசில் பிச்சா தர்மம் ஸ்வாஹா!
_________

செய்தி: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியா – வங்கதேசம், இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும்.

நீதி: வடகிழக்கு மாநிலங்கள் பாதுகாப்புடன் வளர இப்போது இருக்கும் இராணுவப் படைகள் இருமடங்காக்கப்படும். இராணுவச் சட்டங்களின் விதிமுறைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். தடுப்பு வேலிக்கு தரமான கம்பிகள் வாங்குவதற்கான தர கட்டுப்பாடு நான்கு மடங்கு அதிகரிக்கப்படும். ஓம் நார்த் ஈஸ்ட் குளோஸ் பண்ணு ஷாந்தி!
_________

செய்தி: பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இணையதளம் மூலம் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் வரி விதிப்பில் எளிய முறையை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஊழலுக்கு முடிவு கட்டப்படும்.

நீதி: விழிப்புணர்வு – லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்கவில்லையா என்ற எச்சரிக்கை, இணைய தள நிர்வாக நடவடிக்கை – லஞ்சத்திற்கு பேரம் பேசாமல் ஒரே ரேட்டில் நெட்டில் மாற்றிக் கொள்ளும் வசதி, வரி விதிப்பில் எளிய முறை – காசு இல்லாதவனுக்கு அதிக வரி, இருக்கிறவனுக்கு கம்மி வரி போட்டால் பணக்காரர்கள் தலையை பிய்த்துக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபடாமலும், ஏழைகள் தலையெழுத்தே என நொந்து கொண்டு வரி கட்டியும் வருவார்கள் – ஓம் கரப்ஷன் கன்வர்ஷன் ஷாந்தி!
__________

பார்ப்பன பாசிஸ்ட் மோடி
பார்ப்பன பாசிஸ்ட் மோடி

செய்தி: அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், அதேசமயம் அச்சுறுத்தும் வகையில் அந்நாடுகளின் நடவடிக்கைகள் இருந்தால், அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி: முதலாளிகளின் நலனை முன்னிட்டு அண்டை நாடுகளோடு நடக்கும் ஏற்றுமதி இறக்குமதியில் நட்புறவு இருக்கும். கட்சி நலனை முன்னிட்டு அண்டை நாடுகளோடு சிண்டு முடியும் நோக்கத்தில் அறிக்கைகளில் மட்டும் ஆவேசம் காட்டப்படும். போர் வந்தால் பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் என்பதால், மோடியின் அமைச்சரவை மட்டும் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல கடலுக்கடியில் புல்லட்டின் சுரங்க ரயில் பாதை அமைக்கப்படும். ஓம் தேசபக்தாய சவடால் ஷாந்தி!
________

செய்தி: தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி அரசால் ரத்து செய்யப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் மீது நேர்மையான மற்றும் துரிதமான விசாரணை நடத்தப்படும். அரசியல் தலையீடு இன்றி புலனாய்வு அமைப்புகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீதி: அசீமானந்தா மூலம் தியாகத்துடன் ஆர்.எஸ்.எஸ் செய்து வந்த பணிகள் இனி தேவையில்லை என்பதை அரசு மேற்கொள்ளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் நிரூபிக்கும். பொடா, தடாவை விஞ்சும் கடுமையான சட்டங்கள் சடுதியில் வரும். அதன்படி குல்லா, தாடி, கைலிகள் கூட தீவிரவாதிகளை கொல்வதற்கு போதுமான ஆதரங்களாக இருக்கும். அமீத் ஷா தலைமையில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் நடக்கும் என்பதால் ஹமாம் நேர்மையை விஞ்சும் அமீத் நேர்மையோடு அரிசி, கோதுமை தலையீடு எதுவும் இருக்காது. ஓம் சிறுபான்மை இனி இல்லை ஸ்வாஹா!
__________

செய்தி: நாட்டின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஒ. வலுப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்புத் துறைகளில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் தனியார் மற்றும் நேரடி அன்னிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.

நீதி: பயில்வான்தான் பஞ்சாயத்து பண்ண முடியும் எனும் ஆர்எஸ்எஸ் நிறுவனம் ஹெட்கேவாரின் பொன்மொழிப்படி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்கு வரம்பில்லாத நிதி ஒதுக்கப்படும். அந்த நிதி மூலம் பாரத மாதாவை பாதுகாக்கும் பணியினை அமெரிக்க விமானங்களும், ரசிய கப்பல்களும், பிரான்ஸ் துப்பாக்கிகளும், இங்கிலாந்து ஹெலிகாப்டர்களும், இசுரேல் ரேடார்களும் இங்கே தயாரிக்கப்பட அனுமதிக்கப்படும். ஓம் சுதேசி ரக்ஷா விதேசி கரக்ஷா ஷாந்தி!
__________

செய்தி: சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பொதுமக்களின் பங்களிப்புடன் நாட்டில் உள்ள நதிகளை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், விவசாயப் பகுதிகளுக்கும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர முன்னுரிமை அளிக்கப்படும்.

நீதி: ஆகாய கங்கை, அண்டர் கிரவுண்ட் சரஸ்வதி போன்ற இகலோக கண்களுக்கு தெரியாத நதிகள் ஓடும் நாட்டில், இருக்கும் நதிகளை மானசீகமாக இணைத்து “ஏகாத்மதா ஸ்தோத்திரம்” பாடுவது மூலம் திட்டம் நிறைவேற்றப்படும். கங்கையில் வீசப்படும் நீத்தார் உடல்களை தின்று சீரணிக்க முதலைகள் தருமாறு முதலாளிகளிடமும், கும்பமேளாவில் அழுக்குடன் வரும் நாகா ஸ்வாமிகளை வாசனை சோப்பு போட்டு குளிக்க வைக்க சோப்பு கம்பெனிகளிடமும், உதவி கோரப்படும். கிராமங்களில் மழை பெய்ய, குளம் நிரம்ப வாயு பகவான் கோவில் அமைத்து வாரந்தோறும் மழை வேண்டி சிவரஞ்சனி ராகம் இசைத்து வேண்டப்படும். ஓம் கங்கா ஸ்னாநம் நாத்தம் போக ஷாந்தி!
_________

செய்தி: அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம் உள்பட புதிய தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்படும். மருத்துவமனைகள் நவீனபடுத்தப்படும்.

நீதி: புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடக்கும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் ஏபிவிபியால் கொண்டு செல்லப்பட்டு இந்துக்களிடையே இருக்கும் ஷாதிய பிரிவினை வாதம் குறைக்கப்படும். காப்பீட்டு திட்டம் மூலம் கார்ப்பரேட் பகவான்களை கவனிக்கும் கொள்கை உருவாக்கப்படும். ஓம் சமூகநீதி லேது ஷாந்தி!
_________

செய்தி: தேசிய கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். யுஜிஸி அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு, உயர்கல்வி ஆணையமாக மாற்றப்படும்.

நீதி: ஜோசியம், ஜாதகம், நாடி-சோடி-பறவை-எண்-ஜோசியம் முதலான அறிவியல் துறைகள், புராணங்கள் அனைத்தையும் கொண்ட வரலாறு, இந்து மன்னர்களின் பொற்காலம், முசுலீம் மன்னர்களின் இருண்ட காலம், தேவபாஷையின் கீர்த்தி, அனைத்தும் கொண்ட புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்படும். பாரிவேந்தர் பச்சமுத்துஜி, நீதிவேந்தர் ஏசி சண்முகம்  மேற்பார்வையில் உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். குருகுலங்கள் மீண்டும் கொண்டுவரப்படும். ஓம் கல்வியைக் கொல் ஷாந்தி!
_________

செய்தி: கிராம சபைகள் வலுப்படுத்தப்படும். அதற்கான கொள்கை பொது மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

நீதி: நாடெங்கும் கப் பஞ்சாயத்து கட்டாயமாக்கப்பட்டு, உயர்சாதி மக்களின் கருணையுடன், அரிஜன மக்கள் பணிவுடன் கிராம சபைகள் வலுப்படுத்தப்படும். ஓம் சூத்திர பஞ்சமன் பஞ்சர் ஷாந்தி!
________

செய்தி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் உள்பட அனைத்து சமுகத்தினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு எந்த வேறுபாடுமின்றி வாய்ப்புகள் வழங்கப்படும். முஸ்லிம்களின் பாடசாலைகளாக திகழும் மதரஸாக்கள், கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்களை கொண்டதாக நவீனப்படுத்தப்படும்.

நீதி: நாட்டின் வளர்ச்சிக்காக சிறைகளில் அதிகம் இருந்து சிறுபான்மை மக்கள் பங்களிப்பு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். சமவாய்ப்பு என்று சொல்வதால் இட ஒதுக்கீட்டு கேட்டு வரும் இசுலாமிய வாய்கள் பூட்டப்படும். மதரஸாக்கள் தீவிரவாதத்தின் ஊற்றாக இருப்பதால் கல்வியிலும் கண்காணிப்பிலும் தீவிர நடவடிக்கை எடுப்போம். ஓம் முசல்மான் முடக்கிப் போடு ஸ்வாஹா!
_________

செய்தி: நாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை கருத்தில் கொண்டு, அணுக் கொள்கை திருத்தி அமைக்கப்படும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு எழும் அச்சுறுத்தல்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

நீதி: போர் வந்தால் பாரதமே முதலில் அணுகுண்டு போடும் நாடாக இருக்கும் என்பதை கொள்கையாக அறிவிப்போம். இரண்டாவதாக பாகிஸ்தான் போடுவதற்கு முன் மோடி அமைச்சரவை கடலடி புல்லட்டின் சுரங்க பாதை மூலம் அமெரிக்கா சென்று விடும். ஓம் எல்லாம் ஷாவுங்கடா ஷாந்தி!
________

செய்தி: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அந்த அறிக்கையை, மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற திங்கள்கிழமையன்று, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தில்லியில் வெளியிட்டனர்.

நீதி: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பேயே அறிக்கை விட்டிருந்தால் கூட்டணிக்கு வரும் கூமுட்டைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு சிக்கல் வந்திருக்கும். தற்போது கூட்டணிக்கும் பிரச்சினை இல்லை. இந்துமதவெறி பாசிசத்தின் திட்டத்திற்கும் மட்டறுத்தல் இல்லை. ஓம் சாணக்கிய சாதுர்யம் நமஹா!

______________________________

சுருங்கக் கூறின் பாஜக தேர்தல் அறிக்கை பச்சையான பார்ப்பனிய பாசிசத் திட்டத்தை பகிரங்கமாக அறிவிக்கிறது. பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளுக்கு நாட்டின் வளங்களையும், தொழிலையும் விரைந்து கொடுப்பது, அதிகார வர்க்கத்தின் காட்டுதர்பாரை சட்டபூர்வமாகவே நிறுவுவது, பிரச்சினைக்குரிய இடங்களில் இராணுவம்- போலீசின் ஆட்சியை ஊக்குவிப்பது, தீவிரவாதத்தின் பெயரில் சிறுபான்மை மக்களை மட்டுமல்ல புரட்சிகர – ஜனநாயக சக்திகளையம், தேசிய இன போராட்டங்களையும் ஒடுக்குவது,  ராமர் கோவிலை கட்டும் வாக்குறுதி, 370ரத்து, ராமர் பாலம் அங்கீகரிப்பு மூலம் இந்து வாக்கு வங்கியை குறிவைப்பது, கூடவே மதக்கலவரம் நடக்காமலேயே பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, கொடிய அடக்குமுறை சட்டங்களை கொண்டு வருவது என்று பாசிசத்தை முன்வைக்கிறது காவி பயங்கரவாதக் கும்பலின் தேர்தல் அறிக்கை. பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க, அதன் பாதந்தாங்கிகளை அம்பலப்படுத்த நாமும் தயாராவோம்.

 1. தேர்தல் அறிக்கை என்னும் பெயரில் இந்த சமூகத்தில் மதவாதக் குப்பையை அள்ளி போட்டிருக்கிறது பாஜக.

  அறிக்கையிலுள்ள சில விசயங்களை பார்ப்போம்.

  ராமர் கோவில் கட்டப் போகிறார்களாம்.
  //இருக்கிற கோவில்களை பராமரிப்பு செய்யாமல், ராமனுக்கு கோவில் கட்ட துடிப்பதன் நோக்கம் என்ன?
  மனைவியை நெருப்பில் இறங்க சொல்லி கற்பை நிரூபிக்க சொன்ன ராமனுக்கு என்ன ***க்கு கோவில்??
  (ராமாயணம் என்பதே கட்டுக்கதை.. அது வேற விடயம்)
  அனைத்து இந்துக்களும் சமம் என்றால் பிராமணர் அல்லாதவர்கள் கோவில் அர்ச்சகர் ஆக முடியவில்லையே ஏன்?
  சூத்திரனுக்கு கோவிலில் உரிமை கூட தர மாட்டாய்.. ஆனால் சூத்திரன் ஓட்டுக்கள் மட்டும் தேவைப்படுதோ!!

  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை (370) நீக்கப் போகிறார்களாம்.
  //காஷ்மீரில் காணாமல் போன பல இளைஞர்கள் நிலை , அதிகமான ராணுவ ஆக்கிரமிப்பு, ராணுவம் செய்யும் அட்டூழியங்கள் இவை எதுகுறித்தும் பேசாமல்
  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கணுமாம்.. என்ன ஒரு அயோக்கியத்தனம்!!!

  பசுக்களைக் கொல்வதை தடை செய்யப் போகிறார்களாம்.
  //அப்படியே ஆடு வெட்ட தடை, கோழி குழம்பு தடை, மீன் பிடிக்க தடை என்ன அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே!!
  லூசுப்பயலுக!!
  பசியாலும், மழையாலும், வெயிலாலும் மனுசன் சாவுறான்.
  அதை தடுக்க முடியாத அயோக்கிய அரசியல் கூட்டம் மாடு குறித்து பேசுது.
  த்தூ!!!

  பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்போகிறார்களாம்!!
  இது குறித்து போதுமான விவரம் எனக்கு தெரியல.
  ஆனால் பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் பொது சிவில் சட்டம் என்பது ஏற்புடையதல்ல.
  மாநில சுயாட்சியை ஏற்கனவே பறித்துவிட்டார்கள்..
  இன்னும் என்னென்ன மாநில உரிமைகளை பறிக்கப் போகிறார்களோ!!

  இந்த நான்கு விசயங்களும் பாஜகவினால் எழுதப்பட்டவை அல்ல.
  மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்க ஆரெஸெஸ் என்னும் பிற்போக்கு கும்பல் விதித்த கட்டளைகள்.
  இங்கே பார்க்க: http://indiatoday.intoday.in/story/narendra-modi-rss-rss-conditions-for-modi-bjp-pm-candidate-ayodhya/1/309155.html

  இந்த கட்டளைகளைத்தான் தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாஜக.
  மதத்தை தாண்டி பாஜக கும்பலால் சிந்திக்க முடியாது என்பதை அவர்களின் தேர்தல் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
  ஆரெஸெஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்னும் உண்மையை இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இந்த பிற்போக்கு அரசியல் பிற மதத்தினருக்கு ஆபத்து என்பது சொல்வது சரியல்ல.
  உழைக்கும் வர்க்க மக்கள் அனைவருக்கும் எதிரானது.

  கோவில் கருவறை போராட்டம் நடத்தினால் முதல் ஆளாக வந்து எதிர்ப்பது பாஜக , இந்து முன்னணி போன்ற கும்பல்கள்தான்.
  இவர்கள் பார்ப்பனருக்கு சேவை செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள்..
  பார்ப்பனர் அல்லாதோருக்கு கோவிலில் உரிமை மறுப்பவர்கள்.
  தமிழையும், தமிழனையும் கோவிலுக்குள் அனுமதிக்காத ஆதிக்க கூட்டத்திற்கு அடியாள் வேலை செய்பவர்கள்.
  சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை ஆதரிப்பவர்கள்.
  ஆனால் இந்து ராஷ்டிரா, ராம ராஜ்ஜியம் என்று பேசி உழைக்கும் வர்க்க மக்களுக்குள் மனதில் மதவாதத்தை விதைப்பவர்கள்.

  இந்துத்வ கும்பலைப் புறக்கணிப்போம்.

  இந்து என்னும் அடையாளம் என் மீது திணிக்கப்பட்டிருப்பதால் இந்துத்வ பிற்போக்கு அரசியலை எதிர்க்க வேண்டியது என் கடமையாகிறது.

  கடமை தொடரும்….

 2. குருநாதன் பெரிய அறிவாளி.

  நிலமை என்ன வென்றே தெரியாமல் உளறும் ஒரு மொக்கை.

  வட இந்தியாவில் தலித் மக்களுக்கான கட்சி ஒரு வலுவான .கட்சி.

  அங்கே யார் வேண்டுமானாலும் கருவறை உள்ளே சென்று இறைவனை தொட்டு கும்பிட முடியும்.

  அயோதியில் ராமர் கோய்ல் தான் வேண்டும் என்றே வட இந்தியாவில் அனைவரும் கூறுகின்றனர்,நீங்கள் கூறும் உழைக்கும் மக்கள் உட்பட.

  அதை கேள்வி கேக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

  இன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தான் தனி சட்டம் உள்ளது,நீங்கள் கூறும் மற்றவர் அனைவரும் போது ஸிவில் சத்டத்ிருக்கு உத்பத்தெ உள்ளனர்.

  கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எல்லாம் கருவரைு நுழைவு போராட்டம் செய்தால் மடியில வச்சு கொஞ்சுவங்காள என்ன?

  • அவர்[குருநாதன் ] கேட்கும் கேள்விக்கு நேர்மையாக பதில் கூறாது ,வழ,வழ கொழ கொழ என்று போசும் நீங்கள்[ஹரிகுமார்] தான் சரியான மொன்னை [முனை மழுங்கிய தன்மை உடைய கத்தி]

   [1]பார்பனர் அல்லாதவர் தமிழ் நாட்டு கோவில்களில் பூசை செய்ய முடியுமா ?பார்பனர் அல்லாதவர் மந்திரம் கற்றும் கோவில்களில் பூசை செய்யும் வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பது உம் கண்களுக்கு தெரியதா ?

   தொடரும்

  • அய்யா, கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்குள் போக வேண்டும் என சொல்லவில்லை. அரச்சகர் வேலைக்கு படித்த அனைத்து சாதியினரும் செல்ல வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

   சூத்திரன் குறித்தும், இந்து அல்லாதோர் குறித்தும் RSS நிறுவனர் கோல்வால்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்று படித்துப் பாருங்கள்.

   இந்து மதம் என்பது அனைவருக்கும் சமம் என்று சொல்லுவார்கள். ஆனால் அது பிராமணர் மதமே.

   இன்னும் காஞ்சி ஜெயேந்திரனுக்கும், நித்திக்கும் காலைக் கழுவி விடுபவன் இருக்கானே!! இறுதியா வரை அடிமையாய் இருக்கணும்னு முடிவே பண்ணிட்டாங்களோ!!!

   வட இந்தியாவில் பிராமணர் அல்லாதோரை முதலீடா பயன்படுத்தி இந்துத்வம் விதைக்கிறார்கள். கோவில் கட்டினால் பிராமணர் தானே பூசை செய்யப் போகிறார்கள். அவர்கள் நடுத்தெருவுக்கு வந்து போராட்டம் செய்யட்டுமே! அவர்கள் கலவரம் செய்யட்டுமே! அப்படி நடந்தால் இந்து(பிராமண) மதம் குறித்து விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்கிறேன்.

   • விழுப்புரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் சிவன் கோவில், பெருமாள் கோவில் என ஏழு கோவில்களில் ஆதிதிராவிட மக்களுக்கு அனுமதி மறுப்பு…

    தாங்களாக ஒரு மாரியம்மன் கோவிலைக் கட்டி வழிபட்டால், அதிலும் தேரோட்ட தடை..

    #இதுதான் இந்து மதமா???

    அர்ஜுன் சம்பத், ராமகோபாலன் வகையறாக்கள் தலையிட்டு அம்மக்களின் இழிநிலையை நீக்க வழிவகைகள் செய்யலாமே!!

    ‘அய்யோ, இந்து மதத்தை குறை சொல்லாதீங்க’ என்று சொல்லும் நண்பர்கள் ஏதாவது செய்யலாமே!!

    • உங்கள் குற்றச்சாட்டு நியமானாதது.

     ஆனால் பாரயர்களும் இதார்க்கு எதிராக்ாவா உள்ளனர்?

     நீங்கள் இதை ஆதார பூர்வமாக கொஞ்சம் நிரூபியுங்கள்.

     • தில்லைக் கோவிலைப் பார்ப்பன கும்பல் லவட்டிக் கொண்டது உங்களுக்கு தெரியாதா?
      தேவாரம் பாட சென்ற அடியாரை பார்ப்பன கும்பல் கோவிலுக்கு வெளியே தூக்கிப் போட்டது தெரியாதா?
      அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதை பார்ப்பன கும்பல் தொடர்ந்து சொல்லி வருவது தெரியாதா?

      “இந்துக்கள் அனைவரும் சமம், நமக்குள் சாதி கிடையாது, சாதியை ஒழிக்க வேண்டும்” என எந்த இந்து தலைவராவது சொல்லட்டும். பின்னர் நானும் இந்துவாக இருக்கிறேன்.

   • வட இந்தியாவில் தலித் மக்கள் பூசை செய்ய ஆசைப்படுவதில்லை.

    மாநில அரசுக்கு கோயில் வழிப்பட்டு முறையில் தலையிட அதிகாரம் உள்ளதா இல்லைய என்று தெளிவு இல்லாத பொழுது அர்ச்சகர் பயிற்சி கல்லூரி அமைக்க தாத்தாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

    உங்களுக்கு கொல்வல்கர் கூறியது அறவே புரியவில்லை.இதுல ஊருக்கு முன்னால கருத்து வேற.

    வட இந்தியாவில் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாமியாரால் துன்புறுத்தப்பத்தவர்.

    ஆதனால் உங்களை போல் அவர்களுக்கு அவர்கள் இறை நம்பிக்கை மீது எந்த குழப்பமும் இல்லை.

    • வட இந்தியாவில் மக்கள் பார்ப்பானுக்கு அடிமையாக வாழ்கிறான் என்பதற்காக தமிழகத்திலும் அப்படி இருக்க முடியாது..

     முசாபர் நகரில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது தெரியாதா?
     குளிர் தாங்க முடியாமல் அகதி முகாமில் இஸ்லாமிய குழந்தைகள் இறந்தது உங்களுக்கு தெரியாதா?
     நண்பா, சிறிதேனும் மனிதத்துடன் இருங்கள்.

    • Golwalkar was vehemently opposed to the concept of a secular Indian state.[3] In We, or Our Nation defined (1938), he stated:[3]

     “The non-Hindu people of Hindustan must either adopt Hindu culture and language, must learn and respect and hold in reverence the Hindu religion, must entertain no idea but of those of glorification of the Hindu race and culture … In a word they must cease to be foreigners, or may stay in the country, wholly subordinated to the Hindu nation, claiming nothing, deserving no privileges, far less any preferential treatment—not even citizens’ rights.”

     // what is the meaning of this paragraph??
     Even I am from a BJP family. I know the worst ideologies of Hindutva outfits.
     What’s Hindu language? What’s Hindu culture?
     India is a union which consists of many ethnical nationalities. Know that first.

     • Dont lie as usual,Hindi imposition was never a part of Hindutva in anyway.

      It was always a convenience option alone,i doubt if you are a part of a BJP family.

      Golwalkar was strictly talking about North India & Muslims,not about TN.

      You dont teach me anything,u go learn facts first before u open your mouth.

    • வட இந்தியாவில் தலித் மக்கள் பூசை செய்ய ஆசைப்படுவதில்லை.

     // என்னே ஒரு கண்டுபிடிப்பு?
     ஆசைப்பட்டாலும் உடனே தூக்கி கொடுத்துடுவாங்க பார்ப்பன கும்பல்.

     • அப்படி ஆசை படுகிறவர்கள் குருக்களக ஆகியும் உள்ளனர்.

      உங்களுக்கு வேவரமே இல்லை,இதுல வாய் கிழிக்கிய கருத்து வேற.

    • //வட இந்தியாவில் தலித் மக்கள் பூசை செய்ய ஆசைப்படுவதில்லை.//

     அதாவது அண்ணன் என்ன சொல்றாருனா, வட இந்தியாவுல எல்லாம் அடிமையா இருக்காங்க …அதே போல இங்க இருக்க தலித்துகளும் அதே போல பூசை செய்யவெல்லாம் ஆசை படக்கூடாது.கோவிலுக்கு வெளியே இருந்து பாத்தோமா **** மூடிட்டு போனமானு இருக்கணும் என்கிறார்.

     • @Ashwin,

      அதேதான் 🙂 🙂

      நம்ம ஆட்கள் அடிமையாய் இருந்து சுகம் கண்டுவிட்டார்கள்.

      அதனால்தான் “தமிழன் கட்டிய கோவிலுக்குள் தமிழும், தமிழனும் செல்ல முடியவில்லையே!” என்கிற சின்ன சிந்தனை கூட வர மாட்டேங்குது.

      அடிமைகளே!
      அடிமைகளே!

      • தமிழ் வேண்டாம், தமிழன் வேண்டாம். தமிழன் அளிக்கும் உண்டியல் காசு மட்டும் வேண்டுமோ?

  • இந்து அல்லாத மக்கள் குறித்து கோல்வால்கர் என்னும் பாசிஸ்ட் என்ன சொல்லிருக்கிறான் என்று படியுங்கள்.

   ஹிந்துதானின் இந்து அல்லாத மக்களெல்லாம்
   1. ஹிந்து கலாச்சாரத்தையும் இந்து மொழியையும் பின்பற்ற வேண்டும்.
   2. ஹிந்து மதத்தை கற்க வேண்டும். அதை மதிக்க வேண்டும்.
   3. இந்து இனம், கலாச்சாரம் அன்றி வேறு கோட்பாடுகளை போற்றக்கூடாது.
   ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அவர்கள் அந்நியர்களாக வாழக் கூடாது.
   4. அவ்வாறு இல்லையேல் இந்துக்களுக்கு அடிமையாக, உரிமை ஏதும் கோராதவர்களாக இருக்க வேண்டும். குடிமக்கள் தகுதி கூட கோராதவர்களாக இருக்க வேண்டும்.
   [ http://en.wikipedia.org/wiki/M._S._Golwalkar ]
   // இந்து அல்லாதோர் அடிமைகளாக வாழ வேண்டுமாம்.
   என்ன கொழுப்பு!
   இந்த கொழுப்பெடுத்தவனை தூக்கித் திரியும் RSS, பாஜக கும்பல் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

  • “இன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தான் தனி சட்டம் உள்ளது” இது அப்பட்டமான பொய் ..கீழ் உள்ள வீடியோவை பாருங்கள் .உண்மை புரியும்

 3. Dear Vinavu,

  //பெண்களுக்கு சம சொத்துரிமை எனும் இசுலாமிய சீரழிவு அகற்றப்பட்டு//

  This is highly ignorant statement. Muhamadism does not grant equal inheritance.

  // கிறித்தவ சீரழிவான விவாகரத்து ஒழிக்கப்பட்டு *** கிறித்தவ – ஒழிப்பு ஷாந்தி!//

  This is also highly ignorant. Christians don’t have any problem with common civil code. In Christian countries, Muhamadans are under common civil code only.

  • //கிறித்தவ சீரழிவான விவாகரத்து ஒழிக்கப்பட்டு, கல்லானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் எனும் இல்லற நீதி வல்லறமாக நிலை நிறுத்தப்படும். பெண்களுக்கு சம சொத்துரிமை எனும் இசுலாமிய சீரழிவு அகற்றப்பட்டு பாரதப் பண்பாட்டின் படி அடுப்பங்கரையிலேயே மாதர் தம் வாழ்க்கை முடிய வேண்டும் என்பது நிலைநாட்டப்படும். //

   Actually divorce for any reason is a Western cultural concept in modern era. When British ruled India, divorce was not allowed except for extra-marital sex. So It can’t be blamed on Christians. I accept that it is need to allow divorce for any reason by law for everyone, but practising Christians should not divorce except in above said case.

   Second, the property rights for Islamic women is half truth here. Literally Muslim women can only get half of that of what Muslim men can get. But Bible has references about women getting equal share. I am not saying Bible is perfect here. I accept the secular modern law that gives women equal rights in property whether it is mandated by Bible or not.

 4. Islamic law grants inheritance rights to women.

  Wherever, Muslims live in Christian lands, there is commitee to analyze and amend their their local laws to allow Islamic Law, e.g.UK.

  Don’t try to fake the facts, univerbuddy.

     • The Triple Talaq, as some people practice in TN is not prescribed by Sharia. It is an invention by some half-baked nuts. If you want to know the law, get clarification from a scholar, don’t just assume by seeing some ignorant people.

     • The Triple Talaq being practiced by some people in TN, is not prescribed by Sharia. It is an invention by some half-baked nuts. If you want to know, you must consult a Islamic scholar, don’t assume by seeing some ignorant people doing something foolish.

  • u try to present facts correctly,Brothers get twice the share of sisters in sharia,property of the deceased husband also goes to his brothers and male siblings along with the wife.

   Hindu girls get gold and money for themselves and the brothers of the girl take care of her if she is divorced,they dont end up like shah bano.

   • Islam provides the right to inherit, thats the point I made. Sharia has lot of sections which deals with how much share will be given to whom (not only females) on various cases.

    BTW, telling that girls get gold/money during marriage is utter cheap statement. The gold/money you may give for a girl’s marriage is only for showing up your status & that CANNOT SIMPLY make her No Right to Inherit. Giving girls right to inherit has lot more justice than make her depend on her brothers for lifetime.

    • Gold historically has much more value than land in anyway,land was often not a saleable commodity.

     Gold/Cash are the main currency.

     It is far from a cheap statement,u do not understand anything about this.

     Even in Islam,property inherited by the girl is managed by the husband,not by the girl in anyway.

     And i do not understand why the brother of the dead husband deserves a share in the property earned by the husband himself.

     • Inheritance doesn’t mean that the property can be some land alone, it includes cash, gold, land, cattle, etc.

      It is false that in Islam girl’s property should be managed by her husband. Female who got the property can very well directly manage her property, run business, etc. Again, please get clarification from scholar instead of assuming thing from seeing things being practiced by geographical cultures.

      • Women have no rights in Islam,u can see the kind of sharia that taliban is trying to implement in pakistan.

       It is true that all property is indeeed managed by the husband,u cannot fool anyone here by claiming otherwise.

       Scholars are irrelevant,what matters is what works practically.

       I have seen cases where i have observed what i said.

 5. பொண்டட்டியை ராவணன் தூக்கிட்டுப் பூட்டான்…
  கெளம்பிப் போய் காப்பாத்துவியா?
  அதவுட்டுட்டு,குரங்கு,கோட்டான்,அணில் இதையெல்லாம் வச்சி
  எப்ப பாலம் கட்டி,
  எப்ப போய் சீதையை காப்பாத்துவது?
  சீதை கிழவி ஆகிவிடுமே?
  நல்ல வேளை கடல் பகுதியில் இந்த கூத்து /நாடகம்…இல்லாவிட்டால், அம்பிகள் மணியை ஆட்டிண்டு கடலிலும் ஏமாற்றி நம்மிடம் புடுங்கி திங்கும்!

  • Good to hear that you’ll try to get some details. Lets turn this thread into an intelligent debate instead of thread to throw allegations. Looking forward….

 6. திரு. குருநாதன்.

  // இந்து அல்லாதோர் அடிமைகளாக வாழ வேண்டுமாம்.
  என்ன கொழுப்பு!
  இந்த கொழுப்பெடுத்தவனை தூக்கித் திரியும் RSS, பாஜக கும்பல் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.//

  கோல்வால்கர் எந்த கால கட்டத்தில் எந்த அர்த்தத்தில் இதை கூறினார் என்று நாம் முதலில் யோசித்து பார்க்க வேண்டும்.. முதலில் R .s .s என்கிற அமைப்பே இந்துகளுக்கு எதிரான இசுலாமியர்களின் வன்முறை மற்றும் அராஜக செயலின் எதிர் வினையால் உருவானதே ஆகும்..

  800 ஆண்டுகாலம் இந்திய மண்ணை ஆண்ட இசுலாமியர்கள் தங்களின் ஆயுத பலத்தாலும், வன்முறையாலும் தான் இஸ்லாத்தை இங்கு படர செய்தார்கள். இந்தியாவை எப்படியாவது ஒரு இசுலாமிய நாடாக மாற்றி விட வேண்டும் என்கிற வெறியுடன் தான் ஒவ்வொருத்தரும் இந்த மண்ணின் மீது படை எடுத்தார்கள்.. அதற்க்கான பிரத்யட்ச சாட்சியங்களாக தான் வட இந்தியாவில் இசுலாமியர்களால் சிதிலமடைந்த பல கோவில்கள் இன்னும் காட்சி தருகின்றன. இது தான் உண்மை வரலாறு.

  இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்கிற தனி நாடு பிரிய வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் போட்ட வெறியாட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நவகாளியில் சென்று பாருங்கள் இன்னும் இஸ்லாமியர்கள் ஏற்படுத்திய ஆறாத வடுக்களை(வரலாற்றை) பற்றி உங்களுக்கு கூறும். எத்தனையோ இந்து குடும்பங்களின் வாழ்வு நிர்மூலம் ஆகி இருக்கிறது. ஆயிரகணக்கான இந்து பெண்மணிகள் இசுலாமிய மத வெறியர்களால் கொடூரமாக கற்பழிக்க பட்டு சிதைக்க பட்டிருகிறார்கள்.. மேற்கு வங்க பகுதியிலும், அன்று இந்தியாவின் ஒரு பகுதியான கராச்சியிலும் இந்துக்களின் ரத்த ஆறே ஓடி இருக்கிறது. இந்த பிரிவினையால் ஏற்பட்ட இடப்பெயர்ச்சியாலும், வன்முறைகளாலும் அதிகம் பாதிக்க பட்டவர்கள் இந்துக்களே. இதன் கொடூர பின்னணியில் இருந்து தான் கோல்வால்கர் மேற்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக அவ்வாறு கூற நேர்ந்தது. அவர் கூறியது வெறும் பொழுது போக்கிற்காகவோ அல்லது கண்டதையும் பேசி சர்ச்சையை ஏற்ப்படுத்துவதர்காகவோ அல்ல..

  எப்படி இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை என்னும் கொடுங்கோன்மையினை அம்பேத்கர் கடுமையாக சாடி பேசினாரோ. அதே போன்று தான் கோல்வால்கர் இசுலாமியர்கள் நிகழ்த்திய கொடுமைகளை நேரில் பார்த்தால் அவ்வாறு பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் தவறொன்றும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்து அல்லாதோர் என்று அவர் இசுலாமியர்களை மனதில் வைத்தே கூறினாரே ஒழிய. சாதிய ரீதியில் அவர் எந்த கருத்தையும் கூறவில்லை.

  இந்து சமயத்தில் சாதிய பிரச்சனைகள் இருக்கிறது ஒத்து கொள்கிறேன். அவற்றை எப்படி தீர்ப்பது என்று தான் யோசிக்க வேண்டுமே ஒழிய. 4000 வருட ஒரு பாரம்பரிய மிக்க ஒரு செழுமையான பண்பாட்டை அழிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அந்த பண்பாட்டில் சில சுய நல பார்பனர்கள் புகுந்து கொண்டு போடும் ஆட்டத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்து. இந்து தர்மத்தை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும். சில காலங்களில் அது நிச்சயம் நடக்கும் ….

  • முகலாயர்களின் காலம் 1500 முதல் 1700 வரை.
   இந்த காலத்தில் ஔரங்கசீப் தவிர்த்து வேறு எவரும் மதவெறி பிடித்து திரியவில்லை.
   அதுபோக இந்தியா மீது படையெடுத்து வந்த பலர் செலவத்தை கொள்ளையடிக்கும் நோக்கோடு வந்தார்கள். மதத்தை பரப்ப அல்ல.

   அய்யா, கோல்வால்கரின் காலம் 1906 முதல் 1973 வரை.
   இந்த சமயத்தில் பாகிஸ்தான் பிரிவினை தவித்து வேறு எந்த பிரச்சினையும் கிடையாது.

   ஆனால் முஸ்லிம்களின் செயல்களால் கோல்வால்கர் வெறுப்படைந்தார் சொல்வது என்னய்யா நியாயம்?? ஏனய்யா கதை விடுகிறீர்கள்?

   கோல்வால்கரின் பாசிசத்தை கூட கண்டிக்க கூட உங்களுக்கு மனமில்லையே!!

   ஆங்கிலேய ஆதிக்கத்தை முதன்முதலில் எதிர்த்தது மைசூர் மன்னன் ஹைதர் அலியும், பின்னர் அவரது வாரிசு திப்பு சுல்தானும். இதுதான்யா வரலாறு!!

   எங்கே போனார்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்? ஆங்கிலேயரிடம் நக்கிப் பிழைத்தவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள் இந்த ஆர்எஸ்எஸ்காரர்கள்.

  • //முதலில் R .s .s என்கிற அமைப்பே இந்துகளுக்கு எதிரான இசுலாமியர்களின் வன்முறை மற்றும் அராஜக செயலின் எதிர் வினையால் உருவானதே ஆகும்..//

   இது முழுப்பொய்.

   ஆர்.எஸ்.எஸ் ஏன் தொடங்கப்பட்டது? https://www.vinavu.com/2011/01/19/pa-raghavan-kizhakku-rss/ என்ற

   “இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் வெள்ளையர் எதிர்ப்பு அல்லது ஆதரவு இரண்டுமே பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தின் மீட்போடு தொடர்புடையது.

   ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட காலகட்டத்தில்தான் அம்பேத்கரும் தனது செயல்பாடுகளை துவங்குகிறார். 1920கள் மற்றும் 1930களில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து பொதுக்குளத்தில் நீரெடுக்கும் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் முதலானவற்றை நடத்துகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் இத்தகைய சோதனைகளால் இந்துக்களுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு நேர்ந்துவிட்ட அபாயத்தை பற்றி கவலைப்படுகிறார்.

   இத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.”

  • //முதலில் R .s .s என்கிற அமைப்பே இந்துகளுக்கு எதிரான இசுலாமியர்களின் வன்முறை மற்றும் அராஜக செயலின் எதிர் வினையால் உருவானதே ஆகும்//

   சரி உங்களுடைய வாதப்படியே வைத்துக் கொள்வோம். அப்படி பார்த்தா இந்து மக்களுக்கு எதிரா கொடுமை செஞ்ச வெள்ளக்காரனுக்கும் எதிரா போராடி இருக்கனுமே. ஏன் RSSகாரன் வெள்ளக்காரன் கால நக்கீட்டு இருந்தான்?

   //இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்கிற தனி நாடு பிரிய வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் போட்ட வெறியாட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.//

   அடப்பாவி!!! இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை பற்றீ முதலில் பேசியது ஹிந்துத்துவத்துக்கு அடித்தலம் மிட்ட உங்க சார்வார்கர். வரலாறு தெரிந்தால் படித்துப்பாருங்கள்.

 7. Hi Kaja Mohideen,

  //Islamic law grants inheritance rights to women//

  But it is in HALF measure. All the civilized countries have laws entitling women the EQUAL SHARE as men. As human beings, girls are entitled to equal share just like boys. Denying any portion of it is against natural justice. A small debate on Woman issues that I had with a Muhamadan woman is in the following link. http://questionstomuhamadhians.blogspot.com.au/2012/08/1.html

  //Muslims live in Christian lands, there is commitee to analyze and amend their their local laws to allow Islamic Law, e.g.UK.//

  You are sure to have committees. That is your duty. But till recommendations are constitutional and accepted, Muhamadans are under common law. Islamic councils that operate in UK mosques are just ‘kata-panchayats’ by Muhamadan mullaas. They have no legal authority or jurisdiction in the United Kingdom. They primarily force women seeking divorce, child custody, alimony etc to accept Muhamadan arrangements, which are against women, instead of going to UK’s court. Only brave women go to court to ask for divorce, which is tricky in Muhamadan law, child custody and alimony which are not possible in Muhamadan law, etc. These councils mediate to a lesser extent in business and finance between Muhamadans and it is valid all over the world as per Arbitration act.

  //other civils things are guided by Sharia in U.K//

  Can you give a list of civil things that are guided by Sharia that are lawful in UK?

  //The Triple Talaq, as some people practice in TN is not prescribed by Sharia//

  Triple Talaq is valid as per Sharia and it is invented by Muhamad himself.

  //It is false that in Islam girl’s property should be managed by her husband//

  In Muhamadism, girls themselves should be managed by men, leave alone girls managing something. They have no say in anything. They need permission from men to do anything. Without the company of men, women cannot go anywhere as they should not seen with other men without a male escort. This is pure Muhamadism as practiced in Muhamadist countries.

  • Give the reference to source on where the triple talaq as practiced in TN is prescribed in Sharia. Giving clarifications to baseless allegations can never be called ‘intelligent debate’.

   • Just reply this Kaja, which law is better? One that gives women equal rights or that gives half rights? That too in property, witnessing etc? Which law is better? One that allows both man and women marry only once or that allows man to marry 4 times and women once? Which law is better? On that don’t allow keeping women as sex slaves (vaipaatti) or that allows women to be kept as sex slaves (right hand possesses)? Which law is better? One that treats witness of all humans equally or that treats women and people of other religion as half witness? Just tell me in one word!!!

   • Hi Kaja Mohideen,

    //Triple Talaq//

    முத்தலாக் செல்லுபடியாவதால்தான் அமலில் இருக்கிறது. மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் கணவன் மணைவியை பிரிந்து விடவேண்டும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு தலாக்கிற்கும் மற்றொன்றுக்கும் இடையே எத்தனை நொடிகள் (நிமிடங்கள்/ மணிகள்/ நாட்கள்…) இடைவெளி இருக்கவேண்டும் என்று சொல்லப்படவில்லை. அதனால்தான் தலாக்கை மூன்று முறை அடுத்தடுத்து சொல்லியும் முகமதிய ஆண்கள் தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்கள்.

    எப்படி முத்தலாக் செல்லுபடியாகது என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.

    PS: (பிரிந்தவர்கள் மீண்டும் சேரவேண்டுமானால் அதற்கான நிபந்தனை முகமதுக்கு மட்டுமே உதிக்கமுடியும் ஒரு அற்புதம்.)

     • BTW, After viewing your recent comment, reviewing my earlier comments – I realize that I have used a WRONG word “prescribed”. Actually, Sharia prescribes this method but it is the MOST DISLIKED & SINFUL Method which is Not Recommended.

      • Why to prescribe a sinful method and then say it is not recommended method? So, Sharia is not 100% sinless it seems. Why don’t you accept that modern secular law is better than religious laws and move ahead!

      • Hi Kaja Mohideen,

       //it is the MOST DISLIKED; SINFUL Method which is Not Recommended//

       Which Muhamadan book (q/h/s/etc) says so? I think it is the innovation of Imams in order to whitewash stupid rules

       By the by,

       It seems you have nothing against my first comment about which you said I am ‘spreading fake’. Now our readers know who is here to ‘spread fake’.

     • Hi Kaja Mohideen,

      This man, instead of directly responding to the question, talks for 1/3 of time about the holiness of family and nikkah. Then speaks about Talaq, confusing the subject and introducing his own innovations (which is haraam and kufr). Big mistake/deception he makes is about the separation. He says, pair needs to separate [iddha] after first thalaq itself. What an ignorant or deceptive imam!

      His rulings about child custody are also full of lies.

      Jingchaallaa, I will expose his rulings more later.

 8. Imam is not deceptive. The 1st ruling on Talaaq is the preferred way. Im not here for spreading fake. If i have the indent of fake, i wouldn’t have posted the link. Btw, Talaaq is the ONLY thing that is allowed in Islam that draws the God anger.

  • Hi Kaja Mohideen,

   //1st ruling on Talaaq is the preferred way//
   //Talaaq is the ONLY thing that is allowed in Islam that draws the God anger.//

   How do you know these things?

   // If i have the indent of fake, i wouldn’t have posted the link.//

   Faking is not in posting a link. Faking is in telling others not to spread fake but not giving any proof of them spreading fake.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க