முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு பெயரை பயன்படுத்தி ஓட்டுக் கேட்ட உசிலை பாரதி அச்சகம் ஜோதிபாசு.
தமிழக விவசாயிகளே!
கடந்த 2011-ம் வருடம் இறுதியில் கேரளாவில் உள்ள காங்கிரசு, சி.பி.எம், பி.ஜே.பி போன்ற கட்சிகள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க சதி வேலைகள் செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக லட்சக் கணக்கானோர் திரண்டு பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க விடாமல் கேரளாவுக்கு நெருக்கடி கொடுத்து தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் எதிரொலித்தது.

அதனைத் தொடர்ந்து தேனி, மதுரை மாவட்டங்களில் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, கட்சி சார்பற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு” என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திலும் உறுப்பினர்கள் சேர்த்து, ஒருங்கிணைப்பு குழு அமைத்து மதுரை, தேனி மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர், அமைப்பாளர், செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுத்து சட்டப்படி 82/2012 நம்பராகப் பதிவு செய்துள்ளோம்.
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழுவின் அனுமதி இல்லாமல் 13.04.2014-ம் தேதியன்று வெளியான தினமலர் நாளிதழில் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு, மோடிக்கும் வைகோவுக்கும் ஆதரவு தெரிவிப்பதாக உசிலம்பட்டியில் பாரதி அச்சகம் நடத்தி வரும் செல்லம்பட்டியைச் சேர்ந்த ஜோதிபாசு என்ற கருங்காலி, பி.ஜே.பி, ம.தி.மு.கவிடம் பணம் பெற்றுக் கொண்டு பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து பேட்டி கொடுத்துள்ளார்.
இந்தச் செய்தி அறிந்த உசிலைப் பகுதி முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் ஜோதிபாசை தொடர்பு கொண்டு, “தனிப்பட்ட முறையில் நீங்கள் வைகோவுக்கு ஓட்டு சேகரியுங்கள். அதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், கட்சி சார்பற்று உருவாக்கியுள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக் குழு சார்பாக, வாக்கு சேகரிக்கக் கூடாது” என்று எச்சரித்தார். அதற்கு, “நான் செல்லம்பட்டி சார்பாக அப்படித்தான் வைகோவுக்கு வாக்கு சேகரிப்பேன்” என்று கூறிவிட்டு, மறுநாள் துண்டு பிரசுரம் அடித்து அதில், “மோடியின் ஆசி பெற்ற வைகோவின் பம்பரம் சின்னத்திற்கு ஓட்டு போடுவது முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை குடிக்கும் ஒவ்வொரு குடிமகனின் கடமை, அதை தவறாது நிறைவேற்றுங்கள். இவண் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு குழு, மதுரை – தேனி மாவட்டங்கள்” என்று அச்சிட்டு உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் வழங்கினார்.
தகவல் அறிந்த நமது உசிலை பகுதி அமைப்பாளர் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக் குழுவின் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள கிளையின் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்து குழுவில் முடிவு எடுக்கப்பட்டு பாரதி அச்சகம் ஜோதிபாசை கண்டித்து கீழ்க்கண்டவாறு வால்போஸ்டர் அடித்து ஊர்தோறும் ஒட்டி அம்பலப்படுத்தப்பட்டது.
உசிலை பாரதி அச்சகம் ஜோதிபாசே!
- பெரியாறு அணையை இடித்துத் தள்ள கடப்பாரை சகிதம் படையெடுத்த பி.ஜே.பி.யுடன் கூடிக் குலாவி தமிழனுக்கு துரோகம் செய்யும் வைகோ சைக்கோ கூட்டணிக்கு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக் குழு சார்பாக வாக்கு கேட்கும் ஈனச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்!
- பெரியாறு அணையின் முழு உரிமை தமிழகத்துக்குத்தான் என மோடியிடம் வாக்குறுதி வாங்கும் யோக்கியதை உனக்கும் தருவதற்கான யோக்கியதை மோடிக்கும் உண்டா? முடியாதெனில் இந்த மாமா வேலையை இத்தோடு நிறுத்திக் கொள்!
பெரியாறு அணை பாதுகாப்புக் குழு உறுப்பினர்களே!
- தமிழர்கள் எழுச்சியில் உருவாகி முறைப்படி பதிவு பெற்ற நமது குழுவை ஓட்டுக்கு விலை பேசும் ஜோதிபாசு போன்ற சுயநல புல்லுருவிகளின் சதிச்செயலை முறியடிப்போம்!
ஜோதிபாசு போன்ற புல்லுருவிகளால்தான் தமிழ்நாட்டில் இதுவரை கட்டியமைத்து செயல்பட்டு வந்த விவசாய சங்கங்கள் அனைத்தும் படிப்படியாக சிதைக்கப்பட்டன. அதே போல் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழுவும் சிதைந்து விடக் கூடாது. ஜோதிபாசு போன்ற புல்லுருவிகளை முளையிலேயே கிள்ளி எறிவது நமது கடமை.
- விவசாயிகளின் எழுச்சிதான் அணையைப் பாதுகாக்கும்!
- தமிழக உரிமையை நிலைநாட்டும்!
- ஒன்றுபடுவோம் உறுதியாக நின்று போராடுவோம்
இவண்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக் குழு (பதிவு எண் 82/2012)
தேனி-மதுரை மாவட்டங்கள்
தொடர்புக்கு : உசிலை – 9626933278, தேனி – 7502451019
தகவல்:
பு.ஜ செய்தியாளர், உசிலம்பட்டி
காங்கிரசு, சி.பி.எம்,சரி அது ஏம்ப்பா எப்பபாத்தாலும் பி.ஜே.பி கரனோடத்தையே புடிச்சிகிட்டு தொங்கிகிட்டு இருக்கீங்க……??????????
எப்பப்பார்த்தாலும் ஏன் உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் கூட பி.ஜே.பி போன்ற ஏகாதிபத்தியக் கைக்கூலிகளை ஆதரிக்கிறீர்கள்?
மேற்கு வங்கத்தில் கிழட்டுநரி ஜோதிபாசு போலீஸ் மந்தி(ரி)யாக இருந்தபோது ஆயுத போரட்டத்தை நசுக்கி நிலபிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் சேவகம் செய்தார்.செல்லம்பட்டி ஜோதிபாசு முல்லைப்பெரியார் போரட்டத்தை காசுக்காக துரோகிகளின் காலடியில் சமர்ப்பணம் செய்து பெயர் பொருத்தத்தை நிருபித்துவிட்டார்.
sethu ship canal project
30,000 grt, 330 knt 500 cr 1 yr
3 m draft / land cross travel at mukundarayar chatram
no cutting, no dredging in sea
open cast mining desert sand, coal
ripper, roller-ledd conveyer, ship 330 knt, dump at land store
no excavater, no truck, no crane, no rooler belt conveyer
cost 2500 mn$ 3 yrs roi = 880 %