Friday, August 23, 2019
முகப்பு அரசியல் ஊடகம் டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்

டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்

-

“Most Himalayan villages lie in valleys, where there are small streams, some farmland, and protection from the biting winds than come through the mountain passes in winter. The houses are usually made of large stones and have sloping slate roofs so the heavy monsoon rain can run off easily. During the sunny months, the roofs are often covered with pumpkins, left there to ripen in the sun.”

– Those Three Bears by Ruskin Bond – an excerpt

சமச்சீர் கல்வி
படம் : நன்றி தி ஹிந்து

மேலே நீங்கள் படித்தது தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கான 6-ம் வகுப்பு ஆங்கில பாடநூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதி.

தமிழ்நாட்டில் வாழும் 6-ம் வகுப்பு மாணவி ஒருத்தி இந்த பத்தியை படித்து, உள்வாங்கி அது சொல்ல வருவதை புரிந்து கொள்ளவும், திருப்பி ஒப்பிக்கவும் முடிந்தால் அவளது ஆங்கில அறிவின் தரத்தைப் பற்றி என்ன சொல்வீர்கள்? கல்லூரியிலோ, மேல் படிப்பிலோ, எதிர்கால வேலைச் சூழலிலோ ஆங்கிலத்தில் பணி செய்ய அந்த மாணவிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

சமச்சீர் கல்வியில் 6-ம் வகுப்பில் இந்த தரத்திலான ஆங்கில பாடங்களை படிக்கும் மாணவர்களின் ஆங்கில அறிவு நவீன வாழ்க்கைக்கு தேவைப்படுமளவுக்கு இல்லை என்று கவலைப்படுகிறார்கள் லண்டன் தேம்ஸ் நதிக்கரையைச் சேர்ந்த கனவான்கள். இங்கே அவர்கள் தனியார் பள்ளி முதலாளிகளாக அறியப்படுகிறார்கள்.

சென்னை கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான டான் பாஸ்கோ மையம் நடத்திய ஆய்வு சமச்சீர் கல்வி புத்தகங்களில் ஆங்கில பாடத்தின் தரத்தை பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கேள்விக்குள்ளாக்கியதாக சொல்கிறது. ஒருவேளை டான் பாஸ்கோ தனது ஆய்வுக்கு தேர்ந்தெடுத்த பெற்றோர் தமது வாரிசுகளை ஷேக்ஸ்பியர் அல்லது ஷெல்லியின் நேரடி வாரிசுகளாக உருவாக்கி ஆங்கில மொழியின் 21-ம் நூற்றாண்டு அமர காவியங்களை படைப்பற்கு தயாரிக்க விரும்புகிறார்கள் போலும்.

டான் பாஸ்கோ
டான் பாஸ்கோ மற்றும் பிற தனியார் கல்வி வியாபாரிகளின் நோக்கம் மாணவர்களை எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு தயாரிப்பதே!

மாணவர்கள், பெற்றோர், பள்ளி தலைவர்கள் என மொத்தம் 344 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதிலும், சுமையை குறைப்பதிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பாராட்டப்பட்டாலும், எதிர்கால போட்டித் தேர்வுகளுக்கு தயாரிப்பதில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை. இதிலிருந்து டான் பாஸ்கோ மற்றும் பிற தனியார் கல்வி வியாபாரிகளின் நோக்கம் மாணவர்களை எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு தயாரிப்பதே என்பது தெளிவாகிறது.

98% பேர், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் மிகவும் சிறந்தது என்று கருத்து தெரிவித்ததாக டான் பாஸ்கோ மையத்தின் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆகிய நாளிதழ்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியானது.

“ஒவ்வொரு பிரிவிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் சிறந்தது என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்கிறார் இந்த ஆய்வை நடத்திய டான் பாஸ்கோ பள்ளியின் ரெக்டரும் செயலருமான ஃபாதர் ஜான் அலெக்சாண்டர். டான் பாஸ்கோ பள்ளி சமீபத்தில் தனது வளாகத்தில் ஒரு சி.பி.எஸ்.ஈ பள்ளியை ஆரம்பித்திருக்கிறது என்பதையும் அதனால், பெற்றோரை அந்த திசையில் திருப்பி விடும் தேவை தமக்கு இருப்பதையும் குறிப்பிட ஃபாதர் வசதியாக மறந்து விட்டிருக்கிறார்.

டான் பாஸ்கோ கலந்துரையாடல்
“சமச்சீர் கல்வி : சமமானதா, நீர்த்து போக வைப்பதா?” – கலந்துரையாடல். டான் பாஸ்கோவின் லாப வேட்டைக்கான விளம்பர தந்திரம்

ஆசிரியர் தரம் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல், கட்டுமானத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தை இணைத்தல், பாடத்திட்டத்தோடு இணைந்த நடவடிக்கைகள், வாழ்க்கையின் பல அம்சங்களுக்கு மாணவர்களை பழக்கப்படுத்துதல், வாழ்க்கை-திறன் பயிற்சி அளித்தல் “இவைதான் தனியார் பள்ளிகளை அரசுப் பள்ளிகளிலிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன” என்று தனது சந்தைப்படுத்தலை வெளிப்படையாக செய்கிறார்.

டான் பாஸ்கோ அல்லது பிற மேட்டுக்குடி தனியார் பள்ளிகளைப் போல மாதத்துக்கு ஒரு நாள் “வில்லேஜ் விசிட்”, அல்லது , “ஸ்லம் விசிட்” என்பதுதான் டான் பாஸ்கோ போன்ற கல்வியாளர்களுக்கு தெரிந்த வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் பன்முகத்தன்மையாம்.

உண்மையில், அரசுப் பள்ளியில் பல்வேறு வர்க்கப் பிரிவு மாணவர்களோடு படிப்பதுதான் ஒரு மாணவனுக்கு வாழ்க்கையின் பன்முகத்தன்மையை உணர்த்தி அவனை சிறந்த சமூக மனிதனாக உருவாக்க முடியும். மற்றபடி ஆசிரியர் தரம்/பொறுப்புணர்வு, பள்ளி உள்கட்டுமானம், தொழில்நுட்பம் போன்றவை போராடும் பெற்றோர் சங்கங்கள் மூலம் அரசு பள்ளிகளிள் சாதிக்கப்படக் கூடியவையே. தனியார் கட்டணக் கொள்ளைதான் அவற்றை சாதிக்கும் என்று பிரச்சாரம் செய்வது மோசடித்தனம், அதை நம்புவது முட்டாள்தனம்.

வாசுதேவாச்சாரியார்
வாசுதேவாச்சாரியார்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்ரீ அகோபில மட ஓரியன்டல் உயர்நிலைப்  பள்ளியின் கௌரவ செயலரும் பொருளாளருமான டாக்டர் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. ஆனால், தினசரி வாழ்ககையில் அது சாத்தியமா?” என்று கேட்டிருக்கிறார். லண்டன் தேம்ஸ் நதிக்கரை கனவான்களின் உள்ளூர் ஏஜெண்டுகளான இவர்கள் கங்கைக் கரை சனாதிகளாவார்கள்.

“சமஸ்கிருத மற்றும் ஆங்கிலக் கல்வி ஒன்றுக்கொன்று சமமானவை இல்லை. அப்படியிருக்க அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று அவர் சந்தேகப்படுகிறார். என்னடா தேம்ஸ் நதிக்கு எதிராக கங்கை முழங்குகிறதே என சந்தேகமா? சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகு ஓரியன்டல் பாடத்திட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது. பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதியினர் ஆங்கிலம் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து, முன்னுக்கு வரவேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர்கள். அதேநேரம் இவர்களில் சிலர் அந்த முன்னுக்க்கு வரும் முன்னேற்றத்தின் சித்தாந்தமாக பார்ப்பனியம் இருக்க வேண்டுமென்று போராடுபவர்கள்.

அதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அம்பானியின் இணக்கம். அந்த வகையில் பாரதப்பண்பாட்டின் சம்ஸ்கிருதத்தை புறக்கணிக்கும் சமச்சீர் கல்வி தேவையா என்று சீறுகிறார் இந்த பண்டிதர். சமூக வாழ்க்கையிலேயே சமத்துவத்தை மறுப்பவர்கள் கல்வியில் மட்டும் சமத்துவத்தை ஏற்பார்களா என்ன?

பெருமளவு தனியார் பள்ளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட (ஒரு சில கிராம மற்றும் அரசுப் பள்ளிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன) இந்த ஆய்வில் பெற்றோரின் சுயநலமும் அறியாமை கலந்த மேட்டிமைத்தனமும் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. 75% மாணவர்களும் ஆசிரியர்களும் 75% சமச்சீர் கல்வி சிந்தனையை ஊக்குவிக்கிறது கருத்து கூறியிருக்க, 42% பெற்றோர் அப்படி கருதவில்லையாம்.

இந்த ஆய்வை டான் பாஸ்கோவுடன் இணைந்து நடத்தியது டேலன்ட்-ஈஸ் என்ற திறன் வளர்ச்சி (தனியார்) நிறுவனம். தங்களுடைய வணிக நோக்கத்துக்காக ஒரு ஆய்வை நடத்தி, தங்களது வருமானத்தை பெருக்கும் வகையில் பதில்களைப் பெற்று, அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடத்தி, அதை நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக கவர் செய்ய வைத்த டான் பாஸ்கோ பள்ளியை கல்வியாளர்கள் என்று சொல்வதா கல்வி மோசடியாளர்கள் என்று சொல்வதா? சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும், பார்ப்பனியத்தின் முகவர்களும் ஒன்றாக குரல் கொடுக்கிறார்கள். சமத்துவம் வேண்டுவோர் இரண்டையும் வீழ்த்த வேண்டும்.

மேலும் படிக்க

  1. கோர்ட் போட்ட கொள்ளையர்கள் எல்லாம் சேர்ந்து அங்கி போட்ட சொங்கி தலைமைல ஒரு மொக்க ஆராய்ச்சி பன்னி இருக்கானுக அவனுக நோக்கத்துக்கு தூள் கிளப்புங்க பாதர் ஏற்க்கனவே எப்படா இந்த சமச்சீர் கல்விய ஊத்தி மூடலாமுனு அரசு நினைக்குது இதுல இந்த அங்கி போட்ட சொங்கிக வேற பேப்பரும் பேனாவும் எடுத்துக்கிட்டு ஆராச்சினு கிளம்பிட்டானுக………….

  2. பெரும்பான்மை மக்களுகு பயன் தருவது எது?? ஏழை மக்க்ளூக்கான 25% கட்டாய இலவச கல்வியை மேற்படி பள்ளிகளில் எத்தனை தருகின்றன?? ஏன் ஆடம்பர பள்ளியை மூடக்கூடாதுன்னு ஒரு கருத்து கணீப்பு நடத்தினா என்ன?

  3. Instead of improving State syllabus standard, Samacheer Kalvi has definitely diluted the education standards in TN.
    We will see the results in another 1 generation.

  4. //உண்மையில், அரசுப் பள்ளியில் பல்வேறு வர்க்கப் பிரிவு மாணவர்களோடு படிப்பதுதான் ஒரு மாணவனுக்கு வாழ்க்கையின் பன்முகத்தன்மையை உணர்த்தி அவனை சிறந்த சமூக மனிதனாக உருவாக்க முடியும்.//

    கட்டுரை ஆசிரியர் இன்னும் காமராஜர் காலத்தில் இருக்கிறாரோ. இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசு பள்ளியில் பல்வேறு வர்க்கங்களை சேர்ந்த பிள்ளைகள் படிக்கிறார்கள். அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர் அனைவரும் ஒரே வர்க்கமாக(ஏழை) இருபதால் தான் அரசு பள்ளியை நாடுகிறார்கள். அதிலும் கொஞ்சம் காசு கிடைத்து விட்டால் உடனே மொட்டை மாடியில் கூரை போட்டு நான்கு Table,chair உடன் இருக்கும் தனியார் பம்மாத்து பள்ளிகளில் சேர்த்து விடவேண்டும் என்று தான் நினைக்கிறார்களே ஒழிய யாரும் அரசு பள்ளிகளை நாடுவதில்லை.

    //“சமஸ்கிருத மற்றும் ஆங்கிலக் கல்வி ஒன்றுக்கொன்று சமமானவை இல்லை. அப்படியிருக்க அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று அவர் சந்தேகப்படுகிறார். என்னடா தேம்ஸ் நதிக்கு எதிராக கங்கை முழங்குகிறதே என சந்தேகமா?//

    சைக்கிள் கேப்பில் கங்கை கரைக்கு எதிராக “வால்கா” கரையின் முழக்கம் கரைபுரண்டு ஓடுவது ஏனோ?

  5. சோம்பேரிகளாக இருக்கும் பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களை மேலும் சோம்பேரிகளாக்க முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த திட்டம் தான் சமச்சீர் கல்வி திட்டம். இந்த சமச்சீர் கல்வி திட்டத்தால் தமிழக மாணவர்களின் போட்டித்திறன் சொம்பெடென்ச்ய் கடுமையாக பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் தேர்வுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் சொற்ப அளவில் தான் தேறுகிறார்கள். இந்த கல்வி திட்டத்தால் நிலைமை இன்னமும் மோசமாகலாம்.
    இன்றைய உலகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி நிறைந்த உலகமாக இருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் அடிப்படை தேவைகளுக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டியில் இறங்கியே ஆக வேண்டியிருக்கிறது. நம் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகளாக இருக்கும் உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பு ஆகியவற்றை பெற பணம் (அதாவது பொருளாதார வலிமை) தேவை. இந்த பணத்தை பெறுவதற்கு அனைவரும் முயற்சி செய்வதில் வியப்பில்லை. ஒருவரிடம் எந்த அளவுக்கு பொருளாதார வலிமை இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர் அல்லது அவர் குடும்பத்தின் அடிப்படை தேவைகள் நிறைவடையும் உத்தரவாதம் வலுப்படுவதோடு அவரின் சமூக அந்தஸ்தும் கூடுகிறது. இது தான் உலகளவிலான யதார்த்தம்.
    இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் பெற்றோர்கள் யாரும் தங்கள் பிள்ளைகள் படித்து சாக்ரட்டீஸ்களாகவும் நொபெல் பரிசு பெறும் அறிஞர்களாகவும் வலம் வர வேண்டும் என நினைப்பதில்லை. இன்றைய பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மிகவும் சாதாரணமானது. தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். அந்த படிப்பின் மூலம் (உலகின் எந்த மூலையிலாவது கூட) ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டும். அந்த வேலையின் மூலம் நல்ல முறையில் பணம் சம்பாதித்து பொருளாதார பாதுகாப்பை பெற வேண்டும். அந்த பொருளாதார பாதுகாப்பின் அடிப்படையில் தங்களுக்கு என ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு மனைவி, குழந்தைகள் என அவர்கள் கவுரமாக வாழ வேண்டும். இது தான் தமிழகத்தில் வாழும் பெரும்பாலான சாதாரண பெற்றோர்களின் தங்கள் பிள்ளைகள் குறித்த எதிர்பார்ப்பு. இதை புரிந்து கொள்ளாமல் ”அப்துல் கலாம் தமிழ் மிடியத்தில் படித்து பெரிய ஆளாகவில்லையா? மயில்சாமி அண்ணாத்துரை அரசு பள்ளியில் படித்தவர் தானே” என்று கேட்பது முட்டாள்தனமானது.

    மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிப்பாடத்திட்டங்கள் குறிப்பாக சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் தரமான ஒன்று. இந்த பாடத்திட்டத்துக்கு உலகளவில் அங்கீகாரம் உண்டு. உலகின் எந்த மூலையிலும் இருக்கும் எந்த மாதிரியான கல்வி அல்லது கல்வி சார் தொழில் சூழ்நிலையிலும் இந்திய மாணவர்கள் சாதிக்காவிட்டாலும் சுர்விவல்-ஆவது செய்ய தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்த சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் அடிப்படை நோக்கம். மாணவர்கள் பெரிய அறிஞர்களாக மிளிர்ந்து சாதனைகள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஒருவருக்கு தான் சார்ந்த துறையில் அல்லது தொழிலில் எந்த சூழ்நிலையிலும் சுர்விவெ செய்ய முதலில் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அவர் தான் சார்ந்த துறையில் அல்லது தொழிலில் சாதனைகள் செய்வது குறித்து யோசிக்க முடியும் (ஸுர்விவல் Fஇர்ச்ட், ஆச்கிஎவெமென்ட் ணெxட்). சுருங்க சொன்னால் முதல் மார்க் வாங்குவதை விட பாஸ் செய்து தப்பி பிழைக்க வேண்டும் என்பது தான் முதன்மை இலக்கு. உலகின் பல பகுதிகளுக்கு கல்வி மற்றும் வேலை நிமித்தமாக போகும் இந்திய மாணவர்கள் பலர் போன இடத்தில் பெரிதாக சாதிக்காவிட்டாலும் தப்பி பிழைத்துக்கொள்ளும் பிள்ளைகளாகவாவது இருக்கிறார்கள். இந்த சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட என்.சி.இ.ஆர்.ற்றி பாடப்புத்தகங்கள் சர்வதேச தரம் கொண்டவை. தன்னளவில் முழுமையானவை. தில்லியில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் தான் உள்ளது. ஆனால் ஹிந்தி மீடியத்தில். மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிக்கூடங்களுக்கு (குறிப்பாக கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதய வித்யாலயா ஆகியவை) பாடத்திட்டங்களை வகுப்பதற்கும் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கும் தரக்கட்டுப்பாடு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் தரமும் கற்பித்தலும் மோசம். திராவிட கட்சிகள் குறிப்பாக தி.மு.க ஆட்சியின் போது வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தவர்களுக்கு ”மூப்பு அடிப்படையில்” என்ற பெயரில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. ”சமுதாய நலன்” ”சமூக நீதி” என்ற பெயரில் பல லட்சம் ஏழை மாணவர்களின் எதிர்காலம் இப்படி தான் பல வகைகளில் பாழாக்கப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு ஏழை மாணவர்களின் நலன் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியன சமுதாய நலனாகவும் சமூக நீதியாகவும் தெரியாமல் போனது விந்தை தான். தேசிய அளவிலான ஈஈT, ஈஈM, ஆஈஈMஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப் பின்புலம் கொண்ட மாணவர்கள் மிகவும் சொற்பம். ஈஆஸ் அதிகாரி போன்ற பதவிகளிலும் இதே நிலை தான். மத்திய அரசு நிறுவனங்களில் (அவை தமிழகத்தில் இருந்தாலும்) இதே நிலை தான். இந்த லட்சணத்தில் தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்களையும் சாக்ரட்டீஸ்களாகவும் அல்பர்ட் ஐன்ஸ்டீன்களாகவும் ஆக்க சமச்சீர் கல்வித்திட்டத்தை (அதுவும் அண்டப்புகழ் கல்வி மேதைகள் தயாரித்தது!) அமல்படுத்தியுள்ளார்களாம். இந்த அண்டப்புகழ் சமச்சீர் கல்வி முறையை பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்களாம்.

  6. பெரியசாமி அவர்களே, தாங்கள் சி பி எஸ் சி பாடநூல்களையும் சமச்சீர் பாட நுல்களையும் படித்துள்ளீர்களா? வாய்ப்பு தங்களுக்கு இல்லை என்றால் பின்வரும் ஆய்வைப் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
    https://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/

    இந்த ஆண்டு ஐ ஐ டி களில் உள்ள 15000 இடங்களுக்கு தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் மொத்தமே 3 ஆயிரம் பேர்தான்.. சிபிஎஸ்சி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 10775 பேர்..இதில் 3 இல் ஒருவர்தான் தேர்வே எழுதுகிறார்..இவர்கள் படிக்கும் தரமான பாடத்திட்டம் 3000 பேருக்கும் சீட் கிடைக்க செய்துவிட்டதா? 3000 பேரில் தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பயின்றவர்களும் உள்ளனர் என்பதையும் பாருங்க..

  7. all these cash rich big catholic institutions opened a cbse or icse schools even before the samacheer kalvi announced by the govt. good example is st. micheal’s school adyar with their influence in delhi they easily got permission to change matric board to icse board which is very difficult to get without money and political influence. it is said that the school spent lakhs of rupees to get d permission from the gove. same is true with rani meyyammai chettinad school in karur. not so well to do schools have no other option but to accept this samacheer kalvi unwillingly. another cash rich school who got permission for cbse board even before samacheer announcement is zion school selaiyur….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க