privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்தருண் விஜயின் தமிழ்த் தொல்லை தினமணியின் கொசுத் தொல்லை

தருண் விஜயின் தமிழ்த் தொல்லை தினமணியின் கொசுத் தொல்லை

-

திருக்குறளும் திருட்டுக் குரலும்!

ருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது!

தருண் விஜய் - தினமணி
“பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப்புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார்.

திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்து ‘திருக்குறள், தமிழுக்கு ஆதரவு’ போஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது.

உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார்.

போதாதா? “பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார்.

திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர் ‘எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்.

இதன்அடையாளமாக, “மத்திய துணை ராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்கள் திருக்குறள் படிக்க வலியுறுத்துங்கள், அதன் அர்த்தத்தை விளக்குங்கள், மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் ஏராளமான வீரர்களை இழந்ததற்கு படையினருக்கு மனஉறுதி குறைவாக இருந்ததும் காரணமாகும். போர் முறைகள், போர் தந்திரங்கள் தொடர்பாக குறளில் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்! அதன் அர்த்தத்தை விளக்குங்கள்” என்று திருக்குறள் என்ற அற நூலை, பார்ப்பன மனு நூல் போல, பகவத்கீதை போன்ற வஞ்சக யுத்தவெறியும், ரத்தவெறியும் பிடித்த நூலைப் போன்றதுதான் என திரிக்க ஆரம்பித்துள்ளார்.

சத்தீஸ்கர், ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களான காடுகள், மலைகள், கனிம வளங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு சூறையாட மத்தியப் படையினரை கூலிப்படையாக பயன்படுத்துகிறது அரசு. நாட்டு வளங்களை அபகரிக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராடும் மண்ணின் மைந்தர்களை, பெண்களை, குழந்தைகளை இரக்கமற்று, சித்ரவதை செய்து கொல்லும் அரசு மற்றும் வேதாந்தா கொள்ளையர்களுக்கு பார்ப்பன பாசிச வழிகாட்டி பகவத்கீதை தான்; வழிகாட்டும் நூலாக அமையும்.

கொடுங்கோன்மை அரசுக்கு எதிராக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே

“அல்லல்பட்டு ஆற்றாத அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை!”

என்று எச்சரித்த திருக்குறள் கேடுகெட்ட அரசுக்கு எதிர் நூலாகும். மக்களின் எதிர்ப்புக் குரலாகும்.

கீதை கொலைநூல்
மண்ணின் மைந்தர்களை, பெண்களை, குழந்தைகளை இரக்கமற்று, சித்ரவதை செய்து கொல்லும் அரசு மற்றும் வேதாந்தா கொள்ளையர்களுக்கு பார்ப்பன பாசிச வழிகாட்டி பகவத்கீதை தான்

ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக் கருவியாகவும், காவி பயங்கரத்தின் திரிசூலமாகவும் திருக்குறளையும், தமிழையும் உருமாற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சதித்தனங்களை தோலுரிக்காமல், வைரமுத்துவும், பல ஆளும் வர்க்க தமிழ் ‘வயிறு’ முத்துக்களும் “ஆகா! வடக்கு வாசல் திறக்கிறது!” என்று வாயைப் பிளந்தால், அட உண்ட கட்டிகளா! அது எதுக்கு? என்று எதிர்த்து இந்த தமிழ் ஆர்.எஸ்.எஸ். களையும் அடையாளம் காட்ட வேண்டும். இந்த ஜந்துக்களை அடையாளம் காட்டும் விதமாகத்தான் திருவள்ளுவர்

“வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு”

என்று வெளிப்படையான பகைவரை விட, நண்பர் போல் நடிக்கும் பகைவன் ஆபத்தானவன் என்று குறிப்பு காட்டி இருக்கிறார்.

கொலை, கொள்ளை, களவு, சூது, கள்ள உறவு போன்ற சமூகத் தீங்குகளையும், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற பார்ப்பனப் பாதகங்களையும், அதைப் பற்றி ஒழுகும் அரசமைப்பையும் அக்காலத்திய நிலைமைக்கேற்ப கண்டித்தும், பொது நோக்கிலான அறத்தோடும் அந்தக்கால உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ப மக்களின் ஏக்கமாய் மலர்ந்தும், சூழலுக்கேற்ற பலவீனங்களையும் கொண்டது திருக்குறளின் கருத்துச்சாரம்.

யார் செத்தால் இருந்தால் என்ன சூதாடு! மனைவியையும் வைத்து சூதாடு! போரின் எதிரில் மாமனாயினும் போடு! சகோதரனாயினும் வெட்டு, குத்து‘ என்ற பார்ப்பன வெறிக்கொள்கை கொண்டது பகவத்கீதை, மகாபாரதம்! இவைகளின் பெருமிதத்தில் ஆட்சி நடத்தும் மோடி அரசின் பரிவாரங்கள் திருக்குறள் எனும் மனுநீதியின் பகைநூலை உறவாடிக் கெடுப்பதற்கு ஏற்றாற் போல், உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்கும் ராணுவத்திற்கு வழிகாட்டும் நூலாக திருக்குறளைத் திரித்துக் காட்டுவது அனைத்து எதிர் முனைகளையும் ஆரிய பார்ப்பன மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய, தமிழ்ப்பாசம் அல்ல! இதை திருக்குறளின் மெய்ப்பொருளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக, (குறள் – 780)

“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து”

என்ற குறள் நிச்சயம் ஒரு கூலிப்படைக்கு பொருந்த முடியாது. திருவள்ளுவர் இந்தக் குறளில் சொல்லுவது, “தம்மைக் காத்தவர் அல்லது ஆதரித்தவர் கண்ணீரில் நீர் பெருகுமாறு சாகின்ற சாவு வருமானால் அந்தச் சாவு கெஞ்சிக் கேட்டாவது பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது” என்கிறார். மக்களுக்காக உயிரைக் கொடுக்கும் நக்சல்பாரிகளுக்கே இந்தப் பாடல் பொருத்தமடைகிறதே ஒழிய, தன்னை எப்போதும் ஒடுக்கும் மேலதிகாரியை சுட்டுவிட்டு நிம்மதியடையும் ஒரு இராணுவ வீரனுக்கு இது பொருந்துமா?

சிஆர்பிஎஃப்
ஆளும் கும்பல் நிறுத்தியுள்ள படையிடம் இதை படிக்கக் கொடுத்தால் எழுதிய திருவள்ளுவரையும் ஏ.கே. 47 -னால் என்கவுன்ட்டர் செய்யத் தேடும், அந்தளவுக்கு ‘பண்புள்ள’ படைதான் இவர்களின் யோக்கியதை!

இதுமட்டுமல்ல, படைமாட்சி என்ற அதிகாரத்தில் (குறள் – 766)

“மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு”

அதாவது வீரம், மானம், மக்களுக்கு துன்பம் செய்யாத விழிப்படையும் போர்த்தெளிவு – இந்தப்போர் ஏன்? எதற்கு? யாருக்கு? என்ற தெளிவு, அரசியல் நான்குமே படைக்குப் பாதுகாப்பு என்கிறார். சாதாரண வீரப்பன் வேட்டையிலேயே கோழி, ஆடு, பெண்கள் என்று குதறும், ஏன் இந்த சண்டை என்று கேள்வி கேட்க உரிமையில்லாத இந்த ஆளும்வர்க்க படைக்கு எதிர்க்குரலாகத்தான் திருக்குறள் ஒலிக்கிறது.

இதுமட்டுமல்ல (குறள் – 769) இல்

“சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை”

என்கிறார். ஒரு ஒப்பீட்டுக்குச் சொன்னால் கம்யூனிஸ்டுகளைத் தவிர ஒரு படைக்கும் இந்த யோக்கியதை கிடையாது. அதாவது “கீழ்த்தரமான பண்புகளும் தலைமையின் மீது அளவு கடந்த வெறுப்பும், வறுமையும் இல்லாத படையையே வெல்லும்” என்கிறார். காஷ்மீரத்திலே இந்த ஆளும் கும்பல் நிறுத்தியுள்ள படையிடம் இதை படிக்கக் கொடுத்தால் எழுதிய திருவள்ளுவரையும் ஏ.கே. 47 -னால் என்கவுன்ட்டர் செய்யத் தேடும், அந்தளவுக்கு ‘பண்புள்ள’ படைதான் இவர்களின் யோக்கியதை!

இவைகள் மட்டுமல்ல, படைமாட்சி, படைச்செருக்கு, அரண், உட்பகை… என்று எந்த அதிகாரங்களிலும் திருவள்ளுவர் காவி தருண்விஜய் கக்குவதுபோல, போர்வெறி, போர்த்தந்திரம், போர் முறை என்ற அடிதடி அர்த்தத்தில் குறளே இயற்றவில்லை, கருவிகளைக் கையாளும், வஞ்சகத்தை அரங்கேற்றும் பார்ப்பன படு பாதக பகவத்கீதை போல கொலை நூலாக இல்லாமல், போர் பற்றிய இடத்திலும் அறநெறி, ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பிலான தற்காப்பு நிலை, தாக்க வேண்டிய நிலைவரினும் அதிலும் முறைமை என்ற கோணத்திலேயே குறட்பாக்கள் உள்ளன. கார்ப்பரேட்டுகளுக்கு கூலிப்படையாக இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் அரசுக்கு எதிராகத்தான் அந்த நிலையிலும் பேசி இருக்கிறது திருக்குறள்.

(குறள் – 557) -இல்

“துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு”

திருவள்ளுவர்
குவிந்து வணங்கிய கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்.

என்று இரக்கமற்ற அரசனை சாடியும், (குறள் – 736) – இல்

“கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா;
நாடுஎன்ப நாட்டின் தலை”

என்று இயற்கையை அழிக்கும் காவி, கார்ப்பரேட் அரசை கண்டிப்பது போல், எது நாடு? எது வளர்ச்சி? என்று கேள்வி கேட்க குறிப்பு காட்டி உள்ளார் வள்ளுவர். இந்த திருடர்களுக்கும், திருக்குறளுக்கும் எந்த பொருத்தமும் இல்லை!

எல்லாவற்றுக்கும் மேலே

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகு இயற்றியான்”

என்று பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு மக்களை தள்ளிய அரசு/ இயற்றியவன் அலைந்து கெட்டொழிக என்று ஒலிப்பதுதான் குறள். இந்த சுரண்டல் அரசை ஒழிக்கும் நக்சல்பாரிகளின் குரலுக்கு ஆதரவாய் ஒலிக்கிறதே ஒழிய தேசியத் திருடர்களுக்கு ஆதரவாக இல்லை.

காவிப் பயங்கரவாதிகளை கண்டுகொள்ளும் விதமாக

“தொழுதகை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண் நீரும் அனைத்து”

என்று குவிந்து வணங்கிய கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்.

திருக்குறளின் ஆரியப் – பார்ப்பன எதிர்ப்பு பரிமாணங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்; ‘தமிழ் திருக்குறள்’ எனும் பெயரில் எதிரிகள் கைக்கு தமிழகம் நழுவாதிருக்க மக்களிடம் ஆரியப் – பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிரான அரசியல் உணர்வினை வளர்ப்போம்!

– துரை.சண்முகம்

 1. ஐய்யா,

  அப்படிதான் திருக்குறள் நாட்டுமக்கள் அனைவரது கைகளிலும் தவளட்டுமே.
  ஒரு சூழ்நிலையில் அதன் உண்மையான பொருள்விளக்கம் குறித்து பலரும் ஆராய்ந்து அறிந்துகொள்ளும்போது மக்களுக்கு அசல் எது? போலி எது? என்பது விளங்கிவிடுமல்லவா?
  சாதி மதம் இனம் தாண்டி சமத்துவமும் சகோதரத்துவமும் அனைவரது மனத்திலும் தோன்றும்போது அநீதிக்கெதிரான புரட்சி எண்ணம் தன்னாலே மக்கள் மனத்தில் உருவெடுக்க ஆரம்பிக்கும்.

 2. வேலுமணி சரவணகுமார்,

  எது சரி எது தவறு என்பது பின்னால் மக்கள் படித்து தெரிந்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும், திருக்குறளை மக்களை அழிக்கும் கரங்களுக்கு குடுத்து என்ன பயன். மக்களை அழித்தொழிக்கதான் அவர்களுக்கு கீதை இருக்கிறதே. அது மட்டுமல்லாமல் இந்த நாதாரிகள் இதை எப்படி மொழி பெயர்ப்பு செய்வார்கள் என்று நமக்கு தெரியாதா. நம்ம தமிழ் தாய் வாழ்த்துல இருக்குற “ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்” என்ற வரியை இங்கேயே தணிக்கை செய்ய முடிகிற போது, இந்துத்வா நாதாரிகள் திருக்குறளையும் கீதையோட சேர்த்து கீதையோட தமிழ் வடிவம் தான் திருக்குறள் என்று கூட முன்னுரை போடுவதை இங்கே கவிபேரரசுகளும் கவியரசுகளும் சிற்றரசுகளும் ஏன் அவர்களின் ராஜாதி ராஜனான ஸ்ரீ ராஜராஜசோழனும் கூட தடுக்க முடியாது.

  இதன் மூலமாகவாவது திருக்குறள் பரவட்டுமே என்ற உங்களது ஆதங்கம் பரிதாபத்துக்குரியது என்பதை இந்த கட்டுரை தெள்ளென உரைக்கிறது. இத்தனை நாட்களாக இல்லாமல் தருண் விஜய் போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கைகூலிகள் எதற்கு திருக்குறளைப் பற்றி இவ்வளவு அக்கறையோடு பேசுகிறார்கள் என்பது அவர்களின் பின்னணியை சேர்த்தே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தில் எப்படியாகினும் உள்நுழைந்து விட வேண்டும் என்ற வெறி ஒருபுறம் இருந்தாலும் வடக்கு போல் தெற்கு அவ்வளவு சீக்கிரத்தில் வீழ்ந்து விடாது என்பது அந்த பாசிச சக்திகளுக்குத் தெரியும். அதனால் தான் சாம தான பேத தண்ட என்ற நான்கு முறைகளில் எந்த முறை தமிழகத்துக்கு உதவும் என்பதை அறிந்து அதற்க்கேற்றார்போல வியூகம் அமைக்கிறார்கள் இந்த பாசிஸ்டுக்கள்.

  நன்றி.

 3. நண்பர் சிவப்பு அவர்களின் கருத்துக்கள் மறுக்கயியலாதவைதான்.
  ஆனாலும்
  அக்காலம் போல இல்லையே இன்றைய அறிவியல் உலகம்.
  இன்று யார் வேண்டுமாயினும் உலகின் எம்மூலையிலிருந்தும் தனது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனும் வசதியும் வாய்ப்புகளும் இருக்கையில் அந்நாள் போல விளக்கத்தை ஒரு சாராருக்கு மட்டும் சாதகமாக்கி சமூகத்தில் நிலை நிறுத்திவிட முடியாதே.
  தத்தமது கருத்துக்களை நிலைநிறுத்த இன்றைய விவாத உலகில் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளித்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம்இருப்பதையும் மேலும் பரவலான இணையதள தொடர்பினால் இது கேட்பவர் மற்றும் பதிலளிப்பவர் எனும் இருநபர் விவாதத்திலிருந்து உலகின் பலதரப்பட்ட மக்களுக்கு இடையே நடைபெறும் ஒரு கருத்துபரிமாற்றமாக இருப்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
  ஒருவர் கேட்பதுதான் கேள்வி அதற்க்கு சம்பந்தப்பட்டவர் அளிப்பதுதான் பதில் எனும் இருநபர் தொடர்போடு இக்கால விவாதங்களை முடிக்க இயலாதல்லவா?
  அக்காலத்தில் நான் எப்படி பிறந்தேன் என்று கேட்கும் குழந்தைகளுக்கு பலவிதமான சம்பந்தமில்லாத பதில்களை அளித்து ஏமாற்றி வந்தோம்.ஆனால் இன்றைய உலகில் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றாலும் அல்லது உங்களது பதிலில் திருப்தியடையவில்லை என்றாலும் அக்குழந்தைக்கு உண்மையை அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்துவிடுகிறதல்லவா?
  அப்படி தானாக தேடிசென்று அறிந்துகொள்ளும் குழந்தை எந்த விசயத்தை யார் சொல்லி கேள்விபட்டாலும் அதை தன்னளவில் ஆராய்ந்து அறிந்துகொள்ளும் பழக்கத்தை விடாதுபற்றிகொள்ளும்.
  அதுபோலதான்.
  எவ்வளவுதான் சர்க்கரையை தடவி கசப்பு மருந்தை கொடுத்தாலும் இனிப்பு நாக்குடன் நின்றுவிடும். உள்ளே செல்லும் கசப்பு மருந்துதான் வேலை செய்யும்.
  இவர்கள் இங்கே எப்படியும் உடுருவ முயற்சி செய்கிறார்கள், மேலும் செய்வார்கள் என்பது உறுதியாகிவிட்டது.இந்த உடுருவல் முயற்சியின் கேடுகளை விளக்கும் அதே வேளையில் இறுதியில் உண்மைதான் வெல்லும் என்பதையும் இங்கே நம்பிக்கையோடு குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
  மலை முகமதுவிடம் செல்லாவிட்டால் முகமது மலையிடம் செல்லவேண்டும் என நான் கேள்விபட்டிருக்கிறேன்.அதுபோல மார்க்ஸ் சொல்லி கேளாதவர்கள் அதை வள்ளுவன் மூலமாக கேள்விபட நேர்ந்தால் அது இன்னமும் பலரை ஈர்க்கும் என்பது என் நம்பிக்கை.
  எனவே இந்த சுழலை நான் நம்பிக்கையுடன் அணுகுகிறேன்.
  இருப்பினும் உங்களது எச்சரிக்கை உணர்வும் வரவேற்க்கதக்கதே.
  பூமி தட்டையானது என்றம் சூரியன் தான் பூமியை சுற்றிவருகிறது என்றும் அந்நாளில் மத மற்றும் அதிகாரத்தின் துணைகொண்டு நீண்டகாலம் நிலைநிருத்தியதுபோல இந்நாளில் செய்துவிடமுடியாது என்பதை இங்கே ஒரு ஆறுதலாக குறிப்பிடவிரும்புகிறேன்.

 4. முதலில் அவர்கள் திருக்குறளை மொழி பெயர்க்கட்டும். அப்புறம் உங்க வியாக்கியானத்தை வச்சுக்கலாமே! அப்படி அவர்கள் தப்பாக மொழி பெயர்த்தால் உங்க குல வழக்கப்படி மண்டகப் படிய ஆரம்பியுங்கள்! அடி வாங்கும் முன்பே அடிக்கிறான் …கொல்றான்னு சொல்வது நல்ல முன்னேற்பாடுதான் என்றாலும் இங்கு அது பொருந்தவில்லை!

  தருண் விஜய் உண்மையாகவே திருக்குறளை சிலாகிக்கலாம் என்பது கூட உண்மையாக இருக்கலாம்! சான்ஸ் கொடுத்துப் பார்க்கலாமே! இல்ல எலி அம்மணமாக ஓட ஒரு காரணம் இருந்தது என்று தெரிய வரும் போது வச்சுக்குவோம் கச்சேரிய!

 5. நண்பர் பாலா,

  நீங்க சான்ஸ் குடுத்துப் பாருங்க இல்ல கூடவே போய் திரிச்சு விடுவதற்கு(அதாங்க மொழி பெயர்ப்பு:)) உதவி பண்ணுங்க யாரு வேண்டான்னு சொன்ன.

  என்னமோ இது வரைக்கும் அவிங்க ஒன்னும் தெரியாத அப்பாவிகன்னும் இனிமேட்டு ஏதாவது தில்லுமுல்லு பண்ணுனா ராஜராஜ சோழன் மாதிரி வாள எடுத்துட்டு போய் ஆயிரம் பேரா இருந்தாலும் சரி சீவிடுவேன் என்கிறீர்களா.

  தெக்க இருக்க ராஜராஜ சோழன் ராஜாதி ராஜனுங்களாலே தமிழ் தாய் வாழ்த்த காப்பத்த முடியல. இதுல எந்த சூரப் புலிகள் போய் திருகுறள வடக்க இருந்து காப்பத்த போறாங்க.

  இந்தி மொழிதான் இந்தியாவின் தேசிய மொழின்னு இங்க சாப்ட்வேர் கம்பனில இருக்குற பயபுள்ளகல்லாம் அடிச்சு உடுறாங்க. நாம விக்கி லிங்க நெறைய விசியத்துல நம்பளின்னாலும் அங்க கூட இவங்கிளுக்கு ஆதரவா இல்ல. ஆனா இது விசமா பரவி இருக்க இல்லையா.

  உலகத்துக்கெல்லாம் சமத்கிருதம் தான் தாய் மொழின்னு அகண்ட பாரத ராமனின் அவதாரமான மொடிஜி பொய் மூட்டப் புளுகுராறு. இதை எப்படி நீங்க புரிஞ்சிகிறீங்க. எந்த கவிராஜன் அங்க போய் மல்லுக் கட்டப் போறான்.

  சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று மார்த தட்டியவர்கள் பின்னர் அந்த குட்டு வெளிப்பட்டபின் ,இந்திய நாகரிகம் என்று சொல்லி ஜகா வாங்கலையா . சரி திராவிட நாகரிகம்னு சொல்லலேன்னாலும் ஆரிய நாகரிகம் இல்லேன்னு ஏன் சொல்லவில்லை

  திருவள்ளுவருக்கு பட்டய போட்டு பாத்தாங்க(நாமத்த போட்டாங்கலன்னுத் தெரியல) பூணுலையும் போட்டுப் பாத்தாங்க. இங்க தமிழ் ஈழம்னு பினாத்துரவங்க எல்லாம் பூணுல் போட்டா என்ன நம்ம திருவள்ளுவர் திருவள்ளவர் தான் என்றும் கூறுகிறார்கள்.

  முனியப்பனுக்கும், குதிரையுல இருக்குற அய்யனாருக்கும்,கருப்பனாருக்கும் கூட பூணுல் போட்டுட்டாங்கோ. பாரதியார் இங்க இருக்குற எல்லா சூத்திரபயளுவளுக்கும் பேஷா பூணுல் மாத்திடலாம் என்றும் சொன்னார்(உடனே நம்மாளுவ அவருக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யாதது தான் குறை. சாதி ஒழிப்பு போராளின்னு பட்டம் குடுத்துட்டாங்க).

  அப்புறம் இந்த பார்ப்பனிய சித்தாந்தம் எப்படி மித்த ஆளுகள(சமணம்,பௌத்தம்) கருத்தியல் ரீதியா ஒழிச்சது என்பதற்கு புலிகேசிய(வடிவேலுவா) காமெடியான வெச்சு படம் எடுத்தங்கள்ளே அப்புறம் நந்தனாரை போட்டுத் தள்ளிவிட்டு 63 நாயன்மார்களில் ஒருவரா பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லையா.

  அப்புறம் இருக்கவே இருக்காரு நம்ம கவிச்சக்கரவர்த்தி, ஆணாதிக்க வெறியனும், கோழையும், பார்ப்பனியத்தின் கைக்கூலியான இராமனை இங்கே கற்புக்கு அரசனென்றும், ஏகப்பத்தினி விரதனென்ரும், மாபெரும் வீரன் என்றும் நைச்சியமாக தமிழ் கூறும் நல்லுகத்துலே சொருகி விட்டாருள்ள அத என்னன்னு சொல்றீங்க.

  உறவாடி கெடுப்பானுக இந்த கொலைகார ராமனுங்க. எச்சரிக்கையா இருங்க பாலா.

  நன்றி.

  • எப்படியோ… நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்…மொழிபெயர்ப்பு நடக்கட்டும் பார்க்கலாம்!

 6. ஏற்கனவே கிராமப்புறக்கோயில்களை அவர்கள் தத்து எடுத்துவிட்டார்கள். இப்போது திருக்குறள்….தனியார்மயம் , கடவுள் நம்பிக்கை, மத அபிமானம், நுகர்வுக்கலாச்சாரம் எனப் பல ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளன. போதாக்குறைக்கு அரசு அதிகாரம். நாம் மற்ற எல்லாவற்றையும் திருத்த அல்லது மாற்ற முயற்சிப்பதைவிட அரசு அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடலாம். அதன்மூலம் இந்த சனியன்கள் அனைத்தையும் ஒரேதாக ஒழித்துக்கட்டிவிடலாம்

 7. Vaiko ______off recently. Vairamuttu going to _______-off very soon. A naughty gal trying to impose Sanskrit to illiterates. So the so-called illiterates going to become chadhurvedhies. We can read and enjoy sexual perversions depicted in Bagavath Puranas in its original form without any misinterpretation by Broghits. Thank God.

 8. “””மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் ஏராளமான வீரர்களை இழந்ததற்கு படையினருக்கு மனெளறுதி குறைவாக இருந்ததும்””—>>> எத்தனை மாவோயிஸ்டு செத்தான், ராணுவம் மற்றும் போலீஸ் எத்தனை பேர் செத்து போனான்னு முதல்ல கணக்கெடுத்து பாரு… மவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுவிட்டனர்…. மிச்சம் ஒரு நூறு, இருனூரு பேர் இருப்பானுங்க…அவ்வளவு தான்… பா.ஜா.க, துரை சண்முகம், இரண்டு பேருக்குமே திருக்குறளை பற்றி பேச அருகதையில்லை…

  • இந்தியன் ரொம்ப அரிப்பா இருக்கும்போல..எதுக்கும்
   சிட்ரிசின்(இப்போது அவில் மாத்திரை கிடைப்பதில்லை)
   வாங்கி சாப்பிடுங்க…தேசிய அரிப்பு நீங்க சரியான வழி இது ஒண்ணுதான்…

 9. மாமா மூணு காலத்துக்கு….தப்பு தபபா எழுதக்கூடாது….
  எட்டு காலத்துக்கு எகிறிக் குதிக்கிறார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க