privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திலிங்கா - நாடகம்

லிங்கா – நாடகம்

-

linga 1
மலையாள மாந்தீரிக நாட்டுல சப்பர் ஸ்டாருக்கு மட்டும் இடமில்லையா என்ன?

லொகேஷன் 1 : முதல்வர் பணிவு பன்னீரு அலுவலகம்

(தலைமைச் செயலர் யானம் வாத்தியார் சர்ஃப்புல அடிச்சு துவைச்ச பூணூல இய்த்து வித்துக்கிட்டே, கண்ணீரு ஆபிசண்ட கன ஜோரா என்ட்ரி ஆவுறார். செல்லில் வந்த இன்கம்டாக்ஸ் செய்திக்கு இன்னா மீனிங்குன்னு சிப்பந்தியண்ட கேட்டுக்கிணுராரு நம்ம பன்னீரு!)

யானம்: சி எம் சார் வாள், கரெண்ட் பில்லை ஏத்துறதுக்கு எல்லாம் பேஷா ரெடியாயிடுத்து, என்னைக்கு அறிவிக்கலாம்ங்கிறேள், ஆயா தோட்டத்துலேர்ந்து தாக்கீது வந்துடுத்தா?

கண்ணீரு: வந்தாச்சு சாமி, கஜினி சார் பங்கா படம் வெள்ளிக்கிழமை ரிலீசாவுதாம். அன்னெய்க்கே அறிவிக்கலாம்ணு ஆயா அரண்மனையிலேந்து எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாய்ங்களாம்!

யானம்: சூப்பார் சார், ஆயான்னா ஆயாதான், மின் கட்டண உயர்வ எப்படி சொருகணும்னு ஆயாக்கு தெரிஞ்சது போல இந்தி, ஜெர்மன், இங்கிலீஷ்னு தெரிஞ்ச எனக்கு தெரியலயே? இத்தினி நாள் மின் வாரியத்துல சேர்மான இருந்தும் நேக்கே மனசு கெடந்து அடிச்சுண்டுது, எப்படி கட்டண உயர்வை சொல்லுவோம்ணுட்டு! இப்போ எல்லாம் சுமுகமா முடிஞ்சிடும்னு தெரிஞ்சிடுத்து. நேரா திருப்பதி போறேன், பெருமாள சேவிச்சுண்டு மொட்ட பொடுறேன்!

_________________________

லொகேஷன் 2 : இயக்குநர் ஓ எஸ் ரவுசுக்குமார் அலுவலகம்.

தயாரிப்பாளர் மட்லேன் வெங்கடேசு, விநியோகஸ்தரு, அபிராமி சினிமா பட்டரு அல்லாரும் கையே வெக்காம கன்னத்துல சோகமா கூடிப் பேசுறாங்கோ, சப்பர் ஸ்டாரு வீடியோ கான்பரசிங்குல பாத்துக்கினுராறு!

ரவுசு: வெள்ளியன்னைக்கு படம் ரிலீசாவணும்னு ஆயா தோட்டத்துலேர்ந்து உத்தரவு வந்தாச்சு! அதுக்குள்ள எல்லா வேலையும் முடிக்கணும் டக் டக்குனு ஐடியாவ சொல்லுங்க, சட்டுப்புட்டுனு முடிச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்.

மட்லேன்: ரவுசண்ணே, நம்ப படத்தோட டிவி ரைட்ஸை ஆயா டிவிக்கே பயந்து போய் கொடுத்தாச்சு! பாடல் ரிலீஸ் பங்ஷன், பிரோமஷன், பேட்டின்னு ஃபுல்லா அவுங்களுக்கே கொடுத்தாச்சு, இன்னமும் என்னதான் வேணுமாம்! ஏன் இப்பிடி கடுப்பேத்துறாங்க.

சப்பர் ஸ்டார்: மட்லேன் சார், இந்த படத்துல எனக்கு 60 சி-ன்னா உங்களுக்கு 50, ரவுசுக்கு 20, ஈராசுக்கு 30, கொட்டமுத்துவுக்கு 40-ன்னு எத்ன சி தேத்தியிருக்கோம்! அதுல ஆயாவுக்கு ஷேர் கொடுக்காட்டி எப்புடி? பெட்டியை அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னா? சப்பாணிக்கு விசுவரூபத்துல கிடைச்ச அடி இந்த பரட்டைக்கு வந்தா எனக்கு மட்டுமா, உங்க எல்லாத்துக்கும் வலிக்குமே?

ரவுசு: சப்பரண்ணே, இப்பைக்கு ரெண்டு பிராப்ளம் சால்வ் பண்ணனும், நெம்பர் ஒன்னு, கோர்ட்டுல போட்ட திருட்டு கதை கேசுல நம்மள 10 கோடி கட்ட சொல்லியிருக்காங்க, நம்பர் 2 வெள்ளியண்ட 12.12.2014, கரெண்டு கட்டணத்த ஏத்துற நாள்ளதான் நம்ம பட ரிலீசு.

சப்பர்: என்ன மேன், அன்னைக்கு என்னோட ப(ர்)டே ரிலீசுன்னு சொன்னீங்க. கரெண்டுக்கும், கோர்ட்டுக்கும், நான் ஆக்ட் பண்ணுன பங்காவுக்கும் இன்னா கனெக்ஷன்?

(இந்த ஆளுக்கு இத விளக்குறதுக்குள்ள ஐஞ்சு படம் எடுக்கலாம். சாவடிக்கிறாங்கப்பா – மனசுக்குள் ரவுசு குமுறல்)

linga 2
அடேயப்பா, எவ்ளோ முட்டாளுங்க இந்த ஊர்ல?

_________________

லொகேஷன் 3: கவர் மீடியா கூட்டம், விவெண்டா கான்பரன்சிங் ஹால், தாஜ் கொரமண்டல், சென்னை.

(கைக்குள்ள கவர், பையண்ட லேப்டாப், வவுத்துக்குள்ள வறுத்த ஏறா, ரத்தத்துல ஃபோர் பான் இறக்குமதி விஸ்கியோட நம்ம நிருபரு மாறு பேசிக்கிணு வெளியே வாரோங்கோ!)

முதாலமவர்: என்ன சார் போன தபா டெப்லட்டேலேர்ந்து இந்த வாட்டி லேப் டாப்….. ஓகேவா!

இரண்டாமவர்: சவத்து மூதி, ஆளுக்கு ஐம்பது சி-ய தேத்திகிட்டு நமக்கு முப்பது டி-யில முடிச்சிகிடுதாணுவ!

மூன்றாமவர்: ஆமயா நீங்க போய் அனுஷ்கா அம்சம், சோனாக்ஷி சொர்க்கம், ரஜினி மஜான்னு டெம்பளேட்டு எழுதறதுக்கு இது கொறைச்சலாவே?

முதலாமவர்: சார் நீங்க பிச்ச வாங்கறதப் பத்தி பேசறேள், நாங்க பிச்ச பொடுறவன் ஒரு தராதாரத்தோட போட வேண்டாமோ இல்லையோன்னு கேக்குறம்!

_____________

லொகேஷன் 4: நாகர்கோவில், வடசேரி தங்கம் திரையரங்கம் அருகில்.

(படம் பார்த்த களைப்பில் வாழைக்காப்பமும் கையுமாய் அம்புரோஸ் சாயக் கடையில் ஒதுங்குறாரு நம்ம நாகராசன்)

அம்புரோஸ்: என்னடே, வடலிவிளையில கொத்து வேலைக்கு போறேன்னு சொன்ன! இளவட்டமுன்னாலும் நம்ம வயித்து பாட பாத்துகிடணும்லா!

நாகராசன்: அண்ணாச்சி உங்களுக்கு அன்னாடம் சாயாக்கடைன்னு எழுதியாச்சு! நாங்கள்லாம் நாலு விசயத்த பாத்து என்ஜாய் பண்ணணுமுல்லா?

அம்புரோஸ்: சரி மக்கா, படம் எப்படிடே?

நாகராசன்: தலைவரு என்னமோ அணையக் காப்பாத்துறாறு, கோவில தொறக்குறாறுன்னு காட்டுதான். நமக்கு அவரு நடந்து வந்த ஜோரே போருமுல்லா! நாலுவருஷமாச்சு, தலைவரு படம் வந்து… அதிலும் பாத்துக்கிடுங்க முன்னாடி வந்த சிவாஜி, எந்திரன்ல அவரு பெரிய முதலாளி, சயிண்டிஸ்ட்டுன்னு காட்டுவான். இதுலதான் என்னாட்டம் லோக்கலா வாறாரு!

அம்புரோஸ்: சரிடே, அப்படி என்னடே படத்துல அவரு செய்யுதாறு!

நாகராசன்: பர்ஸ்ட்டு ஆஃப் ஃபுல்லா சந்தானம், கருணாகரன் கூட காமடியா திருடுதாறுல்லா, தியேட்டரே சிரிச்சு வெடிச்சுக்கிடக்கான், பாத்துக்கிடுங்க!

அம்புரோஸ்: என்னது திருடுதானா! கல்லையும் காரையும் எடுத்தா அன்னாடம் ஐநூறு ரூபா கிடைக்கும். அதுக்கே எவ்வளவு கஷ்டப்படுத, சினிமாவுல திருடுறான்னு அதப் போய் பாத்து சந்தோஷப்படுதிய, விளங்குமாடே!

நாகராசன்: அம்புரோஸ் அண்ணாச்சி, நம்ம கஷ்டப்படுதோம், இல்லேங்கல, அதப் போய் யாரச்சும் படமா எடுத்தா எவனும் பாக்கமாட்டான் அண்ணாச்சி, சினிமான்னா அவுத்து விட்ட கோவில் மாடாட்டம் சும்மா ஊரு பூரா சுத்தி வந்தாத்தான் ஜாலியா இருக்கும். கொல்லையில மணியடிச்சா பால் கொடுக்குற பசுவ வைச்சு சாயா குடிக்கலாம்.

___________

ஜப்பான்காரங்களும் ரசிக்கிறாங்களாம், செட்டப்பு,செட்டப்பூ
ஜப்பான்காரங்களும் ரசிக்கிறாங்களாம், செட்டப்பு,செட்டப்பூ

லொகேஷன் 5: கார்மைக் 14 திரையரங்கம், கொலம்பியா, அமெரிக்கா

(ஸ்ரீரங்கத்து கோபு, மதுரை முருகன், கோயம்புத்தூர் ராசு படம் பாக்கதுக்கு முன்னாடி பேசிக் கொல்றாய்ங்க)

முருகன்: கோபு சார், நாங்கதான் கொஞ்சம் லோக்கலா குத்துப்பாட்டு, கெத்துச் சண்டைன்னு இருக்கோம். நீங்கள் கொஞ்சம் ஈரான் சினிமா, கொரியன் டிராமான்னு கிளாசா பாப்பீங்க, எங்களோட எப்படி சார் ரெண்டாவது வாட்டி பாக்க வாறீங்க!

கோபு: முருகன், சுஜாதா கதையில ஒரு ஹாலிவுட் கிரியேட்டர் கங்கைக் கரையில ஒரு நாகா சாமியார் டொக்கு போடுற ஸ்டைல பாத்துட்டு இன்ஸ்பயர் ஆயி ஒரு சைக்கோ டிரோகோ கில்லர் த்ரில்லர் எடுத்துருப்பாருன்னு ஒரு நாட் வரும். அதுனால நீங்க பாக்குற படம் வேற, நான் வேற ( மூக்கு கண்ணாடியை எடுத்து துடைச்சுக்கிணு, இன்னும் வேணுமாங்கிற மாறி பாக்குராறு)

ராசு: எப்புடி சார்? லிங்கேஸ்வரன டாவடிக்கிற சோனாக்ஷி பிளவுசே போடலயே, அதுலேர்ந்து பெண்கள் பேஷன் ஷோங்கிறதுல ஏதுனாச்சும் வரலாறு, தாட் மாறி இருக்கும்னு பாப்பீங்களா?

கோபு: இல்ல சார், நம்ம ஏரியா அது இல்ல, 2015-ல நான் படிக்கிறதுக்காக நாலு புக் டிசைட் பண்ணியிருக்கேன். அதுல ஒரு புக் இந்த படத்துல குறியீடா வருது! பட், யாரும் நோட் பண்ணியிருக்கமாட்டீங்க

(முருகனும், ராசுவும், தலைவர் படத்துல நமக்கு தெரியாத குறியீடா, இன்னாது இதுன்னு திகிலோட பாக்க, மப்சல் பசங்கள கெலிச்சா மாறி எஃபெட்டுல கோபு கனைச்சுக்கிணே பேசுராறு)

பிளாஷ்பேக்குங்கிறத நம்ம பாய்சு ஒரு இம்சைன்னே பாக்குறாங்க! பட் அதுல ஏகப்பட்ட மேட்டருங்க பிளாஷ் அடிக்கும், நம்ம வாழ்க்கைக்கு தேவையானது இருக்குங்கிறதுங்கிறது யாருக்கும் தெரியாது!

படத்துல பழைய காலத்துல என்ன நடந்துச்சுங்கிற இடத்துல “ராஜா லிங்கேஸ்வரனா நம்ம ரஜினி சார் ஓபன் ஆவுறார். அப்போ Joseph Campbell எழுதுன The Hero with a Thousand Facesங்கிற புக்கோட வரார். 1949-ல ரிலீசான இந்த புக்கோட மதிப்பை டாலருல கூட கவுண்ட் பண்ண முடியாது. ஹிஸ்டரியில எல்லா தலைவருங்களயும் எடுத்துக்கிட்டீங்கன்னா அவங்ககிட்ட மத்தவா கிட்ட இல்லாத ஒன்னு ரொம்பவே ஸ்பெஷலாவே இருக்கும்.

இந்த தலைவருங்க அல்லது சூப்பர் ஹீரோக்கள் சாதாரண பாமர நிலையில இருந்து சில ஸ்பெஷல் பியூச்சர்ஸ்ஸோட அசாதாரணமா மாறி லீடராகி கடைசியில தன்னோட சாதாரண நிலைக்கு திரும்புவாங்க. பாரதப் போர் முடிஞ்சாப்புறம் பாண்டவருங்களும், கிருஷ்ணனும் கைலாய யாத்திரை போவும் போது கூட இப்படித்தான் சாதாரணமாக போனாங்க. அப்ப வழிப்பறி செஞ்ச திருடன கூட அர்ச்சுனனால தண்டிக்க முடியல. ஏன்னா அவனோட ஆயுதத்துக்கான பவர் தீர்ந்து போச்சு!

சோ இதுலேர்ந்து டைரக்டர் எவ்வளவோ விசயங்கள சொல்ல வாராறு, என்னா ஏதுன்னுதான் ரெண்டாவது வாட்டி வாரேன்!

முருகன்: தல, நீங்க சொல்ற புக் சீனுக்குப் பிறகு தலைவரு பறந்து பறந்து ஃபைட் போடுறாரு. அதுல கொஞ்சம் கிராபிக்ஸ் இருந்தாலும் அடி அடிதானே, இதுதான் நாங்க பாத்த குறியீடு, நீங்க என்ன சொல்றீங்கண்ணே புரியல, எனிவே, உங்கள மாறி இன்டலக்சுவலையும் ஏதோ தாட் போட்டு ஈர்த்துருக்கிறாரே, அதான் மேட்டர்

(இன்னா இருந்தாலும் இந்த லோகம் நம்மவாக்குத்தான்ங்குற மாறி ரோசனையோட கோபு சிரிச்சிக்கிணே ஃபேட் அவுட் ஆவுறார்.)

_____________________

ரஜினியின்னா மொட்டை இல்லேன்னா எப்புடி?
ரஜினியின்னா மொட்டை இல்லேன்னா எப்புடி?

லொகேஷன் 6: பேரின்பவிலாஸ் திரையரங்கம், திருநெல்வேலி

(படம் பார்த்துக்கிணு முத்துப்பாண்டி, ஜமால், ஆவுடையப்பன் மூணு பேரும் அமாவாசை கடையில பிச்சுப் போட்ட புரோட்டாவ, சால்னாவுல மிக்ஸ் பண்ணிக்கிணு பேசுதாணுவ)

ஆவுடையப்பன்: மக்கா தலைவர் ஏமாத்திட்டாராலே!

முத்துப்பாண்டி: அதல்லா இல்லடே, சோலையூர் கோவில, முதல் மரியாதையோட தலைவரோட வாரிசு – அவரும் தலைவருதான் (டபுள் ஆக்ட்டு) தொறக்கணும்னு காட்டியிருக்காகல்லா, அங்க இருக்கு நம்ம கௌரவம், பண்பாடு, பெருமை. கண்டதேவியில எங்க சமுதாயத்து பெரியவங்கமாறி அவன்ங்களுக்கும் மரியாதை வேணுண்ணு சவுண்டு விட்டாணுவல்லா, அவனுகதாம்லே இதப் பாத்து திருந்தணும்!

ஜமால்: சரிடே, தலைவரு மாறி உங்க ஆட்களை யாராச்சும் டிரெயினிங் கொடுத்து ஸ்டார் ஆக்கலாம்லா, நவரச நாயகனுக்கு டோபா வாங்கி கலர் அடிக்கவே செல்வாக்கில்லண்ணு ஆயிருச்சுல்லா!

முத்துப்பாண்டி: நீர் தேவையில்லாம வம்ப வளக்காதீரு! ஏலே ஆவுடை என்னலே இந்தப் படத்துல குறைச்சலு?

ஆவுடையப்பன்: மக்கா முதல் மரியாதை மேட்டரு சரிதாம்டே, ஆனா படத்துல தலைவர கிட்டக்க பாத்தா சகிக்க முடியலடே, நம்ம மேலத்தெரு நெல்லையப்பரு தாத்தா கொஞ்சம் பான்ஸ் பவுடரை பூசிக்கிட்டு நின்னமாறில்லா மக்கா இருக்கு?

முத்துப்பாண்டி: ஏலேய் 65 வயுசல ஒரு மனுசன் நோய் வந்து ரெஸ்ட்டு எடுத்து நடிக்க வந்தாருல்லா, அந்த வீரத்த பாருடே! நடுவுல கொஞ்சம் டேம் கட்டுதான்னு அறுக்காணுவ, அத விட்டு பாத்தா சண்டையில என்னா மாறி பட்டையக் கிளப்புதாறு, அதப்பாரு!

ஜமால்: போடா கூமுட்டை, அதெல்லாம் கம்யூட்டர் கிராபிக்ஸ்ல காட்டுதாம்டே, இதப்பாத்து வீரம்னு சொன்னா உன் மீசை கூட வெக்கப்படுமுடே!

_____________

லொகேஷன் 7: இன்னோவேட்டிவ் மல்டி பிளக்ஸ், பெங்களூரு.

(படத்தோட ரொம்ப ஃபீலாகி ஃகாபி ஷாப்பில் கூர்க்-ஆக்லாண்டு ஃபியூஷன் காஃபியை உறிஞ்சிக் கொண்டே காயத்ரி, கோபால், ஜேம்ஸ்…….)

கோபால்: என்ன பாஸ் படம் ஓகேவா? அனுஷ்கா, சோனாக்ஷிவுக்காக எனக்கு டபுள் ஓகே !

காயத்ரி: சீ போடா, எப்ப பாரு, ஜொள்ளு வுட்டுக்கிட்டு, கதையில டேம் கட்டுறாங்க, அரசியலை விமரிசினம் பண்றார், அதெல்லாம் பாக்க மாட்டியா?

ஜேம்ஸ்: காயு, தலைவரு டேம் கட்டுறாருன்னா அத ஒரு மூணு நிமிஷம் பாட்டுல ரஹ்மான் சாரு, வைரமுத்து ஐயாகிட்ட சொல்லியே முடிச்சுருக்கலாம். அதப் போய் 20 நிமிஷம் காட்டுனா என்ன த்ரில் இருக்கும்?

காயத்ரி: சரிடா அப்படி பாத்தா அனுஷ்கா மேடம் கூட டிவி ரிப்போர்ட்டரா வாராங்க, சோனாக்ஷி கூட ஓல்டு வில்லேஜ் கேர்ளா வாறங்க, அவுங்கள மட்டும் ஃபிகருங்கன்னு ஏன் பாக்குற?

கோபால்: காயு, அனுஷ்கா படத்துல எங்கயாச்சும் ரிப்போர்ட்டர் மாறி வோர்க் பண்ணியிருக்காங்களா? தலைவரோட சுத்துறதுதானே அவங்க வேலை? சோ அவங்க பாக்குறதுதான் எங்களோட வேலை! சோனாக்ஷி கூட ஓல்டு வில்லேஜ் கெட்டப்புக்கா பாக்குறோம், அந்த ஸலீவ்லெஸ் கவர்ச்சிய பாக்கத்தானே போறோம், சோ ஒய் திஸ் கொலைவெறி?

_________________

லொகேஷன் 8: பனால் மல்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ், குவைத்.

(தமிழ் பதிவருங்கோ சோலை, மாலை, வலை மூவரும் ஒரு சேட்டன் ஓட்டலில் லெமன் டீ குடிச்சிக்கிணு, கையில செல்போன்ல பாத்துக்கிணு……….

வலை: இல்லீங்கன்னா, முதல் ஷோ பாத்துட்டு கையோட பிளாக்ல போட்டமுணா இன்னைக்கு ஒரு மூன்னூறு ஹிட்ஸ் தேத்தலாம்ணு பாத்தா, தலைவரு படம்ணு ஏமாந்துட்டோம்.

சோலை: ஆமாய்யா, ஆறு மாசத்துல படத்தை ரிலீஸ் செய்யணும்னு தலைவர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டதால, ரவுசுக் குமார் ரொம்ப கஷ்டப்பட்டிருக்காறு, சோனாக்ஷி சீனெல்லாம் நிறைய ரிப்பீட்டு ஆவுது, நம்ம கேபிள் அங்கில் இதெல்லாம் கரெக்டா நோட் பண்ணி கொத்து புரோட்டுவுல போட்டாக் கூட போதும், தெரிஞ்சுக்கலாம்.

மாலை: ஆமாப்பா, கேமராமேன் ரத்ன வேலு கூட தலைவர யூத்தா காட்ட ரொம்ப மெனக்கெட்டுருக்கார். இருந்தாலும் வயசு காட்டி குடுத்துருச்சுல்லா? ஷூட்டிங்கெல்லாம் கூட குறைவாத்தான் எடுத்துருக்காங்க, ஷங்கர் சாரு பாடல் காட்சி மட்டும் பத்திருபது நாளு சில ஆயிரம் ஷாட்டு எடுப்பாங்க, இங்கே எல்லாமே வறட்சிதாதன். புட்டேஜ் இல்லாம எடிட்டர் சம்ஜித் சார் செமயா ஒர்க் பண்ணியிருக்காப்ல.

சோலை: ஆமயா, தலை வயசு மட்டுமில்ல, வில்லனா நடிச்சிருக்கிற ஜெகபதி பாபு, பிரிட்டீஷ் வில்லன் அல்லாரும் சிரிப்பு போலிஸ் மாதிரித்தான் இருக்காங்க, தலைவர் படத்துல வில்லனும்ணாலும் வெடி மாதிரி இருக்கணுமே, இப்படி கடியா இருந்தா?

லொகேஷன் 9: ஃபேஸ்புக் சர்வர், வடக்கு கலிஃபோர்னியா

(சர்வர் எண் 23865xyh-இல் இடம்பெற்றிருக்கும் தமிழ் நிலைச்செய்திகள் உரையாடுபவர் காளமேகம் அண்ணாச்சி)

யுவகிருஷ்ணா: ரஜினி சூப்பராம். ஆனா படம் சுமாராம். ஆந்திராவிலிருந்து தகவல். எனிவே ஹேப்பி பர்த்டே சூப்பர்ஸ்டார். 65 வயதில் ஹீரோவாக நடிக்கும் முதல் தமிழ் நடிகர். அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் ஹேட்ஸ் ஆஃப்!

அண்ணாச்சி: தம்பி யுவா நீ இவ்ளோ டவுணாவன்னு நினைக்கவே இல்லப்பா? கோச்சடையான்ல ரஜினியா நடிச்சது அந்த லொள்ளு சபா தம்பிதானப்பா? வாழ்த்து சொல்லணும்னா லிங்காவுல கிராபிக்ஸ் டிபார்ட்மெண்டுக்கா வேலை செஞ்ச மவுசுக்கு சொல்லு!

செல்வக் குமார் சுப்பையா: 1004 seats sold in 9 minutes? OMG? Completely excited to Watch our Beloved 4 hours more to Witness the Magic. God save my ears tonight

அண்ணாச்சி: செல்லப்பா, கொசு கூட ஒரு நாளைக்கு கோடிக்கணக்குல முட்டை போடுதுப்பா, சிங்கம் வருசத்துக்கு ஒரு குட்டி போட்டா அதிகம். கெத்து எண்ணிக்கியில இல்லடே, அது வீரத்துல, சரி இன்னைக்கு படத்த பாரு, நாளைக்கு கரெண்டு பில்லு என்னென்னு பாரு!

பாலாஜி: Here come’s d ULTIMATE theatre experience, Watchin d very first show of THALAIVAR padam @ 1am. Can’t experience this madness anywhere else in d world. ..!

அண்ணாச்சி: கரீக்டுப்பா, இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் தற்கொலை அதிகமுண்ணு புள்ளிவிவரம் சொல்லுது. சரி இதுலயாவது நம்பர் ஒன்னுன்னு என்ஜாய் பண்ணு!

செங்கோவி பதிவர்: நேற்று இரவில் இருந்தே, தியேட்டர் வெப்சைட்டை செக் செய்துகொண்டேயிருந்தேன். இந்த மெசேஜ் வந்தது :

The Web Server may be down, too busy, or experiencing other problems preventing it from responding to requests. You may wish to try again at a later time.

ரிஃப்ரெஷ் செய்து, E வரிசையில் புக் செய்ய ஆரம்பித்தேன். சீட் செலக்ட் செய்து அடுத்த பேஜ் போனால், அந்த சீடை வேறு யாரோ புக் செய்துவிட்டார்கள். திரும்ப சீட் செலக்ட் செய்யப்போனால், அதற்குள் 150 டிக்கெட்டுக்கு மேல் புக் ஆகிவிட்டது. மீண்டும் எரர் மெசேஜ்.

படித்தேன், பதறினேன்…துடித்தேன், துவண்டேன். வீட்டில் இருந்த தங்கமணிக்கு ஒரு ஃபோன், நண்பர் ஒருவருக்கு ஒரு ஃபோன்..எட்டுத்திக்கும் ஆட்கள் களமிறக்கப்பட்டார்கள்.முடிவில் வெற்றி, தங்கமணிக்கே..

இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குத் தான் முதல் ஷோ. ஒருவழியாக டிக்கெட் புக் செய்தாகிவிட்டது. Feeling Exited!!!!!!!!

தலைவா….வீ ஆர் ரெடி!

அண்ணாச்சி: செங்கோவி ராசா, படம் பாக்குறதுக்காக இவ்ளோ மெனக்கெட்டதால வாழ்க்கையில பாடம் கத்துக்க முடியாது ராசா! கரெண்டு பில் ஏத்தலாமாண்ணு ஊரு ஊரா கெவர்மண்டு கூட்டம் போட்டு நடத்துனப்போ கொஞ்சம் எட்டிப் பாத்திருந்தீன்னா எது த்ரில், எதுக்கு எக்சைட்டுமெண்டுன்னு தெரிஞ்சிருக்கும்,

லொகேஷன் 10: மைண்ட் வாய்ஸ்:

லிங்கா திரைப்படம் வெளியாகும் அன்றுதான் மின் கட்டண உயர்வு, ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ் மதமாற்றம், ரசியாவின் 12 அணுமின் உலைகள் இந்தியா வருவதாக உடன்பாடு, நேரடி எரிவாயு மானியத்திற்காக வங்கிக் கணக்கு வேண்டும் என எல்லாம் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் தமிழ் இணையத்தில் ஃபேஸபுக் துவங்கி, தினசரிகள் வரை ஏதோ நெல்சன் மண்டேலா 25 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு விடுதலையாவது போல ரஜினியின் இந்த குப்பை படத்திற்கு மகுடம் சூட்டுகிறார்கள். அதை மலிவான ரசனையாகவும் மாற்றுகிறார்கள். படம் குறித்த கிசுகிசுக்கள், பார்த்தவர்களின் அவசரங்கள், நிலைச்செய்திகள் ஹிட்டாக பிரயத்தனங்கள், முதல் விமரிசனம் எழுத மூன்று லட்சம் பேர் போட்டி, ரஜினி மேக்கப் குறித்த ஆராய்ச்சி, அனுஷ்கா, சோனாக்ஷி குறித்த கவர்ச்சி போட்டி, மார்ச் 2014லிருந்து தினமும் 20 மணிநேரம் உழைத்ததாக கே.எஸ்.ரவிக்குமாரின் தியாகம் குறித்த கதைகள், என்று எத்தனை எத்தனை விட்டைகள்?

காளமேகம் அண்ணாச்சி