privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கமொழிப்போர் 50-ம் ஆண்டு நினைவு - காவிரி டெல்டா மாவட்டங்களில்

மொழிப்போர் 50-ம் ஆண்டு நினைவு – காவிரி டெல்டா மாவட்டங்களில்

-

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் ஐந்தாவது மற்றும் இறுதிப் பகுதி.

14. காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில்

ந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து காவேரி டெல்டா மாவட்டங்களில் ம.க.இ.க – பு.மா.இ.மு. – வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் வீச்சான சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. ஆர்.எஸ.எஸ, பி.ஜே.பி மத வெறியர்கள் மிஸடு கால் உறுப்பினர் சேர்க்கை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஆரிய பார்ப்பன எதிர்ப்புப் போரில் தளப்பிரதேசமாகத் தமிழ் நாட்டைக் கட்டியமைப்போம் என்ற முழக்கம் அடங்கிய சுவரொட்டி இயக்கம் மூலம் விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

kaviri-delta-posterவேதாரண்யத்தில் ஜனவரி 25 அன்று விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வி.வி.மு நாகை மாவட்ட அமைப்பாளர் தோழர் தனியரசு தலைமையில் இளைஞர்கள் அணிதிரண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்றனர். பு.மா.இ.மு தோழர் சரவணத் தமிழன் தலைமையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் வி.வி.மு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் கு.ம. பொன்னுசாமி மொழிப்போர் தியாகிகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

பட்டுக்கோட்டையில் விவசாயிகள் விடுதலை முன்னணி தஞ்சை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாரிமுத்து தலைமையில் தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அணிவகுத்துச் சென்று பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்றனர்.

27.01.2015 அன்று தஞ்சை ரயிலடியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக உறுதியேற்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற ம.க.இ.க தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன், “இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50-ம் ஆண்டு என்று குறிப்பிட்டாலும் வெற்றி விழா கொண்டாடும் நிலையில் நாம் இல்லை, மொழிப் போர் முன்னிலும் கடுமையாகி உள்ளது. தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றியோ, இந்தி திணிப்பு எதிர்ப்பு வரலாறு பற்றியோ இன்றைய இளைஞர்களுக்கு கற்பிக்கப்படவில்லை. அதனைப் பற்றி புதிய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எஸ.எம்.எஸ., வாட்ஸ அப் என்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சியினூடாக பயணிக்கும் இளைய சமூகம் தாய்மொழியை மறந்த சமூகமாகவே உள்ளது.

புரட்சிகர ஜனநாயக சக்திகளின் செயல் வேகம் பெற வேண்டும் என்பதைத்தான் புறநிலைமை வலியுறுத்துகிறது. 2000 ஆண்டு கால பழமை வாய்ந்த செம்மொழியான தமிழ்மொழியை பாதுகாக்க சமஸகிருத, இந்தி திணிப்பு, ஆங்கில மோகத்துக்கு எதிராக பண்பாட்டுத் தளத்தில் போராட மொழிப்போரின் 50 ஆம் ஆண்டில் உறுதியேற்போம்” என்று பேசினார்.

அடுத்த்தாக பேசிய பேராசிரியர் அரங்க. சுப்பையா, “மொழியைக் காப்பாற்ற எல்லா இனங்களும் போராடியுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகமே கொந்தளித்தது. குறிப்பாக மாணவர்களிடம் எழுச்சி இருந்த்தது, புரட்சிகரத் தோழர்களிடம் சோர்வு இருக்காது என்றாலும் சோர்வை உருவாக்கும் கடுமையான களப்பணியில் முன்முயற்சியுடன் செயல்படும் தோழர்களை வாழ்த்துவதோடு, மக்கள் ம.க.இ.க போன்ற புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

mozhipor-tnj-demo-3அடுத்து சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் உரை பின்வருமாறு:-

50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் மூன்று கட்டப் போராட்டமாக நடைபெற்றது. 1937-ல் இராஜகோபாலாச்சாரி, சென்னை இராஜதானியின் பிரதமராக இருந்தபோது 125 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். பெரியார், மறைமலையடிகள், உ.வே.சா போன்றவர்கள் இதை எதிர்த்தனர். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற தாளமுத்து – நடராஜன் ஆகியோர் அங்கே நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.

பார்த்தாலே தீட்டு என்று கருதப்பட்ட நாடார் சமூகத்தை சேர்ந்த தாளமுத்துவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நடராஜனும் சிறை அதிகாரிகளிடம் மன்னிப்புக் கோராமல் மாண்டனர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்துதான் முதல் தியாகம் தோன்றியது.

இராஜாஜி அரசு பின்வாங்கியது. வெள்ளைக்காரர்களுக்கு சங்கடம் வரக் கூடாது என்று கருதி போராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இது முதற்கட்டம். பிறகு, இரண்டாம் கட்டமாக 1948-ல் நேரு அரசாங்கம் இந்தி ஆட்சிமொழி அறிவிப்பை செய்த்து. ம.பொ.சி, திரு.வி.க போன்றவர்கள் எதிர்த்தனர். இந்தப் போராட்டத்தில் திராவிட இயக்கத்தின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.

mozhipor-tnj-demo-1ஆங்கிலம் இணையாட்சி மொழி என்ற நேருவின் சட்டமாக்கப்படாத வெற்று வாக்குறுதியை நம்பி ஏற்று போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மூன்றாவது கட்டப் போராட்டம் தற்போது பேசப்படும் 1965 போராட்டமாகும். 1963-ல் உருவாக்கப்பட்ட ஆட்சிமொழிச் சட்டம் இந்தி ஆட்சிமொழி, ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும், இந்தி மொழிபெயர்ப்புத்தான் அதிகாரப்பூர்வமானது என்று கூறியது. இதனை வலியுறுத்திய 17 ஆவது அரசியல் சட்டப்பிரிவைக் கொளுத்தும் போராட்டம் கொழுந்து விட்டெரிந்த்து. தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறிப் போராட்டம் முன்னோக்கி சென்றது.

மாணவர்கள் போராட்டக் குழுக்களைக் கட்டி, போராட்டக் களத்தில் இறங்கினார்கள். முதன்முறையாக மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க இராணுவம் களமிறக்கப்பட்டது. பிரதமர் லால்பகதூர் சாஸதிரியும், அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தாவும் நேருவின் வாக்குறுதி காப்பாற்றப்படும் நம்புங்கள் என்று மன்றாடினர். எண்ணற்ற தியாகங்களுடன் 55 நாள் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய மொழிகள் எல்லாம் சமஸகிருத இந்தி ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டது. வரலாற்று வளர்ச்சிப் போக்கிலும், தொடர்ச்சியான போராட்டத்திலும் தமிழ் ஓரளவு கட்டிக் காப்பாற்றப்பட்டு சுய அடையாளத்தைக் கொண்டதாக இன்றுவரை உள்ளது.

தற்போது மோடி அரசு சமஸ்கிருத-இந்தித் திணிப்பை மிக வேகமாக செய்து வருகிறது. பகவத் கீதையை புனித நூலாக அறிவிப்பது, சரஸவதி பூஜையை குரு உத்ஸவ் ஆக்குவது என்று அடுத்தடுத்த தாக்குதல்களை மோடி அரசு தொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்கள் புதியது அல்ல, தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள் தான்.

காங்கிரசை சேர்ந்த சத்தியமூர்த்தி அய்யர் “எனக்கு அதிகாரம் கிடைத்தால் வருணாஸரம தர்மத்தை அமல்படுத்துவேன், சமஸகிருதத்தை ஆட்சி மொழியாக்குவேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார். அவருடைய பெயரில்தான் காங்கிரசு அலுவலகம் சென்னையில் சத்தியமூர்த்தி பவன் என்று உள்ளது. இதனைத் தமிழக, தமிழ்ப் பாரம்பரியத்திற்கு ஓர் அவமானமாக கருத வேண்டும். காங்கிரசு பெயர் மாற்றம் செய்யாது, அதன் பாரம்பரியம் அப்படிப்பட்டது தான்.

காந்தியமும், ஆர்.எஸ.எஸ சித்தாந்தமும் வேறு வேறு அல்ல, காங்கிரசும் பி.ஜே.பி-ம் வேறு வேறு அல்ல. காந்தி ராமராஜ்யத்தை வலியுறுத்தினார். அதனை அப்போதே பேரறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் அம்பலப்படுத்தினார். அதே ராமராஜ்ய திட்டம் தான் மோடியின் திட்டம். காங்கிரஸ தயங்கித் தயங்கி செய்த்தை மோடி அரசு வேகமாக வெளிப்படையாக செய்கிறது.

ஆளும் வர்க்கத்தின் பிராந்திய விரிவாக்க கொள்கையும், ஆர்.எஸ.எஸ-ன் அகண்ட பாரத ஜனநாயகமும் இங்கு ஒன்றிணைகிறது.

மக்களுக்கு பெயரளவில் கொடுக்கப்பட்ட உரிமைகளும், புனிதமென்று சொல்லப்படும் சட்டங்களும் நீதித்துறையால் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. தில்லை வழக்கில் நீதிபதி பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ஆட்சிப்பணி, நீதித்துறை, காவல்துறை எல்லாமே உபயோகமற்றதாகிக் கட்டமைப்பு நெருக்கடிக்குள் சிக்கி நிற்கிறது.

இந்தக் கட்டமைப்பை தகர்த்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவது மூலம் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த உறுதியேற்போம்.

என்று கூறி முடித்தார்.

பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் பலர் உறுதி ஏற்புக் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை