privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்

சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்

-

‘உலக பெண்கள் தினத்தை உழைக்கும் பெண்கள் தினமாக வளர்த்தெடுப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து மார்ச் 8 அன்று சென்னையில் பெண்கள் விடுதலை முன்னணியின் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் தோழமை அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர்.

உழைக்கும் பெண்கள் தினம்
மார்ச் 8 அன்று சென்னையில் பெண்கள் விடுதலை முன்னணியின் சார்பாக கூட்டம்

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் செல்வி “பெண்களின் உரிமைகளுக்காக போராடிய ஆயிரக்கணக்கான பெண்களின் தன்னலமற்ற போராட்டங்களாலும், உயிர் தியாகங்களாலும் கிடைத்த இந்த போராட்ட நாளை முதலாளித்துவம் தன்னுடைய லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறது. பெண்களை ஜாலியாக‌ வெளியே அழைத்து செல்வது என்று மகளிர் குழு சுயஉதவி குழுக்கள் மார்ச் 8-ஐ ‌ மாற்றியுள்ளன.  பெ.வி.மு அமைப்புதான் இந்த சமூகத்தை, போராட்டஙகள் மூலம் மாற்றக் கூடிய சரியான அமைப்பு – அதில் இணைந்து செயல்படுவதை நாம் பெருமையாகவும் கர்வமாகவும் கொள்ள வேண்டும்” என்றார்.

உழைக்கும் பெண்கள் தினம்
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் செல்வி

“தமிழகத்தில் உள்ள‌ பெண்களின் தாலி அறுக்கவும், மாணவர்கள் – இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் செய்வதற்கும் காரணமான டாஸ்மாக் கடையை முற்றிலும் ஒழிப்பது நமது கடமை என்பதை உணர்ந்து அதற்காக தோழர்கள் போராடியது பாராட்டக்குரியது” என்றார். மேலும், ஒவ்வொரு தோழரும் அமைப்பு சிந்தனையை தங்களுக்குள் வரித்துக் கொண்டு வேலைகளை முன்னெடுத்து மக்களை அணி திரட்ட வேண்டியத‌ன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அடுத்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ரஞ்சனி செய்யாறு அழிவிடைதாங்கியில் குடிகெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவதற்கு எடுத்துக் கொண்ட பிரச்சார அனுபவங்களையும் பிறகு அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சாராயக் கடையை அடித்து நொறுக்கியதையும், அதில் கலந்துக் கொண்டதோடு பெண் தோழர்களோடு சிறை சென்ற சாந்தியம்மாள் காவல்துறையின் மிரட்டல்களுக்கு அஞ்சாத உறுதியுடன் இருந்ததை யும் சுட்டிக்காட்டி நாம் மக்ககளிடம் இருந்தும் கற்று கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கி பேசினார்.

தோழர் ரஞ்சனி
அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம் பற்றி பேசிய தோழர் ரஞ்சனி

போலீசின் நயவஞ்சகத்தையும், போராடிய பகுதி சிறுவர்களின் ஆர்வத்தையும் சிறை அனுபவங்களையும் வந்திருந்த தோழர்களின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.

உழைக்கும் பெண்கள் தினம்
சிறப்புரை பேசிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர் உஷா

அடுத்ததாக சிறப்புரை பேசிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர் உஷா அவர்கள் “பெண்களின் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் “அடிமை சமூகத்திலிருந்து தொடங்கிய பெண்களின் பிரச்சினைகள் அப்போது உள்ள முதலாளித்துவ சமூகத்தில் அதிகமாக உள்ளதையும், அவற்றை எதிர்த்து தோழர் கிளாரா ஜெட்கின் போன்று வீரமுடனும் உறுதியுடனும் போராட வேண்டியதன் அவசியத்தையும், பெண்களிடையே நமது அமைப்பை விரிவு படுத்த வேண்டிய தேவையையும், அதன் மூலம் மட்டுமே பெண்களின் உரிமைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதையும் ஆழமாக எடுத்துக் கூறினார்.

பெவிமு மற்றும் பு.மா.இ.மு தோழர்களின் புரட்சிகர பாடல்களுடன் முடிவடைந்தது.

chennai-vivimu-march-8-5

நிகழ்ச்சிக்கு வந்திருந்த தோழர்கள் புது உணர்வு பெற்று போராட்டங்களை தொடருவோம் என்ற உறுதியுடன் சென்றனர்.

பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க