privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாமே 9 : பாசிசத்தை தோற்கடித்த 70-ம் ஆண்டு நினைவுநாள்

மே 9 : பாசிசத்தை தோற்கடித்த 70-ம் ஆண்டு நினைவுநாள்

-

ன்று மே 9-ம் தேதி, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த 70-வது ஆண்டு.

பாசிசத்தை தோற்கடித்த சோவியத் யூனியன்
பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது.

1945-ம் ஆண்டு மே 8-ம் தேதிதான் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது. நாஜிக்களின் பாசிச படைகள் இறுதித் தோல்வியை தழுவின.

கொடூரமான நாஜி-பாசிச சக்திகளின் பிரதிநிதியாக இருந்த ஹிட்லர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தனது பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டான். தனது கனவுகள் சிதைந்து போனதையும், குறிக்கோள்கள் தன் கண்ணெதிரே தோற்றுப் போனதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டான், ஹிட்லர்.

1939-ம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 6 ஆண்டுகள் நீடித்தது. அதில் 61 நாடுகளின் 170 கோடி மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இது அன்றைய உலக மக்கள் தொகையில் 80% ஆகும். இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள். சோவியத் யூனியனின் 1,710 நகரங்கள், 70,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 32,000-த்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள், 65,000 கிலோமீட்டர் நீளமான ரயில்வே பாதை ஜெர்மன் படைகளால் அழிக்கப்பட்டன. மனித வரலாற்றிலேயே எந்த ஒரு நாடும் எந்த ஒரு போரிலும் சந்தித்திராத இந்த பேரிழப்பின் பொருளாதார மதிப்பு 2,600 பில்லியன் ரூபிள்.

உலகெங்கிலும் உள்ள மக்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் மக்கள் பாசிசத்தை தோற்கடிப்பதில் சோவியத் ராணுவம் ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பை இன்று நினைவு கூர்கின்றனர். சோவியத் இராணுவம் 11.3 கோடி மக்கள் தொகை கொண்ட 11 நாடுகளை நாஜிகளின் பிடியிலிருந்து விடுவித்தது. மேலும், பாசிசத்துக்கு எதிராக சோவியத் யூனியன் ஈட்டிய வெற்றி, உலகெங்கிலும் காலனிய ஆட்சியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்றாம் உலக நாடுகளில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை வீரியமடையச் செய்தது.

இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.