Saturday, December 4, 2021
முகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை ஜெயா விடுதலை - சீறும் ஃபேஸ்புக்

ஜெயா விடுதலை – சீறும் ஃபேஸ்புக்

-

facebookAlagappan Abdul Kareem

“ஜெயலலிதா உள்ளே இருக்குறதால அனுதாப அலை காரணமா அவரே வெற்றி பெறுவார்”னு சொன்னவய்ங்க இப்ப “ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் அவரே வெற்றி பெறுவார்”னு சொல்வாய்ங்க.

மொத்தத்துல அவய்ங்களுக்குத் தேவை ஜெயலலிதா ஜெயிக்கணும். அம்புட்டுதேன்.
______

Mohammed Siraj

ஜெயலலிதா ,

சல்மான் கான்,
குஜராத்,
அப்சல் குரு,
அமீத் ஷா,
பாபரி மஸ்ஜித்.

#‎இந்திய_அநீதி_மன்றம்‬
_________________

Madhan Sendhil

ஜெயலலிதா தப்பு பண்ணாங்களா இல்லையான்னு சட்டத்துக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா மக்களுக்குத் தெரியும்..
__________________

Thananjayan Venkatraman

இனியும் ஜெயலலிதா போன்ற அப்பாவிகள் 20 வருடம் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க, குற்றம்சாட்டப்பட்டவரே தனக்கும் ஏதிர்தரப்புக்கும் சேர்த்து வழக்கறிஞரை உடனடியாக நியமிக்கும் படி சட்டம் மாற்றப்பட வேண்டும்,

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
___________________

Yuva Krishna

1991 – 96 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா சொத்து குவித்தார் என்பது தெரியாமல் கீழ்க்கண்ட கட்சிகள் அதிமுகவோடு கூட்டணி வைத்தன என்பதை தமிழக மக்கள் நம்பவேண்டும்.

1996ல் காங்கிரஸ்

1998ல் மதிமுக, பாமக, பாஜக

1999ல் காங்கிரஸ், இ.கம்யூ, மா.கம்யூ

2001ல் காங்கிரஸ் (தமாகாவையும் சேர்த்து), பாமக, இ.கம்யூ, மா.கம்யூ

2004ல் பாஜக

2006ல் மதிமுக, விசிக

2009ல் இ.கம்யூ, மா.கம்யூ, மதிமுக, பாமக

2011ல் தேமுதிக, இ.கம்யூ, மா.கம்யூ, ம.ம.க., புதிய தமிழகம்

(சில்லறை கட்சிகளை பட்டியலில் கணக்கில் சேர்க்கவில்லை)
______________

Raja Prabhu V K

ஜெயலலிதா தீர்ப்புக்கு முன்னாடி சல்மான் தீர்ப்பு கண்ணு முன்னாடி வந்து போனா….. நீயும் .நண்பனே …
______________

Manushya Puthiran

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக பா.ஜ.க ஹெச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.- செய்தி

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களை சந்தித்து ஜெயலலிதா விடுதலை குறித்து வாழ்த்து தெவித்தார். – செய்தி

எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது.

______________

Thiru Yo

இரண்டு காட்சிகள்.

வருமானத்திற்கு அதிகமான பல கோடி சொத்து முறைகேடாக சேர்த்த வழக்கின் தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கில் ஜெயலலிதா விடுதலை. பட்டாசு வெடித்தும், தொலைக்காட்சியை ஊதியும் கொண்டாடுகிறார்கள்.

பத்தோ, ஐம்பதோ லஞ்சம் வாங்கியதன் விளைவில் ஒருவர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்க போக்குவரத்து காவலரை கூட்டமாக கும்மாங்குத்து. அதிகாரமில்லாத/குறைந்த இடங்களில் கரம் எளிதாக நீண்டுவிடுகிறது.

ஊழலால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை என்று வியாக்கியானம் வேறு. நேர்மையானவர்களை தற்கொலைக்கு தள்ளியதும், பணியாதவர்களை மிரட்டி கொலை செய்ததும்… உழல், லஞ்ச கொலைகளில்லையா? ஒப்பந்தமுறைகேடுகளினால் ஏற்படுகிற சாலையின் தரம் மோசமாகி விபத்தில் கொல்லப்படுதல் உயிரிழப்பில்லையா?

_____

Yuva Krishna

பத்து சதவிகிதம் வரை சுடலாம் : நீதியரசர் அனுமதி!

_____

ஞாயிறு ஞாயிறு ஞாயிறு

சங்கரமட கொலை வழக்கு மேல் முறையீடு செய்யவில்லை….
அதன் பாதகமான அம்சங்கள் கவனிக்கப்படவில்லை…..
*
அந்துலே லாலு . ஓம்பிரகாஷ் , ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டனர்….
*
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்…
*
நாளை 2ஜி வழக்கில் தண்டனை உண்டு….
*
இந்தியாவில் எப்பவுமே இரண்டுவகையாகத்தான்…
சட்டமும் நீதியும் செயல்படும்….
*
ஒன்று ஆரிய நீதி….
மற்றொன்று சூத்திர நீதி…
________________

Alayam Suresh

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

தப்பித்தது கர்நாடக பேருந்து கண்ணாடிகள்.

இன்று அம்மாவின் விடுதலையை முன்னிட்டு அடுத்த வருடம் முதல் மே 11ம் தேதி அம்மா தினமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பாக்கபடுகிறது.
_________________

income totalசிவசங்கர் எஸ் எஸ்

கொழப்பிட்டியே கொமாரு !

கேட்டிருந்தா கால்குலேட்டர் வாங்கிக் கொடுத்திருப்போமே. தப்பு தப்பா கூட்டி இருக்கியே.

இத எல்லாம் கூட்டுனா 10,67,31,274.00 தான் வருது.

ஆனா கனம் கோர்ட்டாருக்கு 24,17,31,274.00 வருது.

சைடுல 13,50,00,000.00 எங்க இருந்து பூந்துது ?

ஒதுங்குச்சா ? ஒதுக்குச்சா ?

கொமாரு கணக்குப்படி அதிகப்படி வருவாய் 10% இருக்கலாம், இல்லன்னா 20% இருக்கலாம்.

இது கூட போவுதே ….

மறுபடியும் கூட்டு கொமாரு !

________

அதிஷா அதிஷா

“என்னண்ணே முந்தாநேத்து சல்மான்கான், நேத்து மதர் சுப்பீரியர், இன்னைக்கு ராமலிங்கராஜூ நம்ம நீதிமன்றங்களுக்கு என்னதாண்ணே ஆச்சு”

”அடேய் கோனிகா கோமுட்டிதலையா மைசூர் பாக்குல எப்படி மைசூர் இருக்காதோ அதே மாதிரிதான் நம்ம ஊர் நீதிமன்றத்துல…”

‪#‎அம்மாவாழ்க‬

‪#‎theend‬
________________

Mahendra Kumar

தமிழ்நாட்டில் ஒரு 6-7 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு!

ஒரு அரசு ஊழியர் (ஊர் பெயர், துறையின் பெயர் நினைவில்லை) ஒரு தடவை லஞ்சம் வாங்கி பிடிபட்டார். அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.

அந்த ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவர் லஞ்சமாக பெற்ற தொகை வெறும் 1,500 ரூபாய் தான். அவர் நீதிமன்றத்திடம் மன்றாடினார். ‘ஒரு சிறிய தொகைக்கு ஏன் இவ்வளவு கடுமையான தண்டனை? சஸ்பெண்டு செய்திருக்கலாமே!’ என்று கெஞ்சிப்பார்த்தார். நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?

“தொகை சிறியதோ பெரியதோ… அதை வாங்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு அரசு ஊழியருக்கு தோன்றியது தவறு! உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டீர்கள். அதற்காகவே இந்த தண்டனை!”

அதன் பிறகு அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டில் எப்படியோ குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் படாத பாடுபட்டு, தன் சேமிப்பை எல்லாம் இழந்துவிட்டார். அப்போது அவர் ஓய்வு பெற ஒருசில வருடங்களே இருந்தன.

நீதிமன்றம் அவரை விடுவித்த பிறகு, அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குள் அவரது வேலையை எவன் பிடித்தானோ தெரியவில்லை. அவருக்கு வேலையை மீண்டும் கொடுக்காமல் அலைக்கழித்தது நிர்வாகம்.

ஒரு கட்டத்துக்கு மேல், அவர் சோர்ந்து விட்டார். அவரது நண்பர்கள் சிலர், ‘நீங்கள் நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள்! நியாயமாக அவர்கள் உங்களுக்கு வேலை கொடுக்கவேண்டும்!’ என்று யோசனை சொன்னார்கள்.

“இனியும் வழக்கு போட்டு அலைவதற்கு என் மனசிலும் உடம்பிலும் தெம்பு இல்லை… வழக்கு செலவுக்கு என்னிடம் பணமும் இல்லை” என்று சொல்லிவிட்டார் அந்த ஊழியர்.

கடைசிவரை அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. வேலையில் இருந்தபோது லஞ்சப்புகாரில் கைதானதால், பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கவேண்டிய பலன்கள் எதுவும் சுத்தமாக வரவே இல்லை. இப்போது கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார் அவர்.

சாமானியர்கள் எந்தவகையிலும் தப்பிவிட முடியாத இதே சட்டத்தில்தான், பணக்கார பெருச்சாளிகள் நுழைந்து வெளியே வர எண்ணற்ற ஓட்டைகளும் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் இந்த ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ள முடிகிறது. மற்றவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.

இதுவே நம் பெருமை மிகு Indian Penal Code!
___________________

Appanasamy Apps

இன்றைய நாளை இவ்வளவு
அமைதியானதாக்கிய நீதிதேவனுக்கு நன்றி!

இன்று காலையில்கூட ஏதோ ஊரடங்கு தேசத்தில் இருப்பது போன்ற உணர்வோடுதான் பால், பேப்பர் இன்னபிற பொருட்களை வாங்கி வந்தோம்.
நீதிதேவதையின் நேரமான அந்த 11.05 வரைகூட
அதே பதற்றம் தான்! அட, 11 மணிக்கு சற்று வெளியே போய்வர ஆசை!
ஆனால், ஏதாவது பிரச்சனை என்றால் ஓடித் தப்பிக்கக்கூட இயலாதவனாக இருந்தேன். எங்கே வெளியே போவது!

ஆனால் அந்த மந்திர நொடிகள் வந்தன
பத்தே பத்து நொடிகள்! அவ்வளவுதான்!
நமது தேசமே கட்டுக்குள் வந்து விட்டது!
தமிழகம் அமைதிப்பூங்காவானது!
யாரால்!
நீதிதேவதையின் கருணையினால்

சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது.
சாலைகளில் போக்குவரத்து பாதிக்கவில்லை;
திரையரங்குகள் செல்லவோ
மதுபானக்கடை போகவோ ஒரு இடையூறும் இல்லை
விபச்சாரங்களும் நடந்தன

எல்லா அலைவரிசைகளும் தெளிவாகத் தெரிந்தன.
எந்தச் சேனல்களுல் இருட்டடிப்பு செய்யப்படவில்லை
கேபிள்கள் பிடுங்கப்பவில்லை
மின்விநியோகம் நிறுத்தப்படவில்லை;
கறிக்கோழிகள், மீன்கள் தாராளமாகக் கிடைத்தன.
கடற்கரை, பூங்காக்களில்
காதலர்களும் கொழுப்பைக் குறைப்பவர்களும்
சுதந்திரமாக இயங்கினர்;

இப்படியாக இந்த நாள் இனிய நாளாகக்
கழிந்தது என்றால் அது
நீதி தேவதையின் கருணையினால் தான்!

புரிகிறது! நீதிதேவனின் முகத்தில் சிறு கவலை ரேகை படிவது தெரிகிறது.
இந்த முகநூல் புரட்சிப்புடுங்கிகளின் முணுமுணுப்பு
நீதிதேவதையின் காதுகளில் அபசுரமாக விழத்தான் செய்கின்றன.
நீங்கள் நினைத்தால் இதெல்லாம் ஜுசூபி, கனவானே!

ஆனால், ஒன்றுமட்டும் உறுதி
நமது தேசத்தின் நீதி வரலாற்றில்
இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்!

__________

பிர்தவ்ஸ் ராஜகுமாரன்

ஒரே ஒரு சந்தேகம் ….!

உச்ச நீதி மன்ற மூவர் அமர்வு என்னன்னவோ
நிபந்தனைகளைச் சொல்லி தீர்ப்பு சொல்லும் முன்
நீதிபதி குமாரசாமி இதையெல்லாம்
கவனத்தில் கொள்ளவேண்டும் என்று
உதார் விட்டாய்ங்களே …….!

அதையெல்லாம் இவர் ஏன்
கவனத்தில் கொள்ளவே இல்லை…?
அப்ப , உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்
நிபந்தனை ,அறிவுறுத்தல் …?
இதற்கெல்லாம்
இவ்வளவுதான் மதிப்பா …?

# அதெல்லாம் சங்கேத வார்த்தைகள் ….!
என்பது இப்போது புரிந்து விட்டது ..!!!
____________

ஜ்யோவ்ராம் சுந்தர்

தீர்ப்பைக் கூட தாங்கிக்கலாம் போலிருக்கு, இந்தத் ‘தர்மத்தின் வாழ்வுதனை…’ தான் தாங்க முடியலை. இன்னைக்கு எல்லா பேப்பர்லயும் இதே வசனம். அப்புறம், எல்லாரும் அம்மாவின் உண்மையான விசுவாசின்னு போட்டுக்கறாங்க. பொய் விசுவாசில்லாம்கூட அதிமுகல உண்டு போல
_________
Gold King

தீர்ப்பு இப்படிதான் இருக்கும் என்று எதிர்பார்த ஒன்றுதான்.

முன் ஜாமீன் தருவதில் குற்வாளிகளை விடவும் நீதிபதி தத்து அதிகமாக காட்டிய அக்கரை.

நாடே ஏதிர்த்த நிலம் அபகரிக்கும் மசோதவை மத்திய அரசு கொண்டு வருவதற்கு அதிமுக வரிஞ்சிகட்டினு ஆதரவு தெரிவித்தது.

கருப்பு பணம் மீட்பர் மோடியின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜெயலலிதாவை போயஸ் தோட்டதிற்கு சென்று சந்தித்தது.

அதிமுக வானரங்கள் தீர்ப்பு தேதி அறிவித்த பின்பும் வாலை சுருட்டி கொண்டு இருந்தது.

இவை எல்லாம் கணித்து பார்க்கும்போதே தெள்ள தெளிவாக தெரிந்தது தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது என்று.

இந்த தீர்ப்பை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைவதாக பா.ஜ.க வின் தமிழ் மாநிலதலைவர் தமிழிசை சொல்கிறார்!

இந்த தீர்ப்பு மக்களுக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கவேண்டும். உங்களுக்கு ஏன் அதிர்ச்சியாக உள்ளது. இந்த தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் தலைமை உங்களுக்கு சொல்லவில்லையா?

தமிழிசை இந்த தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக சொல்கிறார்
எஜ்.ராஜா, அம்மா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பா.ஜ.க.தலைமை தமிழிசையிடம் சொல்லாத தீர்ப்பின் ரகசியத்தை எஜ்.ராஜவிடம் சொல்லி இருக்குமோ!

தீர்ப்பு வந்த நிமிடத்தில் இருந்து கேப்டனை எந்த டிவியிலும் ஆளே காணோம்… அண்ணன் வைகோ இப்பவே அடி வருட ஆரம்பித்துவிட்டார்…..

கலைஞர் தீர்ப்பு பற்றி வெளிப்படையாக கருத்து சொல்ல தயங்குகிறார் .

இவளவுதான் தீர்ப்புக்கு தமிழக ஏதிர்க் கட்ச்சிகளின் ஏதிர்ப்பு…
____________________

corruptionMathivanan Bala

எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தான்…. , இன்னைக்கு இந்த கதை சரியா பொருந்தும் நினைக்கிறேன்…

“பயமலிதா “ன்னு ஒருத்தர் அவங்களோட கூட்டாளிங்களோட ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலுக்கு சாப்பிட போனாராம் . அங்கு அவருக்கு விருப்பமான எல்லாத்தையும் அனுபவித்து சாப்பிட்டு முடிச்ச பிறகு, அங்குள்ள சர்வரு அவருகிட்ட அவர் சாப்பிட்டதற்கான 3000 ருபாய் ரசிது கொடுத்தாராம்.

ஆனா அந்த “பயமலிதா ” கிட்ட இருந்தது வெறும் 100 ரூபாய்தான்; ஏமாத்தி சாப்பிட்டு 3000 ரூபாயும் கொடுக்க மறுத்த “பயமலிதா ” வை காவல்துறைகிட்ட ஒப்படைத்தாராம் ஓட்டல் உரிமையாளர் .

“பயமலிதா “க்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தா, தான் கையில் வைத்திருந்த 100 ரூபாயை காவல்துறை அதிகாரிக்கிட்ட லஞ்சமா கொடுத்தாராம் அந்த “பயமலிதா “. 100 ரூபாய வாங்குன, அந்த காவல்துறை அதிகாரி “பயமலிதா ” எந்த தப்புமே பண்ணலேன்னு விடுதலை பண்ணிடாராம்…!
____________________

அபு ரய்யான்

மக்கள் மன்றம்…. நீதி மன்றம் என அணைத்து மன்றங்களின் மீதான நம்பிக்கையும் நசுங்கி போய்விட்டது… இனிமேலும் நீதி நேர்மை நியாயமெல்லாம் பேசி பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை…. ஆகவே முகநூலுக்கு ஒரு ஸலாம் போட்டுடலாம்னு இருக்கேன்….

Lost the faith in India’s Democracy and Judiciary…
____________

Thiru Yo

“7 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஹைதராபாத் மாநகர அமர்வு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் 10 பேருக்கும் வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.”

மோடி, அமித்ஷா, சல்மான்கான், ஜெயலலிதா, ராமலிங்கராஜூ… இந்திய நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் பொய்த்துவிடவில்லை.
________________

 1. Onna evandaa jaangiri kodukka sonnadhu – YouTube
  Video for jangiri senthil comedy▶ 3:33
  http://www.youtube.com/watch?v=hUr6htGwntU
  Oct 14, 2011 – Uploaded by SMIJN2010
  aNNan wants to be a singer, but Senthil has other ideas. … Goundamani Senthil Comedy – Thaali Kattiya Raasa Movie – Duration: 32:34. by …
  appointment of bawani singh spp and judgement of kumarasamy

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க