privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சாட்சிகளைக் கொல்லும் சாமியார் ஆசாராம் பாபு - குறுஞ்செய்திகள்

சாட்சிகளைக் கொல்லும் சாமியார் ஆசாராம் பாபு – குறுஞ்செய்திகள்

-

இதுதான் உலகம்: ஆப்பிள் நிர்வாகியும், பீகார் விவசாயியும்!

ஆப்பிள் டிம் குக், பீகார் விவசாயிப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி டிம் குக்கின் வருட ஊதியம் சுமார் 9.22 மில்லியன் டாலர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு என்ன? 9.22 மில்லியன் டாலரை 63-ஆல் பெருக்குங்கள்! அத்துடன் ஆறு பூஜ்ஜியங்களை சேருங்கள்! எப்படிப் பார்த்தாலும் அதை மில்லியன், பில்லியன் இன்றி எண்ணிக்கையில் படித்துக் காண்பிப்பது கடினம்!

பீகார் விவசாயத் தொழிலாளிக்கு கிடைக்கும் ஒரு நாள் சம்பளம் சுமார் 118 ரூபாய் மட்டுமே. இதுவும் கூட ஒரு சராசரிதான். உண்மையிலேயே இதைவிடவும் குறைவான ஊதியமே அங்கே நிலவும் யதார்த்தம்.

தொழில் நுட்பப் புரட்சியின் மைல் கற்களான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், ஏதோ ஒரு ஓட்டை டிராக்டரை இயக்கும் கிராமத்து தொழிலாளியும் ஒன்றா? அந்த தொழிலாளியும் நல்லதொரு படிப்பு முடித்து அமெரிக்கா சென்று டிம் குக் போல வரவேண்டாமென்று யார் சொன்னது? இப்படியான கேள்விகள் எழவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

ஐ ஃபோன் இல்லையென்றாலும் இந்த உலகம் இயங்கும்! அந்த ஃபோனை உருவாக்கும் சீனத்து தொழிலாளியோ, அந்த தொழிலாளியோடு தோள் கொடுக்கும் விவசாயத் தொழிலாளியோ இல்லையென்றால் ஃபோனும் இல்லை, அந்த ஃபோனைப் பார்த்து ஐ என்று ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்ளும் செல்ஃபிகளும் இல்லை!

பா.ஜ.க சியர்ஸ் சொல்வது பீருடனா, பிராந்தியுடனா ?

பா.ஜ.க - விஜய் மல்லையாமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை 10-07-2015 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் – செய்தி

2010-ல் சாராய அதிபர் விஜய் மல்லையா கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிட்ட போது அவருக்கு ஜனதா தள கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ போக 12 வாக்குகள் தேவைப்பட்டன. மல்லையாஜியின் நிலை கண்டு வருந்திய பா.ஜ.கவோ 26 வாக்குகள் அளித்து எம்.பியாக்கியது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மக்கள் பணத்தை மல்லையா ஸ்வாகா செய்தது இருக்கட்டும்.

தமிழக பா.ஜ.கவின் மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து மல்லையாவும், பா.ஜ.க தலைவர்களும் சிரித்துக் கொண்டே சியர்ஸ் சொல்வது பீருடனா இல்லை பிராந்தியுடனா?

கேப்டனே வில்லனாகும் போது கதாநாயக வசனம் பேசலாமா?
விஜயகாந்த் கல்லூரி“கடந்த 4 வருடமாக பள்ளிப் படிப்பை முடித்து, மருத்துவம், பொறியாளர், பட்டய கணக்காளர் படிப்பிற்கு அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வில், தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து வருகிறது.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி, சிறந்த கல்வியாளர்களையும், சமூக சேவகர்களையும் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.”

– தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை.

இனி அறிக்கையிலிருந்து விடுபட்டு செங்கல்பட்டு மாமண்டூர் ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரிக்குச் செல்வோம். இதுதான் கேப்டனின் ‘புகழ்’பெற்ற பொறியியல் கல்லூரி!

29-06-2015 அன்று இங்கே மாணவர்கள் பெரும் திரளாக போராட்டம் நடத்தியிருக்கின்றனர். படையுடன் வந்த போலீசு மாணவர்களை மிரட்டியும், ஆசை வார்தை காட்டியும் ஏமாற்ற முயன்றது. மாணவர்கள் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக போராடியிருக்கிறார்கள். இந்தக் கல்லூரியின் மாணவர்கள் மட்டுமல்ல, சுமார் 150 எண்ணிக்கையில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களும் பாவப்பட்டவர்கள்தான்.

ஏனெனில் சில ஆயிரங்களுக்கு கடுமையான பணி. வருடம் இரண்டு மாணவர்களை புதிதாக ஒரு ஆசிரியர் சேர்த்தால்தான் வேலையும், ஊக்கத்தொகையும் நிரந்தரம். இது போக சம்பள உயர்வோ, யூ.ஜி.சி தர ஊதியமோ இங்கே கற்பனையிலும் பார்க்க முடியாத சமாச்சாரங்கள்.

இது தொடர்பான வினவின் பதிவு

சொந்தக் கல்லூரியையே காயலான் கடை போல நடத்திக் கொண்டு ஏழை பெற்றோர்களின் பணத்தை அபேஸ் செய்யும் விஜயகாந்த் என்ன தைரியத்தில் தமிழக கல்வியின் தரம் குறித்து கவலைப்படுகிறார்?

கேப்டனே வில்லனாகும் போது கதாநாயகனது வசனம் பேசலாமா?

சாட்சிகளைக் கொல்லும் ஆன்மீகக் கடவுள் ஆஸ்ரம் பாபு !

பைக்கில் சென்ற 35-வயது கிரிபால் சிங்கை பின்தொடர்ந்த இரு ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டனர். முதுகில் குண்டுக்காயத்துடன் அலறிய அவரைப் பார்த்து, “பையா இனிமேல் ஆஸ்ரம் பாபுஜி வழக்கில் வாயைத் திறந்தால் கொன்றுவிடுவோம்” என்று எச்சரித்து விட்டுச் சென்றனர்.

ஆசாராம் பாபுஉத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில், இந்துக்களின் புனித தினமான வெள்ளிக்கிழமை அன்று (10-07-2015) இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

காரணம் என்ன? ஆதிக்க சாதி இந்துக்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் அங்கீகாரம் பெற்ற கடவுளின் அவதாரமான ஆஸ்ரம் பாபுஜி எனும் கிழட்டு நாய் தனது பக்த கோடிகளின் பெண்கள் பலரை வன்புணர்ந்திருக்கிறது. அதை சிலர் புகார் செய்து இந்த எழவை கைது செய்ய வைத்து வழக்கும் நடந்து வருகிறது. அதில் பதினாறு வயது மாணவியும் ஒருவர். 2013-ம் ஆண்டில் ராஜஸ்தான் ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் வைத்து இந்த சிறுமியை அந்த கிழட்டு நரி குதற முயன்றிருக்கிறது.

இதில் கிரிபால் சிங் முக்கிய சாட்சி என்று தெரிந்த பிறகு கடவுளின் ரவுடி கும்பல் அவருக்கு கொலை மிரட்டல் தெரவித்து வந்தது. இதை மேற்கண்ட மாணவியின் தந்தையிடமே சிங் தெரிவித்திருக்கிறார். ஆஸ்ரம் பாபு சிறையில் இருந்தாலும் இதுவரை ஒன்பது சாட்சிகள் தாக்கப்பட்டு இருவர் இறந்தும் போயிருக்கின்றனர். இந்த உலகில் நடக்கும் எல்லா தாக்குதல்களுக்கும் நானே காரணம் என்று இறுமாப்புடன் அடிவெட்டு வெட்டியிருக்கிறார் இந்த பொறுக்கி சாமியார .

வியாபம் ஊழல் முதல் ஆஸ்ரம வன்புணர்ச்சி வரை இந்துமதவெறியர்கள் சாட்சிகளை கொல்வதை வழக்கமாக்கிவிட்டனர். இவர்களே ஆட்சியில் இருந்தாலும், இவர்கள் சொல்வதையே நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டாலும், சாட்சிகள் என்று கூட எவனும் பேசக்கூடாது என்கின்றனர். ஜெயேந்திரன் முதல் ஆஸ்ரம் பாபு, நித்தியானந்தா வரை காவிக் கயவர்களின் வழிமுறை இதுதான்.

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க