privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஎச்சில் எங்கே துப்ப வேண்டும் ?

எச்சில் எங்கே துப்ப வேண்டும் ?

-

no-spittingகஸ்டு மாத (05-08-2015) நாளிதழ் செய்திகளின் படி, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ. 100 அபராதமும் இரண்டாம் முறை துப்பி பிடிபடுவோருக்கு ரூ. 200 அபராதமும் விதிக்க பெங்களூரு மாநகராட்சி முடிவெடுத்திருக்கிறது.

எச்சி மட்டுமல்ல, சிறுநீர், மலம் கழிப்பது, பொது இடங்களில் குளிப்பது, குப்பைகளைப் போடுவதும் குற்றம்.

நல்ல விசயம் தானே! என்று சொல்பவர்கள் கொஞ்சம் நிற்க!

பெங்களூரு போன்ற சிலிக்கான் சிட்டியில் எச்சில் துப்புவது அசிங்கம் என்று சொல்கிற இந்த அரசு, அதற்காக தீர்மானம் இயற்றி அபராதம் போடுகிற அரசு, இதே கர்நாடகா கூக்கே சுப்ரமணிய சாமி கோயிலில் பார்ப்பனர்களின் எச்சிலையில் தலித்துகளும் சூத்திரர்களும் உருள்வதை மட்டும் ஏன் தடுக்க மறுக்கிறது?

இந்த எச்சிக்கு மட்டும் ஏன் இந்த நாட்டின் பஞ்சமர்களும் சூத்திரர்களும் தடை வாங்கும் பொருட்டு கலெக்டர் அலுவலகம், தர்ணா, உண்ணாவிரதப்போராட்டம், மாவட்ட நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதி மன்றம் என எத்துணை கதவுகளைத் தட்டினாலும் தடை கிடைக்க மாட்டேன் என்கிறது?

இங்கு மட்டும் ஏன் பார்ப்பனியத்தின் பெயராலும் மடங்களின் பெயராலும் எச்சில் புனிதமாக்கப்படுகிறது?

ஆக நமது சுகதாரக் கண்ணோட்டத்தையே நீட்டித்துப் பார்த்தால் பெங்களூருவில் எச்சில் துப்பவுதற்கு தடை என்பது சூத்திரர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் துப்பும் எச்சிக்கு தடை என்பதுதானே பொருள்?

இதைப் புரிந்துகொள்ள பெங்களூரு அரசின் சுகாதாரக் கண்ணோட்டம் எத்தகையது என்பதைப் பார்ப்போம்.

உங்களுள் தைரியமானவர்கள் இந்தப் படத்தை சற்று நேரம் கவனியுங்கள். நீங்கள் கீழே பார்க்கும் படம், பொதுக்கழிப்பறை அல்ல. இது ஓர் அங்கன் வாடி மையம். இந்த அங்கன்வாடி மையம், பெங்களூரு ஹரி காலனியில் தான் செயல்பட்டுவருகிறது! இது ஒன்றுமட்டுமல்ல, பெங்களூரின் அனைத்து அங்கன்வாடிகளின் நிலைமையும் இதுதான்!

anganvadi in toiletபொதுகழிப்பறையில் அங்கன் வாடி மையத்தைச் செயல்படுத்துகிற பெங்களூரு மாநகராட்சி எச்சில் துப்புவதற்கு 100ரூபாய் தடைவிதிக்கிறது என்பதை சுகாதார நடவடிக்கையாகக் கொள்ள முடியுமா?

இந்தக் கோணத்தை சற்று இந்தியா முழுமைக்கும் நீட்டித்துப் பாருங்கள். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச் சத்துக்குறைபாடுள்ளவர்களாக இருக்கிற பொழுது, பாஜக பாசிசக் கும்பல் சத்துணவில் முட்டையை தடை செய்தது. ஆனால் யோகா உடல்நலம் என்று டில்லியில் மேட்டை எடுத்துக்கொண்டுபோய் நடு வீதியை நாறடித்தது.

blr anganvadiமாறாக கங்கையில் எச்சில் துப்புவதற்கு இரு நாட்கள் சிறை, ஆனால் அதே கங்கையில் ஆலைக்கழிவுகளோ இல்லை பிணங்களோ கலப்பதற்கு எந்த தடையும் இல்லை. இந்த திட்டத்திற்கு பெயர் தூய்மை இந்தியா.

ஆக பெங்களூரு மாநகராட்சி மட்டுமல்ல இந்திய அரசின் ஒட்டு மொத்த நடவடிக்கையில் சுத்தமும் கிடையாது. சுகாதாரக் கண்ணோட்டமும் கிடையாது என்பது தெரிகிறது இல்லையா?

ஆக நாம் எச்சிலை இனி எங்கே துப்புவது?

நம் உமிழ்நீரின் நொதிகளுக்கு கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உண்டு என்பது உண்மையானால் நா உலர்வதற்குள் முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்தையும் காறித்துப்ப பழகிக்கொள்வோம். அது தான் பொதுசுகாதாரத்திற்கும் பொது உடமைக்கும் முதன்மையான அடிப்படை!

– இளங்கோ

செய்தி ஆதாரங்கள்:

 

 

  1. அருமையான விரைவுக் கட்டுரை!

    ஒண்ட இடமே இல்லாத ஏழைகளுக்கு உதிரிப் பாட்டாளிகளுக்கு சிறுநீர் மற்றும் மலம் கழிக்க, குளிக்க, தூங்க, மழைக்கு ஒதுங்க ஏது இடம் தூய்மைக் கனவான்களே? நகரத்தைக் கட்டுவதும் இயக்குவதும் வளர்ப்பதும் அவர்கள் தானே?! எச்சிலை மட்டுமல்ல, சிறுநீரையும் மலத்தையும் முதலாளித்துவத்தின் முகத்திலே பொழிய வேண்டும், அப்போதுதான் விடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க