privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்கின் 108-வது பிறந்த நாள்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்கின் 108-வது பிறந்த நாள்

-

செப்டம்பர் 28 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் 108-வது  பிறந்த  நாள்

1. கரூர்

  • முதலாளிகளின்  சுரண்டலுக்கு  எதிரான  இந்தப்  போர் எங்களோடு  தொடங்கவும்  இல்லை எங்கள்  வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை !
  • விடுதலை போராட்ட உணர்வை லட்சக்கணக்கான இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தனது மரணத்தையே செயல்த்திட்டமாக மாற்றிக் கொண்ட இளம் போராளி !
  • இன்று நமது நாடு மீண்டும் காலனியாவதை முறியடிக்க பகத்சிங் பாதையில், பு.மா.இ.மு தலைமையில் அணிதிரள்வோம். மாணவர்கள் அதிகாரத்தை கையில் எடுப்போம் !

செப்டம்பர் 28 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி மாவீரன் பகத்சிங்கின் 108 வது பிறந்தநாள். இந்தியாவின் விடுதலைக்காக தனது உயிரை அற்பணித்து ஏகாதிபத்திய முதலாளிகளை நடுநடுங்க வைத்த இளம் போராளி, பகத்சிங்.

bhagat-singhஅன்று இந்திய விடுதலைக்காக போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்த பகத்சிங் உடன் போராட ஏராளமான மாணவர்கள் – இளைஞர்கள் முன்வந்தார்கள். ஆனால், இன்றோ மாணவர்கள் இளைஞர்கள் நாட்டைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்று திட்டமிட்டு இந்த அரசு டாஸ்மாக் கடை, சீரழிவு கலாச்சாரம் என்று மாணவர்கள் இளைஞர்களை சிந்திக்க விடாமல் மழுங்கடித்துக் கொண்டு உள்ளது.

மற்றொரு பக்கம் மோடி முதலாளிகளின் கைக்கூலியாக செயல்பட்டுக் கொண்டு ஒவ்வொரு நாடாக சுற்றுப்பயணம் என்ற பெயரில் சென்று இந்தியாவை கூறு போட்டு விற்றுக் கொண்டு உள்ளார்.

அசைவ உணவிற்கு தடை, பள்ளிகளில், கல்லூரிகளில் இந்தித் திணிப்பு நடவடிக்கை, தொழிலாளர் சட்டத்திருத்தம், ஐ.ஐ.டி-ல் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை என்று பார்ப்பன பாசிச நடவடிக்கைகள் தொடர்கின்றன.

bhagat-singh-birthday-karur-posterஅரசின் அடக்குமுறைகளை எதிர்த்து டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராடி சிறை சென்று கடைசி வரை போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றனர். அதே போல் ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடையை எதிர்த்து போராடியும் வெற்றியடைந்துள்ளனர்.

பகத்சிங்கின் பாதையில் மறுகானியாக்கத்தை எதிர்த்து மீண்டும் ஒரு விடுதலைப் போரை முன்னெடுக்க வேண்டும். மாணவர் அமைப்பாய் அணிதிரள வேண்டும் என்று முழக்கத்தின் அடிப்படையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கிளையின் சார்பாக காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் தோழர் சுதர்சனன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் மற்றும் மைய கிளையில் இருந்து சில தோழர்களும் கல்லூரி கிளை உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். தோழர் பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

அதே போல் அரசு கலை கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து பேசப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கரூர்கட்டளை பகுதியில் பு.மா.இ.மு சார்பாக மாலை 6 மணி அளவில் பகத்சிங் 108-வது பிறந்த நாள் விழா நடத்தப்பட்டது. பகுதி தோழர் மணி பிரசாத் தலைமை வகித்தார். பகத்சிங் படத்திற்கு தோழர் ஜெகதீஸ் மாலை அணிவித்து மாணவர்கள் இளைஞர்கள் பகத்சிங்கை போல் நாட்டுக்காக அரசியல் உணர்வுடன் போராட வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கி விழாவை பகுதி இளைஞர்கள் சிறப்பித்தனர்.

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்

2. சென்னை

சென்னையில் பகத்சிங் பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சி மதுரவாயல் பிள்ளையார் கோவில் பகுதியில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதி செயலர் தோழர் செந்தில் தலைமை வகித்தார்.

bhagat-singh-birthday-rsyf-chennai-1தோழர் செந்தில் தனது தலைமை உரையில், “மற்ற ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் எல்லாம் பகத்சிங் படத்தை மட்டும் வைத்துக் கொண்டு கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். ஆனால், புரட்சிகர அமைப்பாகிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பகத் சிங் காட்டிய வழியில் மாணவர்களையும், இளைஞர்களையும் தட்டியெழுப்பி தேச விடுதலைப் போரில் பங்கு கொள்ளச் செய்து வருகிறது.

தேசவிடுதலையை எந்த வழியில் பெற முடியும் என்று பகத்சிங் காட்டினார். அதேபோல, மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை போராடாமல் பெற முடியாது என்பதையே இப்போதைய சூழல் காட்டுகிறது. மக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராடுகின்றனர். அலை அலையாக மாணவர், இளைஞர்களை அணிதிரட்டி தேசவிடுதலைப் போரை முன்னெடுப்போம்.” என்று பேசினார்.

bhagat-singh-birthday-rsyf-chennai-4சிறப்புரை ஆற்றிய பு.மா.இ.மு சென்னை கிளை இணைச் செயலாளர் தோழர் சாரதி, “சீனாவை அடிமைப்படுத்துவதற்கு அபினை விற்று அடக்குமுறை செலுத்தியது ஆங்கிலேய ஏகாதிபத்தியம். அது போல டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக மக்களை அடிமைப்படுத்துகிறது ஜெயா அரசு.

இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக காந்தி தலைமையிலான காங்கிரசின் கபட முகத்தை கிழித்தெறிந்து, அன்றைய பாராளுமன்றத்தில் குண்டு வீசி தன் உயிரையே ஈந்து தேச விடுதலைப் போருக்கு ஊக்கமானார் பகத்சிங்.

கோடி கோடியாய் கொள்ளையடித்தவனுக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கும் பிணை கொடுக்கும் நீதிமன்றம் சாராயக் கடைக்கு எதிராக போராடிய மக்களை சிறையில் அடைத்து, காட்டுமிராண்டி போலீசு தர்பாருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறது.”

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர் வாணிஸ்ரீ செங்கொடி ஏற்றினார்.

நாடு மீண்டும் காலனியாவதற்கு எதிராக பகத்சிங் பாதையில் அணிதிரள வேண்டியும், சீரழிவு கலாச்சாரத்தை துளைத்தெறிய வேண்டியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல்,

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.