privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் - விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

-

ஆலயத்திலும் அகிலத்திலும் பார்ப்பான் வைத்ததே சட்டம்!
உச்ச நீதி (உச்சி குடுமி) மன்றம் திட்டவட்டம்!

விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

2006 தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்ததின் மூலம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

archagar-verdict-vpm-demo-banners-3இந்தப் பள்ளிகளில் பல்வேறு சாதியினை சார்ந்த சுமார் 206 மாணவர்கள் பயின்று ஆகம விதிகளை முறையாக கற்று தேர்ந்து அரசு சான்றிதழும் பெற்றனர். இந்த சட்ட ஆணையை எதிர்த்து மதுரையை சார்ந்த சிவாச்சாரியார்கள் சங்கம், சட்டப்பிரிவு 25-க்கு எதிரானது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஆதரவாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கிய கழகமும் தம்மை இணைத்துக்கொண்டு வழக்கை நடத்தின. இந்த வழக்கின் தீர்ப்பு 2013 ஆண்டே வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு பின்பு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த சூழலில் கடந்த 16-12-2015 அன்று தனது தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு 1972 ஆண்டு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்விலே வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பை விட நயவஞ்சகமான முறையில் நுணுக்கமாக வழங்கி பார்ப்பனிய நரித்தனத்தை நிலைநாட்டி உள்ளது.

archagar-verdict-vpm-demo-banners-1அயோக்கியத்தனமான இந்தத் தீர்ப்பை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பதாகவும், தேவைபட்டால் மேல்முறையீடு செய்வது பற்றி பரிசிலிப்போம் என்று ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பாணியில் அறிக்கை விடுகின்றனர்.

ஆகப்பெரும்பான்மையாக உள்ள பிற சாதி உழைக்கும் மக்களை கீழானவர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்கள் சிலையை தொட்டால் சாமி செத்துவிடும் என்று கூறி மக்களை இழிவு படுத்தி வந்த பார்ப்பனியம் அதனை சட்ட ரீதியாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிபடுத்தியுள்ளது.

சட்டப்பிரிவு 17-ன் படி தீண்டாமை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது குற்றம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தற்பொழுது “இலை மறை காயாக“ வழங்கியுள்ள இந்த தீர்ப்பு தீண்டாமை குற்றமே.

archagar-verdict-vpm-demo-banners-2இந்த கேடுகெட்ட தீர்ப்பை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிர அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விழுப்புரத்தில் பு.மா.இ.மு., வி.வி.மு,.பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து 21-12-2015 திங்கள் அன்று மாலை 5.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஞானவேல் ராஜா தனது தலைமையுரையில், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முறையாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு எதிராகவும், சாதி தீண்டாமையை மறைமுகமாக திணிக்கிறது” என்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் மனோகர், “உச்ச நீதி மன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பு என்பது பிற சாதி உழைக்கும் மக்களுக்கு எதிராக தான் தீண்டாமையை விதைத்துள்ளது. இதன் வேரறுக்க வேண்டுமானால் உழைக்கும் வர்க்கமாய் ஒன்று திரள வேண்டும்” என்பதை வலியுறுத்தி பேசினார்.

archagar-verdict-vpm-demo-poster

தோழர் லோகநாதன் உரை
தோழர் லோகநாதன் உரை

அவரைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பாண்டிச்சேரி துணைச் செயலாளர் தோழர் லோகநாதன், “ஆகம விதிகளை பின்பற்றினால் தான் அர்ச்சகராக முடியுமென்றால் முதலில் பார்ப்பானே அர்ச்சகராக இருப்பதற்கு தகுதி இல்லை. காஞ்சி தேவநாதன் தொடங்கி சங்கராச்சாரி வரை கிரிமினல் குற்றவாளிகள். அவர்கள் பூஜை செய்யலாம். ஆனால் பஞ்சமர்களும் , சூத்திரர்களும் அர்ச்சனை செய்யக்கூடாதாம்.  இந்துக்களுக்கு நாங்கள் தான் பிரிதிநிதிகள், பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.க – இந்து முன்னணி உள்ளிட்ட கைக்கூலிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து பேசவில்லை. நாம் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும், இழிவு படுத்தும் பார்பனிய சித்தாந்தத்தை ஒழித்துக்கட்ட அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் பின்னே வருவது தான் தீர்வு” என்பதை விளக்கி பேசினார்.

தோழர் ராஜு உரை
தோழர் ராஜு உரை

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, “தமிழகத்திலே பெரியாரை பேசாமல் எந்த கட்சிகளும் அரசியல் பண்ண முடியாது. ஆனால் இன்றைக்கு பெரியாரின் கொள்கைக்கு எதிராக வழங்கி இருக்கும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை பற்றி எந்த கட்சிகளும் பேசவில்லை காரணம், பார்ப்பன விழுமியங்களை ஏற்றுக் கொண்டவர்களாக திராவிட கட்சிகள் உள்ளன. இன்னொரு பக்கம் பெரியாரை மரியாதை குறைவாக பேசித் திரியும் பா.ஜ.க வை சேர்ந்த எச்.ராஜா, சுயமரியாதை பாரம்பரியத்தை கொண்ட தமிழர்களுக்கு அவமானம்..

தில்லை கோவிலை தீட்சிதர்களிடம் பிடுங்கி கொடுத்தது தொடங்கி , அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு வரை தமிழ் மக்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி வருகிறது, உச்சநீதிமன்றம். எனினும் இந்த தீர்ப்பு ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் என்கிறதே : தில்லையிலே தீட்சதர்கள் கோவில் சொத்தை திருடியிருக்கிறார்கள் , மது, மாது என்று அனைத்து மோசடி வேலைகளிலும் ஈடுபடுகிறார்களே இவர்கள் எந்த ஆகமத்தை பின்பற்றுகிறார்கள்?

ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் கூறியுள்ள உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் அயோக்கியத்தனமானது. இது சட்டபூர்வமாகவே சாதி தீண்டாமையை நிலைநாட்டுகிறது. இந்த சட்டத்தையும், அரசையும் நம்பி நம் உரிமைகளையும், சுய மரியாதையையும் பெற முடியாது. சாதி இழிவை ஒழித்துக்கட்டுவதற்கு மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பது தான் தீர்வு” என்று பேசியது மக்களுக்கு எழுச்சியூட்டும் விதமாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விழுப்புரம். தொடர்புக்கு:99650 97801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க