Sunday, March 26, 2023
முகப்புகட்சிகள்பா.ஜ.கஎழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !

-

காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். “நான் ஏன் இந்து அல்ல”, “பின் இந்து இந்தியா”, “அய்யங்காளி” போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

kancha-ilya-threatened-by-brahmin-thugsவிஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் “பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.

இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.

அதன்பிறகு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால், அதன் கலாச்சாரம் இதுவென்றால், நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை” என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.

தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.

நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. கடந்த 2013-ல் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு பலியாகி உள்ளனர்.

சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.

நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.

அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.

-மில்ட்டன், செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியான காஞ்சா அய்லய்யாவின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

kancha-ilyaமே 16 அன்று ஹைதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழகத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அய்லய்யாவை சந்திக்க போன போது அவரது அறைக்கு வெளியே இரண்டு தொலைக்காட்சி படப்பிடிப்பு குழுக்களும், மாநில பார்ப்பனர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆவேசமான கூட்டமும் இருந்தன.

கூச்சலும் குழப்பமுமாக இருந்த  அறையில் தொலைபேசி இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. “யார் பேசுவது? நீ ஒரு பயங்கரவாதியா? நீ எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லு” என்று பேராசிரியர் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த நபரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேள்வி : என்ன நடந்தது?

மே 14 அன்று விஜயவாடாவில் சி.ஐ.டி.யு சார்பில் ஒரு உரை நிகழ்த்தும்படி என்னை அழைத்திருந்தார்கள். உழைப்பின் தோற்றம் பற்றியும், இந்தியாவில் உற்பத்தியின் வரலாறு பற்றியும் நான் பேசினேன். திராவிடர்களுடையதும், பழங்குடி மக்களுடையதுமான முறைப்படுத்தப்பட்ட உழைப்பு சிந்த சமவெளி நாகரீகத்தில் தொடங்கி வளர்ந்தது என்று கூறினேன். அவர்கள் களிமண்ணை செங்கல் ஆக்கினார்கள்; மரத்தைக் கொண்டு வீடுகளும், அறைக்கலன்களும் செய்தார்கள்; நுட்பமான கால்வாய்களையும், வடிகால் அமைப்புகளையும் கட்டியமைத்தார்கள்.

இந்த முன்னேற்றம் ஆரியர் படையெடுப்புக்குப் பிறகு வேத காலம் தொடங்குவதும் வரையிலும் நீடித்தது. படிப்படியாக, வேதங்களின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க உழைப்பின் அங்கீகாரம் பறிக்கப்பட்டது. கடவுளரின் உலகில் உழைப்பை செலுத்துபவர்கள் சண்டாளர்கள், சூத்திரர்கள், கடவுள் மறுப்பாளர்கள் என்று அழைக்கப்பட ஆரம்பித்தனர்.

உழைப்புக்கு எதிரான இந்த ஒட்டுமொத்த கோட்பாடும் பார்ப்பன எழுத்தாளர்களாலும் பின்னர் வேத மதத்தை கட்டமைத்த பூசாரிகளாலும் கட்டி எழுப்பப்பட்டது. இது 6-வது நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அப்போது புத்தர் தோன்றி, “கடும் உழைப்பு ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்” என்ற சிராமண தத்துவத்தை முன் வைத்தார். இந்த சிராமண கலாச்சாரம், இந்தியாவின் பெரும் பகுதிகளில் புத்த மதத்தை அழித்தொழித்த சங்கராச்சாரியாரின் எதிர்ப் புரட்சி வரை தொடர்ந்தது.

இசுலாமிய, பிற்பாடு கிருத்துவ ஆட்சியாளர்கள் காலத்தில் வேத மதம் கட்டுக்குள் இருந்தது.  1947-க்குப் பின் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

வரலாற்றில் பார்ப்பனர்கள் ஒரு போதும் உற்பத்தியில் பங்கேற்றதில்லை என்பதுதான் நான் என் உரையில் பதிய வைத்த முக்கியமான கருத்து.

கேள்வி: 2010-ல் உங்கள் வீடு சூறையாடப்பட்டது. வலதுசாரி குழுக்கள் உங்களை பல ஆண்டுகளாகவே குறி வைத்து வந்திருக்கின்றனர். இப்போது என்ன மாறியிருக்கிறது?

கடந்த காலத்தில், பார்ப்பனர்களால் தலைமை தாங்கப்படும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகளின் தாழ்த்தப்பட்ட சாதி உறுப்பினர்கள்தான் என்னை தாக்கினார்கள். இதுதான் முதல்முறையாக பார்ப்பனர்கள் வெளிப்படையாக என்னை குறி வைப்பது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவு அவர்களுக்கு தைரியம் ஊட்டியிருக்கிறது.

ஆட்சிக்கு வந்த பிறகு சந்திரசேகர் ராவும், சந்திரபாபு நாயுடுவும் பார்ப்பனர்களின் நலனுக்காக தலா ரூ 100 கோடி ஒதுக்கினர். பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலைமையில் அந்த சாதிக்காக தனி வாரியங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அவர்கள் தோளில் பெரிய கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனை தங்கள் சின்னமாக பயன்படுத்துகின்றனர். கோடாரியைக் காட்டி யாரையோ மிரட்ட முயற்சிக்கின்றனர். அரசு ஆதரவிலான இந்த குழுக்கள் தலித் பகுஜன்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலானவை.

கேள்வி : இந்த முறை என்ன மாதிரியான மிரட்டல்களை நீங்கள் எதிர் கொண்டீர்கள்?

மே 16 அன்று ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, தான் ஆந்திர பிரேதச முன்னாள் தலைமை செயலர் ஐ.ஒய்.ஆர் கிருஷ்ணராவ் (இப்போது ஆந்திரா பார்ப்பனர் நலச் சங்க தலைவர்) சார்பாக பேசுவதாக கூறினார். அதே நபர் அதற்கு முந்தைய நாள் சி.ஐ.டி.யு கருத்தரங்கில் எனது உரைக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவரது அறிக்கை ஹிஸ்டீரியாவை தூண்டியது, எனது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. ஒருவர் எனது அலுவலக தொலைபேசி எண்ணை பேஸ்புக்கில் போட, வசவு பாடும் அழைப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.

பார்ப்பனர்கள் உற்பத்தியில் என்ன பங்களித்தார்கள் என்று புள்ளிவிபரங்களை தரும்படி அவர்களிடம் கேட்டேன். எத்தனை பேர் செருப்பு தொழிலாளர்களாகவும், பானை செய்பவர்களாகவும், கட்டிட தொழிலாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் உள்ளனர்? தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அவர்களில் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள்?

சேற்றை உணவாக மாற்றும் மக்களை அழுக்கு மனிதர்கள் என்று அழைக்கும், அவர்களை இழிவாக கருதும் ஒரு சமூகத்தில் நான் வாழ்கிறோம் என்று நான் வாதிட்டேன். இப்படி இருந்தால் நமது நாடு எப்படி முன்னேற முடியும்?

செய்தி, புகைப்படம் : நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்

 1. //பார்ப்பனர்கள் உற்பத்தியில் என்ன பங்களித்தார்கள் என்று புள்ளிவிபரங்களை தரும்படி அவர்களிடம் கேட்டேன். எத்தனை பேர் செருப்பு தொழிலாளர்களாகவும், பானை செய்பவர்களாகவும், கட்டிட தொழிலாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் உள்ளனர்? தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அவர்களில் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள்?//

  இந்தக் கேள்விகளுக்கு எந்த பார்ப்பன ‘அறிவுஜீவி’ பதில் சொல்ல முடியும்? எந்த ‘லிபர்டேரியன்’ ‘அறிவுஜீவி’ பதில் சொல்ல முடியும்? எந்த முதலாளித்துவ ‘அறிவுஜீவி’ பதில் சொல்ல முடியும்?

  உழைக்காமல் உண்ணுவதே பார்ப்பனீயம்!

  • Entha kaala kattathil nee irukkirai? Thinamum enathu thanthai factoriyil night shift seithu vantha maatha samabalathil engalathu vaazhkai nagarnthathu. Ithakku per uzhaippu illaya?

   Aduthavan meethu pazhi pottu quotavil udal valarppathe unathu siddhantham!

 2. தந்திர காரர்களுக்கு தன் இனம் முன்னேற வேண்டும் அதுதான், இங்கே நீதி செத்து போய்விடும், ஆனால் நல்லவர்கள் பிறப்பார்கள் அப்பொழுது நீதி உயிர்தெழுந்துவிடும், மாறும் உலகில் மாறாதது ஒன்றும் இல்லை, ஏழைகளை கடவுள்தான் காப்பாற்றவேண்டும், மனிதனை விலங்காக மாற்றுவது, ஜாதி வெறி, மதவெறி, இனவெறி, இதுபோன்ற வெறிகளிலே எப்படி நாடு வளர்ச்சி பெரும், மாறாக வறட்சி தான் பெரும். மன வேதனைதான்.
  உழைப்பாளிகள் எல்லாம் கஷ்டத்திலே, பெருச்சாளிகள் எல்லாம் சந்தோசத்திலே, நாட்டின் நிலையோ நஷ்டத்திலே, நாட்டின் தலைவனோ ஊர்சுற்றும் உண்ணாமலையாக! அநேகமாக மீதம் இருக்கும் நாட்களிலே அனைத்து நாடும் சுற்றிவிடுவார், நல்லது அவராவது அனைத்து நாட்டையும் பார்க்கட்டுமே அவரும் இந்திய குடிமகன்தானே. அருமையான உல்லாச பறவை, கடவுள் பார்த்துகொள்வார்.

 3. அந்தணர்கள் மூளையால் உழைத்தார்கள்
  மற்றவர்களிடமும் அதையே எதிர்பார்தார்கள்

 4. சொல்வார்கள்! கொஞ்சம் தயக்கமாயிருக்கிரதோ என்னவோ! நமது அசுர குலத்துக்கு ஆடலரசிகளை சப்ளை செய்து அறிவை மயக்கவில்லையா? எண்ணற்ற அசுரர்கள் ஆயுத போரில் வெல்ல முடியாதவ்ர்களையெல்லாம், இந்த மோகனாங்கி கள் மித்திர பேதம் செய்து அழித்த வரலாறு தானே சூரபத்மன்,நரகாசுரன் , இரணியன் வரலாறு? அவாளுக்கு புரிந்ததுநம்மவாளுக்கு புரியவில்லையே!

  • பெண்களை கண்ணியமாய் பாருங்கள் துரு பிடித்த புத்தி உடைய துரு சத்ரு

   • பெண்கள்தானே இவர்கள் அரசியலின் தூண்கள்! இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே! ராமச்ந்திரன் கெட்டதும் பெண்ணாலேயே அன்றோ!

    சூர பத்மனாதியர்களையும், ராவணாதியர்களையும் , துரியோணாதியர்களயும் பெண் களை அனுப்பியே மித்திரபேதம் செய்து கொன்ற கதைகளே புராணங்கள்! இவைநடந்த கதையல்ல ,நடக்கும் கதைக்கு உத்திகள் !

    தாழ்த்தப்பட்டவர் பிரதமராக வருவதை தடுத்த ஸ்டிங் பிரச்சாரங்கள், பாபு ஜகஜீவன்ராம் பிரதமராவதை தடுத்தது!

    அண்ணா முதல்வராக இருந்த போதும் ஒரு பார்ப்பன பெண்மணியை சம்பந்தப்படுத்தி ஓலமிட்டனர்!

    கருணானிதியை கொச்சைப்படுத்தி கனிமொழியை அவமனப்படுத்தி வருகின்றபனர்!

    ஓரு தேர்ந்தநடிகையை பயன்படுத்தி எம்ஜியாருக்கும் கலைஞருக்கும் பிளவு உண்டாக்கி ‘திராவிட’ அரசியலில்நுழைந்தார்களே!

    மோடி அந்தரங்களை அம்பலப்படுத்திய ‘டெல்கி’ யை ஒரு பெண்ணை பயன்படுத்தி அல்லவா வாயடைத்தார்கள்!

    வாழ்க ஆரியரின் பெண்ணின் பெருமை!

    மேலும் தகவலுக்கு:http://thathachariyar.blogspot.in/2010/10/1.html

    • யோவ் சத்ரு

     நான் அந்தணர்களை பற்றி மட்டுமே விவாதித்து கொண்டிருக்க விரும்பவில்லை

     வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில்நடந்த பல தற்செயலான சம்பவங்களை திட்டமிட்ட செயல்களாக சித்தரிப்பது பாமரத்தனமா அல்லது அன்னிய பணத்தின் மீது எற்ப்பட்ட கம்யூனிஸ மோகமா

      • my father is a freedom fighter and he personally knows rajaji and up to my understanding rajaji is not a narrow minded person his plan to unite job training and education was criticized by e.v.r group for personal gain I believe so,

       I believe everybody has right to enter into politics so why not to jayalalitha ?..

       what’s wrong in entering politics to serve society?.

       you want to replace democracy by totalitarianism..

       • For generations education was denied to one set of people.After independence only ,many primary schools were opened and admitted first generation students from the communities that were denied education.Under the guise of giving job training Rajaji closed 6000 schools in spite of objections from his own party.EVR opposed KULAKKALVITHITTAM for safeguarding the interests of neglected communities and not for personal gains.After the exit of Rajaji,his successor Kamaraj,not only reopened the closed 6000 schools but also opened additional 6000 schools.He also provided Midday meals in the schools.Who among these two can be considered as visionary?

 5. ஆரிய புராண, இதிகாசங்கள் (மனு ஸ்மிருதியும் கூட) பெண்களை அப்படி கண்ணியமாய் கூறவில்லையே மிலார்ட் ! பெண்களையும் சூத்திர லிஸ்டில் சேர்த்து வேதம் பயில தடை செய்யப்பட்டதே! மற்ற இழிவுகளை தாத்தாச்சாரியார் வலைதளத்தில் பார்க்க: http://thathachariyar.blogspot.in/2010/10/1.html

  • இந்து கெட்டவன் என்றால் கேள்வி கேக்காமல் நம்புவீங்க ஆனா
   . நல்லவன்னு ஆதாரத்தோடு சொன்னாலும். ஏற்க்கமாட்டீர்கள்
   நல்லா ட்யூஷ்ன் எடுத்தருய்யா

  • இந்து மதத்தில் காலபோக்கில் சேர்ந்த கசடுகளை அப்புறப்படுத்த இந்துக்களுக்கு
   தெரியும் மாவோ பிள்ளைகள் கவலைப்படவெண்டியதில்லை

   காலப்போக்கில் ஸமஸ்கிருதவார்தைகலுகு அர்த்தம் மாற்றி வழங்கியது
   அன்னிய படயெடுப்பால் வந்த வினை

   தாதாஸாரி சைகொ

   அதை யூஸ் பன்றவன் மாவோ வாரிசு

  • வேதகாலத்தில் பெண் ரிஷிகள் இருந்தனர்

   பிறகு ஜைன பவுத்த மத செல்வாக்காலும்

   இஸ்லாமிய கிறிஸ்தவ படை எடுப்புகளாலும்

   இந்துபெண்களின் கல்வி தடைப்பட்டது

 6. உடல் உழைப்பு அல்லது ‘ உற்பத்தி ‘க்கு வரையறை என்ன?

  சமையல் ( கேட்டரிங்) துறையில் ஈடுபட்டுள்ள பார்ப்பனர்கள் உறப்த்தியாளரா இல்லையா?

  ஆஊTஓMஓBஈளே உற்பத்தி எந்த ரகத்தை சேர்ந்தது?

  விற்பனை பிரதிநிதிகளாக தெருத் தெருவாக அலைபவர்கள் உடல் உழைப்பாளர்களா இல்லையாஇல்?

  இன்று ஏதாவது ஒரு சமூகதிதில் 1௦௦ சதவீதத்தினரும் அய்யாவின் உழைப்பு அல்லது ‘உற்பத்தி ‘ வரையறைக்குள் அடங்குவாரா?

  கடைசியாக இந்த வரையறைஅய்யா காஞ்சா அய்லய்யா உழைப்பு அல்லது ‘ உறபத்தி வரையறையில் வருவரா?

 7. //பார்ப்பனர்கள் உற்பத்தியில் என்ன பங்களித்தார்கள் என்று புள்ளிவிபரங்களை தரும்படி அவர்களிடம் கேட்டேன். எத்தனை பேர் செருப்பு தொழிலாளர்களாகவும், பானை செய்பவர்களாகவும், கட்டிட தொழிலாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் உள்ளனர்? தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அவர்களில் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள்?//

  தொழில் ரீதியாக சமூகம் பிரிந்த பின்னர் இந்த தொழிலை அவர்கள் செய்யவில்லை என்று சொல்வது அபத்தமானது.

  இதையே மாற்றி எத்துனை தேவர்கள் முடி திருத்துகிறார்கள் என்றோ எத்துனை வேளாளர்கள் துணி துவைக்கிறார்கள் என்றோ கூட கேட்கலாம் .

  ஆனால் அந்த ஆதிக்க சாதிகளை உடல் உழைப்பு என்னும் வகையில் பொது மன்னிப்பு கொடுத்து அவர்களையும் , மற்ற ஒடுக்க பட்டவர்களையும் ஒரே நேர்கோட்டில் நிற்க வைத்து பார்பனர்களை பொது எதிரியாக மாற்றுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாம் .

  அடுத்து சமூகங்கள் ரீகான்சில் ஆகவிடாமல் காயத்தை கிண்டி கொண்டே இருப்பது , இதன் மூலம் இவர் நல்லவர் என்கின்ற பிம்பத்தை நிறுவுவது என்பதற்கு வேண்டுமானால் இது போன்ற விவ்வதங்கள் உதவலாம் .

  நமக்கு தேவை சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நெல்சன் மண்டேலா போன்றவர்கள். அதற்காக உண்மையை மறைக்க வேண்டியது இல்லை .

  பார்பனர்கள் உடல் உழைப்பு தொழிலை எடுத்து கொள்ளவில்லை
  பிற சமூகங்கள் மூளை உழைப்பு தேவைப்படும் கணக்கர் தொழிலை எடுத்து கொள்ளவில்லை

  பார்பனர் தன வாழ்வாதாரமான கல்வியை மற்றவருக்கு அளிக்க விரும்பவில்லை
  விவசாயி தனக்கு வாழ்வாதாரமான நிலத்தை மற்றவருக்கு அளிக்க விரும்பவில்லை

  வலுத்தது வெல்லும் என்னும் டார்வினின் கோட்பாடு படி தனது சந்தத்யினரின் வாழ்வாதாரத்தை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வழியில் நிலை நிறுத்தின . இந்த போட்டியில் முற்றிலும் புறக்கணிக்க பட்டவர்கள் தலித்கள் .

  ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உழைப்பை கொண்டு பொருளாதார பலன் அடைந்தது பார்பனர் சமூகமா ? விவசாய சமூகமா ? எல்லோரும் கூட்டு கொள்ளை அடித்துவிட்டு இன்றைக்கு வியாக்கியானம் பேசுகிறார்கள்

  • அதாவது, பார்ப்பனர்கள் உடல் உழைப்பில் ஈடுபட்டதில்லை என்று காஞ்சா அய்லய்யா சொன்னது உண்மைதான் என்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறீர்கள். அந்தக் கருத்தை சொன்னதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் பார்ப்பன முரடர்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்? கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாத ‘அறிவாளி’ பார்ப்பனர்கள் பற்றி ஏன் யாரும் பேசவில்லை?

   தொழில் ரீதியாக பிரிந்தது என்று சாதி/வருணாசிரம தருமத்திற்கு சப்பைக்கட்டு கட்டுகிறவர்கள் பார்ப்பனர்கள். சாதிக்கு அப்படிப்பட்ட விளக்கம் எவ்வளவு முட்டாள்தனமானது என்று அம்பேத்கர் “இந்தியாவில் சாதி” என்ற தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார். சாதி பற்றி பேச வரும் எந்த ஒரு ‘அறிவாளி’யும் அதை முதலில் படிக்க வேண்டும். அதன்படி பார்ப்பனர்கள்தான் சாதி/வருணாசிரமத்தை உருவாக்குவதில் பிரதான பங்கு வகித்தவர்கள், பார்ப்பனர்கள்தான் சோம்பேறிகள், பார்ப்பனர்கள்தான் உடன்கட்டை ஏறுதல், விதவை முறை, சிறுமியர் திருமணம் போன்ற சமூகக் கொடுமைகளை சுமத்தியவர்கள். இன்றைக்கும் வருணாசிரம தருமத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு, அதற்கு தத்துவ வியாக்கியானம் கொடுத்துக் கொண்டு, 25 கோடி தலித்துகள் மீதும் 20 கோடி இசுலாமியர்கள் மீதும் ஏறி மிதிப்பவர்கள், அவர்களது உழைப்பில் வாழ்ந்து கொண்டு, “உடல் உழைப்பு” “மூளை உழைப்பு” என்று வேலைப் பிரிவினை பேசிக் கொண்டிருப்பவர்கள்.

   //பார்பனர்கள் உடல் உழைப்பு தொழிலை எடுத்து கொள்ளவில்லை
   பிற சமூகங்கள் மூளை உழைப்பு தேவைப்படும் கணக்கர் தொழிலை எடுத்து கொள்ளவில்லை

   பார்பனர் தன வாழ்வாதாரமான கல்வியை மற்றவருக்கு அளிக்க விரும்பவில்லை
   விவசாயி தனக்கு வாழ்வாதாரமான நிலத்தை மற்றவருக்கு அளிக்க விரும்பவில்லை//

   எந்த ஒரு விவசாயியும், விவசாயத்தில் பார்ப்பான் இறங்கினால் அவன் காலை வெட்டு என்று சொல்லவில்லை. எந்த துப்புரவுத் தொழிலாளியும், பார்ப்பான் மலம் அள்ள வந்தால் அவன் கையை வெட்டு என்று விதி வகுக்கவில்லை. சூத்திரன் வேதத்தை கேட்டால் காதில் ஈயத்தை ஊற்று என்று மூளை உழைப்பை பிற சாதியினருக்கு மறுக்கும் மனு சாஸ்திரத்தை எழுதி சத்திரியர், வைசியர் துணையோடு அதை பெரும்பான்மை மக்கள் மீது சுமத்தியவன் பார்ப்பான். உடல் உழைப்பை இழிவுபடுத்தியவன் பார்ப்பான் (அதையும் காஞ்சா அய்லய்யா பேசியிருக்கிறார்)

   அப்படி மூளை உழைப்பு செலுத்தி இந்திய சமூகத்துக்கு என்ன பங்களிப்பு செய்து விட்டான் பார்ப்பான் என்று பார்த்தால் “காயத்திரி மந்திரம்”, “சந்தியா வந்தனம்”, “ஹோம குண்டம்” என்றுதான் சொல்ல முடியும். பார்ப்பனியம் உடல் உழைப்பையும், கல்வி/சிந்தனையையும் பிரித்ததால் புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் வளர்ச்சிகள் முடக்கப்பட்டன. அப்படிப்பட்ட தடைகள் இல்லாமல் பிற சமூகங்கள் முன்னேறின. அவை படையெடுத்து வரும் போது, பார்ப்பனர்கள் ‘காயத்திரி மந்திரம்’ சொல்லியும், ‘வேதம் ஓதியும்’ எதிர்க்க முடியுமா? பீரங்கிக்கு முன்பு நிற்க முடியாமல் கோயில்களில் பதுங்கிக் கொண்டார்கள். அவர்களது ‘மூளை’ அவர்களுக்கும் உதவவில்லை, சமூகத்தையும் பாதுகாக்கவில்லை.

   கடைசியாக, ஆங்கிலேய காலனிய ஆட்சியில் ஆங்கிலேயனின் காலை நக்கிய சாதிகளில் முக்கியமானவர்கள் பார்ப்பனர்கள். இன்றைக்கும் வெள்ளைக்காரனுக்கு (அமெரிக்காவுக்கு) சோப்பு போடுவதில் முன்னணியில் இருப்பது பார்ப்பன கூட்டம்தான் (அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட காலனிய எஜமானர்களுக்கு அடிமை சேவகம் செய்த மேட்டுக்குடியினரை இந்தியில் “வெள்ளைக் காரன் சீச்சீ போச்” (white man shit wiper) என்று அழைத்தார்களாம்).

   ஒட்டு மொத்த பார்ப்பனக் கூட்டமும் அன்றைக்கு காங்கிரசில் இருந்தது, இன்று ஆர்.எஸ்.எஸ் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது.

   நாட்டுப் பற்று சுத்தமாக இல்லாத கூட்டம் அது, தான், தனது ‘தருமம்’ அதற்காக எதையும் விற்கத் தயாராக இருப்பவர்கள், பார்ப்பனர்கள். NRIகளில் முன்னோடிகள், அதிக சதவீதம் பார்ப்பனர்கள். அமெரிக்காவுக்கு சீச்சீ போச் செய்யும் ஐ.டி கம்பெனிகளில் ஆதிக்கம் செலுத்துவதும் பார்ப்பனர்கள்தான். இன்றைக்கு இந்தியாவையே உலகுக்கு பட்டா போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மோடியை தூக்கிப் பிடித்து, அப்படி விற்பதை ஆதரிப்பதும் பார்ப்பனர்கள்தான்.

   //வலுத்தது வெல்லும் என்னும் டார்வினின் கோட்பாடு படி தனது சந்தத்யினரின் வாழ்வாதாரத்தை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வழியில் நிலை நிறுத்தின . இந்த போட்டியில் முற்றிலும் புறக்கணிக்க பட்டவர்கள் தலித்கள் .//

   வலுத்தது வெல்லும் என்று டார்வினிய கோட்பாட்டை சமூக குழுக்களுக்கு பேசுவது அயோக்கியத்தனம். அதன்படி தலித்துகள் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று என்ன பொருளில் சொல்கிறீர்கள்? பார்ப்பனர்கள் வலுத்திருந்ததாலா வென்றார்கள்? சூழ்ச்சியும், காட்டிக் கொடுத்தலும், வன்முறையும், படுகொலைகளும் நிகழ்த்தி தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் “வலுத்தவர்கள் வெல்லும்” என்று பித்தலாட்டம் செய்யக் கூடாது.

   • பார்ப்பனீய எதிரி என்னும் போர்வை போற்றி இருக்கும் ஆதிக்க சாதி பார்பனர் எதிரி அவர்களுக்கு !

    // அந்தக் கருத்தை சொன்னதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் பார்ப்பன முரடர்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்//

    தனி பட்ட முறையில் இன்னும் சாதி அடிப்படையில் பேசினால் , சாதி அடிப்படையில் ஒன்று திரள தான் செய்வார்கள் . மற்ற ஆதிக்க சாதிகள் மட்டும் என்ன செய்திருக்கும் ?

    //அதன்படி பார்ப்பனர்கள்தான் சாதி/வருணாசிரமத்தை உருவாக்குவதில் பிரதான பங்கு வகித்தவர்கள்//

    அடடே ! அதாவது சமநிலை சமுதாயத்தில் நல்லவர்கள் நிரந்த சமுதாயதி அவர்கள் வந்து கெடுத்துவிட்டார்கள் ?

    சத்திரிய ,வைசியர்களுக்கு அடிமை முறையில் வேலைக்கு ஆட்கள் தேவை பட்டார்கள் .
    மதம் என்னும் போர்வையில் குறைந்த விலை உழைப்பை அவர்களுக்கு நல்கியது பார்பனீயம் .

    அந்த குறைந்த விலை உழைப்பு தேவை இல்லை என்றால் , மற்ற சமுதாயத்தினர் எதற்காக இப்படி ஒரு முறையை அங்கீகரித்து பாதுகாத்தனர் ? இன்று வரைக்கும் பாதுகாக்கும் காரணம் யாதோ ?

    ஒருவன் ,வாங்கடா அந்த பெண்ணை கற்பழிப்போம் என்று கூப்பிட்டால் , மற்றவர்களும் சேர்ந்து அந்த தவறை செய்துவிட்டு , அவன் சொன்னதால் தான் செய்தோம் , எல்லாம் அவனால் தான் நாங்கள் நல்லவர்கள் என்று கூறினால் ஏற்று கொள்வீரா ? நல்லவர்கள் அந்த கருத்தை சொல்லும்போதே நைய புடைதிர்க்க வேண்டாமா ? எல்லோருக்கும் லாபம் என்பதால் நீ(பார்பனர் ) மத கருத்தை சொல்லு அந்த கருத்தை நான்( ஆதிக்க சாதி ) சமுதாயத்தில் அமல் படுத்துகிறேன் என்று தான் செய்து இருக்கிறார்கள்.இந்த கூட்டு களவாணி திட்டத்தில் பார்பனர்களை மட்டும் காரணம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை .

    வேறு ஒரு உவமை கூறுகிறேன் . ஸ்பானிஷ் ஏகாதிபத்திய வீரர்கள் தென் அமேரிக்கா செல்லும் போது கூடவே பாதிர்களையும் அழைத்து சென்றார்கள். இன்கா தேசத்தின் தலைவனை தனியாக சந்திக்க அழைத்தார்கள் . சிறு கூட்டத்தோடு சென்றான் தலைவன் பச்சை கொடி. அவன் கையில் முதலில் பாதிரிகளை விட்டு பைபிளை கொடுத்தார்கள் . ஏதோ பெரிய ஆயுதத்தோடு வருவார்கள் என்று நினைத்த பச்சை கொடி புத்தகத்தை பார்த்து இது ஒன்றும் செய்யாது என்று தூக்கி போட்டு விட்டான்.

    பாதிர்களோ, பச்சை கொடி சாத்தானின் ஆள் ! இறைவனை அவமதித்து விட்டான் அவனை கொன்றுவிடலாம்! என்று பச்சை கொடி காட்டினார்கள். இந்த இறை வாக்கை ஏற்று வீரர்கள் அவர்களிடம் இருந்த தங்கத்தை கொள்ளை அடித்தார்கள்.

    பாதிரிகள் சொன்னதால் தான் வீரர்கள் செய்தார்களா ?
    இல்லை தங்கம் கிடைக்கும் ஆசையில் செய்தார்களா ?

    //எந்த ஒரு விவசாயியும், விவசாயத்தில் பார்ப்பான் இறங்கினால் அவன் காலை வெட்டு என்று சொல்லவில்லை//

    அடடே ! அவன் நிலத்தை விட்டு தருவானா ? எனபது தான் கேள்வி ! திசை திருப்ப வேண்டாம்

    //. எந்த துப்புரவுத் தொழிலாளியும், பார்ப்பான் மலம் அள்ள வந்தால் அவன் கையை வெட்டு என்று விதி வகுக்கவில்லை. //

    அது என்ன பார்ப்பான் ? ஏன் ஆதிக்க சாதி செய்ய கூடாதா ? அந்த கேள்விகளை மட்டும் சமயோசிதமாக புறம் தள்ளி விட்டேரே ! ஜாதி பாசம் தடுக்குதோ !

    //அப்படி மூளை உழைப்பு செலுத்தி இந்திய சமூகத்துக்கு என்ன பங்களிப்பு செய்து விட்டான் பார்ப்பான் என்று பார்த்தால் “காயத்திரி மந்திரம்”, “சந்தியா வந்தனம்”, “ஹோம குண்டம்” என்றுதான் சொல்ல முடியும்//

    ரொம்ப சரி ! அப்படி உதவாக்கரை கல்வியை அவன் நமக்கு சொல்லி தர வில்லை என்று நாம் புலம்பலாமா ? கல்வி மறுப்பு எனபது சரியான வாதம் தானா ? ஆரிய மொழியில் நமக்கு அந்த கல்வி தேவை பட்டதா ?

    • //பார்ப்பனீய எதிரி என்னும் போர்வை போற்றி இருக்கும் ஆதிக்க சாதி பார்பனர் எதிரி அவர்களுக்கு ! //

     நான் பார்ப்பனர்களுக்கு நிகராக மேல் தட்டில் உட்கார்ந்து கொண்டு பிறர் உழைப்பை உண்டு கொழுத்த ஒரு சாதிப் பிரிவில் பிறந்தவன்தான். சாதி முறையின் பழக்கங்களையும், ஆதிக்கத் திமிரையும் பார்த்து அவமானமும், கோபமும், ஆத்திரமும் அடைந்தவன். பிற்காலத்தில், இந்தியாவில் சாதி முறை தொடர்பாக ஆய்வு செய்தவர்கள், அதை எதிர்த்து போராடுபவர்கள் பலரிடம் பேசியதிலிருந்து, கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்து அமல்படுத்தி வருகிறேன்.

     1. தனிப்பட்ட முறையிலும், குடும்ப அளவிலும் எல்லா விதமான சாதி அடையாளங்களையும் நிராகரிப்பது, அத்தகைய அடையாளங்களுடன் நடத்தப்படும் எல்லா சடங்குகளையும் புறக்கணிப்பது, அத்தகைய அடையாளங்களை தூக்கிப் பிடிப்பவர்களுடன் உறவை துண்டித்துக் கொள்வது.

     2. இந்தக் கொடூரமான, மனிதத் தன்மையற்ற, அறிவியலுக்கு எதிரான அமைப்பை உடைத்து எறிவதற்கான சமூகப் பணியில் என்னையும் இணைத்துக் கொள்வது, அதை சாதிப்பதற்கான சமூக மாற்றத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வது.

     //சத்திரிய ,வைசியர்களுக்கு அடிமை முறையில் வேலைக்கு ஆட்கள் தேவை பட்டார்கள் .
     மதம் என்னும் போர்வையில் குறைந்த விலை உழைப்பை அவர்களுக்கு நல்கியது பார்பனீயம் .

     அந்த குறைந்த விலை உழைப்பு தேவை இல்லை என்றால் , மற்ற சமுதாயத்தினர் எதற்காக இப்படி ஒரு முறையை அங்கீகரித்து பாதுகாத்தனர் ? இன்று வரைக்கும் பாதுகாக்கும் காரணம் யாதோ ?//

     பிற ஆதிக்க சாதிகள் நடத்திய வன்கொடுமைகள் பற்றி நிச்சயம் பேசுவோம். இந்தக் கட்டுரையின் பேசுபொருளான பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை, சோம்பேறித்தனத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அது வரலாற்றில் நடந்த உண்மைதான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? சமகாலத்தில் பார்ப்பனர்கள் தங்கள் அடையாளத்தை தூக்கிப் பிடிப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்? “அறிவாளி”களான பார்ப்பனர்கள் பெருமளவு வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடிப்பவர்களாக இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

     //ரொம்ப சரி ! அப்படி உதவாக்கரை கல்வியை அவன் நமக்கு சொல்லி தர வில்லை என்று நாம் புலம்பலாமா ? கல்வி மறுப்பு எனபது சரியான வாதம் தானா ? ஆரிய மொழியில் நமக்கு அந்த கல்வி தேவை பட்டதா ?//

     பார்ப்பனர்கள் அறிவை உழைக்கும் மக்களுக்கு மறுத்ததன் மூலம், உழைப்பை இழிவுபடுத்தியதன் மூலம் உண்மையான அறிவியல், தொழில்நுட்பத்தை முடக்கினார்கள் என்பதுதான் பிரச்சனை. அவர்களிடம் இருக்கும் பார்ப்பனியம் உருவாக்கிய அறிவு உளுத்துப் போன கவைக்குதவாத அறிவு, அதை பெற்றுக் கொள்ள யாரும் துடிக்கவில்லை. “இடத்தைக் காலி செய், பழைய முடைநாற்றம் பிடித்த சாஸ்திரங்களை அதிகார பலத்தின் மூலம் வலுக்கட்டாயமாக சமூகத்தின் மீது திணிக்காதே.” என்றுதான் கேட்கிறோம்.

     //அது என்ன பார்ப்பான் ? ஏன் ஆதிக்க சாதி செய்ய கூடாதா ? அந்த கேள்விகளை மட்டும் சமயோசிதமாக புறம் தள்ளி விட்டேரே ! ஜாதி பாசம் தடுக்குதோ ! //

     சாதியைப் பற்றி, இந்தியாவில் மண்டேலா போன்ற தலைமை தேவை என்று பேசுபவர்கள், அம்பேத்கரின் வாழ்க்கையையும், சாதி ஒழிப்பு தொடர்பான பணியையும், இந்து மதம் மற்றும் பார்ப்பனர்கள் மீதான அவரது கடுமையான விமர்சனங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் பற்றிய தரவுகளையும், கட்டுரைகளையும் சாதி ஒழிப்பு என்ற கண்ணோட்டத்தோடு அணுகி உள் வாங்க வேண்டும். சாதி அடையாளங்களை தூக்கிப் பிடிக்கவோ, பிற ஆதிக்க சாதிகளைக் காட்டி பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களை நியாயப்படுத்தவோ கூடாது.

     தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை வெள்ளையர்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டு, பெரும்பான்மை கருப்பினத்தவருக்கு உரிமைகள் (அரசியல் உரிமைகள் மட்டும்) வழங்கப்பட்டதற்கு நிகராக இந்தியாவில், சிறுபான்மை பார்ப்பன-பனியா ஆட்சியை ஒழித்து விட்டு பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மதத்தவர் அடங்கிய உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு பாடுபட வேண்டும்.

     • //கட்டுரையின் பேசுபொருளான பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை, சோம்பேறித்தனத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?//

      அடம் பிடிக்கும் குழந்தைக்கு யார் காரணம் ? பெற்றோரா ? குழந்தையா ? யார் மோசம் ?
      அந்த மாதரியான ஒரு சொல்ல்நிலையை கொடுத்தால் எந்த ஒரு சமூகமும் அந்த நிலையை அடையும் .

      எஜிப்து , ரோமாபுரி , அரேபியா , இந்தியா என்று எல்லா இடங்களிலும் அடிமை முறை இருந்தது .
      மனிதனின் இயல்பு நிலை சோம்பேறியாக இருந்ததில் தான் அடுத்தவர் உழைப்பை உருஞ்ச விழைந்தான் .

      எப்பொழுது பார்பனர்கள் எல்லாம் இப்படி அவர்கள் இப்படிதான் செய்வார்கள் என்று பேசுகிறீர்களோ , அப்போல்தே நீங்கள் பார்பனீயத்தின் பிடியில் விளுந்துவிட்டேர்கள் என்று அர்த்தம் .

      மனிதனை குழுவாக்கி , குழுவுக்கு ஒரு சில இயல்புகளை வகுத்து , ஸ்டீரியோ டைபிங் செய்து அதில் உயர்ச்சி இகழ்ச்சி செய்வது பார்பனீயத்தின் பண்பு .

      அதையே நீங்கள் இங்கே செய்து இருகிறீர்கள்

      //“அறிவாளி”களான பார்ப்பனர்கள் பெருமளவு வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடிப்பவர்களாக இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?//

      அக்ரேரியன் சொசைடியில் நில உரிமையாளர் தவிர மற்றவர்கள் வேலைக்கு சென்றுதான் வாழ முடியும் . வெள்ளைக்காரன் ராணுவத்தில் ,போலீசில் என்று சகல் அரசு இயந்திரத்தில் அணைத்து சமூகத்தினரும் பங்கு பெற்றார்கள் .
      இதில் வேதத்தை மனப்பாடம் செய்யும் திறன் கொண்டு இருந்தவர்கள் , ஆங்கிலத்தை படித்து அரசு வேலை பெற்றார்கள் . ஏன் முகலாயர்கள் காலத்திலும் அரசு பணியாற்றினார்கள்

      இதில் “அவங்க அப்படி ” எனபது பார்பனீயத்தின் நீட்சி

      //பார்ப்பனர்கள் அறிவை உழைக்கும் மக்களுக்கு மறுத்ததன் மூலம், உழைப்பை இழிவுபடுத்தியதன் மூலம் உண்மையான அறிவியல், தொழில்நுட்பத்தை முடக்கினார்கள் என்பதுதான் பிரச்சனை.//

      என்ன அறிவை யார் மறுத்தார்கள் ? தலித் களுக்கு மட்டும் தான் அந்த கட்டு பாடு . மற்ற சாதியினர் படிக்க தடை இல்லை . ஆனால் குல தொழில் காலத்தில் பெற்றோரிடமே கல்வி பெற்று கொண்டார்கள் . அரசு வேலை என்று ஒன்று இருந்திருக்கு வில்லை . சீனாவில் தான் முதலில் அரசு வேலைக்கு தேர்வு வைத்து எடுத்தார்கள் கி பி 600 என்று படித்ததாக நியாபகம் .

      அறவியல் தொழில் நுட்பத்தை எல்லாம் முடக்கவில்லை . கிரேக்கர்களின் கணித புத்தகங்களை மொழி பெயர்த்தார்கள் . கணிதத்தில் பூச்சியம் , நெகடிவ் நம்பர்கள் என்று சாதனை புரிந்து உள்ளார்கள் . நாம் ராமாயணத்தை மொழி பெயர்த்து விட்டு அவர்களை திட்டி என்ன பயன் ?

      • Manusmiriti has never recognized Dalits as one of the varnams and that is why they were called Avarnas or Panchamas.Sudras as a class were denied education.According to Manusmiriti,Sudras were expected to do menial jobs to Brahmins,Shatriyas and Vysyas.From time immemorial,”Agriculturists”or “farmers”in Raman”s dictionary is only rich landlords.Several times,statistics were given to state that majority of farmers in India are /were landless farm workers,marginal and small farmers.These farmers were uneducated.How they will leave their livelihood to Brahmins.In the composite Tanjore district,there were many rich Brahmin landlords.
       Thanks Raman for admitting one of the basic characteristics of Brahmanism.

      • //எஜிப்து , ரோமாபுரி , அரேபியா , இந்தியா என்று எல்லா இடங்களிலும் அடிமை முறை இருந்தது .
       மனிதனின் இயல்பு நிலை சோம்பேறியாக இருந்ததில் தான் அடுத்தவர் உழைப்பை உருஞ்ச விழைந்தான் //

       பிற நாடுகளில் இருந்த சமூக பிரிவினைக்கும் இந்தியாவின் சாதிக் கட்டமைப்புக்கும் சாராம்சத்தில் உள்ள வேறுபாட்டைப் பற்றி அம்பேத்கர் தனது கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளார் (இந்தியாவில் சாதி, சாதியை அழித்தொழிப்பது, காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த துரோகம்). இந்த சாதிக் கட்டமைப்புக்கான அடிக்கொள்ளியும், முதுகெலும்பும் பார்ப்பனர்கள்தான் என்பதையும் தர்க்கரீதியாகவும் ஆதாரங்களோடும் அவர் நிறுவியிருக்கிறார்.

       //எப்பொழுது பார்பனர்கள் எல்லாம் இப்படி அவர்கள் இப்படிதான் செய்வார்கள் என்று பேசுகிறீர்களோ , அப்போல்தே நீங்கள் பார்பனீயத்தின் பிடியில் விளுந்துவிட்டேர்கள் என்று அர்த்தம் .

       மனிதனை குழுவாக்கி , குழுவுக்கு ஒரு சில இயல்புகளை வகுத்து , ஸ்டீரியோ டைபிங் செய்து அதில் உயர்ச்சி இகழ்ச்சி செய்வது பார்பனீயத்தின் பண்பு . //

       தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு குழு, பார்ப்பனர்கள் ஒரு குழு – இரண்டுமை ஸ்டீரியோ டைப் என்று சமப்படுத்தி பேசுவது, பார்ப்பனியத்தின், பார்ப்பனர்களின் தந்திரம். வரலாற்றை மறுக்கும் சூழ்ச்சி, கொள்ளை அடித்ததை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து ஏய்க்க முயற்சிக்கும் தந்திரம். ஒடுக்கியவர்களையும், குற்றவாளிகளையும் ஒரு பக்கம், ஒடுக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் மறுபக்கம் வைத்து அதுவும் இதுவும் சரியாப் போச்சு என்று சொல்லும் கெட்டிக்காரத்தனம். அது தவறு.

       பார்ப்பனர்கள் என்று யாரெல்லாம் அடையாளம் வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் வரலாற்றுப் பொறுப்பு உள்ளது. பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. பூணூல் இருப்பது வரை, கோயில்களில், மடங்களில், நீதிமன்றங்களில், பத்திரிகைகளில், அரசியலில் (ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பிள்ளை நிறுவனங்கள்) பார்ப்பன ஆதிக்கம் இருப்பது வரை பார்ப்பனர் என்று சொல்லிக் கொள்கிற எல்லோரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பதில் சொல்ல வேண்டும்.

       அப்படி கோருவது ஸ்டீரியோ டைப்பிங் இல்லை.

       //இதில் வேதத்தை மனப்பாடம் செய்யும் திறன் கொண்டு இருந்தவர்கள் , ஆங்கிலத்தை படித்து அரசு வேலை பெற்றார்கள் . ஏன் முகலாயர்கள் காலத்திலும் அரசு பணியாற்றினார்கள் //

       ஒரு பகத்சிங்கோ, அஷ்வகுல்லாகானோ, கட்டபொம்மனோ, திப்புசுல்தானோ அப்படி செய்யவில்லை. சுயமரியாதையோடு அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார்கள், உயிர் விட்டார்கள். அறிவுத் துறையை ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட பார்ப்பனர்களுக்கு அந்த சுரணை இல்லை என்பதுதான் பேச்சு.

       //என்ன அறிவை யார் மறுத்தார்கள் ? தலித் களுக்கு மட்டும் தான் அந்த கட்டு பாடு .//

       தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் – அதாவது உழைக்கும் மக்கள் அனைவருக்கும். மொத்தம் 90% மக்கள்தொகை இந்த இரண்டு பிரிவுக்குள் வருமா? அல்லது 80%? இதை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது!

       //அறவியல் தொழில் நுட்பத்தை எல்லாம் முடக்கவில்லை .//

       நடைமுறையும், கோட்பாடும் (practice and theory) இணையும்போதுதான் அறிவியல் வளரும். அதைப் பிரித்தது, உழைப்பை சிறுமைப்படுத்தியது பல சமூகங்களில் நடந்தாலும், அதையே நிறுவனமயமாக்கி, அதை இன்றும் தூக்கிப் பிடிப்பது இந்தியாவின் பார்ப்பனியம் மட்டும்தான்.

       • //பார்ப்பனர்கள் என்று யாரெல்லாம் அடையாளம் வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் வரலாற்றுப் பொறுப்பு உள்ளது. பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.//

        உங்களுடைய நோக்கம் என்னன்னா பார்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் பிரித்து , பார்பனர்கள் மட்டும் காரணம் என்னும் தோற்றத்தை ஏற்படுத்தி ஆதிக்க சாதிகளுக்கு பாவ மன்னிப்பு கொடுப்பது.

        • //உங்களுடைய நோக்கம் என்னன்னா பார்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் பிரித்து , பார்பனர்கள் மட்டும் காரணம் என்னும் தோற்றத்தை ஏற்படுத்தி ஆதிக்க சாதிகளுக்கு பாவ மன்னிப்பு கொடுப்பது.//

         என்னுடைய நோக்கம் பற்றி ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன், சாத்திய அசாத்தியங்கள் பற்றிய விவாதங்களைத் தாண்டி சாதியை ஒழித்தல்தான் என் நோக்கம். அதனால் யாருக்கும் பாவமன்னிப்பு கொடுப்பது என்ற பேச்சே இல்லை. சாதியைத் துறந்து விட்டு அந்த பழியிலிருந்து வெளியில் வந்து விடலாமே பார்ப்பனர்கள்?

         சாதி அடிப்படையிலான, சொத்துக்களை குவித்து வைத்துள்ள மடங்களையும், ஆதீனங்களையும் கலைத்து விட்டு, கோயில்களில் பார்ப்பன ஆதிக்கத்தை விட்டு விட்டு, சாதாரண மக்களை பல விதமான சடங்குகள் பேரில் சுரண்டுவதை விட்டு விட்டு பார்ப்பனர்கள் முதலில் வெளியில் வரட்டும். தமது உணவு பழக்கத்தை, கலாச்சாரத்தை, மொழியை பிறர் மீது உமிழ்வதை நிறுத்தி விட்டு பேசட்டும். பார்ப்பனர்களை விட இந்த விஷயத்தில் பாவம் செய்தது வேறு எந்த சாதி? யாருக்கு பாவ மன்னிப்பு தேவைப்படுகிறது, பார்ப்பனர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், பிராயச்சித்தமும், தண்டனையும் தேவை.

         • மாற்றம் எனபது முதலில் நமக்குள் இருந்து தொடங்க வேண்டும் . அவன் திருந்திய பிறகு நான் திருந்துவேன் என்று கூறுவதும் நான் திருந்த மாட்டேன் என்று கூறுவதும் ஒன்றுதான்.
          பார்பனர்களை திருத்துவதற்கு முன்னாடி நாம் திருந்த வேண்டியது இல்லை . ஜாலி 🙂

          //பார்ப்பனர்களை விட இந்த விஷயத்தில் பாவம் செய்தது வேறு எந்த சாதி? //

          “பாரபனர்கள் தான் எல்லாத்துக்கும் காரணம் மத்தவங்க எல்லாம் சொக்க தங்கங்கள் .
          நான் ரொம்ப நல்லவன் ”

          சுத்தி சுத்தி ஒரே பாயிண்ட் தான் பேசறீங்க .

          //பார்ப்பனர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், பிராயச்சித்தமும், தண்டனையும் தேவை.//

          மற்ற ஆதிக்க சாதிகளுக்கு ரிவார்டு கொடுக்கப்பட வேண்டும் தானே. குறிப்பா உங்க சாதிக்கு இட ஒது கீடு வேணுமே . பாவம் பார்பனர்களால் ரொம்ப ஏமாந்து இருப்பீங்க

          • Since Brahmins were occupying the topmost position in the Varnam system,and since they were brainwashing the other Varnams,they should correct themselves first.Even today,they occupy the editorial boards of the media in India,they create public opinion on any social/political issues,and hence they are the first ones to correct their attitude.You are blaming the other reader that he revolves around the same point.You are also doing the same.

          • //மாற்றம் எனபது முதலில் நமக்குள் இருந்து தொடங்க வேண்டும் . அவன் திருந்திய பிறகு நான் திருந்துவேன் என்று கூறுவதும் நான் திருந்த மாட்டேன் என்று கூறுவதும் ஒன்றுதான்.//

           ஒரு ரூம் போட்டு உட்கார்ந்து, இதைத் திரும்ப திரும்ப ஜெபம் பண்ண வேண்டியது முதன்மையாக பார்ப்பனர்கள். ஏன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

           //பார்பனர்களை திருத்துவதற்கு முன்னாடி நாம் திருந்த வேண்டியது இல்லை . ஜாலி//

           நாம் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பொருந்தாது என்று ஏற்கனவே தெளிவாக்கியிருக்கிறேன். நான் சாதி அடையாளங்களை, அதன் ஆதாயங்களை நிராகரித்து, அத்தகைய அடையாளங்களை பராமரிக்கும் உறவுகளை துறந்து சாதி ஒழிப்புக்கு வழிவகுக்கும் சமூக மாற்றத்துக்காக வேலை செய்கிறேன்.

           ஆதிக்க சாதிகளில், ஒடுக்கிய சாதிகளில், குற்றம் செய்த/ செய்து கொண்டிருக்கும் சாதிகளில் முதலிடம் பார்ப்பனர்களுக்கு என்று ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.

           1. பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த சாதி தனக்கு என்று ஒரு மொழி வைத்துக் கொண்டு அதை தேவ பாடை மற்ற எல்லாம் சூத்திர பாடை என்று வைகிறது?

           2. பார்ப்பனர்களுக்கு நிகராக வேறு எந்த சாதி மடங்கள், கோயில்கள் பெயரில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறது?

           3. பார்ப்பனர்களுக்கு நிகராக வேறு எந்த சாதி வருணாசிரம தருமம்தான் உயர்ந்தது, அந்த காலத்திலேயே நாங்க இதை சாதிச்சோம்னு, வேதத்திலேயே விமானம் விட்டோம், விநாயகருக்கே பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம் என்று காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறது?

           4. பார்ப்பனர்களுக்கு நிகராக வேறு எந்த சாதி இசுலாமியர்கள் மீது வெறுப்பு அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.கவுக்கு பாதந்தாங்கிகளாக இருக்கிறது?

           //மற்ற ஆதிக்க சாதிகளுக்கு ரிவார்டு கொடுக்கப்பட வேண்டும் தானே. குறிப்பா உங்க சாதிக்கு இட ஒது கீடு வேணுமே . பாவம் பார்பனர்களால் ரொம்ப ஏமாந்து இருப்பீங்க//

           வடிவேலு காமடி நிறைய பார்த்திருப்பீங்க போலிருக்கு. “தம்பி அந்தப் பொண்ணை கையப்பிடிச்சு இழுத்தியா” என்று விளக்கம் கேட்டால் திரும்பவும் “என்ன கையப்பிடிச்சி இழுத்தியா?” ன்னு அப்பாவி போலவே கேட்கிறீங்களே!

 8. அட்வகட் ரங்கராஜன் பதிவிற்குநான் பதிலளித்தது , அதற்கு முன்னால் பதிவாகி உள்ளதே ! பதிவு 4 !

 9. //ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உழைப்பை கொண்டு பொருளாதார பலன் அடைந்தது பார்பனர் சமூகமா ? விவசாய சமூகமா ? எல்லோரும் கூட்டு கொள்ளை அடித்துவிட்டு இன்றைக்கு வியாக்கியானம் பேசுகிறார்கள்//

  ஆமாம் ராமன் அவர்களே!நான் உங்களுடன் ஒத்து போகிறேன் !! வெறும் வியாக்கியானம் பத்தாது! வீறு கொண்டு எழுந்து “ஓடப்பர்கள் உதையப்பர்களாக” வேண்டும் ! அப்போது தெரியும் டார்வினின் “வலிமையுள்ளது வெல்லும்” என்பது!

  • By virtue of occupying the upper most place in the hierarchy,brahmins could strive for the status quo and the shatriyas and vysyas were brain washed by them.Even today,brahmins never accept their folly.Even Chatrapathi Sivaji had to undergo religious rituals to convert himself as a shatriya, as dictated by brahmins to become the emperor.

  • எந்த அடிப்படையில் அவர்கள் ‘பிராமணர்கள்?’ வசிஸ்டனின் மூதாதையரும், விசுவாமித்ரனின் மூதாதையரும் சகோதரராம்! வசிஸ்டன் தவவாழ்வை (அம்மா ஆதரவாளர்கள் மன்னிக்க) மேற்கொண்டு ‘பிரமரிஷி’யாக, விஸ்வாமித்ரன் ஷத்ரியனாகவே அங்கீகரிக்கபடுகிறான்!

   மச்ச கந்திக்கு பிறந்த வியாசன், பிராமணனுக்கு பிறந்ததாலும், பிறந்ததிலிருந்து தவவாழ்வு(மீண்டும் அம்மா ஆதரவாளர்கள் மன்னிக்க)கொண்டதாலும் பிராமணனாகிறான்! சரி !

   குபேரனும், ராவணனும் கஷ்யபனுக்கு அசுர குல மங்கையிடமல்லவா பிறந்தார்கள்? அவர்கள் தவமியற்ற போகவில்லையே! எப்படி பிராமணனாக ஆனார்கள்?

   • மாவோயிஸ்டுகளே மாவோயிஸ்டுகளே

    நான் சொல்லுவதை கேளுங்கள்

    நீங்கள் ஒரு பக்கம் புராணம் பொய் என்பீர்கள்

    ஆனால் அதே புராணத்தை நம்புவீர்கள்

    உதாரணம் காட்டுவீர்கள் நல்லா ட்யூஷன் எடுத்தா____________

 10. நன்றி!ரங்கராஜன் ! எங்களுக்கு மட்டுமென்ன பயித்தியமா, எப்போதும் பார்பர்களைபற்றியே விளக்கி கொண்டிருப்பதற்கு? அனவரும் அர்ச்சகராக தமிழ்னாடு அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் சென்ற ‘பார்பன’ வெறியர்களை இனங்காட்ட வேண்டாமா? வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் எங்களை ஏமாளியாக்கியதை இனியும் பொறுத்து கொண்டிருக்க முடியுமா?

  எனது கம்யூனிச மோகம் அன்னிய பணத்தால் வந்ததல்ல! படிக்கும் காலத்திலேயே தொற்றிக்கொண்டது!

  உங்களது இந்துத்வா மோகம் என்ன ஆர் எஸ் எஸ் பணத்தால் வந்ததா என்றுநான் கேத போவதில்லை! மன சாட்சியை கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள் அய்யா! கட்டி போடாதீர்!

  • கவலை வேண்டாம் அஜாத சத்ரு
   மனிதர்கள் மட்டுமல்ல காக்கை குருவியும்நம ஜாதி
   கடலும் மலையும் நம் கூட்டம்

   நாம் அணைவரும் கடவுளின் குழந்தைகள்

   அணைவரும் அர்ச்சகர் ஆகலாம்

   இந்த்மதம் பல மரபுகளை பேணி வருகிறது

   அதில் செல்வாக்குள்ள வைதீகமரபுடன் உங்கள் பூசல்

   ஏனென்றால் அம்மரபில் மட்டும் தான் அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகமுடியாது
   வைதீகம் தவிர இதர இந்து மரபு வழிபாடு முறைகளில் ஏ
   ற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உள்ளனர்

   நாம் தூயமரக்கறி உணவு மட்டுமே கொடுத்து , பிரப்ப்ற்க்கு பின் உடனடியாக ஆசிரமம் கொண்டு சென்று வளர்க்கப்படும் அணைத்து சாதி குழந்தைகளையும் உரிய சமய கல்வி அளித்து அர்ச்சகர் ஆக்கலாம்

 11. ராஜாஜி ஒரு கண்டிப்பான தந்தையை போன்ற நிர்வாகி . நல்லவர் ஆனால் பிடிவாதக்காரர் வெகுஜ்னமுடிவை விட வெகுஜனத்த்ற்க்கு எதுநன்மை என நினைத்தாரொ அதை செய்தார் ஆகவே பொதுப்போக்கு திராவிட கருத்தியல்ாக்குதலுக்கு பலியானார்

  ராஜாஜி தரப்பு வாதத்தை வெளியிடாமல் ஊடகங்கள் கள்ள மவுனம் சாதிக்கின்றன

 12. கீறல் விழுந்த ரெகார்டு ஆகிய பார்பனர் எதிரி அவர்களுக்கு !

  //1. பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த சாதி
  //

  உங்க ஊருக்குள ஒருத்தன் வந்து நான் தான் புத்திசாலி , என் மொழி தான் சிறந்தது , நான் தான் உயர்ந்தவன் அப்படின்னு சொன்னா , அவன யாரும் மதிக்கவில்லை என்றால் என்ன ஆகும் .
  பயித்தியம் ஏதோ உளறுது என்று அர்த்தம் ஆகும் .

  இதையே ஊரில் கொஞ்சம் பேரு ,இவர் சொல்றது சரிதான் என்று சொல்லி , பாத பூஜை செய்தால் தான் உலருபவருக்கு ஹிக்கிஸ் போசான் கூற்றுப்படி மாஸ் ஏற்படுகிறது

  அப்படி மரியாதை கொடுத்து , அவர்களை உயர்ந்தவர்கள் ஆக்கி விட்டு , தன்னையும் உயர்த்தி கொண்டு சக மனிதனை அடிமை படுத்தினால் , யார் கொடியவர் ? ஊருக்குள் வந்தவர் மட்டுமா?

  “ஒடுக்கப்பட்ட இனம் , உயர்ந்தவர்கள் என்று கூறி கொள்ளும் இனம் ” என்று இரண்டே சாதி தான் .

  உயர்ந்தவர்கள் என்று கூறி கொள்ளும் நாம் , “அவன் சொன்னதால் தான் நான் செய்தேன்” என்பதும் , “நான் சொன்னா அவனுக்கு எங்க போச்சு புத்தி” என்பதும் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னால் நல்லவராக போடும் சிறு குழந்தை நடிப்பு.

  இதற்கு மேல் உங்களோடு விவாதம் தொடர்வதில் அர்த்தம் இல்லை .உங்கள் நடிப்பை விவரம் புரியாதவர்களிடம் தொடருங்கள்..

  முற்றும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க