Tuesday, June 18, 2024
முகப்புசெய்திசத்தியமங்கலம் டாஸ்மாக் கடைகளை மூடு - ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் டாஸ்மாக் கடைகளை மூடு – ஆர்ப்பாட்டம்

-

ன்பார்ந்த பெரியோர்களே!

சத்தியமங்கலம் கேட் அருகில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு பலர் தங்களது வாழ்வை இழந்துள்ளனர். பலர் விதவையாகியுள்ளனர்; பலர் தங்களது பிள்ளைகளைப் பறி கொடுத்துவிட்டு தவிக்கின்றனர்.

முக்கியமாக, இந்தமாதம் 7-ம் தேதியன்று, கொடியாளம் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்ற இளைஞர் குடித்துவிட்டு இருசக்கர வாகானத்தில் சென்றுள்ளார். ஏ.பி.எல். கேட் அருகே சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த டிப்பர் லாரியில் அடிபட்டு இறந்தார். இவருக்கு மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த குடும்பம் இப்போது தலைவனை இழந்து தவிக்கிறது.

sathyamangalam-tasmac-shutdown-demo-posterமே மாதம் அடையாளம் தெரியாத ஒருவர் குடித்துவிட்டு, டாஸ்மாக் கடைக்கு எதிரேயே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இப்படி இந்த டாஸ்மாக் கடை பலபேரின் உயிரைப் பறித்துள்ளது என்பதற்கு இவை சமீபத்திய உதாரணங்கள். சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, கிருஷ்ணப்பா, ஜி.திம்மாப்பா, லிங்காபுரத் தைச் சேர்ந்த இளைஞர் மஞ்சு, அண்ணாநகரைச் சேர்ந்த மோகன் என இந்த மரணப் பட்டியல் மிக நீளமனது. பாகலூர் சுற்றியுள்ள பகுதி களில் ஒவ்வொரு கிராமத்திலும் டாஸ்மாக்கினால் இறந்தவர்கள் 5 – 10 பேர் உள்ளனர். இங்குள்ள கிராமங்களில் நுழையும் போது விபத்துகளில் அடிப்பட்டு இறந்த 20 – 25 வயது கொண்ட இளைஞர்களின் கண்ணீர் அஞ்சலி பேனர்கள்தான் நம் கண்களில் படுகின்றன. அவர்களது குடும்பங்கள் படும் துன்பம் நமது கண்களை குளமாக்குகிறது.

இதுமட்டுமல்ல, டாஸ்மாக் என்பது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, திருட்டு, ரியல் எஸ்டேட் கொலைகள் என எல்லா சமூக குற்றங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. அதனால், மூடு டாஸ்மாக்கை என மக்கள் அதிகாரம் நடத்தி வரும் போராட்டங்களை நீங்கள் அறிவீர்கள். கடந்த தேர்தலில் டாஸ்மாக்கை அனைவரும் பேசும் பிரச்சனையாக மாற்றியது எமது அமைப்புதான். மே 5-ம் தேதி எமது அமைப்பு தமிழகத்தில் பல இடங்களிலும் சென்னையிலும் நடத்திய போராட்டங்கள் வீரமிக்கது.

அந்த வகையில், தற்போது தமிழக அரசு 500 கடைகளை மூட முன்வந் துள்ளது. அதில் சத்தியமங்கலத்தில் ஒரு கடை மூட இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கடையை மட்டும் மூடுவதனால் எந்தப் பயனும் இல்லை. சத்தியமங்கலம் கேட்டில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். அந்த கோரிக்கைக்காக நடத்தப்பட இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரண்டு வாரீர்! எமது அமைப்பில் உறுப்பினராக இணைவீர்!

கிராமம் கிராமமாக மக்கள் அதிகாரத்தைக்கட்டியமைப்போம்! வாரீர்! இணைவீர்!

தமிழக அரசு அறிவித்துள்ள 500 டாஸ்மாக் கடைகளில் சத்தியமங்கலம் கேட்டில் உள்ள இரண்டு டாஸ்மாக்கைகளையும் மூடக் கோரி

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 16.06.2016 மாலை 5 மணி பாகலூர் சர்க்கில் அருகில்

தலைமை : தோழர்.ரவிச்சந்திரன், மக்கள் அதிகாரம், ஒசூர்.

கண்டன உரை:
தோழர்.முருகேசன், மக்கள் அதிகாரம், ஒசூர்.
தோழர்.திம்மராயப்பா, மக்கள் அதிகாரம், ஒசூர்.
திரு.கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஊ.ம.தலைவர், சத்தியமங்கலம்.
திரு.முருகேசன், கேபிள் ஆபரேட்டர், சூடாபுரம்.
தோழர்.ஜெயராமன், மக்கள் அதிகாரம், ஒசூர்.

நன்றியுரை: தோழர்.காந்தராஜ், மக்கள் அதிகாரம், ஒசூர்.

தமிழ் நோட்டிஸ்

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம்,
ஒசூர் வட்டம்
தொடர்புக்கு: 80152 69381

sathyamangalam-tasmac-shutdown-demo-banner

తమిళనాడు ప్రభుత్వం మూయుటకు ప్రకటించిన 500 టాస్మాక్
అంగళ్ళళొ మొదటగా సత్యమంగలం గేట్ నందుండు
రెండు అంగళ్ళను మూటపెత్త కోరి
ఖండన ఆర్భాటం

16-06-2016 సాయంకాలం 05.00 గంటలకు బాగలూరు సర్కిల్ సమీపమున

అద్యక్షత: కాం.రవిచంద్రన్, ప్రజా అధికారం, హొసూరు.

ఖండన సంభాసన:
కం.మురుగేశన్, ప్రజా అధికారం, హొసూరు.
శ్రీ.గోపాల కృష్ణన్, మాజి పంచాయితి అధ్యక్షులు, సత్యమంగలం.
కాం.జయరామన్, ప్రజా అధికారం, హొసూరు, శ్రీ.మురుగన్, కేబల్ ఆపరేటర్, చూడాపురం.
కాం.తిమ్మరాయప్ప, ప్రజా అధికారం, హొసూరు.
వందన సమర్పన: కాం.కాంతరాజు, ప్రజా అధికారం, హొసూరు.

ప్రజా అధికారం
హొసూరు తాలుక

సంప్రదింపులకు: 80152 69381

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க