privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபகத்சிங் பிறந்தநாள் கூட்டம் மற்றும் களச் செய்திகள் - 30/09/2016

பகத்சிங் பிறந்தநாள் கூட்டம் மற்றும் களச் செய்திகள் – 30/09/2016

-

1. சென்னை – ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி
பகத்சிங் பிறந்த நாளில் பு.மா..மு உறுதியேற்பு

rsyf-bhagath-singh-day-chromepet-com-thamburaj-flog-hoisting
தோழர் தம்புராஜ் கொடியேற்றுதல்

குரேம்பேட்டை மற்றும் மதுரவாயல், பிளையார் கோவில் தெருவில், 28-09-2016 அன்று காலை 7.30 மணியளவில்,

  • நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்!
  • ஆர்எஸ்எஸ் பி.ஜே.பி நச்சுபாம்புகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!
  • மாணவர்கள் – இளைஞர்கள் மீது ஏவப்படும் சீரழிவு கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற முழக்கங்களை முன்வைத்து, பறை இசையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரவாயல் பகுதியின் தோழர் செந்தில் தலைமையேற்றார். பு.மா.இ.மு சென்னை கிளை இணைச்செயலாளர் தோழர் சாரதி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். அவரது உரையில், “அன்று காலனியாக்கத்திற்கு எதிராக பகத்சிங் போராட்டினார். இன்று மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும், புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவும், நாட்டையே இந்து தேசமாக மாற்ற துடிக்கும் பா.ஜ.க அரசின் கனவை முறியடிக்கவும் நாம் போராட்டக் களத்தில் இறங்கவேண்டும்” என அறைகூவல் விடுத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

குரோம்பேட்டையில் பறை இசையுடன் ஆரம்பித்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் தோழர் குமார்  தலைமையேற்று நடத்தினார். தோழர் தம்புராஜ் கொடியேற்றினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. “பகத்சிங் தேசவிடுதலை போராளியாக களத்தில் 13 வயதில் போராட துவங்கினார். பின் உழைக்கும் மக்கள் விடுதலைக்காக மாணவர்கள் – இளைஞர்களை அரசியல் படுத்தி போராட்டங்களில் ஈடுபட்டார்” என தோழர் மாரி உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

rsyf-bhagath-singh-day-hall-meetingமாலை 3.00 மணியளவில், அரங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடக்கும் இடத்தில் பகத்சிங்கின் வாசகங்கள், மற்றும் நடப்பு பிரச்சனைகள் பற்றிய ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் பல புதிய மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை தோழர் கனிமொழி தலைமையேற்று நடத்தினார். சென்னை கிளைச் செயலாளர் ராஜா, பகத்சிங்-ன் வாழ்க்கையை பற்றி மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். அதன் பின் பகத்சிங் ஆவணப்படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து ம.க.இ.க-வின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.

பகத்சிங்கின் போராட்டங்கள் பற்றியும்… நடைமுறையில் நடக்கும் பிரச்சினைகளில் நாம் எப்படி போராட வேண்டும் என்பது பற்றியும் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் உரையாற்றினார். மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். பல மாணவர்கள், “நான் பகத்சிங்-கை பற்றி இந்த நிகழ்ச்சியின் வாயிலாக முதல் முறையாக தெரிந்து கொண்டேன்” என்றனர். பின் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

2. காஞ்சிபுரம் – செப்டம்பர் 28 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்ன் 109-வது பிறந்தநாளில் உறுதியேற்போம்!

செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்தநாளையை முன்னிட்டு உறுதியேற்புக் கூட்டம் நடைப்பேற்றது. இதில் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் காஞ்சிபுரத்தை சார்ந்த புதிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை இனிப்புகளை வழங்கி துவங்கிவைத்த அப்பகுதியை சார்ந்த தோழர் துணைவேந்தன் இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்றார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், பகதசிங்-கின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, பகத்சிங்கை நம் ஹீரோ-வாக பார்த்து, அவரை போல் நாமும், நம் நாட்டு விடுதலைக்காகவும், புரட்சி செய்வதற்காகவும் களமிறங்கவேண்டும் என மாணவர்களிடம் பேசினார். இந்த உரை பல புதிய மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய மாணவர்கள் பலர் பு.மா.இ.மு-வில் தன்னை இணைத்துக் கொண்டனர். நாங்களும் மக்களுக்காக போராடுவோம் என உறுதியேற்றுக் கொண்டனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்

3. கோவை இந்து முன்னணி வன்முறையைக் கண்டித்து பு.மா.இ.மு சுவரொட்டி

kovai-rss-hindu-munnani-violence-rsyf-poster

4. நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்!
– கடலூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

காவிரி, பாலாறு, சிறுவாணி, பவானி, முல்லைப் பெரியாறு…
எல்லா நீரோட்டங்களையும் தடுக்கிறது தேசிய நீரோட்டம்!

மீத்தேன், கெயில் அழிவுத் திட்டங்களும் வடமொழியும் திணிப்பு!
கல்வி உரிமை, உயர்கல்வி, வேலை வாய்ப்பு பறிப்பு….!
தமிழன் தலையில் ஏறி மிதிக்கிறது மோடி அரசு!

ஆறு, குளம், ஏரிகளில் தூர் வாரி நீர்நிலைகளைப் பாதுகாப்போம்!
தடுப்பணை கட்டுவோம்!
நீர்நிலைகள் மீதான அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே! என்பதை நிலை நாட்டுவோம்!

பாலைவனமாகிறது தமிழகம்! செயலற்று முடங்கி விட்டது ஜெ. அரசு!
சாராய போதை, போலீசு பயம், சினிமா மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச்சமூகமே
விழித்தெழு! வீறு கொண்டு போராடு!

கருத்தரங்கம்

நாள் : 09-10-2016 ஞாயிறு மாலை 3.30 மணி
இடம் : விக்னேஷ் மஹால், மணிக்கூண்டு அருகில், மஞ்சக் கூப்பம்

தலைமை : தோழர் நந்தா, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம், கடலூர்
கருத்துரை :
திரு. இள.புகழேந்தி, மாநிலச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடலூர்
தோழர் T.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடலூர்
தோழர் சேகர், பொதுச்செயலாளர், AITUC, கடலூர்
திரு சண்முகம், செயலாளர், பெருமாள் ஏரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம், கடலூர்
திரு பூங்குன்றன், சைமா சாயப்பட்டறை எதிர்ப்பு போராட்டக் குழு, பெரியப்பட்டு
தோழர் காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தகவல்
மக்கள் அதிகாரம்
விழுப்புரம் மண்டலம் 8110815963

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க