மோடிக்கு எதிராக தெருவில் இறங்குவோம் – ஆர்ப்பாட்டங்கள்

0
9

கோத்தகிரி

நீலமலை அனைத்துத் தொழிலாளார் சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கம்) சார்பாக கோத்தகிரி ஜீப் நிலையத்தில் 21.11.2016 திங்கள் காலை 10.30 மணிக்கு தோழர். விஜயன் (மாவட்ட பொருளாளார்) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி, அரவேனு, சுற்றுவட்டார வாகனப்பிரிவு தொழிலாளார்களும், சுமைதூக்கும் தொழிலாளார்கள், கட்டுமான தொழிலாளிகள், மாணவார்கள், மாணவிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.

தலைமையுரை ஆற்றிய மாவட்ட பொருளாளார் விஜயன் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் இந்த தாக்குதல் பாசிசத்தின் தொடக்கம், மக்களை பஞ்சத்திற்கு தள்ளும் நடவடிக்கை, கார்ப்பரேட்டுக்களை காப்பாற்றும் முயற்சி இதனை நாம் முறியடிக்க வேண்டும் என்றார்.

சிறப்புரை ஆற்றிய தோழர் பாலன் (மாவட்ட பொருளாளார்) மோடியின் டிஜிட்டல் பாசிசம் மக்களிடம் உள்ள உப்பு டப்பா, கடுகு டப்பா சொற்ப பணத்தையெல்லாம் சூறையாடுகிறது. வங்கி பொருளாதாரத்தை கொண்டு வந்து பெருமுதலாளிகளுக்கும், பனியா கும்பலுக்கும், பன்னாட்டு  கார்பரேட் முதலாளிகளுக்கும் பொதுத்துறை வங்கிகளின் மூலம் மக்களின் சேமிப்பை கடன்களாக கொடுத்து மக்களை பட்டினிக்குள் தள்ள சதி செய்கிறது.  இவற்றை மறைத்து மக்களை விரலில் மை வைத்து குற்றவாளி போல் நடத்துகிறது இக்கும்பல். இந்த பொருளாதாரத் தாக்குதலை முறியடிக்க அதிகாரத்தை மக்களே கையில் எடுத்துப் போராட வேண்டும் என்றார்.

இறுதியில் வாகனப் பிரிவு துணைத் தலைவர் தோழர். புவனேஷ் நன்றியுரையாற்றினார்.

முதலாளிகளின் வரி ஏய்ப்பு, வாராக்கடன்கள் மீதான மோடியரசின் நடவடிக்கை நாடகங்களை அம்பலப்படுத்தி நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளார்களிடமும், பொது மக்களிடமும் வரவேற்பை பெற்றது.

முழக்கங்கள் :

முதலாளித்துவ தொங்கு சதைதான்
நாட்டை ஆளுது!  நாட்டை ஆளுது!
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
பார்ப்பன பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம்!
சாமானிய மக்கள் மீதான, பொருளாதார தாக்குதலை
முறியடிப்போம்! முடியடிப்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அனைத்துத் தொழிலாளர் சங்கம், நீலமலை.

______________

விருதாச்சலம்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது ! மோடியின் கருப்புப் பண நாடகம் !
உங்களை வீதிக்கு அழைத்து வந்துவிட்டார் மோடி ! வீதியில் தான் நாம் விடை காண வேண்டும் !
என்ற தலைப்பின் கீழ் விருத்தாச்சலம் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் 21.11.16 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் யோகா ஆசிரியை மங்கையர்க்கரசி, விருத்தாசலம் பகுதி மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம், ம.உ. பா மைய கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன், பு.மா.இ.மு விருதை இணை செயலாளர் தோழர் மணியரசன், உழவர் மன்ற தலைவர் பவழங்குடி தெய்வ கண்ணு, மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம், விருத்தாச்சலம்.

சந்தா