மோடியை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம்

0
8

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் கடந்த  18.11.16 அன்று மோடியின் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது, என்ற அறிவிப்பை தொடர்ந்து மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு அல்ல என்பதை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெண்கள் எனத் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். சம்புகன் தலைமையாற்றினார்.

மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர். மூர்த்தி, வாள் வீச்சு வீரர் மற்றும் டாஸ்மாக் எதிர்ப்பு போராளி தோழர்.டேவிட் ராஜ், மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் தோழர்.சித்தார்த்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், கோவை.

சந்தா