privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஏ.டி.எம் தருணங்கள் : பாரதி தம்பி

ஏ.டி.எம் தருணங்கள் : பாரதி தம்பி

-

ஏ.டி.எம். வரிசையில் எனக்குப்பின் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கையில் ஒரு 100 ரூபாய்த் தாளும் ஒரு ஏ.டி.எம். அட்டையும் இருந்தது. முகத்தில் கலக்கம். விழிகள் அலைபாய்ந்தபடி இருந்தன. நான் அவரைப் பார்த்ததும், ‘இந்த ஒரு நோட்டுதான் தம்பி இருக்கு. பொண்ணுக்கு வைரல் ஃபீவர். இருந்த காசை வெச்சு டாக்டர்கிட்ட காட்டிட்டேன். மருந்து வாங்கணும்னா 200, 300 ஆகும். அதான் எடுக்க நிக்கிறேன்’ என்றார். பரிதாபமாக இருந்தது.

chennaiவரிசை அசைந்து நகர்ந்தது. ஏ.டி.எம். காவலாளி, ஒருவர் ஓர் அட்டையை மட்டும் பயன்படுத்தி பணம் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தபடி இருந்தார். அவர், இதை உறுதியான குரலில் அழுத்திச் சொன்னால் என்ன நடக்கும் என்பதை முந்தைய நாள் வேறொரு ஏ.டி.எம்-மில் கண்டேன். அந்தக் காவலாளியை ஆங்கில மற்றும் தமிழ் கெட்டவார்த்தைகளால் திட்டினார் ஒரு நடுத்தர வர்க்க ஆசாமி. அதைப்போன்ற அனுபவம் இவருக்கும் இருக்கக்கூடும். அதனால், இவரது குரலில் பணிவு கூடுதலாக இருந்தது.

எந்த நிமிடமும் பணம் தீர்ந்துவிடக்கூடும் என்ற பதற்றம் எல்லோருக்கும் இருந்தது. எனக்குப்பின்னே நின்ற பெண் கையில் இருந்த 100 ரூபாயை இறுக்கி கசக்கிப் பிடித்திருந்தார். நாட்டின் பொருளாதாரத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கருப்புப் பணத்துக்கு எதிரான போரில் தானும் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை. இருப்பினும் நின்றுகொண்டிருந்தார். மீண்டும் அவரைப் பார்த்தேன். பேரிடர் நேரங்களில் புதிய மனிதர்களுடன் உரையாடுவதற்கு மனிதர்களுக்கு காரணங்கள் தேவைப்படுவது இல்லை.

‘புள்ளைய மாமியார்கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்ப்பா. அது பாவம், மாவு கடை வெச்சிருக்கு. கடையைப் பாக்குமா? உடம்பு சரியில்லாத புள்ளையப் பாக்குமா? நானும் பணம் எடுக்க இந்த ஏரியா பூரா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு ஏ.டி.எம்-முலயும் துட்டு இல்ல. துட்டு இருந்தா இவ்வளவு கூட்டம்’ என்றார்.

பிறகு வரிசை நகர்ந்து, எனக்குமுன்னே நான்கு பேர்களாக இருந்தபோது பணம் முடிந்துபோய் அனைவரும் வேறுவேறு ஏ.டி.எம்.களைத் தேடி வெவ்வேறு திசைகளுக்கு ஓடினோம். அந்தப் பெண் கேவலமான கெட்டவார்த்தைகளால் இந்த நாட்டின் தலைமை அமைச்சரை திட்டியபடி நகர்ந்தார்.

செல்லும் இடம் எல்லாம் செல்லாக்காசு விவகாரத்தில் ஏதேனும் பாதிப்பா என்பதை விசாரிக்கிறேன். என் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டுக்கறி கடைக்காரரிடம், நவம்பர் 14ஆம் தேதிவாக்கில் விசாரித்தபோது, பாதிக்குப் பாதி விற்பனை குறைந்துவிட்டதாகச் சொன்னார். வார நாட்களில் நாள் ஒன்றுக்கு நான்கு ஆடுகள் விற்பனைசெய்யும் நிலையிலிருந்து, வெறும் ஒரு ஆடு என்ற நிலைக்கு வந்தார். ‘இந்த யாவாரமும் ஆயிரம், ஐநூறு வாங்குறதுனால… இல்லேன்னா இதுவும் இருக்காது’ என்றவர், கடந்த நான்கு நாட்களுக்குமுன்பு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற வார நாட்களில் முழுமையாக கடையை மூடிவிட்டார்.

காலை நேரத்தில் கூட்டம் நிரம்பி வழியும் சூளைமேடு பெரியார் பாதை மீன் சந்தை வெறிச்சோடிக் கிடக்கிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைவிட வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களும் ‘500, 1000 வாங்குறோம். இல்லேன்னா இதுவும் இல்ல’ என்கிறார்கள். இது நீண்டகாலம் நீடிக்க முடியாது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கான இறுதித் தேதி டிசம்பர் 30 என்பதால், டிசம்பர் 15 தேதிக்குப்பிறகு பழைய 500, 1000 வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள். இந்த குறைந்த வியாபாரமும் முடங்கிப்போகும்.

சட்ட நீதிக்கும், இயற்கை நீதிக்கும் பொருந்தாத இந்த செல்லாக்காசு நடவடிக்கையால் பெரும்பான்மை மக்கள் ஒவ்வொரு நாளும் துன்பத்தில் உழல்கின்றனர். நான் உழைத்துச் சேர்த்த செல்வத்தை செலவு செய்யக்கூடாது என்று சொல்ல நீ யார்? இந்த அரசாங்கம் உண்மையில், இந்திய மக்களிடம் இருக்கும் பணத்தை வழிப்பறி செய்திருக்கிறது.

bharathi-thambi
பாரதி தம்பி

மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த இவர்கள், இருக்கும் வேலைவாய்ப்பையும் பறித்துக்கொண்டுவிட்டார்கள். பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்கள் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. சின்னஞ்சிறிய தொழிலகங்கள் தற்காலிமாக உற்பத்தியை நிறுத்திக்கொண்டுவிட்டன. இவற்றில் பணிபுரிந்து வேலையிழந்திருக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் சொந்த கிராமங்களுக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். எந்தப் புள்ளியிலிருந்து அவர்கள் கிளம்பினார்களோ அந்தப் புள்ளிக்கே திரும்பியிருக்கிறார்கள். பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் வெறுங்கையுடன் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இது உருவாக்கப்போகும் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும். உதிரித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கீழ்நிலை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, டிமாண்டைவிட சப்ளை அதிகரித்து, அவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்படுவதைக் காட்டிலும் கூலி குறைத்து வழங்கப்படும். இந்தப் போக்கு, கிராமப்புற பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கப்போகிறது.

இப்போதே, ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய். மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி என பல கை மாறித்தான் இந்த 10 ரூபாய். அப்படியானால், இதில் விவசாயிக்குக் கிடைப்பது எவ்வளவு? மற்ற காய்கறிகளுக்கும் இது பொருந்தும். பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கப்படும் மற்ற காய்கறிகளும்கூட, செல்லாக்காசு காரணமாக அல்லது அதைக் காரணம்காட்டி கொள்முதல் செய்யப்படும் இடங்களில் மிகக் குறைந்த விலைக்கே எடுக்கப்படுகின்றன. போட்ட முதல்கூட எடுக்க முடியாது.

இப்படி இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மிக நேரடியாக பாதிக்கக்கூடிய இவ்வளவு மோசமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ள இந்த பாஜக அரசை விமர்சிக்கும்போது நாம், அதன் முழுமையில் இருந்து மதிப்பிட வேண்டும். ‘மோடி அரசு, மோடி அரசு’ என்று விமர்சிப்பதை சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது. ஏனென்றால், மோடி என்ற நபரும் பெயரும் ஒரு முகமூடி. பின்னுள்ள காவி கும்பல்தான் உண்மையான சூத்திரதாரி. நாளை இந்தப் பிரச்னை கைமீறிப் போகும்போது, தங்கள்மீது பழிவராமல் இருக்கவும் மக்களின் கோபத்தை ஆற்றுப்படுத்தவும் மோடி என்ற பிம்பத்தை பலி கொடுக்கத் தயங்க மாட்டார்கள். மொத்தப் பிரச்னைக்கும் காரணம், தனி ஒரு நபர்தான் என்பதைப்போல சிக்கலை சுருக்கி, தங்கள் இருப்பைத் தக்கவைக்க முயற்சிப்பார்கள். எனவே, இதை மோடி அரசு என்ற வரம்பைக் கடந்து உற்று நோக்கவேண்டியிருக்கிறது.

பாரதி தம்பி

கட்டுரையாளர் குறிப்பு: பாரதி தம்பி, பத்திரிகையாளர். நியூஸ் 18 தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பிரிவின் பொறுப்பாளராக இருக்கும் இவர் ‘தவிக்குதே தவிக்குதே ’- ‘கற்க கசடற – விற்க அதற்குத் தக’- ‘குடி குடியை கெடுக்கும்’ எனும் நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘கற்க கசடற – விற்க அதற்குத் தக’ மாற்றுக் கல்வி ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூலாகும்.

நன்றி:

  1. கிராமப்புறங்களில் விதை நெல்லோ அடி உரமோ நகரத்து கடைக்காரரிடம் கடனாக விவசாயி எடுத்துக் கொண்டு அறுவடை முடிந்ததும் பணத்தை கொடுக்கும் உறவுமுறை முன்பு நடைமுறையில் இருந்தது. இப்போது அறுவடை முடிந்ததும் வட்டிபோட்டு கடனைக் கொடுக்கவேண்டியுள்ளது. இது அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். மனித முகம்பார்த்து தொழில் உறவுகொள்ளும் சாதாரன மக்கள் மனதையே மனித பண்பிலிருந்து மாத்தி விட்டது பணம். மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் மனித உணர்வின் நிலை?

  2. மொத்தப் பிரச்னைக்கும் காரணம், தனி ஒரு நபர்தான் என்பதைப்போல சிக்கலை சுருக்கி, தங்கள் இருப்பைத் தக்கவைக்க முயற்சிப்பார்கள்/// அதாவது தமிழ்நாடு மின் பற்றாகுறைக்கு ஆற்காடு வீராசாமி பெயர் வைத்தமாதிரி.

  3. இது உறுதியான நடவேடிக்கை… பாரதி தம்பிக்கு தக்காளி விவசாயியும், காய்ச்சலில் உள்ள குழந்தையும் பெரிதாக இருக்கலாம்… ஆனால் நாட்டின் முன்னேறத்திற்க்கு இருக்கும் 120 கோடியில் ஒரு 50 கோடி பேர் இறந்தாலும் தவறு இல்லை… இனி வினவு போன்ற சில்லரைகள் ஓலமிட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை… சம்பாரிக்கும் எல்லா _____இனி வரி கட்ட வேண்டியது தான்… மோடியின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் மக்களிடம் கருத்து கேட்டு வெளியிட வினவு முயல வேண்டும்… சும்மா கீழே கிடப்பதை எடுத்து தின்ன கூடாது….

    • இந்தியன் என்ற பெயரில் இருக்கு பிசாசே உனக்கு குடும்பம் ஒன்று இருந்து நீ தினசரி கூலி வேலை செய்யும் தகப்பன் நிலையில் சிந்துத்து பார் , புளித்த ஏப்பம் விடும் ஒனக்கேல்லாம் பசி ஏப்பத்தின் சத்த்ம் எகத்தாளாமாக தான் இருக்கும், ஆர் எஸ் எஸ் என்ற தேச தூரோக கூட்டதின் அடிவருடியாக தான் நீ இருப்பாய் என்று என்னுகிறேன்.

    • This is a sample from NAKKHEERAN. Specially for you Indian.

      பதிவு செய்த நாள் : 30, நவம்பர் 2016 (23:4 IST) மாற்றம் செய்த நாள் :30, நவம்பர் 2016 (23:11 IST)

      இறந்த மனைவி உடலுடன்
      ஏடிஎம் வரிசையில் காத்திருந்த முதியவர்

      ராஜஸ்தான் மாநிலம் நோடியா கிராமத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வருபவர் முன்னிலால் ( வயது 65). இவரது மனைவி பூமதி. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நோயின் தாக்கத்தால் கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார். மனைவியின் உடலை அடக்கம் செய்ய முன்னில்லாலால் வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை .இதனால் மிகவும் சிரமபட்டு உள்ளார். அருகில் உள்ள வங்கியில் அவரது மூத்த மகன் கணக்கில் ரூ 16 ஆயிரம் போடபட்டு இருந்தது ஆனால் அதை எடுக்க முடியவில்லை.

      இதனால் மனைவி உடலுடன் அந்த வங்கியின் முன்னால் அமர்ந்து விட்டார். இது குறித்து முன்னி லால், ‘’வங்கியின் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் நின்று இருந்தேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை. நான் வங்கி ஊழியர்களிடம் எனது மனைவியின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் எடுக்க வேண்டும் என கெஞ்சி கேட்டு கொண்டேன். ஆனால் யாரும் எனது வேண்டு கோளை ஏற்று கொள்ள வில்லை. நான் பொய் கூறுவதாக எண்ணினர். அன்று வங்கியை பூட்டியும் விட்டார்கள். இறுதியில் அவரது மனைவியின் இறுதி சடங்கிற்கு ஒரு போலீஸ் அதிகாரி ரூ.2500 வழங்கி உள்ளார். மேலும் ஒரு அரசியல்வாதி ரூ. 5000 வழங்கி உள்ளார்.

    • எருமை மாடே, சோத்த தான் தின்னுறியா இல்ல பீய தின்னுறியா? வெளிநாட்டுக்காரங்க மோடின்னுற கோமாளியோட கூத்த பார்த்து சிரிப்பா சிரிக்குறாங்க, நீ 50 கோடிப் பேர சாக சொல்லுறியா? உனக்கெல்லாம் மன சாட்சியே இல்லையா? ஏன் இப்படி?

      முகம் காட்ட முடியாத ______…! என் பெயர பார்த்திட்டு பாக்கிஸ்தான் போன்னு சொல்லுறது, என் மதத்தை இழுக்குறதுன்னு உங்க சில்லறை புத்திய காட்டினே கொன்னே புடுவென்.

    • 50 கோடி மக்களின் உயிர் உங்களுக்கு துச்சமாக போய்விட்டது . உங்களுக்கும் பா .ஜா .க கும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை .

    • கையில உள்ளத தட்டிப் பறிச்சு மக்களைப் பசியிலும் பட்டினியில் தள்ளும் நடவடிக்கைக்குப் பேரு முன்னேற்றமா? அப்படிபட்ட முன்றேற்றத்த நான் கேட்டேனா? வெயில்லையும் மழையிலயும் வயித்துப் பசிக்காக நான் சம்மாரிச்சக் காசை வழிபறி செய்யற உன்னை ஒழிக்காம நான் எதுக்குடா சாகனும்?

  4. Mr Raja Narasimha Vivek,please do not waste your time and energy in responding to a psycho who calls himself as “Indian”.He will vomit something against every Vinavu article and come back only when next article appear.Regular Vinavu readers just ignore this creature..

    • பொதுவாக கழிப்பறைகளில் கிறுக்கப்படும் சித்திரங்களும் வாசகங்களும் பாலியல் வக்கிரமாக இருப்பதை பலரும் கண்டு முகம் சுழித்திருப்போம்.அதையே பார்த்து பழகிய பின்னர் அதனை எழுதுகிறவர்களை ஒரு மன நோயாளி என்கிற அளவிற்கு நாம் புரிந்து கொண்டு அதனை காணாமலே கடந்து போகின்ற அளவிற்கு மாறி விடுவோம்.ஆனால் நான் ஒரு முறை படித்த வாசகம் எழுதியவன் தன்னுடைய தாயையே வக்கிரமாக எழுதியதாக இருந்தது.இதனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.எப்படி ஒரு மனிதன் தனது தாயை அப்படி வக்கிரமான மன நிலையில் எழுதியிருக்க முடியும் என்கிற அருவருப்புடன் கூடிய ஆச்சர்யமும்,வருத்தமும் பல நாட்கள் நீடித்திருந்தது.அதன் பின்னர் இன்றைக்கு 50 கோடி பேர் செத்தால் தான் என்ன என்று ஒரு மனிதன் தனது சொந்த நாட்டு மக்களையே துச்சமாக நினைத்து எழுதியதை நினைத்து மனம் ஆற்றுப்படுத்தவே முடியவில்லை.வினவு வாசகர்கள் அந்த மிருகத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று நீங்கள் சொல்வது சரியானதே என்றாலும் வினவே இந்த ’குப்பையை’ இங்கே போட ஏன் அனுமதிக்க வேண்டும் என்றே கேட்க தோன்றுகிறது.வினவு தான் முடிவு செய்ய வேண்டும்

      • வினவு அனுமதித்ததால் தான் ,நாம் இவர்களை அடையாளம் காண முடிகிறது , மானுடன். விஷ காலிகளை வேரறுக்க முதலில் அதை நாம் கண்டு கொள்ள வேண்டுமே.

        • இல்லங்க அது சரியில்ல.பி ஜே பி யி தேசிய செயலர் பொறுப்பில் இருக்கிற எச்சி ராஜா முதல் அவ்வப்போது பி ஜே பி க்கு இரவல் குரல் கொடுக்கிற சமூக ஆர்வலர்/பொருளாதார நிபுணர்/அரசியல் பார்வையாளர்கள் என முகமூடிகளை மாற்றி மாற்றி அணிகிற நபர்கள் வரை எந்தளவிற்கு அறிவு நாணயமின்றியும் மக்கள் விரோதமாகவும் சிந்திக்கிறார்கள் பேசுகிறார்கள் என்பது அனைவருக்கும் புரிந்தது தான்.தனது கட்சியின் எம்பிக்கள் மந்திரிகள் பேசுவதையே சொந்த கருத்து என்று அப்படியே தனித்து கழட்டி விடக்கூடியவர்கள் தான் பிஜேபியினர்.இந்த நிலையில் இண்டியன் என்ற புனைபெயரில் வருபவர் வழிய விடுகிற வாய் கொழுப்பிற்கு எப்படி பொறுப்பேர்ப்பார்கள்? நல்ல விவாதமாக மலரக்கூடிய ஒரு பதிவின் பின்னூட்டங்கள் பெரும்பாலும் இண்டியனுக்கு பதில் தரக்கூடிய வழியில் போவது உண்மையில் யாருக்கு இழப்பு?தளத்தை நிர்வகிக்கிற பொறுப்பில் இருக்கிறவர்கள் வசவுகளை மட்டுமே எழுதக்கூடிய புறந்தள்ளப்பட வேண்டிய கருத்துக்களை மட்டறுப்பது தான் சரி என்பதே எனது நம்பிக்கை.

  5. //ஆனால் நாட்டின் முன்னேறத்திற்க்கு இருக்கும் 120 கோடியில் ஒரு 50 கோடி பேர் இறந்தாலும் தவறு இல்லை//
    எவ்வளவு மட்டமான கருத்து! இருபது நாளாகியும் பணத்தை வைக்கத் துப்பு இல்லை! இதில் எல்லோரும் தியாகம் செய்ய வேண்டுமாம்!

  6. இண்டியன் முதலில் நீ சாவு.அப்புறமா உன் குடும்பத்தாரை எல்லாம் சாகச் சொல்லு அப்புறமா காவிக் கிரிமினல்களை எல்லாம் சாகச் சொல்லு.மோடியை ஆதரிக்கிற பார்ப்பனத் திருக் கூட்டத்தைச் சாகச் சொல்லு. நீ மோடிக்குப் பிறந்தவன்.அதனால் தான் அவ_ சொல்லாம செய்யுறத நீ சொல்லுற.50 கோடி பேரு சாக மாட்டோம்.உங்களுக்குக் கொள்ளி வைக்க நாங்க வேணுமில்ல.அப்புறமா உங்க சாவுக்கு நாங்க எழவு கொண்டாடுறோம்.உழைக்கும் மக்களோட சாவு எவ்வளவு கனமானதுன்னு எங்களுக்குத் தெரியும்.உங்க சாவு லேசானதுன்னு உங்களுக்குத் தெரியாது.உன்ன எல்லாரும் எப்படி வாழ்த்துறாங்க பார்த்தியா?ஆனா நீ எல்லாத்தையும் உதுத்திட்டு ______தின்னு உயிர்பொழைக்கிறவன்.

  7. இண்டியன் அப்பா இண்டியன் வினவ விட்டுப் போயிறாதப்பா! நாங்கள்லாம் அறம் பாட ஆள் கிடையாது. நீ தானா தீப் பிடிக்கிறியான்னு பார்க்கனும்கண்ணா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க