privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபா.ஜ.க - மோடி கும்பலை தூக்கி ஏறிவோம் ! சோழிங்கநல்லூர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க – மோடி கும்பலை தூக்கி ஏறிவோம் ! சோழிங்கநல்லூர் ஆர்ப்பாட்டம்

-

பா.ஜ.க – மோடி கும்பலின் கருப்புப் பண ஒழிப்பு மோசடியை காறித்துப்புவோம் ! வங்கிகளை முற்றுகையிடுவோம் !

பத்திரிக்கை செய்தி 

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்,

(rev) stage banner

வணக்கம்.

எமது தொழிற்சங்கத்தின் சார்பில் 24/12/2016 சனி மாலை 4 மணிக்கு. OMR சாலை, சோழிங்கநல்லூர் சந்திப்பில் பாஜக-வின் மோடி அரசு நவம்பர் 8, 2016 அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்துள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

பணமதிப்பு நீக்கத்திற்கான காரணமாக கருப்புப் பணத்தை ஒழிப்பது கள்ள நோட்டை அழிப்பது, தீவிரவாதத்தை ஒடுக்குவது என்று காரணம் சொன்னது அரசு. இப்பொழுது வங்கி ஏடிஎம் வாசலில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் காக்கவைத்து அலைக்கழித்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை  இப்பொழுது அரசு பணமற்றப் பொருளாதாரத்தை உருவாக்கும் நடவடிக்கை என கோருகிறது. நமது நாட்டில் 90% கிராமப்புற மக்கள் இந்த பணமற்றப் பொருளாதார நடவடிக்கையால் பாதிக்கப்படுவர். உழைக்கும் மக்கள் தங்கள் சேமிப்பு மற்றும் சம்பளத்தையும் எடுக்க முடியாமல், குடும்பத்தை நடத்த வழியின்றி அல்லல்பட்டு வருகின்றனர். மக்களிடம் பணப்புழக்கம் என்பது முழுமையாக அற்றுப்போய் கொடிய பஞ்சத்தால் பட்டினிச்சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்பட்டது போன்ற ஒரு செயற்கையான மாபாதகமாக அரசின் இந்த நடவடிக்கை உள்ளது.

மேற்கண்ட அரசின் செயலைக் கண்டித்தும், இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் எமது தொழிற்சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தினை, தங்கள் ஊடகத்தில்பதிவு செய்து வெளியிட்டு உதவ வேண்டுமாய் கோருகிறோம்.

தங்கள் உண்மையுள்ள
இல.தெய்வீகன்
தலைவர்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதியஜனநாயகத்-தொழிலாளர்முன்னணி.
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்.

110/63.இரண்டாம்தளம்,
மாநகராட்சிவணிகவளாகம்,
என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,சென்னை-24

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க