Saturday, June 25, 2022
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் இராணுவத்தை எதிர்த்து காஷ்மீர் மாணவிகள் போர் !

இராணுவத்தை எதிர்த்து காஷ்மீர் மாணவிகள் போர் !

-

காஷ்மீர் இளைஞர் ஒருவர் மீது இந்திய இராணுவம் காட்டுமிராண்டித தனமாகத் தாக்கிய வீடியோப் பதிவு ஒன்று, காஷ்மீர் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு கண்டனம் தெரிவித்து போராடிய பல்வாமா அரசு கல்லூரி மாணவர்களுக்கும் காஷ்மீர் போலீசுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசுக்கல்லூரி வாயிலில் சோதனைச் சாவடி அமைத்துப் போராடிய மாணவர்களைக் கைது செய்ய இராணுவத்துடன் காத்திருந்தது போலீசு. அதற்கு எதிராக ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்களும் போலீசு கும்பலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டும் மாணவர்களை ஒடுக்க நினைத்தது இராணுவம். இதில் சுமார் 20-க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வாமா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் பெல்லட் குண்டுகளால் தனது கண் பார்வை இழந்த மாணவர்களே.

இதனைத் தொடந்து ஏப்ரல் 17 அன்று காஷ்மீரில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியரும் இந்திய இராணுவத்திற்கு எதிராகவும், காஷ்மீர் போலீசுக்கு எதிராகவும் பெருந்திரளாகக் களத்தில் இறங்கிப் போராடினர். மாணவர்களின் உணர்ச்சிமிகு போராட்டமும், பல்வேறு இடங்களில் போலீசு மற்றும் இராணுவத்துடனான மோதலும் ஏப்ரல் 17 முழுவதும் நீடித்தது. இப்போராட்டத்தில் காஷ்மீர் மாநில கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் களத்தில் இறங்கி அதிகாரத் திமிர் பிடித்த போலீசு மற்றும்  இராணுவத்திற்குத் தக்க பதிலடி கொடுத்தனர்.

இது வெறும் வாகனத்தின் மீது விடப்படும் உதை அல்ல – காஷ்மீரை ஒடுக்க நினைக்கும் இந்திய வல்லாதிக்கத்திற்கு அடிபணியாத வீரத்தின் உதை

இந்திய இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்கும் பள்ளி மாணவிகள் – கனல் நெருப்பினில் – குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?.

இராணுவத்திடம் துப்பாக்கிகள் – காஷ்மீர் மக்களிடம் வெறும் கற்கள்!

பல்கலைக்கழக மாணவி – இக்ரா சித்திக் – காஷ்மீர் போலீசு மற்றும் துணை இராணுவத்தின் கொடுந் தாக்குதலில் இவரது மண்டை ஓடு பிளந்து, மூளையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

வீதிகளில் இறங்கிய காஷ்மீரத்து – அஸ்ரத் மஹல்கள். (அஸ்ரத் மஹல் – 1857 முதல் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற வீராங்கனை)

போலீசின் மிரட்டலுக்கு பயப்படாமல் போராடும் மாணவிகள்!

ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் உள்ள எஸ்.பி. பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவியர்களின் போராட்டத்தை ஒடுக்க உபயோகிக்கப்பட்ட தண்ணீர் பீரங்கி!

போராடும் மாணவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் காஷ்மீர் பெண்கள் – இதைப் பார்க்கையில் மெரினா போராட்டத்தின் இறுதி நாளில் சென்னை மீர்ஜாப் பேட்டையில் போலீசுக்கு பயப்படாமல் போராடிய இளைஞர்களுக்கு நீரும் – உணவும் கொடுத்து உதவிய அப்பகுதி முசுலீம் பெண்களே நினைவுக்கு வருகிறார்கள்!

பேரணியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக முழக்கமிடும் பள்ளி மாணவிகள்!

இதோ – தங்களது உரிமைகளை வென்றெடுக்க கையில் சிக்கியதை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ள காஷ்மீரின் வீரமகள்

இந்திய இராணுவத்தின் அதிகாரத் திமிருக்கு தமது தாய் மண்ணின் கற்களால் பதில் சொல்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவிகள் !

போலிசின் கண்ணீர்ப் புகையையும், மிளகாய்த் தூள் குண்டையும் சுவாசித்ததால் மயக்கமடைந்த மாணவி ஒருவர்!!

ஆயிரக்கணக்கான காஷ்மீர மக்களை கொன்று காணாமல் போகச் செய்து, சிறையில் அடைத்து, ஒடுக்கி வரும் இந்திய அரசிற்கு – கற்களால் பதிலளிக்கும் மாணவிகள்!

– நந்தன்
நன்றி அல்ஜசிரா
மூலக்கட்டுரை: Female Kashmiri students lead anti-India protests

 1. சும்மா ஏதாவது தமாஷ் பண்ணாதே வினவு…. இவக கல்லெறியும் வீராங்கனைகளா???? முகத்தைகூட வெளியே காட்ட முடியாத மதத்தில் சுதந்திரம் பற்றி பேசக்கூட ********அருகதை கிடையாது….. இதையும் ஒரு மிகக்பெரிய புரட்சியாக சித்தரித்து வினவு எழுதியிருப்பது வேடிக்கையாக உள்ளது… … பல முறை போரிட்டும் இந்தியாவின் மசுரைக்கூட பிடுங்க முடியாத பாகிஸ்தானும் இவர்களும் ஒன்று…. இந்தியாவின் அடுத்த அணுகுண்டு சோதனை மோடி தலைமையில் “காஷ்மீரில்” தான் நடக்க வேண்டும்…..

  • நீ வேணும் என்றால் உன் ********** என்னைப்பார் என் அழகைப்பார் என்று தெருவில் அலைய விடு எல்லோரும் கண்குளிர காணட்டும் வெட்கம்கெட்டவனே

 2. ****************** மாநிலம் முழுவதும் செல்லரித்து போய்விட்டது… காஷ்மீர் இந்தியாவின் துயரம்… அவர்களை இந்திய ராணுவம் கொண்டுதான் ஒடுக்க வேண்டும்… இது அவர்களாக கேட்டு வாங்கிக்கொண்டது.

 3. ஒன்றும் மட்டும் நிச்சயம்********************தீய சக்தி****** பிஜேபியை ஆதரிப்பதை மக்களுக்கு தவிர வேறு வழியில்லை.

  ********************

  கம்யூனிஸ்ட்கள் ஒழிக
  கம்யூனிசம் ஒழிக
  ***************************

 4. Even before india and indian military came they are throwing stones ,,, infact they have throwed stones against even akbar ,, this happened in 1586…. what vinvu say for this

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க