Thursday, December 12, 2024
முகப்புசெய்திவணக்கம் ! பாஜக-வின் இன்றைய குற்றச் செய்திகள் !

வணக்கம் ! பாஜக-வின் இன்றைய குற்றச் செய்திகள் !

-

செய்தி #1: எடியூரப்பாவின் இட்லி வடை தீண்டாமை!

தலித் மக்கள் வீட்டில் சாப்பிடுவதாக நாடகமாடும் எடியூரப்பா

ர்நாடக மாநிலத்தில் 2018-ம் ஆண்டு வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவரும், முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சனிக்கிழமை சித்ரதுர்கா மாவட்டம்  கெலக்கொட்டி என்னும் பகுதிக்குச் சென்ற எடியூரப்பா ஒரு தலித் வீட்டில் உணவு உண்டதாக புகைப்படமும் வீடியோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு எதிராக அப்பகுதி தலித் இளைஞர் ஒருவர், எடியூரப்பா அந்த வீட்டு உணவைச் சாப்பிடாமல், அருகில் உள்ள பெரிய ஓட்டலில் இருந்து இட்லி, வடையை வரவழைத்துச் சாப்பிட்டதாகக் கூறி அவர் மீது தீண்டாமைக் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுக்கமுடியாமல், எடியூரப்பாவிற்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும் ஆகையால் தான் அருகில் உள்ள ஓட்டலில் இருந்து வாங்கி வரச் செய்து உண்டார் என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கிறது கர்நாடக பாஜக.

என்ன தான் புனுகு போட்டுத் தடவினாலும், உள்ளே படிந்திருக்கும் பார்ப்பனிய முடைநாற்றம் வெளிவராமலா போய்விடும்?

செய்தி#2: அருந்ததி ராயை கொல்லத் துடிக்கும் பாஜக பெருச்சாளிகள்!

டந்த 2017 ஏப்ரல் மாதத்தின் மத்தியில், காஷ்மிரில் இந்திய அரசாங்கம் நடத்திய இடைத்தேர்தலை அம்மாநில மக்கள் புறக்கணித்தது நினைவிருக்கலாம். அந்தக் கடுப்பில் அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய இராணுவம், காஷ்மீர் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. அனைத்திற்கும் உச்சமாக, இருசக்கரவாகனத்தில் தனது தம்பியுடன் சென்று கொண்டிருந்தவரை பிடித்து இராணுவ வாகனத்தின் முன் பகுதியில் அமர வைத்து, அவரை மனித கேடயமாகப் பயன்படுத்தி ஒவ்வொரு ஊராக ஊர்வலமாகச் சென்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இந்திய இராணுவம். இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இக்கொடுஞ்செயலைச் செய்த இராணுவ அதிகாரிக்கு “இராணுவ ஊழியர்களின் தலைமைப் பாராட்டுப் பத்திரம்”, வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஆனந்த், அவரது தனிப்பட்ட திறனுக்காகத் தான் அவ்விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் காஷ்மீரியை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது இராணுவ விசாரணைக்குப் பிறகு தெரிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் குஜராத் மாநிலம், அகமதாபாத் கிழக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பரேஷ் ராவல், தனது ட்விட்டர் பக்கத்தில் “கல் வீசுபவர்களை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்ததற்குப் பதிலாக எழுத்தாளர் அருந்ததிராயை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைக்கலாம் எனக் கூறியுள்ளார். இதற்கு அவரது ட்விட்டர் பக்கத்திலேயே கடும் எதிர்ப்பைப் பார்வையாளர்கள் பதிவுச் செய்துள்ளனர்.

இவர்கள் என்னதான் கட்டி வைத்தாலும், சுட்டு விரட்டினாலும் காஷ்மீர் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. சாதாரண கல்லடியைக் கூட பெல்லட் குண்டுகளால் எதிர் கொள்ளும் இந்த வீராதி வீரர்களுக்கு இப்படி பாராட்டும் பதக்கம் கொடுத்துத்தான் தக்க வைக்க வேண்டியிருக்கிறது.

செய்தி#3  உத்திரப் பிரதேசத்தில் பாஜக-வின் மிரட்டல் மதமாற்றம்!

.பி. மாநிலம் ஃபைசாபாத் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை(21/05/2017) அன்று 22 முஸ்லீகளை ‘கர்வாப்சி’ மூலமாக இந்து மதத்திற்கு மாற்றியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த கைலாஷ் சந்திர ஸ்ரீவத்சவா முன்னிலையில் ஆரிய சமாஜம் கோவிலில் இந்நிகழ்வு நடைபெற்றது. அதில் பேசிய கைலாஷ், முஸ்லீம்கள் எவ்வித ஆதாயமும் எதிர்பார்க்காமல் இந்து மதத்திற்கு ‘திரும்பியுள்ளதாக’க் கூறியுள்ளார். அதாவது அவர்கள் அரபுலகின் பணத்தாலோ மேற்குலகின் மாவு, அரிசிக்காகவோ மதம் மாறவில்லையாம். பிறகு மாறவில்லை என்றால் பாஜகவால் கொல்லப்படுவதற்கு பதில் மாறினால் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கூட அம்மக்கள் சிந்தித்திருக்கலாம்.

பார்ப்பனிய இந்து மதத்தின் சாதியக் கொடுங்கோன்மையை சகிக்க முடியாமல் தான் இந்தியாவில் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறினர். இந்துக்களாக மாறிய இந்த முஸ்லீம்களுக்கு நடத்தப்படும் புனிதப்படுத்துதல் சடங்கின் மூலம் ஒருவர் இந்துவாகி விட்ட பின் தொக்கி நிற்கும் கேள்வி ஒன்று தான். அவர் என்ன சாதியில் சேர்க்கப்படுவார் ?. ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஸ்வயம் சேவக்குகள் மதம் மாறிய முஸ்லீம்களின் வீட்டில் பெண் கொடுத்து, பெண் எடுப்பார்களா?

சாதியால் வாழும் பார்ப்பனியம் ஒரு போதும் மக்களை மதமாற்றம் செய்ய விரும்பாது! இருப்பினும் இந்த முன்னாள் முஸ்லீம்கள் அனைவரும் அங்கே பாஜக-வின் கண்காணிப்பில் மற்றுமொரு ஒடுக்கப்பட்ட சாதியாக வாழ வேண்டும்!

செய்தி # 4: பகவத் கீதை படிக்கவில்லையென்றால் பள்ளிகள் நடத்த முடியாது!

டந்த 2017 மார்ச் மாதத்தில் பார‘தீய’ ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி பாரளுமன்றத்தில் ஒரு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். அம்மோசாதாவில், “பகவத் கீதையில் ‘நேர்மையான சிந்தனைகளும், நீதி போதனைகளும்’ இருப்பதால், அதனை சிறுபான்மையினர் பள்ளிகளைத் தவிர அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாய நீதிநூலாக சேர்க்க வேண்டும் என்றும் அவ்வாறு பகவத் கீதையை நூலாகக் கொண்டுவர மறுக்கும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டும்” என்று அம்மசோதாவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதாவின் மீதான விவாதத்தை அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிபாரிசு செய்திருப்பதாக பாராளுமன்ற செய்திக் குறிப்பு வெளியாகி இருக்கிறது.

வரலாற்றை மாற்றினார்கள், இந்தி – சமற்கிருதத்தை திணித்தார்கள், சென்னை ஐஐடியில் அடக்குமுறை, ரோகித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ அடக்குமுறை, பூனா திரைப்படக் கல்லூரி முதல்வர் பிரச்சனை, மெரினா எழுச்சி போன்ற பாஜகவை பதற வைத்த போராட்டங்களை எப்படி தீர்ப்பது? சின்ன வயதிலேயே கீதையின் சாதி நீதியை சொல்லிக் கொடுத்து மிரட்டி வளர்த்தால் பிறகு பிரச்சினை ஏதும் இல்லை அல்லவா?

தொகுப்பு: நந்தன்

மேலும் படிக்க:

  1. Opinion Poll, குறுஞ்செய்தி பாணியில் கண்ணோட்டத்துடன் செய்திகள்…
    வினவின் புதுப்புது வடிவங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

    புது வடிவங்கள் அருமையாக உள்ளன.
    எல்லா அன்றாட நிகழ்வு செய்திகளும் இந்த வடிவத்தில் வந்தால் இன்னும் சிறப்பு.

  2. இந்த செய்தி தமிழ் இந்துவில் இன்று வந்து அதற்க்கு மறுமொழியாக நம்ம மணிகண்டனுக்கு மறுபிறப்பு ஒன்று கருத்து பதிகிறது “வாழையில் சாப்பிட்டால் தப்பா.”.இதெல்லாம் ஒரு குத்தமாக செய்திபோட்டு பிஜெபி மேல் உள்ள வெறுப்பை தீர்த்துக்கொள்கிறார்களாம்.அதற்க்கு ஆதரவாக பலஆயிரம் பாயிண்ட் கள் வேறு வந்து விழுந்திருக்கிறது.ஆக இவனுங்களுடைய மூளை எவ்வளவு செல்லரித்திருக்கிறது..செய்தி பொய் அவதூறு என்று சொன்னாலும் பரவாயில்லையே..விருந்தளித்தவர்களே”தாங்கள் தயார் செய்த உணவையும் உண்ணவில்லை தங்கள் வீட்டு பாத்திரத்தையும் பயன்படுத்தவில்லை உயர்தர சைவ ஓட்டலில் வாங்கிவந்த உணவை வாழை இலையில் வைத்து தின்றுவிட்டு தலித்தோடு எட்டியூரப்பா குலாவினார் “என்று செய்தி வெளிய்ட்டதாக சொல்கிறார்கள்.இது அத்தனையும் புறம் தள்ளிவிட்டு “வாழையிலையில் சாப்பிட்டால் தவறா ” என்று கிறுக்கு விளையாடுகிறான் களே பிஜேபி ஆதரவாளன் அத்தனை பேருமா அச்சில் வார்த்ததுபோல் மணிகண்டனாய் இருப்பான் கள்.அட கேவலப்பட்டவன் களா …இதுக்கு ஏன்டா தேசியம் தேசப்பற்று வந்தேமாதரம்னு மூக்கிக்கிட்டு திரியிறீங்க.நேரிடையா பார்ப்பணன் பார்பனீயம் பார்ப்பணபற்றுனு கத்த வேண்டியதுதானடா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க