Sunday, July 6, 2025
முகப்புபார்வைஇணையக் கணிப்புஎது ஆபாசம் ? மோடியின் கோட்டா - பிரியங்காவின் குட்டைப் பாவாடையா ?

எது ஆபாசம் ? மோடியின் கோட்டா – பிரியங்காவின் குட்டைப் பாவாடையா ?

-

பிரதமர் மோடி ஜெர்மன் நாட்டிற்குச் சென்ற போது இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தது நினைவிருக்கலாம். அப்போது பிரியங்கா சோப்ரா குட்டைப் பாவாடையுடன் குந்தியிருந்து பிரதமருடன் தீவிர உரையாடலில் இருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

பிரதமருடனே இப்படி குட்டைப் பாவாடையுடன் இருக்கலாமா என்று சில பல கண்டனங்கள் வந்த பிறகு, வேறு வழியின்றி பிரியங்காவும் “நாங்கள் வீட்டிலேயே இப்படித்தான் சாதரணமாக இருப்போம்” என்று அம்மாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

ஒபாமா இந்தியா வரும் போது மோடி அணிந்த பத்து லட்ச ரூபாய் கோட்டும் பலருக்கு நினைவிருக்கலாம். அந்தக் கோட்டில் நரேந்திர மோடி என்ற பெயர் சரிகையாக பொறிக்கப்பட்டிருக்கும்.

ஆகவே எது ஆபாசம் என்பதே இன்றைய கருத்துக்  கணிப்பு!

ஆபாசத்தில் விஞ்சி நிற்பது மோடி நாமம் பொறிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கோட்டா? பிரியங்கா சோப்ராவின் குட்டைப் பாவாடையா ?