Monday, March 27, 2023
முகப்புபார்வைஇணையக் கணிப்புகருத்துக் கணிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது ?

கருத்துக் கணிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது ?

-

கொடியங்குளம் ‘கலவரம்’, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் போராட்டத்தின் போது அரசியல் அரங்கிற்கு வந்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி சென்றாலும் அவரால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளவுக்கு கூட சாதிக்க முடியவில்லை. இறுதியாக ஆண்டையான ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் தஞ்சம் அடைந்து அடையாள அரசியல், இந்துத்துவ அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்.

அதன் உச்சமாக அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பாஜக – அதிமுக கும்பலை காப்பாற்றும் அடியாட்பணியை மேற்கொண்டு வருகிறார். அனிதா ஏன் தற்கொலை செய்தாள், வேறு படிக்கலாமே, அவளை உச்சநீதிமன்றம் கொண்டு சென்று வழக்காட வைத்தவர்களே தற்கொலைக்கு காரணம் என்று நாக்கூசாமல் பேசுகிறார். இணையம் முழுவதுமே தமிழக மக்கள் அவரை திட்டித் தீர்த்தாலும் கிருஷ்ணசாமி அவற்றை சட்டை செய்வதில்லை. அமித்ஷா மூலம் ஏதாவது மாநிலங்களவை உறுப்பினர், தமிழகத்தில் ஏதாவது ஒரு எம்பி, பிறகு அமைச்சர், ஐநா சபை உரை என்று கனவில் மிதக்கிறார். தற்போது அவரது மகளது மருத்துவர் படிப்பிற்காக ஜெயாவிடம் சிபாரிசு செய்து இடம் வாங்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த தகவல் குறித்த உண்மை நிலவரம் நமக்குத் தெரியாது என்றாலும் கிருஷ்ணசாமி அப்படி சீட் வாங்க கூடியவர் என்பதில் ஐயமில்லை. அதனால்தான் அவர் நீட்-ஐ ஆதரிக்கிறார்.

இன்று அவர் சார்ந்த தேவேந்திர குலமக்களே அவரை காறி உமிழ்கின்றனர். முழு தமிழகமுமே நீட்டை எதிர்த்தும், மோடி – எடப்பாடி அரசுகளை கண்டித்தும் போராடி வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் கிருஷ்ணசாமியை இறக்கி அவதூறுகளை வீசி வருகிறது.

போகட்டும், டாக்டர் கிருஷ்ணசாமியின் அடையாளம் இனி என்னவாக இருக்கும்?

தேவேந்திர குல வேளாளர்களின் விடிவெள்ளியாக போற்றப்படுவார்

ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் அடியாளாக அறியப்படுவார்

 

 1. தன் பிள்ளைகளை எப்படி மருத்துவர் ஆக்கினார் இவர்.எவ்வித எதிர்பார்ப்பில் மத்தியஅரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்.

 2. எல்லா அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் எப்படி மருத்துவ கல்லூரி இடங்களை பெற்றனர் என்பது மருத்துவ கல்வி இயக்குனரகம் மற்றும் மருத்துவ பல்கலைக் கழகங்களில் நீண்ட நாட்கள் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்ட பல அதிகாரிகளுக்கு அத்துப்படியான ரகசியம்.தமிழிசை அக்கா அவர்கள் ”தமிழுக்கு தொண்டாற்றிய” அவர்கள் அப்பாவிற்கு ”கிடைத்த” ஒரு விருதினால் இடம் பெற்றவரென்பது பலரும் சொல்லும் தகவல்.எல்ஜி எனப்படும் முன்னால் மதிமுக அவைத்தலைவருக்கு இத்தகைய வழியில் தான் வாரிசுக்கு ஜெயலலிதாவிடம் கேட்டு இடம் வாங்கி கொண்டார்.தமிழக அரசு நுழைவுத்தேர்வு நடத்திய போது அதில் அதிகபட்ச மார்க் போட்டு ஆளாளுக்கு பங்கு போட்டது அதிகம். நிறைய அரசு உயரதிகாரிகள் தங்களது வாரிசுகளையெல்லாம் மருத்துவராக்கியது இப்படித்தான்.என்றைக்கு கட் ஆப் முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க ஆரம்பித்ததோ அதிலிருந்து தான் முறைகேடுகள் நின்றன.அதற்கு பிறகு தனியார் மருத்துவ கல்லூரியின் நிர்வாக இடங்களில் கட்சிகளின் கோட்டா, அரசு அதிகாரிகளின் கோட்டா, நீதித்துறையின் கோட்டா என்றெல்லாம் பல கோட்டாக்கள் உருவாகி அவர்களின் கனவையெல்லாம் நனவாக்கியது. நாஞ்சில் சம்பத் போன்ற கூலிக்கு பேசும் ஏழை கட்சிக்காரர்களுக்கு அம்மாவின் கருணையால் பொத்தேரி கல்லூரியில் இடம் கிடைத்தது இப்படித்தான்.கிருஷ்ணசாமி வாரிசுகூட எந்த வருடத்தில் இடம் பெற்றவர், எந்த கல்லூரியில் படித்தவர் என்று விபரம் தெரிந்தால் அவர் எந்த கோட்டாவில் இடம் வாங்கினார் என்பது தெரிய வந்துவிடும்.

 3. இது டாக்டர் கிருஷ்ணசாமி எதிராக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல.பழந்தமிழ்க்குடியான மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் வெளியேற்றம் எனும் குரல் ஓங்கி ஒலிக்கும் இந்நேரத்தில் மள்ளர்களை அரசியல் போராட்ட கூலிகளாக பயன்படுத்திய தலித்,போலி கம்யூனிச,போலி தமிழ் தேசிய,திராவிட சூழ்ச்சிகாரர்களுக்கு தலையில் பேரிடியாய் விழுந்துள்ளது.இதனால் பட்டியல் வெளியேற்றத்தை நீர்த்து போகச் செய்ய நினைத்து நேரம் பாரத்து டாக்டர் கிருஷ்ணசாமியை சாடுகின்றனர்.எவர் தடுத்தாலும் பட்டியல் வெளியேற்றம் உறுதி

 4. தனிமனித தாக்குதல் கூடாதென்று விதியே வைத்து விட்டு டாக்டர் கிருஷ்ணசாமி மீது தனி மனித தாக்குதல் ஏன்? அதிபுத்திசாலிகளே

  • டாக்டர் விவாதத்தில் எப்படி பேசுகிறார் என்று பாருங்கள்…தனி மனித தாக்குதல் பத்தி நீங்களெல்லாம் பேசுவதுதான் வேடிக்கை. கிருஷ்ணசாமியை விமர்சனம் செய்தால் வாட்ஸ் அப், அவரது அடிப்பொடிகள் முதலில் கேட்பது, நீ என்ன சாதி என்பதுதான்….

   • மள்ளர் சமூகம் விழிப்பு கொண்டு பட்டியல் வெளியேற்றம் நோக்கி செல்லும் போது அதனை முன்னெடுத்து செல்லும் டாக்டர் கிருஷ்ணசாமியை சாடும்நீங்கள் எப்படி தேவேந்திரராய் இருக்முடியும் என்று நீங்கள் தலத்துகளின் அடிவருடியாய் இருப்பீர்களோ என நினைத்து அப்படி கேட்கின்றனர் போல

 5. இன்றுமுதல் நீ, எச்சி.ராஜ நிர்மலா தமிழிசை ராதாகிருஷ்ண இலகணேச அர்ஜீன்சம்பத்த அமித்ஷகேடி சுப்ரமண்ய கிருஷ்ணசாமி என்று கேவலமாக அழைக்கப்படுவாய்.

 6. Dr.KRISHNASWAMY IS A GREAT LEADER . FUTURE TAMILNADU POLITICS IS IN DEVENDRAKULA VELALAR HANDS …LONG LIVE DR.KK.
  Vinavu , pl don’t do cheap things ..Scrutinuze Dr words , humanity presents in his words …but u people doing politics over dead body …

 7. When did people scold him?he is dynamic thinker .he gave the solution.the reason behind the death of my sister is low quality quality education given by dmk and admk .dmk and admk members have more medical colleges if they like to stop that why they r all commercialised medical seat ? Y did they give my sister medical seat.my deep condolences to my Tamil family but real killer should be punished

 8. Unka kudupthula pirachinai illamal irukka Namma smuthaia uyatha thiraavita katchia nammi payan illa samutha (pillay) uyathanum Vera vazhi illa Ethan ariyathavan en samutha illa

 9. எம் பி என்பதுதான் அவரது கனவு என்றால் அதை வேறு வழியில் எப்போதோ அடைந்திருப்பார்,
  இவரைவிட மக்கள் செல்வாக்கு உள்ளவரல்ல திருநாவுக்கரசு!!
  தமிழக அரசியலில் வஞ்சிக்க பட்ட சமூகத்தின் பிரதிநிதி என்கிற வகையில் கரைசேர்க்க வழி தேடுகிறார்,
  அவரது அரசியல் முடிவுகள் தவறாக இருக்கலாம், நோக்கமே தவறானது எனசொல்ல முடியாது.

  • இதுதான் உண்மை. தன் மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்ற மத்திய அரசின் உதவியை நாடுகிறார். இந்த விஜயத்தில் கருத்துக் கூறாமல் இருக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 10. பட்டியல் வெளியேற்றத்தை சீர் குலைக்கும் நோக்கத்தோடு செயல்படும் சமூக விரோதிகளின் ஒப்பாரிகள் தான் ,டாக்டர் மீதான இந்த கருத்து தாக்குதல். எத்தனை தலித்திய வாதி முட்டுக்கட்டை போட்டாலும், டாக்டர் பட்டியல் வெளியேற்றத்தை தேவேந்திர குல வேளாளர்களுக்கு பெற்றுத்தர வேண்டும். இதுவே உண்மையான தேவேந்திர குல வேளாளர்களின் உள்ளக்குமுறல்.

 11. நக்கிப்பிழைக்கும் ****

  உன்னையும் நம்பி ஒரு கூட்டம்

  இவனையெல்லாம் நடுவீதியில் நிற்க வைத்து ***********

  தமிழ்நேசன்

  த.Hகாஜி.

 12. சிவப்பு பச்சை நிறத்திற்கு நாங்களும் உரிமப்பட்டவர்களே!சமுதாயத்தை சார்ந்தவர் என்ற முறையில் பேட்டியளித்திருந்தீர் என்றால் பேட்டியை மறுபரிசீலனை செய்யும்.அனிதாவின் மரணம் திசை மாறக்கூடாது.பாவம் அக் குழந்தை…1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதா மருத்துவப் படிப்புக்குத் தகுதியில்லாதவள் என்றால் வேறு யார் மருத்துவப் படிப்பிற்குத் தகுதியானவர்கள்? பதில் வேண்டும்.

 13. தமிழகமே மாணவ போராளிகளால் சிவக்கிறது.இவர் ஏபிசிபிடிஇஎப் ஆபீசர்ஸ்ச வச்சி விசாரிங்கன்னு மர்டர் பண்ணவன் மன்றத்திலேயே மனு போடுறாரு.இவரு வெறும் கிருஷ்ணசாமியா?இல்லை பேண்ட்டு போட்ட நிர்மலாசீதாராமன் மாமியா?

 14. டாக்டர் அவர்களின் கருத்து என்பதை புரிந்து பேசுங்கள் என்று மற்றவர்களிடம் கூற நாம் முயற்சி எடுக்க ணே்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க