Saturday, September 18, 2021
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் கருத்துப் படம் : மார்க்சியம் X மதம்

கருத்துப் படம் : மார்க்சியம் X மதம்

-

பார்க்காதே – கேட்காதே – பேசாதே என்கிறது கடவுள் நம்பிக்கை !
பார் – கேள் – பேசு என்கிறது மார்க்சியம் !


படம் : வேலன்

இணையுங்கள்:

 

   • அண்ணே

    16 : 125 ன் படி அழகிய முறையில் விவாதிக்கலாம்ண்ணே

    விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! அல்குர்ஆன் 16:125

    • தம்பி, இந்த படம் கூட அழகிய முறையிலும், விவேகத்துடனும், விவாதிக்கிறது ராசா! நம்பரை போட்டு இழுத்தது ஒரு வலை என்பதறியாதிருக்கும் இத்தம்பியை பிதாவே மன்னியும்!

   • அண்ணே

    25:73 ன் படி சிந்திக்காமல் எதனையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதுண்ணே

    وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا

    இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள். அல்குர்ஆன் 25:73.

     • மூலதன நூலிருந்து இந்தப் பக்கத்தில்மார்க்ஸ் இப்படி சொன்னார்
      எனச் சொல்வதில்லையா ? அதுபோலண்ணே

      சிந்திக்க கூடாது என்கிறது மதம் என்று நீங்க சொன்னதிற்கு
      மதத்தின் மூலப் புக்கிலிருந்தே சிந்திக்க சொல்கிற வசனங்கள் இருக்குனு
      சொல்ல வந்தேண்ணே

    • சிந்திப்பதைப் பற்றி மதவாதிகள் பேசுவது சிறந்த நகைச்சுவை தான் .

     எந்த வசனத்தை எடுத்துப் போடுவது என்று சிந்திப்பதைப் பற்றி சொல்லவில்லை ஹைதர் அலி. அறிவியல் ரீதியாக சிந்திப்பதைப் பற்றி பேசப்படுகிறது.

     அல்லா, மணலைத் திரட்டி மனிதனைச் செய்தான் என்று கூறும் உங்களுக்கும், அந்தக் காலத்துலேயே நாங்க பிளாஸ்டிக் சர்ஜரியையும், டெஸ்ட் டியுப் பேபியையும் கண்டுபிடிச்சுட்டோம்னு சொல்றதுக்கும் என்ன வித்தியாசம் பாய் ?.

     பாவம் ,, .. சிந்திக்கிறத பத்தி எல்லாம் புள்ள பேசுது..

 1. ஹைதர் அலி நண்பர்,
  ஒரு நண்பர் அண்மையில் பதிவிட்டது போல், அமெரிக்காவில் எல்லோரும் பீற்றும் கருத்து ‘சுதந்திரத்தை’ வைத்து எப்படி ஒன்றும் புடுங்க முடியாதோ அதே போல் மதவாதிகளோடு அறிவியல் ரீதியாக விவாதிக்க முனைவது. பிரயோஜனம் அற்றது (atleast எங்களுக்கு, நீங்க அதை வீடியோ எடுத்து எங்கெல்லாம் காசு வாங்குகிறீர்களோ தெரியாது) விவாதம் என்பது அர்த்தம் உள்ளதாக பயன் உள்ளதாக இருக்கவேண்டும். உதாரணமாக, கேன்சருக்கு காரணம் மரபா புறக்காரணிகளா எனும் விவாதம் பயனுள்ளதாக இருக்கும். அதை விடுத்து ஏற்கனவே மில்லியன் கணக்கான வருட பரினமத்தில் உயிர் அடைந்த நம்ப முடியா சிக்கலையும் விளைவுகளையும் ஒரு கடவுள் சொந்தம் கொண்டாட கத்துவது பிரயோஜனம் அற்றது.

 2. இல்லாத சரசுவதி நதி குறித்த இந்துத்துவ கும்பலின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் விதமாக ஒரு சர்வதேச தரம் வாய்ந்த ஆராய்ச்சி கட்டுரை இந்த வாரம் நேச்சர் என்னும் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளது. இது குறித்து தமிழில் ஒரு கட்டுரையை உங்கள் தளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  • உங்களை போன்ற ஆட்கள் ஏன் பொய் பேசி கொண்டு திரிகிறீர்கள் என்று தெரியவில்லை.. nature இணையதளத்தில் மிக தெளிவாக சரஸ்வதி இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.

   The Nd and Sr isotopic composition of sediments from our Dhordo core site in the Great Rann of Kachchh suggests that a large Himalayan or Sub-Himalayan Saraswati-like river may have discharged into the Arabian Sea until 10 ka

   https://www.nature.com/articles/s41598-017-05745-8

   • மணி முழுவதும் படிக்கவும்.

    //The Nd and Sr isotopic composition of sediments from our Dhordo core site in the Great Rann of Kachchh suggests that a large Himalayan or Sub-Himalayan Saraswati-like river may have discharged into the Arabian Sea until 10 ka. However, our study also shows that radiogenic isotope fingerprinting of the GRK sediments is unlikely to detect a gradually drying Saraswati-like river after that time, due to contamination with sediments from the Thar Desert and/or the Indus. Alternatively the Thar may have been the dominant sediment source along with the Indus for the entire post-glacial history of the GRK. Future studies should concentrate instead on geophysical imaging, dating and geochemical fingerprinting of subsurface deposits from infilled channels along potential river courses in the Thar Desert. However, the Holocene sedimentary evolution of the Great Rann should be better explored to understand its role in Harappan and historical coastal habitation.//

    • மாட்டு மூளை மணிகண்டன் மட்டும் அல்ல அவர் சார்ந்த rss ,பிஜேபி வகையறாக்கள் அனைவருமே அரைகுறைகள் என்பதனை மணி நிருபணம் செய்துகிட்டு இருக்கார்.

 3. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை , எல்லாம் தானாக வந்தது உருவானது என்றல் ஏன் இப்போ அப்படி நடக்கவில்லை ? குரானில் பல இடங்களில் நீங்கள் சிந்திக்கவேண்டாமா? சிந்திப்போருக்கு பல அத்தாச்சிகள் இருக்கிறது என்று காணலாம் , இஸ்லாம் எந்த வரையிலும் சிந்திக்காதே என்று சொல்லவில்லை , பல அறிவியல் சாதனங்கள் , பல அறிவியல் கண்டுபிடிப்புகள் இஸ்லாமியர்களால் கண்டு கிடைக்கப்பட்டுள்ளது , வினவே அல்ஜஸிரா இணையதளத்தின் வீடியோவை வெளியிட்டு இருந்தது

  • அஷாக் பாய்,

   குரங்கிலிருந்து மனிதன் வந்தான்னு சொன்னது தப்புன்னும் யாரும் ப்ரூஃப் பண்ணலை. ஆனா குரான் சொல்லுற மாதிரி மணலைக் குழைச்சு மனுசன செய்ய முடியாதுன்னு சயின்ஸ் ப்ரூஃப் பண்ணிடுச்சு.

   டார்வின் தியரி பத்தி பேசுறதுக்கு முன்னாடி, டார்வின் என்ன சொன்னாருன்னு படிச்சுட்டு வந்தீங்கன்னா ”ஏன் இப்போ அப்படி நடக்கவில்லைன்னு” கேள்வி கேட்க மாட்டீங்க ..

   பல சாதனங்கள் இசுலாமியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை யாரும் இங்கு மறுக்கவில்லை. ஆனால் அது அந்தக் காலத்துலயே குரானுல எழுதுனது கிடையாது.. நீங்களும் அப்படி சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்.
   மனுசன் கண்டுபிடிச்சான். கடவுள் இல்லை. சுருக்கமா சொல்லனும்னா கடவுளே இல்லை.
   எல்லா மதமும் பழைய பஞ்சாங்கத்தை தூக்கிப் பிடிச்சுட்டு தான் இருக்கும். அப்போ தான் உங்க கடவுளை ஹோல்டு பண்ணிக்க முடியும் பாய்..
   சோ. . . தாங்கள் தங்கள் குரானை வேறு இடத்தில் ஓதவும்.

   • மணலை நானோ நீங்களோ குழைத்து உருவாக்க முடியாது , இறைவன் உண்டாக்கினான் என்றுதான் குரான் கூறுகிறது , அதை யாராலும் இப்போ நிரூபிக்கமுடியாது , மேலும் மண்ணில் உள்ள எல்லா உலோகமும் மனிதனின் உடலில் உள்ளதே அதற்கான அத்தாச்சி ,
    டார்வின் ஏன் இப்ப நடக்கவில்லை என்பதை நீங்கள் நம்பும் போது , குரானை நாங்கள் நம்புவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் எல்லா பொருட்களின் பெயரையும் ஆதமுக்கு (அலை) சொல்லிக்கொடுத்தேன் என்று குரானில் உள்ளது , உலக மக்கள் அனைவரும் ஆதமின் மகன் என்னும் போது குரான் சொல்வனதும் உண்மைதான், மனிதன் கண்டு பிடித்தான் உண்மைதான், அதற்க்கான பொருட்கள் எங்கே இருந்து வந்தது? அந்த அறிவை யார் கொடுத்தது , மீண்டும் உலகம் தானாக உண்டானது என்றால் ஏன் வேலைக்கு போகிறீர்கள்? வாயை துறந்து கொண்டு உட்காருங்கள் சாப்பாடு வந்து விழுகிறதா? என்று பார்ப்போம்

    • குரங்கின் உடலில் கூட மண்ணில் உள்ள எல்லா உலோகமும் உள்ளது..
     எல்லாத்தையும் அல்லா மண்ணில் இருந்து படைச்சாருன்னா அந்த மண்ணை எதுல இருந்து படைச்சாரு?

     அறிவை அல்லா தான் குடுக்குறாருன்னா, பொறக்கும் போதே எல்லா குழந்தையும் அறிவோட இல்லையே, வளர வளர தானே அறிவும் வளருது? என்ன காரணமா இருக்கும்? பொறக்குற எல்லா குழந்தையையும் அல்லா முஸ்லீமா பொறக்க வைக்கலையே என்ன காரணமா இருக்கும்? ஏவாள் செய்த பாவமா?

 4. அசாக்,
  புவி உருவாகியது 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு, உயிர் உருவாக்கத்துக்கு ஊக்கியாக செயற்பட்டதாக கருதப்படும் சயனோபாக்டீரியாக்கள் கிட்டத்தட்ட 3.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பே உருவாகியுள்ளன, மிக எளிய மூலக்கூறுகளின் யுககணக்கான விளையாட்டு தான் ‘உயிர்’
  மூன்று பில்லியன் வருடங்கள் என்பது மிக மிக நீண்ட காலம் அசாக், நாம் எளிதாக பில்லியன் தானே என்று கடந்து விடுகிறோம், 3 ௦௦௦ ௦௦௦ ௦௦௦ வருடங்கள் . யோசித்து பாருங்கள் ‘உயிருக்கு’ எத்தனை காலம் இருந்திருக்கிறது அனைத்தையும் சோத்தித்து பார்க்க. இன்னும் அதேயளவு காலத்தை நம் சூரியனால் வழங்க முடியும். இன்று நீங்கள் ”இறைவன்’ உருவாக்கியது என சொந்தம் கொண்டாடும் உயிரின் மிரள வைக்கும் சிக்கல் இந்த இயற்கையின் யுக கணக்கான எண்ணற்ற TRIAL AND ERROR இன் பயன்தான்.

  குரங்கில் இருந்து மனிதன் கப்பென்று வந்து குதிக்கவில்லை அசாக், டயனோசர்களால் பயந்து பயந்து வாழ்ந்த நம் பாலூட்டி முன்னோர்களில் இருந்து பிரியும்போது ஒரு கிளையாகி போனவர்கள்தான் குரங்குகள். ஒவ்வோர் இனமும் தோன்ற மில்லியன் கணக்கான வருட பரிணாமம் தேவைப்பட்டது. வெகு முன்பே ஒரு தோழர் சொன்னது போல் உயிரியல் படித்து பாருங்களேன் இண்டரெஸ்டிங் ஆ இருக்கு.

  வெளியில் கொட்டிகிடக்கும் எண்ணற்ற கோள்களில் என்னென்ன பாதையை பரிணாமம் தேர்ந்து எடுத்ததோ ? இதெல்லாம் கொஞ்சம் விட்டத்தை பார்த்து யோசித்தால் பரவசம் தரும், முயற்சித்து பாருங்க பாய்.

  1400 வருஷம் 1400 வருஷம் முன்னாடி என கும்மியடிக்கும் சிலருக்கு, ஒரு சிறிய கதை,

  பிரபஞ்சத்தின் கணிக்கப்பட்ட வயதை (13.8 பில்லியன் வருடங்கள்) ஒரு ஆண்டு கேலண்டர் ஆக மாற்றினால்,

  ஜனுவரி 1 நள்ளிரவு – பெருவெடிப்பு
  அகஸ்ட் 31 – சூரியதொகுதி மற்றும் புவியின் தோற்ற்றம்
  செப்டெம்பர் 21 – முதல் உயிர்க்கலம் தோற்ற்றம்
  டிசம்பர் 17 – கடலில் மட்டும் சிறு தாவர, பிராணிகளாய் இருந்த்த உயிர் பல்வேறு பெரும் தாவர விலங்குககாய் வெடித்து பல்கி பெருகியது. முதல் கடல் உயிரினம் கரைக்கு ஏறியது. பெரும் காடுகள், டைனோசர்கள், பறவைகள் , பூச்சிகள் என்பவை டிசம்பர் இறுதி வாரத்திலேயே பரிணமித்தவை.

  டிசம்பர் 28 – முதல் பூ பூத்தது.

  டிசம்பர் 30 மு.ப 6.24 – டைனோசர்களை அழித்த விண்கல் மோதியது.

  டிசம்பர் 31 பி .ப 11.00 – மனித இன தோற்ற்றம்!!
  டிசம்பர் 31 பி .ப 11.59 – முதல் ஓவியம் வரையபட்டது (ஆதிமனிதன் குகை சித்திரம்)

  டிசம்பர் 31 பி .ப 11.59.20 – விவசாயம், மந்தை வளர்ப்பு, கிராமங்கள்தொடங்கப்பது
  டிசம்பர் 31 பி.ப 11.59.46 – எழுதி வைக்க பழகினர் மனிதர். இலிருந்து உள்ள வெறும் 14 செக்கன்களே பதியப்பட்ட வரலாறாகும்!!

  மோசஸ் பிறந்தது 7 நொடிகளுக்கு முன்,
  புத்தர் 6, ஏசு 5 நொடிகளுக்கு முன். முகமதுவும் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கும் குர் ஆனும் தோன்றியது 3 வினாடிகளுக்கு முன். அமெரிக்க கண்டங்கள் இருப்பதாக அறியப்பட்டது இறுதி 2 வினாடிகள் கூட இல்லை, இறுதி கணத்தில் தான் கலிலியோ முதன் முதலில் தொலைக்காட்டி மூலம் விண்ணை பார்த்தார்.

  அந்த இறுதிக்கணத்தில் தொடங்கிய அறிவியல் அந்த கணம் முடிவதற்குள் நிலவில் கால் வைக்க செய்துவிட்டது, சிந்தியுங்கள் நண்பர்களே.

  • அருமை! அருமை!! கடுமையான பணிச்சுமை மற்றும் மன உளைச்சல்களுக்கு மத்தியில் தோழர் களின் விவாதங்கள் இதமளிக்கின்றன.

  • நீங்கள் சொல்வது எல்லாம் “கருத்தப்பட்டால்” , உண்மை இல்லை , யூகத்தின் அடிப்படையில் பேசுபவருக்கு என்னால் பதில் சொல்ல முடியாது

  • 13.8 பில்லியன் வருடங்கள் நிரூபிக்கவும் , முடியவில்லை என்றால் கதை சொல்வதை நிறுத்தவும்.

 5. மூடர்களின் கவனத்திற்கு, (கடவுளை நம்புவனை மூடர்கள் என்று சொல்வதால் நானும் அந்த பதத்தையே உபயோகிக்கிறேன்)
  1. உலகம் தானாக உண்டானது என்றால், நீங்கள் ஏன் வேலைக்கு போகிறீர்கள்? தானாக சாப்பாடு வரும் என்று இருக்க வேண்டியது தானே ?
  2. இறைவனால் எல்லாம் ஆகும் என்று நம்பும் போது மணலை வைத்து மனிதனை உண்டாக்குவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல
  3. மனிதன் அம்மாவின் கருவறையில் குழந்தையாக இருக்கும் முன்னர் அப்பாவின் விந்தணுவில் இருந்தான், ஆனால் அதே அப்பா சிறிய பிள்ளைகளாக இருந்த போது எங்கே இருந்தான் ? அப்படியே கேட்டுக்கொண்டே போனால் முடிவில் ஒரு மனிதனை நோக்கி பயணம் தொடரும் , அப்ப அந்த மனிதன் யார்? உங்கள் அறிவியலால் ஏன் கண்டறியப்படவில்லை ?
  4. மனிதன் எப்படி குரங்கில் இருந்து பிறந்தான் ? இன்று செய்முறை மூலம் விளக்கினால் தான் நம்ப முடியும் (எப்படி மண்ணின் இருந்து மனிதன் வந்தான் என்பது போல்)
  5. உங்களால் விளக்கமுடியாததை நிரூபித்து காட்ட முடியாததை உண்மை என்று நம்பும் போது , மற்றவரை மட்டும் ஏன் செய்து காட்ட சொல்கிறீர்?
  6. 55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
  55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. இந்த குரான் ஆயத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும்.

  • ஆஷாக் என்னும் அறிவாளிக்கு,

   //// 1. உலகம் தானாக உண்டானது என்றால், நீங்கள் ஏன் வேலைக்கு போகிறீர்கள்? தானாக சாப்பாடு வரும் என்று இருக்க வேண்டியது தானே ? ///

   உலகை உங்கள் அல்லா உருவாக்கினான் என்றால் நீங்கள் ஏன் வேலைக்கு போகிறீர்கள். அல்லாவே சாப்பாட்டை வயித்துக்குள் சேர்த்து விடுவான் என இருக்க வேண்டியது தானே.. அப்படி வயித்துக்குள்ள சோறு போடுறதுக்கு அல்லாவுக்கு வக்கு இல்லையா ? ஐயோ பாவம் ..

   /// 2. இறைவனால் எல்லாம் ஆகும் என்று நம்பும் போது மணலை வைத்து மனிதனை உண்டாக்குவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல ////

   தான் உருவாக்குன மனுசனோட வயித்துக்குள்ள தானா சோறைக் கொண்டு போயி சேக்குற வழி தெரியாத அல்லா, மணலை வைத்து மனிதனை உருவாக்குனான்னு சொன்னா, இதெல்லாம் நம்புற மாதிரியா பாய் இருக்குது ? #நம்புனா_தான்_சோறு

   /// 3. மனிதன் அம்மாவின் கருவறையில் குழந்தையாக இருக்கும் முன்னர் அப்பாவின் விந்தணுவில் இருந்தான், ஆனால் அதே அப்பா சிறிய பிள்ளைகளாக இருந்த போது எங்கே இருந்தான் ? அப்படியே கேட்டுக்கொண்டே போனால் முடிவில் ஒரு மனிதனை நோக்கி பயணம் தொடரும் , அப்ப அந்த மனிதன் யார்? உங்கள் அறிவியலால் ஏன் கண்டறியப்படவில்லை ? ///

   இந்த வெங்காயத்தை எல்லாம் அறிவியல் கண்டுபிடிச்சிடுச்சு, நீங்க மொதல்ல உங்க தலைய குரானுக்குள்ள இருந்து எடுத்து அறிவியல் புக்குக்குள்ள தேடிப் போயெல்லாம் நுழைக்கத் தேவையில்லை பாய்.. சும்மா கூகுள்ல போயி தேடுங்க .. #பூனை_கண்ண_மூடுனா_உலகம்_இருளும்

   //// 4. மனிதன் எப்படி குரங்கில் இருந்து பிறந்தான் ? இன்று செய்முறை மூலம் விளக்கினால் தான் நம்ப முடியும் (எப்படி மண்ணின் இருந்து மனிதன் வந்தான் என்பது போல்)..
   5. உங்களால் விளக்கமுடியாததை நிரூபித்து காட்ட முடியாததை உண்மை என்று நம்பும் போது , மற்றவரை மட்டும் ஏன் செய்து காட்ட சொல்கிறீர்? /////

   அதாகப்பட்டது, அஷாக் பாய் தனது 4,5-ம் கேள்விகள் மூலம் சொல்ல வருவது என்னவெனில் எப்படி உங்களால் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதை நிரூபித்துக் காட்ட முடியாதோ, அப்படித் தான் கடவுள் இவ்வுலகைப் படைத்தான் என்பதையும் எங்களால் நிரூபித்துக் காட்ட முடியாது என்கிறார். அதாவது சான்றாதாரங்களின் அடிப்படையிலான அறிவியல் கண்டுபிடிப்புகளையும், மதவாதிகளின் புனித நூல்களின் மீதான நம்பிக்கையையும் ஒன்று என்கிறார்.

   சரி பாய், உங்க கடவுளே இன்னும் குறிப்பா சொல்லனும்னா, உங்க அல்லாவே இந்த உலகத்தைப் படைச்சான்னே வச்சிக்குவோம். அப்புறம் என்ன ஹேருக்கு உலக ஜனத்தொகையில் வெறும் 24% முசுலீமை மட்டும் படைத்தான் உங்கள் இறைவன் ? மீதி 74% மக்களில் பெரும்பான்மையா உலகில் முசுலீம்களை அதிகமாக வெறுக்கக் கூடிய கிறுஸ்தவர்களைப் படைச்சது ஏன்? அதுவும் கூட முசுலீம்களை விட அதிகமான எண்ணிக்கையில் ஏன் படைத்தார் ? முசுலீம் சனத்தொகைக்கு அடுத்த படியா கடவுள் இல்லைன்னு சொல்லக்கூடியவங்களை ஏன் படைத்தார் ? முசுலீமைக் கண்டாலே கொலைவெறி எடுக்கும் ஹிந்துக்களையும் ஏன் படைச்சார் ?
   ஆக்சுவலி உங்க ’காட்’-க்கு எதாச்சும் பிராபளமா ? படைக்கிறது தான் படைக்கிறாரு, எல்லாரும் அல்லாகு அக்குபர்னு சொல்றமாதிரி ஒரு புரோகிராம் எழுதி மூளைக்குள்ள போட்டுவிட்டு படைச்சு விட்டா பிரச்சனையே இல்லை பாருங்க … என்ன டிசைனோ – போங்க ஜீ…

   /////// 6. 55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
   55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. இந்த குரான் ஆயத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும். //////

   ஹாஹாஹாஹா … வாயால சிரிச்சேன்னு நினைக்காதீங்க பாய் .. அந்த அளவுக்கு கூட இது ஒர்த் கிடையாது .. நல்லா காமெடி பண்றீங்க பாய்.. அதாவது இந்துமகா சமுத்திரமும் வங்கப் பெருங்கடலும் சந்திக்கும்.. ஆனா கலக்காது (ஏன்னா நடுல தடுப்பு இருக்குல்ல — அல்லா உருவாக்குனது) .. சரி… அப்புறம் என்ன ஹேருக்கு சுனாமி வரவழைச்சு எங்க புள்ளைகள கொன்னான் அந்த கிரிமினல் ? அல்லா மீறச் சொன்னாருன்னு தான மீறி நாட்டுக்குள்ள வந்து எங்க மக்கள தூக்கிட்டு போச்சு …
   நியாயப்படி பாத்தா, அந்த ஆள பல இலட்சம் முறை தூக்குல போடனும். சாடிஸ்ட்டாயா உங்க கடவுள்கள் எல்லாம் ?. மக்களைக் கொன்று, அதுவும் தன்னை பின்பற்றுகிற மக்களைக் கொன்று அவர்களை அன்றாடம், அல்லல்களூடே வைத்திருக்கும் ஒருவன், கடவுளாக இருக்க முடியாது. சாடிஸ்ட்டாகத் தான் இருக்க முடியும்.

   • //// 1. உலகம் தானாக உண்டானது என்றால், நீங்கள் ஏன் வேலைக்கு போகிறீர்கள்? தானாக சாப்பாடு வரும் என்று இருக்க வேண்டியது தானே ? ///

    உலகை உங்கள் அல்லா உருவாக்கினான் என்றால் நீங்கள் ஏன் வேலைக்கு போகிறீர்கள். அல்லாவே சாப்பாட்டை வயித்துக்குள் சேர்த்து விடுவான் என இருக்க வேண்டியது தானே.. அப்படி வயித்துக்குள்ள சோறு போடுறதுக்கு அல்லாவுக்கு வக்கு இல்லையா ? ஐயோ பாவம் ..

    # அல்லாஹ் எங்கேயும் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை , நீங்கள் தானே எல்லாம் தானாக உண்டானது என்றீர் , அதனால் தான் கேட்டேன் சாப்பாடு ஏன் தானாக வரவில்லை என்று இதுகூட தெரியாத சாணி மூளையை கொண்டவர் தான் நீங்கள் #

   • /// 2. இறைவனால் எல்லாம் ஆகும் என்று நம்பும் போது மணலை வைத்து மனிதனை உண்டாக்குவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல ////

    தான் உருவாக்குன மனுசனோட வயித்துக்குள்ள தானா சோறைக் கொண்டு போயி சேக்குற வழி தெரியாத அல்லா, மணலை வைத்து மனிதனை உருவாக்குனான்னு சொன்னா, இதெல்லாம் நம்புற மாதிரியா பாய் இருக்குது ? #நம்புனா_தான்_சோறு

    # எல்லாத்தையும் உண்டாக்கிய இறைவன் சொல்வது உழைக்கவேண்டும் என்று , நோய் வந்தால் வைத்தியம் பார்க்க வேண்டும் , செலவு செய்ய சம்பாரிக்கவேண்டும் , இதெல்லாம் இறைவன் தான் எங்களுக்கு சொல்லித்தந்தான் – சோறு தானே வருமான்னு சொல்லவே இல்லை இதுவரை

   • /// 3. மனிதன் அம்மாவின் கருவறையில் குழந்தையாக இருக்கும் முன்னர் அப்பாவின் விந்தணுவில் இருந்தான், ஆனால் அதே அப்பா சிறிய பிள்ளைகளாக இருந்த போது எங்கே இருந்தான் ? அப்படியே கேட்டுக்கொண்டே போனால் முடிவில் ஒரு மனிதனை நோக்கி பயணம் தொடரும் , அப்ப அந்த மனிதன் யார்? உங்கள் அறிவியலால் ஏன் கண்டறியப்படவில்லை ? ///

    இந்த வெங்காயத்தை எல்லாம் அறிவியல் கண்டுபிடிச்சிடுச்சு, நீங்க மொதல்ல உங்க தலைய குரானுக்குள்ள இருந்து எடுத்து அறிவியல் புக்குக்குள்ள தேடிப் போயெல்லாம் நுழைக்கத் தேவையில்லை பாய்.. சும்மா கூகுள்ல போயி தேடுங்க .. #பூனை_கண்ண_மூடுனா_உலகம்_இருளும்

    # பல முஸ்லீம் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு குரான் தான் முன்னோடி , குரான் சிந்திக்க சொல்கிறது ஆராய சொல்கிறது , மூடர்கள் ஏன் அதை கவனிக்க தவறுகிறார்கள் என்று தெரியவில்லை #

   • 5. உங்களால் விளக்கமுடியாததை நிரூபித்து காட்ட முடியாததை உண்மை என்று நம்பும் போது , மற்றவரை மட்டும் ஏன் செய்து காட்ட சொல்கிறீர்? /////

    அதாகப்பட்டது, அஷாக் பாய் தனது 4,5-ம் கேள்விகள் மூலம் சொல்ல வருவது என்னவெனில் எப்படி உங்களால் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதை நிரூபித்துக் காட்ட முடியாதோ, அப்படித் தான் கடவுள் இவ்வுலகைப் படைத்தான் என்பதையும் எங்களால் நிரூபித்துக் காட்ட முடியாது என்கிறார். அதாவது சான்றாதாரங்களின் அடிப்படையிலான அறிவியல் கண்டுபிடிப்புகளையும், மதவாதிகளின் புனித நூல்களின் மீதான நம்பிக்கையையும் ஒன்று என்கிறார்.

    சரி பாய், உங்க கடவுளே இன்னும் குறிப்பா சொல்லனும்னா, உங்க அல்லாவே இந்த உலகத்தைப் படைச்சான்னே வச்சிக்குவோம். அப்புறம் என்ன ஹேருக்கு உலக ஜனத்தொகையில் வெறும் 24% முசுலீமை மட்டும் படைத்தான் உங்கள் இறைவன் ? மீதி 74% மக்களில் பெரும்பான்மையா உலகில் முசுலீம்களை அதிகமாக வெறுக்கக் கூடிய கிறுஸ்தவர்களைப் படைச்சது ஏன்? அதுவும் கூட முசுலீம்களை விட அதிகமான எண்ணிக்கையில் ஏன் படைத்தார் ? முசுலீம் சனத்தொகைக்கு அடுத்த படியா கடவுள் இல்லைன்னு சொல்லக்கூடியவங்களை ஏன் படைத்தார் ? முசுலீமைக் கண்டாலே கொலைவெறி எடுக்கும் ஹிந்துக்களையும் ஏன் படைச்சார் ?
    ஆக்சுவலி உங்க ’காட்’-க்கு எதாச்சும் பிராபளமா ? படைக்கிறது தான் படைக்கிறாரு, எல்லாரும் அல்லாகு அக்குபர்னு சொல்றமாதிரி ஒரு புரோகிராம் எழுதி மூளைக்குள்ள போட்டுவிட்டு படைச்சு விட்டா பிரச்சனையே இல்லை பாருங்க … என்ன டிசைனோ – போங்க ஜீ…

    #உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி ஒரு ஹேரும் தெரியல , உலக முதல் மனிதன் தொட்டு இறுதி மனிதன் வரை முஸ்லீம் ஆகத்தான் பிறக்கிறார்கள் , அவர்கள் வளரும் விதம் தான் அவர்களை பல கடவுள் , கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை பின்பற்றுகிறார்கள் , ஆக இஸ்லாம் அல்லாஹ் மனிதர்களை வழிகாட்ட இறைத்தூதர்களை இறைவேதங்களோடு அனுப்பினான் , உங்களை போன்ற மர மண்டைகள் கேட்க்காததற்கு அல்லாஹ் என்ன செய்வான் , நாளை நரகத்தில் தான் போடுவான்#

   • #ஹாஹாஹாஹா … வாயால சிரிச்சேன்னு நினைக்காதீங்க பாய் .. அந்த அளவுக்கு கூட இது ஒர்த் கிடையாது .. நல்லா காமெடி பண்றீங்க பாய்.. அதாவது இந்துமகா சமுத்திரமும் வங்கப் பெருங்கடலும் சந்திக்கும்.. ஆனா கலக்காது (ஏன்னா நடுல தடுப்பு இருக்குல்ல — அல்லா உருவாக்குனது) .. சரி… அப்புறம் என்ன ஹேருக்கு சுனாமி வரவழைச்சு எங்க புள்ளைகள கொன்னான் அந்த கிரிமினல் ? அல்லா மீறச் சொன்னாருன்னு தான மீறி நாட்டுக்குள்ள வந்து எங்க மக்கள தூக்கிட்டு போச்சு …
    நியாயப்படி பாத்தா, அந்த ஆள பல இலட்சம் முறை தூக்குல போடனும். சாடிஸ்ட்டாயா உங்க கடவுள்கள் எல்லாம் ?. மக்களைக் கொன்று, அதுவும் தன்னை பின்பற்றுகிற மக்களைக் கொன்று அவர்களை அன்றாடம், அல்லல்களூடே வைத்திருக்கும் ஒருவன், கடவுளாக இருக்க முடியாது. சாடிஸ்ட்டாகத் தான் இருக்க முடியும்.#

    @ ஹாஹாஹாஹா … வாயால சிரிச்சேன்னு நினைக்காதீங்க .. அந்த அளவுக்கு கூட இது ஒர்த் கிடையாது .. நல்லா காமெடி பண்றீங்க , அட மங்குனி , நான் கடல் சேருவதில்லை ன்னு அறிவியல் பூர்வமா பேசுறேன் நீ என்னடான்னா ஹேர் மாதிரி கேள்வி கேக்குற, தவறுகள் அதிகமாகும் போது தண்டனைகள் வருவது இயற்க்கை , எப்படி மழைமூலம் நல்லவன் கெட்டவன் எல்லாம் உதவி பெருகிறானோ அதுல இயற்க்கை சீற்றத்தால் நல்லவன் கெட்டவன் அழிவது இயல்பு , தவறை தட்டி கேக்காதால் கிடைக்கும் தண்டனை @

 6. 1400 வருடத்திற்கு முன் அறிவியல் வளராத காலத்தில் இந்த உண்மையை எப்படி இஸ்லாமால் சொல்லமுடியும் , இரண்டு கடலும் ஒன்றொரு ஒன்றாக கலக்காமல் இருப்பது இறைவனின் கட்டளையே (தடுப்பு) என்பது என் வாதம் , அறிவுள்ளவர்கள் இங்கே இருந்தால் அறிவியல் பூர்வமாக இதை நிரூபிக்கவும்

  55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
  55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.

 7. ஜனுவரி 1 நள்ளிரவு – பெருவெடிப்பு
  அகஸ்ட் 31 – சூரியதொகுதி மற்றும் புவியின் தோற்ற்றம்
  செப்டெம்பர் 21 – முதல் உயிர்க்கலம் தோற்ற்றம்
  டிசம்பர் 17 – கடலில் மட்டும் சிறு தாவர, பிராணிகளாய் இருந்த்த உயிர் பல்வேறு பெரும் தாவர விலங்குககாய் வெடித்து பல்கி பெருகியது. முதல் கடல் உயிரினம் கரைக்கு ஏறியது. பெரும் காடுகள், டைனோசர்கள், பறவைகள் , பூச்சிகள் என்பவை டிசம்பர் இறுதி வாரத்திலேயே பரிணமித்தவை.

  டிசம்பர் 28 – முதல் பூ பூத்தது.

  டிசம்பர் 30 மு.ப 6.24 – டைனோசர்களை அழித்த விண்கல் மோதியது.

  டிசம்பர் 31 பி .ப 11.00 – மனித இன தோற்ற்றம்!!
  டிசம்பர் 31 பி .ப 11.59 – முதல் ஓவியம் வரையபட்டது (ஆதிமனிதன் குகை சித்திரம்)

  டிசம்பர் 31 பி .ப 11.59.20 – விவசாயம், மந்தை வளர்ப்பு, கிராமங்கள்தொடங்கப்பது
  டிசம்பர் 31 பி.ப 11.59.46 – எழுதி வைக்க பழகினர் மனிதர். இலிருந்து உள்ள வெறும் 14 செக்கன்களே பதியப்பட்ட வரலாறாகும்!!

  இங்க பாருங்க காமெடியை நேரில் இருந்து பார்த்தது போல் சொல்கிறார் , கொஞ்சம் மணி நிமிடம் நொடியை யும் சேர்த்து உங்கள் மசாலாவை வெளியிடலாமே

 8. உழைப்பவனின் வியர்வை காயும் முன் ஊதியத்தை வழங்க சொல்லும் இஸ்லாமிடம் பிச்சை எடுக்கவேண்டும் கம்முனிசம் , 100 வருடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாத, மக்களால் புறக்கணிக்கப்பட்ட கொள்கைதான் கம்முனிசம.

 9. சகோ சின்னாவும்(சிறப்பான விளக்கம் சகோ),சமரனும் அறிவியல் பூர்வமாக விளக்கிய பின்னும் நம்பர் பிளேட் வைத்து விளக்க விளையாட்டு எதற்கு ஆஷாக் அவர்களே?சரி எல்லாம் சொன்ன குரானில் “இந்துத்துறைவிகள்” எதிர்காலத்தில் பாபர் வாரிசுகளை மிலேச்சன்கள் என்று தூற்றி குடலை உருவி “ராம”ராஜன் ராஜ்ஜியம் உருவாக்க இஸ்லாமிய பெண் என்றும் பாராமல் அவள் பிறப்புறுப்பில் சூலத்தை சொறுகிவிடுவார்களே என சரியாய் கணித்து அப்பாவி இஸ்லாமிய சொந்தங்களைக் காப்பாற்ற ஏதாவத குரானில எழுதித்தொலைச்சி வச்சிருக்கணுமா இல்லையா?எங்க நீங்களே பாவம் சார் சார் rss காரன் மெரட்ரான் சார் லத்திய எடுத்துட்டு வாங்க சார்னு போலீஸ் ஸ்டேசனுக்கு அலையுறீங்க குரான மறந்தாப்ல வீட்லயே வச்சிட்டும் போயிடுறீங்க கடைசியா “தோற்று”ப்போன மார்க்சியம் படிச்ச கம்யூனிஸ்ட்டுங்கதான் rss ஜ ஒழிக்க வீதியில நிக்கிறாங்க.கம்யூனிசப்புரட்சி நடந்தாலன்றி குரான் புத்தகத்தைக்கூட யாராலும் காப்பாற்ற மிடியவே முடியாது.கடவுள் நம்பிக்கை என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே.அந்த மூட நம்பிக்கைதான் துபாய் கடலில் மிதக்கும் விடுதி வாங்கும் “ஏழை” ஷாருக்கானையும் “லட்சாதிபதி” பீடீ சுற்றும் பாஷாவையும் உருவாக்குகிறதெனில் அந்த ஏமாற்றை
  ஏற்றத்தாழ்வை ஒழிக்காமல் கம்யூனிசம் “தோற்காது”.

  • 1. சின்னாவும், சமரனும் உண்மையிலேயே அறிவாளி என்றால் நான் கேட்ட குரான் வசனத்துக்கு விளக்கம் தரட்டும் , இல்லையென்றால் தங்களை முட்டாள்கள் என்று ஒத்துக்கொள்ளட்டும், அறிவு நாணயம் உள்ளவர்கள் என்றால் இனி இஸ்லாத்தை தெரிந்து கொண்டு பின்னூட்டம் இடட்டும்.
   2. குர்ஆனில் உலகில் நடக்கும் எல்லா விஷயமும் இருக்காது, எனக்கு தெரிந்த வரை குரான் மட்டுமே உலகிலேயே மனப்பாடம் செய்யப்பட நூல், இறை மறுப்பாளர்களும் இணை வைப்போரும் இஸ்லாத்தின் எதிரிகள் என்று குரான் சொல்கிறது, இதில் எல்லாம் அடங்கும்,
   3. RSS காரனுக்கு எதிராக எல்லா வகையிலும் பாடம் கற்பிக்க சில இயக்கங்கள் இருக்கிறது, அதில் கம்முனிசமும் அடங்கும், ஆனால் கேரளா போன்ற மாநிலத்திலேயே நிட்டை எதிர்க்காமல் ஆர் எஸ் எஸ் ன் காலில் கம்முனிசம் கடக்கும் பொது நீங்கள் மார் தட்டி பயனில்லை
   4. கடவுள் நம்பிக்கை என்பது தான் உலகின் மூலதனம், அது ஒரு நம்பிக்கை என்றால் கம்முனிசமும் ஒரு நம்பிக்கைதான், அந்த நம்பிக்கை ௧௦௦ வருடம் கூட தாக்குபிடிக்கவில்லை,
   5. தனி மனிதர்களை பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை, இயலாதவருக்கு உதவி செய்வது தான் இஸ்லாம், பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லீம் அல்ல.
   6. சொந்த சொத்தை பிரிக்கும் பொது அறியாத ஏழை வந்தால் அவருக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்று தான் இஸ்லாம் சொல்கிறது
   7. பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க சொன்னது இஸ்லாம் மட்டுமே
   8. ஜகாத் என்ற ஏழைவரியை ஒவ்வொரு முஸ்லிமும் கொடுத்தால் போதும் எந்த முஸ்லிமும் பீடி சுற்ற தேவை இல்லை, தனி மனித தவறுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணம் இல்லை

   • ///இஸ்லாத்தை தெரிந்து கொண்டு பின்னூட்டம்///

    நீங்க அறிவியல் தெரியாம புண்ணூட்டம் போடுறீங்களே ?

 10. உலகம் முழுவதும் குரான் இருந்து கொண்டுதான் இருக்கிறது, இந்தியாவில் தான் ஆர் எஸ் எஸ் மற்ற நாடுகளில் ? மற்ற நாடுகளில் கம்முனிசம் தான் காப்பாற்றுகிறதா? இந்தியாவில் கூட ஹாதியா விஷயத்தில் பினராய் ஆர் எஸ் எஸ் காலில் விழுந்து கும்புடுவதை கம்முனிசம் தடுக்கவில்லை ஏன் ?

 11. பாய் உங்களுக்கெல்லாம் எத்தினி வாட்டி சொல்வது..ஒன்னு சொன்ன ஏத்துக்கும் திறந்த மனம் வேணும் இல்லன்னகொஞ்சம் விஞ்ஞானம் படித்திருக்க வேண்டும். பீஜே சொல்லிதரும் கோழி முதல் வந்ததா முட்டை முதல் வந்ததா பாணி கேள்விகளையே வைத்திருக்கும் உங்களுக்கு பெரியார் போல் ‘வந்தா ஏத்துக்க போறன்’ என்னுட்டு போய்கிட்டே இருக்கணும், இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

  // மீண்டும் உலகம் தானாக உண்டானது என்றால் ஏன் வேலைக்கு போகிறீர்கள்? வாயை துறந்து கொண்டு உட்காருங்கள் சாப்பாடு வந்து விழுகிறதா?//
  பாய் , ஈர்ப்பு விசையும் திசை வேகமும் அதி அற்புதமானது (பவுதீகவியல் படித்து பாருங்களேன்), போதுமானளவு காலத்தை கொடுத்தால் ஒளியாண்டு கணக்கான வெறும் தூசு படலத்தை உருட்டி திரட்டி சூரியன் மற்றும் கோள்களாக்க முடியும் அவற்றால், நான்கு அரை பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஏதோவொரு அண்மைய நட்சத்திர வெடிப்பின் விசை அந்த தூசு படலத்துக்கு திசை வேகத்தை கொடுத்ததே நீரும் இன்று குர் ஆண் என்று கும்மியடிக்க காரணம் என்பதை புரிந்து கொள்ளவும்.

  //நீங்கள் சொல்வது எல்லாம் “கருத்தப்பட்டால்” , உண்மை இல்லை , யூகத்தின் அடிப்படையில் பேசுபவருக்கு என்னால் பதில் சொல்ல முடியாது//
  //13.8 பில்லியன் வருடங்கள் நிரூபிக்கவும் , முடியவில்லை என்றால் கதை சொல்வதை நிறுத்தவும்.//

  பாய் , அறிவியல் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என ஒத்து கொள்ளும், அந்த தன்மையே நம்மை இந்தளவு கொண்டுவந்து விட்டுள்ளது, குர் ஆன் போதுமென நினைத்திருந்தால் நானும் நீரும் இப்போது இணையத்தில் இந்த விவாதத்தை செய்திருக்க முடியாது. இங்கு நான் சொன்ன விடயங்கள் எதுவுமே ‘கருத பட்டவை’ அள்ள, கணிக்க பட்டவை!! கணிதம் , பவுதீகவியல், வான் பவுதீகவியல், இரசாயனம் , கணினி தொழில்நுட்பம் போன்ற அறிவியலின் பல கரங்கள் ஒரு அழகான ஒத்திசைவு மூலம் கொண்டு வந்த நிரூபிக்க பட்ட முடிவுகள் –
  பிரபஞ்சம் பதிமூன்றரை பில்லியன் வருடங்கள் பழமையானதுதான் நிருபிக்க பட்டவழி – கப்பில் தொலைநோக்கி மூலம் தூர விலகி செல்லும் காலக்ஸிகளின் வேகம் மற்றும் இடத்தை அறிந்து ரிவர்ஸ் கியரில் (உங்களுக்கு வேறெப்படி சொல்வது) கணித்த போது அவை ஏற்கனவே கணிக்க பட்ட ஆக முதிர்ந்த விண்மீன் கூட்டத்தின் வயதான பதிமூன்று பில்லியன் வருடங்களை ஒத்திருந்தது. புவியின் வயது கதிர்வீச்சுடைய பாறைகளின் மூலம் கணிக்க பட்டது, இதற்கு அகழ்வாராச்சி பெரிதும் உதவியது.

  இதெல்லாம் ஏனுங்க, சரியா டியூன் செய்ய படாத டிவி பொட்டியின் வெள்ளை இரைச்சல் என்னவென்று தெரியுமா? அதாங்க பெருவெடிப்பின் மிச்சமான அண்ட பின்புல நுண்ணலை கதிர்வீச்சு
  எப் எம் ரேடியோவின் ஸ்ஸ்ஸ்ஸ் இரைச்சல் என்னவென்று யோசித்ததுண்டா? உங்களை கேட்டால் அல்லாவின் அபான வாயு என்பீர்கள்.

  மில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்பு பல ஒளியாண்டு தொலைவில் நடந்த நட்சத்திர வெடிப்பின் கதிர்வீச்சு இரும்பு துகள்களை அதேயளவு பழைய பாக்டீரிய பதிவுகளில் இருந்து கணித்து சொல்ல அறிவியலால் மட்டுமே முடியும், குர் ஆனில் அதற்கெல்லாம் பக்கம் போதாது பாய்.

  //மனிதன் அம்மாவின் கருவறையில் குழந்தையாக இருக்கும் முன்னர் அப்பாவின் விந்தணுவில் இருந்தான், ஆனால் அதே அப்பா சிறிய பிள்ளைகளாக இருந்த போது எங்கே இருந்தான் ? அப்படியே கேட்டுக்கொண்டே போனால் முடிவில் ஒரு மனிதனை நோக்கி பயணம் தொடரும் , அப்ப அந்த மனிதன் யார்? உங்கள் அறிவியலால் ஏன் கண்டறியப்படவில்லை ?
  மனிதன் எப்படி குரங்கில் இருந்து பிறந்தான் ? இன்று செய்முறை மூலம் விளக்கினால் தான் நம்ப முடியும் (எப்படி மண்ணின் இருந்து மனிதன் வந்தான் என்பது போல்)//

  என்னங்க இது முதல் மனிதன் என்று பரிணமித்த மனிதனின் சுவடுகள் சிக்கினால் கார்பன் டேடிங் பண்ணி டீ என் ஏ சீகுன்சிங் செய்து சொல்லிவிட்டு போகிறோம் இவர்தான் ஆசாமின்னு , அதில் என்ன பிரச்சினை? இப்போ யார் முதல் மனிதன்னு கண்டுபிடிச்சு என்ன புடுங்க போரிங்கோ? பரிணாமம் என்பது மில்லியன் கணக்கான வருடங்களாக நடப்பது, அதில் இன்ன இனம் இன்ன இடத்தில தான் இன்ன இனமாக மாறுகிறது என்பதை குறிப்பிட்டு சொல்வது என்பது முடியாது. பரிணாமம் ஒரு தொடர்ச்சி பாய். அப்படியே உங்களுக்கு காமிக்க வேண்டுமென்றால் கூட மிக விரைவாக பரிணமிக்கும் சில உயிரினங்கள் கூட சில பத்து தலை முறைகள் எடுக்கும் (உதாரணம் புளோரிடாவில் ஒருவகை பல்லிகள்போ ட்டி பல்லிகள் காரணமாக மரத்தின் உயரே வசிக்க எதுமான வகையில் அவற்றின் பாதங்களை 15 தலை முறைகளில் பெரிதாகவும் அதிகம் ஒட்டுவதாகவும் பெட்ட்ருள்ளது) இதையெல்லாம் உங்களுக்கு பொதுவிவாத மேடையில் செயன்முறையில்கா ட்ட முடியாது பாய்.

  //இங்க பாருங்க காமெடியை நேரில் இருந்து பார்த்தது போல் சொல்கிறார் , கொஞ்சம் மணி நிமிடம் நொடியை யும் சேர்த்து உங்கள் மசாலாவை வெளியிடலாமே//
  பாய் நிமிடம் நொடி கணக்கு கூட போட்டுள்ளேனே , அப்ப முழுதும் படிக்க வில்லை? நினைத்தேன். உங்களுக்கெல்லாம் உண்மையை பார்த்தாலே குமட்டுமே. அறிவியலால் முடியும், நேரே இருந்து பார்ப்பதை போல் கணிக்க, கருந்துளை, நியூட்ரோன், நியூட்ரினோக்கள், கரும்பொருள், ஹிக்ஸ் போசோன் (உதாரணங்களை இங்கே அடுக்கினால் தளம் கொள்ளாது!) போன்றவை அறிவியலாளர்களால் முன்பே கணித்து சொல்லப்பட்டு பின் உரிய சாதனைகள் படைக்க பட்டவுடன் உண்மையென நிருபிக்க பட்டவை. அந்த பரவசங்கள் எல்லாம் மதம் கொடுக்க முடியாதுங்க. காசிமியர் எபெக்ட் கேள்வி பட்டதுண்டா? காசிமியர் நுண்துகள்களின் ஈர்ப்பு விசையை கணித்த போதும் அதை செயற்படுத்தி பார்க்க அப்போது அந்தளவு நுண்மையாக யாரும் இரு தகடுகளை தயாரிக்க முடியவில்லை, எனினும் பல ஆண்டுகளின் பின் நவீன சாதநங்கள் மூலம் அந்த தகடுகள் செய்யப்பட்டு பரிசோத்தித்த காசிமியர் கணித்த மாதிரியே பொது தகடுகள் ஈர்த்தன!!!
  ஹிக்ஸ் போசொனை தசாப்தங்களை முன்பே கணித்து கூறி அது அண்மையில் நிருபிக்க பட்ட பொது பீட்டர் ஹிக்க்ஸ் இன் முகத்தை பார்த்தீரா? அதெல்லாம் உங்களுக்கு எங்கே புரிய போகிறது.
  குர் ஆன் எதை தான் கணித்துள்ளது? சகோ நெப்போலியன் கூறியது போல் இஸ்லாமிய பெண்ணை குதறியது கூட அல்லாவுக்கு முன்பே தெரியாதா? மண்ணில் இருந்து மனிதனை படைத்தவன் அதே தன் மக்கள் மண்ணாகி போவது தெரியாமல் இருப்பது ஏனோ? எதிர்த்து போராடுவது என்றால்கூ கூட ட ரசிய அமரிக்க ஆயுதங்கள் மூலம் தான், இல்லன்ன நாறிடும்.

  //உழைப்பவனின் வியர்வை காயும் முன் ஊதியத்தை வழங்க சொல்லும் இஸ்லாமிடம் பிச்சை எடுக்கவேண்டும் கம்முனிசம் , 100 வருடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாத, மக்களால் புறக்கணிக்கப்பட்ட கொள்கைதான் கம்முனிசம.//

  கம்யூனிசம் மட்டுமென்ன அவன் குளித்து பவுடர் பூசி வந்த பின் கொடுக்க சொல்கிறதா?
  இதெல்லாம் இருக்கட்டும் பாய், அங்கே சவூதி இழவுஅரசரு இஸ்ரேல் காரன்கூட கூட்டு செந்துகின்னு பாலஸ்தீனர்களை தீவிரவாதி என சொல்கிறானாம், அதை போய் என்னான்னு பீஜே கிட்ட கேளுங்க. அவரு எதாவது மயிர்புடுங்கி விளக்கம் கொடுப்பாரு கேட்டுக்குங்க. போராடுறது எல்லாம் நாம பாத்துகிறோம்.

  இறுதியாக என்னங்க பாய் அது ரெண்டு கடலை பிரிச்சது மேஞ்சதுன்னு கதை சொல்றிங்க, அதுக்கும் நாம பேசுறதுக்கும் என்னங்க சம்பந்தம்? யாராச்சும் விளக்குங்கப்பா

 12. மேல் ‘உரிய சாதனைகள்’ என பதியபட்டுவிட்டது. ‘உரிய சாதனங்கள்’ என படிக்கவும்.

 13. 1) 13.8 பில்லியன் கணக்கெல்லாம் இருக்கட்டும் , அதை ஏற்றுக்கொள்ளும் முன் எதுவும் தானாக உண்டாகாது என்பதும் அறிவியல் தான், இந்த உலகம் எப்படி தானாக உண்டாகும், இங்கே நாம் போடும் பின்னூட்டம் தானாக போடப்பட்டது என்று நம்புவது எப்படி முட்டாள் தனமோ அதுபோல் தான் உலகம் தானாக உண்டானது என்பது
  2) பிஜே சொல்வதை அவரிடம் கேளும், அவரை நான் அறிந்தவராகவே ஏற்றுக்கொள்ளவில்லை
  3) குரோமோசோம் பற்றி தெரியும் என்று நினைக்கிறேன், குரங்குக்கு 48, மனிதனுக்கு 46, எப்படி 48 ல் இருந்து 46 ஆனது என்று விளக்கினால் நன்னடராக இருக்கும்
  4) நீங்கள் சொல்லும் அனுமானத்தை எல்லாம் நம்ப முடியாது, பல கருத்துக்கள் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் , கார்பன் dating மூலம் வயதை தான் கணிக்க முடியும், குரங்கு எப்படி மனிதன் ஆனது என்றெல்லாம் கணிக்கமுடியாது
  5) எந்த அகழ்வாராச்சி மூலம் குரங்கு மனிதன் ஆனது என்று சொன்னால் நன்றாக இருக்கும்
  6) பெரியார் சொல்வது போல் , உங்கள் அறிவையும் எடுத்து காட்டினாள் உண்டு என்று ஒத்துக்கொள்கிறேன்
  7) எல்லா வற்றிற்கும் நிமிடம் நொடி போடவில்லை திரும்பவும் பார்க்கவும், கற்பனை காலியாகிவிட்டது என்று நினைக்கிறேன்
  8) 1400 வருடத்திற்கு சொன்னதை பிரதி எடுத்து சொன்னதுதான் கம்முனிசம், கவர்ச்சியாக இருந்தும் 100 வருடம் கூட தாக்குபிடிக்கவில்லை
  9) தமிழ்நாட்டில் கம்முசிஸ்டுகள் நீட்டு தேர்வை எதிர்க்கும் பொது பினராய் என்ற கம்முனிச முதல்வர் ஆர் எஸ் எஸ் / பிஜேபி யின் காலை கழுவுவதை தடுக்கமுடியாது கம்முனிசம் தான் மக்களுக்கு நல்லது செய்ய போகிறதா?
  10) தனி மனித தவறுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பல்ல, எந்த அரசனாலும் பிஜே போன்றோரும் இஸ்லாத்தின் மூலம் அல்ல , அவர்களை பின்பற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை
  11) நீங்க தான் ரொம்ப அறிவாளியாச்சே , அறிவியலை நம்பும் மேதாவியாச்சே , அதனால் அந்த கடல் பத்திய குரான் வசனத்துக்கு விளக்கம் சொல்லவும், இல்லன்னா குரான் முன்னாடி அறிவியல் தோத்து போச்சுன்னு ஏற்றுக்கொள்ளவும் , உங்களுக்கு அறிவு இருக்குன்னு இதன் மூலம் நிரூபிக்கலாமே, நான் கட்டாயப்படுத்தல, பாவம் இல்லதஹத்தை நிரூபிக்க சொன்ன பாவம் எனக்கெதுக்கு?

  • பாய் இவ்வளவு விளக்கியும் மாங்கா மாதிரி கோக்கு மாக்கு கேள்வி கேட்கும் உங்களிடம் பீஜே பிச்சை எடுக்கணும், ஏதோ சம்பந்தம் இல்லாத மாரி பேசவேண்டாம், உங்களை போன்றவர்களின் ஆஸ்தான குருஜி அவுகதான்னு தெரியும் (கவுண்டரின் உன்ன யார்ரா இந்த மாரில்லாம் பேச சொல்றான் காமிடி தன் ஞாபகம் வருதுங்கோ)

   உங்களின் ‘அறிவார்ந்த’ கேள்விகளான குரங்கு (முன்னமே விளக்கியும்..யா அல்லா என்ன ஏன் இப்பிடி சோதிக்கிற) மற்றும் குரோமோசோம் பற்றி மீண்டும் விளக்கனும்னா என் முந்தய பதிலை விட நீளும் நேரம் கிடைத்தால் அதையும் விரல் நோக டைப் செய்து தொலைக்கிறேன் நாளை (மறுபடியும் யா அல்லா என்னை ஏன் இப்பிடி அடிப்படை உயிரியல் பாடத்தை எல்லாம் வினவு தளத்துள் அடிக்க வைக்கிறே?), பாய் நீங்க கொஞ்சம் உயிரியல் மரபியல் எல்லாம் படித்து வந்தால் எனக்கு கொஞ்சம் எளிதாக இருக்கும்.

   மற்ற படி என்ன பாய் நீங்க கேள்வி மட்டுமே கேட்டுகிட்டு இருகின்ங்க? நாமளும் எதாச்சும் பதிலுக்கு கேக்கணுமே…உங்களை போல் நெம்பர் போட்டு கேக்க கேள்விகள் இல்லிங்கோ ஒரே ஒரு கேள்வி தா அதுவும் சகோ நெப்போலியன் கேட்டதுதான் இந்து வெறியர்கள் அவ இஸ்லாமிய ப்பெண்ணின் உறுப்பில் சூலத்தை சொருவும்போது
   எல்லாம் வல்ல மண்ணில் இருந்து மனுசனை ஊதிவிட்ட அல்லாவால் ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை? அந்த வெறியர்களும் அவர் உருவாக்கியவை தானே? இது என்ன முரண்பாடு?
   இந்து வெறியர்கள் போல் எல்லாம் அவன் விளையாட்டு என சொல்லமாட்டீர்கள் என நம்புவோம்.
   வியர்வை காய்வது பற்றி, மத்திய கிழக்கில் பணக்கார முஸ்லிம்கள் இங்கிருந்து போகும் முஸ்லிம் வீட்டுபெண்களுக்கு வியர்வை காய்ந்து மாதக்கணக்காகியும் ஊரு போய் சேந்தா போதும்னு செய்வது என்ன இஸ்லாம்? ஒன்று இரண்டா இந்த கதைகள். ஒருவேளை பெண்களை தான் பொருட்படுத்துவதில்லை என விட்டாலும் ஆண்களின் பாடு இன்னும் மோசமே? கட்டிட , கப்பல் தொழிலாளிகளை கேட்டுபாருங்கள் எந்த சேக்கின் கம்பனியோ சம்பளம் சாப்பாடு கொடுக்காம நாறடிக்கிறானுங்க செக்குங்களுக்கும் அங்கு கம்பனி நடத்தும் பாக்கிஸ்தான் முதலைகளும், இதில் இங்கிருந்து போகும் ஏழை முஸ்லிம் ஒருவன் உங்கள் வசனத்தை அங்கு லா பேசி பாத்தா தெரியும் மக்கா இஸ்லாத்தின் பவர். போங்கப்பா

 14. சரிங்க பாய். குரான பாத்து தான் டார்வினும் ஐன்ஸ்டீனும் அறிவியல கத்துகிட்டாங்க போல. சரி, அந்த இழவு இப்போதைக்கு விடியாது……அறிவியலா இல்லை குர்ரானா என்று நாம சண்டை போட வேண்டாம்.

  பக்கம் பக்கமா ஆத்துறது இருக்கட்டும். இதுக்கு பதில சொல்லுங்க மொதல்ல.. ஏமன் மக்களை குண்டு போட்டு கொல்லும் சவூதி அரேபிய ஷேக்குகள் குரான படிச்சு இருக்காங்களா இல்லையா இல்லை ஒருவேளை பகவத் கீதையா இருக்குமோ?

  பக்கத்து ஊட்டுக்காரன இசுலாம் காப்பதறது இருக்கட்டும்…சொந்த ஊட்டுல இருக்குறவனையே காப்பதற்கு வக்கில்லாம இருக்கே என்ன பண்றது? … படையப்பா சோப்போட பவர் கூட ரெண்டு நாள் துணிய காக்குது. அல்லாவுடைய பவரு அவ்ளோ தானா பாய்……

  • பி.ஜே-வை ஸ்கேண்டல் வெளியானதுல இருந்து கூட அல்லா காப்பாத்தலையே…

 15. ஆசாக் அவர்களே குரானை நம்புவதும் வழி படுவதும் உங்கள் உரிமை.அது உங்கள் வீட்டுக்குள் இருக்கும் வரை.அதுக்காக அறிவியல் என்ற மாபெரும் அறிவோடு குரான் மட்டுமல்ல பைபிள் வேதஇதிகாசம் போன்ற எவையும் அறிவியலோடு ஒப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு தகுதி படைத்தவை அல்ல.எல்லா மதத்தையும் அரும்பாடு பட்டு வளர்க்க ஆளுக்கொரு சேனல் வச்சிருக்கீங்களே “கரண்ட்டு” இல்லாம டிவியை கொஞ்சம் ஒட்டிக்காட்டுங்களேன் பார்ப்போம்.பாரதமாதா பிரியர்கள் யாரும் புஷ்பகவிமானத்துல போறதில்லை.பெட்ரோல்ல பறக்கிற ஊர்தில ஊர் ஊரா போய்தான் நாட்டையே விக்கிறாங்க.தொழுகைய ஆரம்பீக்கப்போறோம்னு மசூதி மேல மைக்க கட்டிக்கிட்டுதான்
  பாடவேண்டிருக்கு.வேளாங்கண்ணியில பல ஏக்கர்ல பில்லர்கள் வெளியவே தெிரியாம கட்டப்பட்டிருக்கிற அம்மாம்பெரிய சர்ச்சு அறிவியல் கைகளைப் பற்றிக்கொண்டுதான் நிற்கிறது.இப்படீ காலைல எழுந்திருச்சதிலேர்ந்து தூங்கப்போற வரைக்கும் அறிவியலை வக்கனையா பயன் படுத்திக்கொண்டு மதத்தீன் வழீ மூடநம்பிக்கைக்குள் மக்களைப் புதைக்கும் தீருப்பணியைத்தான் குரானும் செய்கிறது.அதென்ன தனிமனீத தவறுக்கு இஸ்லாம் பொறுப்பில்லைன்னு பொறுப்பீல்லாம ஒரு பதீல்?கல்வீ வேண்டும் என்று கேட்ட மலாலாவிற்கு துப்பாக்கித் தோட்டாக்களை பரிசளீத்த மதவெறீயர்களுக்கு யார் பொறுப்பு?அப்படீயாயின் வைத்தேயிராத மாட்டுக்கறீக்காக அடீத்தேக்கொல்லப்பட்ட அக்லக் எனும் அப்பாவி முதீயவருக்காக நீதீ வேண்டும் நீதி வேண்டும்னு படா
  ஆர்ப்பாட்டமெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது அல்லவா?மதம் எனும் “மதம்” அறிவியலின் வழி வீழ்த்தப்படக்காத்திருக்கிறது உலகம்.அப்படியான மனிதநேய உலகத்தீல் சேர்ந்து வாழ்வதற்கு உங்களுக்கு மறுப்பேதும் இருக்காது என்றே நம்புகின்றேன்.

 16. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று டார்வின் சொன்னதத்தை நம்பும் மூடர் கூட்டம் ஏன் ராமாயணத்தில் சொல்லப்பட்ட அனுமார் சுக்ரீவன் போன்றவர்களை பற்றி ஏளனம் பேசுகிறது.

  வெள்ளை தோல் உள்ள டார்வின் மார்க்சிஸ்ட் சொன்னதத்தை நம்பும் கூட்டங்கள் இந்தியர்கள் (ஹிந்துக்கள்) சொன்னால் உடனே அதை மூட நம்பிக்கை பொய் என்று சொல்வது.

  பெரியாரின் சீடர்கள் எப்போதுமே மூடர்கள் (முரடர்கள்)

 17. 1. நான் ஒன்னு ஒண்ணா கேட்ட கேள்விக்கு நல்ல சொதப்பல் பதில், அல்லாஹ் எங்கேயும் நான் வந்து எல்லா தீமையையும் தடுப்பேன் என்று சொல்லவில்லை, தவறு செய்தால் தண்டனை உண்டு என்று பல இடங்களில் குரானில் சொல்லப்பட்டுள்ளது ,
  2. குரோமோசோம் பற்றி தெரியாததால் நல்ல மழுப்பல் பதில், வாழ்த்துக்கள், கடல் பற்றி கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை,
  3. நான் முன்னையே சொன்னது போல் எந்த தனிமனித தவறுக்கும் இஸ்லாம் பொறுப்பாகாது , எப்படி பினராய் பிஜேபி யின் காலை கழுறது கம்முனிசம் பொறுப்பாகாது அது போல்,
  4. டார்வினும் ஐன்ஸ்டீனும் குரானை பார்த்து தான் அறிவியலை கற்றுக்கொண்டார்கள் என்று நான் சொல்லவில்லை, ஆதம் (அலை) அவர்களின் வாரிசுகள் தாம் உலக மக்கள் அனைவரும், அல்லாஹ் எல்லா வற்றையும் ஆதமுக்கு (அலை) சொல்லிக்கொடுத்தேன் என்று சொல்கிறான் , ஆக உலக படைப்புகள் எல்லாம் முன்னரே சொல்லிக்கொடுக்கப்பட்டது தான்,
  5. அப்பாவியை கொள்வது முழு மனித சமுதாயத்தை கொள்வது போல் என்று குர்ஆனில் உள்ளது , ஆக தனி மனித தவறுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பல்ல ,
  6. இன்னும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது கடலைப்பற்றி விளக்கம் கொடுத்திட்டு நீங்கள் அறிவாளி மேதாவி என்று நிரூபிக்க

 18. எந்த அறிவியல் உபகாரணத்தையும் இஸ்லாம் வேண்டாம் என்று சொல்லவில்லை, குரான் பல அறிவியல் சாதனங்களை கண்டுபிடிக்க காரணமாக இருந்துள்ளது, பல இஸ்லாமியர்கள் பல அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்துள்ளனர், பல அறிவியல் சாதனங்கள் ஆத்திகர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இப்போ அல்ல கேள்வி, வினவின் படம் சொல்வது ஆத்திகர்கள் பார்க்க பேச கேட்க தடை என்று இல்லாத ஒரு விஷயத்தை சொல்வது எப்படி நடுநிலைமை ஆகும் ?

  ஒரு இஸ்லாமியன் மற்றொரு இஸ்லாமியரின் உறுப்பு போன்றவன் , எப்படி நமது உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் நாம் துடிக்கிறோமோ அதுபோல் மற்ற முஸ்லிமுக்கு கெடுதல் என்றால் உதவனும் அதான் இஸ்லாம் , அஹ்லாக்க்குக்கு உதவியது இதுபோல் தான்

  இஸ்லாம் ஒருபோதும் மற்றவரோடு சேர்ந்து பயணிப்பதை தடுக்கவில்லை , இஸ்லாம் பல இடங்களில் சிந்திக்க சொல்கிறது , குரானின் முதல் வசனமே”படி”என்பதுதான், ஆக இஸ்லாம் தான் அறிவியல், இஸ்லாத்தில் சொல்லப்படாத அறிவியல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை,

  இஸ்லாத்தில் மனித நேயம்
  1. பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான முஸ்லீம் அல்ல
  2. பக்கத்து வீட்டுக்காரனுக்கு கொடுப்பதற்காக குழம்பை அதிகமாக காய்ச்சுங்கள்
  3. தன கரத்தாலும் நாவினாலும் மற்றவரை துன்புறுத்தாதவனே உண்மையான முஸ்லீம்
  4. பாதையில் துன்பம் தரக் கூடிய பெரிய கல்லோ அல்லது முள்ளோ அல்லது கண்ணாடிச் சில்லோ கிடந்தால் அதை நாம் அகற்ற வேண்டும்
  5. ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும்
  6. இன்னும் பல சம்பவங்கள் மனிதநேயத்துக்கு சான்றாக உள்ளது.

 19. பி.ஜே-வை ஸ்கேண்டல் வெளியானதுல இருந்து கூட அல்லா காப்பாத்தலையே

  # அல்லாஹ்வின் வேலை அது அல்ல #

 20. #இந்து வெறியர்கள் அவ இஸ்லாமிய ப்பெண்ணின் உறுப்பில் சூலத்தை சொருவும்போது
  எல்லாம் வல்ல மண்ணில் இருந்து மனுசனை ஊதிவிட்ட அல்லாவால் ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை? அந்த வெறியர்களும் அவர் உருவாக்கியவை தானே?#

  இறைவன் உலகைப்படைத்து மனிதனை படைத்து அவர்கள் நேர்வழிப்பெற இறைத்தூதரை அனுப்பினான் , அவர்களுக்கு வேதங்களை கொடுத்தான், அவர்கள் நெற்வழிப்பேர மற்றவரை துன்புறுத்தாமல் இருக்க வலியுறுத்தினார் , அவர்கள் அதை மீறும் பொது அவர்களுக்கு தக்க தண்டனை உண்டு

  இஸ்லாத்தை பொறுத்தவரை இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் இல்லை , இறப்புப்பின் உள்ள வாழ்வே நிலையானது , அந்த சமயத்தில் தீங்கு செய்தவருக்கு நரகம் நன்மை செய்தவருக்கு சொர்க்கம்

  என் வேண்டுகோள் இஸ்லாத்தை பற்றி குறைந்த பட்சமாவது படித்துவிட்டு பின்னூட்டம் இட்டால் நல்லது

 21. டாரவின் ஒரு கிறிஸ்ட்டின், அவர் எங்கேயும் தன்னைப்பற்றி கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லவில்லை

 22. பாய் இங்குதா இருக்கபோறேன் அதுக்குள்ளே என்ன அவசரம், பிரிச்சி மேய்வோமா..
  கம் ஆன் ஸ்டார்ட் தி மியூசிக்…

  //1) 13.8 பில்லியன் கணக்கெல்லாம் இருக்கட்டும் , அதை ஏற்றுக்கொள்ளும் முன் எதுவும் தானாக உண்டாகாது என்பதும் அறிவியல் தான், இந்த உலகம் எப்படி தானாக உண்டாகும், இங்கே நாம் போடும் பின்னூட்டம் தானாக போடப்பட்டது என்று நம்புவது எப்படி முட்டாள் தனமோ அதுபோல் தான் உலகம் தானாக உண்டானது என்பது//

  பாய் அந்த இலக்கம் எண்ணற்ற ஆராய்சிகள் மூலம் நிருபிக்க பட்டது, ‘இருக்கட்டும்’ என்பது என்ன மழுப்பல்? குர் ஆண் என்ன சொல்கிறது பிரபஞ்ச வயதை பற்றி?
  எதுவும்தா னாக உருவாகாது என்பது அறிவியல் என எந்த மாங்கா சொல்லித்தந்தான் உங்களுக்கு? ஐயா ராசா குவாண்டும் மெகானிக்ஸ் படித்தால் விளங்கும் எப்படி மெய்நிகர் துணிக்கைகள் ஒன்றுமே இல்லாத வெளியில் இருந்து தோன்று கின்றன என விளங்கும், அதற்கெல்லாம் சமன்பாடுகள் இருக்குதுப்பா. ஆம் பிரபஞ்சம் ஒருவராலும் உருவாக்க படவில்லை, இதை வைத்தே உங்களை என்னை எல்லாவற்றையும் ஆக்கும் அணுக்கள் கூட ஒரு காலத்தில் (ட்ரிலியன் கணக்கு) decay ஆகி போய்விடும், எல்லாம் கணிக்க பட்டவை. நீங்க தானாக போடவில்லை பின்னூட்டம், ஆதி ஒருமை புள்ளியில் (பிக்பாங் சிங்குலாரிட்டி) ஏற்பட்ட குவாண்டம் அசைவுகளே இன்றைய பிரமாண்ட கலாசிகள், விண்மீன்கள், கோள்கள், நீர் நான் பின்னூட்டம் எல்லாம்…இதெல்லாம் இயற்பியலில் இருக்குதுங்கோ கொஞ்சம் படிங்கோ…ஹா பின்னூட்டம் போடுர்ரராம் அது அல்லா உலகத்தை படச்சதுக்கு உதாரணமாம்.

  //) குரோமோசோம் பற்றி தெரியும் என்று நினைக்கிறேன், குரங்குக்கு 48, மனிதனுக்கு 46, எப்படி 48 ல் இருந்து 46 ஆனது என்று விளக்கினால் நன்னடராக இருக்கும்//
  2. குரோமோசோம் பற்றி தெரியாததால் நல்ல மழுப்பல் பதில், வாழ்த்துக்கள், கடல் பற்றி கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை,//

  இருங்க பாய், அதுதான் நேரம் இல்லை என சொன்னேனே..இப்போ மேய்வோமா
  பாய் மொதல்ல சோடி குரோமோசோம்கள் என சொல்ல பழகுங்கள், 24 சோடிகளில் ஒத்த தகவல்கள் கொண்டிருந்த இரு சிறிய குரோமோசோம்கள் இணைந்து ஒன்றானது, இது வெகு காலம் முன்னாடி நடந்ததுங்க பாய், இப்போ அல்லா தான் இணைத்தான் என கத்தவும், மனித குரோமொசொமான 2’இல்’ இந்த இணைப்பான ‘டெலோமியர் இணைப்பு’ (telomere fusion) இன் பதிவு இன்னும் உள்ளது. பாருங்க பாய் பரிணாமம் என்பது மிக சிறப்பான ஒழுங்கமைத்தலை செய்யும், இந்த குரோமோசோம் இணைப்பை போலவே கடந்த சில பத்தாயிரம் வருடங்களாக மனித மூளை அளவு சிறுத்துள்ளது, அதற்காக உங்களையோ பீஜெவையோ மூளை கெட்ட கூமுட்டைங்க என சொல்ல முடியுமா? மூளை சிறுத்தாலும் சிறப்பான ஒழுங்கமைத்தளால்அ தன் செயல்திறன் கூடித்தான் உள்ளது. அதே போல் தான் குரோமோசோமும், சிறப்பாக ஒழுங்கமைக்க பட கூடியவை ஒழுங்கமைக்க படும். ஓஹோ ஒருவேளை அதிக குரோமோசோம் இருந்தால் தன மனிதன் எனும் முடிவுக்கு வந்துவிட்டார்களோ….ஆஹா என்னே அறிவு.

  //எப்படி பினராய் பிஜேபி யின் காலை கழுறது.//
  என்னங்க சொல்றிங்க, பினராய் எந்த விதத்தில் பிஜேபி கலை கழுவுகிறார்? ஆட்சி சட்ட சிக்கல் களை எதிர்நோக்கும் ஒரு தோழரை நாம் புரிந்து தான் வைத்துள்ளோம், இஸ்ரேல் கரன் கூட கூட்டு செந்துள்ள பாலஸ்தீனர்களை தீவிரவாதி என சொல்லும் உங்கல் ஹோம்பாய் இளவரசர் பற்றி உங்க கருத்தென்ன? அதுவும் புனித கப்பாவை கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஒரு நாட்டு இளவரசர்,இரகசியமாக இசுரேலை ஊம்புகிறார் ? இதற்கு உங்கள் உலக இசுலாமிய சகோதரத்துவ சிந்தை என்ன பதில் சொல்கிறது?

  // டார்வினும் ஐன்ஸ்டீனும் குரானை பார்த்து தான் அறிவியலை கற்றுக்கொண்டார்கள் என்று நான் சொல்லவில்லை, ஆதம் (அலை) அவர்களின் வாரிசுகள் தாம் உலக மக்கள் அனைவரும், அல்லாஹ் எல்லா வற்றையும் ஆதமுக்கு (அலை) சொல்லிக்கொடுத்தேன் என்று சொல்கிறான் , ஆக உலக படைப்புகள் எல்லாம் முன்னரே சொல்லிக்கொடுக்கப்பட்டது தான்//

  ஆஹா இந்த அக்கபோரை பாருங்கள், பாவம் டெஸ்லா குந்திகிட்டு மாங்கு மாங்குன்னு யோசிச்சு இந்தளவு கண்டுபிடிப்பையும் செய்தாரே, கடவுளின் கோபம் என எல்லாரும் பயந்த மின்னலை மின்னிறக்கம் என சொன்னதோடு அதை பட்டத்தின் மூலம் பிடிக்க முயன்று ஷாக் பெற்ற பெஞ்சமின்பி ராங்கிளின் மற்றும் சில உயிரையே விட்ட கண்டுபிடிப்பாலர்களெல்லாம் ஆதாமின் அறிவை தொலைத்தவர்களா? இல்லை லூசு பயல்களா? உங்களுக்கு இது ரெண்டுதான் சாய்ஸ் பாய்ஸ்.

  //4) நீங்கள் சொல்லும் அனுமானத்தை எல்லாம் நம்ப முடியாது, பல கருத்துக்கள் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் , கார்பன் dating மூலம் வயதை தான் கணிக்க முடியும், குரங்கு எப்படி மனிதன் ஆனது என்றெல்லாம் கணிக்கமுடியாது
  5) எந்த அகழ்வாராச்சி மூலம் குரங்கு மனிதன் ஆனது என்று சொன்னால் நன்றாக இருக்கும்//

  பாய் டீ என் ஏ சீகுன்சிங் பற்றி சொல்லி இருப்பது படிக்கவில்லையா? அதுகூட சரியாக சுவடு சிக்கினால் நிச்சயம் நிருபிக்க முடியும் இவர்தான் ஆசாமின்னு, நாம் எப்போது அகழ்வாராச்சி மூலம் குரங்கு மனிதனை ஆனது நிருபிக்க பட்டது என்று? அது புவியின் வயதை கணிக்க பயன்பட்ட கதிரியக்க பாறைகளை கண்டுபிடிக்க உதவியது என்றுதான் குரிப்பிடேன் (ச்சே மொதல்ல ஒழுங்கா படிங்க பாய்)

  மணிகண்டனின் (கேப்பில கடையை விரிக்காம கெளம்புங்க ராசா)-
  //வெள்ளை தோல் உள்ள டார்வின் மார்க்சிஸ்ட் சொன்னதத்தை நம்பும் கூட்டங்கள் இந்தியர்கள் (ஹிந்துக்கள்) சொன்னால் உடனே அதை மூட நம்பிக்கை பொய் என்று சொல்வது.
  பெரியாரின் சீடர்கள் எப்போதுமே மூடர்கள் (முரடர்கள்)

  மற்றும் உங்களின்
  //டாரவின் ஒரு கிறிஸ்ட்டின், அவர் எங்கேயும் தன்னைப்பற்றி கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லவில்லை//

  இருவரும் ஒன்றை புரிந்து கொள்ளவும் , உங்கள் மதம் போல் அவர்கள் தமது கருத்துக்கள் தான் அறுதி உண்மை என நம்ப சொல்லவில்லை, பெரியார் தன்னையும் கேள்வி கேள் என்றார் டார்வின் தனது ஆராய்ச்சி முடிவுகளை சமர்பித்தார் முடிவுகள் தற்போது எண்ணற்ற ஆதாரங்கள் மூலம் நிருபிக்க பட்டது நிருபிக்க பாடுகொண்டிருக்கிறது. உண்மையில் அவர்களுக்கு விவாதமே செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அவர்கள் மக்களை கட்டுபடுத்த விரும்பவில்லை, உங்களுக்கு எப்பாடு பட்டாவது பயத்தின் மூலமும் அறியாமை மூலமும் மக்களை கட்டுபடுத்த தேவை இருக்கிறது, உங்களுக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையான கள்ள காதல் இப்போ ஊரே சிப்பா சிக்குது அம்பி அண்ட் பாய்…

  # அல்லாஹ்வின் வேலை அது அல்ல #
  வேற என்னதாங்க அல்லாவின் வேலை?

  //இஸ்லாத்தை பொறுத்தவரை இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் இல்லை , இறப்புப்பின் உள்ள வாழ்வே நிலையானது//

  இறப்பை விடுங்க பாய்..நீங்க நல்ல குறட்டை விட்டு தூங்கும் போது எங்க போறீங்க பாய்? இறந்தவுடன் அழுகும் மூளை என்னும் பொருளில் தான் பாய் குர்ரான் அல்லா அடுத்த பிறவி மன்னாங்கட்ட்டி எல்லாம், மூளை அழுகியவுடன் எல்லா ஒழும் போய்டும் பாய்.

  //என் வேண்டுகோள் இஸ்லாத்தை பற்றி குறைந்த பட்சமாவது படித்துவிட்டு பின்னூட்டம் இட்டால் நல்லது//

  இங்க தான் நிக்கிறிங்க பாய், நாம வேலையத்து உயிரியல் மரபியல் பவுதீகவியல் எல்லாம் படித்து விளக்கம் சொன்ன ஒடனே குரானை படி ன்ன வேண்டியது…
  யப்பா சாமி அல்லா காப்பாத்துப்பா…

 23. ஆசாக் அவர்களே.சக மனிதனை மதிக்கணும் நேசிக்கனும் ஒற்றுமையா இருக்கணும் கள்ளம்கபடம் கூடாது ஏமாற்றக்கூடாது இதையெல்லாம்தான் குரான் சொல்லுதுன்னா இதைச் சொல்றதுக்கு எதுக்குங்க குரானு?வீதியில் விளையாடும் சிறார்களையும் குழந்தைகளையும் கொஞ்சம் காணுங்கள்.மதமறியா அந்த பிஞ்சுகள் எத்துனை மனிதமாய் இருக்கிறார்கள் என்று.சமூகத்தில் அவர்கள் வளர வளர மதமென்னும் விஷத்தை அவர்களிடத்தில் தெளித்து முதலாளித்துவம் எனும் சிறப்பு பாய்சனுடன் கைகோர்த்து உலகையேத் துண்டாடும் பயங்கரவாதச்செயல்களை செய்வதே மதங்கள்தான்.இதை வேரோடு சாய்க்கும் மகத்தான பணியை அறிவியல் சித்தாந்தமான மார்க்சியம்தான் உலகெங்கும் நிரூபிக்கப்பட காத்திருக்கிறது.தாமதமாயினும் வேறு குறுக்குவழி “மார்க்கமெல்லாம்”எதுவும் இல்லை.நீங்கள் குரான் படீத்துள்ளீர்கள் ச்சரி. நாங்களும் அதைப்பற்றி அறிந்து கொள்ளும் விதமாக தெரிந்துதான் வைத்துள்ளோம்.நம்பர்கள் வேண்டுமாயின் தெரியவில்லை.ஆனால் குரானைப்பற்றி நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் ஒன்னாயிரு வேர்வை காஞ்சிடக்கூடாது ஜப்பான்ல சாக்கிச்சான் கூப்பிட்டாக இப்படி இந்த ரேஞ்சில இருந்தா அந்தக்குரானை வச்சிக்கிட்டு என்னதாங்க பண்றது?இந்தியத்தாயின் இரத்தத்தை(இங்கே தண்ணீர் என்றும் பதிவிட மனமில்லை)உறிஞ்சிக்கொழுக்கும் கோக் பெப்சி துரைமார்களை விரட்டியடித்து எம் தாயைக்காக்க எந்த குரான்கிட்ட திட்டம் இருக்கு? இல்லை பாபர்மசூதியை இடீச்சித்தள்ளி இப்ப திடீர்னு உங்களை சப்போர்ட் பண்றமாதீரி
  வந்து “புண்ணூட்டம்”(வார்த்தைப் பிரயோகம் நன்றி அக்காகி நண்பா)போடுற எந்த மணிகண்ட சுக்ரீவன்கிட்ட ஏடாவது திட்டம் இருக்கு?(தாஜ்மகாலையாவது அல்லா காப்பாத்தட்டும் சுக்ரீவன்களிடமிருப்ந்து)உலகம் இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கிறது.அதன் மாற்றத்திற்கேற்ப அறிவியல் சிந்தையான மார்க்சியம் மட்டுமே அதன் கடமையாற்றி வருகிறது.இதை வேறு வடிவில் விளக்கிய தஸ்லிமாவின் தலையைக் கொய்யக்கேட்டதல்லாவா உங்கள் குரானிய நீதி!ஆகவே அறிவியல் அறியுங்கள்.அறிவியல் வேறு அதனின்று மதம் முற்றிலும் வேறு என்பதை அனுபவித்து உணருங்கள்.ஆசாக் இல்லத்துக்குள் இஸ்லாமியராக குரான் ஒதட்டும்.பொதுவெளியில் சமூகத்தின் தீர்வு அறிவியல்பூர்வமான கருத்துக்களில்தான் உள்ளது என்பதை பரிசீலிக்கட்டும்.கை வலிக்க அறிவியல் சொல்லிக்கொடுத்த சகோ சின்னாவை குரான் (ஆசாக் கொஞ்சமேனும் தெரிந்தாரோ இல்லையோ நான் நிறைய தெரிந்து கொண்டேன்.நன்றி சின்னா)படியுங்கள் என்று பிறிது மீண்டும் ஆசாக் சொல்லாதிருக்கட்டும்.

 24. #எல்லாம் கணிக்க பட்டவை#

  நிரூபிக்கப்பட்டவை அல்ல

  குவாண்டம் mechanics இதுவரை நிரூபிக்கப்படாத கூற்று

  telomere fusion என்பது புற்றுநோய் போன்ற நோய்க்கான விளக்கம், மாறாக குரங்கு மனிதனாகவோ , அமீபா மற்ற மற்ற விலங்காகவோ மாறுவதற்கல்ல, 13.8 பில்லியன் கணித்த உங்களால் முதல் உயிர் முதல் மனிதன் வரை எந்த எந்த உயிர்கள் வந்தது என்று விளக்கமுடியாது, காரணம் நீங்கள் சொல்வதெல்லாம் கற்பனை , மேலும் ஏன் மனிதன் இன்னும் வேறு உயிராக மாறவில்லை என்றும் விளக்கினால் நல்லது

  நீர் மூளை கெட்ட கூமுட்டை இல்லை என்பதை கடல் பற்றிய குரான் வசனத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டு நிரூபி

  தனிமனித தவறுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பல்ல

  பிஜேபி யின் காலை கழுவும் பினராய்க்கு விளக்கு பிடிப்பதை நிறுத்தவும் , தமிழ்நாடு கம்ம்யூனிஸ்ட் எதிர்ப்பார்க்கலாம் கேரளா கம்ம்யூனிஸ்ட் அணைப்பார்களாம் நீட்டையும் பிஜேபி யையும்

  DNA மூலம் எந்த உயிர் என்றுதான் கண்டுபிடிக்கமுடியும் , குரங்கு மனிதன் ஆனதை கண்டுபிடிக்கமுடியாது

  கடவுளை இல்லை என்று சொன்ன பெரியார் எவ்வளவோ விஷயத்தில் இஸ்லாத்தோடு ஒத்து போயிருக்கிறார்

  #மூளை அழுகியவுடன் எல்லா ஒழும் போய்டும் பாய்#

  கண்டமான ஹார்ட் டிஸ்க் ல் இருந்தே ரெகவரி சாப்ட்வேர் போட்டு அழிந்ததை எடுக்கமுடியும்

  விவாதத்துக்கு நீர் சொன்ன எல்லா கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன், அறிவாளி மேதாவி என்பதை நிரூபிக்க அந்த குரான் வசனத்துக்கு விளக்கம் கொடுக்கவும்

 25. குரானை படிக்க சொன்னது அறிவுக்காக அல்ல , பல முட்டாள்தனமான கருத்துக்களை எழுதாமல் இருக்க , அடிப்படை தெரியாமல் கருத்து போடாமல் இருக்க

  • I have read Koran more than 7 times (cover to cover, various translations) and Bible more than 20 times (same as above).

   But I can say for sure that Evolution and Bib Bang theory explains thins more clearly and logically than any of the religious texts I have ever read. Why don’t you try to think for yourself?

 26. ##ஆசாக் அவர்களே.சக மனிதனை மதிக்கணும் நேசிக்கனும் ஒற்றுமையா இருக்கணும் கள்ளம்கபடம் கூடாது ஏமாற்றக்கூடாது இதையெல்லாம்தான் குரான் சொல்லுதுன்னா இதைச் சொல்றதுக்கு எதுக்குங்க குரானு?##

  குரான் என்பது மனிதன் உலகம் எப்படி வந்தது ? மனிதன் ஏன் படைக்கப்பட்டான் ? எதை எப்படி செய்யவேண்டும் என்று விளக்கும் நூல் , அதை பின்பற்றி வாழ்ந்தது முஹம்மது (ஸல்) அவர்கள் , அவர்களை பின்பற்றுவோர் முஸ்லீம் , சிறிய விஷயமாக இருந்தாலும் அதை சொல்லவேண்டும், அதுதான் மனிதனுக்கான வழிகாட்டி

  ####வீதியில் விளையாடும் சிறார்களையும் குழந்தைகளையும் கொஞ்சம் காணுங்கள்.மதமறியா அந்த பிஞ்சுகள் எத்துனை மனிதமாய் இருக்கிறார்கள் என்று.சமூகத்தில் அவர்கள் வளர வளர மதமென்னும் விஷத்தை அவர்களிடத்தில் தெளித்து முதலாளித்துவம் எனும் சிறப்பு பாய்சனுடன் கைகோர்த்து உலகையேத் துண்டாடும் பயங்கரவாதச்செயல்களை செய்வதே மதங்கள்தான்.இதை வேரோடு சாய்க்கும் மகத்தான பணியை அறிவியல் சித்தாந்தமான மார்க்சியம்தான் உலகெங்கும் நிரூபிக்கப்பட காத்திருக்கிறது#####

  இஸ்லாம் எங்கேயும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை, நீங்கள் சொல்லும் அறிவியல் கண்டுபிடிப்பால் தான் உலகம் இன்று அழிந்து கொண்டிருக்கிறது .

 27. கம்முனிசம் அழிந்தே போகும் , 100 ஆண்டுகள் கூட அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை

  • சரி நாம கம்யுனிசத்த பத்தி அப்பால பேசலாம்…

   உங்க அல்லாவ யாரு உருவாக்குனாங்கன்னு சொல்லுங்க’ மொதல்ல?… அவரு எப்படி இருந்தாருனு சொல்லுங்க…

   எப்படி இப்படி பக்கம் பக்கமா அடிச்சு நெவுத்தறீங்க… மணிகண்டனோட பசுமாட்டுமூளை ஒங்க ஒட்டக மூளையிடம் பிச்சை வாங்கணும் போல……

  • சகோதரர் ஆசாக் ,

   உலகில் எங்குமே இன்னும் கம்யுனிசம் என்ற அரசியல் – சமுக அமைப்பு நிறுவப்படவே இல்லேயே ! அப்புறம் எப்படி இல்லாத ஒன்று அழியும் சகோ? சின, சோவியத் கட்டமைப்புகள் எல்லாம் சோசியலிச கட்டமைப்புகளே! சோசியலிச சமுகத்தை கட்டமைப்தில் கம்யுனிஸ்டுகளாகிய நாங்கள் நடைமுறை தவறுகளை செய்து இருக்கோம் என்பதனை ஏற்கின்றோம். அதே நேரத்தில் நடைமுறை தவறுகளில் இருந்தும் சித்தாந்த திரிபுகளில் இருந்தும் விடுபட்டு மேலும் மனித சமுகம் சோசியலிசத்தை நோக்கி முன்னேறும் அதற்கு அடுத்தப்ட்டமாக உலகளாவிய கம்யுனிச சமுகத்தை படைக்கும் !

 28. நீங்கள் எவ்வளவு பிரச்சனிங்களை பட்டியல் இட்டாலும் ஒரே பதில் தான் தவறு செய்தவருக்கு தண்டனை உண்டு , இயற்கையை காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கடமை , மீறினால் தண்டனை உண்டு

 29. நீங்கள் நியாவான்களாக இருந்தால் அறிவுள்ளவர்களாக இருந்தால் மட்டும் குரான் வசனத்துக்கு விளக்கம் தவறும் , கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் வசதியாக பதில் சொல்ல மறுப்பதேன் ?

 30. //நிரூபிக்கப்பட்டவை அல்ல
  குவாண்டம் mechanics இதுவரை நிரூபிக்கப்படாத கூற்று//

  ஹிஹிஹ்ஹி பாயி பாயி..குவாண்டம் மெகானிக்ஸ் குர் ஆன் வசனத்தை போல் ஒரு கூற்றல்ல, நிருபிக்க. அது அதி நுண் துகள்களின் நடத்தையை விபரிக்கும் இயற்பியல் ஆகும், அதை போய் நிருபிக்க முடியவில்லை என்பது வேற லெவல் முட்டாள்தனம். இன்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் குவாண்ட மூவாயி , கணினி போன்றவை குவாண்டம் மேகனிக்ஸ் ஆராய்ச்சிகளால் அன்றி வேறு எதனால்? குர் ஆனாலா ? ஒரு அல்லா சொல்லி கொடுத்தது மக்கு ஆதமுக்கு மண்டையில் ஏறாமல் போயிருக்கலாம், ஆனா என்ன செய்றது பாய் நாசமா போன கலிலியோ டெலேஸ்கோப் மூலமா வானத்தை பாத்துபுட்டான், லேவன்கூக் மைக்ரோஸ்கோப் மூலம் சின்னதெல்லதியும் நோன்டிபுட்டான்…அன்னிக்கு தொடங்கிச்சு நமக்கு பாதிரிக்கு சாமிக்கு ஆப்பு.

  //telomere fusion என்பது புற்றுநோய் போன்ற நோய்க்கான விளக்கம், மாறாக குரங்கு மனிதனாகவோ , அமீபா மற்ற மற்ற விலங்காகவோ மாறுவதற்கல்ல, 13.8 பில்லியன் கணித்த உங்களால் முதல் உயிர் முதல் மனிதன் வரை எந்த எந்த உயிர்கள் வந்தது என்று விளக்கமுடியாது, காரணம் நீங்கள் சொல்வதெல்லாம் கற்பனை , மேலும் ஏன் மனிதன் இன்னும் வேறு உயிராக மாறவில்லை என்றும் விளக்கினால் நல்லது//
  //DNA மூலம் எந்த உயிர் என்றுதான் கண்டுபிடிக்கமுடியும் , குரங்கு மனிதன் ஆனதை கண்டுபிடிக்கமுடியாது//

  அட மறுபடியும் கொட்டிபுடுவன் மக்கு பாய், டெலோமியர் பிணைப்பு ஒரு ‘விளக்கம்’ அல்ல, அது அச்சாவாக அசலாக குரோமோசோம்களில் நடைபெறும் ஒன்று. 24 சோடி 23 சோடியானதுக்கு விளக்கம் கேட்டுபுட்டு ஏன் குரங்கு மனிதன் ஆகவில்லையாம், சாமி முடியலை இதில கேன்சர் கண்டுபிடிப்பு வேற, குர் ஆனில சொல்லியிருக்கா பாய் கேன்சர் வர telomere பிணைப்பு தான் காரணம்னு ? நோபல் கமிட்டிக்கு அனுப்புங்க. ஏன் மனிதன் வேறு உயிரினம் ஆகவில்லையா? காஸ்மிக் கலண்டரை பத்திங்க தானே முன்னமே சொன்னமாதிரி மில்லியன் கணக்கான வருடங்களா நடக்கும் பரிணாமத்தை சில தலைமுறைகளில் காண கேட்கும் உங்களை…

  //நீர் மூளை கெட்ட கூமுட்டை இல்லை என்பதை கடல் பற்றிய குரான் வசனத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டு நிரூபி//
  விவாதத்துக்கு நீர் சொன்ன எல்லா கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன், அறிவாளி மேதாவி என்பதை நிரூபிக்க அந்த குரான் வசனத்துக்கு விளக்கம் கொடுக்கவும்//

  என்னங்க இது உங்க அத்த்துப்படி குர் ஆன் வசனத்துக்கு என்கிட்டே விளக்கம் கேக்கிரிங்க? XDD
  என்ன காமிடிடா இது..ஏன் பீஜே சாகிர் நாயக் போன்றோருக்கு தெரியலியா? அதென்னங்க கடலை பிரிச்சாச்சு மேஞ்சாச்சு தத்துவம்? எனக்கு தெரியாம தானே கேக்கன் நீங்க சொல்லுங்க பாய், உங்களுக்கு இவ்வளோ அருச்சுவடி நான் டைப் பண்றன் தானே? இவ்வ்வ்வவ்வ்வவ்ளோ அறிவியல் ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்காத என்ன மயித்து அற்புதம் இருக்கு அந்த வசனத்துல? அப்பிடியே உங்கலுக்கு ஏதாச்சும் தெரிந்ச்சாலும் உலகத்துக்கு என்ன பிரஜோஜனம் அதால?

  //தனிமனித தவறுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பல்ல//
  அதெப்படி அறிவியல் அது இதெல்லாம் அல்லா ஓதி விட்டது…உங்கள்ள யாராச்சும் சொன்ன ஒடனே தனிமனித தவறு..நல்லா இருக்குடே. குடிச்சு சீட்டாடிகிட்டு பீஜே சாகிர் நாயக் வீடியோக்களை சிலாகிக்கும் உங்களுக்கு நழுவும் புத்தியை தவிர வேற என்ன வரபோகுது.
  நித்தியானந்தாகளின் பேச்சு எவ்ளோ மேல்ப்பா..

  //கடவுளை இல்லை என்று சொன்ன பெரியார் எவ்வளவோ விஷயத்தில் இஸ்லாத்தோடு ஒத்து போயிருக்கிறார்//

  அப்டியே பெரியார் அவருக்கே தெரியாம இஸ்லாமியராய் இருந்தார் என அறிவிச்சுடலாமா பாய் (பெரியார்தாசன் காமிடி தான் ஞாபகம் வருதுங்கோ XDD) இந்த ஒத்து போனது ___________ எல்லாம் இருக்கட்டும், இந்தளவு அறிவியலை மறுத்து அல்லாவை தூக்கி பிடிக்கும் உங்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் சமூக அநீதிக்கும் உதவுவது மதம், மதத்துக்கு அத்திவாரம் கடவுள், ஆகவே கடவுளை மறு என்ற பெரியாருக்கும் வெகு தூரம்.

  //கண்டமான ஹார்ட் டிஸ்க் ல் இருந்தே ரெகவரி சாப்ட்வேர் போட்டு அழிந்ததை எடுக்கமுடியும்//
  அப்படியா அல்லா மூளைக்கு எந்த ரெகவரி சாப்ட்வேர் வச்சுக்காரு?

  அதென்னங்க பாய் கேப் கெடைக்கும் போதெல்லாம் கம்யூனிசம் அழிஞ்சுடும் அழிஞ்சுடும் னு சாமியாடுரீக? உண்மையிலேயே இசுலாத்தை அளிக்க நினைப்பது மேற்கு உலகு மற்றும் இசுரேல், இதில் கம்யூனிஸ்டுகள் மேல் இந்தளவு காண்டுக்கு என்ன காரணம்? மார்க்ஸ் யூதர் என்ற வெறுப்பா? இல்ல முதலாளித்துவ பாசமா? சொல்லுங்க பாய் சொல்லுங்க

 31. குரானுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை தானே பிறகு எப்படி இரு கடலும் ஒன்றோடு ஒன்று சேராமல் பல்லாயிரக்கணக்கான வருடம் அப்படியே இருக்கிறது , நீங்க தான் அறிவாளி ஆச்சே , வெக்கம் மானம் சூடு சோரரை உள்ளவர் ஆச்சே , அதனாலதான் கேட்க்கிறேன் குரான் வசனம் பொய் என்று நிரூபியுங்கள் , உடனே குரானை மறுத்துவிட்டு கம்முனிசத்தை ஏற்றுக்கொள்கிறேன், தயாரா?

 32. இஸ்லாமியர்கள் ஆகிய நாங்கள் சொல்வது இறைவனின் கட்டளை , இறைவனை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் காரணத்தை சொல்லவும் , அறிவு இருந்தால் மட்டும்

 33. சகோதரர் ஆசாக் ,

  பிறகின்ற குழந்தை ஆணா பெண்ணா என்று இறைவன் தான் முடிவு செய்வதாக குரான் கூறுகின்றது. ஆனா பாருங்க மனிதன் மருத்துவ தொழில் நுட்ட்பதின் உதவியுடன் கருவுறும் குழந்தையை ஆணாகவும் படைக்க முடியும் , பெண்ணாகவும் படைக்க முடியும். இத்தகைய தொழில் நுட்பம் ஆண் பெண் பாலின வேறுபாடுகளை மேலும் அதிகபடுத்தும் (gender bias) என்ற காரணத்தால் அரசு அந்த தொழில் நுடபத்தை இந்தியாவில் தடை செய்து உள்ளது. ஆனாலும் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் அந்த தொழில் நுட்பம் நடைமுறையில் உள்ள தய்வான் போன்ற ஆசிய நாடுகளுக்கு சென்று செயற்கை முறையில் கருவுற செய்து தேவையான பாலினத்தில் குழந்தையை பெற்றுக்கொண்டு தான் இருக்காங்க. நம்ம ஷாருக்கானும் அப்படிதானே இப்ப ஒரு கொழந்தையை பெத்துகிட்டாறு!

  விசயத்துக்கு வருவோம்…. அப்ப ஆண்டவன் முடிவு செய்யும் பாலின விசயத்தை கூட மனிசன் அறிவியல் தொழில் நுட்பத்தின் ஊடாக இன்றைக்கு முடிவு செய்கின்றான் என்றால் அப்ப இனி ஆண்டவனுக்கு என்னவேலை ஆசாக் ?

  குறிப்பு : விஷயம் என்னவென்றால் பெண்ணின் கருமுட்டையில் உள்ள XX குரோமொசம்களுடன் ஆணின் விந்தணுவில் உள்ள XY சேரும்போது தான் கருவுறுதல் நடைபெறுகிறது.

  பெண்ணின் X + ஆனின் Y = XY ஆண் குழந்தை
  பெண்ணின் X + ஆணின் X = XX பெண்குழந்தை..

  குரான் என்ன சொல்லுது என்றால் பெண்ணின் X உடன் ஆணின் X சேருமா அல்லது ஆணின் Y சேருமா என்று அஆண்டவன் தான் முடிவு செய்யறாரு என்று சொல்லுது…

  இன்னிக்கி மனுசன் அதே வேலையை ஆய்வு கூட்டத்தில் செய்யறான். அப்ப இனி ஆண்டவன் யாரு?

  • இறைவன் நாடுவதை தான் மனிதனும் செய்கிறான் விந்துவும் செய்கிறது, மேலே கேட்டது போல் எல்லாம் தானாக நடக்கும் என்றால் ஏன் வேலைக்கு போகிறீர்கள் , இதற்க்கு சரியான பதில் இதுவரை வரவில்லை

   • என்ன சகோ உளறிகிட்டு இருக்கீங்க? தானா கட்டவுள் நினைப்பு படி குழந்தை பிறக்கும் என்றால் எதுக்கு மனிதன் உடலுறவு கொள்கின்றான்? அப்படி செய்தும் குழந்தை பிறக்கவில்லை என்றால் எதுக்கு ஆய்வு கூட த்தில் செயற்கையாக கருத்தரிப்பு செய்து கொள்கின்றான் சொல்லுங்க பார்கலாம்.. என்னுடைய விவாதம் எதனை ப்ர்ரியது௮ என்றாவது புரியுதா உங்களுக்கு!

    அம்மா வயிற்றில் கருவுற்ற உயிர் ஆண் அலல்து பெண் என்பதனை இறைவன் தீர்மானிகின்றனர் என்று குரான் சொல்லுது அல்லவா? அப்படி இஇல்ல அதனை மனிதனே ஆய்வு கூடத்தில் தீர்மானம் செய்கின்றான் என்பதே எனது கருத்து… முடிந்தால் நேரடியா பதில் கூருங்க சகோ…

 34. சகோதரர் ஆசாக் ,

  இன்னும் கூட மேல் உள்ள விசயத்தை பற்றி விரிவாக பேசமுடியும் நம்மால். ஆணின் விந்தணுக்கள் இல்லாமல் கூட ஒரு பெண்ணால் குழந்தையை பெற்றுகொள்ள முடியும் என்ற நிலையில் தான் அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது. ஆமாங்க பிரதி எடுத்தல் தொழில் நுட்பம் தான் அது. ஆங்கிலத்தில் cloning technique என்று சொல்வார்கள். இந்த தொழில் நுட்பத்தின் ஊடாக தான் டோலி ஆடு கூட உருவாக்கப்பட்டது என்ற விசயம் உங்களுக்கு நினைவில் இருக்குமென்று நினைகின்றேன். இத்தைய விசயங்கள் எல்லாம் குரானின் வாசகங்களுக்கு நேர் எதிரானது என்பதனையும் நீங்க உணருவீகள் என்று நினைகின்றேன். இந்த விவாதத்தில் தேவைபட்டால் குர்ஆனில் இருந்து அதில் கூறப்பட புனித வாசங்களில் இருந்து விடுபட்டு இன்றைய அறிவியல் எப்படி எல்லாம் முன்னேறி செல்கின்றது என்பதனையும் பார்க்கலாம் சகோ…..

  • விந்து இல்லாமல் உருவாக்கினாலும் ஆட்டில் இருந்து ஆட்டைதான் உண்டாக்க முடியும் மனிதனை அல்ல

   • என்னங்க உளறிகிட்டு இருக்கிங்க சகோ ஆசாக் ! கோவேறு கழுதைகள் மற்றும் கழுதை புலிகளின் குரோமோம்கள் எத்தகையது தெரியுமா? வேறு வேறு விங்குகளின் இணைப்புகள் தான் அவை… வேறு வேறு விங்களுகளின் செக்ஸ் குரோமோசோம்களை இணைக்க முடியும் வேறுவிதமான விலங்குகளை உருவாக்க முடியும் என்று அறிவியல் என்றோ நிருபணம் செய்து இருக்கு….

    என்ன அரசியல் தளத்தில் மதம் ஆளுமை செய்வதால் மனிதனின் செக்ஸ் குரோமோசோம்களை மற்ற விலங்குகளின் குரோமோ சொம்களுடன் இணைப்து தடை செய்யப்பட்டு உள்ளது. ஒரு டோலி ஆட்டுக்கே இப்படி மத வாதிகள் கதறு கதறு என்று கதறிநீர்க்ளே உண்மையில் மனிதனை அத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தும் போது என்ன ஆவீர்கள் சகோ? (இன்னும் விசயம் இருக்கு தொடருகின்றேன்)

   • சகோ ஆசாக், கோவேறு கழுதைகள் வேறு வேறு விலங்களுகளின் இணைப்பு தானே? 64 குரோமோசோம்கள் கொண்ட பெண் குதிரையையும், 62 குரோமோசோம்கள் கொண்ட ஆண் கழுதையையும் சேர்த்து இனபெருக்கம் செய்வதால் உருவாவது தானே இந்த கோவேறு கழுதைகள்…! மேலும் சிங்கத்தையும் ,புலியையும் சேர்த்து இனபெருக்கம் செய்வதால் தானே லிகேர் என்ற விலங்கு உருவாகிறது…. அப்ப்புறம் எப்படி “”ஆட்டில் இருந்து ஆடு தான் உருவாக முடியும்”” என்று குரானின் அடிப்படையில் அறிவியலுக்கு எதிராக எதுக்கு பேசுரீங்க சகோ?

    • என்ன பைத்திக்காரத்தனம் , டார்வின் படி அமீபா வேறு ஒன்றாக மாறியது , அது வேறு ஒன்றாக , இப்படியே குரங்கு பிறகு குரங்கில் இருந்து மனிதன் , என் கேள்வி குரங்கும் குரங்கும் சேர்ந்து எப்படி மனிதன் வந்தான் ? மிக முக்கியமாக (நீர் மங்குனி இல்லையென்றால் அமீபா முதல் மனிதன் வரை என்னென்ன எத்தனை விலங்குகள் மூலம் மனிதன் வந்தான் என்று பட்டியல் போடவும் ) மனிதன் தான் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடுவானே

   • மேலும் பார்த்திர்கள் என்றால் மனிதனே வேறு வேறு விலங்குகளின் கலபினம் தானே? படிங்க சகோ…. புரியவில்லை என்றால் தமிழ் படுத்துறேன்…

    There is evidence of hybridization between modern humans and other species of the genus Homo. In 2010, the Neanderthal genome project showed that 1–4% of DNA from all people living today, apart from most Sub-Saharan Africans, are of “”Neanderthal heritage””. Analyzing the genomes of 600 Europeans and East Asians found that combining them covered 20% of the Neanderthal genome that is in the modern human population. Ancient human populations lived and interbred with Neanderthals, Denisovans, and at least one other extinct Homo species. Thus, Neanderthal and Denisovan DNA has been incorporated into human DNA by introgression.

    // ஆட்டில் இருந்து ஆட்டைதான் உண்டாக்க முடியும்//

     • introgression
      ɪntrə(ʊ)ˈɡrɛʃ(ə)n/
      noun

      The transfer of genetic information from one species to another as a result of hybridization between them and repeated backcrossing.

     • என்னங்க சகோ…..,குரானுக்கு தொடர்பே இல்லாமல் கேள்வி கேட்கின்றீர்கள்? எப்ப குரான் செல் அளவில் ஆராய்சி செய்து வியாக்கனங்க்களை கொடுத்து இருக்கு சொல்லுங்க…முதலில்… கிண்டல் செய்யாதிங்க சகோ.. ஆமாங்க குரானை கிண்டல் செய்யவேண்டாமே நீங்க…!

      ஒரு உயிரனத்தின் செல்லில் இருந்து அதே உயிரனத்தை உருவாக்குவது பற்றி பேசுவது குளோனிங் தொழில் நுட்பம் தானே தவிர குரான் அல்லவே! அதே அன்னிக்க்கி குரானுக்கு தெரிந்த விந்து பற்றி தான் அது பேசியது… முட்டாள் மாதிரி நடிக்காதீங்க சகோ….

   • சகோ ஆசாக் , ஒரு விசயத்தை மறந்துட்டேன் பார்த்தீர்களா? விந்து தானே குரானின் அடிப்படையான கருத்து இனபெருகத்துக்கு? அப்படி இருக்க அறிவியலில் விந்து இல்லாமலேயே பிரதியெடுத்தல் (cloning )மூலமாக இனபெருக்கம் சாத்தியம் ஆயிற்றே அறிவியலில் ? எப்படி?அப்ப குரான் சிறந்ததா அல்லது அந்தனையும் தாண்டி பயணிக்கும் அறிவியல் சிறந்ததா?

 35. மதம் மக்களுக்கு மட்டுமல்ல ஆசாக் அவர்களுக்கும் “அபின்”தான்.அபின் நிறைந்திருக்கும் மூளையில் அறிவியல் எப்படி இறங்கும்?குரான் கட்டளைகளைக் கடைபிடிக்காமல்தான் பாபர் தன் மசூதியை சுக்ரீவன்கள் இடித்துத்தள்ளும் போது விட்டுக்கொடுத்து விட்டாரா ஆசாக் அவர்களே?எனக்குத் தெரிந்து பாபர் குரான் கட்டளைக் கற்று பின்பற்றியவர்தானே?பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தும் அமெரிக்கக்காரனின் “கட்டளைக்கு” முன்னால் குரான் கட்டளையெல்லாம் ஒரு பெரிய விஷயமா என கையில துப்பாக்கிய தூக்கிக்கிட்டு வீர வீரமாக் கெளம்பிய அமெரீக்கக்கைக்கூலி பின்லேடன்களைப்பற்றி ஆசாக் என்ன சொல்கீறார்?சரியா அவரு குரானோட கட்டளைகளைப் படிக்கல அன்னைக்கு கரண்ட்டு போயிடுச்சு என்பாரோ?ஆசாக் அவர்களே மறுபடுயும் சொல்கிறேன் குரானை வைத்து நீங்கள் தாராளமாக பூஜை வச்சிக்கலாம்.அட வேற எதுக்கும் கூட வேணாங்க இந்த டெங்கு கொசுவை ஒழீக்கவாச்சும் குரான் கட்டளைகள்ல ஒரு கட்டளையில கூடவா ஏதும் சொல்லல?உங்கள் மத நம்பிக்கையை பகடேடியோ கேலியோ செய்வது எனது நோக்கமல்ல.நீங்கள் உங்கள் சட்டைக்காலரைத் தூக்கிவிட்டுகிட்டு ஒரு காரியம் வேணா பண்ணுங்க.சவாலாக்கூட வச்சிக்கோங்க.உலகம் முழுவதும்
  மக்கள் படுற துன்பதுயரங்களை ஒரு பத்து பிரச்சினையா வரிசைப்படுத்துங்க.அதை குரானில் உள்ள கட்டளைகளின் மூலமா எப்படி தீர்க்கலாமுன்னு விளக்கிச் சொல்லிட்டீங்கன்னா நாங்க ஏங்க அறிவியல் “மார்க்கமா” பயணப்படப்போறோம்.சொல்வீர்களா நீங்கள் சொல்வீர்களா?

  • நீங்கள் நியாவான்களாக இருந்தால் அறிவுள்ளவர்களாக இருந்தால் மட்டும் குரான் வசனத்துக்கு விளக்கம் தவறும் , கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் வசதியாக பதில் சொல்ல மறுப்பதேன் ?
   Reply
   சின்னா
   December 6, 2017 at 2:16 pm

   • உங்களை கேட்டு கேட்டு முடியாம கடைசியாக யூத சதியான கூகிளில் அந்த அதி அற்புத கடலை பிரிச்சது பத்தி அடித்து தேடியதில் உங்களை போல நிறையபேர் இத்த தூக்கி பிடிச்சு அலைவதை காண முடிந்ததது, கடல் நதிக்கிடையில் ஒரு ‘உங்கூட க்கா’ போட்டாராம் அல்லா, அதனால தான் நாம குடிக்க ஆத்து தண்ணி எல்லாம் உப்பாக கெடக்காம், இதை அன்மையில தான் கண்டுபிடிச்சாங்களாம், அதனால குர் ஆன் அறிவியலை தொக்கடிசிட்டாம். ஸ்ஸப்பா இதுக்கு வேத கால பிளாஸ்டிக் சர்ஜரி கதை எவ்ளோ பெட்டெர், ஏனுங்க ஓடி போய் கடல்ல கலக்கும் ஆறு கிட்ட போகும்போது வேகம் அதிகரித்து கடலோட்டதோடு இயற்கையாகவே சூழல்கலை உருவாகி கடல் நீர் உள்ளே வரவிடாதுதானே? இந்த அடிப்படை கொஞ்சமாச்சும் யோசிக்க தெரிந்த மனுசனுக்கும் புரியுமே? அப்பிடியே ரெண்டு தண்ணிக்கும் அல்லா ‘கா’ போட்டிருந்தால் ஒரு டம்ப்ளர் நல்ல தண்ணி ஒரு டம்பளர் உப்பு தண்ணி ஒன்ன உத்தி பாருங்க ‘கா’ வேலை செய்தான்னு பாப்போம், அரிஸ்டாட்டில் கூட தான் ஏசப்பா பொறக்க முன்னாடியே உப்புத்தண்ணி நல்ல தண்ணி அடர்த்திகள் பற்றி விளக்கி முன்னையது மேல போகும் பின்னையது கீழ நிக்கும் என சொல்லிவிட்டாரே? அவரையும் ஆதி நபி என்னுபுடவா? அது போகட்டும் கழுத , நாம கேட்ட கேள்விகளுக்கு பதிலில்லையே?

    • ## ஏசப்பா பொறக்க முன்னாடியே உப்புத்தண்ணி நல்ல தண்ணி அடர்த்திகள் பற்றி விளக்கி முன்னையது மேல போகும் பின்னையது கீழ நிக்கும் என சொல்லிவிட்டாரே? அவரையும் ஆதி நபி என்னுபுடவா? அது போகட்டும் கழுத , நாம கேட்ட கேள்விகளுக்கு பதிலில்லையே?##

     நான் கேட்டது கடல்களுக்கு இடையேயான உப்படர்த்தி வித்யாசம் , நல்ல தண்ணிக்கும் உப்புத்தண்ணிக்கும் ஆனா வித்யாசம் அல்ல

     • அந்த லின்கில தானே எல்லாத்தியும் புட்டு புட்டு வைக்கிறார்களே? (காற்று, மழைவீழ்ச்சி,வெப்பநிலை, கலக்கும் ஆறுகள், துருவ பனிக்கட்டிகள் என பல காரணிகள் உப்படர்தியை தீர்மானிகின்றன) நான் ஏன் மறுபடியும் உங்களுக்கு விளக்கனும்? இதற்கும் குரான் வசனத்துக்கும் எங்காவது பொருந்துகிறதா? அதுகூட மேற்பகுதி நீருக்கு மட்டுமே, அதை தான் அரிஸ்டாட்டில் கூறினார் வெறும் நல்லதண்ணி உப்புத்தண்ணி என்றல்ல.

      முகமது அவர்கள் அரேபிய தீபாகட்ப முனையில் நின்றுகொண்டு செங்கடலையும் அரபி கடலையும் அவன் தான் பிரித்தான் என்றுகூட சொல்லலாமே? நான் கூட கருங்கடலை இறைவன் தான் பிரித்தான் என சொல்லமுடியுமே, இதிலென்ன அறிவியல் உள்ளது? ஆத்து தண்ணி உப்பாகாதது கடல்களின் மாறுபடும் உப்படர்த்தி பற்றி கொஞ்சம் விளக்கமாக தான் சொல்லிருக்கலாமே? (கவலை படாதீங்க நீயூட்ரினோ பற்றியெல்லாம் கேக்க மாட்டோம்)

      உங்க வாதப்படி பாத்தால் அமெரிக்கன் சீனாக்காரன் எல்லாம் ஏன் பில்லியன் கணக்கில் செலவு செய்து சூப்பர்கம்யூட்டர் , பார்டிகில் காலைடர் எல்லாம் கட்டி ஆயிர கணக்கான ஆய்வாளர்கள் மண்டையை பிய்த்து…ஏன்? பேசாம முக்கில குந்திகினு குரானை படிச்சா அவனுக்கு எவ்ளோ பில்லியன் டாலர் மிச்சம்?

      நக்கல் நையாண்டி நோக்கமல்ல அசாக், முகமது அவர்கள் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு அதி நுண்ணறிவு மற்றும் ஜ்ஞானம் கொண்டிருந்த மனிதத்தை போதித்த மனிதர் அவ்வளவுதான், ஏசு புத்தர் போன்றோர் எப்படி மனிதத்தை போதித்த சாதாரண மனிதர்களோ அதே போல் தான், அவர்களின் போதனையை மதவாதிகள் தமக்கு சாதமாக திரித்து கொண்டு எண்ணற்ற நாசகார வேலைகளை செய்கின்றனர்.

      குர் ஆன் நவீன அறிவியலை மிஞ்சுகிறது என்றால், இந்துத்துவ வாதிகள் கூறும், என்னதான் சிவன் பார்வதி என கடவுளை குடும்பமாக காட்டினாலும் நிறம் குணம் அற்ற பரம்பொருள் என உங்களை விஞ்சிய வியாக்கியானங்கள் அளிப்பார்கள். உண்மையில் ஆழமான இந்துமதம் கிட்டத்தட்ட இறைவனை அல்லா போன்றே விபரிக்கும். காமம் கடந்து தான் பரமபதம் என்பதற்கே புணர்ச்சி சிற்பங்கள் என்பர். அணுக்கள் அண்டங்கள் பற்றி குரானை விட தெளிவாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது என்பர். அது புரியாமல் பீஜே போன்றவர்கள் இந்துத்துவ வாதிகளை நக்கலடித்து பெருமிதம் கொள்வர். எதையும் நுனிப்புல் மேய்வது என்பது இதைதான்.
      முழு முட்டாளை விட அரைகுறை அறிவாளி ஆபத்தானவன்.

      இன்று அறிவியலுக்காக உங்களுடன் கம்பு சுட்ரும் நான் உங்களை போல் மேலோட்டமாக மேய்ந்துவிட்டு கடவுளை மறுக்கவில்லை, ஆழமான இந்துத்துவ வியாக்கியானங்களை கூட மறுத்து விட்டு தான் பேசுகிறேன். இதை பெருமைக்காக சொல்லவில்லை, நான் நுனிப்புல் மேயவில்லை, அவ்வளவு தான்.

      • நல்ல பாருங்க , நான்கு புறமும் நீர் சூழ்ந்துள்ள குட்டையில் (நீரில்) உப்படர்த்தி வேறுபடுகிறது எப்படி?

      • இங்கே ஒரு கருத்து திரும்ப திரும்ப தவறாக வைக்கப்படுகிறது , குரான் எங்கேயும் சிந்திக்க கூடாது என்று சொல்லவில்லை , குரானில் எல்லா அறிவியலும் இருக்கிறது என்றும் எங்கேயும் சொல்லவில்லை , ஆனால் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மூலமாக குரான் உள்ளது , இன்றைய தலை சிறந்த கண்டுபிடிப்புகள் ஐ பட்டியல் படுத்துங்கள் , அதற்க்கான மூலம் குர்ஆனில் உள்ளது என்று நிரூபிக்கிறேன் , மாறாக ஆராட்சி செய்தால் தான் கண்டுபிடிப்புகள் நிகழும் , குரான் அல்லது வேறு எந்த வேதமும் நேரடியாக கண்டுபிடிப்புகளை சொல்லாது அதனின் மூலம் தான் , HINT தான் இருக்கும்

   • சகோ ஆசாக் , சின்னா வைக்கும் அறிவியல் கருத்துகள் அடிபடையில் நீங்க சிந்திகிண்றீர்க்லா? குரானுக்கு முன்னும் அறிவியல் இருந்தது, குரானும் அறிவியல் கருத்துகளை அரைகுறையாக பதிவு செய்து இருக்கு, குரானுக்கு பின்னும் அறிவியல் வளர்ந்து கிட்டு தான் இருக்கு என்ற கருத்தையாவது ஏற்கிண்றீக்லா?

    • ஆம் குரான் வந்து 1400 வருடங்கள் ஆகிவிட்டது , அதற்க்கு முன்னும் அறிவியல் இருந்தது , என் எளிய கேள்வி இதுதான் உலகம் எப்படி தானாக உண்டானது ? அறிவியல் படி தானாக எதுவும் உண்டாகாது

  • @மக்கள் படுற துன்பதுயரங்களை ஒரு பத்து பிரச்சினையா வரிசைப்படுத்துங்க.@ நீங்களே வரிசை படுத்துங்க , நான் குர்ஆனில் இருந்து தீர்வு தருகிறோம்

 36. சகோதரர் ஆசாக் ,

  எனது கருத்துகளுக்கு குறிப்பாக பின்னுடம் 34 மற்றும் 35 களுக்கு நீங்க பதில் அளிக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கீர்கள்! ஏன் சகோ?

   • done already என்றால், எந்த பின்னுட்டத்தில் பதில் அளித்து இருக்கிங்க என்று தயை கூர்ந்து பதில் சொலுங்க சகோ ஆசாக் !

    • வினவு மேல் உள்ள எனது கருத்தை வெளியிட தேவையில்லை… ஆசக் அவர்களின் பதிலை கண்டு பிடிச்சிட்டேன். நன்றி

 37. சகோ ஆசாக் , உங்களால் பதில் அளிக்க இயலாத நிலையில் என்னுடைய பின்னுட்டதில் (34,35) உள்ள கருத்துகளை ஏற்கின்றீர்கள் தானே? குரானை விட அறிவியல் நவினமானது ,சிறந்த்தது என்பதனையும் என் கருத்துகள் அடிப்படையில் ஏற்கிண்றீகள் தானே? குரான் அதன் கால கட்டது அறிவியலை அரை குறையாக பதீவு செய்து இருக்கு என்பதனையும் ஏற்கிண்றீகள் தானே? குரானை தாண்டியும் மக்களின் பண்பாடும், வாழ்வியல் முறைகளும் , அறிவியல் தொழில் நுட்பங்களும் வளர்ந்துகிட்டு இருக்கு அதனால் இனியும் குரானை மட்டுமே அடிபடையாக கொண்டு இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் வழ முடியாது என்ற என்னுடைய கருத்தையும் ஏற்கிண்றீகள் தானே?

  • தேவை இல்லாமல் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்க விரும்பவில்லை , நீங்கள் சொல்வதை எல்லாத்தையும் ஏற்றுக்கொள்கிறேன் , மிக எளிய கேள்வி உலகம் எப்படி தானாக உண்டானது ? அறிவியல் படி தானாக எதுவும் உண்டாகாது

   • நண்பர் சின்னா,
    இந்து மத தத்துவங்களில் எனக்கு சில சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் தேவைப்படுகிறது. அதை இங்கு விவரித்தால் விவாதம் திசை மாறி விடும்.
    மேலும் அதை விவாதமாக நினைத்து விமர்சனங்கள் வந்து விடும்.
    நீங்கள் விரும்பினால் உங்கள் தனிப்பட்ட ID அளித்தால் அதில் பரிமாறிகொள்ளலாம்.
    நன்றி!

 38. சகோதரர் ஆசாக் ,

  முட்டாள்களுக்கு வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் விளக்கி புரியவைக்க முடியும்..! ஆனால் முட்டாள் போன்று நடிக்கும் உங்களுக்கு என்னால் என்ன யாராலும் புரியவைக்க முடியாது.

  ஆனாலும் உங்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதன் நோக்கம் , இந்த பின்னுட்டங்களை நீங்க மட்டும் படிகல.. வினவு வாசகர்களும் படிகிறார்கள் அதிலும் குரானின் மீது மிக்க நம்பிகை உடைய இஸ்லாமிய சகோதர்களும் படிகின்றார்கள் என்பதால் தான். குரான் ஒரு மனிதனின் வாழ்கையை தீர்மானிகின்றது, தனிபட்ட வாழக்கைக்கு வழிகாட்டுகிறது என்ற விசயத்தில் எல்லாம் நான் குறுக்கே வரமாட்டேன்… என்னை போன்ற அறிவியல் சார்பாளர்களும் குறுக்கே வரமாட்டார்கள்… அதே நேரத்தில் குரானை மையமாக கொண்டு அறிவியலை எள்ளி நகையாடும் உங்களை போன்றவர்களுக்கு கண்டிப்பாக நான் பதில் கொடுத்தே ஆகணும் அல்லவா? அந்த வேலையை தான் இங்கே பின்னுட்ட பகுதியில் செய்துகிட்டு இருக்கேன்.

  1.எதுக்கு இந்த உலகத்துடன் உங்க கேள்வியை நிருதிகிட்டீங்க சகோ? பிரபஞ்ச அளவுக்கு சென்று இந்த பிரபஞ்சமே எப்படி உருவாகிற்று என்று கேட்டுவிட்டால் முழுமையாக பதில் அழித்துவிட என்னால் முடியுமே! ஏன் குரான் உலகத்தை பற்றி மட்டும் தான் பேசுகின்றதா?

  2. இறைவனால் அளிக்கபட்ட குரான் எழுதபட்டு 1400 ஆண்டுகள் தான் ஆகிறது என்று சொல்றீங்க நலலது… அதுக்கு முன்னே உலகமே இல்லையா? அது வரைக்கும் இறைவன் உலக மக்களுக்கு வாழ்கை முறையை குரானின் ஊடாக கூராமல் ஆழ்ந்த நித்திரையில் தான் இருந்தாரா? எங்கே அப்ப இருதார் அவர்?

  3.ஆட்டில் இருந்து ஆட்டை தான் உருவாக முடியும் என்று குரானின் அடிப்டையில் சொன்னீங்க இல்லையா? அந்த கேள்விக்கு பல்வேறு அறிவியல் தரவுகளின் ஊடாக பதில் அளித்து இருக்கேன்… உங்களுடன் இருந்து அதுக்கு மறுப்பே வரலையே சகோ… ஏன்? குரான் வாசங்கள் பொய் என்று ஆகியதால் தானே? உயிரனங்கள் பரிணாம கொள்கையின் ஊடாகவும், கலப்புறுதல் ஊடாகவும் தானே வளர்சி அடைந்து கொண்டு இருகின்றன? அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்க இன்னும் விளக்கமாக பேச முயலுகிறேன்..

 39. என்னங்க சகோ…, நோயிக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக இன்னும் பென்சிலின் ஊசிய போடும் மருத்துவரை நம்புவீங்களா…, இல்ல மேலும் நவீனமயமாகப்ட்ட , திறன்வாய்ந்த மருந்துகளை போடும் மருத்துவரை நம்புவீங்களா? சொல்லுங்க பார்க்கலாம்?

  குரான் காலகிரமப்ப்டி பழைய பென்சிலின் ஊசி போன்றது என்றால் இன்றைய அறிவியல் நவீன மருத்துவம் போன்றது சகோ…. அறிவியல் வளர்ந்து கொண்டே இருக்கு ஆனால் குரான் தேங்கி போய் 1400 வருடங்களாகிற்று சகோ…. நீங்க அங்கேயே இருங்க…நாங்க மேலே மேலே அறிவியல் அடிபடையில் முன்னேறிகிட்டு போய்கிட்டே இருக்கோம்….

 40. மேல குமார் கூறியது போல நீங்கதான் அசாக் குரானை கேலிக்குல்லாகுகிரீர்கள்,

  சாமி இனிமே உப்புநீர் பற்றி அடிப்படை பாடம் எடுக்க முடியாது என்னால். மன்னிக்கவும்.

  //இன்றைய தலை சிறந்த கண்டுபிடிப்புகள் ஐ பட்டியல் படுத்துங்கள் , அதற்க்கான மூலம் குர்ஆனில் உள்ளது என்று நிரூபிக்கிறேன்//

  சரிங்க அதி நவீன விசயத்துக்கெல்லாம் போகவேண்டாம். உதாரணத்துக்கு சிலவற்றறை பார்ப்போம் மின்சாரம், பென்சிலின், கதிரியக்கம் போன்ற குறிப்பிட்டளவு ‘எளிய’ கண்டுபிடிப்பு களுக்கு குரான் என்ன ஹின்ட் கொடுத்திருக்கு? விளக்க முடியுமா? முடியாது காரணம் எளிது, முகமது வாழ்ந்த காலத்தில் அவை தெரியாது யாருக்கும். அதனால என்ன முக்கு முக்கி தேடினாலும் ஹின்டு கெடைக்காது. இவைகளை கண்டுபிடித்தவர்கள் குரான் கிளு மூலம் தான் கண்டுபிடித்தனரா?

  //ஒரு பத்து பிரச்சினையா வரிசைப்படுத்துங்க.@ நீங்களே வரிசை படுத்துங்க , நான் குர்ஆனில் இருந்து தீர்வு தருகிறோம்//

  வினவில இத்தினி வருசமா என்னத்தை படிக்கிறிங்க? கிட்டத்தட்ட எல்லா பதிவுமே மக்கள் பிரச்சினையை தானே பேசுது? பட்டியல் இட என்ன மளிகைசாமானா? குரானுட்ட தீர்வு வாங்கிட்டு போக? எவ்வளவு எளிதாக சமூக சிக்கலை குறுக்கிட உங்கள் வகையறாக்களால் மட்டுமே முடியு.

  //என் எளிய கேள்வி இதுதான் உலகம் எப்படி தானாக உண்டானது ? அறிவியல் படி தானாக எதுவும் உண்டாகாது//
  2 வாட்டி பத்தி பத்திய விளக்கியும் உடைஞ்ச ரெக்கார்டு மாரி கேக்கிரிங்க? அறிவியல் எங்கே எதுவும் தானாக உருவாகாது என்கிறது? தெர்மோடைனாமிக் விதியை போட்டு குழப்பி கொள்கிறீர் போல், அது ‘சக்தி’ க்கு மட்டும் தான் பாய், குவாண்டம் பொறிமுறைகளில் அதெல்லாம் செல்லாது தம்பி, துணிக்கைகள் வெறுமனே வந்து குதிக்கும் பிறகு மறையும், கடந்த காலத்துக்கு போகும், எதிர்காலத்திலிருந்து சக்தியை ‘இரவல்’ வாங்கும், ஒரே நேரத்தில் இரு இடத்தில் இருக்கும், (உண்மையில் சொல்லபோனால் உங்களுக்கு வாதாடுவதற்கு (உலகம் ஒன்றுமில்லாததில் இருந்து வரமுடியாது) ‘வெற்றிடம்’ என்ற ஒன்று கூட இல்லை, இதையே சிவனடியார் ‘இல்லாததொன்றில்லை’ என பாடிவிட்டார் என காலிகள் வந்தால் நாங்கள் உங்களை விட அவர்களின் வாதங்களை கேட்கவேண்டி வரும், ஏனெனில் அந்தளவு மொக்கை உங்கள் வாதங்கள்)
  ஆம் உண்மையில் இந்த விடயங்கள் புரிந்ததால் மிரண்டுபோவீர்கள், இயற்கையை நாம் நோண்டும் நோன்டில் அதற்கே என்ன செய்வது என்று தெரியவில்லை, வெறும் இடம் கூட சக்தி கொப்பளிக்கும் இடம், ஒரு ப்ரோத்தன் அளவே உள்ள ‘வெறும் இடத்தில்’ (space) மொத்த பிரபஞ்சத்தை விட எண்ணற்ற மடங்கு சக்தி கொப்பளிக்க முடியும், இதெல்லாம் கணிக்கபட்ட உண்மைகள்.

  நீங்க என்நன்னா ஆட்டிலிருந்து மாடு வருமா? உலகம் தானா வருமா ன்னு (இப்போ புரியுது ஏன் தோழர்கள் பகிரங்க விவாதம்னு கூப்பிட்டா தலை தெறிக்க ஓடுராங்கன்னு, உங்க ஒருத்தர் கூட சேந்து நான் சேது விக்ரமா ஆயாச்சு, கும்பல் சேந்தா…யெப்பா) ரொம்ப அப்பாவியா கேக்குறிங்க, பதில் வேணும்னா கொஞ்சம் குவாண்டும் பொறிமுறை படிக்கணும் ஓகேயா?

  இனிமே உங்களுக்கு எந்த ‘விளக்கமும்’ அளிக்குமளவு என் விரல்களில் சக்தி இல்லை, வேணுன்ன அல்லாவிடம் எனக்காக பிரார்த்தியுங்கள்.

  • தான் விழாமல் பிறரை விழுந்து விழுந்து சிரிக்கவைகின்றார் சின்னா… தொடருங்க வாழ்த்துக்கள்….

   //நீங்க என்நன்னா ஆட்டிலிருந்து மாடு வருமா? உலகம் தானா வருமா ன்னு (இப்போ புரியுது ஏன் தோழர்கள் பகிரங்க விவாதம்னு கூப்பிட்டா தலை தெறிக்க ஓடுராங்கன்னு, உங்க ஒருத்தர் கூட சேந்து நான் சேது விக்ரமா ஆயாச்சு, கும்பல் சேந்தா…யெப்பா) ரொம்ப அப்பாவியா கேக்குறிங்க, பதில் வேணும்னா கொஞ்சம் குவாண்டும் பொறிமுறை படிக்கணும் ஓகேயா? //

 41. பின்னூடங்கள் மதியமே போடபட்டிருந்தாலும் தற்போது இரவுதான் வினவால் வெளியிடபடுகின்றன,ஒரு விடயத்தை கவனித்தேன் குமார் அவர்களும் பென்சிலின் பற்றி குறிப்பிட்டுள்ளார் , குமாரின் பின்னூட்டத்தை நான் பார்த்திருக்கவோ எனதை அவர் பார்த்திருக்கவோ முடியாது. அல்லாவின் திருவிளையாடலோ XDD

  • நீங்க சொல்வது உண்மை தான் சின்னா…நானும் அந்த விசயத்தை கவனித்தேன் சின்னா…. வேறு வேறு காரணங்களுக்காக ,அதாவது திரு ஆகாக் கேட்ட இருவிதமான கேள்விகளின் அடிபடையில் நாம் அந்த பென்சிலின் மருந்து விசயத்தை விவாதத்துக்கு எடுத்துகொண்டு இருக்கோம் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. புரிதலுக்கு நன்றி சின்னா…

 42. ஆசாக் அவர்களே உங்கள் அல்லா உருவாக்கிய உப்புக்கடலில் ராமர் பாலம் இருப்பதாக காவிகள் கலவரம் செய்கிறார்களே?அதெப்படி அல்லா அனுமதித்தார்?கண்ணுக்குத் தெரியும் சிமிண்ட் பாலத்தில் பயணிக்கும் எங்களுக்கு உங்கள் பதிலென்ன?குரானில் இருந்து கூட விளக்கம் தரலாம்.எங்களுக்கு தெரீஞ்சே ஆகணும்.கடலோட டிராபீக் கண்ட்ரோல் யாருகிட்ட இருக்கு?அல்லாகிட்டவா?காவால்கார ராமன்கிட்டயா?

 43. Nowhere quran said science is against islam,

  13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

  16:11. அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.

  16:67. பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

  45:13. அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.

 44. குரான் எங்கே சிந்திக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது என்று வினவு விளக்கினால் நன்றாக இருக்கும் , இல்லையென்றால் இந்த படத்தில் உள்ளது தவறு என்று மன்னிப்பு கேட்கட்டும் (அறிவு நாணயம் உள்ள பத்திரிகை என்றால் )

 45. சக மனுசன தொட்டா தீட்டுன்னு சொல்ற “இந்து” தியாகிகளும் ஆசாக் மாதிரிதான் பேசுறாங்க. மூன்றாம் நாள் சடார்னு தப்பிச்சு வந்ததா சொல்ற இயேசு பிரான்(இறால் அல்ல) சீடர்களும் ஆசாக் மாதிரிதான் பேசுறாங்க.ஆசாக் அவர்களும் ஆசாக் மாதீரியானவர்களும் ஆசாக் மாதிரிதான் பேசுறாங்க.உண்மையிலேயே இந்த விவாதத்துல மேற்படி “முன்று கம்பெனி” ஆட்களும்தான் பிரிச்சு மேஞ்சுக்கணும்.ஏன்னா எங்காளுதான் பூமீயை கண்டுபிடிச்சி பாலீஸ் போட்டு வச்சாருன்னு மூன்று கம்பெனி மார்களுமே சொல்லிக்கிறாங்க.அப்ப ஒருத்தர் கம்பெனி பார்வையில இன்னொரு கம்பேனியார் சொல்றது “மோடிபொய்”(பொய் வகைகளில் புதிதாக சேர்க்கப்பட்ட பொய் வகைதான் மோடிபொய்) என்று உறுதியாகி விடுகிறது.அடடா அறிவியல் வழி பயணம் செய்கையில் சற்றே இளைப்பாற “இங்கே” ஒதுங்கிவிட்டோம்,இது ஆண்டவர் வைத்து “பிசினஸ்”செய்யும் “ஆசாக் & கோ” இடமென்று தெரியாமல்.

 46. இப்போ என்ன சொல்ல வரீங்க Ashak? நீங்க சொல்றத கேட்டு, நாங்கெல்லாம் உங்க குரானை வாங்கிப் படித்து, எல்லோரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு உலகம் முழுவதும் இஸ்லாம் பரவ செய்ய வேண்டுமா? அப்படியே வினவு தளத்தையும் ஒரு இஸ்லாம் பரப்புரை தளமா மாத்திடணுமா?

 47. நெப்போலியன் அவர்களே உங்களின் அறிவை கண்டு மெச்சுகிறேன், உங்களுக்கு மதத்தை பற்றி பல விஷயம் தெரிந்திருக்கலாம், அதில் பாதி தவறு மீதி தவறாக விளங்கியது
  1. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பழமொழிப்படி உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் அதாவது மனித குலம், ஒருவனே தேவன் அவன் அல்லாஹ் (அல்லாஹ் என்பது அரபி வார்த்தை மட்டுமே , முஸ்லிம்களுக்கான கடவுள் அல்ல )
  2. உலகம் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தது இறைவன் , இறைத்தூதர்களை இறை நூல்களோடு மக்களை இறைவன் நல்வழிப்படுத்தினான், அதில் பலர் இறைத்தூதரை இறைவன் ஆக்கினார்கள், இறைவேதம் பல பல சமுதாய மக்களுக்கு கொடுக்கப்பட்டது, இறுதியாக உலக மக்களுக்கு கொடுக்கப்பட்ட வேதம் தான் குரான், ஆக குரான் முஸ்லீம் களுக்கானது மட்டும் அல்ல
  3. ஹிந்து என்பது மதமல்ல , முதலில் ஹிந்து என்பது மதமே இல்லை, கிருஸ்து பிறக்கும் முன் கிருஸ்த்துவர் என்ற மதம் இல்லை , ஆக உலகில் மதம் என்பதே இல்லை , இஸ்லாம் இறைவனை அடையும் மார்க்கம்
  4. உலக கண்டுபிடிப்புகள் அனைத்தும் இறைவன் வழங்கிய பொருட்களை கொண்டு ஆற்றலை கொண்டு அறிவை கொண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது , இஸ்லாம் ஒரு போதும் புதிய கண்டு பிடிப்பகளுக்கு எதிரான மார்க்கம் இல்லை
  5. அறிவியல் படி எதுவும் தானாக உண்டாகாது, உலகம் தானாக உண்டானது என்பது மடமையில் உச்சம், எல்லா வற்றுக்கும் மேலாக ஒரு செல் அமீபாவில் இருந்து பல உயிர்கள் வழியாக மனிதன் உண்டானான் என்பது மூடத்தனத்தை உச்சம், அதை நீங்கள் உண்மை என்று நம்பும் பட்சத்தில் அமீபா முதல் மனிதன் வரை என்னென்ன உயிரினங்கள் வந்தது என்பதை பெயருடன் சொன்னால் மட்டும் போதும் , ஏற்றுக்கொள்கிறேன்
  6. இஸ்லாத்தை பொறுத்தவரை எங்கேயும் வியாபாரம் இல்லை, இறைவனை காண இவ்வளவு தரவேண்டும், தந்தால் தான் காணமுடியும் என்ற கப்ஸா இஸ்லாத்தில் இல்லை
  7. இஸ்லாத்தின் முதல் கடமை – (i)இறைவனை ஏற்றுக்கொள்வது – பணம் தேவை இல்லை
  (ii)இரண்டாவது கடமை – தொழுகை-இறைவனை வணங்க எந்த பள்ளிவாசலில் பணம் கேட்பதில்லை, (iii)மூன்றாவது – நோன்பு – யாருக்கும் பணம் தர தேவை இல்லை, (iv) ஜகாத் – 83 கிராம் நகையோ அல்லது ஈடான பணமோ இருந்தால் 2.5% ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும் – இங்கேயும் பணம் இறைவனின் பெயரால் ஏமாற்றப்படவில்லை (கம்முனிசம் இஸ்லாத்திடம் பிட்சை எடுக்கவேண்டும் ) (v) ஹஜ் – உடலில் தெம்பும் வசதியும் உள்ளவர் வாழ்வில் ஒரு முறையேனும் மக்கா செல்லவேண்டும் – இங்கேயும் கடவுளில் பெயரால் பணம் பறிக்கப்படவில்லை
  8. நான் பார்த்தவரை இஸ்லாத்தை பற்றிய போதுமான அறிவு இல்லாமல் விமர்சிக்கவந்த மங்குனியாகவே உங்களை காண்கிறேன், எப்படி கொஞ்சம் கூட வெக்கம் மானம் ரோசம் இல்லாமல், அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு விமர்சிக்க வருகிறீர்கள் என்ற எனக்கு தெரியவில்லை.

  • நெப்போலியனின் அறிவை மெச்சுவது எல்லாம் இருக்கட்டும் ஆசாக்,
   என்னுடைய 6.1 பதிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கமுக்கமாக இருப்பது ஏன் ? அல்லா பதில் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரா ?? இல்லை வடிவேலு தன்னோட குருநாதரை கூட்டி வந்து முச்சந்தியில் வைத்து மனுசச் சாணியையும் மாட்டுச் சாணியையும் கலந்து தன்னோட குருநாதருக்கு அடி வாங்கிக் கொடுப்பாரே அது மாதிரி அல்லாவுக்கும் அடி வாங்கிக் கொடுத்துடக் கூடாதுன்னு நீங்களே எஸ்கேப் ஆகிட்டிங்களா?

   • மனுசச் சாணியையும் மாட்டுச் சாணியையும் கரைச்சி அடிச்ச மாதிரி பதில் போட்டாச்சு

 48. கோபம் கொப்பளிக்கும் ஆசாக் அவர்களே! “கொப்பளித்து” என்ன பயன்? நீங்கள் சொல்வது சரிதான்.நான் அரசியல், அறிவியல், மதம்,மார்க்கம்,சமூகம் இன்னும் பலவற்றில் நிறையவே தெரீந்துகொள்ளவும் கற்றுணரவும் வேண்டுயுள்ளது.ஆர்வமுடனும், சமூக அக்கறையுடனும் தொடர்ந்து நான் கற்றுக்கொள்ளவே விழைகிறேன்.அதில் தவறேதும் இல்லையென்றே நம்புகீன்றேன். ஆனால் நீங்கள்தான் “மார்க்கத்தில்” மன்னன் ஆயிற்றே! உங்களுக்குமா இந்த வீவாதத்திலேயே எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் கூற தெரியவில்லை? சரி மீண்டும் கேட்டு வைப்போம்.பதில் வருகிறதா அல்லது மீண்டும் “கொப்பளிக்கிறதா” என்று பார்ப்போம்.கம்யூனிசம் பிச்சை எடுப்பது இருக்கட்டும்.”குளிர்சாதன”வசதிகொண்ட மசூதிகளின் வாசல்களில் நின்று பிச்சை எடுக்கும் ஏழை முஸ்லீம்களை காப்பாற்றாமல் மார்க்கம் ஏன் “மங்குனித்தனமாய்” நடந்து கொள்கிறது? இந்து மதம் மதமேயில்லை உண்மைதான்.அப்புறம் எப்படி ராமன்க்கு பாபர் மசூதிக்குள் பிரசவம் நடந்து நட்டநடு ராத்திரியில் அவன் பிறந்தான்? அவன் உருவிப்போட்ட முஸ்லிம் மக்களின் குடல் மாலைகள் பற்றி “மார்க்கத்தின்” எத்தனையாவது கிலோமீட்டரில் குறிப்பேதேனுமுள்ளது? இறைவனை அடைவது கிடக்கட்டும் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் “விசாரணை” எனும் பெயரால் இந்தியச்சிறைகளில் அடைத்து கிடக்கிறார்களே இதற்கு எந்த தூதர் எந்த மார்க்கமாய் எப்போது வருவார் ஜுனிலா ஜீலையிலா? ஒன்றே குலம் ஒருவனே தேவனாயின் இந்துவைக் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை வெட்டிப்போடச் சொல்லி “மார்க்கத்தில்” எங்கேனும் மார்க் பண்ணியிறுக்கா?அல்லா எனும் உருது வார்த்தை கேட்டால் நாக்கை அறு என்றூ கர்நாடகாவில் கலவரம் புரிந்தார்களே அந்த “மார்க்மாய்” ஏன் யாருமே வரவில்லை டிராபிக் ஜுமா?புதீய அறிவியல் கண்டுபிடீப்புகளை உங்களீன் “மார்க்க”பந்துகள் மட்டும்தான் கண்டுபிடித்தார்களா? கலிலியோ எடிசன் போன்ற எண்ணற்ற அறிவியலாளர்கள் எல்லாம் உங்கள் “மார்க்கத்தில்” சிக்காமல் தப்பியோடியவர்களா?கோவையில் அல்லாவை ஏற்காத ஒரு இளைஞரை வெட்டிக் கொன்றார்களே இந்த மனிதநேயக்குறிப்புகள் “மார்க்கத்தில்” எப்படீக்குறிக்கப்பட்டுள்ளது உருதிலா? உங்களின் வார்த்தைப்படியே இது அரைகுறை அறிவோடும் மான ரோசம் இல்லாமலுமே உங்கள் முன்னால் வேண்டப்பட்டுள்ள கேள்விகள்.இதற்கு உங்கள் வழக்கமான தனிமனித தவறுக்கு “மார்க்கம்” பொருப்பாகாது என்று நீங்கள் பதிலுரைத்தால் பரவாயில்லை,அந்த ஒன்றுக்கும் உதவாத மார்க்கத்தை உதறித்தள்ளி விட்டு நீங்கள் பொருப்பேற்றுக்கொண்டு பதில் தரலாம் அல்லவா? பார்ப்போம் ஆசாக் அவர்கள் எந்த “மார்க்கமாக” வரப்போகிறாரென்று! அந்த மார்க்ஸ் கிழவர் சொன்னது இப்போதுதான் மண்டைக்குள் உறைக்கிறது.கடவுளை விரட்டுவதை விட கடவுளீன் ஏஜெண்ட்டுகளை விரட்டுவதுதான் கடினமான பணி.ம்ம் விரட்டுவோம்.

   • That’s funny, anyone with commonsense reading the whole debate will know that you have not explained anything, anything at all. all you did was to recite kuran verses, in contrary we explained every doubt you had about the origin of the world (we had the extra kindness to explain even the origin of universe) origin of ‘something from nothing’ and evolution, and how evolution is not just a theory anymore and it is a FACT, like gravity. it is your brain fully dipped with religious intoxication that refuses any reason or logic. I once again request you to carefully read the whole argument and come to sense if you have any left.

 49. நெப்போலியன் அவர்களே உங்களின் அறிவை கண்டு மெச்சுகிறேன், உங்களுக்கு மதத்தை பற்றி பல விஷயம் தெரிந்திருக்கலாம், அதில் பாதி தவறு மீதி தவறாக விளங்கியது
  1. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பழமொழிப்படி உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் அதாவது மனித குலம், ஒருவனே தேவன் அவன் அல்லாஹ் (அல்லாஹ் என்பது அரபி வார்த்தை மட்டுமே , முஸ்லிம்களுக்கான கடவுள் அல்ல )
  2. உலகம் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தது இறைவன் , இறைத்தூதர்களை இறை நூல்களோடு மக்களை இறைவன் நல்வழிப்படுத்தினான், அதில் பலர் இறைத்தூதரை இறைவன் ஆக்கினார்கள், இறைவேதம் பல பல சமுதாய மக்களுக்கு கொடுக்கப்பட்டது, இறுதியாக உலக மக்களுக்கு கொடுக்கப்பட்ட வேதம் தான் குரான், ஆக குரான் முஸ்லீம் களுக்கானது மட்டும் அல்ல
  3. ஹிந்து என்பது மதமல்ல , முதலில் ஹிந்து என்பது மதமே இல்லை, கிருஸ்து பிறக்கும் முன் கிருஸ்த்துவர் என்ற மதம் இல்லை , ஆக உலகில் மதம் என்பதே இல்லை , இஸ்லாம் இறைவனை அடையும் மார்க்கம்
  4. உலக கண்டுபிடிப்புகள் அனைத்தும் இறைவன் வழங்கிய பொருட்களை கொண்டு ஆற்றலை கொண்டு அறிவை கொண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது , இஸ்லாம் ஒரு போதும் புதிய கண்டு பிடிப்பகளுக்கு எதிரான மார்க்கம் இல்லை
  5. அறிவியல் படி எதுவும் தானாக உண்டாகாது, உலகம் தானாக உண்டானது என்பது மடமையில் உச்சம், எல்லா வற்றுக்கும் மேலாக ஒரு செல் அமீபாவில் இருந்து பல உயிர்கள் வழியாக மனிதன் உண்டானான் என்பது மூடத்தனத்தை உச்சம், அதை நீங்கள் உண்மை என்று நம்பும் பட்சத்தில் அமீபா முதல் மனிதன் வரை என்னென்ன உயிரினங்கள் வந்தது என்பதை பெயருடன் சொன்னால் மட்டும் போதும் , ஏற்றுக்கொள்கிறேன்
  6. இஸ்லாத்தை பொறுத்தவரை எங்கேயும் வியாபாரம் இல்லை, இறைவனை காண இவ்வளவு தரவேண்டும், தந்தால் தான் காணமுடியும் என்ற கப்ஸா இஸ்லாத்தில் இல்லை
  7. இஸ்லாத்தின் முதல் கடமை – (i)இறைவனை ஏற்றுக்கொள்வது – பணம் தேவை இல்லை
  (ii)இரண்டாவது கடமை – தொழுகை-இறைவனை வணங்க எந்த பள்ளிவாசலில் பணம் கேட்பதில்லை, (iii)மூன்றாவது – நோன்பு – யாருக்கும் பணம் தர தேவை இல்லை, (iv) ஜகாத் – 83 கிராம் நகையோ அல்லது ஈடான பணமோ இருந்தால் 2.5% ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும் – இங்கேயும் பணம் இறைவனின் பெயரால் ஏமாற்றப்படவில்லை (கம்முனிசம் இஸ்லாத்திடம் பிட்சை எடுக்கவேண்டும் ) (v) ஹஜ் – உடலில் தெம்பும் வசதியும் உள்ளவர் வாழ்வில் ஒரு முறையேனும் மக்கா செல்லவேண்டும் – இங்கேயும் கடவுளில் பெயரால் பணம் பறிக்கப்படவில்லை
  8. நான் பார்த்தவரை இஸ்லாத்தை பற்றிய போதுமான அறிவு இல்லாமல் விமர்சிக்கவந்த மங்குனியாகவே உங்களை காண்கிறேன், எப்படி கொஞ்சம் கூட வெக்கம் மானம் ரோசம் இல்லாமல், அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு விமர்சிக்க வருகிறீ