Friday, March 31, 2023
முகப்புசெய்திராஜஸ்தான் : முஸ்லீம் இளைஞரை எரித்துக் கொன்று வீடியோவில் பேசிய இந்துமதவெறியன் !

ராஜஸ்தான் : முஸ்லீம் இளைஞரை எரித்துக் கொன்று வீடியோவில் பேசிய இந்துமதவெறியன் !

-


(கவனம்: இந்த செய்தி தொகுப்பில் அந்த கொடிய கொலைச்சம்பவம் மங்கலான வீடியோவாக இடம்பெறுகிறது. பலவீனமுள்ளவர்கள் தவிர்க்கவும்)

ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மந்த் மாவட்டத்தில் ஒரு கொடூரம் நடைபெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி “லவ் ஜிகாத்” எனும் பெயரில் ஒரு இந்துமத வெறியனால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். அந்த படுபாதகச் செயலை அந்த வெறிநாய் வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டிருக்கிறது.

இது குறித்த விரிவான செய்திகள் இன்னும் வரவில்லை. தற்போது பத்திரிகைளில் வந்த செய்திகளை தொகுத்து தருகிறோம்.

அந்தக் கொலைகாரனின் பெயர் ஷம்புலால் ரீகர். “லவ் ஜிகாத்” செய்வோர் எவருக்கும் இதே முடிவுதான் என்கிறது அந்த வெறிநாய். நியூஸ் 18 செய்தியின் படி இந்தக் கொலைகாரனும், அவருடை 8 கூட்டாளிகளும் – ஒரு பெண் உட்பட – கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அரை உடலோடு எரிந்த உடல் ஒன்று ராஜஸ்மந்தின் ஓட்டல் ஒன்றில் புதன்கிழமை கைப்பற்றப்பட்டிருக்கிறது. பிறகு போலீஸ் அந்த உடல் வீடியோவில் அடிபட்டும் எரியும் இளைஞர்தான் என்பதை உறுதிபடுத்திருக்கிறது.

இந்தியா டுடே செய்தியின் படி கொலை செய்யப்பட்டவரின் பெயர் முகமது பட்டா ஷேக், அவருடைய பைக் கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. விவசாயக் கருவிகள் இந்தக் கொலைக்கு பயன்பட்டிருக்கிறது.

கொலைகாரன் ஷம்புலால் ரீகர்

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி பாதி எரிக்கப்பட்ட உடல் முகமது அப்ரசல் என்பவருடையது.  “ஆரம்பகட்ட விசாரணைகளின்படி வீடியோவில் அந்த ரீகர் பேசும் இடம் ஒரு உள்ளூர் கோவில், அப்ரசலை கொலை செய்து விட்டு அவன் பேசுகிறாரன்” என்கிறார் கூடுதல் டிஜிபி பங்கஜ் குமார் சிங்

நவம்பர் 19 அன்று ஜெய்ப்பூரில் ஒரு இந்து ஆன்மீக கடையில் லவ் ஜிகாத் அபாயத்தை இந்து பெண்களிடம் எச்சரிக்கும் ஒரு பிரசுரம் விநியோகப்பட்டிருக்கிறதாக, போலீசார் கூறுகின்றனர். அதில் ஒரு பாலிவுட் நடிகை மக்களை எச்சரிப்பதாகவும், மேலும் இரண்டு முஸ்லீம் நடிகர்கள் தமது இந்து மனைவிகளை விட்டு விலகிவிட்டதாகவும் கூறுவதாக இருக்கிறது.

அந்த கடை பஜ்ரங் தள் எனும் இந்துமதவெறி இயக்கத்துடையதாம்.

மத்திய கிழக்கில் ஐ.எஸ் எனும் பயங்கரவாத இயக்கம் நடத்தும் கொடூரமான கொலைகள் வீடியோவில் வருவது போல தெற்காசியாவில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் நடத்தும் போட்டிக் கொலைகள் இது.

இது முதல் முறையோ இல்லை கடைசியோ அல்ல. மோடி பதவி ஏற்றதும் முஸ்லீம் மக்கள், தலித் மக்கள், ஜனநாயக சக்திகள் கொடூரமாக கொல்லப்படுவதும், ஒவ்வொரு கொலையும் முந்தைய கொலையை விட விகாரமாக இருப்பதும் தொடர்கிறது.

கவுரி லங்கேஷுக்கு பிறகு இப்போது ஒரு முஸ்லீம் இளைஞர்.

மாட்டுக்கறி பிரச்சினையை விட இந்த “லவ்ஜிகாத்” சதிப் பரப்புரை இந்தியா முழுவதும் சாதாரண ‘இந்துக்களிடம்’ எடுபடும் என்று இந்துமதவெறி அமைப்புகள் திட்டம் போட்டிருக்க கூடும். கவுரி லங்கேஷை கொலை செய்ய யார் திட்டம் போட்டிருப்பார்கள் என்பது உலகறிந்த விசயம் என்றாலும், நேரடியாக யார் சுட்டுக் கொன்றார்கள் என்பது தெரியவில்லையாம். ஆகவே ஆர்.எஸ்.எஸ் – மோடி கும்பலை குற்றம் சாட்டக் கூடாது என்று ஊடகங்கள் ‘நடுநிலை’ வகிக்கின்றன.

இப்போதோ லவ்ஜிகாத்தை முன்வைத்து ஒரு படுகொலை பகிரங்கமாக வீடியோவாக வந்திருக்கிறது. இனி வருங்காலம் அந்த கொலைகாரன் மாபெரும் இந்து போராளியாக வட இந்தியாவிலும், சங்கிகள் மத்தியிலும் உலா வருவான்.

ஊடகங்களோ இப்படி மக்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா, லவ்ஜிகாத் பிரச்சினையை அரசே பார்த்துக் கொள்ளலாமே என்று ஆர்.எஸ்.எஸ்-க்கு வக்காலாத்து வாங்குவார்கள். அக்லக், ஜூனைத்கான், கவுரிலங்கேஷ் படுகொலைகளில் பேசபட்ட அதே சாணக்கிய நீதி.

இந்துமதவெறியர்களை நிர்மூலமாக்கும் போராட்டம் சட்டப்பூர்வமாகவோ, பாராளுமன்றம் – சட்டமன்றத்தையோ, டி.வி விவாதங்களிலேயோ நடைபெற முடியாது என்பதற்கு இதற்கு மேலும் நரபலி வேண்டுமா?

ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்துமதவெறியர்கள் மீது போர் தொடுக்க வேண்டிய தருணமிது! என்ன செய்யப் போகிறோம்?

செய்தி ஆதாரம் :


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க