privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவினவு தளம் ஒப்படைக்கப்பட்டது

வினவு தளம் ஒப்படைக்கப்பட்டது

-

வினவு ஆசிரியர் குழு தோழர்களிடமிருந்து இன்று (29-2-2010) மதியம் 2.30 அளவில் அலுவலக உடமைகளான வினவு கடவுச்சொற்கள், கணினிகள், அறைகலன்கள் , நூலகம், உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுக்கொண்டேன்.

வினவு இணையதளத்தின் நிதி வரவு செலவு கணக்குகள், வினவு ஆசிரியர் குழுத் தோழர்களுக்கு அமைப்பு திருப்பிதர வேண்டிய கடன் தொகை குறித்த விவரங்களை பெற்றுக்கொண்டேன். ஆசிரியர் குழுத் தோழர்களுக்கு அமைப்பு திருப்பி தர வேண்டிய கடன் தொகையை கூடிய விரைவில் பெற்றுத் தருவதாகவும் உறுதியளிக்கிறேன்.

25-2-2020 அன்று தமது விலகல் அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் குழு தோழர்கள் தளத்தின் பொறுப்பை என்னிடம் ஒப்படைப்பதாகவும் அதிலேயே அறிவித்திருந்தனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக வினவு தளத்தை ஆசிரியர் குழு தோழர்கள் முடக்கிவைத்திருப்பதாக ஒரு பொய் செய்தி சிலரால் திட்டமிட்டே பரப்பப்பட்டுள்ளதாக அறிகிறேன். அது முற்றிலும் உண்மைக்கு மாறானது. கண்டணத்திற்குரியது.

இத்தனை ஆண்டுகளாக மிகுந்த அற்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக தளத்தை நடத்தி இன்று அதனை கையளித்திருக்கின்ற ஆசிரியர் குழு தோழர்களுக்கும் தளத்தின் வெற்றிக்கு உழைத்த ஏனைய வினவு தள ஊழியர்களான தோழர்களுக்கும் எனது நன்றி.

காளியப்பன்  (எ) கண்ணையன் ராமதாஸ்
மாநில இணைச் செயலாளர்
மக்கள் கலை இலக்கிய கழகம்

*********

மேற்கூறிய வண்ணம் வினவு இணையதளத்தையும், தளம் சார்ந்த அனைத்து உடைமைகளையும் வினவு ஆசிரியர் குழுவின் சார்பில் தளத்தின் உரிமையாளர் பொறுப்பில் இருக்கும் தோழர் காளியப்பனிடம் ஒப்படைக்கிறோம்.

பொருட்களின் பட்டியல், வங்கி, நிதி, கடன் விவரங்கள் தனி ஒரு ஆவணமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தை ஒப்படைப்பதிலும், பெற்றுக்கொள்வதிலும் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக நேர்ந்த தாமதத்தினால் சில நாட்களுக்கு இணையதளம் இயங்கவில்லை. இதன் பொருட்டு எமது வருத்தத்தை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். எங்களை விமர்சித்த, பாராட்டிய, சண்டை போட்ட, எங்கள் பிரிவுக்காக வருந்திய வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

பொறுப்பேற்கவிருக்கும் புதிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

விடைபெறுகிறோம் தோழர்களே!
வினவு ஆசிரியர் குழு