சரண்
அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
இதுவரை மக்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்களுக்கு அடிவருடி ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டுருந்ததை உடைத்து ஊடகங்களோடு இணைந்து திட்டமிட்டுதான் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பதை இந்த வாட்சப் உரையாடல்கள் காட்டுகின்றன
வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
உச்சநீதிமன்றத்தின் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதையும் மோடி அரசை ‘கண்டித்ததையும்’ சுட்டிக் காட்டி பலரும் இதை ஒரு தற்காலிக வெற்றியாகவோ மோடி அரசுக்கு ஒரு பின்னடைவாகவோ கருதுகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !
“சட்டவிரோதப் போராட்டங்களின் மூலம் ஜனநாயகத்தின் மாண்புகளை அழிக்க அனுமதிக்க முடியாது” என அமெரிக்க வன்முரையைக் கண்டிக்கிறார் மோடி. இது விவசாயிகள் போராட்டத்தைக் குறிவைத்துக் கூறப்பட்ட வாசகங்கள்தான்.
வாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு !
இது பொழுதுபோக்கிற்கான செயலிதானே என சுருக்கிப் பார்ப்பது மிகவும் அபாயகரமானது. நமது சிந்தனையையும் ரசனையையும் தீர்மானிப்பதற்கான கதவுகளை ஏகபோகங்களுக்குத் திறக்கப் போகிறோம் என்பதே எதார்த்தம்
கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!
விலைவாசி கட்டுப்பாட்டுக்காகவும், மக்கள் நலனை குறைந்தபட்சமாகப் பாதுகாப்பதற்கும் கொண்டுவரப்பட்ட மானியத்தை இலவசம் என்பது போலவும் இழிவானவை என்பதுபோலவும் ஒரு சித்திரத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கியது.
மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?
முதல் ஐந்தாண்டு ஆட்சியில், சனாதன் சன்ஸ்தா, இந்து ஜன் ஜக்ருதி மன்ச் போன்ற உதிரிக் கும்பலின் மூலம் நேரடியாகக் கொலை செய்த சங்க பரிவாரம், இன்று அரசு இயந்திரத்தின் மூலமே நேரடியாக சித்திரவதை செய்து கொல்கிறது.
டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
மத்திய அரசின் அணுகுமுறைகள் அவமானப்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள விவாசாய சங்கத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!
தொழிலாளர் – விவசாயி வர்க்க ஐக்கியத்தைக் கட்டியமைப்பதும் வளர்த்தெடுப்பதும்தான் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி !!
INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?
தமிழக மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரத்தில் அடிமை எடப்பாடியோ “இனி செட்” தேர்வு மையத்தை தமிழகத்தில் அமைக்கக் கோரி மன்றாடுகிறார்
அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!
எனது பேட்டையில் நான் தான் தாதா என பாஜக-விற்குப் புரிய வைக்கும் சிவசேனாவின் முயற்சியே அர்னாப் கோஷ்வாமி கைது நடவடிக்கை.
ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !
காஷ்மீரின் நிலங்களை மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கு ஏதுவாக போராடும் அமைப்புகளை என்.ஐ.ஏ. கொண்டு மிரட்டி வருகிறது பாஜக !
ஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா ? இழக்கப் போகிறோமா ?
வழமையான சூதாட்டங்களை விட ஆன்லைன் சூதாட்டம் என்பது மிகப்பெருமளவில் இளைஞர்களையும் மாணவர்களையும் அடிமையாக்குவதோடு, அவர்களை தவறு செய்யத் தூண்டுவதோடு, தற்கொலையை நோக்கியும் தள்ளுகிறது.
பட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா !
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செய்வதில் 4-வது நாடாக இந்தியா இருப்பதும், உலகளாவிய பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதுவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை !
பாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா ?
குஷ்புவின் பத்தாண்டுகால அரசியலில், மக்களோடு களத்தில் இறங்கி நின்ற வரலாறே இல்லாத அவர் காங்கிரஸ் கட்சியில் இத்தனை ஆண்டுகளாக செய்து வந்தது என்ன ?
தலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா ?
சாதியரீதியான ஒடுக்குமுறைகள் பகிரங்கமான வன்கொலைத் தாக்குதல்களாகவும், காதும் காதும் வைத்தாற்போல கமுக்கமான இதுபோன்ற ஒடுக்குமுறையாகவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.