மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  மத்திய அரசு முன் வைத்தவை விவசாயிகளை அவமானப்படுத்துவதாக் கூறி தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் தொடங்கி இன்றோடு பதினைந்து நாட்கள் முடிந்து விட்டன. டெல்லியின் எல்லைகளில் பெருவாரியாகத் திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை ம்த்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

இந்நிலையில் கடைசியாக தீர்மானமான முடிவில்லாமல் முடிந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், விவசாயிகளுக்கு தமது தரப்பு முன்வைப்பு வரைவை எழுத்து வடிவில் தருவதாகத் தெரிவித்தார். இந்த வரைவு மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலர் விவேக் அகர்வாலால் கையெழுத்திடப்பட்டு 13 விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கு அனுப்பட்டது.

படிக்க :
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

மத்திய அரசின் இந்த  முன்வைப்பு வரைவில், விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை இந்த சட்டங்களின் மூலமாக முடிவுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே செயல்படும் வேளாண் வர்த்தகர்களுக்கான வரிவிதிப்பு மற்றும் பதிவு செய்தல் ஆகியவை குறித்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, விவசாயிகள் வர்த்தகர்களுடனான பிரச்சினையை சிவில் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய அனுமதிப்பது குறித்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு முன்வைப்பை நிராகரிப்பதாக விவ்சாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  மூன்று சட்டங்களும் திரும்பப்பெற வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் தங்களது போராட்டங்களை சிங்கு, சில்லா, காசிபூர் மற்றும்  திக்ரி ஆகிய எல்லைகளில் தொடரப்போவதாகவும்,  மேலும் டெல்லியின் கூடுதலான சாலைகளை ஆக்கிரமிக்கப் போவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

தற்போதைய முன்வைப்பு வரைவில் வேறு எதுவும் புதியதாக இல்லை என்றும், ஏற்கெனவே  நடந்த பேச்சுவார்த்தியின் போது கூறப்பட்டனவற்றையே மீண்டும் எழுத்து வடிவில் கொடுத்திருப்பதாகவும் பாரதிய கிசான் சங்கம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் விவசாய சங்கப் பிரதிநிதிகள்

இது குறித்து தி வயர் இணையதளத்திடம் தெராய் கிசான் சங்கத்தைச் சேர்ந்த தெஜிந்தர் சிங் விர்க் பேசுகையில், “தற்போது மத்திய அரசு கொடுத்துள்ள இந்த வரைவில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பஞ்சாப், அரியானா தவிர பிற மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதில்லை. உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் விவசாயி என்னசெய்வார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொள்முதலுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படுவது சட்டப்பூர்வமான உரிமையாக்கப்பட வேண்டும் என்பதே தெஜிந்தர் சிங்கின் உறுதியான கருத்து.

அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் கமிட்டி (AIKSCC) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மோடி அரசு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேர்மையற்றவிதத்திலும்  மூர்க்கமாகவும் நடந்து கொள்கிறது. பழைய முன் வைப்புகளையே புதியது போல முன்வைத்துள்ளதை அனைத்து உழவர் சங்கங்களும் நிராகரித்துவிட்டன” என்று குறிப்பிட்டுள்ளது.

நேற்று (09-12-2020) மதியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள், தங்களது போராட்டம் தொடரும் என்றும்,  3 சட்டங்களும் திரும்பப் பெறப்படவில்லையெனில் டெல்லியில் சாலைகளை ஒவ்வொன்றாக மறிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

படிக்க:
♦ டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

எதிர்வரும் டிசம்பர் 14 அன்று அனைத்து வட இந்திய விவசாயிகளையும் டெல்லி நோக்கி வரும்படி அறைகூவல விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் தென்னிந்திய மற்றும் பிற மாநில விவசாயிகள் தங்களது மாவட்ட தலைநகரங்களில் வரம்பற்ற போராட்டங்களைத் துவங்குமாறும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாஜக அலுவலகங்கலை டிசம்பர் 14 அன்று முற்றுகையிடும்படியும், மத்திய அரசு ஆதரவளிக்கும் பெரும் கார்ப்பரேட்டுகளின் அடையாளமாக அதானி அம்பானியின் சேவைகளையும் பொருட்களையும் புறக்கணிக்கும் படியும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, மோசடி செய்யவும், அவர்களைப் பிரித்து தங்களது கார்ப்பரேட் ஆதரவுச் சட்டங்களை அமல்படுத்தவும் திட்டமிட்டு வரும் பாஜக அரசை பணியச் செய்ய, விவசாயிகளின் இந்த தொடர் போராட்டங்களை ஆதரித்து நிற்பது அவசியமானது மட்டுமல்ல நம் கடமையும் கூட.

ஆகவே எதிர்வரும் டிசம்பர் 14 அன்று மறவாமல் பாஜக அலுவலகங்களையும், மாவட்ட தலைநகரங்களையும் முற்றுகையிடுவோம் !


சரண்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க