மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
சிறப்பு சட்டம் இயற்று ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் கொலைகார அரசால் சுட்டுக்கொல்லப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் தூத்துக்குடி மக்களின் வீர முழக்கம் இன்னும் ஓயவில்லை.
பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்
மெஸ் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், பழிவாங்கும் நோக்கத்தோடு மாணவர்களை பெயில் செய்ததோடு மாணவியிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பேரா.சௌந்திரராஜனை கண்டித்தும் இரண்டரை மாத காலமாக வெவ்வேறு கட்டங்களில் சமரசமின்றி மாணவர்கள் நடத்தியப் போராட்டத்தினை ஆதாரமற்றப் பொய்க்குற்றச்சாட்டுகளின் மூலம் களங்கப் படுத்தியுள்ளது உ.அ.குழு.
தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி
40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன் குடும்பத்தையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்த தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !
தமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா !
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாளை ஒட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் சார்பாக விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்
ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கும் முயற்சிகளுக்கு எதிராக தூத்துக்குடியே போர்க்களமாகி இருக்கிறது.
கொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்
கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி நடத்தப்படும் அதிகாரவர்க்க ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி கேள்வி எழுப்புகிறார், ம்க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் .
குமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் !
இந்த சரக்கு பெட்டகத் துறைமுகம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மிகவும் தீவிரமாக கட்டியே தீரவேண்டும் என்று அரசு செயல்படுவற்கு காரணம் சர்வதேச முதலாளிகளின் நலன் மட்டுமே. மக்கள் நலன் என்பது துளியும் கிடையாது.
மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது
மக்கள் அதிகாரம் அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு பற்றி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர், தோழர் மருது.
தேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் !
அஞ்செட்டி ஒகேனக்கல் சாலையில் ஊர் நுழைவாயிலில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்தனர். அதில் எந்த ஓட்டுக்கட்சியும் ஊருக்குள் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !
பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரணை செய். சௌந்திர ராஜனை பணி நீக்கம் செய்.
ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !
ஒக்கிப் புயல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தோழர்களைத் தாக்கி, பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?
தேர்தல் ஆணையத்தின் நேர்மை || தோழர் வெற்றிவேல் செழியன் உரை || காணொலி
தேர்தல் ஆணையத்தின் யோக்கியதையையும் போலி ஜனநாயகத் தேர்தலின் அவலத்தையும் விவரித்துப் பேசுகிறார் ம்க்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.
தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ? || வெற்றிவேல் செழியன் || காணொலி
தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ?, தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்
தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்
கிராம சபை தீர்மானத்தை கலெக்டர் ரத்து செய்யலாம் !
சட்டமன்ற தீர்மானத்தை கவர்னர் செல்லாக் காசாக்கலாம் !
மாநிலங்களே சமஸ்தானங்களான பிறகு, நாக்கு வழிக்கவா சட்டமன்றத் தேர்தல் ?
சீமான்-கமலஹாசன்-சரத்குமார்-டிடிவி : எல்லாமே ஓரணி, பா.ஜ.க.தான் பின்னணி !
ராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்
டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-ஐ மிரட்டிய அத்தனை அதிகாரிகளும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
























