தஞ்சை, தருமபுரி, கருவேப்பிலங்குறிச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்
தமிழகத்தில் மிகப் பெரிய தி.மு.க, பா.ம.க, வி.சி.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு உங்கள் பலத்தால் முதலில் டாஸ்மாக் கடையை மூடிக்காட்ட வேண்டியதுதானே? ஏன் மூடவில்லை?
கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலைகளும்-கொலைகாரர்களும்
ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் போலிசுக்கும் நீதி மன்றத்திற்கும் மக்களை பாதுகாக்கும் அருகதை கிடையாது!
தனியார் சாராயக் கடையை மூடு! தேனி முற்றுகைப் போராட்டம் !!
அரசு சாராயக்கடையை மட்டுமல்ல, இனி தனியார் சாராயக்கடையை பாதுகாப்பதும் எங்கள் வேலைதான் என நிரூபித்திருக்கிறது அம்மா போலிசு!
மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்
குடி போதையில் கெட்ட குடும்பம் கோடிகளை தாண்டுது; சாராயம் தான் கொள்கையென அரசாங்கம் சொல்லுது ! பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசாங்கம் செய்யுது; இத பொறுப்போட செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது.
மூடு டாஸ்மாக்கை – ஆவுடையார்கோவிலில் திரண்ட மக்கள்
ஆர்ப்பாட்ட நாளன்று மாலை 4.00 மணியிலிருந்து ஆவுடையார்கோவிலைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் டெம்போவிலும், வேனிலும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த குவியத் தொடங்கினார்கள்.
சாலையைப் போடு ! டாஸ்மாக்கை மூடு ! கருவேப்பிலங்குறிச்சி போராட்டம் !
ஆளும் அருகதையற்ற அதிகாரிகள் செய்ய மாட்டார்கள்! இனி மக்கள்தான் அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும்!! மாபெரும் ஆர்ப்பாட்டம் 07-10-2015 புதன், மாலை 4 மணி, கருவேப்பிலங்குறிச்சி
அதிகாரிகள் என்ன ஆண்டைகளா ? – வேதாரண்யம் மக்கள் போராட்டம்
"எழுதிக்கொடுத்ததையே செய்யாத இவர்கள் வாய்மொழியாகச் சொல்வதைச் செய்ய மாட்டார்கள். போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா" என்று கேட்டதும் மக்கள் "போராட்டத்தைத் தொடருவோம்" என்றனர்.
மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !
டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார். கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?
மூடு டாஸ்மாக்கை ! சட்டமன்றம் முற்றுகை – ஆவுடையார் கோவில் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு! - சென்னையில் பேரணி சட்டமன்ற முற்றுகை 29-09-2015 காலை 11 மணி. ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம் மாலை 4 மணி
குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி !
தமிழக அரசும் நீதிமன்றங்களும் "சாராய பாட்டிலைப் பொதுச்சொத்தாகவும், ஊத்திக் கொடுப்பதை அரசுப் பணியாகவும்" அறிவிக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது, அரசு இயந்திரம் முழுவதும் எதிர்நிலை சக்தியாக மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
டாஸ்மாக்கை மூட தீர்வுதான் என்ன? நாகர்கோவில் கருத்தரங்கம்
நாள் : 24-09-2015 நேரம் : மாலை 4.00 மணி இடம் : ஈடன்ஸ் ஹால், டெரிக் சந்திப்பு To வாட்டர் டேங்க் ரோடு, நாகர்கோவில்
வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !
டாஸ்மாக் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சி குட்ஷெட் வேலை நிறுத்தம், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம், கரூர் மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு, கடலூர், குடந்தை ஆர்ப்பாட்டம் - செய்தி,புகைப்படங்கள்.
டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்
சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
ஸ்டேசனில் டாஸ்மாக் – மதுவிலக்கிற்கு குறுக்குவழி !
“நாளைலேர்ந்து ஸ்டேசன்லதான் டாஸ்மாக்”குன்னு அம்மா மட்டும் அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்க. எப்பேர்ப்பட்ட குடிகாரனுக்கும் ரெண்டே நாள்ல போதை தெளிஞ்சிடும்.
மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் பிணையில் விடுதலை !
"குடியை ஒழிக்க முடியாது, குடிகாரனை திருத்த முடியாது, எவனும் திருந்தமாட்டான், எதுவும் முடியாது. எவனும் சரியில்லை" என்று வெட்டி பேச்சு பேசுபவர்களுக்கு இது பதிலடி.