சத்தியபாமா பல்கலை ராகமோனிகா தற்கொலை ! நிர்வாகத்தை எதிர்த்து மாணவர் கலகம் !
ஊரைஅடித்து உலையில் போட்ட கொலைகார கிரிமினர் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்கு ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்தது.
அப்பல்லோ கார்களுக்காக காலி செய்யப்படும் திடீர் நகர் – படங்கள்
கிரீம்ஸ் சாலை முழுவதையுமே அப்பல்லோ மருத்துவமனை ஆக்கிரமித்து வருகிறது. தற்போது இந்த திடீர் நகரைக் காலி செய்து பிரம்மாண்டமான கார் நிறுத்தம் உருவாக்குவதே அவர்களது நோக்கம் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.
கிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை !
கடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.
விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !
விவசாயிகளுக்கு எதிரியே இந்த அரசு தான். அய்யாக்கண்ணு சொல்வது போல் அரசை நம்பினால் அம்மணமாக தான் நிற்க வேண்டும் என்று அவர் தலைமையில் டெல்லியில் நடத்திய போராட்டமே சாட்சி என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
நூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் !
“தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை”
பிள்ளைக்கறி கேட்கும் தேர்வுப் பயிற்சி மையங்கள் !
நீட் போன்ற தேர்வுகள் வசதியற்ற அனிதாக்களுக்கு மட்டும் தான் பிரச்சினை நமக்கெல்லாம் ஒன்றுமில்லை என பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கும் கூட இது மிகப் பெரிய மன அழுத்தத்தை கொண்டு வந்துள்ளது .
பெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !
மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார்.
கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி !
நெல்லையில் குடும்பமே தீயில் கருகி பலி ! கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி ! தீயில் கருக்க வேண்டியது மக்களுக்கு எதிரான இந்த அரசுக் கட்டமைப்புதான் !
நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
தான் வளர்த்த பயிர்கள் கருகியதைக் கண்டு நெஞ்சு வெடித்து செத்த தஞ்சை விவசாயிகளாலும், பொறியியல் படித்த மகனுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவனது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தூக்கில் தொங்கிய தாய்மார்களாலும் தான் இசக்கிமுத்துவின் முடிவைப் புரிந்து கொள்ள முடியும்.
தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !
எந்த பண்டிகையா இருந்தாலும் உழைப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தோ... இன்னிக்கு வந்தேன். இந்த சைக்கிளுக்கு பஞ்சர் போடுறேன். இன்னொரு சைக்கிள ரெடி பன்னிட்டேன். எந்த நாளா இருந்தாலும் என் கட தெறந்து இருக்கும்.
அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !
லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது. இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த மருத்துவமனை அறையின் ஒரு நாள் வாடகை 3,50,000 ரூபாய் !
இந்தியாவின் அதி உயர் மருத்துவமனைகள் அதிகரிக்கும் காலத்தில் இந்தியாவின் ஏழைக மக்கள் அதி உயர் எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதையும் காண்கிறோம்.
அம்பானிக்கும் நூறு – பட்டினிக்கும் நூறு !
உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் உயரத்திற்கு குறைவான எடையில் ஒரு குழந்தை இருக்கிறது.
நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல, தமிழக மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் அபகரிப்பதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம்.