நெல் கொள்முதல் விலை : மீண்டும் வஞ்சனை !
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விவசாயிகள் தம்மிடம் எடுத்துக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.
ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !
“தேர்தலில் நிற்பவன் பதவியை டெண்டர் எடுக்கிறான்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். “பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் எம்.எல்.ஏ. வைத் தட்டிக் கேட்க முடியாது” என்பது மக்களுக்குத் தெரிகிறது.
சென்னை புத்தகக்காட்சியில் வினவு – புதிய கலாச்சாரம் நூல்கள் !
41வது சென்னைப் புத்தகக் காட்சியில் புதிய கலாச்சார வெளியீடுகள் ! கிடைக்குமிடம் கீழைக்காற்று வெளியீட்டகம் கடை எண் 297, 298. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம் ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30
பேரிடர் : புயலா – அரசா ? புதிய கலாச்சாரம் ஜனவரி வெளியீடு !
மழை, புயல், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, அரசாலும் அதன் மறுகாலனியாக்க திட்டங்களாலும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !
புது டெல்லியில் காற்று மாசுபாடு மக்கள் வாழ முடியாத அளவு எட்டி விட்டதால் நான்கு அடுக்கு காற்று சுத்திகரிப்பான் அமைப்பை பொருத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக தூய்மையான காற்றை வழங்க இருக்கிறது ஓபராய் விடுதி.
மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்
பத்து வேலைக்கு இருபதாயிரம் பேர் போட்டி. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்ளும் நாய்களாக நம்மை மாற்றி விட்டு, இதையே பெரிய கவுரவம் என்று கருதுமாறும் பழக்குகிறார்கள். அடுத்தவனை வீழ்த்தாமல் வாழமுடியாது என்ற பண்பாட்டை நமது மரபணுக்கள் வரை பதிக்கிறார்கள்.
பணிந்தால் பதவி – சதாசிவம் ! மறுத்தால் மரணம் – ஹர்கிஷன் லோயா !!
நீதிபதி லோயா இறந்து போன மூன்றாவது மாதத்திலேயே அவரது அகால மரணம் குறித்து விசாரணை வேண்டுமென லோயாவின் மகன் அனுஜ் மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவிடம் நேரிலேயே கடிதம் கொடுத்தும் அது கமுக்கமாகக் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்
டொயோட்டோ கார் ஜெர்மனியில் என்ன விலையோ அதேதான் பெங்களுரிலும், சென்னையிலும், இங்கிலாந்து, அமெரிக்காவிலும். ஆனால், அதே இந்தியத் தொழிலாளியின் கூலி மட்டும் ஒரு டாலரில் கால் பங்கு, ஜெர்மனியில் 32 டாலர்.
மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு ! தோழர் தியாகு
மார்க்சும், எங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆற்றிய பணி என்பது தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே அறியும்படி செய்ததும், உணரும்படி செய்ததும் தான். இதில் ஒரு வார்த்தைகூட வீணாக எழுதவில்லை. அவர்களுடைய பணியின் சாரம் கனவுகளின் இடத்தில் அறிவியலை வைத்தார்கள்.
அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்
அக்டோபர் புரட்சியில்தான் மனித வரலாற்றில் முதன்முதலில் மக்கள் வெறுமனே காலத்தின் போக்கில் அனிச்சையாக எதிர்வினையாற்றாமல், ஒரு திட்டவட்டமான செயல்திட்டத்தின்படிச் செயல்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
குஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?
தமது உடனடி வர்க்க நலன்கள் (வேலை வாய்ப்பு முதல் வணிகம் வரை) பாதிக்கப்பட்டாலும், அவற்றையும் மீறி மோடியை ஆதரிக்கும் அளவுக்கு இந்துத்துவ பாசம் இருக்கிறது.
வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !
விஜய் மல்லையாவை இலண்டனுக்கு வழியனுப்பி வைத்தது மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெரு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 1,88,287 கோடி ரூபாய் பெறுமான கடன்களைக் கமுக்கமாகத் தள்ளுபடி செய்திருக்கிறது, மோடி அரசு.
ராஜீவுக்கு போஃபர்ஸ் ! மோடிக்கு ரபேல் !!
ஒண்ணுக்கு இரண்டாக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது, மோடி அரசு.
நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் !
லல்லு பிரசாத் யாதவ் மீதோ ஆ.ராசா மீதோ ஊழல் வழக்கு என்றால், அதனை விசாரித்து உச்சநீதி மன்றம் தண்டிக்கலாம், அல்லது விடுவிக்கலாம். உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மீதே ஊழல் குற்றச்சாட்டு என்றால், அதனை யாரிடம் முறையிடுவது?
ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம் !
மதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கிய கையோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு நாளும் குறித்த அதனின் வேகத்தைக் கொண்டே இதனை யாரும் புரிந்துகொள்ளலாம்.