புதுவை, திருச்சி நவம்பர் புரட்சிவிழா கொண்டாட்டங்கள் !
ரசியப் புரட்சியின் நூறாண்டுகளுக்குப் பின்னரும், இன்றும் அதன் தேவை உள்ளது. அதன் தேவைகளையும் அவசியத்தையும் இன்றைய தொழிலாளி வர்க்கம் உணர ஆரம்பித்திருக்கிறது.
மூலதனத்தின் தத்துவஞானம் !
மார்க்சின் தத்துவஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.
மோடிக்கு எப்ப சார் நோபல் பரிசு கொடுப்பீங்க ?
முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஏற்ற வகையில், மக்களின் பொருளாதார நடத்தையை மாற்றியமைக்கும் தந்திரத்துக்குத்தான், தேலருக்கு பொருளாதாரத்துகான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை, கோத்தகிரி நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !
“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு!!” நிகழ்வு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது.
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
"பணம் பிறவியிலேயே ஒரு கன்னத்தில் இரத்தக் கறையுடன் உலகில் காலடி எடுத்து வைக்கிறது" என்கிறார் ஒழியே. மூலதனமோ, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்டச் சொட்ட உலகிற்குள் நுழைகிறது.
திருச்சி, விருதை, போடி: நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !
நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் அருகில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுடன் இணைந்து நவம்பர் புரட்சி நாள் விழா இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நவம்பர் 19 கூட்டம்: மார்க்ஸின் மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 !
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம் 19 நவம்பர், 2017 மாலை 3:00 மணி, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035. அனைவரும் வருக!
நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி – மின்னூல்
தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாரதவையல்ல. இதுவே இறுதிச் சுற்றும் அல்ல.
ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.
கம்யூனிசம் வெல்லும் ! – புதிய ஜனநாயகம் நவம்பர் 2017 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : கம்யூனிசம் வெல்லும், தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை, மூலதனத்தின் தத்துவஞானம், ஏன் சோசலிசம் ?, செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் ,மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு....
நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !
உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.
சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்னறிப் புலனாய்வு !
“பொதுவாக இயந்திரங்கள் முன்முடிவுகளோடு நடந்து கொள்ளாது என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு முன் முடிவுகள் இருக்குமல்லவா?”
பெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
மூலதனம் நூலின் 150 வது ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100 வது ஆண்டு !!
உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே ‘‘முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரலெழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் கூட மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.
மோடியின் பணமதிப்பழிப்பு : எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி !
சென்னை பொருளாதார மையத்தில் குருமூர்த்தி ஆற்றிய உரையில் "பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒரு விஷவாயுக் கூடமாக மாறிவிட்டது. முன்கூட்டியே வரியை வசூலிக்க முடியாத அரசாங்கம், இப்பொழுது வரியை வசூலிப்பதற்காகக் கருப்புப் பணத்தைத் துரத்தி வருகிறது" எனக் கூறியுள்ளார்.