அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
போயிங் நிறுவனத்துக்காக தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பில்லியன்களாக கொடுப்பதை அதிகார வர்க்கமோ தங்களுக்குள் மில்லியன்களில் பகிர்ந்து கொள்கின்றனர். தொழிலாளிக்கு கொடுக்க வேண்டும் எனும்போது மட்டும் கணக்கு வழக்குகளை முன்வைத்து கடன் என்று புலம்புகின்றனர் என்று அதிகார வர்க்கத்தைச் சாடுகின்றனர் தொழிலாளர்கள்.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவு: வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!
இந்தத் தேர்தல் முடிவுகள் இலங்கை மக்களுக்கு எந்தவித பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை. இலங்கை மக்கள் தமது விடுதலையை தமது சொந்தப் போராட்ட முயற்சியின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும். அதற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் கவலைக்குரிய உண்மையாகும்.
அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | மீள்பதிவு
பாசிசக் கூறுகளைக் கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி. , இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும்.
ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 2
ஸ்டாலின், மாவோ உட்பட மார்க்சிய - லெனினிய ஆசான்களின் சித்தாந்தங்களை ஏற்பதாகக் கூறிய போதும் உண்மையில் டிராட்ஸ்கிய சித்தாந்தப் பாதையையும், சேகுவாராவின் இராணுவப் பாதையையுமே ஜே.வி.பி. ஏற்று அமுலாக்கியது. கூடவே சிங்கள தேசிய இனவாதத்தையும் இணைத்துக் கொண்டது.
ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 1
"கலாச்சார ரீதியிலான ஊடுருவல் மற்றும் இந்தியத் தமிழர்களின் 'தாயக' விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டு இனப்பிரச்சினையைத் தூண்டி இந்தியா தனது விரிவாக்க ஆதிக்க நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறது" - ஜே.வி.பி.
கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
தொழிற்சங்கம் உருவாவதற்கு முன்பும் பின்பும் நடந்தேறிய பல போராட்டங்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு போராட்ட உணர்வை விதைத்திருக்கிறது. போராட்டம் ஒன்றே முதலாளித்துவத்தின் குரல்வளையை நெறிக்கும் என்று நன்கு உணர்ந்துள்ளனர்.
கென்யாவை உலுக்கும் “ஜென் சி” போராட்டம்
“நிதி மசோதா 2024”-க்கு எதிராக தொடங்கிய போராட்டம் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பிற்கு எதிரான போராட்டமாக வளர்ச்சியடைந்துள்ளது என்பதையேக் காட்டுகிறது.
ஐரோப்பாவை அச்சுறுத்தும் பாசிச அபாயம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்தும் நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகியவற்றில் பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்திருப்பது பெரும் அபாயமாகும்.
பாசிச சக்திகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ் மக்கள்!
"ஐரோப்பியத் தேர்தல்களில் தீவிர வலதுசாரிகள் 30 சதவிகித வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறை. இன்று இளைஞர்களும் மக்களும் தெருக்களில் இறங்கியிருப்பது, பிரான்சிற்கு இது நேரக் கூடாது என்பதை கூறுவதற்குத்தான்”
பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! நயவஞ்சக நாடகமாடும் அமெரிக்கா!
இஸ்ரேலிய அரசுக்கெதிரான இஸ்ரேலிய மக்களின் போராட்டமும் உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களும்தான் பாலஸ்தீன மக்கள் மீதான கொடிய போரை நிறுத்துவதற்கான நமக்கான ஆயுதங்கள் ஆகும்.
அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை!
பாசிசக் கூறுகளைக் கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி. , இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும்.
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!
அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் தெற்காசிய நாடுகள் வர்த்தக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ந்து நெருக்கமாகி வருகின்றன.
வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!
நாம் தரம் உயர்ந்தவை என்று வாங்கி அணியும் இந்த நிறுவன ஆடைகளின் மினுமினுப்பில் ஒளிந்திருக்கிறது வங்கதேச தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த உழைப்பு.
அர்ஜெண்டினா – நெதர்லாந்து: பாசிஸ்ட்டுகள் வெற்றி! இந்திய ஜனநாயக சக்திகள் கற்க வேண்டிய பாடம்!
தென் அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அர்ஜெண்டினாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் நிலவுவதற்கு மையவாத இடதுசாரிகளின் அர்ஜெண்டினாவை அமெரிக்காவிற்கு அடகு வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம்.
செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!
இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது.