வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!
வங்கதேச மாணவர் எழுச்சி!
சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!
05-08-2024
ஜனநாயகமற்ற தேர்தல், வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான வங்கதேச மாணவர் எழுச்சியால் சர்வாதிகாரி ஷேக்ஹசினா விரட்டியடிப்பு!
மாணவர் எழுச்சியைப் பயன்படுத்தி அரங்கேறியது இராணுவ சர்வாதிகார ஆட்சி!
எதிர்க்கட்சியான...
சீனா முன்னிலையில் பாலஸ்தீன இயக்கங்களிடையே ஒற்றுமை ஒப்பந்தம்
கடந்த ஆண்டு ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையே சீனா ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது பாலஸ்தீனப் பிரச்சனையில் சீனா தலையிட்டுள்ளது.
பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை ஆதரித்து நிற்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு விதித்த அதே தடையை, இஸ்ரேலுக்கு விதிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மறுப்பதானது, அதன் அமெரிக்கா – இஸ்ரேல் சார்புத்தன்மையையும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை அது ஆதரித்து நிற்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் “அகதிகள் அணி”
கென்ய அகதிகள் முகாமில் வளர்ந்த ஓட்டப்பந்தய வீரர் பெரினா லோகுரே நகாங் "நாங்கள் உலகளவில் 12 கோடிக்கும் அதிகமான அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் எங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்ட விரும்புகிறோம்" என்றார்.
வங்கதேச மாணவர்களின் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்வோம்!
வங்கதேச மாணவர்கள் எழுச்சியைப் போல், இந்தியாவிலும் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பலை எதிர்த்து இளைஞர்களாகிய நாம் ஒரு மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.
வங்கதேசம்: மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது உச்சநீதிமன்றம்
கடந்த வாரம் முதல் நடைபெற்றுவரும் நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் காரணமாக, வங்கதேச உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வேலை ஒதுக்கீட்டை இன்று (ஜூலை 21) குறைத்துள்ளது. இந்த தீர்ப்பானது மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த...
வங்கதேசத்தில் வெடித்த பிரம்மாண்டமான மாணவர் போராட்டம்
நேற்று (ஜூலை 15) டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராடிய நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் அமைப்பினர் கற்களை வீசியும், தடிகள் – இரும்புக் கம்பிகளைக் கொண்டும் தாக்கினர்.
தென்கொரியா சாம்சங் தொழிலாளர் போராட்டம்: வெற்றிகரமாக இரண்டாவது நாளாகத் தொடர்கிறது
கொட்டும் மழையிலும் அனைத்து தொழிலாளர்களும் கருப்பு நிறத்தில் மழை கோட்டு அணிந்து கொண்டு தலையில் சிவப்பு நிறத்தில் தொழிற்சங்க பெயர் தாங்கிய ரிப்பனை கட்டிக்கொண்டு இராணுவம் போல் அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் வெற்றியில் கொண்டாட ஏதுமில்லை
பழமைவாத கட்சி, தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் நேட்டோ (NATO) ஆதரவு கட்சிகள் தான். பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பதிலும் இவர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.
தென்கொரியா: சாம்சங் நிறுவனத்தில் வெடித்தது தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்ட ம்
நிர்வாகத்திற்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தது தொழிற்சங்க தலைமை. மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் இது கால வரம்பற்ற வேலை நிறுத்தமாக நீடிக்கும் என்றும் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இத்தாலி: புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரை உறிஞ்சிக் கொழிக்கும் பண்ணைகள்
இத்தாலிய பண்ணைகளில் "கப்போரலாடோ" (Caporalato) என்ற ஒரு சட்டவிரோத முறைப்படி தொழிலாளர்களை பணியமர்த்துவது பரவலாக நடைபெறுகிறது. இதில் "கேப்போரல்" (caporale) எனப்படும் இடைத்தரகர்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு, அவர்களை பெரிய விவசாயிகளிடம் பணிக்கமர்த்துவார்கள்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட கென்ய மக்கள் – தப்பி ஓடிய எம்.பி.க்கள்!
ஆரம்பத்தில் தலைநகர் நைரோபியில் வெடித்த மக்கள் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி கிட்டத்தட்ட அனைத்து பிரதான நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கான் பேரழிவு: அமெரிக்க அரசே முதன்மைக் குற்றவாளி
இனி வருங்காலங்களில் ஆப்கானிஸ்தானில் திடீர்வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஆப்கான் மக்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாகியுள்ளது.
இஸ்ரேலின் தீராத இனவெறி: இரத்த வாடை வீசும் பாலஸ்தீனம்
அல்-சர்டி பள்ளியில் போடப்பட்ட குண்டுகளின் கழிவுகளைக் கொண்டு அவை அமெரிக்காவில் உள்ள ஹனிவெல் என்ற கூட்டு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
தலையில்லா முண்டங்களாக்கப்படும் பாலஸ்தீன குழந்தைகள்
தீயினால் எறிந்த பொம்மைகளைத் தேடும் குழந்தைகளைப் போல், பாலஸ்தீன தாய்மார்களும் தந்தைமார்களும் தங்களுடைய குழந்தைகளின் சாம்பல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.